விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
கொழும்பு: இந்திய அணி வர மறுத்து விட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வருமாறு அழைக்கப்பட்டுள்ள இலங்கை அணியும், தனது கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்று்பயணம் செய்து ஒரு நாள், டெஸ்ட் மற்றும் 20 - 20 போட்டிகளில் விளையாடவிருந்தது. ஆனால் மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் போகக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய அணி தனது கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்து விட்டது. இதையடுத்து இலங்கை அணியை கிரிக்கெட் ஆட வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைத்தது. முன்னாள் கேப்டன் அர்ஜூன ரனதுங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம் இதை ஏற்றுக் கொண…
-
- 2 replies
- 1.7k views
-
-
2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை 2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான நான்காவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தமையே இதற்கான காரணம் ஆகும். கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதல் விக்கெட் 06 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. என்றாலும், இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா ஜோடி 219 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு உயர்த்தியது. …
-
- 2 replies
- 633 views
-
-
கண்ணை மறைக்கும் ஆத்திரம்: ரபாடாவின் சாதனையும் வேதனையும் சாதனையாளார் ரபாடாவின் அடக்க முடியாத உணர்வு. எதிரில் ஸ்மித். - படம். | ராய்ட்டர்ஸ். போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வாயை அடைக்கும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்காவின் சாதனையாளர் கேகியோ ரபாடா என்றால் மிகையாகாது. 11 விக்கெட்டுகளைச் சாய்த்தார். கேப்டன் ஸ்மித்தே முதல் இன்னிங்சில் ரபாடா வீசிய ஒரு ஸ்பெல்லை ‘ரியல்லி வெரி டிஃபிகல்ட் (உள்ளபடியே மிகக்கடினமானது) என்று வர்ணித்தார், எதிரணியின் கேப்டன்களில் பலர் இப்படி மனம் திறந்து இன்னொரு அணியின் வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டுவது அரிது. 28 டெஸ்ட் போட்டிகளி…
-
- 2 replies
- 731 views
-
-
மூன்றாவது தடவையாக ஒரே அணிகள் இறுதியில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என அழைக்கப்படும் ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் 3 ஆவது தடவையாகவும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதவுள்ளன. இறுதிப்போட்டி நாளை சனிக்கிழமை (19) யாழ்;ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜே.பி.எல் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 3 ஆவது பருவகால போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானங்களில் நடைபெற்றது. கடந்த ஆண்டுப் போட்டியில் காலிறுதி வரையில் …
-
- 2 replies
- 350 views
-
-
பறந்து வந்த காதலி நவம்பர் 09, 2014. காதலி சொரஜாவை அழைத்து வர தனி ‘ஜெட்’ விமானத்தை அனுப்பி அசத்தினார் பிரேசில் வீரர் நெய்மர். பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர், 22. களத்தில் மட்டுமல்ல, காதல் விளையாட்டிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், காயம் காரணமாக காலிறுதியுடன் வெளியேறினார். அப்போது இவருடன் பிரேசில் நடிகை புருனா மார்குயிஜின், 19, என்ற பெண், ‘தோழியாக’ இருந்தார். கடந்த ஆக., மாதம் இருவரும் ஸ்பெயினின் இபிஜா என்ற தீவுக்கு சென்றனர். முதல் சந்திப்பு: இருவருக்கும் என்ன பிரச்னை ஏற்பட்டது எனத் தெரியவில்லை. நெய்மர் புருனாவை பிரிந்தார். இங்கு வைத்து, தன்னை விட 6 வயது மூத்தவரான செர்பிய அழகி சொரஜாவை, 28, நெய்மர் சந்தித்துள்ளார்…
-
- 2 replies
- 726 views
-
-
இந்திய முன்னாள் கப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடிக்கு எதிராக 750 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக இலங்கையின் சுழற்பந்து வீச் சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ள அதேநேரம், முரளிதரனை நீதிமன்றில் சந்திக்கத் தயாரென பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். முரளியின் பந்துவீச்சு முறை குறித்து பிஷன் சிங் பேடி அவ்வப்போது குறைகூறி வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரரென்ற சாதனையை அடுத்த இரு மாதங்களில் முரளிதரன் முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகையில் முரளியின் பந்துவீச்சு முறையை பேடி மிக மோசமாகக் குறைகூறியுள்ளார். முரளி பந்தை எறிவதாகவும் அவரது பந்துவீச்சு முறையானது ஈட்டி எறிவது போன்றும் குண்டெறிவது போன்றுமிரு…
-
- 2 replies
- 1.4k views
-
-
விளையாட்டு முகப்பு >செய்திகள் >விளையாட்டு நியூசியின் மிரட்டல் பந்து வீச்சு; தடுமாறிய இந்திய அணி; மழையால் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம் 2020-02-21@ 10:28:13 வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் 55 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. அதன்படி இந்திய அணி ஆட்டநேர முடிவில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. …
-
- 2 replies
- 528 views
- 1 follower
-
-
லார்ட்ஸ் மைதானத்தில் உலக லெவனை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி! இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, உலக லெவன் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கரீபியன் தீவுகளைக் கடந்த ஆண்டு இர்மா மற்றும் மரியா புயல்கள் தாக்கின. அதனால், கரீபியன் தீவுப்பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளிலும் கடும் சேதம் ஏற்பட்டது. மேற்கிந்தியத் தீவுகளின் புகழ்பெற்ற ஆண்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட 5 கிரிக்கெட் மைதானங்கள் புயலால் பெருத்த சேதமடைந்தன. இந்த மைதானங்களைச் சீரமைக்க பல்வேறு வகைகளில் நிதி திரட்டப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும்…
-
- 2 replies
- 510 views
-
-
ஐ.சி.சி.தலைவர் சொன் மரணம். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் தலைவர் பெர்சி சொன் தனது 57 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார். தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள டர்பன் வில்லி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பெருங்குடல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்தே அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் தலைவரான பெர்சி சொன் முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தலைவராகவும் செயல்பட்டவராவார். நிறவெறியால் பாதிக்கப்பட்ட காலத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட்டை ஒருங்கிணைத்ததில் பெர்சி சொன் முக்கிய இடம் வகிக்கிறார். அத்துட…
-
- 2 replies
- 1.5k views
-
-
COPY AND PASTE THE LINK IN WINDOW MEDIA PLAYER mms://lankanewspapers.com/vid2007
-
- 2 replies
- 1.9k views
-
-
2014 உலகக் கிண்ண போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட 11 புதிய சாதனைகளின் விபரம்: 2014-07-18 12:07:06 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் ஜேர்மன் அணி வீரர் மிரஸ்லோவ் குளோஸ் தனது 16 ஆவது கோலை அடித்து புதிய சாதனை படைத்தமை தெரியும். ஆனால், 2014 உலகக் கிண்ண போட்டிகளின்போது நிகழ்த்தப்பட்ட ஒரே புதிய சாதனை இதுவல்ல. கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களின் தகவல்களின்படி இத்தொடரில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் பலவற்றின் விபரம்: 1) ஜேர்மன் வீரர் மிரஸ்லோவ் குளோஸ் 16 ஆவது கோலை அடித்து உலக கிண்ண போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரரானார். 2) இம்முறை இறுதிப்போட்டியில் விளையாடிய ஜேர்மன் அணி, அதிகக் எண்ணிக்கை உலக கிண்ண இறுதிப்போட்டியில் (8) விளையாடிய அணியாக சாதனை படைத்தது. 3) பெல்ஜி…
-
- 2 replies
- 418 views
-
-
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்து கொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன்200 மீற்றர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் அரசகுலசூரியன் மயூரன் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.சிவபூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இன்று இதன் அறுவடை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. வீடுகளில் கிராமங்களில் ஏன் சாதாரண பாடசாலைகளில் ஒதுக்கப்பட்ட பிள்ளைகள் இன்று பலராலும் விதந்து திரும்பிப் பார்க்கப்படும் நிலைமையை எய்தியுள்ளனர்.விசேட தேவையுடையோருக்கான ஒலிம்பிக் போட்டி இம்முறை யூலை 25 தொடக்கம் ஆகஸ்ட் 02 வரை கலிபோனியா மாநிலத்தில் உள்ள லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகின்றது. 165 நாடுகளில் இரு…
-
- 2 replies
- 312 views
-
-
பங்களாதேஷ் பிரீமியர் லீக் : டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான நிலையில், முதல் நாளில் நடைப்பெற்ற கொம்மிலா விக்டொரியன்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில், டாக்கா டைனமைட்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியானது, நேற்று மிர்பூர் மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய கொம்மிலா விக்டொரியன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஓட்டமாக மஸ்ரபீ மோடார்ஸா 26 பந்தில் இரு சிக்சருடன்…
-
- 2 replies
- 851 views
-
-
டெஸ்ட் தலைவர் பதவியிலிருந்து அலஸ்டெயார் குக் இராஜினாமா! இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலஸ்டெயார் குக் தனது அணித்தலைமையை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையடுத்து குக்கின் தலைமையின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த காரணத்தால் இவர் அணித்தலைமையிலிருந்து இராஜினாமா செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இங்கிலாந்து அணி சார்பாக 59 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள குக் அதில் 24 போட்டிகளில் வெற்றியை தேடித்தந்துள்ளார். இதில் 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரசித்திபெற்ற ஏசஷ் தொடரையும் இங்கிலாந்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். அதுமாத்திரமின்றி 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய…
-
- 2 replies
- 629 views
-
-
எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன். ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி…
-
-
- 2 replies
- 528 views
-
-
புதிய அணிகளுக்கு10 வீரர்கள் நேரடி தெரிவு November 01, 2015 பிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் உருவாக்கப்படுகிறது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2016, 2017ம் ஆண்டு சீசனில் இந்த இரு அணிகள் பங்கேற்க முடியாது. இந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகள் விளையாடும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த புதிய அணிகள் விரைவில் தெரிவு செய்யப்படுகிறது. இந்த அணிகள் கிட்டத்தட்ட ராஜஸ்தான், சென்னை அணிகள் போன்றே இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் 2 புதிய அணிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்…
-
- 2 replies
- 495 views
-
-
பரிசுத்தொகையில் ஒரு பகுதியை அன்னை தெரேசா இல்லத்திற்கு வழங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதிபோட்டியில் கிடைத்த பரிசுத்தொகையின் ஒரு பகுதியை கொல்கத்தாவில் அமைந்துள்ள அன்னை தெரேசா இல்லத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டால் வெற்றிபெற்று சம்பியனானது. இந்நிலையில் ஐ.சி.சி. சம்பியனான அணிக்கு ஒருதொகை பணப்பரிசு வழங்கி கௌரவித்தது. அதில் ஒரு பகுதியை மேற்கிந்தியத் தீவுகள் அணி கொல்கத்தாவில் அமைந்துள்ள அன்னை தெரேசா தொண்டு இல்லத்திற்கு வழங்கியுள்ளது. இதனை மேற்கிந்திய…
-
- 2 replies
- 601 views
-
-
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரோகித் சர்மா, அபாரமாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இன்றைய 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளுக்கு 354 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி நேற்று ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 2வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் மேற்கிந்திய தீவு வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 10 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ரோகித்- டோனி ஜோடி இந்திய அணியின் ரன் எண்ணிக்கை சற்று உயர்த்தியது. 42 ரன்னில் டோனி வெளியேற, அஸ்வின…
-
- 2 replies
- 855 views
-
-
தோனி மிகச்சிறந்த பினிஷர்; திறமையைச் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டம்: கோலி காட்டம் இந்திய அணி வீரர் எம்எஸ் தோனி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காட்சி - படம்: ராய்டர்ஸ் தோனி மிகச்சிறந்த பினிஷர், அவர் ஒரு போட்டியில் சரியாக விளையாடாமல் போனதற்காக அவரின் திறமையை மீண்டும், மீண்டும் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டமானது என்று தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காட்டமாகத் தெரிவித்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள்…
-
- 2 replies
- 398 views
-
-
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாதது ஆச்சரியமளிக்கவில்லை: ஜார்ஜ் பெய்லி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் இந்திய அணி வெளியேறியது. இது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று ஆஸி. ஒருநாள் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ஆனாலும், உலகக்கோப்பையில் இந்திய வாய்ப்புகள் இதனால் கெட்டுப்போய் விடவில்லை என்று கூறிய பெய்லி, “ஆம். இந்திய வாய்ப்புகள் மங்கி விடவில்லை. இந்திய அணி டெஸ்ட் தொடர் மீது நீண்ட நாட்கள் கவனம் செலுத்தியிருக்கலாம், தயாரிப்புகள் அடிப்படையில் டெஸ்ட் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம், ஆனால் இங்கிலாந்து அணி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக மட்டுமே தன்னைத் தயார் படுத்திக்கொண்டது. உலகக்கோப்பைக்…
-
- 2 replies
- 519 views
-
-
சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியின் முகாமைத்துவம் நடத்தியுள்ள விதம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போதெல்லாம் அந்த அணியில் அஸ்வின் இடம்பெறவேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அஸ்வின் நிச்சயமாக இடம்பெறவேண்டிய வீரர் ஆனால் அணி முகாமைத்துவம் அஸ்வினை உரிய முறையில் நடத்தாதன் காரணமாக அவர் சிறப்பாக பந்து வீசுவதற்கு சிறிது சிரமப்படுகின்றார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தன்னை சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கை உள்ளது என அஸ்வின் உணரும் நிலையை ஏற்படுத்தவேண்டும்,என தெரிவித்துள்ள சுனில்கவாஸ்கர் நீங்கள் தொடர்ந்தும் புறக்கணி;க்கப்பட்டால் நீங்கள் உங்களை நிருபிப்பதற்காக மேலும் …
-
- 2 replies
- 872 views
-
-
மெஸ்ஸிக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை! அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியை, நான்கு போட்டிகளில் விளையாட பிஃபா தடை விதித்துள்ளது. கால்பந்து உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்றுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அர்ஜென்டினா, சிலி அணிகள் கடந்த வாரம் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மோதின. இந்தப் போட்டியின்போது, அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸிக்கும், போட்டி நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பிஃபா விசாரணை நடத்தியது. அப்போது, போட்டியின்போது துணை நடுவர் ஒருவரை மெஸ்ஸி மரியாதைக் குறைவாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அடுத்து நடக்க உள்ள நான்கு உலகக் கோப்பை தகுதி போட்டிகளில் விளையாட பிஃபா தடை…
-
- 2 replies
- 336 views
-
-
இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு 20 அக்டோபர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போன்றதே.", என்று விராட் கோலி பதிலளித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய இந்த கருத்தை 'விதிவிலக்காக' எடுத்துக் கொள்ளலாம். சுமார் 28 மாதங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும்…
-
- 2 replies
- 661 views
- 1 follower
-
-
சர்ச்சையான ஜொய்ஸின் ஆட்டமிழப்பு அயர்லாந்தின் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், அயர்லாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் எட் ஜொய்ஸுக்கு வழங்கபட்ட ஆட்டமிழப்பு சர்ச்சையாகியுள்ளது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ஒரு கட்டத்தில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களுடன் காணப்பட்ட நிலையில், ரஷீட் கானின் ஆட்டமிழக்காத 60, மொஹம்மட் நபியின் 50 ஓட்டங்கள் கைகொடுக்க 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னதாக, ரஹ்மட் ஷா 48 ஓட்டங்களைப் பெற்றிருந்ததோடு, பந்துவீச்சில் அன்டி மக்ப…
-
- 2 replies
- 381 views
-
-
பங்களாதேஷ் தொடரிலிருந்து பற் கம்மின்ஸ் வெளியேற்றம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு பயணமாகும் அவுஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பற் கம்மின்ஸ் விலகியுள்ளார். மறுபடியும் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காயம் காரணமாகவே இவர் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜேம்ஸ் போக்னர் அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றுள்ளார். போக்னர் இதுவரையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிதாக ஏற்பட்டுள்ள காயம் கம்மின்சுக்கு பாரிய பின்னடைவாக காணப்படுகிறது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக 18 வயதில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டபோதும், அதன் பின் முதுகு மற்றும் கால் காயங்களால் அவதிப்படும் கம்மின்ஸ் அதற்கு பி…
-
- 2 replies
- 370 views
-