விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
நடராஜன் மிகப்பெரிய சொத்து - கோலி! டி20 உலகக் கிண்ண போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து வேகப்பந்து வீச்சாளா் நடராஜன் என்று கேப்டன் கோலி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளாா். கடைசி ஒருநாள் ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த நடராஜன், மொத்தம் 4 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா். அதிலும் டி20 தொடரைக் கைப்பற்றிய 2 ஆவது ஆட்டத்தில் அவா் 3 விக்கெட்டுகளை சாய்த்தது முக்கியமானதாக அமைந்தது. இந்நிலையில், கடைசி டி20 ஆட்டத்துக்குப் பிறகு கோலி கூறியதாவது: ஷமி, பும்ரா இல்லாத நிலையில் மிகுந்த நெருக்கடியான சூழலில் நடராஜன் சிறப்பாகப் பந்துவீசியதை குறிப்பிட்டே ஆக வேண்டும். சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்…
-
- 2 replies
- 705 views
-
-
இந்திய அணிக்கு அபராதம்! அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது. டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களே எடுத்தது. …
-
- 0 replies
- 584 views
-
-
உலகமே இலங்கை கிரிக்கெட்டை போற்றிக் கொண்டிருந்த காலங்களிலும் சங்கா, மஹேலவின் ஓய்வின் பின் இலங்கை கிரிக்கெட் இல்லாமலேயே போய்விடும் என்று எழுந்த விமர்சனங்களின் போதும் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு தமிழ் வீரருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதும் இலங்கை அணியின் ஒவ்வொரு தமிழ் ரசிகனும் ஏங்கியது, எப்போது இலங்கை அணியில் ஒரு தமிழ் வீரன் விளையாடப் போகிறான் என்பதாகத்தான் இருக்கும். 110 வருடங்களுக்கும் மேலாக யாழ் மண்ணில் வடக்கின் பெருஞ்சமர் நடைபெற்று வந்தாலும் அங்கிருந்து ஒரு வீரன் இலங்கைக்காக விளையாடுவது வெறும் கனவாகிப்போவதே வழக்கமாயிருந்தது. ஒருபுறம் நாட்டின் அசாதாரண சூழல், மூன்று தசாப்தகாலப்போர் என சில காரணங்களால் ஏ9 வீதியோடு சேர்த்து யாழ் மண்ணின் கிரிக்கெட் வீரர்களின் கனவுகளும் இ…
-
- 0 replies
- 580 views
-
-
ஆடப்போறான் தமிழன்? - ஜூட் பிரகாஷ் எழுபதுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில், எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வரும் தமிழன் ஒருவன் ஆடப் போகிறான் என்ற ஆதங்கம், இன்றும் தீராமல் நம்மவர் மத்தியில் இருந்து கொண்டேயிருக்கிறது. சில வாரங்களிற்கு முன்னரும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை சேர்த்த மதுஷனும் வியாஸ் காந்தனும், இலங்கை U19 கிரிக்கெட் அணியில் இடம்பெறப் போகிறார்கள் என்ற செய்தி, மீண்டுமொருமுறை எதிர்பார்ப்பை நம்மவர்கள் மத்தியில் விதைத்திருக்கிறது. நம்பி நம்பி ஏமாந்து போன எங்கட சனத்தின் அரசியல் பயணம் போல், இந்த கிரிக்கெட் பயணமும் நம்பி நம்பி ஏமாந்தும் தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது. பிரித்தானியாவின் ஆதிக்கத…
-
- 0 replies
- 912 views
-
-
பருந்தாகுது ஊர்க்குருவி; யாழ்ப்பாண அணிக்காக விளையாடும் விஜாஸ்காந்த்! லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் 11வது போட்டியில் இன்று (04) யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி சார்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 வயதுடைய விஜயகாந்த விஜாஸ்காந்த் அறிமுகமாகியுள்ளார். 2001ம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் திகதி பிறந்த விஜாஸ்காந்த் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் சிறந்த வலது கை சுழல் பந்து வீச்சாளராவார். இந்த வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமரில் யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட விஜயகாந்த் விஜாஸ்காந்த், திசர பெரேரா தலைமையிலான யாழ்ப…
-
- 8 replies
- 1.1k views
-
-
இந்திய அணிக்கெதிரான தொடரிலிருந்து வோர்னர் விலகல்! 1022 by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/115693419_gettyimages-1212038213-1-720x450.jpg இந்திய அணிக்கெதிரான ரி-20 தொடரிலிருந்து அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் விலகியுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வோர்னருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் எதிர்வரும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலிருந்து விலகினார். இதற்கு பதிலாக டார்சி ஷோர்ட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். எனினும், வோர்னர் எதிர்வரும் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என கிரிக்கெட்…
-
- 0 replies
- 519 views
-
-
பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பினால் இறப்பு.. https://www.dailymail.co.uk/sport/football/article-8986821/Diego-Maradona-died-suffering-cardiac-arrest-according-reports.html
-
- 16 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கு சிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ள சங்கா, மஹெல! எல்.பி.எல் ரீ20 போட்டிகள் நாளை முதல்(26) ஆரம்பமாகவுள்ளன. ஐந்து அணிகள் இம்முறை எல்.பி.எல் போட்டிகளில் விளையாடவுள்ளன. அதில் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தி யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ்(Jaffna stallions) எனும் அணியும் விளையாடவுள்ளது. இதனையடுத்து, நாளை ஆரம்பிக்கவுள்ள எல்.பி.எல் போட்டிகள் பற்றி கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர்களான குமார சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கு தமது சிறப்பு வாழ்த்தை தெரிவித்துள்ளனர். குமார் சங்கக்கார இதுபற்றி தெரிவிக்கையில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணிக்கு இந்தப் போட்டிகள் சி…
-
- 0 replies
- 648 views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்தபட்ச வயதெல்லையை நிர்ணயித்தது ஐ.சி.சி! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/1563161736296-1-715x450.jpg சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்தபட்ச வயதெல்லையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நிர்ணயித்துள்ளது. ஆடவர் மகளிர் ஐ.சி.சி. போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், 19வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதை எட்டியிருக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இளம் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. அதேசமயம் ஓர் அணி ந…
-
- 0 replies
- 460 views
-
-
யாரும் கிரிக்கட் ஜான்பவாங்கள் தான் இதை விபரமாக தெளிவுபடுத்த வேண்டும்.
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
7 ஆவது தடவையாகவும் சம்பியனானார் ஹேமில்டன் போர்முலா - 1 கார் பந்தயத்தில் ஏழாவது தடவையாக லூயிஸ் ஹேமில்டன் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த ஆண்டுக்கான போர்முலா - 1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 14 ஆவது சுற்றான துருக்கி கிராண்ட்பிரி இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்தது. இதில் 309.396 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். 6 ஆவது வரிசையில் இருந்து காரை மின்னல் வேகத்தில் செலுத்திய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லூயிஸ் ஹேமில்டன் (மெர்சிடஸ் அணி) ஈரப்பதமான ஓடுபாதை சூழலை திறம்பட சமாளித்து 1 மணி 42 நிமிடம் 19.313 நிமிடங்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். அவருக்கு 25…
-
- 1 reply
- 826 views
-
-
2021 - டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் - சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களால் கலந்து கொள்ள முடியும் என்ற மிகுந்த நம்பிக்கை இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகத்தின் தலைவர் தோமஸ் பாக் தெரிவித்துள்ளார். போட்டிகளை காண ரசிகர்கள் வருவதற்கு முன்பு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதில் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் பெரும் முயற்சிகளை முன்னெடுக்கும் என்றும் தோமஸ் பாக் கூறினார். அடுத்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிளை எவ்வாறு நடத்த முடியும் என்பது குறித்து விவாதிக்க அவர் தற்போது ஜப்பானில் உள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ விளையாட்டுக்கள் முதலில் கடந்த ஜூலை மாதம் தொடங்கவிருந்தன, ஆனால…
-
- 0 replies
- 565 views
-
-
கிரிக்கெட் உலகில் யாருமே அணியாத ஜேர்சியுடன் களமிறங்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி.. சுதேசிய ஜேர்சி தொடர்பான முழு விபரம் ! விளையாட்டு இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணி புதியதொரு மேலங்கியுடன் (ஜேர்சி) களமிறங்குகிறது. அதாவது அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியானது முதல் முறையாக சுதேசிய கருப்பொருளை உள்ளடக்கிய ஜேர்சியுடன் களமிறங்குகிறது. சுதேசிய கருப்பொருளை உள்ளடக்கிய குறித்த ஜேர்சியானது புகழ்பெற்ற 1868 பழங்குடி கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் கதையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியானது தேசிய மகளிர் அணியினை முன்னிலைப்படுத்தி…
-
- 2 replies
- 759 views
-
-
எப்படி அவரால் முடிந்தது? தமிழக வீரர் நடராஜன் செய்த காரியம் இணையம் முழுக்க வைரல் விளையாட்டு நேற்று டெல்லிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற செமி பைனல் போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி வெற்றிபெற்றது. இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 189 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி 172 மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்து இருந்தாலும், தொடரில் நடந்த சில சம்பவங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அதிலும் தமிழக வீரர் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக போட்ட கடைசி ஓவர் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த தொடர் முழுக்க நடராஜன் மிகவும் ச…
-
- 2 replies
- 986 views
-
-
விளையாட்டாய் சில கதைகள்: செஸ் பாதி பாக்ஸிங் பாதி செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த 2 விளை யாட்டுகளையும் ஒன்றிணைத்து விளையாடும் செஸ் பாக்ஸிங் போட்டியைப் பற்றி இன்றைய தினம் தெரிந்து கொள்வோம். வீரர்களின் அறிவுத் திறன் மற்றும் உடல் உறுதியை சோதிக்கும் வகையில் செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் ஒருங்கிணைத்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபின் என்பவர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் செஸ் பாக்ஸிங் போட்டியைக் கண்டுபிடித்தார். இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் மற்றும் குத்துச்சண்டை ஆகிய 2 பிரிவுகளிலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இப்போட்டியின் விதிப்படி இதில் பங்கேற்கும் …
-
- 0 replies
- 541 views
-
-
yorker ல் கலக்கி கொண்டிருக்கும் நடராஜனுடன் அஸ்வின் காணும் செவ்வி
-
- 4 replies
- 1.4k views
-
-
ஐபிஎல் 2020: தொடங்குகிறது திருவிழா - முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம், ROBERT CIANFLONE/GETTY IMAGES கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடக்கவேண்டிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், தாமதங்கள் மற்றும் இடர்பாடுகளையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதாலும், கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் களமிறங்கும் முதல் தொடர் என்பதாலும், நடப்பு ஐபிஎல் தொடர…
-
- 84 replies
- 9.4k views
-
-
இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது - ஷேவாக் வேதனை http://www.thinaboomi.com/sites/default/files/storage/field/image/2020/11/05/thumb-890-395/Shevak-2020_11_05.jpg?itok=1vkPey3C ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது காலில் காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா அவசரம் காட்டாமல் நன்றாக குணம் அடைந்த பிறகு களம் திரும்ப வேண்டும் என்று இந…
-
- 0 replies
- 691 views
-
-
-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க ரஷ்ய ஹேக்கர்கள் முயற்சி: அமெரிக்கா- பிரித்தானியா குற்றச்சாட்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்ய ஹேக்கர்கள் செயற்பட்டுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக ரஷ்யாவின் ஜி.ஆர்.யு இராணுவ உளவுத்துறை, இணைய உளவு நடத்தியதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒலிம்பிக், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னர் இந்த தாக்குதல்கள் நடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சைபர் தாக்குதல்களின் தன்மை அல்லது அளவை அதிகாரிகள் விரிவாக குறிப்பிடவில்லை. அதே நேரத்தில், அமெரிக்க நீதித்துற…
-
- 0 replies
- 443 views
-
-
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பக் கலை கடந்த சில ஆண்டுகளாக மலேசிய தமிழர்களிடம் பிரபலமடைந்து வருகிறது. இவர்கள் சிலம்பக் கலையை கற்பது ஏன்? என்ன சொல்கிறார்கள்?
-
- 0 replies
- 695 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மிகப்பெரிய கால்பந்து வீரர்களில் ஒருவர். ரொனால்டோ ஒரு பல்துறை திறன் கொண்ட தாக்குதல் வீரர், அவரது அதி வேகம், அத்துடன் பலமாக பந்தை உதைக்கும் ஆற்றல் மற்றும் ஆழமான அடிச்சுவடுகள் ஆகியவற்றிற்காக மற்றைய வீரர்களில் இருந்து தனித்து நிற்கிறார். ரொனால்டோ பல நாடுகளில் லீக் பட்டங்களை வென்றுள்ளார். ரொனால்டோ பங்குபற்றிய 292 விளையாட்டுகளில் 311 கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=135112
-
- 1 reply
- 667 views
-
-
ஜோகோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் நடால் பிரான்ஸ் ஓபன் (பகிரங்க) டென்னிஸ் தொடரின் ஆடவர்க்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் ஜோகோவிச்சை தோற்கடித்து நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் இரு இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயினின் நடால் மோதினர். இந்த ஆட்டத்தின் முடிவில் நடால் 6-0, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிசை வீழத்தி கிரண்ட்ஸலாம் பட்டம் வென்றார். இது நடால் வெற்றி கொள்ளும் 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பதுடன் 13 ஆவது பிரான்ஸ் ஒபன் பட்டமும் ஆகும். https://www.virakesari.lk/article/91869
-
- 3 replies
- 663 views
-
-
ஏனோ சாமானியர்களின் வெற்றி நம்மை அதிகம் மகிழ்விக்கிறது - T Natarajan தான் யார் என்பதை இந்த காணொளியில் கூறுகிறார்!
-
- 1 reply
- 717 views
-
-
தினேஷ் சந்திமால், திசார பெரேரா இராணுவ அதிகாரிகளாக நியமனம்.! இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவ அதிகாரிகளாக இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டனர். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னணி வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவினால் இன்றைய தினம் இவ்வாறு நியமிக்கப்பட்டனர். மேலும் குறித்த இருவரும் தன்னார்வ இராணுவத் தளபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், நியமனத்தில் பின்னர் குறித்த இரு வீரர்களும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, இ…
-
- 0 replies
- 705 views
-