அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
திணறவைக்கும் போதைப் பொருள் வியாபாரம் பாடசாலைப்பிள்ளைகளுக்கு நாசம் விளைவிக்கும் பல புதியவற்றின் வரவுகள் கண்டு பெற்றோர் பீதி கொள்கிறார்கள். பாடசாலைப்பிள்ளைகளை அடிமைகள் ஆக்கிவிடும் விதம், விதமான நவீன உணவுகள், குடிவகைகள், பொருட்கள், போதைப் பொருட்கள், என்றவகையில் ஏராளமானவை மாணவர் மத்தியில் உலவ விடப்படுகிறது. இன்னுமொரு புறம் ரக்ஸ் கலக்கப்பட்ட, ரொபிகள், பிஸ்கட்டுக்கள், குளிகைகள், மற்றும் அபின் கஞ்சா, ஹெரோயின் போன்ற பொருட்கள் இவையொருபுறமிருக்க, கைத்தொலைபேசி, இணையம், பேஸ்புக், நவீன வலைப்பின்னல்கள், கையேடுகள், நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற ஏராளமானவற்றின் புகுத்தல்களால் மாணவர் சமூகம…
-
- 1 reply
- 3.9k views
-
-
முஸ்லிம் அரசியல்வாதிகள்: மக்களின் நிலைப்பாடு என்ன? மொஹமட் பாதுஷா / 2018 நவம்பர் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:49 Comments - 0 உலக அரசியல் அரங்கில், நாமறிந்த காலத்தில் கேள்விப்பட்டிராத அரசியல் திருப்பமொன்று, இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு திரைப்படத்தின் ‘கிளைமக்ஸ்’ காட்சி போல, அன்றேல் திருப்புமுனை போல, இந்த மாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த நகர்வுகள் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதும் அவை, முஸ்லிம்கள் மீது, எவ்வாறான விளைவுகளைக் கொண்டு வரப்போகின்றன என்பதும்தான் தெரியவில்லை. நல்லாட்சி அரசாங்கம், சாத்தியமான எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை, முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான…
-
- 1 reply
- 795 views
-
-
மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும் -புருஜோத்தமன் தங்கமயில் “சோறும் புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு, பீட்சாவை (இத்தாலிய உணவு) சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்...’’ என்று யாழ். தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்திருக்கின்றார். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக, நீதிமன்றங்களின் ஊடாக, முற்கூட்டியே தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்று வருகிறார்கள். அது தொடர்பிலான வழக்கு விசாரணையொன்றின் போதே, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் பற்றி, தன்னுடைய எகத்தாளமான கருத்தை முன்வைத்திருக்கிறார். இலங்கை அரச இயந்திரம், எவ்வளவு தூரம்…
-
- 1 reply
- 436 views
-
-
சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும் - யதீந்திரா படம் | Vikalpa Flickr ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள் பேரவையின் விசாரணை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், அது குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சில சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும், இவை அனைத்திற்கும் பின்னால், அரசின் திரைமறைவு கரம் இருப்பதாக குற்றஞ்சாட…
-
- 1 reply
- 520 views
-
-
தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள்? - யதீந்திரா கடந்த 17ஆம் திகதி, இலங்கை தமிழரசு கட்சியின் 70வது ஆண்டு நிறைவு, அந்தக் கட்சியினரால் நினைவு கூரப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சிக்கு ஒரு நீண்ட வரலாற்றுண்டு. 1949இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசு கட்சி 1970கள் வரையில் தீர்மானகரமான ஒரு கட்சியாக இருந்தது உண்மைதான். இந்தக் காலத்தில் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுக்கவல்ல பிரதான கட்சியாக தமிழரசு கட்சியே இருந்தது. ஆனால் 70களுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளை தனித்து எதிர்கொள்ளக் கூடிய நிலையில் தமிழரசு கட்சி இருக்கவில்லை. இதன் காரணமாகவே கட்சியை நிறுவிய, செல்வநாகமே தமிழரசு கட்சிக்கு பதிலாக புதிய கட்சி ஒன்றை நோக்கிச் செல்ல முற…
-
- 1 reply
- 724 views
-
-
கட்டாக்காலி நாய்பிடிகாரர் போல பல்கலை மாணவர்களை நடுறோட்டில் வைத்து அடித்து, விரட்டிய பின்னரும் கூட ஆட்சியாளர்களின் வெறி அடங்கிய பாடாகத் தெரியவில்லை. பிரச்சினைக்கான வேர்களைப் பிடுங்குவதன் மூலம் பல்கலை மாணவருக்கு பயம் காட்டும் பாணியில் அதிகார ஏவலாளிகள் இறங்கிவிட்டார்கள். போர் முடிவுக்கு வந்து புலிகளைஒழித்து விட்டதாக அரசு அறிவித்த பின்னரும் அதற்கான தலையிடிகள் வெவ்வேறு ரூபங்களில் தொடரவே செய்தன. சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலிகள், புலம்பெயர் தமிழர் ஆர்ப்பாட்டங்கள், ஐ.நாஅறிக்கைகள், ஜெனிவாத்தீர்மானம் என்று ஓயாது அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த பேரினவாதிகளுக்கு யாழ்.பல்கலை மாணவர்களும் தீராத் தலைவலியாக மாறியிருந்தார்கள். குறிப்பாக கார்த்திகை27 இல் எப்படியேனும் பல்கலை…
-
- 1 reply
- 1.8k views
-
-
தோல்வி பயத்தில் ஓடி ஒளியும் ரணில் - ராஜபக்ஷர்கள் புருஜோத்தமன் தங்கமயில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துவிட்டது. தற்போது ஆட்சியிலுள்ள ரணில் -ராஜபக்ஷ அரசாங்கம், எந்தவொரு தேர்தலையும் உடனடியாகச் சந்திப்பதற்கு தயாராக இல்லை. அதனால், தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பது அல்லது ஒத்திப்போடுவதற்கான சதித்திட்டங்களை மேற்கொள்வது என்ற எண்ணத்தோடு இயங்கி வருகின்றது. அதன் ஒரு கட்டம்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை, திறைசேரி விடுவிக்காமல் அலைக்கழிப்பதனூடு நிகழ்ந்திருக்கின்றது. நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவும், தேர்தல்கள் மூலமா…
-
- 1 reply
- 907 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விவகாரம் குறித்த சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது தொடங்கிய சில மனக்கசப்புகள், தேர்தல் முடிவு வெளியானதும் பொருமி வெடித்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை, சூடுகிளப்பிய நிலையில், ஈபிஆர்எல்எவ், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதை ஒரு இரகசியமாக கடிதமாக பேணாமல், ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதன் மூலம், கூட்டமைப்புக்குள் சிக்கல்கள் உள்ளன என்று வெளிக்காட்ட அவர்கள் முற்பட்டனர். அதற்கிடையில், இந்தியப் பயண…
-
- 1 reply
- 572 views
-
-
பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவது ஏன்? நீங்கள் குதிரையை தண்ணீர் குடிக்கக் கொண்டுவர முடியும், ஆனால் உங்களால் அதைக் குடிக்க வைக்க முடியாது. இதேபோன்றே, சிறிலங்காவில் செயற்படும் அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சி நிறுவகங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதில் வெற்றி பெற்றாலும் கூட, தகைமைபெற்ற பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதென்பது சாத்தியமற்றது. இந்த கசப்பான உண்மையை, கடந்த வார உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான வேட்பு மனுத்தாக்கல்கள் உறுதிப்படுத்துகின்றன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெண்களின் இடஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அனைத்து அரசியற் கட்சிகளும் ஆதரித்திருந்ததுடன் நா…
-
- 1 reply
- 1.4k views
-
-
அடுத்து நடக்கப்போவது என்ன? சில மாதங்களாக அரசியல் ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த உள்ளூராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் பத்தி வெளிவரும் போது, பெரும்பாலும் யாருக்கு வெற்றி -யாருக்குத் தோல்வி என்பது தெரியவந்திருக்கும். பலமுனைப் போட்டி நிலவிய உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான போட்டியாளராக எல்லாக் கட்சிகளுக்கும் இருந்தது. ஏற்கனவே நடந்த பாராளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தலிலும் பலமான தரப்பாகவும், பிரதான அரசியல் சக்திய…
-
- 1 reply
- 514 views
-
-
ரணிலின் பிரித்தாளும் அரசியலை தாண்டுமா தமிழ்க் கட்சிகள்? புருஜோத்தமன் தங்கமயில் இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் ஆயுதப்போர் முனையில் வெற்றி முகத்தோடு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்து, ஆழ ஊடுருவி அழிப்பதற்கான விதைகளைப் போட்டவர் ரணில் விக்கிரமசிங்க. ‘கருணா அம்மான்’ என்கிற புலிகளின் கிழக்கு தளபதியை பிரித்தெடுத்து, இராணுவ பலத்தை சிதைத்ததுடன், சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான தடைகளை வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளையும் செய்திருந்தார். புலிகளை இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் தோற்கடிப்பதற்காக ரணில் போட்ட பாதையில்தான், அவருக்குப் பின்னர் வந்த ராஜபக்ஷர்கள் பயணித்து 2009இல் வென்றார்கள். ரணில் தனக்கு கி…
-
- 1 reply
- 300 views
- 1 follower
-
-
தமிழர்களும் ‘மலசலகூட’ அரசியலும் தனது டுவிட்டர் ஊடகக் கணக்கினூடாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் மலசலகூடங்களை அமைப்பதற்கான நிதியுதவி கோரி காணொளியொன்றை அண்மையில் வௌியிட்டிருந்தார். அந்த கிராமத்துக்கே வெறும் இரண்டே இரண்டு மலசலகூடங்களே இருப்பதால் அம்மக்கள் பெரும் அவதிக்கும், சுகாதார சீர்கேட்டுக்கும் முகங்கொடுப்பதாக கோடிகாட்டிய அவர், குறைந்தது 10 புதிய மலசலகூடங்கள் கட்டுவதற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியைக் கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையை அவர் வைத்ததன் பின்னர், இதற்கான எதிர்வினைகள் பல்வேறுபட்டனவாக இருந்தன. சிலர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக “நல்லாட்சி அரசாங்கத்துக்…
-
- 1 reply
- 737 views
-
-
2022ம் ஆண்டு தரும் புதிய நோக்கு January 1, 2022 — வி. சிவலிங்கம் — நாம் இப்போது கடந்து செல்லும் 2021ம் ஆண்டு உலக மக்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கிறது. கொரொனா நோயின் தாக்கத்தினை மட்டுமல்ல, பொருளாதார அடிப்படைகளில் பாரிய வெற்றி பெற்றதாக மார்பு தட்டிய பல அரசுகள் தத்தமது பொருளாதாரக் கட்டுமானங்களை மாற்றி அமைக்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கொரொனா நோயின் தாக்கம் பொருளாதாரக் கட்டுமானங்களின் பலவீனங்களை மிகத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது. உதாரணமாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் சுகாதாரத்துறையின் சீர்கேடுகள் காரணமாக மிக அதிக அளவிலான மக்கள் மரணமடைந்தார்கள். இம் மரணத்தில் அகப்பட்டோரில் பலர் பொருளாதார அடிப்படையில் சமூகத்த…
-
- 1 reply
- 380 views
-
-
விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கின்ற நிலையில், அவர் இருவார கால விடுப்பில் சென்றிருப்பதானது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. முதலமைச்சரின் பயணத்துக்கு, ஆன்மீக அடையாளம் வழங்கப்பட்டாலும், அது அரசியல் நோக்கங்களும் கொண்டதாகவே இருக்க முடியும். அவர், டெல்லி வரை சென்று வருவார் என்று தெரிகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், வடக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழ் மக்கள் எதிர்கொண்…
-
- 1 reply
- 681 views
-
-
கோட்டாவின் ‘அபிவிருத்தி’ மாயாஜாலம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 03:22 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ “சாதாரண மக்களுக்கு அதிகாரப் பகிர்வு, சமஷ்டி பற்றிய யோசனைகள் எதுவுமில்லை. அவர்கள் அபிவிருத்தி தொடர்பிலேயே சிந்திக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கின்றார். நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலான, கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். கோட்டா பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலந்தொட்டு, தேசிய பாதுகாப்பு, (வெளித்தெரியும்) அபிவிருத்தி என்பவை குறித்தே செயற்பட்டு வந்திருக்கின்றார். அவர், சமூக மேம்பாட்டுக்கான அடிப்படை விடயங்கள் குறித்துச் சிந்தித்ததில்லை. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, நாட…
-
- 1 reply
- 906 views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈழத் தமிழர்கள் பங்கேற்பதா, புறக்கணிப்பதா? மீண்டும் மீண்டும் சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் அரசியல் யாப்பு எதற்கு? ஒற்றையாட்சியைப் பலப்படுத்தும் கொழும்பின் போக்குக்குத் தமிழர் தரப்புகள் துணைபோவதா? சர்வதேசச் சமவாயத்தில் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்ற உறுப்புரையை நீக்கம் செய்து 2007 ஆம் ஆண்டு சமவாயச் சட்டம் என்ற பெயரில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் 56 ஆம் இலக்கச் சட்டமாக இணைத்த ராஜபக்ச அரசாங்கம், தற்போது அந்தச் சமவாயச் சட்டத்தை பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முற்றாகவே நிராகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. மைத்திரி ரணில் அரசாங்கம் மேற்கொண்ட புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபில்கூட சமவா…
-
- 1 reply
- 573 views
-
-
தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் தொடர்ச்சியாகவே பெரும்பான்மைச் சமூகத்தினரால் பேணப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு எந்த வகையில் முயற்சி எடுத்தாலும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் தலையிட்டுச் சீர்குலைப்பதற்கும் அரசு பின் நிற்பதில்லை. இராணுவமயமாக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பகுதியில் தமிழ் மக்கள் எப்போதும் அடக்கப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்பதில் அரசு குறியாக இருக்கிறது. அவர்களது நாளாந்தக் கடமைகளில் இராணுவத் தலையீடுகளும் நெருக்கடிகளும் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஏதோ ஒரு வகையில் சாட்டுப்போக்குச் சொல்லி அரசு தமிழ் மக்கள் மீதான கெடுபிடியைத் தொடராகக் கைக்கொண்டு வருகிறது. அதன்மூலம் அவர்களது எழுச்சி, உணர்வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் : சபா நாவலன் உலகத்தில் இன்று என்ன நடைபெறுகிறது என்பது குறித்த குறைந்தபட்ச புரிதல் ஈழப்போராட்டத்தின் இராணுவரீதியான தோல்விலிருந்து தமிழக மாணவர் எழுச்சி வரைக்கும் மதிப்பீடு செய்வதற்கு அவசியமானது. இன்றைய தமிழக மாணவர் போராட்டஙகள் ஈழப் போராட்டத்திற்கும் இந்திய மக்களுக்கும் மட்டுமன்றி உலகம் முழுவதற்குமே முன்னுதாரணமாக உருவாகக்கூடிய சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. ஐ.நா தீர்மானத்தோடும் ஜெயலலிதாவின் தீர்மானம் நிறைவேற்றி நாடகம் நடத்திய கையோடும் மாணவர் போராட்டங்கள் அது ஆரம்பித்த வேகத்தில் அழிந்துபோய்விடும் என்று அங்கலாய்த்த அதிகாரவர்க்கம் தோற்றுப்பானது. இதுவரைக்கும் துனிசியாவில் மையான அமைதியைக் கிளித்துக்கொண…
-
- 1 reply
- 862 views
-
-
ஈழத் தமிழரின் துன்பியல்கள் ஜூலைகளில் வெற்றிகளும் இல்லாமலில்லை இலங்கைத் தீவில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறலாம். கட்சிகள் காலத்துக்கு ஏற்றவாறு கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். சிங்கள அரசுகள் தமிழினத்துக்கான தீர்வை வழங்குவதற்குப் பின்னடிக்கலாம். ஆனாலும் ஐக்கியதேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பவை மாறிமாறி நாட்டை 70 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருந்த காலப்பகுதிகளில் தமிழினத்துக்கெதிராக இடம்பெற்ற படுகொலைகள், அராஜகங்கள், இன வன்முறைகள் பெரும்பாலும் ஜூலை மாதங்களிலேயே நடந்தேறியிருக்கின்றன. ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலகட்டத்தில் உல…
-
- 0 replies
- 390 views
-
-
மஹிந்தவுடன் சேர்ந்தியங்க சம்பந்தன் ஆர்வமா? இலங்கையில் தமிழ்த்தரப்பின் எதிர்கால அரசியல் போக்கு நாட்டின் நலனுக்காகவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்காகவும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, செயற்படத் தயாராக இருப்பதாக, சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ஜூலம்பிட்டியே மங்களதேரர் எழுதிய ஒரு நூல் வெளியீட்டில், கடந்த வாரம் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக நீண்டகாலத்துக்குப் பிறகு, சம்பந்தனும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒரு நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் …
-
- 0 replies
- 334 views
-
-
கோட்டா கோ கமவும் மே பதினெட்டும்! நிலாந்தன். May 1, 2022 கோட்டா கோகம கிராமத்தில் யுத்த வெற்றி வீரர்களுக்கும் ஒரு குடில் ஒதுக்கப்பட்டமை தொடர்பாக நான் எழுதிய விமர்சனத்துக்கு நண்பர் ஒருவர் பதிலளித்தார். அரசியல் சிவில்,சமூக செயற்பாட்டாளரான அவர் அண்மையில் கோட்டாகோகம கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் தரும் தகவல்களின்படி ரணவிரு குடிலில் அமர்ந்திருக்கும் படைவீரர்கள் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அதில் இணைந்து செயற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் யுத்தவெற்றியை ஒரு அரசியல் முதலீடாக முன்னெடுக்கும் ராஜபக்சக்களின் யுத்த வெற்றிவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்றும் அவர்களை யுத்த வெற்றி வாதத்திற்கூடாகப் பார்க்கத் தேவையில்…
-
- 0 replies
- 480 views
-
-
காரணம் என்ன? ஏலவே 1972ஆம் ஆண்டு குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டபோது வட கிழக்கெங்கும் கறுப்புக் கொடியேற்றப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர் நிலையாகவே தொடர்ந்து வந்த சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வடகிழக்கில் தமிழ் மக்களால் பகிஷ்கரிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் நான்காவது குடியரசு தினமான 1976 ஆம் ஆண்டு கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் அரசியல் அமைப்புக்கு முரணானது எனக் குற்றம் சாட்டி அரசியல் அமைப்புக்கு முரணான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தினால் ஆ.அமிர்தலிங்கம், வி.என். நவரத்தினம், க.பொ.இரத்தினம், கே. துரைரத்தினம் ஆகி…
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கையை இறுக்கும் இனவாதம் இந்நாட்டின் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லெண்ணம் கொண்ட சகல மக்களும் சகவாழ்வுடன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றனர். ஆனால், இனவாதமும் மதவாதமும் இம்மக்களின் சமாதான, சகவாழ்வுக்குத் தொடர்ச்சியாக சவால் விடுத்துக்கொண்டிருப்பதை வரலாற்று நெடுகிலும் அவதானிக்க முடிகிறது. அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளுவதை இலக்காகக் கொண்டு செயற்படும் கடும்போக்காளர்கள் முஸ்லிம்களின் மத, கலை, கலாசார, பண்பாட்டு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களில் போலியான குற்றச்சாட்டுக்களை தாக்குதல்களை மேற்கொணடு வர…
-
- 0 replies
- 304 views
-
-
முள்ளிவாய்க்காலும் இனவாதமும் வடமாகாண சபை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அரசாங்கமும் தென்னிலங்கையரும் அதையொரு குருஷேத்திரமாகப் பார்க்கும் நிலை இன்னும் அற்றுப்போகவில்லை என்பதற்கு உதாரணம் கடந்த 18 ஆம் திகதி முள்ளி வாய்க்காலில் அனுஷ்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு. அதில் பங்கெடுத்துக்கொண்ட வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீது தென்னிலங்கையினரின் பாய்ச்சல் தீவிர இனவாதத்தை கொட்டுவதாகவிருக்கிறது. வடமாகாணசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டு சி.வி. விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து தென்னிலங்கை சமூகமும் ஆட்சியாளர்களும் பேரின தலைவர்களும் பௌத்த பேரினவாதிகளும…
-
- 0 replies
- 327 views
-
-
ரணிலும், 13ஆம் திருத்தமும், இனப்பிரச்சினைக்கான தீர்வும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான சர்வகட்சி மாநாட்டின் அடுத்தபடியாக, கடந்த வாரம், ஜனவரி 26ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு கூடியது. இதில் பலவிடயங்களை தனது பேச்சிலும் பதிலளிப்புகளிலும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவற்றிலிருந்து ஜனாதிபதி ரணிலின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான எண்ணம் பற்றிய மேலதிக தௌிவு புலப்படுகிறது. குறித்த சர்வகட்சி மாநாட்டில், ஜனாதிபதி ரணில், பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருந்தமை, இங்கு கவனிக்கத்தக்கது: “அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவேண்டும் அல்லது பாராளுமன்றம் 13ஆம் திர…
-
- 0 replies
- 548 views
-