கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
பல்லிராஜா February 2, 2023 ஷோபாசக்தி நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ! நான், சாக்கியமுனியும் ததாகதருமான சம்புத்தர் அருளிய தம்மம் வணங்கி; இக்காலத்தில் இலங்கைத் தீவில் பெயர் பெற்றவரும், தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கொடிய சித்திரவதைக் கூடத்திற்குள் இரகசியமாக வீழ்த்தப்பட்டவரும், தற்போது அய்ம்பத்தியிரண்டு கனிந்த வயதுகள் நிரம்பப் பெற்றவருமான சீவலி பால தேரரின் கதையைக் கூறத் தொடங்குகிறேன்! ஒரு தெருநாயே இலகுவாக வாயில் கவ்வி இழுத்துச் செல்லக் கூடியளவுக்குத் தான் சீவலி தேரரின் உடலிலுள்ள மொத்த எலும்புகளும் மாமிசமும் இருக்கும். கடுமையான நீண்ட உபவாசங்களாலும், மற்றைய தினங்களில் ஒருவேளை மட்டுமே உள்ளங்கையளவு உண்ணும் வழக்கத்தாலும் தேரரின் உடல் வற்றிக் கிடக்கிற…
-
- 1 reply
- 1.1k views
-
-
ONE WAY – ஷோபாசக்தி அய்ரோப்பாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழருக்கு இலங்கையிலிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே, அது மரணச் செய்தியை மட்டுமே கொண்டுவரும் என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. அதனாலேயே, நான் இரவில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணங்களைத் தள்ளிப்போடுவதற்காக, நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வது போல, மாந்திரீகத்தின் மூலம் கழிப்புக் கழிப்பது போல, அலைபேசியை அணைத்து வைப்பதும் மரணத்தைத் தடுத்துவிடும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக, ஒரேயொரு இரவில் நான் அலைபேசியை அணைத்து வைக்க மறந்து தூங்கிவிட்டேன். அதிகாலை நான்கு மணிக்கு என்னை அலைபேசி அலறி எழுப்பி,…
-
- 2 replies
- 1.4k views
-
-
றாகிங் – ஒரு வன்முறை “நான் இனி பல்கலைக் கழகம் போகாமல் இருந்துவிடுகிறேன். அவர்களை தண்டிக்க வேண்டாம். மன்னித்து விட்டுவிடுங்கள்” சொன்னவன் இப்போ இறந்து போய்விட்டான். பல நூற்றுக் கணக்கான தோப்புக்கரணங்கள் போட்டே செத்துப்போனான் அவன் என்றால், அதிர்ச்சியடையாதார் யார்?. இதற்குப் பெயர் “பகிடிவதை”. “பகிடிப்பட்டவன்” வரப்பிரகாஷ். “எனது மகனின் மரணச் சடங்கில் எந்த மாணவனும் பங்குபற்றக்கூடாது”. தட்டியில் துயரமும் கோபமும் கலந்து எழுதிவைத்தார் விதுரா இன் தந்தை. சிறுநீரகம் சிதைக்கப்பட்டு செத்துப்போனவன் விதுரா. செயற்கைச் சிறுநீரகம் பொருத்தி இயங்கவைக்க செய்யப்பட்ட முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிந்தது. இவன் பலியாகியதும் “பகிடிவதைக்குத்தான்”. இவையெல்லாம் அண…
-
- 2 replies
- 705 views
-
-
வர்ணகலா by ஷோபாசக்தி இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டே பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து, அரசறிவியல் படித்துக்கொண்டிருந்த மிதுனா பாலப்பாவுக்கு அன்றைய கா…
-
- 4 replies
- 1.1k views
-
-
தாயகக் கனவுடன்… (அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும்போதெல்லாம் அறையன்னலுக்கால் அவள் ஏக்கத்தோடு எட்டிப் பார்ப்பதை அவதானித்திருக்கிறேன்) ஸ்டோர்ரூம் சுவரில் சாய்ந்தபடி நான் விம்மியழுததை சுவேதா கவனித்திருக்க வேண்டும். ‘அப்பா, ஏன் அழுவுறீங்க?’ என்றாள் ‘இல்லை, ஒன்றுமில்லை.’ என்று தலையை அசைத்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டேன். ‘அழாதீங்கப்பா, அத்தைப் பாட்டியோட வீடு மட்டுமல்ல, இங்கே எல்லா வீடும்தான் சிதைந்து போச்சு, மெல்ல மெல்லத் திருத்தியிடுவாங்க.’ ஏன்று தனது அறிவுக்கேற்ற அறிவுரை த…
-
- 1 reply
- 625 views
-
-
வாக்குறுதி : அகரன் ஓவியம்: செயற்கை நுண்ணறிவு 1 கனடா, யூகொன். மாயோன், மயூரன் என்னும் பெயரில் தனது இரண்டு வயதில் கனடாவில் உள்ள மொன்றியல் என்ற நகரத்தில் தன் கால்களை ஊன்றியவன். இப்போது தனது முப்பத்தி ஏழாவது வயதில் கனடாவின் மேற்கு பாகத்தில் அலாஸ்காவோடு ஒட்டிக்கொண்டிருக்கும் யூகொன் (yukon) என்ற மாநிலத்தில் அமெரிக்க-கனடிய விஞ்ஞானிகள் குழுவில் ஒருவனாக போராடுகிறான். தனக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வங்கிக்கு வருகிறது ? என்பது அவனுக்கு தெரியாது. அதைப்பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. ஆனால் உலகின் பல நாட்டு அதிபர்களை விட அவனுடைய மாத கொடுப்பனவை கனடிய அரசு உயரமாக கொடுப்பதில் கவனமாக இருக்கிறது. மாயோன் பூமிக்காக போராடுகிறான் என்பதுதான் அதற்குக்காரணம். ‘யூகொன்’ ஆண்டின் அதி…
-
- 1 reply
- 509 views
- 1 follower
-
-
தேளும் தேரையும் ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் கல்லுக்குள் பதுங்கியிருந்த தேளுக்கு பயம் பீடித்துக் கொண்டது. பசி வரும் போதும், தினவு எடுக்கும் போதும், எரிச்சல் வரும்போதும், ஏன் சும்மா பொழுது போகாமல் போர் அடித்தாலும் தேள் கொட்டிக் கொண்டே இருக்கும். அகப்படும் எதையாவது கொட்ட வேண்டும் போலிருக்கும். அதற்குத் தெரிந்தது இரண்டே உணர்வுகள் தான். கோபம், மற்றது பயம். அதற்கப்பால் பகுத்தறிவு எதுவும் கிடையாது. தனது உயிருக்கு ஆபத்து என நினைத்தால், உண்மையானதோ அன்றி கற்பனையானதோ, கோபம் மிகுந்தெழுந்து தேள் கொட்டும். உயிர் மீதான பயம், அதற்கு உயிர் வாழ்வன மீதான பயத்தையும், கோபத்தையுமே கொள்ள வைத்தது. யாரைப் பார்த்தாலுமே எதிரியாகத் தான் தோன்றியது. தனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுபவர்கள் போல…
-
- 3 replies
- 925 views
-
-
விடியுமா? - கு.ப.ரா. தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. ‘சிவராமையர் - டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது. என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள். ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள். எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்…
-
- 1 reply
- 572 views
-
-
12/21/2022 மனத்தடை எல்லாமே கைகூடி வரும்; செய்துவிடலாமென்கின்ற துணிவிருந்தால். மாந்தனுக்குத் தடையாக இருப்பது அவனுடைய சொந்த மனத்தடைதான். நம்மில் எல்லாருக்குமே மனத்தடை இருக்கின்றது; நம்மால் இவ்வளவுதான் செய்ய முடியும், இதனைச் செய்ய முடியாது எனப் பலவாறாக. மனம் அனுமதிக்குமேயானால் முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are! எப்போதெல்லாம் தாயகம் செல்கின்றேனோ அப்போதெல்லாம் ஈரோட்டு உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டு இருந்ததுதான். தோட்டத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்பது. கைகூடி வ…
-
- 0 replies
- 672 views
- 1 follower
-
-
இரசவாதம்! தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன் தெலுங்கில் : பி.அஜய்பிரசாத் | தமிழில் : பொருநை க.மாரியப்பன் சிறுகதை - தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் - தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் - பி.அஜய் ப்ரசாத் (முழுப் பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மரிகொன்னு கதலு” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைக…
-
- 0 replies
- 601 views
-
-
மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் வலையேற்றியது: RAMPRASATH | நேரம்: 8:37 AM | வகை: கதைகள், பிரபஞ்சன் "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
உயிர்தரிப்பு – ப.தெய்வீகன் 01 மூண்டு அணைந்த காட்டுத்தீயினால் எரிந்த பெருமரங்களின் எச்சங்கள் தூரத்தில் தெரிந்தன. கம்பீரமற்ற தரவை நிலத்தைக் கிழித்து பல கிலோ மீற்றர்களுக்கு நீண்டிருந்த புறநகர் நெடுஞ்சாலையில் நாங்கள் பயணித்தோம். மெல்பேர்னின் மேற்குத் திசை வழியாகச் சென்று பண்ணைப்பகுதிகளை தொட்டுவிட்டால், நாம் செல்லும் இடம் வந்துவிடுமென வரைபடத்தில்ஏற்கனவே பார்த்திருந்தேன். வாகனத்துக்குள்ளிருந்த மூன்று பேரையும்விட பேரச்சம்தழும்பிக்கொண்டிருந்த என்னுள் இறுக்கம் கூடியது. கண்ணாடி வழியாகத் தெரியும் பூமியை பார்க்கத்தொடங்கினேன். அடர்பசுமை நிறைந்த பண்ணை நிலங்கள் தெரியத்தொடங்கின. அடுத்து வந்த வயல்களில் அறுத்த புல்லுக்கட்டுகள் பெரும் எண்ணிக்கையில் சுர…
-
- 0 replies
- 968 views
-
-
வலசை – கார்த்திக் பாலசுப்ரமணியன் நாங்கள் இந்த அப்பார்ட்மண்ட்டுக்கு குடிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. பூரணிக்கு ஃபிளைட் டிக்கெட் உறுதியானவுடன் முதல் காரியமாக வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சிட்னியில் நினைத்தவுடன் வீடு அமைவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதுவும் ஹோம்புஷ் போன்று இந்தியர்கள் அதிகம் தங்கியிருக்கும் இடங்களில் கிடைப்பது இன்னுமே கடினம். இந்தப் பகுதியைச் சுற்றி ஈழத் தமிழர்களும் வசிக்கிறார்கள். இந்த அப்பார்ட்மண்ட்டிலிருந்து நடந்து போகும் தொலைவில் ஒரு இந்தியன் ஸ்டோர் இருக்கிறது. இந்தியச் சமையலுக்குஉகந்த அத்தனை மளிகைப் பொருட்களும் அங்கே கிடைக்கும். அரிசி, பருப்பு, சர்க்கரையிலிருந்து குங்குமம்,சந்தனம் பத்தி முதலான பக்திப் பொருட்கள் உட்பட எல்லாமும் கிடைக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
இசைவு இராசேந்திர சோழன் நடேசனுக்கு மாமியார் வீடு ரொம்ப சௌகரியம். நல்ல வசதியும்கூட. போய்விட்டால் போதும். மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார் என்று அமர்க்களம் செய்துவிடுவார்கள். கடைசீ மருமகப்பிள்ளை நடேசன். ஏக கடைசீ என்றால் நாலைந்து மருமகப் பிள்ளைகளில் கடைசீ என்று அர்த்தம் இல்லை. இரண்டே மருமகப் பிள்ளைகளில் இரண்டாவது மருமகன். இளைய மருமகன். மாமிக்கு ரெண்டே பெண்டுகள். மூத்த பெண்ணைத் திண்டிவனத்தில் ஒரு டெய்லருக்குக் கொடுத்திருந்தார்கள். இளையவள்தான் நடேசனுக்கு சம்சாரம். அதற்குப் பிறகு மாமிக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனாருக்கு வசதிப்படாமலோ போயிருக்கலாம். இதனால் நடேசனின் சம்சாரத்திற்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்ல…
-
- 2 replies
- 1.2k views
-
-
சமரசம் மலர்ஸ் by நெற்கொழு தாசன் July 31, 2022 என்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை. குரல் கொட்டாவியோடு கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய புன்னகையோடு திருப்திப்பட்டுக்கொண்டார். இருந்தபடியே தோளில் கொழுவியிருந்த பைக்குள் கையைவிட்டு யாருக்கும் தெரியாமல் விரல்களை மடித்து எண்ணிப் பார்த்தார். திரும்பி எங்கோ பராக்கு பார்ப்பவர் போலப் பாவனை செய்தபடி மீண்டும் ஒருமுறை மனதால் கணக்கிட்டார். மெதுவாகத் தலையாட்டி இதுவரை எல்லாம் சரியாகத்தான் போகிறது. ஆள் வந்தவுடன் காசைக் கொடுத்துவிட்டு …
-
- 3 replies
- 988 views
-
-
10,000 டாலர்... பரிசு பெற்ற, கார் சாரதி. ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று, அவர் கார் முன் நின்றது.இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்.. 'அவர் 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... "நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால…
-
- 1 reply
- 1.4k views
-
-
முழுவதும் ஆண்களே உள்ள ஊருக்கு சென்ற பெரியவருக்கு ஒரே ஆச்சரியம்!! அந்த ஊரில் உள்ள ஆண்கள் எவ்வாறு தங்கள் காமப்பசியை தீர்த்து கொள்வார்கள்? என்று. பொறுமையாக இருந்த பெரியவர் அங்குள்ள ஆண்களிடம் நீங்கள் அனைவரும் ஆண்களாக இருக்கிறீர்களே உங்கள் காம பசியை எப்படி தீர்த்துக்கொள்வீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஆண்கள், நாளை காலை பக்கத்தில் இருக்கும் ஆற்றின் அருகில் வந்தீங்கன்னா உங்களுக்கே அது புரியும் என்றனர். அடுத்த நாள் காலை ஆவலுடன் நதிக்கரைக்கு சென்ற பெரியவர் அங்கிருந்த ஆண்கள் ஒரு பெரிய கழுதையுடன் நின்று கொண்டிருப்பதை கண்டார். அதில் ஒரு ஆண் பெரியவரிடம் சொன்னார், 'நீங்கள் எங்க விருந்தாளி, முதலில் நீங்கள் …
-
- 13 replies
- 2.3k views
-
-
பார்வை தாட்சாயணி பச்சை வைப்பர் இழைக்கண்ணாடிகள் இருபக்கமும் கூரைகளாய் வளைந்து இறங்கிய கூடாரம். மழைத்துளிகள் வளைந்த விளிம்புகளில் சிறு பிள்ளைகள் சறுக்கி விழுவது போல விழுந்து வழிந்தன. வெளிமுற்றத்தின் குடை நிழலொன்றில் மழைக்கு ஒதுங்கியபடி அந்தக் கூடாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தரணிகா. அவள் வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன, கீதாஞ்சலி இன்னும் வரவில்லை. மழையின் சாரல்கள் அவளது பயணத்தில் இடையூறு தந்திருக்கக் கூடும் என நினைத்தாள். வானம் காலையில் வெயிலின் பளிச்சிடலோடு சிறிது தகதகப்போடு தான் இருந்தது. நாலைந்து நிமிடங்களுக்குள் திடுமென்று சூழ்ந்த இருண்மையின் நெருக்கத்தை எப்படி விலக்குவது?. அதற்குப் பிறகு சூழ்ந்த சாம்பல் நிறம் சூழலை ஒரு இ…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆசான் 1988..... இதுதான் அந்த ஆண்டு. சரியாக இருக்கும். என் வாழ்நாளில் நான் சந்தித்த இன்னொரு ஆளுமையின் கதை இது. யாழ்ப்பாணத்து நரக வாழ்விலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டு மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்திருந்த ஆரம்ப நாட்கள். புதிய இடம், புதிய மனிதர்கள், இவை எல்லாவற்றிற்கும் புதியவனாக நான் என்று என்னை நான் நிலைபெறச்செய்ய பகீரதப் பிரயத்தனம் செய்திகொண்டிருந்த நாட்கள் அவை. சித்தியின் தயவில் அநாதைகள் விடுதியில் சேர்க்கப்பட்டு, மறுநாளே மிக்கேல் கல்லூரி வாசலில் கட்டைக் காற்சட்டை அணிந்துகொண்டு கமலா டீச்சரின் வரவிற்காக காத்திருந்த அந்தக் காலை இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. விசாலமான பாடசாலை, இரைச்சலான மாணவர் கூட்டம், உயர்ந்த இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் தெரிந்த …
-
- 35 replies
- 4.7k views
- 1 follower
-
-
கள்ள வீசா – ஒரு கனவு May 10, 2022 — அகரன் — பாரிசுக்கு வந்து ஒன்பது வருடமும் 25 நாட்களும் கடந்தபோது எனக்கு அகதி அடைக்கலம் கிடைத்தது. அன்று வெள்ளிக்கிழமை. ஊரில் தூக்கத்தின்போதுநாளொரு கனவு வருவது உண்டு. எப்போது நாடுகளிள் எல்லைகளை கடக்கும் இலட்சியத்தில் இறங்கினேனோ அன்றில் இருந்து எனக்கு கனவு வந்ததாக நினைவில்லை. விதிவிலக்காக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலைகனவு ஒன்று எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. கனவிற்கும் விசாகிடைத்ததற்கும் சாமி சம்மந்தம் இருக்குமோவென்று யோசித்தேன். ஒரு சாமியுமில்லை. சம்மந்தமுமில்லை. கனவு கண்டெழும்பி அதன் நினைவுகளோடு காலை பத்துமணிக்கு வேலைக்குச் சென்றேன். கனவைப்பற்றி ஏன் சொல்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அதுவல்ல நான் சொல்ல…
-
- 3 replies
- 1.4k views
-
-
அம்மணப் பூங்கா - ஷோபாசக்தி தவபாலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மனிதரின் முகத்தைப் பார்த்தபோது, எனது கண்கள் தாமாகவே திடுமென இறுக மூடிக்கொண்டன. ஏதோவொரு கிரேக்கப் புராணக் கதையில் வரும் உருவமொன்றுதான் என் ஞாபகத்தில் மின்னலாயிற்று. நான் அச்சத்துடனோ அல்லது தயக்கத்துடனோ கண்களைத் திறந்தபோது, தவபாலன் முன்போலவே தனது தலையையும் முகத்தையும் மறைத்திருந்தார். அவரது விழிகள் மட்டும் தணல் போலத் தகித்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தப் பூங்காவின் மேற்குப் பகுதியிலிருந்த இடிந்த கோபுரத்திலிருந்து மூன்று தடவைகள் மணியொலித்தது. எனக்கு இந்த நகரம் முற்றிலும் புதிது. பிரான்ஸின் எல்லை நாடான இந்த நாட்டுக்கு நான் பல தடவைகள் வந்திருக்கிறேன் என்றாலும், இன்று அதிகாலையில்தான்; முதற்தடவைய…
-
- 15 replies
- 2.1k views
-
-
தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்... ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க..... ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்... அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்... வட்டியும் கட்ட மாட்டான்... பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்... கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்... இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல... இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல... சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல... பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்... இதெல்…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
சீனிவாசன் ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்! அவர் கடையில்... தொட்டுக் கொள்ள சீனி கொடுப்பார்கள்! . ஆனால் சீனி விலை உயர்வின் காரணமாக சீனி கொடுக்க முடியவில்லை! . ஒரு போர்டு எழுதி போட்டார்! "இன்று முதல் தோசைக்கு சீனி கிடையாது" . கிச்சாமி அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்! சாப்பிட போனார் ! முதலில் ஒரு தோசை வாங்கினார்! . இரண்டாவது ஒரு தோசை வாங்கினார்! சீனி கேட்டார்! . முதலாளி சொன்னார்! சீனி கிடையாது! . கிச்சாமி சொன்னார் போர்டை படியுங்கள் " முதல் தோசைக்கு மட்டும் கிடையாது! . இது இரண்டாவது தோசை! முதலாளி தலையில் தட்டி கொண்டே சீனி கொடுத்தார்! . அடுத்த நாள் போர்டு ஐ மாற்றி எழுதினார் "இனி மேல் தோசைக்கு சீனி கிடை…
-
- 0 replies
- 1.5k views
-
-
புலியின்.... தொழிற்சாலையில், வேலை செய்த... எறும்பு. ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நி…
-
- 0 replies
- 3k views
-
-
கற்கனைக்கதை ஒன்று (ஒன்றா?) சொல்வேன் கேளுங்கள் உங்கள் வீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் இப்பொழுது கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள் .... ....... ...... உங்கள் வீட்டின் அசையாப்பொருள் அனைத்துக்கும் (சுவர் கதவு உட்பட) கண் காது உள்ளது என்று நினைத்துக்கொள்ளுங்கள் .... ...... ..... உங்களது வீட்டில் நடந்தவைகளை அசை போடுங்கள் .... .... ... இப்போ கதை சொல்லி நானல்ல நீங்கள் ... .... யாவும் கற்பனை அல்ல நிஐம் ... ... முற்றும்🤣🙏
-
- 3 replies
- 928 views
-