விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஷாகித் அப்ரிடி ஓய்வு அஃப்ரிடி | கோப்புப் படம் பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான ஷாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அரங்கில் அவரின் 21 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 36 வயதான அப்ரிடி, முன்னதாக 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2015-ல் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் 20-20 கிரிக்கெட்டில் விளையாடிய அப்ரிடி, 2016 உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்தார். அதைத் தொடர்ந்து போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார் என்று எல்லோரும் நினைத்த வேளையில், அப்ரிடி தன்னுடைய கேப்…
-
- 0 replies
- 273 views
-
-
ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு புது கேப்டன்? இதை யாரும் எதிர்பார்க்கலயே.. ரவி சாஸ்திரி பரபர தகவல்.. இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிப்பது குறித்து ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருவதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி சமீபத்தில் விலகினார். இதனை அடுத்து ரோகித் சர்மா இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த கிரிக்கெட் தொடர்களில் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. …
-
- 0 replies
- 400 views
-
-
லஞ்சம் பெற முயற்சித்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை 18 November 10 02:39 pm (BST) லஞ்சம் பெற முயற்சித்த சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அமோஸ் அடாமு மற்றும் ரெய்னால்ட் ரிமாரி ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரை நடாத்துவது குறித்த வாக்கெடுப்பின் போது பணம் வழங்கினால் ஆதரவாக வாக்களிப்பதாக இவர்கள் அறிவித்துள்ளனர். 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது இவர்கள் பக்கச்சார்பாக வாக்களிப்ப…
-
- 1 reply
- 816 views
-
-
மரணத்தில் முடிந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டம் மிஜோரம் கால்பந்து வீரர் பீட்டர் பியக்சாங்சுலா தான் அடித்த கோலைக் கொண்டாட குட்டிக்கரணங்கள் அடித்தார். இது அவரது மரணத்தில் போய் முடிந்துள்ளது. பீட்டர் பியக்சாங்சுலா தனது அணிக்கு சமன் கொடுத்த தனது கோலைக் கொண்டாடினார். குட்டிக்கரணங்கள் அடித்தார், இதில் அவரது முதுகுத் தண்டு கடும் சேதமடைந்தது. வலியில் துடித்த அவரை ஐஸ்வால் சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் எந்த வித சிகிச்சையும் பலனளிக்காமல் அவர் உயிர் நேற்று பிரிந்தது. இவருக்கு வயது 23 என்பது குறிப்பிடத்தக்கது. மிஜோரம் பிரிமியர் லீக் போட்டியில் பெத்லஹம் வெந்த்லாங் கால்பந்து கிளப்பிற்காக ஆடிய பீட்டர், தன் அணிக்காக முதல் கோலை அடித்து சமன் செய்தார். அந்த மகிழ்ச்சித் தி…
-
- 1 reply
- 799 views
-
-
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 02:10 PM யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இப் போட்டியில் வெற்றிகளைப் பெற்ற …
-
- 4 replies
- 342 views
- 1 follower
-
-
வடக்கின் தாரகை வீராங்கனை ஆஷிகா விஜயபாஸ்க்கர்
-
- 0 replies
- 571 views
-
-
உலக சம்பியன் பிரான்ஸ் பிஃபா தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம் Image Courtesy - Getty Images சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் ஒன்றரை தசாப்தத்திற்கு பின் முதலிடத்திற்கு முன்னேறியதோடு முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜேர்மனி 12 ஆண்டுகளில் தனது மோசமான தரநிலையை பதிவு செய்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி முடிவடைந்த பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு பின் சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் பிஃபா உலகத் தரவரிசை இன்று (16) புதுப்பிக்கப்பட்டது. இதில் உலகக் கிண்ணத்தில் சோபித்த அணிகள் அதிரடி முன்னேற்றங்கள் கண்டிருப்பதோடு அந்த தொடரில் ஏமாற்றம் தந்த அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. …
-
- 0 replies
- 322 views
-
-
உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த் – எதில் தெரியுமா? December 10, 2018 அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் என்ற உலக சாதனையை சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி துடுப்பாட்டத்தைவிட, பந்துவீச்சு மற்றும் களத்;தடுப்பில் மிகச்சிறப்பாகச் செயற்;பட்டது. இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களைத் திணறடித்தனர். இதேபோல் இளம் விக்கெட் கீப்பரான ர…
-
- 0 replies
- 611 views
-
-
ஜடேஜாவுடன் ஏற்பட்ட மோதல் உலகக் கோப்பையின் போது பாதித்தது: ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த முறை இந்திய அணி, இங்கிலாந்து சென்றிருந்த போது டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜடேஜாவைத் தள்ளிவிட்டதாக ஆண்டர்சன் மீது புகார் எழுந்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகே தான் மாறிவிட்டதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார். இன்று இங்கிலாந்து-மே.இ.தீவுகள் அணி ஆன்ட்டிகுவாவில் விவ் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் ஜடேஜாவுடனான சம்பவம், அதனையடுத்த விசாரணைக்குப் பிறகு தான் முன்பு இருந்த ஆக்ரோஷமான பவுலராக இருப்பேனா என்பது சந்தேகமாக உள்ளது என்று ஆண்டர்சன் தெரிவித்தார். டிரெண்ட் பிரிட்ஜில் அன்று, 2-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேள…
-
- 1 reply
- 821 views
-
-
அரையிறுதிக்கு பயேர்ன் மூனிச் தகுதி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் முதலாம் கட்ட கால் இறுதியில் போர்ட்டோ கழகத்திடம் சற்றும் எதிர்பாராதவகையில் தோல்வியடைந்த பயேர்ன் மியூனிச் கழகம், இரண்டாம் கட்ட கால் இறுதியில் அமோக வெற்றியீட்டி அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டது. போர்ட்டேவின் சொந்த மைதானத்தில் கடந்த 14ஆம் திகதி 1 – 3 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வியடைந்த பயேர்ன் மியூனிச் கழகம், நேற்று முன்தினம் மியூனிச்சில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் போட்டியில் 6 – 1 கோல்கள் அடிப்படையில் போர்ட்டே கழகத்தை வென்றது. இதன் பிரகாரம் ஒட்டுமொத்த கோல்கள் நிலையில் 7 க்கு 4 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற பயேர்ன் …
-
- 1 reply
- 388 views
-
-
கோபத்தில் ஸ்டீவ் வாஹ்-ஐ தாக்கச் சென்றேன்: சுயசரிதையில் கர்ட்லி ஆம்ப்ரோஸ் மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் 'Curtly Ambrose - Time to Talk' என்ற தலைப்பில் சுயசரிதை நூலை வெளியிட்டுள்ளார். 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் தனக்கும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹிற்கும் ஏற்பட்ட தகராறு பற்றி எழுதியுள்ளார். கைகலப்பு அளவுக்கு சென்றது அந்த வாக்குவாதம் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சி ரிச்சர்ட்ஸன் மட்டும் தடுக்கவில்லை என்றால் அன்று ஸ்டீவ் வாஹ்-ஐ ஆம்ப்ரோஸ் தாக்கியிருப்பார். ஸ்டீவ் வாஹ் எதிரணி வீரர்களை தனது வார்த்தைகளால் முடக்கும் வாய் சாதுரியம்…
-
- 2 replies
- 419 views
-
-
பிளிஸ்கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நவோமி அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று(வியாழக்கிழமை) பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2-வது அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்)- 7-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினர். முதல் செட்டை ஒசாகா 6-2 என எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை பிளிஸ்கோவா 6-4 என அதிரடியாக கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஒசாகா கை ஓங்கியது. அவர் 3-வது செட்டை 6-4 எனக்…
-
- 0 replies
- 444 views
-
-
தோனியை மிஞ்சிய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலிதானா? இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக கருதப்படும் கங்குலிக்கும், தோனிக்கும் அடுத்த அடுத்த நாட்களில் பிறந்த நாட்கள் வருகின்றன. நேற்று தோனி 34வது பிறந்த நாளை கொண்டாடினார். இன்று கங்குலிக்கு 43வது பிறந்த நாள். இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த இருவருமே ஜாம்பவான்கள்தான். எனினும் தோனியை விட கங்குலிதான் சிறந்த கேப்டன் என்று சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற போது, அணியே பெரும் இக்கட்டில் இருந்தது. அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் மேல் சூதாட்டப்புகார் எழுந்து, இந்திய கிரிக்கெட் மீதே ரசிகர்கள் நம்பிக்கை இழந்த சமயத்தில், கேப்டன் பொறுப்பு கங்குலியிடம் ஒப்படைக்கப்…
-
- 0 replies
- 329 views
-
-
ஸ்ரீசாந்த் வாங்கிய புதிய ஜாகுவார் கார்! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் புதியதாக ஜாகுவார் ரக கார் வாங்கியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஸ்ரீசாந்த், ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதால் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படவில்லை. கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட பிறகே அவருக்கு திருமணமும் நடந்தது. கடந்த 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் அரச குடும்பத்தை சேர்ந்த புவனேஷ்வரி குமாரியை ஸ்ரீசாந்த் மணந்தார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஸ்ரீசாந்த், புதியதாக ஜாகுவார் ரக காரை வாங்கியுள்ளார். ப…
-
- 0 replies
- 414 views
-
-
சங்ககாரா 192 ஓட்டங்களைப் பெற்றபோதும் இலங்கை அணி 96 ஓட்டங்களால் தோல்வி [21 - November - 2007] [Font Size - A - A - A] * தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளிடையே ஹோபேற்றில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியுள்ளது. பிறிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இனிங்ஸாலும் 40 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றது. 2 ஆவது டெஸ்டின் 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தனது 2 ஆவது இனிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணிக்கு 5 ஆம் நாள் ஆரம்பமே மோசமாக அமைந்தது. 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 33 ஓட்டங்களுட…
-
- 1 reply
- 1.3k views
-
-
பாகிஸ்தானை வென்றது இந்தியா; இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இலங்கை ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகளால் இந்திய அணி தோற்கடித்தது. இவ்வெற்றியின் மூலம் இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இன்னுமொரு போட்டி எஞ்சியுள்ளபோதிலும் அவ்வணிகள் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளன. மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான நஸீர் ஜம்ஷெட் 104 பந்துகளில் 112 ஓட…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கை தொடரிலிருந்து வெளியேறுகிறார் வில்லியம்ஸன் இலங்கை அணிக்கெதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டீ டுவென்டி தொடரில் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு ஒய்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த டீ டுவென்டி தொடரின் அணித்தலைவராக டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை கேன் வில்லியம்ஸனுடன் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்டுக்கும் டீ டுவென்ட்டி தொடரில் ஒய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை இலங்கைக்கெதிரான நியூசிலாந்து டீ டுவென்டி அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.com/188138/
-
- 1 reply
- 639 views
-
-
சானியாவுக்கு இது பொன்னான வருடம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் இந்த வருடம் ஒரு பொன்னான வருடமாக அமைந்ததாக இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார். பெண்களுக்கான இரட்டையர் தரவரிசையில் முதல் நிலை வீராங்கனையான சானியா மீர்ஸா, இந்த வருடம் பல வெற்றிகளை ஈட்டியுள்ளதுடன் இந்த வெற்றிகள் மனநிறைவை தருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தை விட சிறந்த வருடம் மிண்டும் அமைவது மிகவும் கடினம் என அவர் கூறினார். அடுத்த ஆண்டு இந்த ஆண்டை விட சிறப்பாக அமையும் என எதிர்பார்ப்பதுடன் இந்த ஆண்டுக்கு நிகரான வெற்றிகளை குவிக்க முடியும் என்ற…
-
- 0 replies
- 600 views
-
-
பிரபல கிரிக்கெட் வீரருக்குத் தடை சிம்பாபே கிரிக்கெட் அணியின் 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி, கடந்த மாதம் பங்களாதேஷூக்கு எதிரான 20க்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது பந்தை எறிவதாக சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதிக்கப்பட்டது. இதில் விதிமுறைக்கு புறம்பாக, பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பந்து வீச தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடோரி, தனது பந்து வீச்சு குறைபாடுகளை சரி செய்த …
-
- 0 replies
- 438 views
-
-
இங்கிலாந்து அணி, 2 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வென்றது T Bavuma dropped on 19 by C Jordan in 3.5 overs South Africa 53/0 in 5.0 overs 1st wkt Partnership: 53 off 30 balls between T Bavuma (22) and de Kock (31) Mandatory Power play (1-6): South Africa 69/0 de Kock 5th T20I fifty: 53 runs in 17 balls (1x4) (7x6) Referral 1 (6.5 ovs): T Bavuma against ENG (LBW) Successful (ENG: 1, SA: 1) (Retained) South Africa 101/1 in 9.0 overs South Africa 152/3 in 15.1 overs South Africa 200/5 in 19.3 overs Referral 2 (19.5 ovs): D Pretorius against ENG (LBW) Unsuccessful (ENG: 1, SA: 1) (Retained) South Afri…
-
- 0 replies
- 483 views
-
-
ஐசிசி டி20 உலக அணியின் கேப்டன் விராட் கோலி; அணியில் தோனி இடம்பெறவில்லை விராட் கோலி. | படம்: ஏ.எஃப்.பி. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலிக்கு ஐசிசி டி20 உலக அணியின் கேப்டன் என்ற கவரவத்தை ஐசிசி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அணியில் தோனி இடம்பெறவில்லை. இன்னொரு முக்கிய விடுபடல் என்னவெனில் கிறிஸ் கெய்லும் இந்த அணியில் இடம்பெறவில்லை. வங்கதேசத்தில் நடைபெற்ற முந்தைய உலகக்கோப்பை டி20 முடிந்த பிறகு இறுதிப் போட்டியில் இந்திய அணி நுழைந்ததையடுத்து அறிவிக்கப்பட்ட ஐசிசி ஆல்ஸ்டார்ஸ் அணிக்கு தோனிதான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த அணியில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர், தற்போது இது 2-ஆக குறைந்…
-
- 0 replies
- 405 views
-
-
வெலிங்டன் டெஸ்ட் தோல்வி – இந்திய அணியை கடுமையாகச் சாடும் முன்னாள் வீரர்கள் by : Varothayan நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் இடம்பெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்திய அணி அண்மைய வருடங்களில் பெற்ற மிக மோசமான தோல்வியாக இது பார்க்கப்படுகின்றது. மேலும் போட்டி நான்கு நாட்களிலேயே முடிந்தது. இந்நிலையில் இந்தியாவின் படுதோல்விக்கு அணி நிர்வாகமே காரணம் என முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ”நியூசிலாந்து சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களை பாராட்ட வேண்டும். …
-
- 2 replies
- 422 views
-
-
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம் நடப்பு சாம்பியன் சிலி, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொலம்பியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை, ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி. தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வெல்ல மோதும். இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்…
-
- 25 replies
- 2.1k views
-
-
மெஸ்ஸி எனும் ஃபுட்பால் ஏலியன் “இந்த உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோ தான். ஏனெனில் மெஸ்ஸி வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்” என்று தான் மொத்த உலகமும் அந்த ஐந்தரை அடி கோல் மெஷினைப் போற்றி வந்தது. எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு 5 பாலன் டி ஓர் விருதுகள் வாங்கி கால்பந்து ஏணியின் உச்சானிக் கொம்பில் நிற்பவர் இந்த லயோனல் மெஸ்ஸி. இவரது நுணுக்கங்களும் ஸ்டைலும் வீடியோ கேமில் கூட நம்மால் செய்ய முடியாதவை. கால்பந்தின் ஹிஸ்டரி தெரியாத நம்ம ஊரு யூத்ஸ் கூட மெஸ்ஸியின் பெயர் போட்ட ஜெர்சியை போட்டுக் கொண்டு அளப்பறை செய்வார்கள். கால்பந்து வெறியர்களின் ஒரு தீராக்கனவு மெஸ்ஸியை ஒரு முறையாவது தொட்டுப் பார்க்க வேண்டுமென்பதாகத் தான் இருக்கும். …
-
- 0 replies
- 892 views
-
-
செய்தித்துளிகள்: கேப்டன் பதவியில் அசார் அலி நீடிப்பு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் அசார் அலிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு டி 20 அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பொறுப்பு வகிக்கக்கூடும் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அசார் அலியை மீண்டும் கேப்டனாக நியமித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் அணி 25 ஆட்டத்தில் 15 தோல்விகளை சந்தித்துள்ளது. மேலும் ஒருநாள் போட்டி தரவரிசையில் 9-வது இடத…
-
- 0 replies
- 365 views
-