எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
தமிழீழ மக்களின் உயிர்த்துடிப்பு எங்கள் கிளி பாதர்! வன்னி மக்கள் அனைவராலும் கிளி பாதர் என செல்லமாக அழைக்கப்படும் கருணாரட்ணம் அடிகளார் மல்லாவி வவுனிக்குளம் , வன்னிவிளாங்குளம் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு இன்றுடன் (20.04.2008) 12வருடங்கள் நிறைவடைகின்றது. மிகுந்த வேதனை ஒருபுறம் இருந்தாலும் அவரின் பணிகளை நினைக்கும் போது அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய சூழலில் நாம் இன்று இருக்கிறோம். அவர் ஒரு பங்கு தந்தையாக குறிப்பிட்ட கிறிஸ்தவ மக்களுக்கு மட்டும் அல்ல வன்னி மக்களின் ஒட்டு மொத்த தந்தையாகவும் காத்து நின்றார். அத்துடன் மண்ணின் விடுதலைக்கும் மக்களின் விடுதலைக்கும் மிகப்பெரும் பங்காற்றினார். போர் நெருக்…
-
- 1 reply
- 970 views
-
-
-
தமிழீழ மக்களிற்கு அளப்பரிய சேவையாற்றிய மருத்துவர் அருள் காலமானார் 226 Views முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்டவரும் தமிழீழ மருத்துவப்பிரிவில் மருத்துவராக முள்ளிவாய்க்கால் இறுதிக்காலம் வரை திறம்படச் செயற்பட்டவரும் தமிழீழ நிர்வாகசேவை வவுனியா மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்த திரு.ஐதீந்திரா(அருள்/றோசான்) அவர்கள் காலமாகியுள்ளார். அவருக்கு இலக்கு செய்தி நிறுவனம் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், மருத்துவர் அருள் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. https://www.ilakku.org/?p=47506
-
- 7 replies
- 1.1k views
-
-
உலக வரலாற்றில் ஒரு பெண் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த வரலாறு அன்னை பூபதிக்கு மட்டுமே உண்டு! – பா.அரியநேத்திரன் 119 Views அன்னை பூபதியின் 33ஆம் ஆண்டு நினைவு 19/04/2021 இன்றாகும். ஆம்! கடந்த 33, வருடங்களுக்கு முன் வடக்கு, கிழக்கில் ஒரு அன்னிய நாட்டு படை எம்மண்ணில் நிலை கொண்டிருந்த காலம். ஆம்! இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 யூலை 29ஆம் திகதி இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு 13ஆவது அரசியல் அமைப்பு மூலம் மாகாணசபை சட்டமூலம் அறிமுகமான காலம். அந்தக்காலத்தில் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகள் எங்கும் முகாம் அமைத்து, வடக்கு, கிழக்கி…
-
- 0 replies
- 668 views
-
-
இச்செய்தி வெளியான திகதி: February 01, 2009 -------------------------------------------------------------------- முல்லைத்தீவு முற்றுகைச் சமர் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில் கடற்புலிகளின் தாக்குதல்களும், அவர்கள் பயன்படுத்தும் தாக்குதல் படகுகளின் தொழில்நுட்பமும் கடற்படைக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முல்லைதீவுக்கு வடக்கேயுள்ள சுண்டிக்குளம் கடற்பரப்பில், கடற்புலிகளின் கரும்புலித்தாக்குதல் படகு ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அதன் மீது ஒன்று குவிக்கப்பட்ட தெறுவேயத்(Cannon) தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து அந்தக் கரும்புலித் தாக்குதல் படகு வெடித்துச் சிதறியது. அதிலி…
-
- 0 replies
- 632 views
-
-
தாக்குதல் நடந்த திகதி: பெப்ரவரி 1, 2009 வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மூலம் இரண்டு கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது தரைக்கரும்புலி லெப். கேணல் குயில்வண்ணன் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் சிவராஜா, தரைக்கரும்புலி மேஜர் புலிவேந்த…
-
- 0 replies
- 744 views
-
-
இச்செய்தி வெளியான நாள்: February 17, 2009 முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு விரைவுத் தாக்குதல் படகை கடந்த வாரம் மூழ்கடித்திருக்கிறார்கள். கடந்த 8 ஆம் திகதி முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் -ஆழ்கடற் பரப்பில் இந்தத் தாக்குதல நடைபெற்றிருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் 30 ஆம் திகதி முல்லைத்தீவுக் கடலில் மற்றொரு தாக்குதலில் கடற்படையினரின் ‘அரோ’ ரகத்தைச் சேர்ந்த இரண்டு கரையோர சுற்றுக்காவல் படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன. அதற்கு முன்பாக கடந்த 19 ஆம் திகதிஇ கடற்படையின் P-434 இலக்க விரைவுத் தாக்குதல் படகு கடற் கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் குறுகிய காலத்துக்குள் நடந்திருப்பவை. கடற்புலி…
-
- 0 replies
- 721 views
-
-
செய்தி வெளியான திகதி: February 14, 2009 முல்லைத்தீவை சுற்றி வியூகம் அமைத்துள்ள படைத்தரப்பு கடலிலும் சுண்டிக்குளத்தில் இருந்து முல்லைத்தீவு வரையிலும் 25 மேற்பட்ட கடற்படை கப்பல்களையும், படகுகளையும் நிறுத்தியுள்ளது. இந்த படகு தொகுதியில் விரைவு டோராப்படகுகள், ஆழ்கடல் சுற்றுக்காவல் கப்பல்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சிறப்பு படகு சதளம் (SPECIAL BOAT SQARDRON), துரித செயல் சதளம்(RAPID ACTION SQUARDON) ஆகியவையும் அங்கு நகர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் டி கே பி திஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் கடற்படை வரலாற்றில் இது மிகப்பெரும் சுற்றிவழைப்பாகும் எனவும் இதற்கு வடபிராந்திய மற்றும் கிழக்கு பிராந்திய கடற்படை வளங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள…
-
- 0 replies
- 897 views
-
-
இரவு 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் இருந்து புறப்பட்ட விமானங்கள் ஏறத்தாள ஒரு மணிநேரத்தின் பின்னர் கொழும்பை அடையும் வரையிலும் அவற்றின் பாதைகளை கண்டறிந்து தாக்குவதற்கு சிறீலங்கா வான்படையினால் முடியாது போனதும், பெரும் சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. வான்புலிகளின் விமானங்கள் 300 அடி உயரத்திலும் குறைவான உயரத்தில் பறந்ததனால் வான்படை விமானங்களால் அவற்றை தாக்கமுடியவில்லை என படைத்தரப்பு கூறிவருகின்றது. வான்புலிகளின் இந்த உத்திகளால் வான்படையினாரின் ராடார் திரைகளிலும் விமானங்கள் தொடர்ச்சியாக அவதானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு வான்பரப்பை அடைந்த விமானங்களில் ஒன்று வான்படை தலைமையகத்தையும், மற்றயது கட்டுநாயக்கா வான்படை தளத்தினையும் தாக்க முனைந்துள்ளன. …
-
- 0 replies
- 872 views
-
-
“இரத்தத்தின் கதை”- போர்க்கால அனுபவக்குறிப்புகள்-கதை 01-அலெக்ஸ் பரந்தாமன் இரத்தத்தின் கதையை சொல்ல முன்பு : வன்னிப்போரியல் வாழ்க்கைக்குள் எவருமே எதிர்பார்த்திருக்காத திருப்பங்களும், அவலங்களும் நடந்து முடிந்தன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள் அவை. அந்த அனுபவங்களானது சந்தோஷப்படுதல் ஒன்றைத்தவிர, மற்றைய எல்லாவிதமான உணர்வுகளையும் உள்வாங்கி, மீண்டெழுந்தனவாக அமைந்தன. அந்த மீண்டெழுதலோடு வாழ்வின் இன்னொருபக்கத்தை அனுபவங்கள் வெளிக்காட்டி நின்றன. சக மனிதர்களைப் பற்றித் தெரியவும் அவர்களது குணவியல்புகள் மற்றும் குரோதச் செயற்பாடுகள் பற்றியும் அறியச் செய்தன. வன்னிப்போர் முடிவடைந்து பல வருடங்களாகி விட்டன. இந்தப்போர் மனப்புரிதலுள்ளவர்களுக்கு மட்டுமன்றி, …
-
- 55 replies
- 9.3k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே 18 இல் நடைபெறும் – பொதுக் கட்டமைப்பு அறிவிப்பு 69 Views முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் நிகழ்வு வரும் மே 18ஆம் திகதி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்யும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “முள்ளிவாய்க்கால், தமிழினப் படுகொலை நினைவேந்தல் நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18ஆம் திகதியன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முற்பகல் 10.30 மணிக்கு, தமிழினப் படுகொலை, நினைவேந்தல் முற்றமான முள்ளிவாய்க் காலில் ஒழுங்கமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வ…
-
- 0 replies
- 655 views
-
-
1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமருக்குப் பின் பல படையணிகள் மற்றும் துறைசார் அணிகள் உருவாக்கப்பட்டன .அதில் ஒன்று தான் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக மாற்றம் பெற்றது.கடற்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் (1991) பிற்பகுதியில் கிளாலிக் கடல்நீரேரியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நீருந்துவிசைப்படகு மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிடப்பட்டது . அக்காலப்பகுதியில்தான் கடற்புலிகள் வளர்ந்துகொண்டிருந்தநேரம்.அந்த நேரத்தில் கடற்புலிகளிடம் ஆயுதபலமோ ஆட்பலமோ படகுகளின் பலமோ போதியளவு இருக்கவில்லை. இருந்தாலும் பிருந்தன்மாஸ்ரின் ராடர்மூலமான வேவுத்தகவல்களின் அடிப்படையில் மேஐர் மூர்த்திமாஸ்ரரின் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கடற்கண்ணிவெட…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
இவருக்கு தமிழ் நாட்டுக்கு வரும் போது தமிழ் தெரியாதாம் , தமிழ் நாட்டுக்கு வந்த பிறக்கு தான் தமிழ் கற்று கொண்டேன் என்று வேறு காணொளியில் சொல்லி இருந்தார்........... எம்மவர்களின் தாக்குதல்களை உண்மையும் நேர்மையுமாய் ஆதாரத்தோடு அப்படியே எடுத்து சொல்லுகிறார்............ஹிந்தி காரனுக்கு எம் போராட்ட உணர்வு எப்படி வந்தது..........இது எனது சிறு சந்தேகம்............ கோட்டை தாக்குதலுக்கு எம்மவர்கள் இவளவு தியாகம் செய்து இருக்கினம் என்றது இந்த காணொளிய பார்த்து தான் தெரிந்து கொண்டேன்...........எல்லாம் காற்றோடு காற்றாக போய் விட்டது கோட்டை தாக்குதலில் வீரச்சாவடைந்த அனைத்து போராளிகளுக்கும் வீர வணக்கம் 🙏🙏🙏
-
- 2 replies
- 705 views
-
-
நீ சென்ற இடமெல்லாம் ஒளியானதே! தமிழ் வரலாறு உலகெங்கும் பதிவானதே! – நவீனன் 37 Views (சென்றவாரத் தொடர்ச்சி) பரதன் அண்ணா எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவிற்கு கரிசனையும் உடையவர். அது போராளிகளாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி அதற்கு சில உதாரணங்களைக் கூறலாம். எனக்கு நான்கைந்து நாட்களாக உடம்பு வலியுடன் கூடிய காய்ச்சல் இருந்தது. சாதாரண காய்ச்சல் என்று பனடோலைப் போட்டுவிட்டு எனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். நாளாக நாளாக குறையவில்லை. என்னைப் பார்த்த பரதன் அண்ணா என்ன நவீனத்தார் ஒரு மாதிரியாக இருக்கிறாய். உடம்பு சரியில்லையோ என்று கேட்டார். காய்ச்சல் போலிருக்கிறது என்றேன். வா ஆஸ்பத்திரிக்குப் போவோம் என்றார். இ…
-
- 0 replies
- 483 views
-
-
யாழ் மாநகர சபை துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை
-
- 0 replies
- 647 views
-
-
நான் எனது கையால் கணவரை ஒப்படைத்தேன் எப்படி மரணச் சான்றிதழ் பெற முடியும், கதறும் முன்னாள் போராளி யுத்தத்தின் வலிகளை சுமந்துகொண்டு இன்றும் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றன. அந்த வதையில்,ஒட்டுசுட்டான் கொரணி என்ற கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியான முல்லைத்தீவு ,முத்தையன்கட்டு பகுதியில் வசிக்கும் சச்சிதானந்தம் பத்மரஞ்சினி தனது துயரங்களை கண்ணீரோடு இவ்வாறு பகிர்ந்துக்கொண்டுள்ளார். 2009ம் ஆண்டு ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்திடம் எனது கணவரை ஒப்படைத்தேன். விசாரித்து விட்டு அனுப்புகின்றோம் என்று கூறி எங்களை முதலில் அனுப்பிவிட்டனர். ஆனால் இன்று வரை காணவில்லை. விசாரணைக்கு என்னை அழைத்து மரணச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தனர். நான் எ…
-
- 0 replies
- 694 views
-
-
ஆனந்தபுரம் எதிரிகளுக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே தமிழரின் வீரத்தை உணர்த்திய இடம்! - சிவசக்தி -ஈழத்தமிழரின் வீரம்பதித்த ஆனந்தபுரம்- ' ஆனந்தபுரத்திலை ஆமி பொக்ஸ் அடிச்சிட்டானாம்... எங்கடை கன தளபதியளும் போராளியளும் அதுக்குள்ளையாம்...' ' உப்பிடி எத்தினை பொக்ஸை உடைச்சுவந்த எங்கடை பிள்ளையள்... எப்பிடியும் உடைச்சுப்போட்டு வந்துவிடுவினம்....... ' தங்களுடைய தலைகளை இலக்குவைத்து ஏவப்பட்டுக்கொண்டிருந்த குண்டுகளை பொருட்படுத்தாது, தமது காவலர்களாக நிற்கும் போராளிகளைப்பற்றிய தவிப்பும் ஏக்கமும் சுமந்திருந்தார்கள் மக்கள். தமிழர்களின் இனஎழுச்சியை எக்காலத்திலும் அடக்கி ஒடுக்கிவருகிறது சிங்களப் பேரினவாதம். உரிமைகளை மறுதலித்துவரும் இந்த சிங்கள இனவாதத்தின் கோரமுகம்,…
-
- 0 replies
- 640 views
-
-
மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு "நாட்டுப்பற்றாளர்" என தமிழீழ விடுதலைப் புலிகள் மதிப்பளிப்பு. 17.03.2021 மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் அடைக்கலமும் ஆதரவும் தந்த புனிதவதி அம்மா அவர்கள், 07.03.2021 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டம் வளர்ச்சியுறுவதற்கும் எழுச்சியடைவதற்கும் தொடக்க காலத்தில் தோள்கொடுத்தவர்கள் ஏராளம். இவர்களது தன்னலமற்ற துணிச்சலான செயற்பாடுகள் ஊடாகவே எமது போராட்டம் முன்னகர்ந்தது. இந்தத் தன்னலமற்ற செயற்பாட்டாளர்களில் ஒருவராக போராளிகளால் “வாசன் அம்மா’’…
-
- 2 replies
- 1.2k views
-
-
தாயகத்தில் நினைவு கூரப்பட்ட தந்தை செல்வாவின் 123வது பிறந்த நாள் நிகழ்வுகள் 71 Views இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123வது பிறந்த தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா பூங்காவில் உள்ள அன்னாரது சிலையருகில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர…
-
- 0 replies
- 457 views
-
-
‘கிழக்கிலங்கை முஸ்லிம் ஆளுமைக்கு வித்திட்ட சுவாமி விபுலானந்த அடிகளார்’. சாதி மத பேத மற்ற மகானாக வாழ்ந்த ஒரு அற்புத ஞானி- விபுலானந்தர் பற்றிய ஆவணப் படம் சொல்லும் பல அரிய உண்மைகள் March 29, 2021 — இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் — ‘அரங்கம்’ அமைப்பு சார்பில் எடுக்கப் பட்டிருக்கும் ’முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்’ என்ற ஆவணப் படத்தை இன்றைய இளைய தலைமுறை கட்டாயம் பார்ப்பதற்குப் பல உதாரணங்களை இங்கு முன்வைக்கலாம். இந்தச் சிறு கட்டுரையில், சாதி மத பேதமின்றி, யாவருக்கும் கல்வியறிவைக் கொடுக்கவேண்டுமென்ற அவரது கனவால் இன்ற கிழக்கிலங்கை மட்டுமல்ல இலங்கை பூராவும் முஸ்லிம் மக்கள் கல்வியில் முன்னேறியிருப்பதற்கு அவர் செய்த கைங்கரியம் பற்றி ஒரு முஸ்லிம் எழுத்தாளர்…
-
- 0 replies
- 1k views
-
-
வரலாற்றுப் படைப்புக்களைப் பாதுகாப்போம் – தமிழீழ விடுதலைப் புலிகள்! AdminMarch 29, 2021 தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தியாகங்களையும் எழுச்சிகளையும் வெளிப்படுத்தியஉணர்ச்சிமிகுபடைப்புக்களில் மாற்றம்செய்யும் செயல் என்பது எமது போராட்ட வரலாற்றை அழிக்கும் செயலுக்கு ஒப்பானது.எமது தாயகவிடுதலைப்போராட்டம் செயற்கரிய உன்னத உயரீகங்கள் ஊடாக இந்த உலகம் வியந்துபோகும் அளவிற்குப் பெருவளர்ச்சி கண்டுள்ளது. இப்பெருவளர்ச்சியின் வல்லமைகளாய் திகழ்பவர்கள் மாவீரர்கள். தாயகத்தினதும் தாயக மக்களினதும் விடிவிற்காகத் தங்களின் இன்னுயிர்களைக் கொடையாக்கிச் சென்ற இம்மாவீரர்கள் எமது தேசவிடுதலை வரலாற்றின் அழியாதபடிக்கற்கள். 2009 மே 18இல் எமது ஆயுதப்போர் அமை…
-
- 0 replies
- 753 views
-
-
26.03.2007 அன்று சிங்களத்தை அதிரவைத்த புலிகளின் முதலாவது வான் தாக்குதல் ...! வான் புலிகளின் அறிமுகமும் முதலாவது வான் தாக்குதலும்26.03.2007 தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படை பலத்தில் தரைப்படை கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக "வான்படை" என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள். இந்நாளின் (26.03.2007) அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான வான் தாக்குதலை நிகழ்தினர். வான்படையின் பிறப்பு புலிகளின் புதிய போர்ப்பரிமாணம்.! கட்டுநாயக்கா சிங்கள வான்தளம் மீது வெற்றிகரமான ஒரு மரபுவழிக் குண்டு வீச்சுத் தாக்குதலுடன் தமது வான்படையின் பிறப்பைப் புலிகள்…
-
- 0 replies
- 883 views
-
-
வவுனியாவின் வளம் குளங்களே! – ஓர் வரலாற்றுப் பார்வை! சுரேஸ்குமார் சஞ்சுதா. March 23, 2021 அண்மையில் நான் தமிழ்நிதி அருணா செல்லத்துரை அவர்களின் நூல் அறிமுகவிழாவிற்கு சென்றிருந்த வேளை, வவுனியாவின் வளம் குளம் பற்றி மேடையில் பேசினார். அவர் அப்பேச்சை எடுத்ததற்கு காரணம் ஒரு சில சஞ்சிகைகள் மற்றும் நூல்;களில் வவுனியாவின் வளம் காடு என குறிப்பிடப்பட்டிருந்தமையாலாகும்;. ஆம் உண்மையில் வவுனியாவின் வளம் காடல்ல. வவுனியாவைச் சுற்றியுள்ள குளங்களே. இங்குள்ள குள வளமானது வரலாற்று ரீதியாக மிகமுக்கியத்துவமானது. இன்றும் கூட வவுனியா குளங்களை நம்பியே பல குடும்பங்களின் வாழ்வாதாரம் காணப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. வவுனியாவில் குளங்கள் இல்லாத கிராமங்களே இல்லை எனலாம். …
-
- 0 replies
- 725 views
-
-
அதிகரித்த தொலைபேசிப் பாவனையும் மறைக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் 61 Views இன்று எம் அனைவரின் மனங்களிலும் எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் நினைவிருக்கின்றனவா என்பது தெரியவில்லை ஆனால், “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ” என்ற பாரதியின் பாடல் வரிகள் நிச்சயமாக நினைவில் இருக்கும். காலத்தால் மறைக்கப்பட்ட எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்று ஒரு தொலைபேசிக்குள் அடங்கி விட்டது. காலை எழுந்ததில் இருந்து இரவு தூக்கத்தை கூட மறந்து தொலைபேசி விளையாட்டுக்களில் மூழ்கிப்போகின்றனர். விடுமுறை தினங்களிலும், மாலை நேரங்களில் தெரு ஓரங்களிலும் வீட்டு முற்றங்களிலும், திண்ணைகளிலும், நண்பர் வீடுகளிலும் பெரியவர்…
-
- 0 replies
- 492 views
-
-
கள்ளும் சாராயமும் … March 13, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”கள்ளுக் குடித்தால் காசு எங்களிட்ட இருக்கும். சாராயம் குடித்தால் காசு வெளியில போயிடும்” பொருளாதாரம் தெரிந்த உள்ளுர் அன்பரின் வாக்குமூலம் இது. உண்மைதான் கள்ளுக்குக் கொடுக்கும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்தும். சாராயத்துக்குக் கொடுக்கும் காசு பணத்தை வேறு ஒருவரது கைகளைச் சென்றடைய வைக்கும். கள்ளுத் தவறணைகளது மூடுவிழா பரவலாகவே நடைபெறுகின்றது. இயற்கை அன்னை எமக்குத் தந்த உற்சாகபானம் கள்ளைக் குடிப்பதைவிட இரசாயன நீராக அற்கஹோல் சேர்க்கப்பட்டு வரும் மதுபானத்தை விரும்புவோர்தான் இன்று அதிகம். இன்றைய இளைய தலைமுறை கள்ளுக் குடிப்பதனை நாகரிகமாகக் கருதாமல் பியர்…
-
- 10 replies
- 2.5k views
-