அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
ஆப்காணிஸ்தான் விவகாரம்: சீனாவைத் திசை திருப்பும் அமெரிக்க உத்தி –அமெரிக்கச் செல்வாக்குக் கட்டுப்பட்டு இந்திய இராஜதந்திரம் தனது சுயமரியாதையை இழந்துள்ளதா என்ற கேள்வி இங்கே விஞ்சியுள்ளது. படை விலகலுக்குப் பின்னர் சூடு பிடிக்கவுள்ள இந்தோ- பசுபிக் விகாரத்திலும் தனது சுயமரியாதையை புதுடில்லி தக்க வைக்குமா என்பதும் சந்தேகமே– -அ.நிக்ஸன்- அமெரிக்காவை மையப்படுத்திய நோட்டோ படையினர் ஆப்காணிஸ்தானில் இருந்து வெளியேறியமை தோல்வியா இல்லையா என்ற விமர்சனங்களே ஐரோப்பிய மற்றும் மேற்கத்தைய ஊடகங்களில் அதிகமாக முன்வைக்கப்படுகின்றன. சென்ற யூன் மாதம் ஜி-7 மற்றும் நேட்டோ மாநாடுகள் நடைபெற்றபோது, அங்கு ஏற்பட்ட முரண்பாடுகள், அதிருப்தி…
-
- 0 replies
- 592 views
-
-
தேர்தல் பேரம் பேசும் அரசியலினூடாக எதையும் தமிழ் மக்கள் சாதிக்கப்போவதில்லை என்பதை கடந்த தேர்தல்களின் ஊடாக வரலாற்று பாடத்தை நாங்கள் கற்றுக்கொண்டுவிட்டோம். அந்த அடிப்படையில் சிங்கள தலைவர்களிடம் ஏமாறியது போதும் என்ற ரீதியில் தான் தமிழர் தாயகத்தில் இருக்கின்ற கட்சிகளும் சிவில் சமூகத்தவர்களும் இணைந்து ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கி அதனூடாக பொது வேட்பாளராக என்னை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறார்கள். இணைந்த வட – கிழக்கு மக்கள் ஒருமித்து ஒரு சக்தியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சர்வதேசத்துக்கும் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு தீர்க்கமான செய்தியை கொடுக்க முடியும். இனியும் தமிழ் மக்களை ஏமாற்றமுடியாது, அவர்களுக்கான தீர்வ…
-
-
- 2 replies
- 592 views
- 1 follower
-
-
புதிய அரசியலமைப்பு எப்படி அமையும்? பி.மாணிக்கவாசகம் Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதில் தோல்வியையே சந்தித்திருக்கின்றது. அடிப்படையான விடயங்களில் முரண்பாட்டையும், அரசியல் கட்சிகளின் கொள்கை ரீதியான விடயங்களில் ஆழமான விவாதங்களுக்கான தேவையையும் அது உள்ளடக்கியிருக்கின்றது. முப்பது வருடங்களாக நீடித்த தமிழ் மக்களுக்கான ஆயுதமேந்திய போரட்டத்தின் மீதான வெற்றிவாத அரசியல் போக்கே,நாட்டுக்குப் புதியதோர் அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்ட மகிந்த ராஜபக்ச …
-
- 0 replies
- 592 views
-
-
இந்தியா இல்லாத தீர்வு ? - யதீந்திரா கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டிருக்கின்றது. சந்திப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக, இவ்வாறானதொரு சந்திப்பிற்காக கூட்டமைப்பு காத்துக்கிடந்தது. இந்திய தூதுவரை சந்திக்கும் சந்தர்பங்களிலெல்லாம், சம்பந்தன், இந்திய பிரதமரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறு வேண்டுகோள்களை முன்வைத்திருந்தார். இந்த அடிப்படையில்தான், இந்திய தூதரகம், நீண்ட நாட்களாக இவ…
-
- 1 reply
- 592 views
-
-
பாறை நிலத்தில் தலையைப் புதைக்குமா தீக்கோழி? ஆக்கம்: இதயச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் உரை, பல அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மேதினக் கூட்டத்தில் சிங்கக் கொடி பிடித்ததை சரியென்று நியாயப்படுத்தி ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மீண்டுமொரு சர்ச்சை அவரது நாடாளுமன்ற உரையால் கிளம்பியுள்ளது. தான் சொல்வது சரியென்பதில், எப்போதும் உறுதியாகவிருக்கும் அரசியல்வாதி அவர். புலிகளைத் திட்டித்தான், சிங்களத்தினதும், வல்லரசாளர்களினதும் ஆதரவினைப் பெறவேண்டுமென நினைத்தால் அதையும் செய்வார் அப்பெருமகன். ஆனால் அவர்களின் சொந்த நலன்கள், எமக்கான பிறப்புரிமையை அங்கீகரிக்காது என்பதுதான் நிஜம். ஆகவே ,இனிமேல்…
-
- 0 replies
- 592 views
-
-
யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம்
-
- 1 reply
- 592 views
-
-
இலங்கை இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா.வின் நடவடிக்கைகள் குறித்து ஒரு உள்ளக ஆய்வறிக்கையை சார்லஸ் பெட்ரி என்கிற ஐ.நா. அதிகாரி தலைமையிலான குழு நவம்பர் மாதம் வெளியிட்டது. இது ஐ.நா. உயர் அதிகாரிகளின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டினையும், செயல்பாட்டினையும் வெளிப்படுத்துகிறது. இதில் ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் இலங்கை அரசிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி இருப்பது பதியப்பட்டுள்ளது. 120 பக்கங்களுக்கு மேலான தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கை பல உள்தகவல்களை நமக்கு வழங்குகிறது. ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை, போர்குற்றம் என்பதாக மட்டுமே நின்றுவிட்டதையும், அரசியல் தீர்வினை நோக்கி தீர்மானகரமாக நகர இயலாதவாறு, முட்டுச்சந்தினை நோக்கிய நகர்வினை செய்ததற்கு பின்புல காரணங்களை இந்த அறிக்கை வெளிச்சத…
-
- 0 replies
- 592 views
-
-
வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு – இதயச்சந்திரன் Posted by sankathinews on May 1st, 2013 மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை , அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்…
-
- 0 replies
- 592 views
-
-
ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்-சிதைக்கும் முகமாக கனிய மணல் அகழும் நோக்கத்தோடு கரையோரத்தில் ஈடுபடும் திணைக்களங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருவது அப்பிரதேச மக்களை கவலைகொள்ள வைத்திருக்கிறது. அண்மையில் முல்லைத்தீவு அளம்பில் குருசடி பகுதியில் பல வாகனங்களில் வந்திறங்கிய கனிய மணல் கூட்டுத்தாபன, கடலோர பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், சுற்றுச்சூழல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நீர்வளங்கல் முகாமைத்துவத்தினர், புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் குறித்த பிரதேசத்தில் கனிய மணல் அகழும் பணிகளை முன்னெடுப்பதற்கு வந்த வேளையில் அங்கு குழ…
-
- 0 replies
- 592 views
- 1 follower
-
-
புதிய அரசமைப்பால் பௌத்த மதத்துக்கு ஆபத்தா? எதிர்க்கட்சி என்றால் தினமும் அரசுக்கு எதிராக ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருக்க வேண் டும், எதையாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும், அரசு கொண்டு வரும் சகல வேலைத் திட்டங் களையும் எதிர்க்க வேண்டும், அவற்றில் இருக்கும் குறைகளை மாத்திரம் தேடிப் பிடித்து விமர்சிக்க வேண்டும். இதுதான் எதிர்க் கட்சிக்கான எழுதப்படாத விதி.அவ்வாறு இருந்தால்தான் எதிர்க்கட்சி என்று ஒன்று இருப்பதை மக்கள் உணர்வர். ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் அந்த எதிர்ப்பு நடவடிக்கைதான் உதவும். மகிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் இவ்வாறுதான். மகிந்தவுக்கு எதிராகப் பேசிப் பேசி…
-
- 0 replies
- 592 views
-
-
சிங்கள மக்களின் கோபம்... அரசாங்கத்தை அசைக்குமா? நிலாந்தன். அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான். இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியை அரசியல் நீக்கம் செய்து ஒரு பகுதி பொருளாதாரவிமர்சகர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலில் இருந்து பிரித்துப் பேசி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.இலங்கைத்தீவு இப்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தனிய பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்பட்டவை அல்ல.இப்பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலை நீக்கிப் பே…
-
- 0 replies
- 592 views
-
-
சுமந்திரனின் பதில் என்ன? யதீந்திரா சுமந்திரன் எப்போதும் தன்னை பற்றிய விடயங்கள் சூடாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் ஒருவர். இதற்காகவே அவ்வப்போது அவர் வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்துவதுண்டு. இது ஒரு தேர்தலரசியல் தந்திரம். அண்மையில் கூட ஊடகவியலாளர்களுக்கு வகுப்பெடுப்பது போன்று ஏதோ சில விடயங்களை பேசியிருந்தார். உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் கனடிய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அரசியல் தீர்வு முயற்சிகள் தோல்வியில் முடிந்தால் அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு அரசியலிலிருந்து விலகும் எண்ணம் இருப்பதாகவும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் சுமந்திரன் வடக்கு மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் காண்பித்து வரும் ஆர்வத்தை பார்த்தால் அவருக்கு அரசியலிலிருந்…
-
- 0 replies
- 591 views
-
-
இந்தியா சொன்னது என்ன? - யதீந்திரா நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டடைப்பின் புதுடில்லி விஜயம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது. இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல் மற்றும் இந்திய வெளிவிவகார செயலர் சுஜாதா சிங் ஆகியோரை சந்தித்தித்து பேசியிருக்கின்றனர். இதில் பிரதமர் மோடியுடனான சந்திப்பே முக்கியமானது. கூட்டமைப்பின் புதுடில்லி விஜயம் தொடர்பில் தெற்கில் உள்ள அரசியல் விமர்சகர்கள் பல்வேறுபட்ட பார்வைகளை பதிவு செய்திருக்கின்றனர். ஒரு சிலரோ கூட்டமைப்பின் புதுடில்லி விஜயத்தால் அரசு எரிச்சலடைந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். …
-
- 0 replies
- 591 views
-
-
தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டியது: பேச்சுவார்த்தையா? சர்வதேச விசாரணையா? - தீபச்செல்வன்:- 15 ஜூலை 2014 இலங்கை அரசு விரும்பாவிட்டால் சமதான முயற்சிகளை கைவிடத் தயார் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ராம்போசா குறிப்பிட்டிருப்பது இலங்கையில் சமாதான முயற்சிகள் சாத்தியமான ஒரு விடயமல்ல என்பதை உணர்த்துகிறது. இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் பல்வேறு கால கட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. அவைகள் எதுவுமே சமாதானத்தை எட்டவில்லை என்பது இலங்கை - ஈழப் பிரச்சினையின் பேச்சுவார்த்தைகள் மற்றும் சமாதான முயற்சிகளின் கசப்பான வரலாறு ஆகும். இலங்கையில் தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடந்த பல பேச்சுவார்த்தைகளை மூன்றாக பிரிக்கலாம். முதலில் த…
-
- 1 reply
- 591 views
-
-
சிவாஜிலிங்கமும் பேரவையும் மாணவர் ஒன்றியமும் ஒரே தரப்பினரே புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 01:44 வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். ஏற்கெனவே அவர், 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 9,662 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் சார்பில், பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கருத்திலெடுக்கப்படாத நிலையில், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததாக சிவாஜிலிங்கம் கூறுகிறார். அவருக்கு ஆதரவாக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படுகிறார். …
-
- 0 replies
- 591 views
-
-
'சிவசேனை' – மற்றொரு கண்ணியா? -குணா கவியழகன் தமிழர்களின் ஆயுதப்போரைத் தோற்கடித்த தரப்புகள் போரின் மூல அம்சமான அரசியல் போராட்டத்தை விட்டு வைக்குமா? பொருளுள்ள இந்தக் கேள்விக்கு விடையறிய இலங்கைத் தீவின் அனைத்து அரசியல் அசைவுகளையும் ஆய்வுக் கண்ணோடு பின்தொடர வேண்டியவர்களாக இன்று தமிழர்கள் உள்ளனர். இப்போதைய மிகப் புதிய அசைவு 'சிவசேனை' சிவசேனை என்றொரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி, தமிழர்களின் உரிமையை வெல்வதற்கான கதவைத் திறந்துவிடலாம் என்ற கருத்தை முன்கொண்டு அரசியல் அரங்கில் புதிய காட்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. இலங்கையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியுற்றதற்கான அரசியல் காரணமாகி, தமிழர்களுக்கான உலக ஆதரவுக்கரம் ஒன்றேனும் இல்லாமையை பொத…
-
- 1 reply
- 591 views
-
-
வணக்கம் குணா, உங்களின் அனுமதியின்றி இங்கே உங்களின் காணொளியினை இணைத்தமைக்கு. கோபிக்கமாட்டீர்கள் என்கிற நம்பிக்கையோடு இணைக்கிறேன்.
-
- 0 replies
- 591 views
-
-
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவமிக்கதாக அவதானிக்கப்படுகின்றது. அந்த வகையில் அரியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டத்தின் போது உபதலைவர்கள் மற்றும் விசேட வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. பதவி வழிவந்தவர் என்ற வகையில் சபாநாயகர் கருஜெயசூரிய இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியதுடன், எம்.பி.க்களான திலங்க சுமதிபால, செல்வம் அடைக்கலநாதன், கபீர் ஹாசீம், சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, திலக் மாரப்பன, மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் டாக்டர் நளிந்த ஜயதிலக்க…
-
- 0 replies
- 591 views
-
-
இந்தியாவின் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய இராஜ தந்திரத்துக்குள் அகப்படுமா இலங்கை.? அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்கல் பாம்பியோ வருகை தந்த பின்பு இந்தியா இலங்கை விடயத்தில் கரிசனை அதிகம் கொள்வது போல் தெரிகிறது. அதற்கான அவசியப்பாடு இந்தியாவுக்கு அதிகமாக அமைந்திருப்பதுவும் சீனா தொடர்பில் அமெரிக்கா கொண்டிருக்கும் நிலைப்பாட்டை ஒத்ததாக இந்தியா இருக்கின்ற போதும் நிதானப் போக்கினை கடைப்பிடிகிறது. அதே நேரம் இந்தியா சீனாவுக்கு எதிரான கூட்டு பாதுகாப்பு நகர்வுகளை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாகவே இலங்கை அரசியல் விடயத்தில் அதிக ஈடுபாட்டைக் காட்ட முனைகிறதைக் காணமுடிகிறது. இக்கட்டுரையும் இந்தியா இலங்கை விடயத்தில் அண்மைக்காலத்தில் பின்பற்றி …
-
- 0 replies
- 591 views
-
-
எல்லாவற்றுக்கு பின்னாலும், யாரோ இருப்பதாக கூறுபவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் ? - யதீந்திரா 2009இற்கு பின்னரான அரசியல் என்பது, அடிப்படையிலேயே, ஒரு போர் தோல்விக்கு பின்னரான அரசியலாகும். ஒரு போர் தோல்விக்கு பின்னரான அரசியல் போக்கானது, கடந்த காலத்தை, ஒரு ஆசானாகக் கொண்டே நகர்த்தப்பட வேண்டும். ஏனெனில் கடந்தகாலத்தில் நிகழ்ந்தவைகள் அனைத்தும் சரியென்றால், ஒரு போதுமே தோல்வி ஏற்;பட்டிருக்காது, எனவே ஒரு தோல்வி நிகழ்கின்றது என்றால் – அங்கு ஏராளமான தவறுகள் நடந்திருக்கின்றது என்பதே பொருளாகும். ஆனால் நமது சூழலிலோ, கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ள எவருமே முயற்சிக்கவில்லை. சுயவிமர்சனம் சார்ந்து சிந்திப்பதற்கு அனைவருமே அஞ்சினர். …
-
- 1 reply
- 591 views
-
-
பொது வேட்பாளருக்கான கோரிக்கை..! ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற கோத்தபாய மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே தமிழ்மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலான தமது நிலைப்பாடு குறித்து எழுத்தில் எந்த விதமான உத்தரவாதத்தையும் தர முடியாது என கூறியுள்ளனர். அவர்கள் சார்ந்த பிரதான அரசியல் கட்சிகளாகிய பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன கூட இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ்மக்கள் தொடர்பில் உறுதியான ஓர் அரசியல் கொள்கையை அல்லது நிலைப்பாட்டை வேட்பாளர்களும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சார்ந…
-
- 0 replies
- 591 views
-
-
கொங்கோ: அலைபேசியில் வழியும் குருதி இயற்கை வளங்கள் வரமா, சாபமா? என்கிற கேள்வி ஒருவகையில் அபத்தமானது. ஏனெனில், இன்று உலகளாவிய நிலையில் வளர்ந்துள்ள நாடுகளின் அடிப்படையாக, இயற்கை வளங்களே இருந்தன; இன்னமும் இருக்கின்றன. அந்த வளங்கள் சொந்த நாட்டில் இருந்த வளங்களாகட்டும் அல்லது சுரண்டிய வளங்களாகட்டும் அவையே அந்நாடுகளை வளர்ச்சியின் உச்சிக்குக் கொண்டு சென்றன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராட்சியமாக, பிரித்தானியா திகழ்வதற்கு, அவற்றின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளின் இயற்கை வளங்கள் முக்கிய காரணியாகின. இவை, ஏனைய காலனியாதிக்கவாதிகளுக்கும் பொருந்தும். காலங்கள் மாறிவிட்டன. ஆனால், களங்…
-
- 0 replies
- 590 views
-
-
திருத்தப்பட வேண்டிய தவறுகள் இலங்கைத் தீவில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களில் கூடுதலானவர்கள், வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களே என்று சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே கடுமையான வறுமைச் சூழலுக்குள் சிக்கியுள்ளன. அதிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 18.2 சதவீதமான மக்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய இது ஓர் அபாய அறிவிப்பே. சனத்தொகை, புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் இந்த மதிப்பீட்டுத் தகவலுக்கு முன்பே, இந்தப் பத்தியாளர் உள்படப் பலரும் செய்திகள், ஆய்வறிக்கைகள், பத்திகள், நேர்காணல்கள், கட்டுரைகள் மூலமாக,…
-
- 0 replies
- 590 views
-
-
எப்போதான் சொல்லுவீங்க..? மூனா தொண்ணூறுகளின் ஆரம்பம். தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளையை யேர்மனியில் ஆரம்பித்து இருந்தோம். கைகளில் அடக்கமான தொலைபேசிகளோ அல்லது மடிக்கணணிகளோ இல்லாத நேரம். ஆகவே ஓடியோடித்தான் எங்கள் சேவையைச் செய்து கொண்டிருந்தோம். வீடு, குடும்பம், வேலை என்று எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையுடன் மல்லுக் கட்டிக்கொண்டுதான் எங்களுடைய புனர்வாழ்வுக்கான சேவை இருந்தது. மக்களை நாங்கள் அணுகும் முறையை விரும்பிய பலர், தாயகத்துக்கு சேவை செய்வதில் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். யேர்மனியில் இருந்த தமிழ் மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை மனம் விரும்பி வழங்கினார்கள். இவை எல்லாம் எங்களுக்கு வலிமையான ஊக்க மருந்துகளாகின. அடுத்த கட்டமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளையை சட்டரீ…
-
- 2 replies
- 590 views
-
-
சம்பந்தன் வீட்டில் சந்திக்கத் தயாரா? காரை துர்க்கா / 2019 ஜூன் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 04:24 Comments - 0 யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையம்; பரபரப்பான காலை நேரம்; கால்கள், பாடசாலைகளுக்கும் காரியாலயங்களுக்கும் வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, அன்றைய தினப் பத்திரிகையோடு முதியவர்கள் இருவர், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். “மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார். மைத்திரிக்கு வாக்களித்ததையிட்டு கவலை கொள்கின்றோம் - மாவை தெரிவிப்பு” எனப் பத்திரிகை ஒன்றில், குறிப்பிடப்பட்டிருந்த செய்தியை, இவர்களில் ஒருவர், இன்னொருவருக்கு வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தார். “அப்ப என்ன, ரணில் இவைய ஏமாத்த இல்லையாமே? உது என்ன, கதை விடுகினம், கண்டிய…
-
- 0 replies
- 590 views
-