அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
20 MAY, 2024 | 05:33 PM சிவலிங்கம் சிவகுமாரன் இறுதி யுத்தத்தின் அழிவுகளையும் துயரங்களையும் சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் ஒரு அங்கமாக கஞ்சி வழங்கும் நிகழ்வை வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பல வழிகளிலும் தடைகளையும் ஏற்படுத்தி வரும் அரசாங்கம், அந்நிகழ்வில் ஈடுபட்ட பெண்களை நடு இரவில் வீடு புகுந்து அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. சில பிரதேசங்களில் கஞ்சி பரிமாறலுக்கு நீதிமன்ற தடையை காரணங்காட்டி வரும் பொலிஸார், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோர் காணாமல் போனோரை நினைவு கூருவதற்கும் தடை விதித்து வருகின்றனர். 2009ஆம் ஆண்டுக்குப்பின்னர் …
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
ஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக் கழகத்திடம் பரப்புரைக்குப் போனபோது. கழக நிர்வாகிகள் சொன்னார்களாம் “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று” வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த பிரச்சாரகர் சொன்னார் ஒரு நலன்புரி நிலையத்திற்குச் சென்று பரப்புரை செய்த போது அங்கிருந்தவர்கள் சொன்னார்களாம் “கடந்த தேர்தலின் போது ஓர் அரச தரப்பு பிரமுகர் எங்களுக்குக் கோயில் கட்டித் தந்தார். நாங்கள் அவருக்குத்தான் வாக்களித்தோம். இம்முறை நீங்கள் எங்களுக்கு ஒரு சனசமூக நிலையம் கட்டித் தருவீர்களா?” என்று இது போல பல உதாரணங்களைக் கூற முடியும். ஊர் மட்டத்தில் இருக்கும் சிவில் அமைப்புக்களை சந்திக்கச் செல்லும் கட்சிப் பிரதானிகளும் பிரச்சார…
-
- 6 replies
- 865 views
-
-
இந்திய எதிர்ப்பும் தமிழரசு கட்சியின் தீர்மானமும் Jul 09, 20190 யதீந்திரா அண்மையில் இலங்கை தமிழரசு கட்சியின் மகாநாடு இடம்பெற்றது. இதன் போது ‘இந்தியாவை நாங்கள் நம்புகிறோம்’ என்னும் அடிப்படையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழரசு கட்சியின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு சம்பவம் முன்னர் எப்போதும் இடம்பெற்றதில்லை. இது தர்க்க ரீதியில் ஆராயப்பட வேண்டிய ஒன்று. தமிழரசு கட்சி என்பது இந்தியாவிற்கு சார்பான கட்சி என்பதுதான் பொதுவான பார்வை. தமிழரசு கட்சி மட்டுமல்ல வடக்கு கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்வாறான புரிதலுக்குள் அடங்கும். இதில் விதிவிலக்கான ஒரு கட்சி என்றால், அது கஜேந்திரகுமார…
-
- 0 replies
- 596 views
-
-
நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை: ‘காக்கக் காக்க ஆமி காக்க நோக்க நோக்க ஸ்கானர்நோக்க’? நிலாந்தன்… August 10, 2019 ஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து ஐரோப்பாவில் விமான பயணங்களுக்கான டிக்கெட் ஏஜென்ட் ஆக இருக்கும் ஒருவர் தனது நண்பருக்குக் கூறிய தகவல்களின்படி ஓகஸ்ட் விடுமுறையில் தாயகத்துக்கு வர விரும்பிய புலம்பெயர்ந்த தமிழர்களில் கிட்டத்தட்ட 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தமது பயணச்சீட்டுகளை ரத்து செய்துவிட்டார்களாம்.தாயகத்தில் வாழும் அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் இங்கு வரவேண்டாம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூரியதாகவும் தெரியவந்தது. ஆனால் குண்டு வெடிப்பு நடந்த அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை ஒப்பீட்டளவில் வழமைக்கு திரும்பியது போல ஒரு தோற்றம் உண்டாக்கி…
-
- 3 replies
- 785 views
- 1 follower
-
-
கோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: "ராஜபக்ஷ குடும்பத்தில் எவரும் தமது பாரியாரை தேர்தல்களில் ஈடுபடுத்தவுமில்லை ஈடுபடுத்தப் போவதுமில்லை" "தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தேசிய பிரச்சினைக்கான யோசனைத் திட்டத்தினை முன்மொழிய வேண்டும்" ஜனாதிபதி வேட்பாளருக்காக எமது குடும்பத்திலிருந்து பெயர்கள் முன்மொழியப்பட்டபோது தற்போதைய சூழலை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவின் பெயரை நானே முன்மொழிந்தேன் என்று முன்னாள் சபாநாயகரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்…
-
- 0 replies
- 269 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் பேரம் கே. சஞ்சயன் / 2019 செப்டெம்பர் 01 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 01:18 Comments - 0 வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகள் தீர்க்கமானவையாக இருக்கும் என்பதால், பேரம் பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து, பரவலாக இருக்கின்ற நிலையில், மஹிந்த தரப்பே பேரத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்து, தமிழ்க் கட்சிகள் தான் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பேரம் பேசும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், இதுவரையில் அவ்வாறான எந்தப் பேரமும் நடந்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில், அந்த அரசாங்கத்துடன் ஒட்டி, உறவாடிய தமிழ்க் கட்சி…
-
- 0 replies
- 463 views
-
-
2020 ஜனாதிபதித்தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின் முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இது இதுவரையான வரலாற்றில் நிகழ்ந்திருக்காத ஒரு அபாயகரமான நிலையாகும். கடந்த காலத்தில் நிகழ்ந்த அத்தனை தேர்தல்களின்போதும் தமிழ் பேசும் தேசிய இனங்களின் பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வைப்பற்றியும் இந்தக் கட்சிகள் பேசி வந்திருக்கின்றன. அவை பேசியவாறும் உடன்பட்டவாறும் தீர்வுகளை முன்வைக்காது விட்டாலும் அவற்றைப் பற்றிப் பேசியே தீர வேண்டும…
-
- 0 replies
- 343 views
-
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……! January 2, 2025 — அழகு குணசீலன் — தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமும், பொதுச்சபையும் திருகோணமலையில் கூடி கலைந்தது போல், வவுனியாவில் மத்திய செயற்குழு கூட்டம் கூடி ஊடகங்களுக்கு “பம்பலாக” கலைந்திருக்கிறது. நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளுக்காக ஏறி, இறங்கவேண்டிய நிலையில், நடந்து முடிந்த வவுனியா கூட்டம் கட்சியின் உள் மோதல்களுக்கு “தீர்வு” காணப்பட்டதுபோன்ற ஒரு தோற்றத்தையும், இது தீர்வல்ல “பிரிவு” என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆகக்குறைந்தது முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்களுக்கு இது முள்ளை முள்ளால் எடுத்த நிம்மதி. தமிழரசுக…
-
-
- 30 replies
- 1.7k views
- 1 follower
-
-
மகிந்த தரப்பின் மூன்றில் இரண்டு சாத்தியமா ? யதீந்திரா தேர்தல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இதில் மகிந்த தரப்பின் வெற்றி வாய்பிலும், எந்தவொரு பிரச்சினையும் இருக்கப் போவதில்லை. இதுவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். ஆனால் மகிந்த தரப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி. கிடைக்கும் தகவல்களின்படி அது இலகுவான ஒன்றல்ல ஆனால் மகிந்த தரப்பு தனது முழு ஆற்றலையும் வளங்களையும் பயன்படுத்தி, தங்களின் வெற்றியை எந்தளவிற்கு பெருப்பிக்க முடியுமோ அந்தளவிற்கு பெருப்பிக்கவே முயற்சிக்கும். பொதுவாக ஒன்றின் பலம் என்பது பிறிதொன்றின் பலவீனத்தில்தான் தங்கியிருக்கின்றது. அரசியலில் ஒவ்வொரு விடயத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். மகிந்தவின் வெற…
-
- 0 replies
- 389 views
-
-
ஓயும் குரலால் ஓங்கும் பேரினவாதம் கே. சஞ்சயன் / 2020 ஜூன் 12 முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகிக் கொள்ள எடுத்துள்ள முடிவை, சிங்கள, பௌத்த தேசியவாத சக்திகளுக்குக் கிடைத்துள்ள ஒரு வெற்றியாகவே குறிப்பிடலாம். ஏனைய, சிங்களத் தலைவர்களை விட, ஒப்பீட்டளவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அதிகளவில் புரிந்து கொண்டவர் என்பதும், பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பதும், மங்கள சமரவீர தொடர்பாக, முக்கியமாகக் குறிப்பிடக் கூடிய விடயங்கள். சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை, அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்திய மூவரணியில் முக்கியமானவர் மங்கள சம…
-
- 0 replies
- 437 views
-
-
வடக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் அபகரிப்புச் செய்யலாம். ஆனால் இந்த வழியில் எமது மனங்களை ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அபகரித்துவிட முடியாது" என்கிறார் யாழ்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியற்துறை பேராசிரியர் ஒருவர். சண்டேலீடர் ஆங்கில வாரஇதழில் நிரஞ்சல்லா ஆரியசிங்கவும், கிரிசாந்தி கிறிஸ்தோப்பரும் இணைந்து எழுதியுள்ள செய்திக்கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். ‘புதினப்பலகை‘க்காக இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி‘. சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளும் ஏழு மாதங்களும் கடந்த நிலையிலும் கூட வடக்கு கிழக்கில் வாழும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு …
-
- 1 reply
- 747 views
-
-
‘மாவோவாத இயக்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் கோட்பாட்டு பங்களிப்புச் செய்த தலைவர்’- பிறந்ததின நூற்றாண்டில் சண்முகதாசனை நினைவுகூருதல் – கலாநிதி ஜெகான் பெரேரா அரசியல் ஆளுமை ஒருவரை அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பின்புலத்தில் வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.ஆனால், அவரது செயற்பாடுகளின் நீடித்த பொருத்தப்பாட்டை உறுதிசெய்து பின்னறிவைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் மதிப்பிடலாம். ‘ தோழர் சண் ‘ என்று பிரபலமாக அறியப்பட்டிருந்த நாகலிங்கம் சண்முகதாசனின் பிறந்ததின நூற்றாண்டை (2020 ஜூலை 3) முன்னிட்டு அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை செய்வது பொருத்தமானதாகும் என்று நம்புகிறேன். கடந்தகால நிகழ்வுகளின் தொடரை திரும்பிப்பார்ப்பதை நாம் வாழும் இன்றைய தருணத்தில் இருந்து தொடங்குவோம். ‘ மன…
-
- 0 replies
- 284 views
-
-
திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது – நிலாந்தன் BharatiSeptember 19, 2020 நிலாந்தன் அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக் கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் அதிகம் கவனிப்பைப் பெற்ற ஒளிப்படம் ஒன்று உண்டு. அதில் அரைக் கால்சட்டை அணிந்த ஒரு போலீசார் வீதியில் விழுந்து கிடக்கும் ஒரு சத்தியாகிரகியின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் காணப்படும் சத்தியாகிரகி அரசையாதான். அவரை 1990களின் தொடக்கத்தில் ஒரு தேவைக்காக நான் சந்தித்தேன். அப்போது கேட்டேன் “தமிழரசுக்கட்சி உண்மையாகவே சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதா? காந்தி …
-
- 0 replies
- 537 views
-
-
மனிதகுல நீதிக்கான குரல் கொண்ட கௌரவமான தேசிய இனம் நாம் தத்தர் ஜனநாயகக் கண்ணோட்டம் இன்றி உலகக் கண்ணோட்டம் இன்றி ஒரு தேசிய கட்டுமானம் அமைய முடியாது. அதே வேளை 'சரியாக நடந்தால் மட்டும் போதாது சரியாக நடந்ததாகக் கருதப்படவும் வேண்டும்'. பரப்புரை என்பது எதிரியை அம்பலப்படுத்துவதிலும் எம்மை நியாயப்படுத்துவதிலும் அடங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு எதிரி தன்னைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளான். ஆனால் அந்த அம்பலப்பட்டுள்ள நிலையை அரசியல் தீர்மானங்களாக்கவேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இந்நிலையில் நாம் எம்மை அதிகம் நியாயப்படுத்தி எதிரிக்கெதிரான அரசியல் தீர்மானங்களை உருவாக்கவேண்டும். உலகில் நாம் வெடிகுண்டு வைப்பவர்களாயும், மனித வெடிகுண்டுகளாயும், பயங்கரவாதிகளாயும…
-
- 0 replies
- 750 views
-
-
-
இலங்கையின் இராஜ தந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா.? சீனத் தூதுக்குழுவின் வருகை இலங்கை சீன நட்புறவை மேலும் பலப்படுத்திய போதும் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அதிகம் பாதித்துள்ளதை காணமுடிகிறது. குறிப்பாக சீனாவின் உதவிகளை கடன் பொறி எனக்கூறமுடியாதென்ற கருத்தினை இலங்கையின் ஜனாதிபதி வலியுறுத்தியதுடன் இலங்கையின் இறைமையை சர்வதேச அளவில் பாதுகாக்கும் என சீனாவின் உயர்மட்ட தூதுக் குழு தெரிவித்திருந்தது. கடந்த 26.09.2020 அன்று இந்திய இலங்கை பிரதமர்களது உரையாடலை அடுத்து பெரும் இராஜதந்திர நகர்வுகள் ஆரம்பமாகியது.இத்தகைய சந்திப்புக்கு வழிவகுத்த இந்தியத் தூதுவருடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உரையாடலாகும். அதன் பிரதியாகவே சீனாத் தூதுக்குழுவின் வருகை அம…
-
- 0 replies
- 457 views
-
-
ஜெனீவாத் தொடர் கதை -எம்.எஸ்.எம். ஐயூப் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டம், நெருங்கி வரும் நிலையில், இலங்கையில் மனித உரிமை விவகாரமும் சூடு பிடித்து வருகிறது. சகல தமிழ் அரசியல் கட்சிகளும், ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்து, மனித உரிமைப் பேரவையை எதிர்கொள்ள வேண்டும் என்ற தொனிப் பொருளிலேயே இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. மனித உரிமைப் பேரவையின் 45 ஆவது கூட்டத்தில், சகல தமிழ்க் கட்சிகளும் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்பதை, அக்கட்சிகள் வலியுறுத்திக் கூறுகின்றன. ஆனால், கூட்டாக என்ன செய்ய வேண்டும் என்பதில், அவற்றுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை என்பதாகவே தெரிகிறது. அந்த ஒருமித்த கருத்து என்ன என்பது தொடர…
-
- 0 replies
- 560 views
-
-
இந்திய அரசியல் நடுநிலைமைத் தன்மையின் அரசியல் 46/1 ஜெனிவாத் தீர்மானத்தில் இந்தியாவின் வகிபங்கு தொடர்பில், அதனுடைய அரசியல் ஆட்டம், வகிபங்கு நடுநிலையானதா அல்லது பக்கச் சார்பற்றதா? என்ற விவாதம் பொதுப்பரப்பில் பேசு பொருளாக உள்ளது. அரசியலில் நடுநிலைக் கருநிலைக் கோட்பாடு என்று ஒன்று உள்ளதா? இல்லையா? அதற்குப் பின்னால் உள்ள அரசியல் தொடர்பில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. நடுநிலை வகித்தல் போரைத்தடுக்குமா? அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட சமூகத்திற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்குமா? என்ற வினாவிற்கான விடை பெரும்பாலும் ‘இல்லை’ என்றே தோன்றும். இந்திய சுதந்திரத்தின் பின்னர், ஐ.நா. சபையின் இரண்டாவது பொது அமர்வில், இந்தியா, தென்னாபிரிக்க கறுப்பின அடக்குமுறைக்கெதிராக தனது காட…
-
- 0 replies
- 533 views
-
-
நெருக்கடிக்குள்ளாகும் சர்வதேச உறவுகளும், புதிய உலக ஒழுங்கும் 39 Views பனிப்போரின் முடிவில் இருந்து நிலவிய ஐக்கிய அமெரிக்காவின் தலமையிலான ஒரு துருவ உலக ஒழுங்கின் (unipolar world order) ஒப்பீட்டு உறுதித்தன்மை (stability) மற்றும் பொருளாதார வளர்ச்சியானது, இன்று உறுதி அற்ற ஒழுங்கு நிலை குலைந்த பல்துருவ உலக ஒழுங்கிற்கு (multi polar world) மாற்றம் பெற்று வருகின்றது. முன்னாள் ஐக்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை, அமெரிக்க-சீனா புவிசார் அரசியல் மோதல், சீனா மற்றும் ரஷ்யாவின் வளர்ந்து வரும் நெருக்கம், உள்ளக நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் ஐரோப்பா மற்றும் பிரெக்ஸிட் (Brexit) என்று அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்…
-
- 0 replies
- 561 views
-
-
இலங்கையில் தனி ஈழம் அமைக்க அமெரிக்க முடிவு | இந்தியா அமெரிக்கா இலங்கை உள்ளே....
-
- 69 replies
- 7.9k views
-
-
‘பிணங்களோடு வாழ்’ “பிணங்களோடு வாழ்” என்று உங்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. இதற்கு நீங்கள் சம்மதிப்பீர்களா? அரிச்சந்திர மகாராஜா, சுடுகாட்டில் பணிசெய்தார் என்பதற்காக, நீங்களும் அப்படிச் செய்யத் தயாரா? சிவபெருமான் சுடலைப் பொடியைப் பூசுகிறார். ஆகவே, நீங்கள் அப்படிச் சுடலைச் சாம்பரைப் பூசுவீர்களா? இப்படியெல்லாம் ஏன் கேட்க வேண்டியிருக்கிறது என்றால், புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் இருக்கும் மக்களை, “பிணங்களோடு கூடி வாழுங்கள். பிணங்கள் எரிக்கப்படும் புகையைச் சுவாசித்து இன்புறுங்கள். மயானமும் உங்களுடைய வீடும் ஒன்றாக இருப்பதில் என்ன பிரச்சினை? எரியும் பிணத்தைப் பார்த்துக்கொண்டே நீங்கள் தூங்கலாம், …
-
- 0 replies
- 593 views
-
-
13வது திருத்தமும் தமிழ் சமூகமும் டிசம்பர் 26, 2021 இலங்கை – இந்திய சமாதான உடன்படிக்கையின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 13ம் திருத்தம் காரணமாகவே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதையும் அது தற்போது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக ஆகி இருப்பதையும் நாம் அறிவோம். கடந்த இரண்டு வருடங்களாக பேசப்படாமல் இருந்த இந்த 13ஆவது திருத்தம் தற்போது தமிழ் அரசியலில் பேசு பொருளாக மாறி இருப்பதால் அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தமிழர்கள் அதிகாரங்களைக் கேட்பது இலங்கையில், குறிப்பாக தேசிய அரசியலில், கெட்ட வார்த்தையாக மாறியிருப்பதால், தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையான 13ம் திருத்த சட்டத்தை முழுமையாக அமுல…
-
- 0 replies
- 351 views
-
-
புவிசார் கேந்திரோபயங்களுக்காக மியன்மாரில் பலியிடப்படும் ரோஹிஞ்சாக்கள் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-9
-
- 1 reply
- 401 views
-
-
திடிரென வந்து விழுந்த பேரிடி அரசாங்கம் இந்த அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்காகவும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அழுத்தத்திலிருந்து விலகிச் செல்வதற்காகவும் இந்த அரசியலமைப்பினை உருவாக்கும் பணியை முன்னெடுத்து வருகிறது. அதாவது அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து விட்டால் அதனை சர்வதேசத்திற்கு காட்டி பொறுப்புக்கூறல் பொறிமுறையிலிருந்து ஏதோ ஒரு வகையில் விடுதலை பெறலாம் என அரசாங்கம் எண்ணுகிறது. இந்தப் பின்னணியிலேயே அரசாங்கம் பாரிய சிரத்தை யெடுத்து அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலிலேயே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் அறிவிப்பு வெ ளியாகியுள்ளதுடன் அது அரசியலமைப்பை தயாரிக்கும் முயற்சியில் கடும் அதிர்ச்சியை…
-
- 1 reply
- 975 views
-
-
தமிழீழ விடுதலையை ஈட்டுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை தத்தர் தற்போது இலங்கைத்தீவு சார்ந்து காணப்படும் புவிசார் அரசியல் யதார்த்தமும், தமிழீழ விடுதலையை ஈட்டுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை ஈழத்தமிழர் தேசியப் பிரச்சனையானது புவிசார் அரசியல் பிரச்சனைக்குள் சிக்குண்டுள்ள ஒரு பிரச்சனையாகும். தேசிய இனப்பிரச்சனை என்பது ஒருபோதும் ஓர் உள்நாட்டுப் பிரச்சனையல்ல. அது எப்போதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும். இத்தகைய இரண்டு அடிப்படைகளையும் வைத்தே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வடிவமைக்க வேண்டும். சுமாராக ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி இன்றைக்கு ஐந்து ஆண்டுகளாகின்றன. அதன் பின்பும் எதிரி தனது ஒடுக்குமுறைகளை பல வகைகளிலும், பல பரிமாணங்களிலும் அதிகரி…
-
- 0 replies
- 702 views
-