அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
குதிரையை வண்டிக்கு பின்னால் பூட்டிய தமிழ் அரசியலும் குதிரை வண்டிக்கு முன்னால் பூட்டிய சிங்கள அரசியலும் - மு. திருநாவுக்கரசு September 4, 2020 மு. திருநாவுக்கரசு பாம்பை வாலில் பிடித்து விளையாட முனையும் பாலகனை போலவும், வானத்தில் பறக்கும் விமானத்தை பார்த்து அதைத் தன்னால் ஓட்ட முடியும் என்று கூறும் 3 வயது சிறுவனைப் போலவும் அரசியல் பிரகடனங்களை செய்யும் தமிழ் தலைவர்களின் அரசியல் உள்ளது. அளவால் மிகவும் பெரிய சிங்கள பௌத்த இனம் அறிவியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் செயல்முறை ரீதியாகவும் தேர்தல் மூலம் ஒன்றுதிரண்ட பெரும் அசுர பலம் கொண்ட சக்தியாய் உருப்பெற்றிருக்கும் போது , வளம் பொருந்திய ஆனால் அளவால் சிறிய தமிழினம் துண்டுபட்டு , சிதறுண்டு எதிரியின் காலடியில் …
-
- 5 replies
- 744 views
-
-
வைரஸ் தொற்றுக்குள்ளும் ஓயாத வாட்கள் ? நிலாந்தன்! July 11, 2021 அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு இசையமைத்த பாடல்களின் தரத்துக்கு அது இல்லை. ஏன் இப்பொழுது உன்னதமான பாடல்களை எங்களால் உருவாக்க முடியவில்லை” என்று கேட்டேன். 1980களில் 90களில் நாடகங்களுக்கும் அரசியல் தேவைகளுக்கும் பாடல்களை உருவாக்கிய பலரும் இசையமைப்பாளர்களை உறங்க விடுவதில்லை. அவர்கள் உருவாக்கித்தரும் மெட்டுக்களை எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்வதுமில்லை. இது போதாது இது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு தொடர்ச்சியாக நச்சரித்து ஒரு பாடல் அதன் உன்னதமான உ…
-
- 0 replies
- 744 views
-
-
கச்சத்தீவு : புலிகள் இருக்கும்வரை இலங்கை பயந்தது | வரதராஜன் Ex Police Officer https://m.youtube.com/watch?v=2AYuQtm63bU
-
- 0 replies
- 744 views
-
-
மே 2009 , இனப்படுகொலை முடிந்த கையோடு, இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. பொதுச் செயலாளர் பாண் கி மூன் அவர்கள் என்ன சொன்னார்?. சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஒன்று தேவை என்றரா? இல்லவேயில்லை. நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குங்கள் என்று கூறினார். நடந்தது நல்லபடியாக நடந்தது என்பதுபோல்தான் அவரின் ஊடக நேர்காணல்கள் அமைந்திருந்தன. வவுனியா வதை முகாம்களுக்கும் சென்று பார்வையிட்ட மூன், அரசை பாராட்டிவிட்டே சென்றார். சர்வதேச மனித உரிமைச் சங்கங்களின் தொல்லைதாங்க முடியாமல், மூவரடங்கிய நிபுணர் குழுவொன்றை வழமைபோல் அமைத்து நீண்ட அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார். அதனை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்தார் பொதுச் செயலாளர் பாண் கி மூன். அறி…
-
- 0 replies
- 744 views
-
-
தேவை ஒரு புதுப்பாதை – கலாநிதி அமீரலி கலாநிதி அமீரலி எழுபது ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழர், முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனங்களிரண்டும் இரண்டு பாதைகள் வழியாக நடந்துசென்று இன்று திசைதவறி நடுச்சந்தியில் நிற்கின்றனர். தமிழினம் தனக்கெனத் தனிப்பட்ட கட்சிகளை அமைத்து பெரும்பான்மை இனத்துடன் போராடித் தனது உரிமைகளை வென்று அதன் தனித்துவத்தையும் காப்பாற்றலாமென முயன்றது. அதற்காக ஆயுதமேந்திப் போராடியும் இறுதியில் தோல்வியடைந்து இருந்ததையும் இழந்து, இனியென்ன செய்வதென்று தெரியாத ஒரு குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம்களோ தமிழருடன் இணையாது ஆட்சிக்குவரும் கட்சி எதுவாகினும் அதனுடன் சேர்ந்து சலு…
-
- 0 replies
- 743 views
-
-
தமிழ் மக்களும் இலங்கையின் சுதந்திர தினமும்…. February 4, 2019 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… இன்று இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாயாக அனுஷ்டிக்க வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியிருக்கிறது. தமது பூர்வீக நிலத்திற்காக 705 நாட்களை கடந்து, இராணுவ முகாமின் முன்னால் போராடும் கேப்பாபுலவு மக்களும் இன்றைய நாள் தமது துக்க தினம் என்றும் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இலங்கையின் சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கு – தமிழ் மக்கள் ஏன் புறக்கணிக்கின்றனர்? இலங்கையின் யதார்த்தத்தையும், பிரச்சினையின் உண்மையான காரணங்களுக்கும் இந்தக் கேள்வியே பதில் அளிக்கிறது. இன்று இலங்கையின் சுதந்திர தி…
-
- 0 replies
- 743 views
-
-
அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா? அதிரதன் / அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், “அத்தனை குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகக் குடியேற்றப்படும்போதே, எங்களது போராட்டம் முடிவுக்கு வரும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தொடங்கப்பட்ட இவர்களின் நில மீட்புப் போராட்டம், நேற்றுடன் (03) 21 நாளை எட்டியபோதும், “இதுவரையில் யார் வந்தும், தீர்க்கமான முடிவையோ, தீர்வையோ வழங்கவில்லை” என்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, பிர…
-
- 0 replies
- 743 views
-
-
ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை உலக அரசியல் நடப்புகள் பலவற்றுக்கு, தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லை. அதையும் மீறிச் சொல்லப்படும் விளக்கங்கள், தர்க்கரீதியானவை அல்ல. அத்தகைய விளக்கங்கள் சொல்லப்படுவதைவிட, சொல்லாமல் விடுவது அதிகம். தற்போதைய உலக அரசியலில், அரசியல் நடத்தை என்பது, வலிமையால் தன்னை நிலைநிறுத்த முனைவது. வலிமையால் நிறுவமுடியாத போது, அவதூறும் பொய்யும் புனைகதையும் உண்மைகள் போல் சொல்லப்படுகின்றன. இதனாலேயே ‘பொய்ச் செய்தி’களின் காலத்தில், நாம் வாழத் தலைப்பட்டிருக்கிறோம். ரஷ்ய இராஜதந்திரிகளை, பல்வேறு மேற்குலக நாடுகள் வெளியேற்றியுள்ள நிலையில்,…
-
- 1 reply
- 743 views
-
-
கல்வித் தகைமையும் அரசியலும் என்.கே. அஷோக்பரன் அரசியலில் மாற்றம் வேண்டும் என்போர் பலரினதும் எண்ணப்பகிரல், ‘படிச்சவன் அரசியலுக்கு வரவேண்டும்’ என்பதாக இருக்கிறது. ‘படிச்சவன்’ என்ற சொற்பதத்தின் பயன்பாடு, கொஞ்சம் மேலோட்டமானது. ஆனால், பெரும்பாலும் இந்தச் சொல் ஏதோ ஒரு துறையில் கற்று, பட்டம் பெற்று, குறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளமையைச் சுட்டியே, பொதுவில் பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம். தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதி, படித்துப் பட்டம் பெற்ற ஒருவராக இருக்க வேண்டும் என்ற அவா, மக்களிடையே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒருவகையில், ஏலவே உள்ள அரசியல்வாதிகளின் நடத்தைகளும் நடவடிக்கைகளும், முக்கிய காரணமாக இருக்கிறது. இத்தகைய மோசமான அரசிய…
-
- 0 replies
- 743 views
-
-
இலங்கையின் பெரும் சாபக்கேடு: தீர்க்கதரிசனமுள்ள அரசியல்வாதிகள் இல்லாமை என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan 1965 இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததைத் தொடர்ந்து, லீ குவான் யூ சிங்கப்பூர் என்ற குட்டித் தீவுத் தேசத்தை நிறுவும் பணியைத் தொடங்கினார். ஒரே ஒரு தலைமுறையில், லீ குவான் யூ, அந்தக் குட்டித் தீவின் மக்களை ஒன்று திரட்டி, ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், குடியேறியவர்களை அவர்களின் பூர்வீகம் பொருட்படுத்தாமல் வரவேற்கவும் தனது அமைச்சரவை கூட்டாளிகளை வழிநடத்துவதன் மூலம் சிங்கப்பூரை ‘மூன்றாம் உலக’ நாட்டிலிருந்து ‘முதல் உலக’ உலகளாவிய பெருநகரமாக மாற்றினார். இன்று உலகளவின் தனிநபர் தலா வருமானம் உயர்ந்த முதல் ஐந்து நாடுகள…
-
- 3 replies
- 743 views
-
-
ஈழக்கனவுக்கு எதிரான இரண்டாவது யுத்தம் [ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2016, 04:12.44 PM GMT ] போரின் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், இவர்களின் ஈழக்கனவை அழிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார். 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பு போரில் தோற்கடிக்கப்பட்டது. எமது படைகளிடம் போரில், தோல்வி கண்ட போதும், போர்க்களத்தில் இருந்த பயங்கரவாதிகளின் உயிர்கள் மடிந்த போதும், ஈழத்துக்கான கனவைக் காணும் புலிகளின் கொள்கை தோல்வியடையவில்லை என்பதை நான் உணர்கின்றேன். புலிகளின் தனி ஈழத்துக்கான கொள்கையை துப்பாக்கிக் குண்டுகள், எறிகணைகள் மூலம் தோல…
-
- 1 reply
- 743 views
-
-
மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள் Veeragathy Thanabalasingham on January 25, 2023 Photo, AP Photo/Eranga Jayawardena, OUTLOOK INDIA இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் றொமிலா தாப்பர் எழுதிய ‘இந்து – முஸ்லிம் உறவுகள் குறித்து வரலாறு உண்மையில் எமக்கு சொல்வது என்ன?’ என்ற தலைப்பிலான அருமையான கட்டுரையொன்றை ‘த வயர்’ வலைத்தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. நல்ல கட்டுரைகள் என்றால் அவற்றை நான் அனேகமாக ‘வட்ஸ்அப்’ மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது வழக்கம். இந்தக் கட்டுரையையும் அவ்வாறே பலருக்கு அனுப்பினேன். அவர்களில் மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர் லக்ஸ்மன் குணசேகரவும் ஒருவர். அதை வாசித்த உடனடியாகவே எனக்கு அவர்…
-
- 0 replies
- 742 views
-
-
புதிய ஆணையைப் பெறுவது தவிர்க்கமுடியாத தேவை! Photo, THE AUSTRALIAN பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் தற்போதைக்கு பயனளிக்கும் அறிகுறிளைக் காட்டுகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கவிருப்பது உறுதியாகியிருக்கின்றது. அதன் முதல்கட்ட கடன்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. இது தற்போதைய பொருளாதார இடர்பாடுகளை சமாளிக்க வேறு கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உதவும். பழைய கடன்களையும் புதிய கடன்களையும் திருப்பிச்செலுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை உறுதிசெய்வதே சவாலாக அமையும். இதற்காக அரசாங்கம் அதன் புதிய வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இந்தக் கொள்கை வரிகள் இல்லாமலேயே …
-
- 0 replies
- 742 views
-
-
தமிழ்ச் சிந்தனைக் குழாம்... - நிலாந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பிரதான கட்சியும் பெரிய கட்சியுமான தமிழரசுக் கட்சியில் சில மூத்த முன்னாள் பேராசிரியர்கள் உண்டு. தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசியலறிஞர்கள். ஆய்வாளர்கள், விமர்சகர்கள் போன்றோருடன் தொடர்பில் இருக்கின்றார்கள். இவைதவிர தமிழ் புலமைப் பரப்பிலும் ஊடகப் பரப்பிலும் ரி.என்.ஏ.க்கு ஆதரவான பலர் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு ஒரு சிந்தனைக் குழாம் - திங் ராங் - (think tank) எனப்படும் அளவிற்கு ஒரு அமைப்பாக காணப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போலவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சில ஆய்வாளர்கள், அறிவியல் ஒழுக்கத்துக…
-
- 0 replies
- 742 views
-
-
இப்போது என்ன தேவை? செல்வரட்னம் சிறிதரன் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட உணர்வுகள் காணப்படுகின்றன. வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் சக்தி வாய்ந்த அரசியல் தலைமையாகத் திகழ்கின்றது. கூட்டமைப்பிலேயே கருத்து வேற்றுமைகளும் முரண்பட்ட தன்மைகளும் போக்குகளும்கூட காணப்படுகின்றன. இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிளவின் விளிம்பில் இருப்பதான தோற்றம் காணப்படுவதை மறுப்பதற்கில்லை. அதேநேரம் இலங்கைத் தழிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், டெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சிகளை உள்ளடக்கியிருப்பதனால், கூட்டமைப்பினுள்ளே முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் நிலவு…
-
- 0 replies
- 742 views
-
-
தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு பணபலமும் ஊடக பலமும் மட்டும் போதுமா? கே. சஞ்சயன் / 2020 ஓகஸ்ட் 01 வடக்கின் தேர்தல் களத்தில், முன்னெப்போதும் இல்லாத ஒரு குழப்பமானதும் வித்தியாசமானதுமான சூழல் இப்போது காணப்படுகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு, தேர்தலில் பணபலம், அதிகார பலம், ஊடகப் பலம் என்பன, தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக, இம்முறை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1977இற்குப் பின்னர், வடக்கில் பெரும்பாலான தருணங்களில், ஜனநாயக ரீதியாகத் தேர்தல்கள் நடக்கவில்லை. ஒன்றில் இறுக்கமான இராணுவ சூழலுக்குள் தேர்தல் நடந்திருக்கிறது. அல்லது, அரச அதிகாரபலம் கோலோச்சிய நிலையில் நடந்திருக்கிறது. ஆனால், இந்த முறை, இராணுவச் சூழலும் இருக்கிறது; அதிகா…
-
- 2 replies
- 742 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடாது?(கேள்வி, பதில் வடிவில்) August 28, 2024 — வி.சிவலிங்கம் — கேள்வி: இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இத் தேர்தல் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது? பதில்: மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வரலாற்றோடு அணுகுவது அவசியம். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பின் ஆரம்பமாகும். இதன் பிரகாரம் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக ஐ தே கட்சியின் சார்பில் ஜே ஆர். ஜெயவர்த்தன பதவியைப் பெற்றார். அவரது பதவிக் காலம் என்பது இலங்கையின் அரசியலை முழுமையாக மாற்றிய காலமாகும். 1948ம் ஆண்டு கிடைத்த சுதந்திரத…
-
-
- 4 replies
- 742 views
-
-
நவிப்பிள்ளை அம்மையாரின் விஜயம் - நிலாந்தன் 02 செப்டம்பர் 2013 வீட்டுக்கு வரும் ஒரு விருந்தினரை குடும்பத் தலைவர் கனம் பண்ண விரும்பவில்லையென்றால், அந்த விருந்தினர் வரும்வேளை, அவர் வீட்டைவிட்டு வெளியே சென்று விடுவதுண்டு. இதில் உள்ள செய்தி என்னவென்றால் விருந்தாளியை வராதே என்று சொல்லவும் முடியவில்லை. அதேசமயம் அவர் வரும்போது அவரை வரவேற்கவும் விரும்பவில்லை என்பதுதான். ஏறக்குறைய இதுபோன்றதொரு நிலைமைதான் கடந்த வாரம் இலங்கைத் தீவிலிருந்தது. வெற்றிவாதத்திற்குத் தலைமை தாங்கும் ஒரு அரசாங்கத்தின் தலைவர் அந்த வெற்றி பெறப்பட்ட விதம் தொடர்பான அனைத்துலகின் கரிசனைகளை அதிகம் பிரதிபலிக்கும் ஐ.நா.வின் மனித உரிமைகளிற்குப் பொறுப்பான அதிகாரியின் விஜயத்தின்போது நாட்டைவிட்டு வெளியேறி இ…
-
- 2 replies
- 742 views
-
-
நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு http://www.youtube.com/watch?v=xycN1kpUfgQ
-
- 2 replies
- 742 views
-
-
ட்ரம்ப்புக்கு வீழ்ந்துள்ள பாரிய அடி - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்புத் தொடக்கம், பல்வேறான சவால்களை எதிர்கொண்டுவருகிறார். அந்தச் சவால்கள், எப்போதும் குறைந்தபாடாக இல்லை. இந்த நிலையில், பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவின் விசாரணைகள், அவருக்கான பாரிய அடியை வழங்கியுள்ளன எனக் கருதப்படுகிறது. புலனாய்வுக்கான கூட்டாட்சிப் பணியகத்தின் (FBI) தலைவர் ஜேம்ஸ் கோமி, தேசிய பாதுகாப்பு முகவராண்மையின் தலைவர் மைக் றொஜர்ஸ் ஆகியோர், பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவின் முன்னால் சாட்சியமளித்தனர். ஜனாதிபதி ட்ரம்…
-
- 0 replies
- 741 views
-
-
மலையக வீடமைப்பு மேற்கிளம்பும் இனவாதம் இனவாதம் தொடர்ச்சியாக தலைவிரித்தாடும் இலங்கையில் அதன் வளர்ச்சிவேகம் குறைந்த பாடில்லை. அதுவும் பாரதப்பிரதமரின் இலங்கை விஜயத்தின் பின்னர் எழும் பல இனவாத கருத்துக்கள் இந்நாட்டில் எப்போதும் ஒரு சமாதானத்திற்கான வழி இல்லை என்பதற்கு எச்சரிக்கை விடுப்பதாக இருக்கின்றது. இதன் வாதப்பிரதிவாதங்கள் தென்னிலங்கையில் தலைவிரித்தாடுகின்ற நிலையில் அது பற்றி நாளுக்கு நாள் பலதரப்பட்ட கருத்துக்கள் உருவகித்து வெளிப்படுத்தப்படுகின்றன. பாரதப்பிரதமரின் மலையக விஜயத்தின் போது அறிவித்த கருத்துக்கள் கொழும்பு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தாயிரம் வீடு…
-
- 0 replies
- 741 views
-
-
"ராகுல் காந்தி என்னை விட வயதில் இளையவர். ஆனால், அவரை நான் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளேன்"- தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நடைபெற்ற முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் செல்லபாண்டியனின் நூற்றாண்டு விழா பட திறப்பு விழாவில் இந்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஆற்றிய உரை இது. தமிழக காங்கிரஸ் தலைவர்களும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களும் சிதம்பரத்தின் இந்த அறிவிப்பில் திகைத்துப் போயிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸில் பல கோஷ்டிகள் இருந்தாலும், இரு முக்கிய கோஷ்டிகள் உண்டு. ஒன்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமையிலான அணி. இன்னொன்று நிதி அமைச்சர் சிதம்பரத்தை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள அணி. இந்த இரு அணித் தலைவர்கள் மட்டுமின்றி, சிதம்பரத்திற்கு "ஜென்ம விரோதி" போல் மாறிய …
-
- 3 replies
- 741 views
-
-
மகிந்தருக்கு தமிழீழம் குடுக்கத்தான் விருப்பம்? கையிலிருந்த நாளிதழை வாசிக்கத் தொடங்கினான் சின்னத்தம்பி. 13ஐ கடக்க கூடாது என்று மகிந்தர் சொல்லியிருக்கிறார் பாத்தியளே புதினத்தை என்றபடி இரத்தினத்தாரின் முக்கத்தைப் பார்த்தான் சின்னத்தம்பி. உது என்னடா புதினம்? மகிந்தர் எதைக் குடுக்கச் சொன்னவர் எண்டு பார் அதுதான் புதினம் என்றார் கந்தையா. எதும் குடுக்கச் சொன்னவரோ என்றபடி உற்றுப் பார்த்தது ஆலமரம். உவர்தானே 13 பிளஸ் எண்டு கதைச்சுக் கொண்டு எல்லாத்தையும் செய்தவர். பிறகென்ன 13ஐ கடக்கக்கூடாது எண்டுறார் என்றார் இரத்தினத்தார். உவரின்டை பிளான் ஒண்டையும் குடுக்கக்கூடாது எண்டதுதான். சும்மா பதின்மூன்று பதின்று பிளஸ் பிளஸ் எண்டு எங்கடை சனங்களை இனப்படுகொலை செய்…
-
- 0 replies
- 741 views
-
-
கொலுவேறியவர்கள் தம் மக்களை கழுவேற்றல் ஆகாது! இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது பிரிட்டிஷ் படைகள் பல பின்னடைவு களைச் சந்தித்துக் கொண்டிருந்தன. அவ்வேளையில் பிரிட்டிஷ் இராணுவத் தளபதிகளில் ஒருவர் பிரிட்டிஷ் தலைமை அமைச்சர் வின்சன்ற் சேர்ச்சிலிடம், ‘‘எமது படைகள் தொடர்ந்து பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றன. உண்மையில் கடவுள் எம்மோடுதான் இருக்கிறாரா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது’’ எனத் தனது மனக் கிடக்கையை வெளிப்படுத்துகிறார். உடனே வின்சன்ற் சேர்ச்சில், ‘‘தளபதியே, கடவுள் எம்மோடு இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எனக்கில்லை. எனது பயம் எல்லாம், நாம் கடவுளோடு இருக்கிறோமா என்பதுதான்…
-
- 6 replies
- 741 views
-
-
திடீரென்று ஒருவர் மாரடைப்பில் மரணம் அடைவதைப் போல், அஜ்மல் கசாப்பின் தூக்கு, தூக்கிடப் பட்டபின் அறிவிக்கப்பட்டிருக்கிறது. [size=3][size=4]இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நடத்தி, வயதாகி நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்த பால்தாக்ரே மரணத்திற்கு, பதிலடி தருவதுபோல் அமைந்திருக்கிறது, அஜ்மல் கசாப்பிற்கான மரண தண்டனை.[/size][/size] [size=3][size=4]அநேகமாக தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில் ‘கசாப் தூக்கை’ இனிப்புக் கொடுத்து விழாவாக கொண்டாடி இருக்கிறார்கள்.[/size][/size] [size=3][size=4]தமிழகத்தில் அப்படி கொண்டாவில்லை என்று தீர்த்துச் சொல்லிவிடவும் முடியாது. அந்தப் பணியை தமிழ் பத்திரிகைகள் சிறப்பாக செய்திருக்கின்றன.[/size][/size] [size=3][size=4]‘ஊரறிந்த பாப்பான…
-
- 2 replies
- 741 views
-