Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கச்சதீவை கையில் எடுத்த மோடி!இலங்கைக்கு நெருக்கடியா? | தாயகக்களம் | செல்வின் மரியாம்பிள்ளை

  2. கச்சத்தீவில் பறிபோகும் உரிமைகளை தமிழக அரசு வேடிக்கை பார்க்கலாகாது! கச்சத்தீவு புதிய அந்தோணியார் ஆலயம் | படம்: மயூரப்பிரியன் ஒப்பந்த ஷரத்துகள், கச்சத்தீவில் உள்ள நம்முடைய பாரம்பரிய உரிமைகளை உறுதிசெய்பவை கச்சத்தீவு அந்தோணியார், தங்களின் கடல் பாதுகாவலர்களில் ஒருவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் மீன்பிடித் தொழில் வளமாக இருக்க வேண்டியும் உயிர்ப் பாதுகாப்புக்கு நன்றி பாராட்டியும் பங்கேற்கும் நிகழ்வாக அந்தோணியார் ஆலயத் திருவிழாவை நம்மவர்கள் பாவிக்கிறார்கள்! கச்சத்தீவில் புதிய அந்தோணியார் கோயில் திறப்பு விழா (டிசம்பர் 23) இன்று நடக்கிறது. ரூ.1 கோடியில் புதிய ஆலயத்தைக் கட்டியிருக்கிறது இலங்கைக் …

  3. கச்சத்தீவு : புலிகள் இருக்கும்வரை இலங்கை பயந்தது | வரதராஜன் Ex Police Officer https://m.youtube.com/watch?v=2AYuQtm63bU

  4. கஜனிடம் சில கேள்விகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூலை 22 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்கிற இயக்கத்தின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்கிற கட்சியின் செயலாளர் நாயகமுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் காலத்தின் தேவை கருதி, சில கேள்விகளை எழுப்ப முயல்கிறேன். இங்கு எழுப்பப்படும் கேள்விகளில் சில, கஜேந்திரகுமாரையும் காங்கிரஸையும் நோக்கி, இந்தப் பத்தியாளரால் ஏற்கெனவே எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், மீண்டும் அவரை நோக்கி, கேள்விகளை எழுப்ப வேண்டிய தேவை, திங்கட்கிழமை (20) யாழ். நகரப் பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்ட “...எங்கோ இருக்கும் முழங்காவிலில் ஒளிந்து கொண்டு...” என்கிற வார்த்தைப் ப…

  5. கஜனின் அழைப்பு ? - நிலாந்தன் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயல்படுவதற்குத் தான் தயாராக இருப்பதாக கஜேந்திரக்குமார் அறிவித்துள்ளார். அந்த அழைப்பின் அடிப்படையில் அண்மையில், யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில் இரண்டு கஜன்களும் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள். முதலாவதாக இந்த நகர்வை வரவேற்க வேண்டும். ஏனென்றால் இது ஏதோ ஒரு அடிப்படையில் தமிழ் ஐக்கியத்துக்கான முயற்சிதான். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளின் பின்னணியில் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது. என்பிபி அரசாங்கம் ஒரு யாப்பை மாற்றக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கிய ஒரு யா…

  6. கஜனின் உரை: ஓரினமாகத் திரள்வது! நிலாந்தன்… December 6, 2020 நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார் ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்து வாக்களித்தத…

  7. கஜனின் உரை: ஓரு இனமாகத் திரள்வது? http://www.nillanthan.com/wp-content/uploads/2020/12/Kajan-copy-2.jpg நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார் ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேச…

  8. கஜனின் சந்தேகத்துக்குரிய பிடிவாதம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 17 புதன்கிழமை, பி.ப. 05:23 Comments - 0 தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, பலமான அணியொன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற சிந்தனையின் வழி செயற்பட்டவர்களில் அநேகர், இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். புலிகள் இல்லாத அரங்கில், கூட்டமைப்பு ஏகநிலையை அடைந்தது முதல், மாற்று அணியொன்றுக்கான தேவை, தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணியொன்றைக் கட்டமைக்கும் காட்சிகளை, மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகளே, கலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம். அரசியல் என்பது, நண்பர்களைக் காட…

  9. கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 டிசெம்பர் 19 புதன்கிழமை, மு.ப. 02:09Comments - 0 விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் ஒற்றைச் சிந்தனையோடு, யாழ். மய்யவாத அரசியல் அரங்கு அண்மைய நாள்களில் இயங்கி வருகிறது. தொடர்ந்தும், தூய்மைவாதம் பேசிவரும் கஜேந்திரகுமாரும், அவரது விசுவாசிகளும் புதிய கூட்டணிக்குள் தம்மை இணைப்பது தொடர்பில் நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். இது, கூட்டணியை உருவாக்குவதற்காக உழைக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கு, நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. யாழ். பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் அண்மைய நாள்களில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல்களுக்குச் சூட்டப்பட்ட தலைப்…

  10. கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புகளும் நம்பியிருக்க, அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கவனம் பெறும் வகையிலான கலகக்குரல்களை எழுப்பியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த வரிசையில், இறுதியாக இணைந்தவர் சி.வி.விக்னேஸ்வரன். 2015 ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் அவரின் கலகக்குரல் சற்று பலமாகவே ஒலித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்…

  11. கஜன்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் தமிழீழ விடுதலைப் புலிகள், தனிநாடு கோரிப் போராடவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (கஜன்கள் அணி) செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் பேசிய விடயம், கடந்த வாரம் சர்ச்சையானது. அதுபோல, அதேவாரத்தில் வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில், பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்திருந்த முன்னணி, இந்திய தூதரக அதிகாரியின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அந்த ஒத்திவைப்புப் பிரேரணையைக் கைவிட்டது. இது, வடக்கு மீனவர் அமைப்புகளால் நம்பிக்கைத் துரோகமாக விமர்சிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நெருக்கடியான காலப்பகுதியில், (குறிப்பாக, 2010 பொத…

  12. கஜூவும் அவாவும் மொஹமட் பாதுஷா / இலங்கையின் தேசிய விமான சேவையான, ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானத்தில், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட தரம் குறைந்த மரமுந்திரிகைப் பருப்பு (கஜூ) பற்றி, ஜனாதிபதி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதையடுத்து, அது தொடர்பில், தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் போல, முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படுவதையும் காண முடிகின்றது. ‘கஜூ’ விடயத்திலேயே, நாட்டின் ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இவ்வளவு அக்கறை செலுத்துவது பாராட்டத்தக்கதும் மகிழ்ச்சிகரமானதும் என்பதில் மறுகருத்தில்லை. ஆனால், இதே அக்கறையை, நாட்டில் இடம்பெறுகின்ற முக்கியத்துவம் வாய்ந்…

  13. கஜேந்திரகுமாரா? சுமந்திரனா?: தமிழ்த் தேசியமும் குழாயடிச் சண்டைகளும் இன்றைய பரந்துபட்ட சமூக வாழ்க்கை முறையை அடைந்து கொள்வதற்கு முன்னதாக, சிறு குழுக்களாக மனிதன் வாழ்ந்துவந்தான். இந்தக் குழுக்களிடையே மிக நெருக்கமான ஒற்றுமையிருந்தது. தம் குழு ஒற்றுமையையும் விசுவாசத்தையும் ஏனைய அனைத்தையும் விட உயர்வானதாகவும், மதிப்பானதாகவும் அந்தக் குழு உறுப்பினர்கள் கருதினார்கள். இதன் மறுபக்கம், தமது குழு அங்கத்தவர்கள் அல்லாதவர்களுடன் அத்தகைய ஒற்றுமையும் மதிப்பும் இருக்கவில்லை. மேலும், தம் குழு அங்கத்தவர்கள் அல்லாத சிலருடன், எதிர்ப்பும் வைரியமும், போட்டியும் வெறுப்பும், துவேசமும் கூட ஏற்பட்டது. இத்தகைய 'குழுக்களாக' இயங்கும் மனப்பான்மையைச் சிலர் tribalism என்று விளிக்கிறார்கள…

  14. கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டன? நிலாந்தன். படைப்புலனாய்வாளர்கள் அரசியல் கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு வருவது கடந்த 14 ஆண்டு கால தமிழரசியலில் புதியது அல்ல. ஏன் தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டங்களின் பின் அங்கேயும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது.பொதுவாக படைப்புலனாய்வுத்துறை எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை புலனாய்வு செய்வதற்கு மாறு வேடங்களிலும் வரும். அல்லது வெளிப்படையாகவும் வரும் 2009க்கு பின் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட்டங்களில்,ஏன் இலக்கிய கூட்டங்களில்கூட படைப்புலனாய்வுத்துறை வெளிப்படையாக தன் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது உண்டு.வொய்ஸ் ரெக்கோர்டரை வெளிப்படையாகவே அங்குள்ள ஒலிபெருக்கி பெட்டிகளின் மீது வைப்பதுண்டு. ஊர்வலங…

  15. கஜேந்திரகுமாரின் தோல்வி கொள்கை நிலைப்பாட்டின் தோல்வியா? சர்வேந்திரா படம் | TAMIL DIPLOMAT நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முன்னர் வெளியாகியிருந்த எனது கட்டுரையில் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம் புறளாமல் பாதுகாப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைப்பது துணை புரியும் என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தேன். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையாவது வெற்றி கொள்ளும் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை. இதனை கஜேந்திரகுமார் முன்வைக்கும் கொள்கையின் தோல்வியாக வியாக்கியானப்படுத்துவோரும் உள்ளனர். தமிழ்த…

  16. ஒரு சீனப் பழமொழியுண்டு – அதாவது, மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை. இதே போன்றுதான் நாமே, நமது குப்பைகளை கிளறுவதில் என்ன இருக்கின்றது, என்று நாம் அமைதியாக இருந்தாலும் கூட, சிலரது நடவடிக்கைகள் எல்லை மீறும் போது, அவர்கள் தொடர்பான உண்மைகளை தொடர்ந்தும் பேசாமல் இருக்க முடியவில்லை. தமிழ் மக்களுக்காக, சிலரது மக்கள் விரோத அரசியலை நாம் அம்பலப்படுத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் இன்னும் ஓயவில்லை. எழுக தமிழிற்கு எதிராக, முக்கியமாக பேரவையின் இணைத்தலைவராக இருக்கின்ற முன்னைநாள் வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிரான பிரச்சாரங்கள் இப்போதும் முற்றிலுமாக ஓய்ந்துவிடவில்லை. இவ்வாறான அவதூற…

  17. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த ஏழாம் திகதி காலை கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டு, கிளிநொச்சி பொலிஸின் வாக்குமூலம் பெற்ற பின்னர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்வதிலும், உடனே நீதவான் முன்பு ஆஜர் படுத்துவதிலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் பிணையில் விடு…

  18. Published By: DIGITAL DESK 2 08 MAY, 2025 | 10:04 AM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கை தமிழ் அரசியல் களத்தில் தலைமைத்துவம் தொடர்பான அக்கறைகள் அண்மைக்காலமாக உத்வேகம் பெறும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் யார் எதிர்கால தமிழ் அரசியல் தலைவராக மேன்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார் என்பது உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு விவாதத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கும். வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு கட்டங்களில் செல்வாக்குமிக்க தலைவர்கள் வெளிக்கிளம்பி ஆதிக்கம் செய்த தோற்றப்பாடு இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றின் எடுத்துக்காட்டான ஒரு அம்சமாகும். பொன்னம்பலம் சகோதரர்கள் இராமநாதனும் அருணாச்சலமும், அருணாச்சலம் மகாதேவா , ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி…

  19. கஞ்சா அரக்கனிடம் அகப்படாதிருப்போம் அண்­மைக்­கா­ல­மாக கொழும்பு மற்­றும் யாழ்ப்­பா­ணத்­தைத் தள­மா­கக் கொண்டு வெளி­வ­ரும் சகல தமிழ்ப் பத்­தி­ரி­கை­க­ளில் மட்­டு­மென்­றல்­லாது, கொழும்­பி­லி­ருந்து வெளி­யா­கும் சிங்­க­ளப் பத்­தி­ரி­கை­கள் பல­வற்­றி­லும்கூட அடிக்­கடி இடம் பிடித்­து­வ­ரும் முக்­கிய செய்­தி­யொன்­றாக அமை­வது, கஞ்­சாக் கடத்­தல் முறி­ய­ டிப்­புச் சம்­ப­வங்களாகும். கேர­ளக் கஞ்சா என்ற பெய­ரில் அழைக்­கப்­ப­டும் இந்­தப் போதைப் பொருள், இந்­திய மாநி­லங்­க­ளில் ஒன்­றான கேரள மாநி­லத்­தில் பெரிய அள­வில் விளை­விக்­கப்­பட்டு தமிழ் நாட்­டின் கட­லோ­ரக் கிரா­மங்­க­ ளூ­டாக கடல் வழி­யாக இலங்­கை­யின் வட பகு…

  20. கஞ்சா காவிகள் கொரோனா வைரஸ் காவுவார்களா? கே. சஞ்சயன் / 2020 ஜூன் 20 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அலை, வடக்கிலிருந்தே ஆரம்பிக்கக் கூடும் என்ற எச்சரிக்கை, சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதற்கு, முக்கிய காரணியாக இருப்பது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள 'தொப்புள் கொடி உறவு'தான். காலம் காலமாக, இந்தியாவுடன் 'தொப்புள் கொடி உறவு' உள்ளவர்களாகத் தமிழர்கள் பெருமையுடன் கூறிக் கொள்வதுண்டு. பல சமயம் இந்த உறவு, பெருமையாகவும் பலமாகவும் கூட இருந்ததுண்டு. ஆனால், இப்போது இந்த உறவே ஆபத்தானதாகவும் மாறிவிடக் கூடிய சூழலும் உள்ளது. இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக்கு நீரிணை வழியாக, குறுகிய …

  21. 13 AUG, 2025 | 06:21 PM முதலீட்டு வாரியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி 7 வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கடந்த 12.08.2025 அன்று தெரிவித்தார். இதன் நோக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பயிர்ச்செய்கையின் அனைத்து பகுதிகளையும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்துவதும், நாட்டிற்கு பொருளாதார நன்மைகளைப் பெறுவதும் என்பதை அவர் மேலும் தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில், இந்த முடிவை இலங்கையில் செயற்படுத்த எத்தணித்திருந்தனர். எனினும், இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மனநல மருத்துவர்கள் சங்கம், சமூக மருத்துவர்கள் சங்கம் மற்றும் ADIC நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகங்களின் செல்வாக…

  22. கஞ்சாக் கடத்தலும் வடக்கின் மனநிலையும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 30 புதன்கிழமை, மு.ப. 01:43 Comments - 0 கடந்த சில மாதங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம்- கொழும்புக்கிடையில் அடிக்கடி பயணப்படும் நண்பரோடு, பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் போது, பேசிக் கொண்டிருந்தேன். அவரின் பயணப்பை முழுக்க, சிறிய பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது. பயணப்பையில் சில ஆடைகளைத் தவிர பெறுமதியான பொருட்கள் எதுவும் இருப்பது மாதிரித் தெரியவில்லை. அவ்வாறு இருக்க, இத்தனை பூட்டுகள் இந்த பயணப்பைக்கு ஏன் போட்டிருக்கிறார் என்று சந்தேகம்? அவரிடமே கேட்டேன். “...பாக்குக்குள் பெரிசாக ஒன்றும் இல்லை. சில உடுப்புகள்தான் இருக்கு. ஆனால், இப்ப வாகனங்களில் கஞ்சா கடத்திறாங்கள். அடிக்கடி பொ…

  23. கஞ்சி – கார்த்திகைப் பூ – செருப்பு – நிலாந்தன்! இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்தில் பெரிய அளவில் அமோகமாக இருக்கவில்லை. 2009க்கப் பின்வந்த உடனடுத்த ஆண்டுகளில் படைத்தரப்பு வெசாக் கொண்டாட்டங்களை பிரமாண்டமான அளவில் ஒழுங்கு படுத்தியது. ஆரியகுளம் சந்தியிலும் முத்த வெள்ளியிலும் வெசாக் பந்தல்கள் அதிகமாக அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். ஆனால் இம்முறை ஒப்பீட்டளவில் குறைந்த அளவு ஜனங்களே ஆரியகுளம் சந்தியில் காணப்பட்டார்கள். ஒரு ஊடகவியலாளர் கேட்டார், முள்ளிவாய்க்காலில் திரண்ட ஜனங்களை விடவும் ஆரிய குளத்தடியில் திரண்ட சனங்களின் தொகை அதிகமா? என்று. இல்லை. அது குறைவு தான். ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல்களில் வழங்கப்பட்ட சாப்பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.