கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
ஒரு நிமிடக் கதை: காதலின் பொன் வீதியில் சேகரின் பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருந்த செய்தியைக்கேள்விப்பட்டு , அவனைப்பார்க்கச்சென்றேன். " வா சரவணா... இன்னும் நிச்சயதார்த்த தேதி முடிவுசெய்யவில்லை. அப்புறம் சொல்ல நினைத்தேன்" அவன் கைகளைப்பிடித்து குலுக்கினேன். " நமக்குள் என்ன பார்மாலிடீஸ், ஆமாம், உன் பையனும் உன்னைப்போல் ரொமாண்டிக்கா, அதான் லவ் மேரேஜ்ஜா?" அவன் மிகவும் அவசரமாக " சே..சே..இல்லடா.... இது நாங்க பார்த்து செஞ்சு வைக்கும் கல்யாணம் தான்.என்ன , பையனும் பொண்ணும் ஒரே காலேஜ், ஆனால் டிபார்ட்மெண்ட் வேற பாரு , சந்திச்சிருப்பாங்க ஆன…
-
- 1 reply
- 1.3k views
-
-
"நிழலாக ஆடும் நினைவுகள்" [உண்மைக் கதை] இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன். அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே படுப்பார். நானும் அவருக்கு கதைகள் எல்லாம் சொல்லுவேன். இன்னும் என் மனதில் மறக்க முடியாமல், என் மேல் அவர் வை…
-
- 1 reply
- 477 views
-
-
ஒரு நிமிடக் கதை செல்லங்கள் நம்ம மிதுனுக்குப் புதுசா ஒரு ஜாதகம் கொண்டு வந்திருக்கேன். ஜோடிப் பொருத்தம் அபாரம்!’’ என்றபடி தரகர் அய்யாசாமி, மிதுனின் புகைப்படத்துடன் பெண்ணின் படத்தையும் ஜோடி சேர்த்து அவன் தாயாரிடம் நீட்டினார். முகத்தில் பரவசம் பரவ தாயார் கேட்டார், ‘‘என்ன படிச்சிருக்கா?’’ ‘‘நம்ம பையனுக்கு சமமான படிப்புத்தான். எம்.ஏ., எம்.ஃபில்!’’ ‘‘வசதி எப்படி?’’ - மிதுனின் தந்தை சேனாபதி கேட்டார். ‘‘பொண்ணோட அப்பா பெரிய பஸ் கம்பெனி அதிபர். நாலஞ்சு பெட்ரோல் பங்க் இருக்கு. பத்துப் பதினைஞ்சி டேங்கர் லாரி ஓடுது. பொக்லைன் அது இதுனு நம்ம அந்தஸ்துக்குச் சமமானவங்கதான்!’’ ‘‘பொண்ணு கூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?’’ ‘‘ஒரே பொண்ணுதாங்க. ரொம்பச் செல்லமா வளர்த்திருக்காங…
-
- 1 reply
- 1.2k views
-
-
20 - 20 என்.பி.எல். போட்டிகளில் ஆட்டம் முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வைசாக் கிங்ஸ் அணியினருக்கு இது மிக முக்கியமான போட்டி. முதலில் ஆடிய மதுரை கில்லி அணியினர் நூற்று இருபது ஓட்டங்களுக்குள் சுருண்டு விட்டதால் வைசாக் கிங்ஸ் மிக சுலபமாக வெல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. இன்னமும் ஐந்து ஓவர்கள் கைவசம் இருக்கிறது, ஆறு விக்கெட்டுகள் கைவசம் வைத்திருக்கும் வைசாக் அணி இன்னமும் இருபத்தி ஐந்து ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும். இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு வைசாக் அணிக்கு கிடைக்கும். பதினாறாவது ஓவரில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம். அதுவரை அதிரடியாக ஆடி ரன் குவித்துக் கொண்டிருந்த வைசாக் கிங்ஸ் கேப்டன் நகுல் ஆர்யா சிக்ஸருக்கு முதல் பந்தையே …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு நிமிடக் கதை யாரோ அந்தப் பெண்... அழகான பெண்... உள்ளே வந்தமர்ந்தாள். ‘‘சொல்லும்மா. என்ன ப்ராப்ளம்?’’ டாக்டர் கேட்டார். ‘‘நான் எங்கே போனாலும்... எங்கே வந்தாலும்... எங்கே நின்னாலும்... யாரோ பின்தொடர்ந்து வர்ற மாதிரி இருக்கு டாக்டர். யாரோ என் பின்னாடி இருக்காங்க!’’ - அனிச்சையாகத் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். ‘‘இது ஒருவித இல்யூஷனோட ஆரம்பக் கட்டம். சரி பண்ணிடலாம். மருந்தெல்லாம் வேண்டாம்’’ என்றவர், சிறிது நேரம் கவுன்சலிங் கொடுத்துவிட்டு, ‘‘அடுத்த வாரம் வாம்மா!’’ என்றார். அவள் வெளியில் சென்றாள். அடுத்த நோயாளியாக இன்னொருத்தி உள்ளே வந்தாள். ‘‘டாக்டர்...’’ ‘‘சொல்லும்மா’’ ‘‘நான் எங்கே போனாலும், எங்கே வந்தாலும், எங்கே நின்னாலும்...’’ ‘‘என்னம்மா அதே மா…
-
- 1 reply
- 725 views
-
-
புலி நான்!" பொறுப்புகள் இப்போதுதான் அதிகமாகின்றன! அப்பா இருக்கிறார் அவரெல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் எனத் தெம்பாக ஊர் சுற்றிய காலம் இனி இல்லை! அவருக்கு ஒரு சோதனை எனும் போதுதான் என் பணி இன்னமும் தீவிரமாகிறது! என்ன நிகழ்ந்தாலும் என் பிள்ளைகளுக்கு ஒன்றும் நிகழாது என வலம் வந்த அம்மாவால் இனி சும்மா இருக்க முடியாது! இப்போது இன்னும் கொழுந்துவிட்டு எரிகிறது என்னுள் வேட்கை! தாய்க்குத் தலைமகனாக, தந்தைக்குச் செல்ல மகளாக இனி நானே தலையெடுக்க வேண்டும்! என் பிள்ளைகளுக்கும் சொல்லித் தரவேண்டும்! அப்பா இப்பவும் எம்மிடையேதான் இருக்கிறார், இப்போதும் எமக்கு அவரே காப்பு என்பதைப் புரியவைக்க வேண்டும்! ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம்! துவண்டுவிழக் கூடாது நான் இப்போது! …
-
- 1 reply
- 1.1k views
-
-
சேவலும் முயலும் சேவலும் முயலும் நீண்டகால நண்பர்கள். அடர்ந்து செறிந்த பற்றைக் காட்டில் அடிக்கடி சந்தித்து, இருவரும் ஒன்றாகவே இரைதேடி அலைவார்கள். அன்று நீண்டநேர அலைச்சலின் பின்னர் களைப்பாறவென்று, பச்சைப் பசேலெனக் கிளைபரப்பி வளர்ந்திருந்த புன்னைமர நிழலை நாடிச் சென்ற இருவருக்கும் ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. ஓநாயொன்று புன்னை மரத்தடியில் கண்ணை மூடி நிஷ்டையில் மூழ்கி இருந்தது! ஓநாயாரின் தெய்வீகக் கோலத்தைத் தூர இருந்தே பார்த்த சேவலும் முயலும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றன. அன்பே உருவான சாந்த சொரூபியாய் தியானத்தில் சமைந்திருந்த ஓநாயாரின் திருவுருவில் தன்னை இழந்த முயலோ, பக்தி சிரத்தையோடு தன் பின்னங் கால்களில் குந்தியிருந்து, பவ்வியமாகச் சிரந்தாழ்த்தி முன்னங் கால்…
-
- 1 reply
- 599 views
-
-
ஒரு இனிய உதயம்! – சிறுகதை ''அம்மா.... நான் கேட்க, கேட்க ஏம்மா பதிலே சொல்ல மாட்டேன்ங்கிறீங்க?'' ''சுஜி... உனக்கு இன்னும் ரெண்டு பூரி வைக்கிறேன்.'' ''நான் என்ன கேட்கிறேன்? நீங்க அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? நான் கேட்டது உங்களுக்கு புரியலையா என்ன?'' ''புரியுது.... புரியுது... சுஜி. நீ சின்ன பெண். உனக்கு எதுக்கு இப்போ இதைப்பற்றின கவலை. சாப்பிட்டதும் போய் படி. பரீட்சை வருதுதில்லே.... இப்போ டென்த்துங்கிறதை மனசிலே வச்சுக்கிட்டு படி.'' ''படிக்க புத்தகத்தை எடுத்து விரிச்சாலே அதிலே அப்பா முகம்தான் தெரியுது. படிக்க முடியல...'' ''இதுல உன்னை சொல்ல குத்தமில்லே. இனிமேல் ஸ்கூல்ல வந்து உன்னை பார்க்க வேண்டாம்னு கொஞ்சம…
-
- 1 reply
- 2.2k views
-
-
பந்தல் ஏறிய கொள்ளுக்கொடி! - சிறுகதை பி.ச.குப்புசாமி, ஓவியங்கள்: ம.செ., மரங்களின் மீதும் காடுகளின் மீதும் தனிக் காதல்கொண்டவர் என் நண்பர். அவரை முதலில் அறிமுகப்படுத்திவிடுகிறேன். என் நண்பருடைய தந்தை ஃபாரஸ்ட்டராகப் பணிபுரிந்தவர். தாயை இழந்த என் நண்பரும் அவர் சகோதரியும், இளம் வயதில் அடிக்கடி காட்டிலே இருந்த தந்தையிடம் போய்த் தங்குவது உண்டு. தாவரங்களின் மீதான அவரது காதல், அப்போது இருந்து மூண்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதோடுகூட, அவர் கொஞ்ச காலம் ஒய்.எம்.சி.ஏ-வில் தங்கிப் பயின்றவர். எதிலும் அறிவியல்பூர்வமான மனோபாவம் செலுத்துபவர். எல்லாம் சேர்ந்து அவரை வார்த்தன என்றும் சொல்லலாம். தாவரங்களை அவர் ஏதோ சத்தியங்கள் போல் பேணினார். '…
-
- 1 reply
- 1.9k views
-
-
டெரரிஸ்ட் - சிறுகதை ஷான் கருப்பசாமி - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி 20 வருடத்துக்கு முன்பான கல்லூரி வாழ்க்கை, வேறொரு பிறவியைப்போல இருக்கிறது. முற்பிறவியிலிருந்து யாரையாவது மீண்டும் சந்திக்கும்போது, நெற்றியைச் சுருக்கி யோசிக்க வேண்டியிருக்கிறது அல்லது விழிகளை விரித்து ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. சதையைக் கூட்டியோ, சிகையை உதிர்த்தோ அல்லது வெளுத்தோ அவர்கள்மீது விளையாடியிருக்கும் காலம். வெங்கடேஷும் அப்படித்தான் இரண்டு மடங்கு குறுக்கில் வளர்ந்திருந்தான். பாதி முடியை இழந்திருந்தான். கல்லூரியில் எங்களுக்கு ஜூனியர். வெவ்வேறு துறை. ஆனால், ஹைதராபாத்தில் மூன்று நட்சத்திர விடுதியின் வரவேற்புப் பகுதியில் தூரத்தில் பார்த்தபோதே வெங்கடேஷை எனக்கு அடை…
-
- 1 reply
- 2.1k views
-
-
அந்தி நேரம் இது தான் என்று சொல்ற மாதிரி மரங்கள் நிறைந்த பகுதியினூடாக சிறிது வந்த வெளிச்சம் கூட மங்கி கொண்டு செல்கிறது . பண்ணை கடலில் சூரியன் சங்கமாகி கொண்டிருக்கிறது. மைதானத்தில் சில மாணவர்கள் பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார்கள் .அதை கவனிக்கிற மாதிரி கொஞ்சமும் அரட்டை பாதி கொஞ்சமுமாக குழுமியிருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கம் மெல்ல மெல்ல விலகி கொண்டிருந்தார்கள் சுப்பிரமணியம் பூங்காவில் உள்ள லவுட்ஸீபிக்கரிலிருந்து இலங்கை வானொலியில் இருந்து வரும் இன்றைய நேயர் நிகழ்ச்சிக்கு போடும் இசை. நேரம் ஐந்து என http://sinnakuddy.blogspot.com/2007/06/blog-post.html
-
- 1 reply
- 1.3k views
-
-
நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? “அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதம் எழுதிக்கிறாள்!” என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத…
-
- 1 reply
- 695 views
-
-
உயிர் நண்பன் ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் ஒரு விஷயத்தில் வாய்ச்சண்டை ஏற் பட்டது. அப்போது ஒருவன் மற்றொருவனின் கன்னத்தில் அறைந்து விட்டான். ஆனால் அறை வாங் கியவன் அதற்கு கோபப் படாமல், அமைதி யாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் “இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்” என்று எழுதினான். அதைப் பார்த்த மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் இருவரும் மீண்டும் நடந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர். அங்கு…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஒருநிமிடக் கதை : தலையைச் சுத்தி ஒரு மொட்டை! உடல் தேறி, ஆபீசுக்குப்போகப்போவதாகச் சொன்னதும் மகிழ்ந்த மீனாட்சி, மகன் கால்களில் செருப்புடன் தலை முடி வெட்டக் கிளம்பியதும் திடுக்கிட்டாள். இப்போதுதான் செந்தில் உடல் நலம் தேறி நடமாடத்தொடங்கி இருந்தான். அவன் பார்த்துப்பான் என்று கை விரித்து டாக்டர் சொன்னபோது ஒருநிமிடம் மூச்சு நின்றுபோய்தான் வந்தது அவளுக்கு. டாக்டர்…டாக்டர் என்று பின்னால் ஓடிப்போயும் கிடைக்காத பதிலால் சிறிது நேரம் திகைத்து , ஒரு... ஒருரூபாய் காயினை மஞ்சள் துணியில் முடிந்து “அப்பா, வெங்கடாசலபதி பெருமானே, நீதான் துணை. நல்ல படியா புள்ள ப…
-
- 1 reply
- 4.3k views
-
-
Operation mongoose: சக்கரவர்த்தி Al combate, corred, bayameses! Que la patria os contempla orgullosa; No temáis una muerte gloriosa, Que morir por la patria es vivir. En cadenas vivir es vivir En afrenta y oprobio sumidos. Del clarín escuchad el sonido: A las armas, valientes, corred! தோழர் வீரக்குட்டியின் உடலெங்கும் ஜிவ்வென்று விறுவிறுத்து ஏறியது இரத்தம். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பாய்ந்த அதே ரத்தம். உரக்க குரல் எழுப்புகின்றார். “பயோமோ மக்களே! போருக்கு ஓடி வாருங்கள்… பயோமோ மக்களே போருக்கு ஓடி வாருங்கள்..!” தோழர் வீரக்குட்டிக்கு ‘ஓலா’ என்கிற ஒற்றை வார்த்தையை தவிர, ஸ்பானிய மொழியில் வேறு எதுவுமே தெரியாது. ஆனால…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
ரம்போ – ப.தெய்வீகன் EditorOctober 17, 2023 (1) தலைநகர் கன்பராவில் பெருமைக்குரிய சாவுகளின் நினைவாக வீற்றிருந்த ஆஸ்திரேலிய போர் நினைவுப் பேராலயம், அதி முக்கிய கௌரவிப்பு நிகழ்வொன்றுக்காக தயாரகிக்கொண்டிருந்தது. காலை வெயில் விழுந்து நினைவாலயத்தின் முன்கோபுர நிழல் பரந்த பச்சைப்புல்வெளியில் சரிந்திருந்தது. நாயை எதிர்பார்த்தபடி நானும் பேர்கஸனும் காத்திருந்தோம். ஈராக்கில் சித்திக் என்ற குறுநகரில் காலை நேர ரோந்துப் பணியின்போது வெடித்த கண்ணியில் படுகாயமடைந்தவன் பேர்கஸன். சிதறிய காலோடு இரத்தச் சகதியில் கிடந்தவனை, சக இராணுவத்தினர் இழுத்தெடுத்து, உயிர் கொடுத்ததோடு, நாடு திரும்பியவன். ஆறு ஆண்டுகளாக அன்பான அயலவன். சக்கர நாற்காலியையும் என்னையும் தவிர, நெருக்கமான உறவ…
-
- 1 reply
- 932 views
-
-
பதுங்கு குழி எழுத்தாளர்: பொ. கருணாகரமூர்த்தி நாச்சிக்குடா வீழ்ந்ததிலிருந்து மாதவன் மனத்துள் அந்தகாரம் புகுந்துகொண்டது. இராணுவம் முன்னேறிய வேகத்தைப் பார்க்கையில் மாதவனது மனம் துவண்டுபோனது. இனிமேலும் நாம் இப்போரை வெல்லமுடியுமோ என்று ஒரு சந்தேகமுண்டாகியது. அவன் அடிக்கடி யோகபுரத்திலுள்ள தன் வீட்டுக்குப்போய், அம்மாவையும் சகோதரங்களையும் பார்த்து வருவதும் அவனது அணியின் பொறுப்பாளனுக்குப் பிடிக்கவில்லை. இப்போது தந்தைக்கு திவசம் கொடுப்பதற்காக வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். தந்தைக்கான சடங்குகளைச் செய்வதற்கும் அணித் தலைவனிடம் மண்டாடியே ஒருநாள் விடுப்பு எடுத்து வந்து நிறைவேற்றவேண்டியுள்ளது. தேசத்தின் நிலமையில் மக்களின் பொருண்மியம் பெரிதும் குன்றிவிட்டதால் இப்போ…
-
- 1 reply
- 1k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post_5401.html லொக் லொக் என்று சதா இருமியபடி கொண்டிருந்தது உந்த அப்பம்மா. சாடையாய் வந்த தூக்கத்தை கெடுத்து போட்டுது என்று மனதிலை பொருமி என்று படுக்க . அதைவிட வெளியே வேலிக்கு போட்ட சொத்தி பூவரசு மரத்திலிருந்து அண்ட காகம் ஒன்று தலையை குத்தி குத்தி கரைந்து கொண்டிருந்தது. வராத ஆக்கள் தூரத்திலிருந்து வர போயினோமோ .அல்லாட்டி மண்டையை போட்டினமோ.காகத்தின் பாசையை தெரிந்த மாதிரி மொழி பெயர்த்து கிழவி தன் பாட்டில் புறு புறுத்து கொண்டிருந்தது. வாசலில் சைக்கிள் மணி அடிக்க தந்தியோடாய் மோனை திடுக்கிட்டு பட படக்க. இல்லை இவன் மூர்த்தியணை என்று கொண்டு படலைக்கு போக அவன் பட படத்துக்கொண்டு பேய் அறைஞ்சவன் மாதிரி நின்று
-
- 1 reply
- 1.5k views
-
-
ஞானி – 1. மனிதன் கால் சட்டையும் மேல் அங்கியும் நவநாகரீக தோற்றத்துடன் ஒருவன் ‘ஞானி நான்’ என்றான். “என்ன ‘ஞானியா’? உன்னிடம் தாடி இல்லையே? அழுக்கு வேட்டி கிழிந்த சட்டை இப்படி எதுவுமே இல்லையே? நீ ஞானி இல்லை” - என்றேன் நான். “மாயை” - என்றான். “என்ன?”. “மாயை”. “உன் பெயர் என்ன?” “பெயரா?”;. மெல்ல சிரித்தான். “முகவரிக்கு முன்னே எழுத கேட்கிறாயா? ‘எனக்கு முகவரியே இல்லை. அறிமுகம் தேவையா? அறிமுகம் இல்லாத பலரில் நானும் ஒருவன். ஏன் கேட்கிறாய் பெயரை?” - என்றான் “கூப்பிடத்தான்”. “யாரை?” “உன்னைத்தான்”. மீண்டும் சிரித்தான். “ஏன் சிரிக்கிறாய்?”. “பெயரைக் கேட்டாய். கூப்பிட என்று. இன்னும் சில நொடிகளில் உன்னை நான் பார்க்க மாட்டேன்…
-
- 1 reply
- 2.5k views
-
-
ஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவனுக்கு ’ஜூடோ’ என்ற ஜப்பானிய மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தது. அவன் ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ஆசிரியர் அவன் ஊனத்தைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனும் அவரிடம் அந்த மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள பயிற்சியை ஆரம்பித்தான். சில மாதங்கள் கழிந்த பின்னும் அந்த ஆசிரியர் அவனுக்கு ஜூடோவின் ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே திரும்பத் திரும்ப மிக நுணுக்கமான முறையில் கற்றுத் தந்திருந்தார். அந்த சிறுவன் அந்தப் பயிற்சியை ஓரளவு நன்றாகவே கற்றுத் தேர்ந்த பின் ஆசிரியரிடம் சொன்னான். ”ஐயா எனக்கு நீங்கள் வேறு பயிற…
-
- 1 reply
- 1.1k views
-
-
(பிரித்தானியாவில் அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். - நன்றி: புதினம் 17.01.2009) "என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. "ஆள் "றெயினா"லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்...." என்று முந்திக்கொண்டு கூறினான் குமார். சந்திரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க முற்பட்டவனாய் புன்னகைக்க முயன்றான். அவனால் முடியவில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. புகையிரத நிலையத்தில் இருந்து சந்திரனை குமார்தான் அழைத்து வந்திருந்தான். சந்திரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடியிருப்புகளை விலத்தி தனிய…
-
- 1 reply
- 922 views
-
-
பீஃப் பிரியாணி சிறுகதை: தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சென்னையின் நெருக்கமான தெருக்கள், எங்களுக்கு மிக அந்நியமாக இருந்தன. நாங்கள் என்பது நான்கு பேர். லோகநாதன், செந்தில், ஜார்ஜ், நான். எங்கள் கம்பெனியின் போர்டு மீட்டீங் சைதாப்பேட்டை ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட இருந்ததால் வந்தோம். கிண்டியில் ஒரு லாட்ஜில் எங்களுக்கு இரண்டு அறைகள் போடப்பட்டிருந்தன. மூட்டைப்பூச்சி நசுக்கிய சுவடுகளோடு, ஓர் அழுக்குப் போர்வையும் மாடிப்படி முக்கில் துப்பிய எச்சில் கறைகளுமாக இருந்த லாட்ஜ். குடிக்கும் தண்ணீரில் செத்து மிதந்த பூச்சியைப் பார்த்து லோகநாதன் டென்ஷன் ஆனான். “என்னய்யா இது... நல்லா வாயில வருது. எதுனாச்சும் ஒண்ணுத்துலயா…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெ…
-
- 1 reply
- 1.3k views
-
-
மேன்மலும் பிடிக்காதவை.......கோவில்கள்.....கள்வர்....ராணுவம் . யாழ்ப்பாணத்தில் பல கோவில்கள் தமது தனித்தன்மையை இழந்துவிட்டது என்பது என் அப்பிப்பிராயம்....நல்லூர் கோவிலில்... கோவிலுக்கும் கேணிக்கும் இடையில் இருந்தபாதை இப்போ இல்லை, கேணியை கோவிலுடன் சேர்த்துக்கட்டியுள்ளார்கள், இதனால் உட்பிரகாரம் நீண்டு பிரமாண்டமாக இருக்கிறது....என்ன நோக்கம் என தெரியவில்லை....கீழே Terrazzo போட்டும், மேலே அழகான Chandelier lights போட்டு பயங்கர சோடனைகள் செய்திருக்கிறார்கள், வெளியே சுற்றுவட்டமாக கூப்பிடு தூரத்தில் Gate போட்டிருக்கிறார்கள்......மேலும் கோபுரங்களிற்கு சந்தனகலரில் வண்ணமடித்திருக்கிரார்கள்.... முன்பு திருவிழாவின்போது கால் புதைய நடந்த இடமெங்கே....கோபுரங்களில் பச்ச…
-
- 1 reply
- 2.1k views
-
-
குட்டான் டானியல் ஜீவா விடிகாலை ஏழுமணிக்கு நான் எழுந்து வேலைக்குப் போனால் எப்பிடியும் வீடுவர பின்னேரம் ஆறுமணியாகிவிடும். சில வேளையில் பிசியில்லையென்றால் நேரத்தோடு அனுப்பி விடுவார்கள். நான் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகிவிட்டன. வீடு இருக்கும் வீதி தமிழர்களால் நிறைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற உணர்வே மனதில் மேலோங்கும். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இந்த மார்கழியோடு பதினைந்து வருடம் நிறைவு பெறுகின்றது . என்னுடைய வீட்டுக்காரர் இருவீடுகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார். ஸ்காபரோவில் இருக்கும் வீட்டில்தான் நான் இருக்கிறேன். அடுத்த வீடு மார்க்கம் ஏரியாவில் தமிழர்கள் இல்லாத இடம் பார்த்து வாங்கியிருக்கிறார். இந்த வீட்டில் தன…
-
- 1 reply
- 869 views
-