அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
அண்மையில் ஜந்து கட்சிகள் இணைந்து ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்திருந்தன. நீண்ட காலமாக, தங்களுக்குள் தெருச் சண்டை பிடித்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரு நேர்கோட்டில் சந்தித்திருந்தமை ஒரு நல்ல விடயம்தான். ஆனாலும் அப்போதும் கூட ஒரு சிறிய விடயத்தை முன்வைத்து கஜேந்திரகுமார் வெளியேறிவிட்டார். ஐந்து கட்சிகளும் இணக்கம் காணப்பட்ட தமிழர் கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களில் ஒருவரான கோட்டபாய ராஜபக்ச நிராகரித்துவிட்டார். அவ்வாறான ஆவணத்துடன் வரும் கட்சிகளை தாம் சந்திக்கப்போவதில்லை என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுவிட்டார். இந்த நிலையில் அடுத்த பிரதான வேட்பாளரான சஜித் பிரேமதாச தமிழ் கட்சிகளை சந்திப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந…
-
- 0 replies
- 546 views
-
-
அரிசியின் அரசியல் எம்.எஸ்.எம்.ஐயூப் தற்போது நாட்டில் நிலவும் அரிசி பிரச்சனை தமது காலத்தில் உருவானது அல்ல, அது நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைவர்கள் கூறுவது உண்மை ஆயினும் அதை தீர்ப்பது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை எவராலும் மறுக்க முடியாது. கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சாதாரணமாக எந்த ரகத்திலாயினும் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 200 ரூபாவுக்கு குறைவாகவே இருந்தது. ஆனால் அத் தேர்தலுக்குப் பின்னர் சில சந்தர்ப்பங்களில் அவ்விலை 300 ரூபாவுக்கு மேலாகவும் அதிகரித்தது. சந்தையில் அரிசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடே இதற்குக் காரணமாகும். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிப…
-
- 0 replies
- 233 views
-
-
Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 03:40 PM https://www.dw.com Jeevan Ravindran இலங்கையில் மனித புதைகுழியொன்று தோண்டப்படும் ஒவ்வொரு தருணத்திலும் தம்பிராசா செல்வராணி உறக்கமிழந்தவராக காணப்படுகின்றார். "எங்கள் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது அவர்கள் தோண்ட ஆரம்பிக்கும்போது நாங்கள் பதற்றமடைகின்றோம்" என அவர் டிடயில்யூவிற்கு(dw) தெரிவித்தார். இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் இலங்கைஇராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போன தனது கணவர் முத்துலிங்கம் ஞானசெல்வத்தை 54வயது செல்வராணி தேடிவருகின்றார். 3 தசாப்தகால மோதலின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் யுத்தம் முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் பல பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
சமூகத் தூரமாதலும் சமூகப்பொறுப்பும் தனிமைப்படுதலும் தனிநபர்களும் மல்லியப்புசந்தி திலகர் இந்த சமூகத் தூரமாதல் (Social distancing) என்ற சொல்லாடலும் செயலும் நமது சமூகத்திற்கு புதியது. இதற்கு “சமூக இடைவெளி” எனும் சொல்லாடலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் சமூக இடைவெளி (Social Gaps) என்பதை வேறு விதமாக புரிந்து கொள்ளலாம். ஒரு வகையில் இந்த புதிய சூழலில் தூரத்தில் இருந்து ஒருவொருவருக்கு ஒருவர் உதவிகளைச் செய்து கொள்வதன் ஊடாக சமூக இடைவெளியைக் குறைக்க முடியும். ஆனால் அதனை சமூகப் பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும் (Social Responsibility). இந்த சமூகப் பொறுப்பு என்பது என்பது நமக்கு புதியதல்ல. ஒவ்வொரு தனிநபர்களும், தனிநபர்கள் பலர் சேர்ந்த அமைப்புகளும் சமூகத்துக…
-
- 0 replies
- 491 views
-
-
வவுனியாவில் புளொட்டின் வதைமுகாம் கிட்லர் இன்னும் சாகேல்ல.
-
- 0 replies
- 803 views
-
-
கிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல .. கிழக்குக்கான தனித்துவமான அரசியல் தேவைப்பாட்டை முன்னிறுத்துகின்றபோது அது தமிழ்த் தேசியத் துரோகமாகவும், பிரதேசவாதமாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமாகவும் திரிவுபடுத்தப்பட்டு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கிழக்குக்கான அரசியலை தமிழ்த் தேசியவாதத்தின் ஆரோக்கியமான அம்சமாகப் பார்த்து தமிழ்த் தேசியத்தினை சுய விமர்சனம் செய்துகொண்டு முன்கொண்டுசெல்ல முடியாதவர்களாக தமிழ்த் தேசியவாதிகள் இருப்பதோடு கிழக்குக்கான அரசியலை முன்வைப்பவர்கள் தொடர்பாக மிகமோசமான விமர்சனங்களை சமூகப் பொறுப்பற்ற விதத்தில் முன்வைப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான ஒரு விமர்சனத்துக்கான எதிர்வினையாகவே இப்பத்தி அமைகின்றது. …
-
- 0 replies
- 569 views
-
-
அரசியலமைப்புப் பேரவையில் இடம்பெறும் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பனவாக அமையவில்லை சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் ஓர் அர்த்தமுள்ள கருத்தைத் தெரிவித்திருந்தார். - “யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள் தான் 19ஆம் நூற்றாண்டில் சக்திவாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். யாருடைய கைகளில் பலமான விமானப் படை இருந்ததோ அவர்கள் தான் 20ஆம் நூற்றாண்டின் பலசாலிகளாகத் திகழ்ந்தார்கள். யாரிடம் ஊடக பலம் இருக்கின்றதோ அவர்கள் தான் 21ஆவது நூற்றாண்டின் சக்தியாகத் திகழ்வார்கள்” என்றார். அதாவது இன்றைய பலமானது பேனாவைச் சென்றடைந்துள்ளது என்பதைய…
-
- 0 replies
- 334 views
-
-
பலவீனமடையும் சிறுபான்மைக் கட்சிகள்.! - நா.யோகேந்திரநாதன் கடந்த சில வாரங்களாகக் கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டதுடன் உயர் நீதிமன்றம் வரைச்சென்று திருத்தங்களுடன் நிறைவேற்ற அனுமதியும் பெற்ற 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. காரசாரமான விவாதங்களின் பின் ஆதரவாக 156 வாக்குகளையும் எதிராக 65 வாக்குகளையும் பெற்று தேவைப்பட்ட மூன்றில் இரண்டு பங்குக்கு அதிகமான வாக்குகளையும் பெற்று நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச் சட்டம் நிறைவேறுமென்பது ஏற்கனவே தெரிந்திருந்த போதிலும் கூட இவ்வளவு அதிகப்படியான வாக்குகளைப் பெறும் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அதாவது இச்சட்டம் நிறைவேற எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரும் ஆதரவா…
-
- 0 replies
- 807 views
-
-
தமிழர்களின் அரசியலைக் கையாளநிபுணர் குழுவும் தேசிய சபையும்? – அகிலன் 23 Views இந்திய இராஜதந்திரிகள் முன்வைத்த யோசனையும், மாவையின் முன்னெடுப்பும் சாத்தியமானவையா? தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் கடந்த ஒருவார காலப் பகுதியில் வெளிவந்திருக்கும் இரண்டு செய்திகள் முக்கியமானவை. இரண்டு செய்திகளையும் பார்க்கும் போது முன்னேற்றகரமானவையாகவும், தமிழ்த் தேசியப் பிரச்சினையை மற்றொரு பரப்புக்குக் கொண்டு செல்வதற்கு உதவப் போவதாகவும் தோன்றலாம். ஆனால், உண்மையில் நடக்கப்போவது என்ன என்பதையிட்டு ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். முதலாவது செய்தி – கடந்த வாரம் கொழும்புப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியது; தமிழ் மக்களின் பிரச்சினைகள் …
-
- 0 replies
- 662 views
-
-
முக்கியமான வாய்ப்பை தவறவிட்ட இந்தியா Bharati உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்றை உருவாக்கியிருக்கும் ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை’ உடன்படிக்கை சீனா தலைமையில் ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தைச் சேர்ந்த 10 நாடுகளும் சேர்ந்து 15 நாடுகளைக் கொண்ட ‘விரிவான பிராந்திய பொருளாதார கூட்டுப்பங்காண்மை (Regional Comprehensive Economic Partnership –RCEP trade deal) உடன்படிக்கையொன்று நவம்பர் 15 கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலமாக உலகின் மிகப்பெரிய வாணிப கூட்டு அமைப்புக்களில் ஒன்று தோற்றம் பெற்றிருக்கிறது. இதில் இந்தியா பங்கேற்காதமை பெரும் கவனத்தை ஈர…
-
- 0 replies
- 928 views
-
-
ஜெனீவா அரங்கோடு கரைதல் புருஜோத்தமன் தங்கமயில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், எதிர்வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரை முன்வைத்து, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையில் வாதப் பிரதிவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் புதிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அக்கறை கொண்டிருக்கின்றது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், கூட்டமைப்பின் புதிய தீர்மானத்துக்கான முன்மொழிவு என்பது, மீண்டும் இலங்கைக்குக் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டது என்று விமர்சித்திருக்கின்றன. இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், போ…
-
- 0 replies
- 979 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-10
-
- 0 replies
- 348 views
-
-
போராடுவது என்றால் என்ன ? கிரிஷாந்த் (இந்தக் கட்டுரை கோப்பாபிலவில் உள்ள மக்களுக்கும் இன்னும் இன்னும் ஆயிரம் பிரச்சினைகளுடன் இருக்கும் சமூகத்துக்குமாக ) நமக்கு இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாயிருக்கிறது. அடுத்தடுத்து ஜனநாயக வழிப் போராட்டங்கள் ஜெனரேட் செய்யப்பட்டோ அல்லது தன்னெழுச்சியாகவோ உருவாகி நீண்ட நாட்களிற்குப் பின்னர் சமூக உரையாடல் ஒன்றை வயது வேறுபாடின்றி மெய் வாழ்க்கையிலும் சைபர் வெளியிலும் உருவாக்கி விட்டிருக்கிறது. எனது கடந்த ஏழு வருட அவதானிப்பில் இவ்வளவு வைரலாக இந்த விடயங்கள் உரையாடப்பட்டதில்லை, புதிய தலைமுறையின் நேர்மையையும் சமூக அக்கறையையும் சீண்டியதில்லை. இது ஒரு தொடக்கம். இதனை நாம் விளங்கிக் கொள்வது அல்லது ஏற்று…
-
- 2 replies
- 844 views
-
-
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் என்ன செய்யப்போகிறது அரசாங்கம் ரொபட் அன்டனி யுத்தக்குற்ற நீதிமன்றங்களை அமைப்பது குறித்து இப்போதைய காலகட்டத்தில் பேசுவதற்கு ஆரம்பித்தால் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சாத்தியமில்லாமல் போய்விடும். எனது ஆட்சிக்காலத்தில் இருந்ததை விடவும் சவால்கள் தற்போது அதிகம் "நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட் டால் ஆர்ப்பாட்டங்கள் நடப்பது இயல்பாகிவிடும். அதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கின்றது. முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் வருடத்தில் 365 நாட்களில் 362 நாட்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அந்தவகையில் கடந்த 9 வருடங்களாக ஆர்ப்பாட்டம் செய…
-
- 0 replies
- 205 views
-
-
இருள் சுமந்த நிலம் - மு.புஷ்பராஜன் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, இவ்வாண்டு 'முள்ளிவாய்கால் வெற்றி' உரையில், 'இந்த நாள், தாய் நாட்டை மீட்டெடுத்த நாள். தாய் நாட்டை மீட்பதற்கான இந்தப் போரில் இலட்சக்கணக்கானோர் பலியானார்கள். உடல் உறுப்புக்களை இழந்தார்கள். இரத்தத்தை, வியர்வையைப் பூமிக்கு அர்ப்பணித்தார்கள். இவ்வாறான தனித்துவம்மிக்க சிறிலங்கா படையினரை சிலர் அனைத்துலக மேடைக்குக் கொண்டுசெல்ல முயற்சித்தனர். புலிகளுடன் மோதவேண்டாம், அவர்கள் கேட்பதைக் கொடுக்குமாறு அனைத்துலகம் எம்மிடம் அடிக்கொரு தரம் ஆலோசனை கூறியது. புரிந்துணர்வு உடன்பாட்டின் மூலம் நாட்டைப் பிரித்துக் கொடுக்கவும் முயற்சித்தனர். ஒன்றிணைக்கப்பட்ட நாட்டின் ஓர் அங்குலத்தையயேனும் பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்' …
-
- 0 replies
- 473 views
-
-
சமர் அல்லாச் சமர்களாக ஒருங்கிய சமர் முறைகளும் (Hybrid Warfare) ஒருங்கிய அச்சுறுத்தல்களும் (Hybrid Threats) நவீன உலக ஒழுங்கில் சத்தமில்லா யுத்தமாக இராணுவ அணிகலன் அற்ற சமர் அணுகுமுறைகள் செயற்படுகின்றன. இவை இரண்டு வகைகளில் நிகழ்கின்றது. முதலாவது ஒருங்கிய சமர் முறைகள் (Hybrid Warfare). இரண்டாவது ஒருங்கிய அச்சுறுத்தல்கள் ( Hybrid Threats). இராணுவ ஆயுதங்களுக்கு அப்பால் ஏனைய வழிமுறைகள் பிரயோகிக்கப்பட்டு ஒரு நாட்டினை அல்லது ஒரு பிரதேசத்தினை கட்டுப்படுத்தலில் ஒருங்கிய சமர் முறைகளும் ஒருங்கிய அச்சுறுத்தல்களும் கையாளப்படுகின்றன. இதனால் உலகின் ஆயுத மோதல்கள் சிக்கல்கள் நிறைந்ததாகவும், சவால்கள் மிகுந்ததாகவும் பரிணமித்துள்ளன.…
-
- 0 replies
- 229 views
-
-
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? என்.கே. அஷோக்பரன் இன்றைய அரசியல்வாதிகள், தமக்குத்தாமே சூட்டிக்கொள்கின்ற பட்டங்களில், ‘செயல் வீரன்’ என்பது முதன்மையானதாக இருக்கிறது. “நாம் பேசுபவர்கள் அல்ல; செயல் வீரர்கள்” என்று, தமது பிரசாரங்களை அவர்கள் முன்னெடுக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். இதற்கான காரணம், ‘வாழையடி வாழை’யாக அரசியல் என்பது, பேச்சுக்கலையில் மையம் கொண்டதாக அமைந்திருப்பதும், அந்த அரசியலில், அந்த அரசியலால் மக்கள் சலிப்படைந்து உள்ளதுமாகும். ஆகவே, தம்மைச் ‘செயல் வீரர்’கள் என்று, அதே பேச்சுக்லையின் ஊடாக நிறுவுவதில், சமகால அரசியல் தலைமைகள் அக்கறை கொண்டு செயற்படுகின்றன. தாம் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல; தாம் சாதித்துக்காட்டுபவர்கள் என்று வீரவசனம் பேசி, …
-
- 1 reply
- 671 views
-
-
16/11/1978 இல் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒரு நேர்காணல். தேம்ஸ் டெலிவிஷன்ஸ் ஜொனாதன் டிம்பிள்பி, இந்திய அரசியல் மற்றும் அவர் பிரதமராக இருந்தபோது பத்திரிகைகள் மீதான ஒடுக்குமுறை குறித்து திருமதி காந்தியிடம் சில சங்கடமான கேள்விகளைக் கேட்டார். திருமதி காந்தி எவ்வளவு லாவகமாக அவரின் பேட்டி காண்பவரின் குறுக்கு விசாரணை போன்ற கேள்விகளை கையாள்கிறார் பாருங்கள். 👌 Indira Gandhi Interview | TV Eye | 1978 https://youtu.be/q8aETK5pQR4
-
- 3 replies
- 692 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் சாணக்கியம் சுமந்திரனின் சுத்து மாத்து விளக்கம், அதிக பிரசங்கிகள் தூக்கிப் பிடிக்கும் போக்கும்....
-
- 15 replies
- 1.2k views
-
-
பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா? பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் ஓரளவுக்குக் குறைந்ததாகத் தென்பட்டாலும், அது தொடர்கதையாகவே இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளினதும் அதனால் பெண்கள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களினதும் வடிவங்களில் மாற்றம் பெற்றதே ஒழிய, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையாக மாற்றம் பெற்றுள்ளது. உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பெண், மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் கணவர் மற்றும் மற்றைய சிலரால் ஒடுக்குமறைக்கு ஆளாக்கப்படுவதோடு, இ…
-
- 0 replies
- 363 views
-
-
இரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக? நிலாந்தன்:- 29 டிசம்பர் 2013 கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் இரணைமடுத் தண்ணீர் உங்களுக்கு வேண்டுமா? இல்லையா? என்று கேட்கப்பட்டது. இது நடந்து சில நாட்களுக்குப் பின் ஒரு மூத்த பிரஜை என்னிடம் கேட்டார், ''யாழ்ப்பாணத்தில் யார் இரணைமடு நீரைக் கேட்டது' எங்களைக் கேட்காமலே முடிவுகளை எடுத்துவிட்டு இப்பொழுது ஏன் கணக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது? யாழ்ப்பாணத்திற்கு நீர் தேவைதான். ஆனால், அது இரணைமடு நீராகத்தான் இருக்கவேண்டும் என்று யார் கேட்டது? என்று... இதையே தான் மறுவளமாக கிளிநொச்சி விவசாயிகளும் கேட்கிறார்கள். ''எங்களைக…
-
- 0 replies
- 707 views
-
-
உள்ளூராட்சி தேர்தலும் தடுமாறும் தமிழ் தரப்பும் நரேன்- மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாக அடுத்த வருடத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அமைகிறது. கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காகவும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், உள்ளூர் மட்டங்களில் மக்களை வழி நடத்துவதற்கான ஆளுமைகளை தெரிவு செய்வதற்காகவும் இந்த தேர்தல்கள் நடத்தப்படுவதாக கருதப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்த வரையில் முழு பாராளுமன்றமும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அதன் ஊடாக ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கி ஜனாதிபதியினுடைய அ…
-
- 0 replies
- 728 views
-
-
http://www.zionpress.org) http://www.mfa.gov.il http://www.thiruvalluvar.in/2009/12/blog-post.html
-
- 0 replies
- 940 views
-
-
என்ன இப்படித் தலைப்பு எண்டு பாக்கிறியளா? சீலன் பற்றியும் எவ்வாறு ஆரம்பகாலகட்டங்களில் அரசியல் தெளிவற்று குழப்பகரமான நிலைப்பாடுகளோடு இருந்தவர்களால இயக்கம் குழப்பட்டது என்பதைப் பற்றியும் அவற்றை சீலன் எவ்வாறு எதிர் கொண்டான் என்பது பற்றியும் கூறி இருகிறார்.இதனைப் பார்க்கும் போது யாழ்க்களத்தில் சிலரது குழப்பகரமான தெளிவற்ற கருதாடல்கள் தான் நாபகத்தில வந்தது. நீங்களும் பாத்துவிட்டு உங்களது கருத்துக்களை எழுதுங்கள் நானும் எனது கருத்துக்களை எழுதுகிறேன்,முதலில உந்த வீடியோவை இணயத்தில இணைத்த வன்னியனுக்கு நன்றிகள். http://pooraayam.blogspot.com/ //இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் முதலாவது தாக்குல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவருமான லெப்.சீலன் அவர்களின்…
-
- 1 reply
- 1.3k views
-
-
மஹிந்த அலையைத் தடுக்க அரசாங்கத்தால் முடியுமா? உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து, ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, ஒருவாறு தணிந்து வருகிறது. நல்லாட்சி என்று கூறிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டரசாங்கத்திடமிருந்து தொடர்ந்தும் நல்லாட்சி என்பதை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், கூட்டாட்சியை மட்டும் தொடரச் சம்பந்தப்பட்ட இரு பிரதான கட்சிகளும் அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கியுள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே, அரசாங்கத்திலுள்ள இரு பிரதான கட்சிகளான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிற…
-
- 0 replies
- 368 views
-