விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸி. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டி விராட் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 352 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு 353 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 316 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 36 ஓட்டத்தனால் தோல்வி…
-
- 0 replies
- 475 views
-
-
7 விக்கெட்டுக்களினால் நியூஸிலாந்து வெற்றி! ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 13 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் குல்பாடின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 6.00 மணிக்கு டொன்டனில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் 34 ஓட்டத்தையும், நூர் அலி ஸத்ரான் 31 ஓட்டத்தையும்…
-
- 0 replies
- 810 views
-
-
சகிப்பின் சதம் வீணானது ; 106 ஓட்டத்தால் இங்கிலாந்து வெற்றி! இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 280 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான தலைமையிலான இங்கிலாந்து மற்றும் மோத்ரசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே கார்டீப்பில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களடுத்தடுப்பை தேர்வுசெய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 386 ஓட்டங்களை குவித்தது. 387 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்…
-
- 0 replies
- 671 views
-
-
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 46 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியா சம்பியன் June 9, 2019 பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்டி வென்று முதல்முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில ஆஷ்லி பார்டி செக்குடியரசு வீராங்கனையான மார்கெட்டா வோன்ட்ரோசோவாவுடன் போட்டியிட்ட நிலையில் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரினை அவு;திரேலிய வீராங்கனை ஒருவர் வெல்வது 1973-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவே முதல் முறைய…
-
- 1 reply
- 374 views
-
-
இலங்கை – பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது! இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி எதுவித பந்துகளும் வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 11 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு பிரிஸ்டலில் இடம்பெறவிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து அங்கு மழை பெய்து வந்ததன் காரணமாக போட்டி நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டுள்ளது. இந் நிலையில் பாகிஸ்தான் மற்றும இலங்கை அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இலங்கை-பாகிஸ்தான்-போட்ட/
-
- 0 replies
- 429 views
-
-
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அவுஸ்ரேலியா 15 ஓட்டங்களால் வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 15 ஓட்டங்களால் அவுஸ்ரேலிய அணி வெற்றிகொண்டது. உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. நொற்றிங்கமில் உள்ள ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக, கௌல்ரர் நைல் 92 ஓட்டங்களையும், ஸ…
-
- 2 replies
- 1.4k views
-
-
உலகக்கிண்ண தொடரில் எங்களை வீழ்த்தவே முடியாது: பங்களாதேஷிற்கு உணர்த்தியது நியூஸிலாந்து! உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷ் அணியால், தம்மை வீழ்த்தவே முடியாது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது நியூஸிலாந்து அணி. உலகக்கிண்ண தொடரில் நியூஸிலாந்தை வீழ்த்தி, வரலாற்று பதிவை மாற்றியமைப்போம் என்ற நம்பிக்கையுடன் நேற்று, கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நியூஸிலாந்து அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொண்டது. எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, ஆடுகளத்திற்கு சாதகமான, இரண்டாவது துடுப்பாட்டதை தெரிவுசெய்தது. இதற்கமைய முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்…
-
- 0 replies
- 769 views
-
-
ரொஹித் சர்மா அதிரடி சதம்: 6 விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி! தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரொஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. சௌத் அம்ரனிலுள்ள, ரோஸ் பௌல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் மிரட்டலான பந்துவீச்சுக்கு மத்தியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227…
-
- 0 replies
- 424 views
-
-
எங்களுக்கு என்று தமிழீழம் கிடைச்சு , தமிழீழ கிரிகெட் அணி மற்ற நாடுகலுடன் விளையாடும் போது பார்க்க எப்படி இருக்கும் / எவளவு காலத்துக்கு மாற்றான் விளையாட பார்க்கிறது , இத வாசித்து விட்டு கற்பன கூட என்று நினைச்சு போடாதைங்கோ , கனவு ஒரு நாள் பலிக்கும் என்ர நம்பிக்கை எனக்கு இருக்கு 🙏/ பையன்26
-
- 0 replies
- 761 views
- 1 follower
-
-
பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை! அபாரமான பந்து வீச்சினால் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 34 ஓட்டத்தினால் வீழ்த்தியுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே கார்டீபில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 33 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை குவித்தபோது மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் மழை முடிவடைந்ததும் இரவு 8.30 மணியளவில் ஓவர்களின…
-
- 0 replies
- 806 views
-
-
பழி தீர்த்த பாகிஸ்தான் ! இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்று தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. 12 ஆவது சர்வதேச உலகக் கிண்ணத் தொடரின் ஆறவாது லீக் போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நோட்டிங்கமில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 348 ஓட்டங்களை குவித்தது. 349 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் …
-
- 3 replies
- 1.2k views
-
-
தென்னாபிரிக்காவை வீழ்த்தி பங்களாதேஷ் அசத்தல் வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 5ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி தென்னாபிரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. அந்தவகையில் பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவுசெய்தது. லண்டன், ஹெனிங்ரன் ஒவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, அனைத்து வீரர்களின் பங்களிப்புடன் சவாலான ஓட்டத்தை குவித்துள்ளது. அந்தவகையில், அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக, ரஹிம் அதிர…
-
- 0 replies
- 606 views
-
-
ஆப்கானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை ஆரம்பித்த ஆஸி. ஆப்பானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டி நேற்றைய தினம் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் குல்பாடின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று மாலை 6.00 மணிக்கு பிரிஸ்டலில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள், பலமான அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற ஆர்பித்தனர். தொடக்க ஆட்டக்காரர்களா…
-
- 0 replies
- 474 views
-
-
விக்கெட் இழப்பின்றி ஆடி முடித்த நியூஸிலாந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே கார்டிப்பில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கை அணிக்கு வழங்க இலங்கை அணியும் முதலில் துடுப்பெடுத்தாடியது. நியூஸிலாந்து அணியின் பந்துகளில் திணறிய இலங்கை அணி வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறியமையினால், இலங்கை அணி 29.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்…
-
- 0 replies
- 441 views
-
-
13.4 ஓவரிலேயே போட்டியை முடித்த மே.இ.தீவுகள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நாட்டிங்கமில் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் சப்ரஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது. இப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது. 106 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுள் அணியின் ஷெய் ஹோப் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்…
-
- 0 replies
- 994 views
-
-
ஆதியும் அந்தமும் தெரியாத கிரிக்கெட் ஜென்டில்மன் ஜகேம் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் ஆட்டமானது உலகின் அதிகம் பேரால் கவரப்பட்ட ஒரு விளையாட்டாக இருக்கின்றது. காலத்துக்கு ஏற்ப உலக மாறுதல், தொழில்நுட்ப புரட்சிக்கு ஈடு கொடுத்து தன்னை மாற்றிக் கொண்டு கிரிக்கெட் உலகத்தோடு வேகநடை போட்டு வருகின்றது. ஆம்... எப்போதோ ஆரம்பமானதாகச் சொல்லப்படும் கிரிக்கெட்டானது இன்று 12 ஆவது உலகக் கிண்ணத்தைக் காண்கின்றது. உலகக் கிண்ணம் தொடர்பான பல தகவல்களை நாம் அறிந்து வைத்திருந்தாலும் கிரிக்கெட்டின் மூலம் குறித்து நாம் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால் அது கேள்விக் குறிதான். காரணம்... கிரிக்கெட்டின் வரலாற்றை தெளிவாக யாராலும் சொல்ல முடியாது... கிரிக்கெட் ஆட்டத்தின் வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐரோப்பிய லீக் கிண்ண தொடர்: இரண்டாவது முறையாக சம்பியன் கிண்ணமேந்தியது செல்சியா அணி! யு.இ.எப்.ஏ. ஐரோப்பிய லீக் கிண்ண தொடரில் செல்சியா அணி, 4-1 என்ற கோல்கள் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், செல்சியா அணி 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய லீக்கை வென்ற பின் ஐரோப்பிய பட்டம் ஒன்றை வெல்வது இது முதல் முறையாகும். செல்சியா அணியின் ஐந்தாவது ஐரோப்பிய கிண்ணம் இதுவாகும். செல்சியா அணியை விடவும் இங்கிலாந்து கழகங்களில் லிவர்பூல் அணி அதிகமாக 8 முறை ஐரோப்பிய கிண்ணங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசர்பைஜான் தலைநகர் பகுவில் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடின. எனினும் இர…
-
- 0 replies
- 693 views
-
-
தென்னாபிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி! உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அந்தவகையில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்தது. 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியது. இந்நிலையில், இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. லண்டனிலுள்ள கென்னிங்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 31…
-
- 0 replies
- 487 views
-
-
உலகக் கிண்ண கிரிக்கெட் அணி தலைவர்கள் எலிசபெத் மகாராணியுடன் சந்திப்பு (படங்கள் இணைப்பு) உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொள்ளும் 10 அணிகளின் தலைவர்கள் பிரிட்டனின் 2ஆவது எலிசபெத் மகாராணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதனை தொடர்ந்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் ஆரம்ப வைபவம் பக்கிங் ஹாம் மாளிகைக்கு அருகாமையில் இடம்பெற்றது. சிறுவர்களின் கல்விக்க்காக போராடும் பாகிஸ்தானின் சிறுவர் வீரர்கள் மற்றும் ஜக்கிய நாடுகளின் சபையின் இளம் சமாதான தூதுவரான மலாலா யுசுவ்சாயி கலந்துக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஆரம்ப வைபவத்தில் விவியன் ரிஜட் வோஸ் மஹெல ஜெயவர்த்தன அனில் கும்பே ஹசார் அலி…
-
- 0 replies
- 885 views
-
-
10 நாடுகள் களத்தில் ; இன்று ஆரம்பமாகிறது உலகக் கிண்ண சமர்! உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ள 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது நாளைய தினம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து, மற்றும் வேல்ஸில் நாளை 30 ஆம் திகதி ஆரம்பமாகும் இத் தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் நடப்புச் சம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா, ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா, விராட் கோலி தலைமையிலான இந்தியா, சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான், ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான…
-
- 0 replies
- 1.1k views
-
-
1996 இல் இடம்பெற்ற 6 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்.... கடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆறாவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இலங்கை அணி முதல் தடவையாக சம்பியனானது. * இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெற்றது. * கிண்ணத்தின் பெயர் - வில்ஸ் உலகக் கிணண்ம் ( Wills world cup) * 26 மைதானங்களில் மொத்தமாக 37 போட்டிகளில் * 12 அணிகள் கலந்துகொண்டன (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இங்கிலாந்து, நியூஸிலாந்து, சிம்பாப்வே ஆகிய நாடுகளுடன் தேர்வு அந்தஸ்துப் பெறாத ஐக்கிய அரபு எமிரகம்,…
-
- 0 replies
- 1.1k views
-
-
தென்னாபிரிக்காவுக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 87 ஓட்டங்களினால் தோல்வி May 25, 2019 Cricket – ICC Cricket World Cup Warm-Up Match – Sri Lanka v South Africa – Cardiff Wales Stadium, Cardiff, Britain – May 24, 2019 South Africa players celebrate victory Action Images via Reuters/Andrew Boyers தென்னாபிரிக்காவுக்திரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது. நேற்றையதினம் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை எடுத்திருந்தனர். இதனையடுத்து 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய …
-
- 0 replies
- 422 views
-
-
நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (நெவில் அந்தனி ) கத்தார் - 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்கும் எண்ணத்தை கால்பந்தாட்ட சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் (பீபா) கைவிட்டுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கையை 2026 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின்போது 32 இலிருந்து 48 ஆக அதிகரிக்கவுள்ளதாக பீபா தலைவர் ஜியான்னி இன்பென்டீனோ கடந்த தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்தத் திட்டத்தை மாற்றி 2022 இல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 2022 உலகக் கிண்ணப் போட்டிகளில் நாடுகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட…
-
- 0 replies
- 450 views
-
-
கிந்திய கிரிக்கெட் அணிக்கு இனிமே “காவி” உடை..! தேர்தல் “முடிவு”க்குப் பின் வெளியே வந்த பூனைக்குட்டி..! லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அதிக ஆரஞ்சு நிறம் கலந்த ஆடை அணிந்து விளையாட உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. ( ஆரஞ்சுன்னா இப்போதைக்கு அது அந்த நிறம் தானேப்பா ? ) சரியாக தேர்தல் முடிவு வரும் வரை மறைத்து வைக்கபட்டு, பின்னர் திட்டமிடப்பட்டு இந்த செய்தி வெளியாகி இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது இந்த ஆடை விவகாரம். நம்பிய ரசிகர்கள் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஆடை என எப்போதும் இந்தியா அணியும் நீல நிற ஆடை ஒன்றை ஐபிஎல் தொடருக்கு முன் அறிமுகம் செய்தனர். எல்லா இந்திய ரசிகர்களும் அதுதான் இந்திய அணியின் ஆடை என நம்பி இருந்தனர். …
-
- 0 replies
- 962 views
-
-
1992 இல் இடம்பெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்.... கடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியனானது. * அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் 1992 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை 5 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. * கிண்ணத்தின் பெயர் - பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் (Benson & Hedges cup) * 18 மைதானங்களில் மொத்தமாக 39 போட்டிகள் இடம்பெற்றன. * 9 அணிகள் கலந்து கொண்டன (நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, இலங்கை ம…
-
- 0 replies
- 627 views
-