அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
September 10, 2013 அரசியல் பார்வை 0 8 பின் முள்ளிவாயக்கால் காலத்தில் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு அதற்கு அண்மித்த முந்தைய காலத்தின் நிலைபாட்டிலிருந்து மாறுபட்டுள்ளதனை அதன் நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். இருப்பினும், அதன் தலைவர்கள் வெளியிடும் முரண்பட்ட கருத்துகளிலிருந்து அதன் கொள்கை நிலைப்பாட்டை சரியாக அறிந்து கொள்ளமுடிவதில்லை. ஒரு முறை குறிப்பிட்டதை இன்னொரு இடத்தில் மறுத்தும், ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுவதாகக் கூறியும், இடத்திற்கு ஏற்றமாதிரி கருத்துகள் வெளியிட்டும் கூட்டமைப்பின் தலைவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது வெளியிடப்பட்ட விஞ்ஞாபனம், தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற முன்னைய கொள்கை நிலைப்பாட்டை ஒத்ததாக அமைந…
-
- 1 reply
- 621 views
-
-
-
ஜூலைக் கலவரம் தந்த பயன்களும் வீணாகிவிட்டன எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 24 புதன்கிழமை, பி.ப. 10:18 Comments - 0 நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்த ‘கறுப்பு ஜூலை’ என்று பொதுவாக அழைக்கப்படும், தமிழர்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற கலவரங்கள் ஆரம்பித்து, இன்றோடு 36 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால், அந்தக் கொடுமைக்கு மூலகாரணமாக அமைந்த இனப் பிரச்சினைக்கு, நிலையான தீர்வொன்று இன்னமும் காணப்படவில்லை. கடந்த வாரம், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் 125ஆம்…
-
- 0 replies
- 621 views
-
-
அரசியலமைப்பு மாற்றங்கள்: சில ஊகங்களும், சில கேள்விகளும். நிலாந்தன்:- தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார் 'சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்ஸவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும் கூட சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்று வரும்போது ராஜபக்ஷவே மதிப்புடன் பார்க்கப்படுகிறார். அவர் பொதுச்சொத்தைத் தனிச்சொத்தாக்கியது, அதிகாரத்தை தனது குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர் கைகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டது போன்ற குற்றச்சாட்டுக்களை சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க அளவினர் ஏற்றுக் கொள்க…
-
- 0 replies
- 621 views
-
-
“இந்தியாவின் மகிந்த ராயபக்ச” என்ற மறக்கக் கூடாத உண்மையை சீனப் பூச்சாண்டிப் பரப்புரை மறக்கடிக்குமா? –மறவன்- தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவதை தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒரு போதும் ஏற்காது. அத்துடன் தமிழர்களின் மீதான ஆரியமாயையான இந்தியாவின் வரலாற்றுப் பகை என்பது எச்சான்றும் குறைத்து மதிப்பிட இயலாது. அண்டை நாடுகள் மீது தனது மேலாண்மையைச் செலுத்த நேரு காலத்திலிருந்து இந்தியா துடியாய்த் துடித்து வருகிறது. தேசிய இன விடுதலையை அடியொட்ட வெறுத்து இந்தியாவைக் காப்பது என்பதையும் தாண்டி அண்டை நாடுகளின் மீதான தனது மேலாதிக்கம் மூலம் அகன்ற பாரதக் கனவில் அன்றிலிருந்து இன்று வரை இந்தியா வெறித்தனமாக வேலை செய்து…
-
- 0 replies
- 621 views
-
-
அந்த 20 நாள் குழந்தை செய்த பாவம் என்ன? முஸ்லிம் மக்களை அதிரவைத்த கேள்வி – அகிலன் 35 Views கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் தம்பதிகளின் 20 நாட்களேயான சிசு கடந்த திங்கட்கிழமை கொழும்பில் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் செய்தி இது. “இந்த அப்பாவி 20 நாள் குழந்தை தனது உடல் தகனம் செய்யப்படுமளவிற்கு செய்த பாவம் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா. இந்தக் கேள்விக்குப் பின்னால் உள்ள ஆற்றாமை, குழறல் இலங்கையில் நடைபெறும் சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்குள் இருந்து மீளமுடியாமல் முஸ்லிம்கள் தத்தளித்துக் க…
-
- 2 replies
- 621 views
-
-
இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் இந்துசமுத்திர அரசியல் பற்றி ஆழமாகவும், விரிவாகவும், தெளிவாகவும் ஆராய்ந்து அறிய வேண்டியது அவசியம். 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முள்ளிவாய்க்கால் பேரழிவோடு இந்துசமுத்திரம் ஈழத் தமிழரின் இரத்தத்தால் சிவந்து அது வல்லரசுகளுக்கு உரம்பாய்ச்சும் ஒன்றாய் காணப்படுகிறது. கோடிக்கணக்கான ஆண்டுகாலங்களாக கடற்பிராணிகளின் சமுத்திரமாக விளங்கும் இந்துசமுத்திரம் கிபி 10ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழப்பேரரசின் எழுச்சியோடு அரசியல் சமுத்திரமாக மாறியது. சோழப்பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அராபியரின் கை இந்து சமுத்திரத்தில் ஓங்கியதுடன் 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீன…
-
- 1 reply
- 621 views
-
-
எலும்புக்கூடுகள் சாட்சி சொல்லும் ஈழம் - தீபச்செல்வன்:- 05 மார்ச் 2014 எலும்புக்கூடுகள் வாக்குமூலங்களுடன் சாட்சியாக கிளம்பும் நிகழ்வுகள் கடந்த முப்பதாண்டுகளாக ஈழத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஈழத்து மக்களை அதிர்ச்சி கொள்ள வைத்த இடம் மன்னார் திருக்கேதீச்சரம். மன்னார் மனிதப் புதைக்குழிகளைத் தொடர்ந்து ஈழத் தலைநகர் திருகோணமலையிலும் இறுதிப்போர் நடந்த முல்லைத்தீவிலும் எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எங்கு மண்ணை தோண்டினாலும் எலும்புக்கூடுகள் கிளப்புமா என்பதுதான் இன்றைய ஈழ நிலத்தின் அச்சம். ஈழத்தின் வடக்கில் உள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம் பல்லவர் காலத்தில் பாடல் பற்ற தலம். சுந்தரரும் சம்பந்தரும் இந்த ஆலயத்தின்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர். பா…
-
- 0 replies
- 621 views
-
-
சமகால அரசியல் சமதளம் இலட்சுமணன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அரசியல் சிக்கல் நிலைமைகள் தொடர்பாக பொருளாதார ரீதியில் நாடு எதிர்பாராத சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த சிக்கல் நிலைமைகளில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய தேவை உள்ளதை உணர்ந்துள்ளது. இதற்குக் காரணம் தனது அரசியல் அதிகார பலத்தின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டியது அதற்கு உள்ளது. அந்த வகையில் தற்போதைய சூழலில் கொரோனா தொற்றை எதிர்கொண்ட விதம் தொடர்பான மக்களின் வரவேற்பும் கொரோனா நிவாரணம் தொடர்பான மக்களின் அதிருப்தியையும் தற்போதைய அரசு சம்பாதித்திருக்கிறது. இதை விட பொருளாதார ரீதியில் நொந்துபோயுள்ள பாமர மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பு எ…
-
- 0 replies
- 620 views
-
-
தமிழரசுக்கட்சி – DTNA – வித்தியாசம் என்ன? April 30, 2024 — கருணாகரன் — இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றே சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எவ்) சித்தார்த்தன் (புளொட்) செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை (DTNA) உருவாக்கினார்கள். இவர்களோடு தமிழ்த்தேசியக் கட்சி (விக்னேஸ்வரன்), ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய தரப்பினரும் இணைந்து நின்றனர். கூட்டமைப்புக்குள் முடிவற்று நீண்டுகொண்டிருந்த இழுபறிகள், உள்முரண்பாடுகள், ஜனநாயக விரோதப் போக்கு போன்றவற்றுக்கு மாற்றாக, இதொரு நல்ல தீர்மானம் எனப் பலரும் கருதினர். கூட்டமைப்பின் மந்தமான, குழப்பகரமான …
-
- 0 replies
- 620 views
-
-
இனியும் ஏன் தயக்கம்? By ஆசிரியர் First Published : 22 February 2013 01:03 AM IST தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள ஆவணப் படங்கள், இங்கிலாந்தின் "சேனல்-4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி, உலகமெங்கும் தமிழர் மனங்களில் அதிர்ச்சி, வேதனை, கோபம் என உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டு வயதுச் சிறுவன், கைதொடும் தொலைவில் துப்பாக்கியால் சுடப்படுவதை, "தாக்குதலுக்கு இடையே சிக்கி' இறந்ததாக யாராலும் சொல்ல முடியாது. ஆனாலும் இலங்கை அரசு இதை மறுக்கிறது. இலங்கை அரசின் இந்தியத் தூதரக அதிகாரி கரியவாசம், "இந்தப் படங்கள் கணினித் திரிபு படங்கள…
-
- 0 replies
- 620 views
-
-
முடிவுகளை எட்டாத கோரிக்கை உடன்படிக்கைகள் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றுப் பின்புலத்தில், வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைப்பு முயற்சியானது, பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது’ என்று கடந்த காலங்களில், இளைஞர் முன்னெடுப்புகளைத் தட்டிக் கழித்த தமிழ்த் தலைமைகள், இன்று அவர்களின் அழைப்பில்பேரில் ஒன்றுபட்டது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாராட்டத்தக்கது; ஒரு முற்போக்கான முயற்சியாகவும் அமைந்துள்ளது. தமிழ் வாக்குகள் பிளவுபடாமல், கணிசமான அளவில் ஒன்றிணைப்பதுடன், தமிழர் தம் பலத்தை ஒரே குரலாய், சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக…
-
- 0 replies
- 620 views
-
-
மர்மங்கள் விலகாத இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முஸ்தீபுகள், அனைத்துக் கட்சிகள் மட்டத்திலும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜிக்குப் பதிலாக, ஜூலை 25 ஆம் திகதிக்குள், புதிய குடியரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும். அதேபோல், குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் அமித் ஹன்சாரிக்குப் பதிலாக, ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்குள், புதிய துணைக் குடியரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும். இப்போது இருக்கும் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது, இதுவரை உறுதியாக வெளிவரவில்லை. காங்கிரஸ்…
-
- 0 replies
- 620 views
-
-
‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல் போர் முடிவுக்கு வந்த ஒன்பதாவது ஆண்டை நினைவு கூரும் வகையில், நாடாளுமன்ற வளாகப் பகுதியில் உள்ள படையினருக்கான நினைவுத் தூபியில் நடந்த அஞ்சலி நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியிருந்தார். “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதத்தைத் தோற்கடித்த போதும், இன்னமும் அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியவில்லை. நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன், தீவிரவாதிகள் வெளிநாடுகளின் அணி திரளுகிறார்கள். நான், அண்மையில் இலண்டனுக்குப் பயணம் மேற்கொண்டபோது, போராட்டம் நடத்தினார்கள்” என்று அப்போது கூறியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கர…
-
- 0 replies
- 620 views
-
-
இரகசியமாக தயாராகும் தமிழரசுக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்: மாவைக்கு இம்முறையும் அல்வாவா? June 1, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த வடமாகாண முதலமைச்சர் யார் என்ற சர்ச்சைகள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் உயர்பீடத்தால் தற்போது சடுதியான புதிய நகர்வொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவை சேனாதிராசாவை தவிர்த்து, புதிய- நிர்வாக பரிச்சயமுள்ள ஒருவரை அரங்கிற்கு கொண்டுவரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. யார் அந்த புதிய முகம்? அவரை அரங்கிற்கு கொண்டு வர முயற்சிப்பவர் யார்? ஆளை சொல்வதற்கு முன்னர், இந்த விவகாரம் குறித்த சிறிய பிளாஷ்பேக் ஒன்றை சொல்கிறோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தான்தானென மாவை…
-
- 0 replies
- 620 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி: சாணக்கியமா, சறுக்கலா? Editorial / 2019 செப்டெம்பர் 19 வியாழக்கிழமை, பி.ப. 07:00 Comments - 0 -இலட்சுமணன் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு நாள் நெருங்குகையில், ஏட்டிக்குப் போட்டியாகப் பிரகடனங்களும் பிரசாரங்களும் சூடு பிடித்துள்ளன. இந்த வேளையில், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் பங்காளிகளும் ஒருபுறமாகவும், சி. வி விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமசந்திரனும் பிறிதொரு புறமாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்னொரு புறமாகவும் தமிழ்த் தேசியத் தேரினை வடம் பிடித்து இழுக்கின்றனர். தங்கள் தங்கள், சுயநல அரசியல் இலாப நட்டக் கணக்குகளுக்கு ஏற்ப, தமிழ்த்தேசிய அரசியலைப் பயன்படுத்த முனைந்த ஒரு போக்கின் விளைச்சலையே,…
-
- 0 replies
- 620 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் கால காலமாக இலங்கை ஜனநாயக நாடு இங்கு வாழும் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் எனக் கூறி வந்தாலும், உண்மையாக நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று தான் அண்மைக் காலங்களாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜனநாயக நாடு எனில் அந்நாட்டில் வாழும் மக்கள் அங்கு சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும், சுதந்திரமான முறையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுந்தந்திரம் வழங்கப்படும். ஆனால் சிறிலங்காவில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஜனநாயக சுதந்திரத்தை வழங்க இந்த அரசு தயாராக இல்லை. காணமால் போனவர்களை கண்டுபிடித்து தருமாரு கோரி கொழும்பில் கனவயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தத் தி…
-
- 0 replies
- 619 views
-
-
அதிகாரப் பகிர்வும் முஸ்லிம் சமூகமும் மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:13 Comments - 0 ‘நல்லாட்சி’ என்ற அடைமொழியுடன் ஆட்சிக்கு வந்த, ஒன்றிணைந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம், முடிவடையும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில், மீண்டும் அரசமைப்புத் திருத்தம்; அதனூடான இனப்பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டம், அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுகள் சூடுபிடித்திருக்கின்றன. இவ்வாறிருக்கையில், அரசமைப்புத் தொடர்பாக, மேலோட்டமாகவே கவனம் செலுத்தி வந்த முஸ்லிம் சமூகம், தற்போது கூடிய கரிசனை காட்டத் தொடங்கி இருப்பதாகத் தெரிகின்றது. இலங்கை முஸ்லிம்கள், ஒரு நாளும் தனிநாடு கேட்டுப் போராடியவர்கள் அல்லர். இரண்டு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்றோ, அதிக…
-
- 0 replies
- 619 views
-
-
ஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே? - யதீந்திரா ஆட்சிமாற்றம் இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. ஆனால் இதிலுள்ள ஆச்சரியமான பக்கம் என்னவென்றால் ஆட்சிமாற்றம் தொடர்பில் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்த எவருமே தற்போது அது தொடர்பில் வாய்திறப்பதில்லை. இதில் சில தமிழர்களும் அடக்கம். இவர்களில் கொழும்பை மையப்படுத்தி வாழ்பவர்களும் மற்றும் கொழும்பு மைய உயர்குழாம் ஒன்றுடன் தொடர்புகளை பேணுவதை பெருமையாகக் கருதும் சில வடக்கு கிழக்கு தமிழர்களும் அடங்குவர். இவர்களில் அனேகர் அரசுசாரா நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணிவருபவர்கள். அரசு சாரா நிறுவனங்களின் நிதியின் அளவுக்குத்தான் இவர்களது செயற்பாடுகளும் நீண்டு செல்லும். ஆட்சிமாற்றமொன்றை ஏற்படுத்துவதில்…
-
- 0 replies
- 619 views
-
-
உலகம் உறைந்த நாள்கள்!! இற்றைக்கு 73 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் இந்த நாள்களில் அதிர்ச்சியில் உறைந்தது. இரண்டாவது உலகப்போர் தீவிரம் பெற்றிருந்த இந்த நாள்களில் ஜப்பான் மீது லிட்டில் போய், பட் போய் என்று இரண்டு அணுகுண்டுகளை வீசியது அமெரிக்கா. ‘‘சூரியன் பூமியில் உதித்த நாள்கள்’ என்று வர்ணிக்கப்படும் அந்தக் காலங்களையும் இன்று அணுவாயுதங்கள் எந்தளவுக்கு நிலைபெற்றுள்ளன என்பதையும் ஆராய்ய முனைகிறது இந்தப் பத்தி. ஜப்பானும் அமெரிக்காவும் டிசெம்பர் 1941ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவை…
-
- 0 replies
- 619 views
-
-
சர்வதேச காணாமல் போனோர் தினமும் காணாமல் போனோருக்கான அலுவலகமும் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோருக்கான தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக இராணுவத்தினராலோ அல்லது பாதுகாப்பு படையினராலோ கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும் இரகசிய கைதுகளை தடுக்கவும் அது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவுமே இதற்கான நாள் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தின் பின்னணியில் இலத்தீன் அமெரிக்க நாடான கொஸ்டரிக்கா உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் வலிந்து காணாமலாக்கப்படுதலை (forced disappearance) ஒரு அரசியல் அடக்கு முறையாக பாவித்த நாடுகளில் முதலிடத்தை இலத்தீன் அமெரிக்…
-
- 0 replies
- 619 views
-
-
கஜனின் சந்தேகத்துக்குரிய பிடிவாதம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 17 புதன்கிழமை, பி.ப. 05:23 Comments - 0 தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, பலமான அணியொன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற சிந்தனையின் வழி செயற்பட்டவர்களில் அநேகர், இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள். புலிகள் இல்லாத அரங்கில், கூட்டமைப்பு ஏகநிலையை அடைந்தது முதல், மாற்று அணியொன்றுக்கான தேவை, தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மாற்று அணியொன்றைக் கட்டமைக்கும் காட்சிகளை, மாற்று அணிக்கான கோசத்தை எழுப்பிய தரப்புகளே, கலைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம். அரசியல் என்பது, நண்பர்களைக் காட…
-
- 0 replies
- 619 views
-
-
15 வருடங்கள் கடந்த போதிலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். 15 ஆவது முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான நேற்று(12.05.2024) இலங்கை தமிழரசு கட்சியின் பருத்தித்துறை தொகுதியினரால் வல்வெட்டு வன்னிச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் வாரம் ஆரம்பமாகின்றது. யுத்தத்தின் கடைசி நாட்களில் எமது மக்கள் கஞ்சிக்கு கூட பறிதவிக்கின்ற நிலை காணப்பட்டது எனவும்…
-
-
- 3 replies
- 619 views
-
-
பேரம் பேசுமா கூட்டமைப்பு? Editorial / 2018 ஒக்டோபர் 19 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:38 தற்போதைய அரசாங்கம் 2015இல் பதவிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டுத் திட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு வழங்கி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்முறையும் அவ்வாறு நடந்து கொள்ளுமா, என்ற கேள்வி, இப்போது பரவலாக எழுந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் விடுதலையை முன்வைத்து, பாதீட்டுத் திட்டத்தை ஆதரிப்பதற்குப் பேரம்பேச வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை தான், இந்தக் கேள்விக்கான மூல காரணம். அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தான், பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க, தமது விடுதலையை முன்னிறுத்தி, அரசாங்கத்துட…
-
- 0 replies
- 619 views
-
-
ஜெனீவாவில் அழுத்தங்கள் சாத்தியமா? கே. சஞ்சயன் / 2019 மார்ச் 01 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:18 Comments - 0 ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி, நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக, பிரித்தானியா அறிவித்திருக்கிறது. பிரித்தானியா, சில வாரங்களுக்கு முன்னரே இதை உறுதி செய்திருந்தது. கடந்த திங்கட்கிழமை, பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அஹமட் பிரபு, இதை மீண்டும் உறுதி செய்திருந்தார். அவர், ஜெனீவாவில் உரையாற்றுவதற்குச் சில மணி நேரம் முன்னதாக, வடக்கில் பாரிய போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. காணாமல்…
-
- 0 replies
- 619 views
-