Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. இறுதி யுத்தத்தின் பின்னான நாட்களில் அனைவரும் வவுனியா முகாம்களிற்கு கொண்டு வரப்பட்டிருந்தபோது உணவு, உடை, இருப்பிடம்,தண்ணீர் என அனைத்தையும் பெறுவதற்கு பெரிய நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. முழுக் குடும்பமுமே இவற்றை பெறுவதற்கு ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டியிருந்தது. பெண்கள் தண்ணீர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் பொருட்களின் வரிசையில் காத்திருக்க, ஆண்கள் உணவு வண்டிகளின் பின்னால் ஓடி உணவு பெறுவது, கூடாரமமைப்பது, பொருட்கள் வாங்க அலைவது எனத் திரிந்தார்கள். இந்த நாட்களில் அனைவருக்கும் இருந்த ஒரே சந்தோசமெனில், யுத்த வலயத்தில் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் பற்றிய தகவல்களே. ஓவ்வொருவரும் ஒவ்வொரு முகாம், வலயம், கூடாரமாக அலைந்து திரிந்தோம். ஒவ்வொரு காலடி வைக…

  2. முன்னொரு பொங்கல் நாளில் யோ.கர்ணன் இன்றைய பொங்கலைப் போலவே மூன்று வருடங்களின் முன்னரும் ஒரு பொங்கல் நாள் வந்தது. அன்று நாங்கள் யாரும் பொங்கி, சூரியனிற்குப் படைக்கவில்லை. அன்று விடிந்ததன் பின், அது ஒரு பொங்கல் நாளென்றே நினைக்க முடியவில்லை. அது பற்றிய சிந்தனையெதுவுமிருந்திருக்கவில்லை. ஏனெனில், அன்றுதான் நான் அகதியானேன். ஒரு அகதிக்குரிய முழுமையான அர்த்தங்களையுணர்ந்து அகதியானேன். மரணமும், கண்ணீரும், காயமும் நிறைந்த பெரிய நாடோடி வாழ்வின் முதல் அடியை அன்றுதான் எடுத்து வைத்தேன். இதுவரையான யுத்த இயல்புகளிற்கு மாறாகவே இறுதியுத்தமிருந்ததினால், யுத்தத்தின் வழமையான அறிகுறிகளெதுவுமின்றியே மன்னாரில் ஆரம்பித்த யுத்தம் ஒவ்வொரு ஊருக்குள்ளும் சத்தமின்றி மெதுமெதுவாக நுழைந்து கொண்…

  3. வெப்பச் சூத்திரம்: சக்கரவர்த்தி ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் “எனது பெயர் ஷாரிகா. எனது அம்மாவின் பெயரைச் சொன்னால் என்னைத் தெரிந்து கொள்ள இன்னும் உங்களுக்கு இலகு. விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் மருத்துவர் ராஜினி திரணகமவின் மகள். ஷாரிகா திரணகம.” பேச்சின் ஊடாக உணர்வுகளைப் பகிர நான் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை. மௌனம்தான் எனது ஊடகம். மௌனத்தின் ஊடாக மட்டுமே ஊணர்வுகளை பகிரத் தெரியும். புத்தர்தான் மௌனத்தை எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார். இரண்டாயித்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் மௌனப் பிரசங்கம் செய்த சோனாலியில், இலைகளின் சலனம் இல்லாத அதே அரச மரத்தடியில் என்னை மட்டும் தனியே அமர்த்தி, இருபத்தைந்து ஆண்டுக…

  4. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஹோம்வொர்க் ‘‘டேய்... ஹோம்வொர்க்கை முடிச்சிட்டியா?’’ என்று மகனிடம் குரல்கொடுத்த அதே நேரத்தில், ‘ரிப்போர்ட் ரெடியா?’ என பாஸிடம் இருந்து இமெயில் வந்தது `வொர்க் ஃப்ரம் ஹோம்' ரகுவுக்கு! - சாய்ராம் கஷ்டம் இன்ஜினீயரிங் காலேஜ் ஓனர் வருத்தத்துடன் சொன்னார், “நான் கான்வென்ட் ஸ்கூல் நடத்தவேண்டியது தம்பி... தெரியாத்தனமா இன்ஜினீயரிங் காலேஜ் ஓப்பன் பண்ணிட்டேன். அதான் கஷ்டப்படுறேன்.” - வைத்தீஸ்வரன் பாலகிருஷ்ணன் லைக் “ஃபேமிலியுடன் ஒரு வாரம் ஃபாரின் டூர் போறேன், feeling happy” என்ற ராஜேஷின் ஸ்டேட்டஸுக்கு, தன் ஃபேக் ஐ.டி-யில் இருந்து லைக் போட்டான் ஏரியா திருடன்! - எஸ்கா …

  5. வேட்டு - ஜெயமோகன் எருமைமாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும் பழனியப்பனும் அமர்ந்திருந்தபோதுதான் ஔசேப்பச்சன் “பிரதர் லைஃப் இஸ் எ மித். இதில் காதல் கற்பு எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. காமம், அதுமட்டும்தான் உண்மை. ஐந்து நிமிட நேர உண்மை. ஒரு இரண்டுமணிநேரம் அந்த உண்மையைச் சுற்றி அழகான பொய்யை கட்டிக்கொள்ளமுடியும்… அவ்வளவுதான்” என்றான் பழனியப்பன் ஒரு புதிய பிளாண்ட் திறந்திருந்தமையால் ரெமி மார்ட்டின் பதிமூன்றாம் லூயிஸ் ரேர் காஸ்கின் செலவு அவனுடையது. அவன் மெல்லிய ஏப…

    • 8 replies
    • 1k views
  6. ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிருக்கிறது. கனவின் எழுச்சி மிக…

  7. Started by கிருபன்,

    கள்ளி இளங்கோ-டிசே ஏதோ ஒரு வாசனை என்னைப் பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அந்த வாசனையை முதலில் எங்கே நுகர்ந்தேன் என்பது சரியாக நினைவினில் இல்லை. அநேகமாய் நிரம்பி வழியும் மாலைநேரத்து சப்வேயில்தான் அந்த நறுமணம் எனக்குள் நுழைந்திருக்க வேண்டும். பிதுங்கித் ததும்பும் மனிதக் கூட்டத்திடையே, காலையோ கையையோ கூட சற்றும் நகர்த்த முடியாத பொழுதொன்றில் இப்படியான வாசத்தை நினைவில் கொண்டிருத்தல் என்பதே சற்று அதிகப்படியானதுதான். ஆனால் நான் விடும் மூச்சே மற்றவரின் காதுக்குள் நுழைந்துவிடும் அபாயமுள்ள நெரிசலில் எனக்கு இந்த வாசத்தை பின் தொடர்வது சற்று ஆசுவாசமாயிருந்தது. மேலும் இந்த நறுமணம் யாரோ ஒரு பெண்ணிலிருந்துதான் வருகின்றது என எண்ணிக்கொள்வது இன்னும் குதூகலத்தைத் தருவதாயிருந்தது. மனித உ…

  8. கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 11) எங்களின் தூக்குக்கு எதிராக மொத்தத் தமிழகமும் கைகோத்தபோது, காங்கிரஸ் காரர்கள் மட்டும் கோபத்தோடு எதிர்த் தார்கள். 'மறக்க முடியுமா... மன்னிக்க முடியுமா?’ என உரக்கக் குரல் எழுப்பினர். ராஜீவ் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் திரட்டி வந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்மையாகவே ராஜீவ் காந்தியின் மீது நேசமும் பாசமும் பூண்டிருக்கும் காங்கிரஸ்காரர்களே... மாண்பையும் மனிதநேயத்தையும் மறவாதிருக்கும் நியாயவாதிகளே... உங்களிடம் எனது நீதிக்கான - உண்மைக்கான சில கேள்விகளை சமர்ப்பிக்கிறேன். உங்களை நீதிபதிகளாக மாறும்படி நான் வேண்ட வில்லை. குறைந்தபட்சம் நீங்கள் உண்மை என்று த…

  9. தர்க்கத்திற்கு அப்பால்... ஜெயகாந்தன் வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட 'வெற்றி 'கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன. என் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன் வழக்கம்போல 'தோல்வி நிச்சயம் ' என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்குத் தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. கற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் …

    • 0 replies
    • 1k views
  10. சிறுதுளை – தர்மு பிரசாத் 1 திருவைத் தேடி வந்திருந்த சின்னவனும் மொறீஸும் களைத்திருந்தனர். அவர்களது மென்நீலக் கட்டம் போட்ட சட்டை வியர்வையூறி வரியாக வெண் உப்பும் சேற்று நிறத்தில் புழுதியும் படிந்திருந்தது. நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பது சோர்ந்து உச்சாகமிழந்திருக்கும் கண்களில் தெரிந்தது. ஆனால் வீட்டுப் படலைக்கு மேலாகத் திருவைப் பெயர் சொல்லி அழைத்த மொறீஸின் குரல் சோர்வேயில்லாத அதிகாரத்தின் வறண்ட தொனியில் இருந்தது. திருவின் அம்மா தனபாக்கியம் வீட்டை ஒட்டி நீண்டிருந்த வெளிக்குந்தில் அமர்ந்திருந்தார். படலையிலிருந்து கூப்பிட்டதைக் கேட்காமல் சூடை மீனை வயிற்றுப் பக்கமாகக் கீறி, நீரிலிட்டு அலசிச் சுத்தம் செய்வதைப் பார்த்த மொறீஸுக்கு கடும் சினம் வந்தது. பொறுமையிழந்த மொறீஸ…

  11. பரபாஸ் - ஷோபாசக்தி “பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாஸையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்” (மத்தேயு 27:18) நீங்கள் சந்தியாப்புலத்திற்குப் போயிருக்கமாட்டீர்கள்! இப்போது சந்தியாப்புலத்தில் கடற்படையினர் மட்டுமேயிருக்கிறார்கள். உருக்கெட்டுக் கிடக்கும் சந்தியோகுமையர் தேவாலய மண்டபத்தில்தான் படையினரின் தலைமையகம் இயங்குகின்றது. சந்தியாப்புலத்தின் மணலில் மனிதர்களின் வெற்றுப் பாதங்கள் பதிந்து இருபத்தொரு வருடங்களாகின்றன. படையினரின் பூட்ஸ் தடயங்கள் மட்டுமே இப்போது அந்தக் கிராமத்தில் பதிந்திருக்கின்றன. கால்களால் நடந்து செல்லும் மிருகங்கள்கூட சந்தியாப்புலத்தில் கிடையாது. வயிற்றினால் ஊர்ந்து போகும் ப…

  12. இணைய களம்: ஒரு அப்பா, ஒரு பிள்ளை, ஒரு மீனு கதை! இரவில் பாய் விரித்துப் படுத்தவுடன், “அப்பா மீனு கதெ...” என்று ஆரம்பிப்பான் சந்துரு. பிறகு எங்கள் உரையாடல் இப்படிப்போகும். “ஒரு ஊர்ல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய காடு இருந்துச்சாம்.” “உம்..” “அந்த காட்டுல ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய கொளம் இருந்துச்சாம்.” “உம்..” “அந்தக் கொளத்துல என்ன இருந்துச்சி?” “மீனு.” “என்ன கலர் மீனு?” “வெள்ளை, ஒயிட்டு, கருப்பு, ஆரஞ்சு, புளு.” “அப்ப அந்தக் கொளத்துக்கு யாரு வந்தா?” “ஆனை.” “யானை என்ன செஞ்சுது?” (துதிக்கை போல கையை உயர்த்தியபடி) “தண்ணி குச்ச…

  13. என் உயிர் உன்னிடம் ❤ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது. ❤திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்... ❤இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது. ❤ நகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்வான். அதேபோல, அவளும் கிராமத்து.,. அதாவது ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்..., ❤ ஒருவர் ஆசையை மற்றோருவர் நிறைவேற்றி என்று அன்புடன் வாழ்ந்தனர். ❤ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான் கொஞ்சம் சண்டை, நிறைய அ…

  14. எல்லாம் ஒரு நாள் முடியும்! மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க …

  15. மஹாபலி ( சிறுகதை) - சுஜாதா மகிஷாசுரமர்த்தினி குகைக்கு முன்னால் பெங்காலிகள் 'ஆஷோன்... ஆஷோன்...' என்று ஆரவாரத்துடன் போட்டோ பிடித்துக் கொள்ள... சென்னை-103-ஐச் சேர்ந்த 'அன்னை இந்திரா மகளிர் உயர்நிலைப் பள்ளி'யின் ஆசிரியைகள் டீசல் வேனிலிருந்து ஆரவாரத்துடன் உதிர்ந்து, மஹாபலிபுரத்தின் சரித்திர முக்கியத்தை விளக்கும் வகையில், ''இங்கதாண்டி 'சிலை எடுத்தான் ஒரு சினைப் பெண்ணுக்கு' ஷூட்டிங் எடுத்தாங்க...'' என்று வியக்க, கற்சிற்பிகளின் உளி சத்தம் எதிரொலிக்க, பிள்ளையர்களும் கொள்ளை முலைச் சுந்தரிகளும் சிலை வடிவில் டூரிஸ்டுகளுக்குக் காத்திருந்தார்கள். 'கல்லோரல் சீப்பா கிடைக்கும்னு யாரோ சொன்னாங்களே?' இவற்றையெல்லாம் கவனிக்காமல் ஊடே நடந்த அந்த இளைஞன், கரைக்கோயிலின் அ…

    • 1 reply
    • 1k views
  16. அந்தரங்கம் புனிதமானது கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். “ஒரு நிமிஷம் இருங்கள்; கூப்பிடுகிறேன்… நீங்கள் யார் பேசறது?” என்ற கேள்வி வந்ததும் பல்லைக் கடித்துக் கொண்டு பதில் சொன்னான்: “நான் – அவர் மகன் வேணு!”சற்றுக் கழித்து அவனது தந்தையின் குரல் போனில் ஒலித்தது. “ஹலோ! நான் தான் சுந்தரம் …”- அதுவரை இருந்த தைரியம், ஆத்திரம், வெறுப்பு யாவும் குழம்பி வேணுவுக்கு உதடுகளும் நெஞ்சும் துடித்தன. அவனது பேச்சு குழறிற்று; இருந்தாலும் சமாளித்துக் கொண்டு பேசினான்: “நான் வேணு பேசறேன்… நான் உங்களோடு கொஞ்சம் பேசணும்… ம் … தனியாப் பேசணும்.”“சரி… இன்னும் கொஞ்ச நாழிலே நான் வீட்டுக்கு வந்துடுவேன்…”“இல்லே… அதைப்பத்தி… வ…

  17. முதல் காதல் எத்தனை வயதில் என்று கேட்கும் நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கே என் கண்களில் தெறிக்கிறது ஒரு நக்ஷத்திர ஆச்சர்யம். 3 வயதில் என்ற என்னுடைய பதிலுக்கு வேறு என்ன செய்ய முடியும் ? நினைவுக்கே வராத அந்த வயதில் நான் பார்த்தாக இரண்டு பேர் மட்டுமே நினைவில் இருக்கிறார்கள். ஒன்று. அழ அழ அம்மாவிடம் என்னை விட்டு சென்ற அம்மாச்சி. மற்றொன்று, இலங்கை பயங்கரம் பற்றிய கண்காட்சி ஒன்றில் அப்பா கை நீட்டி சுட்டி காண்பித்த புலியுடன் நின்று கொண்டிருந்த இளம் வயது பிரபாகரன். பார்த்தவுடன் என்ன தோன்றியது என்று ஞாபகம் இல்லை. ஆனால் ஞாபகம் தெரிந்த முதல் நாளில் அன்பையும் தோன்ற வைத்த முதல் மனிதர். வயதானவர்கள் கூடி நிற்கும் கூட்டத்தில் வேடிக்கை பொருளாக என்னை வைத்து விளையாடும் சிறு வ…

  18. [size=4]கிளிநொச்சியின் நினைவுகள் என்னை அறியாமல் மீள மீள கண்முன் [/size] [size=4]வந்து போகிறது.சிங்கள அரசின் சத்ஜெய இராணுவ நடவடிக்கையால் [/size] [size=4]இழந்த கிளிநொச்சியை தமிழர் மீண்டும் கைப்பற்றினர்.2001 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் [/size] [size=4]தமிழரின் மீள்குடியேற்றம் ஆரம்பம் ஆகிற்று.வளமான கிளிநொச்சி [/size] [size=4]உடைந்த கட்டிடங்களாலும்,பற்றைகளாலும் உருமாறிக்கிடந்தது.ஒருநாள் [/size] [size=4]கனகபுரத்திலிருந்து டிப்போ சந்திக்கு போகும் பாதையில் சென்று [/size] [size=4]இடப்பக்கமாய் கண்ணன் கோயில் ஒழுங்கையால் திரும்பி மோட்டார்சைக்கிளில் [/size] [size=4]போய்க்கொண்டிருந்தோம்.வேலிக்கரையோரமாய் நீளக்கோடுகள் [/size] [size=4]உள்ள சாரம் ஒன்று விரித்ததுபோல் கிடந்தது.மோட…

  19. Started by நிழலி,

    அடுத்த வீடு சில வருடங்களுக்கு முன்பு, ஒரு காலனி வீட்டில் குடியிருந்தேன். காலனியின் முதல் வீட்டில் MVV இருந்த ஆறு வயதுப் பெண் குழந்தையன்று, “என்ன அங்கிள், எப்போ பார்த்தாலும் நீங்க உங்க பையனுக்கே பூந்தி, மிக்ஸர் வாங்கிட்டு வர்றீங்க..? எனக்கு ஏன் எதையும் வாங்கிட்டு வர மாட்டேங்குறீங்க?” என்று கேட்டது. ஒரு நிமிஷம் சுள்ளென சாட்டையால் அடித்த மாதிரி இருந்தது. நிஜம்தானே..? நம் குழந்தைகள் மட்டும்தான் நம் கவனத்தில் இருக்கிறார்கள். நமது அண்டை வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது நம் நினைவில் இருப்பதில்லையே! பையனுக்கு வாங்கி வந்த ஸ்வீட்டை எவ்வளவோ முறை பங்கு போட்டு அந்தக் குழந்தைகளுக்கும் கொடுத் திருக்கிறோம். ஆனாலும், அந்தக் குழந்தையின் ஆசை இயல்பானதுதான் இல்லையா?…

  20. Started by நவீனன்,

    நிரஞ்சனி நிரஞ்சன், நிரஞ்சனி. நல்ல பெயர் பொருத்தம் என்றுதான் வீட்டில் அனைவரும் சொன்னார்கள். ஆனால் வாழ்க்கை அப்படி ஒன்றும் பொருத்தமாக போய்விடவில்லை என்றே நிரஞ்சன் எண்ணினான். திருமணமாகி இன்றோடு சரியாக இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. சம்பிரதாயமாக திருமணநாளைக் கொண்டாடிவிட்டு தான் பணியாற்றிய படத்தின் இசை வெளியீட்டிற்கு கிளம்பினான். அவன் காரில் ஏறப்போகும் போது, நிரஞ்சனி வாசலிலேயே நின்றுக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், ""என்ன?'' என்றான். "" வரும் போது ஏதாவது வாங்கிட்டு வா...'' நிரஞ்சனி சொன்னாள். ""ஏதாவதுனா...?'' ""ஒண்ணுமில்ல'' என்றவாறே உள்ளே ஓடிவிட்டாள். சிறிது நேரம் அவள் செல்வதை…

    • 1 reply
    • 1k views
  21. டிஜிட்டல் டிராவல்! ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்லலாம்; பைக்கில், பஸ்ஸில், விமானத்தில், கப்பலில் என்று பயணிக்கலாம். செல்லும் விதம் மற்றும் தூரத்திற்குத் தகுந்தவாறு பயண நேரம் மாறுபடும். இந்த பயண நேரத்தை மிச்சப்படுத்தவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்காக, நொடியில் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குப் பயணம் செய்வதை சாத்தியமாக்கும் அற்புதக் கண்டுபிடிப்பாக அது பேசப்பட்டது. ஒரு கேமராவும், கொஞ்சம் கம்ப்யூட்டர் சமாச்சாரங்களும் சேர்த்து அந்தக் கண்டுபிடிப்பு உருவாகியிருந்தது. ‘டிஜிட்டல் டிராவலிங்’ என்பது இந்தக் கண்டுபிடிப்பு! அவர்களிடம் இருக்கும் ஒரு விசேஷ கேமராவால், பயணம் செய்யும் நபரையோ அல்லது பொருளையோ ஒரு போட்டோ எடுப்பார்கள், அவ்வளவுதான்! அவ்வளவ…

  22. Started by நவீனன்,

    பார்ட் டைம் ஜெனரல் பீட்டர்ஸ் சாலையிலிருந்த அந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில், கூட்டம் நிறைந்திருந்தது. மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகள், தமக்கு தேவையான வண்டியின் ஸ்பேர் பார்ட்சுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கடையின் பின்னாலிருந்த கோடவுனிலிருந்து பொருட்கள் பெரிய பெரிய அட்டைப் பெட்டியில் வெளியே வந்து, கடை முன் நிறுத்தப்பட்டிருக்கும் டெம்போ வேன், மினி லாரிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கடையில் ஒரு பக்கமாக உட்கார்ந்து, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. கனஜோராக நடக்கும் வியாபாரத்தைப் பார்த்தால், ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் போலிருந்தது.…

  23. கதை சொல்லவா? 13/ தமிழ் புத்தன்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்

    • 0 replies
    • 1k views
  24. 'பிரேம' அத்தியாயங்கள் ஓய்வதில்லை! அகிலன் செல்போனில் அழைத்தான். ஹலோ என்றதும், ஒரு குட் நியூஸ் என்று குழந்தைக்கே உரிய குதூகலத்தோடு சொன்னான். ''எதிர்பார்த்த மாதிரி வேலை கிடைச்சிடுச்சா அகிலா?'' ''இல்லை அண்ணாத்த. வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. எனக்கும், திவ்யாவுக்கும் ஒரு வருஷத்துல கல்யாணம்.'' ''சூப்பர் டா. அஞ்சு வருஷம் போராடி ஜெயிச்சுட்டே.'' ''திவ்யா ஹேப்பி அண்ணாத்த. 'சீக்கிரம் வேலை தேடு. ஆறு மாசத்துல நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்'னு சொல்றா. ரெண்டு மூணு இடத்துல வேலைக்கு சொல்லியிருக்கேன். எப்படியும் இந்த மாசமே சேர்ந்திடுவேன்.'' ''சந்தோஷமா இருக்குடா. ட்ரீட் கிடையாதா?'' …

  25. மனித யந்திரம்-புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25-04-1937 ) 1 ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர். அவருக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக் காலத்தில் அடக்கமான வெறும் மூலைத்தெரு ராமு கடையாகத்தான் இருந்தது. கடையும் பிள்ளையவர்களுடன் வளர்ந்தது. ஆனால் அதில் சுவாரஸ்யமென்னவெனில் வெறும் 'மீனாச்சி' ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையாகப் பரிணமித்தாலும் அவருக்கு அந்தப் பழையதுதான், அந்தக் காவியேறிய கம்பிக்கர…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.