விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
அஸ்வின் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்த பேட்ஸ்மேனும் ஒருமுறைகூட வீழ்த்தமுடியாதவர்களும்! இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இன்று தொடங்கியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று, இலங்கை பேட்ஸ்மேன் லஹிரு திரிமானே 9 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து அஸ்வின் வீழ்த்திய பேட்ஸ்மேன்களில் அதிகமுறை அவுட் ஆனவர் என்கிற ஒரு பெயர் திரிமானேவுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அஸ்வின் பந்துவீச்சில் அதிகமுறை ஆட்டமிழந்தவர்களாக (11) திரிமானேவும் வார்ன…
-
- 2 replies
- 316 views
-
-
அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் அணிக்கு திரும்பும் வாய்ப்பே இல்லை- முன்னாள் வீரர் அ-அ+ குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கு காயம் ஏற்படும்வரை, அஸ்வின் அல்லது ஜடேஜாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை. இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா. இருவரும் தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இருவருக்கும் வாய்ப்பு…
-
- 0 replies
- 270 views
-
-
அஸ்ஹர் அணிக்கு எதிராக யாழ் மத்தி இன்னிங்ஸ் வெற்றி By Mohamed Azarudeen - சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையில் இடம்பெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அக்குரணை அஸ்ஹர் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது நேற்று (13) அக்குரணை அஸ்ஹர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்ஹர் கல்லூரி அணி விருந்தினர்களாக வந்த யாழ். மத்திய கல்லூரியை முதலில் துடுப்பாடப் பணித்தது. …
-
- 0 replies
- 515 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jPVKIyYtAKE
-
- 4 replies
- 1.2k views
-
-
ஆஃப்கனுக்கு எதிரான போட்டியிலிருந்து சஹா விலகல்! - 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ரித்திமான் சஹா காயம் காரணமாக விலகியுள்ளார். photo credit: @bcci சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டி, வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அஜிங்கியா ரஹானே தலைமையில், இந்திய அணி பங்கேற்க உள்ளது. கேப்டன் கோலி, காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதேபோல் இதில் பங்கேற்கவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியு…
-
- 0 replies
- 417 views
-
-
சார்ஜாவில் 1991 ஒக்டோபர் 25 ஆம் நாள் நடந்த வில்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தான் வீரர் ஆக்கிப் ஜாவிட்டின் அபாரமான பந்துவீச்சு! மேகதிக தகவல்களுக்கு: http://www.espncricinfo.com/ci/engine/current/match/65946.html
-
- 0 replies
- 542 views
-
-
ஆங்கிலேய எவ். ஏ. கிண்ணத்தை 12ஆவது தடவையாக மென்செஸ்டட் யுனைட்டட் கழகம் சுவீகரித்தது வெம்ப்ளி விளையாட்டரங்கில் க்றிஸ்டல் பெலஸ் அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் 10 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட மென்செஸ்டட் யுனைட்டட் கழகம் 2 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று ஆங்கிலேய எவ். ஏ. கிண்ணத்தை சுவீகரித்தது. அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்துவழிய இறுதிப் போட்டியின் மேலதிக நேரத்தில் லிங்கார்ட் போட்ட கோலின் உதவியுடன் வெற்றி பெற்ற மென்செஸ்டர் யுனைட்டட் 12ஆவது தடவையாக எவ். ஏ. கிண்ணத்தை வென்றெடுத்தது. ஆரம்பம் முதல் இறுதிவரை…
-
- 0 replies
- 255 views
-
-
ஆங்கிலேய கிரிக்கெட் லீக் அனுபவத்திற்கு நன்றி கூறுகின்றார் குசல் மெண்டிஸ் "டெஸ்ட் கிரிக்கெட்டில் போதிய அனுபவமோ, ஏ அணியுடனான வெளிநாட்டு விஜயமோ, உள்ளூர் கழகத் தலைமைத்துவமோ குசல் மெண்டிஸுக்கு இதற்கு முன்னர் கிடைத்ததில்லை. ஆனாலும் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் பற்றிப் பிடித்துக்கொள்ளத் தவறியதில்லை. அதுதான் அவரது திறமை வெளிப்படுவதற்கு காரணமாகும். இங்கிலாந்தில் தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய குசல் மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸில் குவித்த அரைச்சதம் டெஸ்ட் அரங்கில் அவ ரது கன்னி அரைச் சதமாகப் பதிவானது. …
-
- 0 replies
- 409 views
-
-
ஆங்கிலேய ப்றிமியர் லீக் போட்டியில் செல்சி கழகம் 12 ஆவது நேரடி வெற்றி 2016-12-28 10:56:27 இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஆங்கிலேய ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் செல்ஸி விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை ஈட்டி சாதனை நிலைநாட்டியுள்ளது. போர்ன்மௌத் கழகத்திற்கு எதிராக திங்களன்று நடைபெற்ற ப்றீமியர் லீக் போட்டியில் 3 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியதன் மூலம் இந்த சாதனையை செல்சி கழகம் படைத்தது. இப் போட்டியில் ஒரு தட்டு, இரண்டு தட்டுகள் என்ற பந்து பரிமாற்றங்களுடன் மிக வேகமாக விளையாடிய செல்சி கழகம் எதிரணியை மாத்திரம…
-
- 0 replies
- 283 views
-
-
ஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள் இங்கிலாந்தின் சன் செய்தித்தாளில் இங்கிலாந்தின் சகலதுறைவீரரும் 2019 ஆசஸ் கதாநாயகனுமான பென்ஸ்டோக்சின் இதுவரை மறைக்கப்பட்ட குடும்பம் ரகசியம் வெளியாகியுள்ளது. பென்ஸ்டோக்சின் தாயின் முதல் கணவரிற்கு பிறந்த இரு பிள்ளைகள் அவரது தாயின் முன்னாள் கணவனாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள சன் பென்ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு முன்னர் இது இடம்பெற்றது என தெரிவி;த்துள்ளது. டிரேசி என்ற எட்டு வயது சகோதரியும் அன்றூ என்ற நான்குவயது சகோதரனும் தாயின் முன்னாள் கணவரான ரிச்சட் டன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சன் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் பென்ஸ்டோக்ஸ் பிறந்தது தாய்க்கு…
-
- 0 replies
- 507 views
-
-
சீனாவில் இடம்பெற்ற “ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் 2019” போட்டியில் மலையக இளைஞர் மாதவன் ராஜகுமார் மூன்றாம் இடத்தைப்பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். 53 வது ஆசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பில் பாங்கேற்ற நுவரெலியா கொண்டகளை தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் இறுதிப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டார். ஆரம்பம் முதலே தனது கடுமையான முயற்சிகளுடன் பயணித்துவந்த ராஜகுமாருக்கு ஏராளமானோர் உதவி செய்துவந்தனர். இந்நிலையில் தனது விடாமுயற்சியில் 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்ட…
-
- 8 replies
- 977 views
-
-
ஆசிய ஆணழகனாக முடிசூடிய லூசன் புஷ்பராஜ் சுமார் 50 வருட வரலாற்றைக் கொண்ட ஆசிய ஆணகழகன் போட்டித் தொடரில் இலங்கைக்கு முதலாவது சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த ஆணழகனாக இலங்கையைச் சேர்ந்த லூசன் புஷ்பராஜ் இன்று மகுடம் சூடினார். ஆசிய ஆணழகன் மற்றும் உடற்தகுதி விளையாட்டு சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டிகள் (Asian Bodybuilding & physique Sports Championship-2017) கடந்த 20ஆம் திகதி தென்கொரியாவின் தலைநகர் சோலில் ஆரம்பமானது. இதில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் கலந்துகொண்ட லூசன், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். …
-
- 0 replies
- 585 views
-
-
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்! 18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். இதுதவிர, நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஷவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார். 1 நிமிடங்கள் 53.41 வினாடிகளில் தனது பந்தயத்தை முடித்த ஷவிந்து இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். இதேவேளை, பவன் நெத்ய சம்பத் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் (2.0…
-
- 3 replies
- 391 views
- 1 follower
-
-
ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் 8வது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீராங்கனை ஹஜந்திகா அபேரத்ன தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இம்முறை ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இலங்கை ஒரு தங்கப்பதக்கத்தையும், 3 வெண்கலப்பதக்கங்களையும் வென்றுள்ளது. அதன்படி நீளம் பாய்தல் போட்டியில் ஜனக பிரசாத் விமலசிறியும், 800 மீற்றர்ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாரச்சியும், 400 மீற்றர் ஓட்டத்தில் உபமாலிகா ரத்னகுமாரியும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர். இலங்கை ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் 3வது முறையாக கலந்துகொண்டுள்ளதுடன் ஆசிய உள்ளக மெய்வல்ல…
-
- 0 replies
- 208 views
-
-
ஆசிய எறிபந்தாட்டத் தொடர் இலங்கைக்குத் தங்கப்பதக்கம் ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஆண்களுக்கான எறிபந்து தொடரில் இலங்கை சார்பில் தமிழ் வீரர்கள் கலந்து கொண்ட அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய நாடுகளிற்கிடையிலான ஆண்களிற்கான எறிபந்து தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து கலிலியா கிறசன் கழகம் சென்றது. தெல்லிப்பளை யூனியன் கல்லூரியைச் சேர்ந்த என்.திவ்வியநாத், எஸ்.தரன், எஸ்.அபிநயன், பி.சாருஜன் ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்திருந்தனர். நேற்றுமுன்தினம் நடைபெற்ற மலேசியா அணிக்கும் இலங்கை அணிக்கும் (கலிலியா கிறசன் கழகம்) இடையிலான 5 செற்களைக் கொண்ட இறுதியாட்டத்தில் 3:0 என்ற நேர் செற் கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற…
-
- 1 reply
- 961 views
-
-
ஆசிய கால்பந்து: மகுடம் சூடிக்கொண்ட அவுஸ்திரேலியா ஆசிய நாடுகளின் கால்பந்தாட்ட மன்னர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் ஆசியக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நேற்று அவுஸ்திரேலியாவில் முடிவுக்கு வந்தன. 1956இல் ஆசியக் கால்பந்து சம்மேளனம் ஆரம்பித்த ஆசியக்கிண்ணக் கால்பந்துத் தொடர், இம்முறை தான் முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஜனவரி 9 முதல் நடைபெற்று வந்த 16ஆவது ஆசியக்கிண்ணம், முதல் தடவையாக அவுஸ்திரேலியாவின் கைகளில் போய்ச் சேர்ந்துள்ளது. ஆசியக் கிண்ணத்தை வெல்கின்ற 8ஆவது நாடு என்னும் பெருமையும் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்துள்ளது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், ஓஷியானிய வலயத்திலிருந்து அவுஸ்திரேலியா 2006-2007ஆம் ஆண்டுகளில் தான் ஆசிய நாடுகளோடு …
-
- 0 replies
- 387 views
-
-
நேபாளத்தில் திங்களன்று ஆரம்பமான ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச்சம்மேளனத்தின் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிராந்திய கால்பந்தாட்டப் போட்டியில் மாலைதீவுகள் அணியை இலங்கை அணி 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்துள்ளது. காத்மண்டு இராணுவ உடற்கலை நிலைய மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சுரேந்திரன் கௌரி (4ஆவது நிமிடம்), சிவனேஸ்வரன் தர்மிகா (70ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்களைப் போட்டமை குறிப்பிடத்தக்கது.14 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவி தலைவியாக கௌரி விளையாடுகின்றமை மற்றொரு விசேட அம்சமாகும். வலைப்பந்தாட்டத்தை விட இலங்கை விளையாட்டு அணியில் யாழ். பாடசாலை மாணவி ஒருவ…
-
- 0 replies
- 457 views
-
-
ஆசிய கிண்ணப்போட்டிகளில் மலிங்க இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இம்மாதம் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ணப்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியில் இடம்பெறுவார் என தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லபரோய் தெரிவித்துள்ளார். மலிங்க ஒரு கட்டத்தில் 50 ஓவர் போட்டிகளில் விளையாட தயாராகயிருக்கவில்லை,இதன் காரணமாக நாங்கள் வேறு சில வேகப்பந்து வீச்சாளர்களில் கவனம் செலுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலககிண்ணப்போட்டிகளில் விளையாடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகின்றோம் இதன் காரணமாக நாங்கள் மலிங்கவிற்கு ஓய்வளித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இடம்பெறுகின்ற உள்ளுர் போட்டிகளில் அவரது உடல்தகுதி நல்…
-
- 111 replies
- 11.7k views
-
-
Published By: Vishnu 16 Nov, 2025 | 01:41 AM (நெவில் அன்தனி) கத்தார், தோஹா வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட்டின் ஏ குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 3 விக்கெட்களால் இலங்கை ஏ அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது. யாழ். மைந்தன், மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சில் 3 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பிரகாசித்தபோதிலும் அது பலனற்றுப் போனது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. மிலன் ரத்நாயக்க (41), நுவனிது பெர்னாண்டோ (39), அணித் தலைவர் துனித் வெல்லாலகே (33), விஷேன் ஹலம்பக…
-
- 2 replies
- 240 views
- 1 follower
-
-
ஆசிய கிண்ண உதைபந்தாட்டம் இறுதியாட்டத்தில் ஈராக் - சவூதி அணிகள் இன்று மோதுகின்றன ஆசிய நாடுகளின் உதைபந்தாட்ட அணிகளிடையே நடத்தப்பட்டு வரும் உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈராக் சவூதி அரேபிய அணிகளிடையே நடைபெறவுள்ளது. ஈராக்- தென்கொரியா அணிகளிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஈராக் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆரம்பத்தில் கொரிய அணியே வெற்றிபெறுமென்று அவதானிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். போட்டி ஆரம்பமாகி இடைவேளை வரை இரு அணிகளும் கோல்கள் எதனையும் போடவில்லை. இடைவேளையின் பின்னர் போட்டி ஆரம்பமானதும் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றபோதிலும், இரு அணிகளும் பல கோல்கள் போடும் கட்டங்களை அடுத்தடுத்து தவறவ…
-
- 0 replies
- 792 views
-
-
ஆசியக்கிண்ண வரலாற்றில் முதன் முறையாக T 20 போட்டிகள் வங்கதேசத்தில் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் விரைவில் களைகட்டவுள்ளது. ஆசியக்கிண்ண வரலாற்றில் முதன்முறையாக டி20 போட்டிகளாக நடக்கும் இந்த தொடர் எதிர்வரும் 24ம் திகதி முதல் மார்ச் 6ம் திகதி முடிய நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கிறது. மேலும், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் ஓமன் ஆகிய அணிகளில் ஒன்று தகுதிப் போட்டியின் மூலம் தெரிவு செய்யப்படும். தகுதிப் போட்டிகள் பெப்ரவரி 19 முதல் 22ம் திகதி வரை நடக்கிறது. இதில் இலங்கை அணி நடப்பு சாம்பியனாக இருக்கிறது. கடந்த தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்க…
-
- 71 replies
- 2.5k views
-
-
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகள் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் வருகிற மார்ச் 11ம் திகதி தொடங்கி 22ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, வங்கேதசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்நிலையில் ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரிய தெரிவுக் குழுவினர் வீரர்களைத் நேற்று தெரிவு செய்தனர். ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் அதிரடி துடுப்பாட்ட காரர் விரேந்திர சேவாக், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில் யூசுப் பதான், கொல்கத்தா வீரரான அசோக் தின்டா ஆகியோருக்கு வாய்ப்பு…
-
- 0 replies
- 504 views
-
-
பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு நாட்டில் இந்திய போட்டிகள் Published By: VISHNU 24 MAR, 2023 | 01:46 PM (நெவில் அன்தனி) ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதேவேளை, இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் பிரிதொரு நாட்டில் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் ஒரு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்துவதில் ஆரம்பித்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் முரண்பாடு நிலவியது. பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நட…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
ஆசிய கிண்ண மகளிர் இ 20 கிரிக்கெட்: 75 ஓட்டங்களால் இலங்கை வெற்றி 2016-12-01 10:25:30 தாய்லாந்தில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண மகளிர் இருபது 20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டி ஒன்றில் தாய்லாந்து மகளிர் அணியை 75 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணி வெற்றிகொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான ஹசினி பெரேரா (அணித் தலைவி) 55 ஓட்டங்களையும் சமரி அத்தப்பத்து (முன்னாள் இலங்கை அணித் தலைவி) ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ச…
-
- 0 replies
- 233 views
-
-
கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா, செல்வி நடராசா வினுசா என்பவர்கள் தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில் இடம்பெற்ற ஆசிய கிண்ணபோட்டியில் விளையாடி கிளிநொச்சிக்கு மட்டுமல்ல இலங்கைக்கே பெருமையை தேடித்தந்திருக்கிறார்கள். இலங்கை அணி மூன்றாம் இடத்தையும்,நடராசா வினுசா என்பவர் சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டனர். இவர்களையும் இவர்களை பயிற்றுவித்த கிளிநொச்சியை சேர்ந்த திரு. விக்ரர் சுவாம்பிள்ளை அவர்களையும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் பாராட்டுகளை தெரிவித்தார். http://www.virakesari.lk/article/51418
-
- 0 replies
- 371 views
-