Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. நானும் சைக்கிளும் (சிறுகதை) நான் எட்டாவது படிக்கிறவரை சைக்கிள் ஓட்டக்கத்துக்கல. இது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு. காரணம் பழக ஒருத்தரும் சைக்கிள் குடுக்கல. எங்க அப்பா சைக்கிள தொடைச்சி வைக்கிற உரிமை மட்டும்தான் எனக்குத்தந்திருந்தாரு. ஓட்டக்கேட்டா ஒதைதான் விழும்... வாடகைசைக்கிள் கடைக்கிப்போனா சின்னபசங்களுக் கெல்லாம் சைக்கிள் கெடையாதுன்னு வெரட்டுவாரு எங்க தெருவில வாடகைசைக்கிள் வைச்சிருந்த ஒரு அண்ணன் ரவி. அவர்கடையில புத்தம் புது சைக்கிள் வரிசையா நம்பர் போட்டு நிறுத்தியிருப்பா…

  2. உடல் எனும் இயந்திரம். இந்த பிரபஞ்ச உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இயங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ?? பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுகிறது பாலுக்காக, தன் தேவைகளுக்காக. ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்கள் எதையோ நோக்கி ஓடுகிறார்கள். . குடும்ப தேவைகளுக்காக . அப்படி ஓடும் போது தன் சுகம், தூக்கம், பசி மறந்து இயற்கையின் சவால்களை சமாளித்தபடி. செல்ல வேண்டி இருக்கிறது. விரைவாக ஓட ஒரு வாகனம் அதற்கு பராமரிப்பு , ஆயில் மாற்றம் ரயர் மாற்றம் , பராமரிப்புக்கு விடுதல் (service ) என்பன செய்யும் மனிதன் தன்னைக் கவனிக்க மறந்து விடுகிறது..நம் உடல் எனும் இயந்திரம் சில(சிக்னல்களை )உடல் உபாதைகளை கொடுக்கிறது . அதைக் கவனித்து மருத்துவ பரிசோதனை செய்தால் பிழைத்த…

  3. உறவுகளின் சங்கமம் ஒரு அழகிய கடற்கரை நகரத்தில், மேரி மற்றும் பீட்டர் இருவரும் வாழ்ந்து வந்தனர். மேரி, ஒரு புத்தகப் பிரியா. கடற்கரையில் உட்கார்ந்து புத்தகங்களைப் படிப்பதே அவளது பொழுதுபோக்கு. பீட்டர், ஒரு திறமையான கலைஞர். கடற்கரையின் அழகை ஓவியங்களாக வரைவது அவனது ஆர்வம். ஒரு அற்புதமான மாலை, மேரி தனது புத்தகத்துடன் கடற்கரையில் உட்கார்ந்திருந்தாள். அப்போது, அருகில் வந்து தனது ஓவியத்தை காட்டிக்கொண்டான் பீட்டர். அவர்களது உரையாடல் இயல்பாகவே ஆழமானது. இருவரும் ஒரே விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை அறிந்து மகிழ்ந்தனர். அன்றிலிருந்து, அவர்கள் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். நாட்கள் செல்லச் செல்ல, அவர்களது நட்பு காதலாக மாறியது. பீட்டர், மேரியின் புன்னகையைப் பார்க…

    • 1 reply
    • 1.2k views
  4. பாடசாலை நாட்கள் நமது வாழ்வின் அடித்தளமாக அமைகின்றன. நாம் பள்ளியில் கற்றுக்கொள்ளும் அறிவு மற்றும் திறன்கள் நமது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், பள்ளியில் நாம் உருவாக்கும் நட்புகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். நாம் கற்றுக்கொள்ளும் அறிவு மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களையும் அங்கேதான் கற்றுக்கொள்கிறோம். பள்ளியில் நாம் வெற்றி, தோல்வி, போட்டி, ஒத்துழைப்பு போன்ற பல வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொள்கிறோம். இந்தப் பாடங்கள் நம்மை வலுவான மனிதர்களாக மாற்றுகின்றன. பள்ளியில் நாம் நம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நண்பர்களை உருவாக்குகிறோம். இந்த நட்புகள் நமக்கு மிகுந்த ஆதரவையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. பள்ளிக்காலம் என்பது பொ…

    • 1 reply
    • 980 views
  5. இருட்டுப் பூச்சிகள் : நெற்கொழுதாசன் by நெற்கொழுதாசன் “என்ர மனுசி ஐயர் ஆக்கள். நான் வெள்ளாளன். நாங்கள் உதெல்லாம் சாப்பிடுறதில்லை.”இயல்பாக சொல்லியபடி, நான் வெட்டிக்கொடுத்திருந்த மாட்டிறைச்சியை கிறிலில் சூடாகிக்கொண்டிருந்தான். அவன் கூறியதைக் கேட்டதும் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குள் ஒரு சிறிய அதிர்வு எழுந்து அடங்கியது. என்ன இழவடா இது!, எங்கபோனாலும் முன்னால சனி போகுதென எனக்குள் சொல்லிக்கொண்டேன். செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். நான், தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் அவனில் ஒருவிதமான அசாதாரண உடல்மொழி வெளிப்பட்டு அடங்கியது. உலகைமுடக்க…

    • 3 replies
    • 731 views
  6. Started by nunavilan,

    படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந…

  7. சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் - - குரு அரவிந்தன் - சிறுகதை 27 நவம்பர் 2024 - ஓவியம் - AI - சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென…

    • 3 replies
    • 788 views
  8. ஒரு காட்டில் வயசாகி போன🐱 புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு🐜 வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்மூர்ல பணம் படைச்சவனுக்கு தோணுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோணுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது. அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். ப…

    • 1 reply
    • 647 views
  9. A/L படிக்கிற நேரத்திலும் ஒரு பெண்ணை வன் சைட் லவ் பண்ணினேன். நான் லவ் பண்ணுறது அவளுக்குத் தெரியும். அதனால் என்னுடன் பேசும்போது ஒரு இடைவெளி விட்டே பேசுவாள். ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ப்ரொபோஸ் பண்ணினேன். அவள் என்னை ஒரு நண்பனாக மட்டுமே பார்ப்பதாகக் கூறி என்னை ரிஜெக்ட் பண்ணிவிட்டாள். "இதெல்லாம் காரணம் இல்ல, உண்மையான காரணம் சொல்லு?" என்று நான் நச்சரிக்கவும் என்னுடைய தொடர்பு எல்லாத்தையும் துண்டித்து விட்டாள். காலம் உருண்டோடியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவளை ஃபேஸ்புக்ல பார்த்தேன். ரிக்குவெஸ்ட் கொடுத்ததும் அக்செப்ட் பண்ணிவிட்டாள். இப்போது அவளுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதைக் கண்டேன். போஸ்ட்களுக்கு ரியாக்சன் போடுவது மட்டுமே …

    • 1 reply
    • 1.3k views
  10. பெலிசிற்றா : ஜே.கே ஜே.கே ஏழு பதினொன்றுக்கு வரவேண்டிய தொடருந்து தாமதமானதால் பயணிகள் மேடை அலுவலகப் பணியாளர்களாலும் பாடசாலை மாணவர்களாலும் நிறைய ஆரம்பித்தது. தலைக்கு பீனித் தொப்பி, கழுத்துச்சால்வை, முழங்கால்வரை நீளும் குளிர் ஜாக்கட், சுடச்சுடக் கோப்பி என அத்தனை போர்வைகளையும் மீறிக் குளிர் அவர்களை உறைய வைத்துக்கொண்டிருந்தது. இந்தக் குளிரிலும் காற்சட்டை அணிந்து மேலே வெறுமனே ஒரு சுவெட்டரை மாத்திரம் மாட்டியிருக்கும் மாணவர்களைப் பார்த்து பெலிசிற்றா பொறாமைப்பட்டாள். அவர்களில் பலரும் இந்திய நிறத்தைச் சூடியவர்கள். சிலருக்குச் சீனத்து முகம் இருந்தது. பெலிசிற்றா அவுஸ்திரேலியாவுக்கு வந்த இந்த நாற்பது வருடங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றம் இது. இந்த நிலத்தில் வாழ்ந்த ஆதிக்குடிக…

    • 1 reply
    • 754 views
  11. https://www.youtube.com/watch?v=SHI_aTAVwGI மனதை தொட்ட பதிவு . நேரம் உள்ள போது பார்க்கவும்

  12. கவிஞர் நாவண்ணனுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. நான் தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அவர் என்னைச் சந்திக்க வந்துவிடுவார். 2003இல் ஐரோப்பிய நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கென்று தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களுடன் நாவண்ணனும் இணைந்திருந்தார். யேர்மனியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். யேர்மனியில் ஸ்ருட்காட் நகரத்திலும் அவரது நிகழ்ச்சி இருந்தது. அந்தக் கலை நிகழ்ச்சி நடந்த பொழுது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதுதான் எங்களது கடைசிச் சந்திப்பாக அமைந்தது. யேர்மனிக்கு வரும் பொழுது அவர் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ என்ற புத்தகத்தை எங்கள் குடும்பத்துக்குத் தருவதற்காகக் கொண்டு வந்திருந்தார். கட்டுநாயக்காவில் இருந்து பயணிப்பதால் பிரச்சினைகள் வந்து விட…

  13. மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா? குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா? ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது! இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்.. ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி “மயில்துயில்” எனும் விரதத்தை கடைபிடிக்கும…

  14. இரண்டு நண்பர்கள்-மாப்பசான் ஃபிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் – சஞ்சீவி ராஜா By சஞ்சீவி ராஜா - பாரிஸ் நகரம் அடைக்கப்பட்டு, பட்டினியில் மூச்சுத்திணறியிருந்தது. சிட்டுக்குருவிகள் அரிதாகவே கூரைகளின் மேல் தென்பட்டன, கால்வாய்களும் வற்றியிருந்தது. மக்கள் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜனவரி மாதத்தின் வெளிர் காலையில், இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற பாதையில், திரு. மொரிசோ சோகமாகத் தன் கைகளைக் கால் சட்டைப்பையில் விட்டு வெறும் வயிற்றுடன், நடந்து கொண்டிருந்தார், அவர் ஒரு மணிப்பொறியாளர் ஆனால் இருக்கும் சூழ்நிலையில் வீட்டுப் பறவையானவர், அவர் நடந்துகொண்டிருக்கைய…

    • 0 replies
    • 991 views
  15. மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். 'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார். 'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தா…

  16. முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும். ''புத்தம் புது "மெர்சிடஸ் பென்ஸ்" வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees) பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ் வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை. ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார். விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது. வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.. "அம்மணி.. இவ்வளவு விலை உ…

  17. ஸ்ரீவாணி மேடம் பொத்தூரி விஜயலட்சுமி மூலம் : பொத்தூரி விஜயலட்சுமி தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் பத்மாவும் சாவித்திரியும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கவர்ன்மென்ட் அண்டர்டேக்கிங் கம்பெனியில் பணி புரிகிறார்கள். கம்பெனி பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். பொழுது போவதற்காக ஏதேதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பத்மா திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, “அதோ அங்கே வருவது ஸ்ரீவாணி மேடம் தானே?” என்றாள். “எங்கே?” என்று கேட்டாள் சாவித்திரி. “அதோ, நடந்து வர்றாங்க பார்” என்றாள் பத்மா. “சீ சீ அவுங்களாக இருக்காது. ஸ்ரீவாணி மேடம் ஏன் நடந்து வரப் போறாங்க? காரில் தான் வருவாங்க. யாரையோ …

  18. ”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் . . “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. . ஜட்ஜூக்கு சுருக்கென்றது. . பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ். . ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார், . “இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் …

      • Haha
    • 2 replies
    • 1.4k views
  19. Started by nunavilan,

    ஓரிரவு ஞானசேகர் மணி ஏழாகிவிட்டிருந்தது. எனது டீம் லீட் சியோக் வீ அன்று மதியம் என்னிடம் ஒரு வேலையை அளித்திருந்தாள். என்னவென்று கண்டறிய முடியாத ஒரு தவறு காரணமாக அதன் மொத்த செயல்பாட்டையே நான் வேறு மாதிரி மாற்றி எழுத வேண்டும். ஏற்கனவே அது ஒருவனிடம் கொடுத்து அவனால் அந்தத் தவறைக் கண்டறியமுடியாமல் பின் அவளும் முயற்சி செய்து பார்த்துவிட்டு இறுதியில் என்னிடம் மொத்தத்தையும் மாற்றி எழுதக் கேட்டிருந்தாள். மூன்று நாட்கள் அவகாசம் கேட்டிருந்தேன். ஆனால் அதனை சோதிக்க ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திலேயே என்ன தவறு என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு சிறிய கவனக்குறைவான ‘கோட்’ பிழை. புதிய கண்களுக்கு எளிதில் அகப்பட்டு விடும் பிழைதான். எப்படியோ தவ…

    • 1 reply
    • 1.2k views
  20. கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல தமிழ் இளைஞனாக இருந்ததாகவும், தற்போது பல கேள்விகளைக் கேட்டுத் தனது தமிழ் அடையாளத்தை அவன் தேடுவதாக அவளது பேதை மனம் துடிக்கிறது. அவனுடைய பேச்சைக் கேட்டு மகள் கருணாவும் ஏதோ கேட்கத் தொடங்கி விட்டாள். கண்ணனின் குடும்பம் தமிழ் அகதிகளாக லண்டனில் காலடி எடுத்து வைத்தவர்கள். “கடவுள் அருளால் இவ்வளவு நன்றாக இருக்கிறோம். நீங்களும் மற்றவர்கள் மதிக்கத் தக்கதாக வாழ, உயர்ந்த எங்கள் தமிழ் கலாச்சாரம் சார்ந்த பண்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். எண்ணங்களை விருத்தி செய்யங்கள். கடவுளை வணங்குங்கள்” என்று தனது இரு குழந்தைகளுக்கும் அடிக்கடி புத்தி சொல்பவள் அவள். ஆணும் பெண்ண…

  21. ஒரு ஊரில் ஒரு ஆசாமி இருந்தான். அவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதைக் கண்டாலும் அருவெறுப்பா இருந்தது. ஒரு சமயம் நம்ம ஆளு ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு பந்தி ஆரம்பமாச்சு. நம்ம ஆளு ஒரு ஓரமா போய் உக்கார்ந்து கிட்டான். சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு. இவனுக்குப் பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால் பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டுருந்தான். அப்போ எச்சில் நம்ம ஆளு மேலே தெறிச்சிட்டுது . நம்ம ஆளு தான் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளாச்சே. இந்த கறுமத்தைக் காசியில் போய்த் தான் தொலைக்கணும்னு நினைச்சிகிட்டு மறுநாளே காசிக்குக் கிளம்பிப் போனான். அந்த காலத்தில் இப்போ மாதிரி பஸ், ரயில் வசதி எல்லாம் கிடையாதே.…

      • Haha
    • 11 replies
    • 1.7k views
  22. ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்... . இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்து கொள்ள நேரமாகி விட்டது... . சுவரில் மாட்டப் பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது.... . குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி‌ போய்.. இன்று தேதி 9 எனக் காட்டியது... . வங்கிக்கு சென்று வரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்... . அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது... . வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும் போதுதான் கவனித்தான் வங்கியின் க‌தவு எண் 99 என இருந்தது.. . வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரி பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்…

  23. அது ஒரு காலம். யார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தோம். கையில் அவ்வளவாகப் பசை இருக்காது. ஒவ்வொரு டாலரும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் அங்கிருக்கும் பள்ளிக்கூடங்களில் C/C++ வகுப்பு எடுப்பதன்வழி மாதம் $350 கிடைக்கும். பெரிய பணம் அது. அது போக ஊரிலிருந்து குடிவரவாக வந்திருப்பவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதன்வழி அவ்வப்போது வயிறார சாப்பாடுகிடைக்கும். சனிக்கிழமை மாலையானால், மார்க்கம் ரோட்டில் இருக்கும் அண்ணன் ஒருவரது வீட்டுக்குப் போய்விடுவது வழக்கம். அண்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள். முறையே 4, 1 வயதுப் பிள்ளைகள். நான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வேன். பெரிதாக வெளித்தொடர்பு இல்லாத அவர்களுக்கு என் வருகையானது ஒரு விடுப்பு. வெ…

  24. பொதுச்சுடர் - தெய்வீகன் விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது. விமான நிலையங்களில் ஒருவன் கழுத்தில் இரண்டு தலைகளோடு வந்திறங்கினால்கூட புதினமில்லை. கடவுச்சீட்டிற்குள் இரண்டு தலைகளிருந்தால்தான் அதகளப்படுவார்கள். இங்கு எல்லோருமே கடவுச்சீட்டுகள்தான். தடித்த இரண்டு அட்டைகளாலான அந்த சிறிய புத்தகத்துக்குத்தான் மரியாதை. இலங்கையிலிருந்து ஏறும்போதும் சரி, மலேசியாவில் மாறும்போதும் சரி, இப்போதும்கூட மானிடத்தின் இந்த அட்டை வாழ்வு எவ்வளவு அஜீரணமானது என்பதை எண்ணியபடியே நடந்தேன். …

    • 4 replies
    • 1.3k views
  25. 'தோழர் இரும்பு' என்னும் இச் சிறுகதை ஜான் சுந்தர் அவர்களால் எழுதப்பட்டு 'அகழ்' இதழில் வெளிவந்திருக்கின்றது. 'தோழர்கள்' எப்போதுமே கொஞ்சம் 'இரும்பு' போன்றவர்கள்தான். கொள்கை, கோட்பாடுகள், இலட்சியம் என்று உறுதியாக, வளைந்து கொடுக்காமல் வாழ்பவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்வதில்லை, அவை ஒவ்வொன்றும் தனித்தனியே முக்கியமானவையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை போலும். இச் சிறுகதை தோழர்களின் இன்னொரு பக்கத்தை, இளகிய மனங்களை, காட்டுகின்றது. இதை வாசித்த போது இது ஒரு சாதாரண கதையாகத் தான் தெரிந்தது. ஆனாலும் பின்னர் இது தினமும் மனதில் வந்து போகின்றது. கதையில் நிகழும் பிரதான விடயங்களுக்கு பெரிதாக சம்பந்தம் இல்லாமல் இருக்கும் இந்த ஒரு வசனம் எங்களில்…

      • Thanks
      • Haha
    • 3 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.