Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன் பாடசாலைகளை, பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் முதலீடு செய்வதில்லை. தாயகத்தில் முதலீடு செய்பவர்களிலும் மிகச்சிலர்தான் கல்வித்துறையில் முதலீடு செய்கிறார்கள். ஆளில்லா ஊரில் ஆலயங்களைக் கட்டுவதை விடவும் கல்விச்சாலைகளை கட்டுவது மகத்தானது. அப்படி ஒரு முதலீடுதான் கந்தர்மடம் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நோர்தேன் யுனி என்று அழைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம். போட்டிக் கல்வி வியாபாரமாக மாறிய ஒரு கல்விச்சூழலில், ஒரு முதலாளி கல்வியில் முதலீட்டைச் செய்யும்பொழுது அங்கேயும் வியாபார இலக்குகள் இ…

  2. ஒரு புதிய யாப்புக்கான வாய்ப்புக்கள்? – நிலாந்தன் BharatiDecember 20, 2020 நிலாந்தன் ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு 20 ஆவது திருத்தத்தை கொண்டு வர முற்பட்ட வேளை அதற்கு சிறிய பௌத்த மகா சங்கங்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு பலவீனமான சிறிய பௌத்த மகா சங்கங்களின் நாயக்கர்கள் யாப்பு திருத்தத்திற்கு பதிலாக ஒரு புதிய யாப்பை கொண்டு வரலாம் என்று கேட்டிருந்தார்கள். இதே கருத்தையே கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறான ஒரு பின்னணியில் ராஜபக்சக்கள் தாங்கள் ஒரு புதிய யாப்பு கொண்டு வருவோம் என்று திட்டவட்டமாகவும் தெளிவாகவும் நாட்டுக்கு கூறத் தொடங்கினார்கள். அதன…

  3. ஒரு புத்தக வெளியீடும் தலைவர்களும் தமிழ் மக்களும் நிலாந்தன் வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். '2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது இதுதான் முதற் தடவை. அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான மேடை' என்று. அந்த அரங்கு ஒரு சமநிலையற்ற அரங்கு என்று வடமாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன் விமர்சித்திருந்தார் அந்தக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சி அதிருப்தியாளர்களும் தமிழரசுக்கட்சிக்கு எதிரானவர்களுமே பங்கேற்றிருந்தபடியால் …

  4. ஒரு புலப்பெயர்ச்சி அலை? நிலாந்தன். கனடாவில் வசிக்கும் ஒரு நண்பர் சொன்னார்..கனடாவுக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கு படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு என்று கிட்டத்தட்ட 30 மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று.அம்மையங்களில் ஒரு படிவத்தை நிரப்புவதற்கு ஆயிரம் கனேடியன் டாலர்கள் அறவிடப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.கிட்டத்தட்ட இலங்கை ரூபாயில் இரண்டரை லட்சம். கனடாவில் இருக்கும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை அவ்வாறு அழைக்கலாம் என்று ஒரு கதை பலமாக உலாவுகிறது. அதனால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்ல, நண்பர்கள் தெரிந்தவர்கள் போன்றவர்களும் கனடாவில் இருப்பவர்களை அனுகி தமக்கு விசா பெற்றுத் தருமாறு கேட்கின்றார்கள். இது சம்பந்தமாக அண்…

  5. ஒரு பேட்டியும் சுமந்திரனுக்கு அறம் போதித்தோரும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மே 20 முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் உச்சம் பெற்றிருந்த தருணத்தில், தமிழ்த் தொலைக்காட்சியொன்றின், அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஆயுத இயக்கமொன்றின் தலைவர் ஒருவர், வெளியிட்ட கருத்தோடு, இந்தப் பத்தியை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும். ''...தம்பி பிரபாகரனின் தமிழீழத்துக்கான அர்ப்பணிப்புப் பெரியது; நாங்களும், தமிழீழத்தை இலக்காகக் கொண்டே ஆயுதங்களைத் தூக்கினோம். ஆனால், ஆயுதத்தால் இலக்கை அடைய முடியாது என்று உணர்ந்த போது, அதைக் கைவிட்டோம்...'' என்று அந்தத் தலைவர் கூறினார். அப்போது, அவரது இயக்கம், இராணுவத்தோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் …

    • 3 replies
    • 1.1k views
  6. இலங்கையில் நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலும் முடிவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இருண்டகாலம் ஒன்றினுள் தள்ளியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தவறான நிலைப்பாட்டின் அணுகுமுறையின் விளைவே இது! நிகழ்ந்து முடிந்த இலங்கைத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷேவை எதிர்த்து நின்றவர்கள் யார்? மைத்திரிபால சிறீசேன யார்? முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்த கடைசி நான்கு நாட்கள் மகிந்தவின் குறுங்காலப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். பொன்சேகா யார்? ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள வெறிப்படைத் தளபதி. சந்திரிகா குமாரதுங்கா யார்? சிங்களப் படைவெறியர்கள் கிரிசாந்தியைப் படுகொலை செய்த காலத்தில் கோனேஸ்வரியின் பெண்குறியில் வெடிகுண்டைச் செருகி வெடிக்கச் செய்தபோது…

  7. ஒரு பொது நினைவுச்சின்னத்தை ஏன் உருவாக்க முடியாது? நிலாந்தன். adminJune 4, 2023 சுதந்திரப் பூங்கா-Freedom Park- தென்னாபிரிக்கா போரில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. தமிழ்க் கட்சிகளில் சில அதை எதிர்க்கின்றன; சில அதை ஆதரிப்பதாகத் தெரிகின்றது. போரில் உயிர் நீத்த எல்லாருக்குமான நினைவுச் சின்னம் என்பது உலகில் ஏற்கனவே பல நாடுகளில் உண்டு. குறிப்பிட்ட நாட்டில் அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் போரில் உயிர்நீத்த அனைவருக்குமானதாக அது அமையும். அதற்கு முகம் இருக்காது. ஆளடையாளம் இருக்காது. அது போர் வெற்றியையும் பிரதிபலிக்காது; தோல்வியையும் பிரதிபலிக்காது. குறிப்பாக, நிலைமாறுகால நீதியின் ஒ…

  8. ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐ.நா.தீர்மானத்தை எதிர்த்தல் -நிலாந்தன்.. December 28, 2019 நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க முடியவில்லை? ஏனென்றால் 19ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி அவ்வாறான அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. எனவே தனக்கு நம்பிக்கையான ஒருவரை ராஜாங்க அமைச்சராக நியமித்து விட்டு மற்றொருவரை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு மறைமுகமாக அந்த அமைச்சை புதிய ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அதாவது அது 19 ஆவது திருத்தத்தின் விளைவு தான். 19வது திருத்தம் இருக்கும் வரை ராஜபக்சக்கள் முழு வெற்றி பெற…

  9. ஒரு மருத்துவரும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்! சமூக வலைத்தளங்களின் காலத்தில், யுடியுப்களின் காலத்தில் ஒருபுறம் செய்திக்கும் வதந்திக்கும் இடையிலான வித்தியாசம் சுருங்கிகொண்டே போகிறது. இன்னொருபுறம் ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ருசுப்படுத்தத் தேவையான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன, மக்கள் மயப்பட்டுள்ளன.உண்மையை உறுதிப்படுத்தத் தேவையான வாய்ப்புகள் அதிகம் மக்கள் மயப்பட் டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,வதந்தியை விட உண்மை அதிகம் ஸ்தாபிக்கப்பட்ட வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. ஏன் ? ஏனென்றால், சமூக வலைத்தளங்களும் யு டியுப்களும் அதிகமதிகம் பொதுப் புத்திக்கு கிட்டே வருகின்றன.பொதுப் புத்தியானது எப்பொழுதும் விஞ்ஞான பூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. எ…

    • 1 reply
    • 616 views
  10. ஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்? நிலாந்தன்:- கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்? என்பது அக் கூட்டத்தின் தலைப்பு. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஏற்கெனவே மன்னாரில் ‘தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம்?’ என்ற தலைப்பிலும் வவுனியாவில் ‘ தடுமாறும் தலைமைகளால் தளர்வுறுகிறாரர்களா தமிழ் மக்கள்? – அடுத்தது என்ன?’ என்ற தலைப்பிலும் இரு கூட்டங்களை மேற்படி அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்தது. தலைவர்கள் தடம் மாறிய பின்னரும் தமிழ் மக்கள் தடுமாறவில்லை என்ற ஓர் எடுகோளின் அடிப்படையில் அவ்வாறு தடம் மாறாத அல்லது தடுமாறாத தமிழ் மக்களுக்கு…

  11. ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது? நிலாந்தன்:- கடந்த 30ம் திகதி தமிழ் மக்கள் பேரவை கூடியது. இதன்போது விக்னேஸ்வரனும் மருத்துவர் லக்ஸ்மனும் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்டுள்ளன. விக்னேஸ்வரனின் உரை வழமையான அவருடைய சொற் பிரயோகங்களோடு அமைந்திருக்கின்றது. ஒரு மாற்று அணிக்கு தான் இப்போதைக்கு தலைமை தாங்கப் போவதில்லை என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்த பின் நடந்த பேரவைச் சந்திப்பு அது. எனவே விக்னேஸ்வரனின் உரையில் ஏதும் தளம்பல்கள் அல்லது சமாளிப்புக்கள் அல்லது பின்வாங்கல்கள் இருக்கக்கூடுமா? என்று ஒரு பகுதியினர் நுணுக்கமாகத் தேடினார்கள். ஆனால் பலரும் உற்றுக் கவனிக்கத் தவறியது லக்ஸ்மனின் உரையாகும். மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் …

  12. ஒரு முகப்பட வேண்டிய சூழல் August 16, 2025 — கருணாகரன் — முல்லைத்தீவு – முத்தையன்கட்டில் இராணுவத்தினரோடு ஏற்பட்ட பிரச்சினையில் கபில்ராஜ் என்ற இளைஞர் மரணமடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடையடைப்புப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவைத் தெரிவித்துள்ளது. பொது அமைப்புகளும் தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிகிறது. இதற்கான முழுமையான ஆதரவை எல்லோரும் வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கோரியுள்ளார். சிவஞானத்தின் கோரிக்கை, வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மக்கள் வாழிடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை விலக்க வேண்டும் என்பதேயாகும். அதற்கு அவர் இந்தக் கொலைச் சம்பவத்தோடு ஒரு …

  13. ஒரு முடிவில் பிறிதோர் ஆரம்பம் காரை துர்க்கா / 2018 ஒக்டோபர் 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:15 Comments - 0 வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஏற்கெனவே முடிவுக்கு வந்து, கொழும்பு, மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பிரதிநிதியான ஆளுநரின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. நாளை தொடக்கம், வடக்கு மாகாணத்திலும் இதே நிலைமை ஆரம்பிக்க உள்ளது. ஆக, அடுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் வரை, இரண்டு மாகாணங்களும் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்களின் ஆளுகைக்குள் அடங்கப் போகின்றன. தமிழர்களது பார்வையில், மாகாண சபை ஆட்சி முறையிலான நடைமுறை பல குறைபாடுகளைத் தன்னகத்தில் கொண்டுள்ளது. இந்த ஆட்சி முறைமை …

  14. விஞ்ஙான ரீதியில் மன்னார் பிரச்சனை பற்றி விலாவாரியாக விளங்கப்படுத்துகிறார்.

  15. மனித நேய தொண்டர்கள் பற்றி எப்பொழுதும் எனக்கொரு மரியாதையுண்டு. அந்தவகையில் ஐல்லிக்கட்டுத்தடை தொடங்கியதிலிருந்து நாமும் இந்த விளையாட்டில் கொஞ்சம் வலிகளை ஏற்படுத்துகின்றோமோ அதனால் தான் பீட்டா(Peta) அமைப்பினருக்கு வலிக்கிறதோ என்ற சிறு சந்தேகம் இருந்தது. ஆனால் Peta வை சேர்ந்த ராதா ராஜன் அவர்கள் பேசிய ஒரு வரியில் எல்லாமே உடைந்துபோயிற்று. அவரது தூற்றுதல் என்பது தனது இனத்தை (பெண்களையே) குறி வைப்பதாக உள்ளது. இவ்வாறு தனது பெண்மை சார்ந்து மனிதாபிமானத்தோடு சிந்திக்க தெரியாத ஒருவர் மாட்டின் மீது பற்று வைக்கிறார் என்பதெல்லாம் வெறும் பாசாங்கு. பணத்தைக்கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்பதை தவிர வேறொன்றுமில்லை. பணம் துட்டு மணி மணி..... இனி ஆண்டவனாலும் தமிழிச்சிகளிடமிருந்து இவ…

  16. ஒரு வார்த்தையேனும் கூறாதது ஏன் ? ரொபட் அன்­டனி பெரும் எதிர்­பார்ப்­புக்கு மத்­தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யக தமிழ் மக்­களின் மேலோங்­கிய நம்­பிக்­கை­க­ளுக்கிடையே இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி இலங்­கைக்­கான இரண்­டுநாள் விஜ­யத்தை மேற்­கொண்டு நாடு­தி­ரும்­பி­யுள்ளார். இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்கை வரு­வ­தற்கு முன்­பாக அவர் முன் உள்ள கட­மைகள் தொடர்­பாக நாம் அடிக்­கடி சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம். குறிப்­பாக வடக்கு, கிழக்கு மக்­களின் அர­சியல் தீர்வுப் பிரச்­சினை மற்றும் மலை­யக மக்­களின் அபி­வி­ருத்திப் பிரச்­சினை, அடிப்­படை தேவை பிரச்­சினை தொடர்­பாக ஆரா­ய­வேண்­டிய கடமை மற்றும் பொறுப்பு இந்­தியப் பிர­த­ம­ருக்கு இருப்­ப­த…

  17. ஒருங்கிணைந்த மண்ணில் ஒன்றிணைந்த வாழ்வு காரை துர்க்கா / 2019 ஜூன் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:36 Comments - 0 அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர். தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள் வாருங்கள்” எனக் கவிதா நண்பர்களை வரவேற்றாள். மேரியும் அன்வரும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ்ப் பாட நூலில், ‘பண்டிகைகள்’ என்ற தலையங்கத்தின் கீழ், உரையாடல் வடிவில் அமைந்த பாடப்பரப்பு ஆகும். எம் உயிரிலும் மேலான தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட…

  18. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை: யார் பொறுப்பு? நிலாந்தன். எனது நண்பரான உளவளத் துணை ஆலோசகர் ஒருவர் அடிக்கடி ஒரு மேற்கோளை சுட்டிக்காட்டுவார்…”எதிர்த் தரப்பு உங்களை கோபப்படுத்தி விட்டதென்றால் அது அதன் முதலாவது வெற்றியைப் பெற்றுவிட்டது என்று பொருள்” ஒருவர் உங்களை கோபப்படுகிறார் என்றால், உங்களைக் கோபப்படுத்துவது தான் அவருடைய நோக்கம் என்றால், நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் அவரைத் தோல்வி அடையச் செய்யும். நீங்கள் கோபப்பட்டீர்கள் என்றால், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டீர்கள் என்றால், எதிரி நினைப்பதை நீங்கள் செய்கிறீர்கள் என்று பொருள். இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பொருந்தும். ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதுகின்றார்..மருத்துவர் …

  19. ஒருங்கிணையும் எதிர்கட்சிகளும், சிந்திக்காத தமிழர் தலைமைகளும் | திரு.யதீந்திரா | நிலாந்தன் மகாதேவா

    • 0 replies
    • 316 views
  20. ஒருபோதும் பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசார ஒதுக்கீடு வராது! வராது! பிரதமர் நரேந்திர மோடி அரசு, மக்கள் தொகையில் ஏறக்குறைய 17.5 விழுக்காடு உள்ள உயர் சாதி மக்களில் நலிந்த பிரிவுகளின் மக்களுக்கு மய்ய மாநில அரசுகளின் கல்வியிலும் உதவி பெறும் மற்றும் உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வியிலும், மய்ய மாநில அரசுகளின் வேலைகளிலும் 10 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து அதற்கு ஏற்ற வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி விதி 15இல் 6ஆவது உட்பிரிவையும் விதி 16இல் 6வது உட்பிரிவையும் சேர்த்துள்ளது. அவை 19.1.2019 முதல் நடப்புக்கும் வந்துவிட்டன. அவற்றின் தமிழாக்கம் பின்வருமாறு: பிரிவு 15 (6) (அ) உட்பிரிவு (4) மற்றும் (5)இல் குறிப்பிடப்பட்டுள்ள …

  21. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மாவை சேனாதிராசா சுமந்திரன் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” நிகழ்வில் கலாநிதி கணேசலிங்கம் முன்வைத்த ஆய்வுக்குரிய கருத்துக்களுக்கு நன்றி. “ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” என்பது வடகிழக்கு தலைமையை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே என்பதை கொழும்பு தலைவர்கள் உணரவேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் விமர்சன நீதியாக வடகிழக்கு மக்கள் தெரிவுசெய்யும் தலைமையுடன் [ஏசி அனுசரணையாக செயல்படவேண்டும். . தமிழரசுக் கட்ச்சியும் கூட்டமைப்பும் தமிழரசுக் கட்ச்சி வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலை தருகிறது. கடந்த காலத்தில் தமிழர் தலைமை யாழ்பாணம் வன்னி, மற்றும் திருமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் கொழும…

    • 1 reply
    • 586 views
  22. ஒருவருட உக்ரைன் போர் சாதித்தது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ் March 3, 2023 உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கை ஆரம்பித்து கடந்த வெள்ளிக்கிழமையுடன் (24) ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. முதலில் உக்ரைனுக்கும் ரஸ்யாவுக்குமான மோதல் என நம்பப்பட்ட போர் நேட்டோவுக்கும் ரஸ்யாவுக்குமான போர் என உலகம் பின்னர் மெல்ல மெல்ல தெரிந்து கொண்டது. உக்ரைனில் தமது ஆயுதங்களை குவித்து ரஸ்யாவின் படை பலத்தை அழித்துவிடுவது ஒருபுறம் இருக்க உலக நாடுகளில் ரஸ்யா மீதான தடைகளை கொண்டுவந்து அதன் பொருளாதாரத்தை முடக்குவதனையும் மேற்குலகம் தீவிரமாக செய்தது. தற்போது இந்த பூமிப்பந்தில் உள்ள நாடுகளில் அதிக பொருளாதார தடைகளை கொண்ட நாடாக ரஸ்யா உள்ளது. முதலில் ச…

  23. ஒருவேளை உணவுக்காக அங்கலாய்க்கும் மக்களுக்கு அரசாங்கம் அளிக்கப்போகும் பதில் என்ன ? (ஆர்.ராம்) உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஒரு சிறிய நிலப்பரப்பாக இருக்கின்றபோதும் அது முகங்கொடுக்காத அனர்த்தங்களும் இல்லை. அவசர நிலைகளும் இல்லை. மழை, வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் அவ்வப்போது நிகழ்வதும் உள்நாட்டுப் போர், தீவிரவாதம், இன முரண்பாடுகள், கலவரங்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள், பொருளாதார சரிவுகள், பரிய விபத்துக்கள் என அவசர நிலைமைகள் ஏற்படுவதும் தொடர்கதையாகத் தான் இருக்கின்றது. இந்தப்பின்னணியில் சீனாவின் வுஹானில் ஏற்றெடுத்த கண்ணுக்குத்தெரியாத கொரோனா எனப்படும் விலங்கிலிருந்து வெளியான வீரியமிக்க வைரஸ் கிருமிக்கும், மனிதனுக்கும் இடை…

  24. ஒரே இரவில் தீர்வு? என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வலைத்தளத்தில் எழுதிவரும் ‘உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும்’ என்ற கேள்வி - பதில் தொடரில், அண்மையில் கேட்கப்பட்டிருந்த, ‘ரணில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டுவிவார் போல இருக்கிறதே’ என்ற கேள்விக்கு, ‘ஏறச்சொன்னால் கழுதைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்’ என்ற நிலையில்த்தான், நமது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பலகாலமாய் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று தனது பதிலில் குறிப்பிட்டு இருந்தமை, கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, இலங்கை அரசாங்கம், தமிழ்த்தேசம் ஆகிய இருதரப்பினரிடையே ஏற்பட வேண்டுமாயின், இருதரப்பும் சமரசங்கள…

  25. இலங்கை ஒற்றையாட்சியை நிலை நிறுத்தும் ஏமாற்றுவித்தைகளாக அரங்கேறும் ஒரே குப்பையில் ஊறிய மட்டைகளே இந்திய-இலங்கை ஒப்பந்தமும் 13 ஆவது திருத்தமும் தேசிய இனம் என்ற அங்கீகாரத்தைக் குறைத்து பல்லினச் சமூகங்களாக்கும் முயற்சி இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரியத் தாயகமாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை நேர்த்தியாக அங்கீகரிக்கவில்லை. வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழிடம் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டையே முன்வைத்தது. கிழக்கில் மட்டும் நிரந்தர இணைப்புக்கான பொதுவாக்கெடுப்பு என்று தமிழ்த் தேசத்தின் நிலவொருமைப்பாட்டைச் சிக்கலுக்குள்ளாக்கியது. அந்த ஒப்பந்தம் 'பல்லின சமூகம்' என்ற சொற்பிரயோகத்தைக் கையாண்டிருப்பதில் ஏதோ விடயம்…

    • 0 replies
    • 327 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.