பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
சிந்து சமவெளி குறியீடுகள் உள்ள புதிய கற்காலக் கற்கோடரியும் பாசிசமும் வீ. அரசு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் புதிய கற்கால கற்கோடரி கிடைத்துள்ளது. இவ்வூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் திரு. வி. சண்முகநாதன், தனது வீட்டுத் தோட்டத்தில் வாழைக் கன்றுகளை நடுவதற்காகக் குழி தோண்டியபோது, இக்கற்கோடரி கிடைத்துள்ளது. 125 கிராம் எடை, 6.5 செ.மீ. X 2.5 செ.மீ. 3.6 செ.மீ. X 4 செ.மீ அளவிலான இக்கற்கோடரி, இரும்பு பரவலாகப் புழக்கத்திற்கு வருவதற்கு முன் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட கருவியாகும். இவ்வகையான கோடரிகள் தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்துள்ளன. பல்லாவரம் பகுதியில் மனிதர்கள் பயன்படுத்திய இவ்வகையான பல கற்கருவிகளைக் கண்டுபிடித்த ராபர் புரூஸ் ஃபூட் ‘சென்னை கோடரி’ என…
-
- 0 replies
- 2.1k views
-
-
யாரும் எந்த மதத்தையும் கும்பிடலாம். கும்பிடாமல் நாஸ்திகராகவும் இருக்கலாம். இது அவர் அவர் விருப்பம். ஆனால் கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த பல தமிழர்கள் ஆங்கிலப் பெயர்கள் சூடுவதினால் அவர்களது பெயர்களை வைத்து இவர் தமிழரா அல்லது வேறு இனத்தவனா என்று கேட்கத்தோன்றுகிறது. ஏன் இவர்கள் தமிழ்ப் பெயர்கள் சூடுவதில்லை?
-
- 37 replies
- 18.4k views
-
-
தமிழ்மொழி பிற்போக்கான மொழி, மூவாயிரம் ஆண்டு வரலாற்றுப் பெருமை கொண்ட தமிழில் பெருமை கொள்ளும்படி, மூடநம்பிக்கை இல்லாத ஒரு நூலுமில்லை, தொல்காப்பியர், வள்ளுவர், கம்பர் போன்ற வான்புகழ் கொண்ட தமிழ்ப்புலவர்கள் எல்லாம் ஹிந்துமத வெறியர்கள், ஆரிய அடிவருடிகள், துரோகிகள் என்றெல்லாம் முத்துக்களை உதிர்த்துவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரை எதிர்த்து மனசாட்சி கொண்ட ஒரு தமிழனும் கொதித்து எழவில்லையா என்று இன்றைய இளைஞர்கள், தன்மானத் தமிழர்கள் ஆச்சரியப்படலாம். அப்படிக் கொதித்தெழுந்த பலர் இருந்தனர். ஆனால் அவர்களின் நியாயமான பேச்சுகள் எதுவுமே இன்று கிடைப்பதில்லை. பெருவாரி பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரிப்பதும் இல்லை. சொல்லப் போனால் ஈவேராவின் தமிழ்மொழி மற்றும் தமிழ்மரபு வெறுப்பினைக் கா…
-
- 0 replies
- 1.6k views
-
-
நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... தோழமையோடு இருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் மேல், சிந்திக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது சமீபத்திய ஆய்வு. மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை; காதலிப்பதுமில்லை; பாசம் செலுத்துவதுமில்லை; தோழமையோடு பழகுவதுமில்லை என பொட்டில் அடிப்பதுபோல் சொல்கிறது. 1. மேம்பட்ட விலங்கு என்பதைத் தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது. சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்வது, அபத்தம் என்கிறார்கள் மானிட ஆய்வாளர்கள். 2. ஒருபோதும் நாமாக சிந்திப்பதில்லை. ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மவுனமோதான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. தூண்ட…
-
- 4 replies
- 3.6k views
-
-
இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் மண் யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் பட்டினிச்சாவில் மடிய வைக்கும் இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தை எதிர்த்து தமிழ்நாட்டுத் தமிழ் மாநகர முதல்வர்கள் அனவரும் கட்சி வேறுபாடின்றி ராஜபக்ச தலைமை தாங்கும் மாநாட்டை ஒட்டு மொத்தமாக தவிர்த்துக் கொண்டார்கள். ஆயிரக் கணக்கான தமிழர்கள் ராஜபக்சவின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தி தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனரென இலங்கையின் சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் செய்தி வெளியிட்டதைப் பார்த்துப் பூரித்துப் போன ஈழத்தமிழர்களின் கண்களை உறுத்தியது வாயெல்லாம் பல்லாக மகிந்த ராஜபக்சவுடன் காட்சியளிக்கும் இந்தப் படம். ஈழத்தமிழர்களின் வாழ்வில் அமைதி நிலவ வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு இன்னல் விளைவி…
-
- 88 replies
- 17.5k views
-
-
ஜநாவின் உலக உணவுத்திட்டம் மிகவும் சிறந்த முறையில் பட்டினிச்சாவு பற்றி விளம்பரங்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இன்று தமிழர் தாயகத்தில் பல பகுதிகள் பட்டிணி சாவை எதிர் கொள்ள போகின்றன. நாம் எவ்வாறு எமது உறவுகளின் அவலத்தை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரலாம்? தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை எவ்வாறு பலப்படுத்தலாம்? பந்தி பந்தியாக கட்டுரைகள் எழுதி பயன் இல்லை. இந்த அவசர உலகில் நேரம் பெறுமதி வாய்ந்தது அதை விட பல்வேறு சோலிகளினால் களைப்படைந்த மூளைக்கு பந்தி பந்தியாக வாசித்து விடையங்களை கிரகிப்பதும் கடினம். எனவே எமது அவலங்களை 2...3 நிமிடங்களில் உறைக்கிற மாதிரி கூறும் விளம்பர அணுகுமுறைகளை (paid documentaries) கைய்யாள வேண்டும். பல தொலைக்காட்சி விளம்பரங்களை …
-
- 3 replies
- 2.5k views
-
-
இவ்வாறு இலக்கிய ஆய்வில் வந்து புகுந்த புது முறைகளில் ஒன்றே ஒப்பியல் ஆய்வு. இலக்கியத்துக்கு முன்னதாக ஒப்பியல் நோக்கு மொழியாராய்ச்சியின் சிறப்புப் பண்பாக இருந்தது. அதற்கும் முன்னதாக அறிவியற்றுறைகளின் தனிச்சிறப்புப் பண்பாகவிருந்தது. ஒப்புநோக்கு மொழியாராய்ச்சியை நெறிப்படுத்திய பின்னரே மொழி ஆய்வு, மொழியியல் ஆயிற்று. மொழியியல் அறிவியலின் (Science) அந்தஸ்தைப் பெற்றது. மொழியியலுக்குப் புதுத்தகைமை அளிக்குமுன் மானிடவியல், சமூகவியல், பொருளியல், புவியியல் முதலியவற்றிற்கு அறிவியல் அந்தஸ்தைக் கொடுத்தது ஒப்பியல் ஆய்வேயாகும். சுருங்கக் கூறின் அது சென்றவிடமெல்லாம் சிறப்புச் செய்துள்ளது என்று கூறலாம். ஒரு வகையிற் பார்த்தால் எமது மொழியில் மட்டுமன்றி வேறு பல மொழிகளிலும் ஒப்பியல் ஆய்வானது இலக…
-
- 7 replies
- 6.4k views
-
-
இன்று தினமும் பல பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள். காணமால் போகின்றார்கள். எமது தேசம் மிக மிக பாரிய அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. நாம் இங்கு என்ன செய்கின்றோம். என்ன செய்யப் போகின்றோம். எங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எம்மைச்சுற்றியுள்ளவர்களுக்
-
- 2 replies
- 2.3k views
-
-
அவசரம்: தமிழ் ஊடகங்கள் எப்போ திருந்தப் போகுதுகள்? "A pro-rebel website reported that two Tiger boats successfully went ashore and militants carried out rocket-propelled grenade attacks against the harbour while the suicide bombing was underway." http://news.yahoo.com/s/afp/20061019/ts_af...ck_061019073303 சிறீலங்கா படைத்துறை பேச்சாளர்கள், சிறீலங்கா காவல்துறையினர், சிறீலங்கா அமைச்சர்கள் தான் இதுவரை 5 படகில் வந்தார்கள், 15 பேர் இருந்தார்கள், அவற்றில் 2...3 படகுகள் மோதி வெடித்த தற்கொலைப்படகுகள் என்று சம்பவம் நடந்த சொற்ப மணத்தியாலங்களிற்குள்ளே கதை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். பிபிசி போன்ற ஊடகங்களில் வந்த சில பொதுமக்களின் சாட்சியங்களான படகுகள் வெடித்து சிதறுவதை…
-
- 1 reply
- 2.1k views
-
-
-
விமர்சனம் என்பதன் பொருள் என்ன? விவாதத்திற்கு உரிய விடயம்..... தலைப்பிற்கு உரியபடி உங்களுடைய வாதங்களும் விவாதங்களும் இருக்கட்டும். ஆக்கபுூர்வமாக விமர்சனம் செய்வது வளர்ச்சிக்கு என்று எடுத்துக் கொண்டால் இந்த யாழ்க்களத்தில் ஒரு படைப்பாளிக்கு நாங்கள் சிறந்த விமர்சனத்தால் அவர்களை வளர்க்கிறோமா?
-
-
- 36 replies
- 14.5k views
- 1 follower
-
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது? பேராசிரியர் சோ. சந்திரசேகரன் இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும். இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் …
-
-
- 5 replies
- 14.3k views
-
-
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் கலாநிதி க. கைலாசபதி பகுதி 1 --------------------------------------------------- பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் கலாநிதி க. கைலாசபதி -------------------------------- கையுறை வழிவழிவரும் கீழைத்தேயக் கல்வியையும் மேலைநாட்டு ஆராய்ச்சி முறைகளையுமிணைத்து அமைதி கண்டு விளங்கிய ஆசான் கலாநிதி. க.கணபதிப்பிள்ளை அவர்களுக்கு இச்சிறு நூல் கையுறை. --------------------------------------- முதல் பதிப்பு முகவுரை இந்நூலில் இடம் பெறும் கட்டுரைகள் பல்வேறு காலங்களில் எழுதப்பட்டவை: தனித்தனிக் கட்டுரைகளாக வெளி வந்தவை. எனினும் அவற்றிற்கிடையே ஓர் ஒற்றுமை நிலவுகிறது என எண்ணுகிறேன். பொருளாதார நிலை என்னும் அடி…
-
- 9 replies
- 8.2k views
-
-
நேற்று - இன்று - நாளை நேற்று 1982ம் வருடம் ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டிருக்கும் வருடம். ஈரானை ஒழித்துக்கட்ட அமேரிக்கா ஈராக்கிற்கு வேண்டிய அத்தனை கெமிகல் மற்றும் ராணுவ ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது. இச்சூழலில் சதாம் ஹுசைன் துஜைல் எனும் இடத்திற்கு தனது புடை சூழ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது அவரது வாகனத்தின் மீது துப்பாக்கி குண்டுகளால் அப்பகுதியில் வாழும் ஒரு சில ஷியாக்களால் தாக்கப்படுகிறார். திடீரென தாக்கப்பட்டாலும் தகுந்த பாதுகாப்புடன் வந்த சதாமின் காவலாளிகள் திருப்பித் தாக்கினர். உடனடியாக சதாமின் நேஷனல் கார்டு பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டருடன் வந்து துஜைலில் இருந்த மக்களை தாக்க, 150க்கும் மேற்பட்…
-
- 7 replies
- 3.1k views
-
-
இந்து என்ற சொல்லானது, அச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் உட்படப் பெரும்பான்மையினருக்கு, உண்மையில், பெரும் குழப்பத்தைத்தான்; ஏற்படுத்தி வருகின்றது. இந்தச் சொல்லானது இன்று இந்தியா எனக் கூறப்படும் தரைப் பகுதி மக்களால் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதா, அப்படிப் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தால், அது என்ன பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்து என்ற சொல்லானது ஏதாவது சமயத்தைக் குறிக்கப் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதா, பயன்படுத்தப்பட்டிருந்தால் அந்தச் சமயம் எந்தக் கடவுளை முழுமுதற் கடவுளாகக் கொண்டிருந்தது, அதன் சிந்தாந்தம் என்ன, இந்து என்ற சொல்லானது பண்டைக் காலத்தில் ஒரு சமயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்திராவிட்டால், அச் சொல்லானது சமயத்தைக…
-
- 40 replies
- 24.3k views
-