அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கெட்ட சகுனம் - மொஹமட் பாதுஷா கட்டமைக்கப்பட்டதும் உறுதியான பின்புலத்தைக் கொண்டவர்களுமான ஒரு கடும்போக்கு குழுவினரின் இனத்துவ அத்துமீறல்களைச் சொல்லப்போய், அது சகோதர வாஞ்சையுடன் இன்னுமிருக்கின்ற சிங்கள மக்களின் மனங்களின் வேண்டாத வலிகளை ஏற்படுத்தி விடுமோ என்ற நெருடல், இனவாதம் பற்றி ஒவ்வொரு முறை எழுதும் போதும் - வெளியே செல்லும் தந்தை முன்னே ஏக்கத்தோடு நிற்கும் ஒரு குழந்தைபோல - முன்னே வந்து நிற்கின்றது. ஆனாலும், சின்னச் சின்ன சம்பவங்கள்தான் வரலாறுகளாகின்றது. உலகப் போர்களின் வெற்றி என்பது ஆயுதங்களுக்குத்தான் வெற்றியே தவிர, அங்கு ‘மனிதம்’ சொற்ப அளவேனும் வெற்றி பெறவில்லை. இப்படி இன்னும் நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். …
-
- 0 replies
- 647 views
-
-
சுமந்திரன் – பீரிஸ் சந்திப்பு சர்ச்சைகள் ஓர் அவதானம் ! - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், அமைச்சர், பேராசிரியர் பி.எல்.பீரிசும் சந்தித்தித்துக் கொண்டது, தொடர்பில் பலவாறான அபிப்பிராயங்கள் உலவுகின்றன. இந்த சந்திப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிஸின் முன்னிலையில், அவரது இல்லத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இந்த விடயம் தமிழ்ச் சூழலில் கூடுதல் கவனத்தை பெற்றிருக்கின்றது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனைவருமே வீடுகளில் இருந்தவாறே பணியாற்றி வருகின்றனர். எனவே குறித்த சந்திப்பு தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றமையை கூடுதல் முக்கியத்துவம் கொண்டதல்ல. …
-
- 3 replies
- 647 views
-
-
வரவேண்டாம், வாருங்கள் - செல்வரட்னம் சிறிதரன்:- 03 நவம்பர் 2013 'பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆள்பவன்தான இறைவன்' என்றொரு சினிமா பாடல் வரியொன்று உள்ளது. பூஜ்ஜியம் என்பது ஒன்றுமில்லை, வெறுமை என்பதுதான் கருத்து. ஒரு வெறுமைக்குள்ளே ஓர் அரசை ஆள்வதென்பது முடியாத காரியம். இந்த முடியாத காரியத்தை அல்லது, இல்லாத ஒன்றைச் செய்வதென்பது, மிகமிக கெட்டித்தனமான செயலாகும். இந்தச் செயலைத்தான், இந்த இராஜதந்திரத்தைத்தான் இறைவன் செய்கின்றான் என்பதையே அந்தப் பாடல் வரி எடுத்துக் கூறுகின்றது. இந்த பூஜ்ஜியத்துக்குள் இராஜ்ஜியத்தை ஆள்கின்ற மாயவித்தையைத்தான், மந்திர விளையாட்டைத்தான், இராஜதந்திரத்தையே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, வடமாகாண சபையின் ஊடாகச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின…
-
- 1 reply
- 647 views
-
-
-
ஆளை ஆள் விழுங்கும் தமிழரின் பண்பு தமிழர்கள் மத்தியிலுள்ள மூத்த அரசறிவியலாளர் என்று சொல்லத்தக்கவரும், அரசியல் ஆய்வாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய, “அரசியல் யாப்பு- டொனமூர் யாப்பு தொடக்கம் உத்தேச சிறிசேன யாப்பு வரை“ என்ற நூலின் அறிமுக விழா அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த விழாவில் நூல் அறிமுகத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை விட, அதன் உள்ளடக்கம் சார்ந்த கருத்துக்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைவிட, அரசியல் முரண்பாடுகள் பற்றிப் பேசுவதற்கே பேச்சாளர்கள் பலரும் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர், துருவநி…
-
- 0 replies
- 647 views
-
-
-
- 0 replies
- 647 views
- 1 follower
-
-
மஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்:- புதிய யாப்பு நடைமுறைக்கு வருதில் சிக்கல் ஏற்படலாம் என்ற எதிவு கூறலின் அடிப்படையில் 20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து மாகாண சபைகளை இலகுவாக கலைக்கும் அதிகாரத்தை நல்லாட்சி அரசாங்;கம்உருவாக்குகின்றதா? -அ.நிக்ஸன்- இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை அது பயங்கரவாத செயற்பாடுகள்தான் என்று அடித்துக் கூறிய முன்னாள் மஹிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக அந்த நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதை அவருடைய பேச்சுக்கள் காண்பிக்கின்றன. ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய காலம் முதல் இன்று வரை இனப்பிரச்சினை தீர்வுபற்றி எந்தவொரு இடத்திலும் எவுதும் பேசியதில்லை. இந்த நிலையில் அரசியல் தீர்வுக்கு மஹிந்த ராஜபக்ச ஒத்துழைப்பு வ…
-
- 2 replies
- 647 views
-
-
தாக்குப் பிடிப்பாரா மைத்திரி? கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 04 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:50 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எப்படி வழிநடத்துவது என்று தெரியாமல், அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது குழம்பிப் போயிருக்கிறார். 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டார். சிறிசேனவின் முயற்சியால், அந்தப் பதவி அவரது கைக்கு வரவில்லை. சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரின் முயற்சியால் தான், கட்சியின் தலைமைப் பதவி மைத்திரிபால சிறிசேனவின் கைக்கு வந்தது. மிகஇலகுவாக, கட்சித் தலைமைப்…
-
- 1 reply
- 647 views
-
-
ஈராக்கின் நெருக்கடி தொடர்கதையா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) ஈராக்கின் வடபகுதியில் அமைந்திருக்கும் குர்திஸ்தான் மாகாணத்தில் தொன்றுதொட்டு ஒரு தேசிய இனமாக வாழ்ந்த குர்தீஸ் இனமக்கள் ஓட்டமான் அரசாட்சிக்குப் பின்னர் தமக்குத் தனிநாடு வேண்டும் என்கின்ற அபிலாஷைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தினார்கள். அவர்களுடைய தனிநாட்டு முஸ்தீபுகள் சதாம் ஹுசைன் ஆட்சிக்கு முன்னரும், சதாம் ஹுசைன் ஆட்சிக்காலத்திலும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டன. சதாமின் காலத்தில் குர்தீஸ் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு சதாமின் இராணுவம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி கிளர்ச்சிகள…
-
- 0 replies
- 647 views
-
-
மீண்டும் வந்த ஆவா குழு பின்னணியில் யார்? மாணவர்களின் மரணத்துக்கு தமிழ்ப் பொலிஸாரே காரணம் என்பதை வலியுறுத்தும் வகையிலும், அவர்களை இனவிரோதிகளாகவும், சமூக விரோதிகமாணவர்களின் மரணத்துக்கு தமிழ்ப் பொலிஸாரே காரணம் என்பதை வலியுறுத்தும் வகையிலும், அவர்களை இனவிரோதிகளாகவும், சமூக விரோதிகளாகவும் காண்பிக்க முனைந்திருந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். ளாகவும் காண்பிக்க முனைந்திருந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆவா குழு பற்றிய பீதி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியருகே, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால், கொல…
-
- 0 replies
- 647 views
-
-
பம்மாத்து அபிவிருத்தி அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய உணவு உட்கொண்ட பிள்ளைகள், தங்கள் கைகளையும் தட்டுகளையும் கழுவ முடியாமல்த் தடுமாறினார்கள். இவற்றை எல்லாம் காண நேரிட்டபோது, நம்மிடம் எவையிருந்தும் அந்தக் கணத்தில் பிரயோசனமில்லைப் போல் தோன்றியது. நீரைத் தடங்கலின்றிப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து, சிந்திக்க வேண்டிய தேவை எழுந்தது. ஒரு காலத்தில், வாளிகளால் அள்ளிக் குளித்த நமது கி…
-
- 0 replies
- 647 views
-
-
வலுவேறாக்கம் இல்லாத- இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையும் ராஜபக்சக்களும் ஈழத் தமிழர்களின் அரசியல்சார்ந்த விவகாரங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் சுயாதீனமற்ற தன்மை இலங்கை ஒற்றையாட்சி அரசின் (Unitary State) நீதித்துறை எப்போதும் சுயாதீனமாகச் செயற்பட்டதாகக் கூற முடியாது. சில நேரங்களில் சுயாதீனமாகச் செயற்பட்டது என்று கூறினாலும் அது சிங்கள நிலை சார்ந்ததாக அமைந்திருக்கும். ஆனாலும் ஆட்சியாளர்களின் தேவை கருதி சில முக்கியமான சந்தர்ப்பங்களில், சுயாதீனத் தன்மை இழந்ததும் உண்டு. 1999 ஆம் ஆண்டு சந்திரிகா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறாணி பண்டாரந்யாக்கவை மூப்பு நிலைக்கு மாறாக உயர் நீதிமன்ற நீதியரசர…
-
- 0 replies
- 647 views
-
-
சிதைந்த மாற்றுத் தலைமைக் களம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 10 தமிழ்த் தேசிய அரசியலில், 'மாற்றுத் தலைமை' என்கிற உரையாடல் களம், கடந்த ஐந்து ஆண்டுகளில் என்றைக்கும் இல்லாதளவுக்கு நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அதுவும், மாற்றுத் தலைமை பற்றிய நம்பிக்கையைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த தரப்புகளாலேயே 'நீக்கம்' செய்யப்பட்டு இருக்கின்றது என்பதுதான் வேதனையானது. புலிகளுக்குப் பின்னரான காலத்தில், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியலில், அதிருப்தியுற்ற தரப்புகளும் அப்படித் தங்களைக் காட்டிக் கொண்ட தரப்புகளும் புலம்பெயர் தேசமும், 'மாற்றுத் தலைமை' என்கிற உரையாடல் களத்தைத் திறந்தன. குறிப்பாக, 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், கூட்டமைப்பி…
-
- 0 replies
- 647 views
-
-
புலம்(ன்) பெயர் தமிழர்களின் கோடைக்கால விடுமுறையும் பொய்முகங்களும் – இரா.துரைரத்தினம் Published on September 1, 2015-1:28 pm · No Comments புலம்பெயர் தமிழர்கள் என்ற அடைமொழியுடன் மேற்குலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களை பலம்மிக்க சக்தியாகவும், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களின் மேய்ப்பர்கள் தாமே என்றும் ஒரு கற்பனை உலகிலேயே வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை. உதாரணமாக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் என அழைக்கப்படும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு, ஈழத்தமிழர் அவை, நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற பல்வேறு அமைப்புக்களும் தங்களை சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருந்தனர். இந்த ஒளிவட்டங்களை எல்லாம் கடந்த பொதுத்தேர்தலில் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக தகர்த்தெறிந்…
-
- 7 replies
- 647 views
-
-
லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. ச…
-
- 4 replies
- 646 views
-
-
காலம் உண்மையைக் காட்டும் கண்ணாடி அரசியல் பின்னணி எதுவுமின்றி, 1972 ஆம் ஆண்டின் அரசமைப் பின்கீழ் பிரதமர் பதவிக்கும், 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பின்கீழ் ஜனாதிபதிப் பதவிக்கும் நாட்டு மக்களது வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் ஆர்.பிரேமதாச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரே. பிரேமதாசவின் தந்தையார் எந்தவித அரசியல் தொடர்புகளும் இல்லாத, மத்திய கொழும்புப் பகுதியின் சாதாரணமானதொரு மனிதர். மைத்திரிபால சிறிசேனவின் தந்தையார் ஒரு விவசாயி. மைத்திரிபாலவின் இரத்த உருத்துள்ள உறவினர்கள் எவரும்கூட அரசியலில் ஈடுபட்டதில்லை. டட்லி சேனநாயக்கவுக்கு விசுவாசமாக உழைத்ததன் மூலமே பிரேமதாசவால் தமது சொந்த இடமான வாழைத்தோட்டத்திலிருந்து அந்தவேளையில் கொள்ளுப் பிட்டியிலிருந்த …
-
- 0 replies
- 646 views
-
-
ஈரான்: சூழும் போர்மேகங்கள் போரின் அவலம் சொல்லி மாளாதது. ஆனால், போர்கள் இன்றிய காலமொன்றை வரலாற்றில் காணவியலாது. இன்று, போர்கள் பலரின் சீவனோபாயமாகி விட்டன. ஆயுத விற்பனை ஒருபுறமும், அதிகாரத்துக்கான ஆவல் மறுபுறமும் எனப் போர்கள் இன்று தவிர்க்க இயலாதனவாகி விட்டன. போர்கள் பற்றிய அறிக்கையிடல்களும் அதன் அவலத்தையன்றி, நவீன தொழில்நுட்பத்தையும் வெற்றியாளர் யார் என்பதையும் தெரிவிக்கும் தன்மையுடையனவாய் மாறிவிட்டன. இன்று, ஈரானைப் போர்மேகம் சூழ்ந்துள்ளது. அதற்கான முதலாவது அடியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம்…
-
- 0 replies
- 646 views
-
-
முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான, பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதற்கு, அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுத்தூபி மற்றும் பொது நினைவு தினம் ஆகியவற்றை முடிவு செய்வது தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை மீதான விவாதம், கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே, பொது நினைவுத் தூபியை, அநுராதபுரத்தில் அமைக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவ…
-
- 0 replies
- 646 views
-
-
தமிழ்மொழியை புறக்கணிக்கிறதா பா.ஜ.க? தி.மு.க கிளப்பும் திடீர் பிரசாரம் மொழிப்போருக்கான களம் மீண்டும் தமிழகத்தில் அமைந்து விடுமோ என்ற அச்ச உணர்வு அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. ஹிந்தி திணிப்பு என்ற காரணத்தையும் ‘நீட்’ தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவில்லை என்ற அடிப்படையிலும் ‘தமிழ் மொழி காப்போம்’ என்று மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம், விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது. ஹிந்தி எதிர்ப்புப் போர் தமிழகத்தில் 1967 இல் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது என்பது வரலாற்று உண்மை. ஆனால், அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி. இந்த முறை ம…
-
- 0 replies
- 646 views
-
-
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் சரியானதா? கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் மிகவும் மோசமான முறையில் நடந்துகொள்ளும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறு நடைபெறும் சம்பவங்கள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை கோவைக்கு முரணாக காணப்படுகின்றது. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை மற்றும் நற்பண்புகளில் முக்கியமானவை சில பின்வருமாறு, சகல உறுப்பினர்களும் சபையின் ஒவ்வொரு அமர்விற்கும், அத்தக…
-
- 1 reply
- 646 views
-
-
நில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும் கிரிசாந்த் முதலில், ஒரு வெற்றி பெற்ற போராட்டத்தின் கதையிலிருந்து தொடங்குவோம், ஒரு ஜனநாயகப் போராட்டத்தின் எல்லா வசீகரங்களுடனும் நிகழ்ந்து முடிந்திருக்கின்ற "பிலக்குடியிருப்பு" மக்களின் போராட்டத்தை உங்களில் பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள். ஒரு மாசி மாத ஆரம்பத்தில் தொடங்கி பங்குனி பிறப்பதற்குள், அரசை அழுத்தத்திற்குள்ளாக்கியும், வெகுசனத்தையும் குறிப்பாக இளைஞர்களையும் தெற்கு மக்களையும் கூட தனது போராட்டத்தின் நியாயத்தினை உணர்வுபூர்வமாகவும் தர்க்க பூர்வமாகவும் நிறுவி தங்களது காணிகளுக்குள் உள் நுழைந்த மக்களின் கதை அது. பனி கொட்டும் மாசியின் இருளிலும் கொதிக்கும் அதன் பகலில் தார் வீதியிலும் …
-
- 0 replies
- 646 views
-
-
-
அன்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு! ஒருமுறை (2013) கிளிநொச்சியில் வட மாகாண சபையின் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதில் உரையாற்றிய தாங்கள், கோடாலிக்காம்பு பற்றிய கதை ஒன்றை கூறியிருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள். ஒரு காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டதாகவும் அதற்கு கோடாலிக் காம்பாக மாறிய அந்தக் காட்டிலுள்ள மரம் ஒன்றே காரணம் என்றும் அந்தக் கதையை சொல்லி முடித்தீர்கள். அன்றைய முதல்வர் விக்னேஸ்வரனைக் குத்துவதற்கே அந்தக் கதையை சொன்னீர்கள். இப்போது கனகச்சிதமாக அந்தக் கதை உங்களுக்குத்தான் பொருந்துகின்றது. சில வருடங்கள் ஓடி மறைந்திருக்கின்ற இன்றைய நிலையில், இப்போது யார் கோடாலிக்காம்பு என்பதற்கான விடையும் கிடைத்திருக்கிறது. திரு. விக்னேஸ்வரன் அந்த…
-
- 1 reply
- 646 views
-
-
-
- 1 reply
- 646 views
-
-
ஒளித்து விளையாடுதல் முகம்மது தம்பி மரைக்கார் அரசியல் அரங்கில் காலத்துக்குக் காலம் உதைத்து விளையாட ஏதோவொரு பந்து கிடைத்து விடுகிறது. பந்தினுடைய பருமன் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. விளையாடத் தெரியாதவர்கள் கூட, பந்துகளை வைத்து 'ஆடி'க் கொண்டிருப்பதுதான் அரசியல் அரங்கில் ஆச்சரியமாகும். 'வடக்கு - கிழக்கு விவகாரம்' என்பது, அரசியல் அரங்கில் அடிக்கடி விழுகின்ற பந்தாகும். இப்போதும், 'அந்த'ப் பந்து அரசியல் அரங்கில் வந்து விழுந்திருக்கிறது. உதைத்து விளையாடும் கால்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாட்டினை புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் தீர…
-
- 0 replies
- 645 views
-