விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின், மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதிக்குள் இந்தியாவின் சானியா மிர்ஸா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி நுழைந்துள்ளது. இந்திய ரஷ்ய ஜோடி காலிறுதிப் போட்டியில், 2வது நிலை வீராங்கனைகளான லீஸல் ஹ்யூபர், லிசா ரேமன்ட் ஜோடியை கடுமையாகப் போராடி வென்றது. மூன்று மணி நேரம் நடந்த இந்தப் போட்டியில், 6-3, 5-7, 7-6 (6) என்ற செட் கணக்கில் இந்திய, ரஷ்ய ஜோடி வெற்றி பெற்றது. ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் மகளிர் இரட்டையர் போட்டியின் அரை இறுதியில் சானியா நுழைவது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 2011ம் ஆண்டு அவர் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். அப்போதும் அவர் எலினாவுடன்தான் விளைய…
-
- 0 replies
- 632 views
-
-
ஒலிம்பிக் போட்டி வருகிற ஜுலை 27-ந் திகதி முதல் ஆகஸ்டு 12-ந் திகதி வரை இலண்டனில் இடம்பெறவுள்ளது. இந்திய டென்னிஸ் வீரர்களுக்கு 7 பேருக்கு பயிற்சி மற்றும் பயிற்சியாளர்களுக்கான கட்டணம், போட்டியில் பங்கேற்பது ஆகிய செலவுகளுக்காக இந்திய மத்திய விளையாட்டு அமைச்சகம் மொத்தம் ரூ. 1 1/2 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் சோம்தேவ் வர்மன், லியாண்டர் பெயஸ், மகேஷ்பூபதி, ரோகன் போபண்ணா, ஆகிய முன்னணி வீரர்கள் பயன்பெறுவார்கள். ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட மாத காலத்துக்கு செலவுகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 506 views
-
-
பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த இந்திய அணியை அந்நாட்டு பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க தவறிய பேட்ஸ்மேன்களை உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணியை செயலற்றவர் என்றும் பழித்துள்ளன. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது. எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணி செயலற்றவர் என்றும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது குறித்து 'தி ஆஸ்திரேலியன்' என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிர…
-
- 1 reply
- 600 views
-
-
இந்தியா மூன்றாவது டெஸ்ட்டிலும் ஒரு இன்னிங்ஸ் 43 ஓட்டங்களால் படுதோல்வி பேர்த்தில் நடைபெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 43 ஓட்டங்களினால் படுதோல்வியைத் தழுவிக்கொண்டது. வெறும் இரண்டரை நாட்களில் முடிந்துப்போன இந்தப் போட்டியில் இந்தியா முதலாவது இன்னிங்ஸில் 161 ஓட்டங்களும் ரெண்டாவது இன்னிங்ஸில் 171 ஓட்டங்களும் பெற்ற நிலையில் தனது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஒரு இன்னிங்ஸ் மட்டுமே துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலியா 369 ஓட்டங்களைப் பெற்றது. இதில் வோனர் கொவென் இணைப்பாட்டமாக ஆரம்ப விக்கெட்டுக்காக 214 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் வோனர் 5 சிக்ஸர்கள் 20 பவுண்டரிகள் அடங்களாக வெறும் 159 பந்துகளை மட்டுமே முகங்கொண்டு 180 ஓட்ட…
-
- 3 replies
- 811 views
-
-
அவுஸ்த்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டில் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய உலகின் முதலாம் தர டெஸ்ட் அணியான இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 161 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அவ்வணியின் தொடக்க ஆட்டக்காரரான விரேந்தர் ஷேவாக் ஓட்டமிழக்காமல் ஆட்டமிழந்தார். உலகின் நட்சத்திரத் துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட அணி என்று மார்தட்டும் இந்தியாவின் மிகப்பலமான துடுப்பாட்ட வரிசையை அவுஸ்த்திரேலிய அணியின் இள வயது பந்துவீச்சாளர்கள் துவசம் செய்தனர். இறுதியில் இந்திய அணி அவமானகரமான 161 ஓட்டங்களுக்குச் சுருண்டு கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலிய ணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வோனர் மற்றும் எட் கொவென் ஆகியோர் முதலாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் ஆட்ட்மிழக்காமல் 148 ஓட்டங்…
-
- 11 replies
- 1.1k views
-
-
In the first ODI between South Africa and Srilanka, South Africa batted first and scored 301/8. In reply Srilanka was 13/6 in 8 overs. Going for the worst defeat in history !!!! Enemies of Tamils, Srilanka and India are facing defeats at the same time!!!!!!
-
- 18 replies
- 1.1k views
-
-
இலங்கை கிரிக்கெட்? தென்னாபிரிக்காவுடன் முதல் ரெஸ்டில் படுதோல்வி இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 81 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்துள்ளது. இன்றைய தினம் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 180 ஓட்டங்களைப் பெற்றது. அதன் பின் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 411 ஓட்டங்களைப் பெற்றது. இதன்படி இலங்கை அணியைவிட தென்னாபிரிக்கா 231 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. இந்த நிலை…
-
- 5 replies
- 838 views
-
-
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே நாம் சரிவடைந்து விட்டோம். அதில் நமது பேட்டிங் மிக மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். சிட்னியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த டோணி கூறுகையில், முதல் இன்னிங்ஸிலேயே இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் வீசிய சிறந்த பந்துகளில் இந்திய வீரர்கள் விரைவாக விக்கெட்களை பறிகொடுத்து விட்டனர். மேலும் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் கிளார்க், பாண்டிங் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்து, ஸ்கோரை உயர்த்தினர். …
-
- 1 reply
- 1.4k views
-
-
100 சதவீதம் துல்லியமாகாத வரை டி.ஆர்.எஸ்.ஸுக்கு இந்தியா ஆதரவளிக்காது: டோனி நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைமையானது (டி.ஆர்.எஸ்.) 100 சதவீதம் துல்லியமானது என இந்தியா நம்பும்வரை அம்முறைக்கு இந்தியா ஆதரவளிக்காது என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி கூறியுள்ளார். இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில் டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்த வேண்டுமென அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி அதற்கு சம்மதிக்கவில்லை. மேல்பேர்னில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் கள நடுவர்களால் சில தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டபோது, டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்துவதற்கு இந்தியா மறுப்பு தெரி…
-
- 0 replies
- 658 views
-
-
புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் அஷ்வினுக்கு, திலீப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது. சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில், முதன் முதலாக வாய்ப்பு பெற்றவர் அஷ்வின், 25. இதில் 22 விக்கெட் கைப்பற்றிய இவர், பேட்டிங்கில் ஒரு சதம் உட்பட 121 ரன்கள் எடுத்து, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்,"" வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய அஷ்வினுக்கு, 2011-12ம் ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் மற்றும் கோப்பை அடங்கிய இந்த விருது, வரும் டிசம்பர் 10ம் தேதி சென்னையில் நடக்கும், பி.சி.சி.ஐ., விருது வழங்கும் விழ…
-
- 3 replies
- 1.4k views
-
-
போர்முலா 1 போட்டிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. வாகன ஓட்டப் போட்டிகளில் மிகவும் உயர்வானதாகக் கணிக்கப்படும் போர்முலா 1 போட்டிகள் இவ் வருடம் 19 நாடுகளில் நடக்கவுள்ளன (முதலாவது போட்டி Bahrain இல் நடைபெறுவதாக இருந்தது. கலவரங்களினால் அது நடைபெறவில்லை.). 12 கார் நிறுவனங்கள் பங்குகொள்ளும் இப் போட்டிகளில் தலா 2 கார் வீதம் 24 கார்கள் போட்டியிடவுள்ளன. இவ்வருடம் போட்டியிடும் 24 ஓட்டுனர்களில் 5 பேர் வெற்றிவீரர்கள் (World champion) ஆவர். புதிய விதிகளுக்கமைய ஒவ்வொரு நிறுவனமும் தமது கார்களைப் புதிதாக வடிவமைத்துள்ளன. முன்பில்லாதவாறு இப்போதெல்லாம் கார் ஓட்டுனர்களைவிட தொழில்நுட்பத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தெரிவுப் போட்டிகளின்போது சுமார் 5 km நீளமுள்ள ஓடுபாதையைச் சுற…
-
- 67 replies
- 6.5k views
-
-
ஸ்பெயினுக்கேதிரான சிநேகிதபூர்வ ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 கோல் வித்தியாசத்தில் வென்றது ,முழுக்க சொதப்பி விளையாடி வென்றது ஆச்சரியம் .
-
- 3 replies
- 1.1k views
-
-
டெஸ்ட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்தார் சச்சின் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை புரிந்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடக்கும் முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கள் தனது 28 ஆவது ரன்னை எடுத்தபோது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். அதிக எண்ணிக்கையிலான ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கள் பங்கேற்கும் 182 ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும். ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக அளவு ரன்களையும், அதிக அளவு சதங்களையும் அடித்த வீரர் என்ற சாதனையை ஏற்கனவே அவர் புரிந்துள்ளார். இது…
-
- 0 replies
- 672 views
-
-
லண்டன் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் ஈடுப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் பட்க்கு 30 மாதங்கள் சிறை தண்டனை சூதாட்டக்காரர் மசார் மஜீத்க்கு 32 மாதங்கள் சிறை தண்டனை மற்ற இரண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முகமது ஆசிப்க்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் முகமது அமீர்க்கு ஆறு மாதங்களில் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது . malaimalare
-
- 3 replies
- 1.1k views
-
-
பாக் வீரர்கள் மீது குற்றம் ஊர்ஜிதம் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சல்மான் பட் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆகிய இருவரும் கிரிக்கெட் பெட்டிங் ஊழலில் ஈடுபட்டதாக லண்டன் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது சல்மான் பட் வேண்டுமென்றே நோ பால்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தாங்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்று இந்த இருவரும் தெரிவித்தனர். பணம் வாங்கியதாக கூறப்படுவதையும் மறுத்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த 12 ஜூரிக்களில் 10 பேர் சல்மான் பட் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்தார் என்ற தீர்ப்பை எட்டியுள்ளனர். அதே நேரம் முகமது ஆ…
-
- 0 replies
- 496 views
-
-
மலேசிய பைக் பந்தயத்தில் விபத்தில் இத்தாலி வீரர் பலி. மலேசியாவில் நடந்த பைக் பந்தய விபத்தில் இத்தாலி வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏராளமான ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலேசியாவின் செபாங்க் நகரில் மலேசியன் கிராண்ட் பிரிக்ஸ் பைக் பந்தயம் நேற்று(ஞாயிறு) நடந்தது. உலகின் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்றனர். போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் அரங்கத்தில் கூடியிருந்தனர். 21 சுற்றுகள் கொண்ட இப்போட்டி விறுவிறுப்புடன் தொடங்கியது. வீரர்கள் அசுர வேகத்தில் பைக்கில் பறந்தனர். 2ஆவது சுற்றின் போது, இத்தாலி வீரரான ஹோண்டா அணியின் சைமன்செல்லி, யமஹா அணியின் காலின் எட்வர்ட்ஸ், வலன்டினோ ரோஸி ஆகியோரை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிர…
-
- 4 replies
- 1.1k views
-
-
சத்தமில்லாமல் மற்றுமொரு சாதனையை செய்து காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரபல ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி. 9 சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள், 15 தேசிய அளவிலான போட்டிகள், ஏராளமான மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற பெருமைக்குரியவர், இந்தியாவின் நம்பர் ஒன் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை ஆரத்தி. 17 வயதில் 97 பதக்கங்களைப் பெற்றவர். இதில் 81 பதக்கங்கள் தங்கம் என்றால் ஆரத்தியின் சாதனையை எண்ணிப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள ரோலர் ஸ்கேட்டிங் ஆர்வலர்கள், ஆரத்தியின் சாதனையைக் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் கொரியாவின் யசோவு நகரில் நடைபெற்ற உலக ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 10-வதாக வந்து சாதனை படைத்துள்ளார் ஆரத்தி. இந்தப் போட்டியில் இந்தியாவின் ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
Nokia Champions League T20 - Group B Royal Challengers Bangalore v South Australia Royal Challengers Bangalore won by 2 wickets (with 0 balls remaining)<p class="headRightDiv"> Twenty20 match | 2011/12 season Played at M Chinnaswamy Stadium, Bangalore 5 October 2011 - day/night (20-over match) South Australia innings (20 overs maximum) R B 4s 6s SR DJ Harris not out 108 61 17 2 177.04 M Klinger* st †Arun Karthik b Syed Mohammad …
-
- 12 replies
- 1.9k views
-
-
<a href="http://malaikakitham.blogspot.com/2011/10/blog-post_02.html">சச்சின், திராவிட் முனை மழுங்கிய அம்புகள்! - சோயிப் அக்தர் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் வீரர்கள், தங்கள் சுயமுன்னேற்றத்தில்தான் அதிக அக்கறை செலுத்துவார்கள். பிறகுதான் அணிக்காக ஆடுவதெல்லாம். சச்சின், திராவிட் போன்ற வீரர்கள் மேட்ச் வின்னர்கள் கிடையாது. அவர்களுக்கு வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்கத் தெரியாது. யுவ்ராஜ், சேவாக் போன்ற வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைந்த பிறகுதான் நிலைமை மாறியது. அவர்கள், அணியின் வெற்றிக்காக ஆடுபவர்கள். சச்சின் நிறைய ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் அவரால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாது. ஐ.பி.எல்.லில் நான் சேர வேண்டும் என்று ம…
-
- 1 reply
- 967 views
-
-
கிரிக்கெட்டில் ரன்னர் முறை நீக்கம்: புதிய விதிகள் இன்றுமுதல் அமுல் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல புதிய விதிகள் இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன. துடுப்பாட்ட வீரர் காயமடைந்தால் ரன்னர் ஒருவரை பயன்படுத்தும் முறையும் இதன்மூலம் நீக்கப்படுகிறது. கடந்த மே மாதம் லண்டனில் நடைபெற்ற ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் மாநாட்டின் பின்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் இருபது20 போட்டிகளின் சில விதிகளை மாற்றங்களை செய்ய வேண்டுமென சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. அவ்விதிகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன. இவ்விதிகளின் கீழ் நடைபெறும் முதலாது போட்டியாக எதிர்வரும் 11 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கும் பங்களாதேஷுக்கும் இ…
-
- 1 reply
- 899 views
-
-
சர்வதேச கராத்தே போட்டியில் 62 வயதான இலங்கையருக்கு தங்கப்பதக்கம்! அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற 22 ஆவது சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் சுற்றுப்போட்டியில் இலங்கையரான செல்லதுரை கணேசலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 62 வயதான கணேசலிங்கம், இப்போட்டியில் தன்னிலும் பாதி வயதுகொண்ட போட்டியாளர்களை தோற்கடித்து இப்பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது. ஓய்வுபெற்ற நிதி ஆலோசகரான கணேசலிங்கம், ‘நான் தங்கப்பதக்கம் வெல்வேன் என நான் ஒருபோதும் எண்ணவில்லை. இந்த வயதில் நான் ஓய்வு பெற்றிருப்பேன் என எண்ணிருந்தேன் என கணேஷ் கூறியுள்ளார். தனக்கு 23 வயதாக இருந்தபோத…
-
- 12 replies
- 1.4k views
-
-
-
- 9 replies
- 1.6k views
-
-
100 மீற்றர் ஓட்டத்தில் யொஹான் உலக சம்பியனானார்; உசைன் போல்ட் தகுதி நீக்கம் தென்கொரியாவின் டயீகு நடைபெறும் உலக மெய்வன்மை சம்பியன்ஷிப் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் யொஹான் பிளெக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 100 மீற்றர் இறுதிப்போட்டியில் , ஜமைக்காவைச் சேர்ந்த மற்றொரு வீரரும் நடப்புச் சம்பியனும் உலக சாதனையாளரும் ஒலிம்பிக் சம்பியனுமான உசைன் போல்ட் போட்டியை தவறாக ஆரம்பித்தன் காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 9.92 விநாடிகளில் யொஹான் பிளெக் ஓடி முடித்தார். அமெரிக்காவின் வால்டர் டிக்ஸ் 10.08 விநாடிகளில் ஓடி வெள்ளிப்பதக்கத்தையும் சென் கிட்ஜ் அன்ட் நேவிஸ் நாட்டு வீரர் கிம் கொலின்ஸ் 10.09 விநாடிக…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 0 replies
- 821 views
-
-
முதலிடத்தை இழந்தது இந்தியா உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் தரவரிசையில் முதலிடத்தை இங்கிலாந்து அணி பிடித்துள்ளது. 32 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து அந்த இடத்தை பிடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உலக அளவில் முதலிடத்தில் இருந்த இந்தியா தனது தொடர் தோல்விகளால் அந்த இடத்தை இழந்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணிக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் நகரில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. எட்ஜ்பாஸ்டன் போட்டியின் முதல் இன்னிங்ஸ…
-
- 2 replies
- 878 views
-