Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சிறீலங்காவை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்குப் பாரப்படுத்த வேண்டும். 14 Views இருபத்தொன்பதுக்கு மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்படத் தங்கள் குடும்பங்களில் இருந்து சிறீலங்காவால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 18000இற்கு மேற்பட்டவர்களுடைய நீதிக்காக, அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் இம்மாதம் 18ஆம் திகதியுடன் 1400 நாட்களை கடந்து தாங்கள் சாகும்வரை நீதிக்காகப் போராடுவோம் எனப் போராடி வருகின்றனர். ஆனால் சிறீலங்காவோ இதுவரை எந்தப் பொறுப்புக் கூறலையும் சொல்லவுமில்லை, நிலைமாற்று நீதியை அவர்கள் பெறுவதற்கான எந்த வழிமுறைகளையும் தோற்றுவிக்கவுமில்லை. தங்களுக்கு நீதி கிடைக்காத துயரநிலையிலேயே 83 தாய்தந்தையர் காலமான துயர வரலாற்றையும் இப்போராட்டம் பதி…

  2. சிறீலங்காவைக் கிளீன் செய்வது ? நிலாந்தன். அண்மையில் ஐரோப்பாவில் வசிக்கும் பிரபல்யமான ஒரு எழுத்தாளர் என்னைக் காண வந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு வந்தவர் ஒரு இளம் அரச ஊழியர். என்னுடைய மாணவர். அவர் சொன்னார்,தான் வெளிநாட்டுக்குப் போக போவதாக.ஏன் நாட்டில் இருந்து உழைக்க முடியாது என்று நம்புகிறீர்களா என்று கேட்டேன். “ஓம் நான் ஒரு வீடு கட்டினேன். கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ரூபாய்கள் கடன்.கடனை அடைக்க என்னுடைய மாதச் சம்பளத்திலிருந்து பெரிய தொகை போகிறது. அதனால் வீட்டுச் செலவுகளுக்கு அம்மாவும் அப்பாவும் ஒரு கடை வைத்திருக்கிறார்கள். அந்தக் கடைக்கான முதலீடு கூட புலம்பெயர்ந்த நண்பர்கள் சிலர் தந்தது தான்.ஒரு அரச ஊழியனாக என்னால் அந்தக் கடனைக் கட்டி முடிப்பது கடினமாக உள்ளது.ஆனால…

  3. சிறு பொறிகள் - நிலாந்தன் லட்சக்கணக்கானவர்கள் திரளும் நல்லூர்த் திருவிழாவின் ஒரு பகுதியாக “ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களம்” என்ற தலைப்பின் கீழ் ஒரு சிறு கலந்துரையாடல் களம் திறக்கப்பட்டது. ஊருணி என்பது திருக்குறளில் உள்ள ஒரு வார்த்தை. ஊரில் நீரை நுகரும் இடம் அவ்வாறு என்றழைக்கப்பட்டது. பத்தாம் திருவிழாவில் இருந்து தொடங்கி நல்லூர் வளாகத்துக்குள் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள புடவைக் கைத்தொழில் திணைக்கள வளாகத்தில் இக்கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. அங்கு நிலத்தடி நீரைப் பாதுகாப்பது தொடர்பான கண்காட்சியும் இடம்பெற்றது. பங்களிப்புடன் கூடிய ஆராய்ச்சிக்கூடாக வடக்கின் நீரைப் பாதுகாப்புக்கான அமைப்பும், வடக்கின் இளம் நீர் வாண்மையாளர்களும் இணைந்து முன்னெடுத்த மேற்படி கலந்த…

  4. சிறு­பான்­மை­க­ளுக்குள் பகைமை பெரும்­பான்­மையின் ஆளுமை 1946 ஆம் ஆண்டு செர் ஐவர் ஜெனிங்ஸ் இயற்­றிய சோல்­பரி யாப்பில் ஒரு ஷரத்து இவ்­வாறு இடம்­பெற்­றி­ருந்­தி­ருக்க வேண்டும். அதா­வது சிறு­பான்­மை­களின் பூரண சம்­ம­தமும் அவர்­களின் அடிப்­படை உரி­மை­களின் உள்­ள­டக்­கமும் பல்­லின நீதி­ய­ர­சர்­களின் அங்­கீ­கா­ர­மு­மின்றி யாப்பை மாற்ற முடி­யாது. என்று அமைத்­தி­ருக்க வேண்டும். அப்­படிச் செய்­தி­ருந்தால், சிறு­பான்மைக் காப்­பீட்டுச் சட்­ட­மான 29 ஆம் ஷரத்து நிலைத்து இருந்­தி­ருக்கும். எனினும், பாரா­ளு­மன்­றத்தால் யாப்பை இரத்­தாக்க முடி­யாது என்று மட்­டுமே ஐவர் ஜெனிங்ஸ் குறிப்­பிட்­டி­ருந்தார். அதனால் தான் 1972 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளியே …

  5. சிறுத்தைகளும் விலங்குரிமைப் பாசாங்குகளும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில், சிறுத்தையொன்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், எதிர்பாராத விதமாக, தேசிய செய்தியாக மாறி, விலங்குரிமைக்கான கோரிக்கைகளும் விசாரணைக்கான கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றன. இத்தனை கருணை மிகுந்த தேசமாக இலங்கை இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் பலருக்கு எழுப்பியிருக்கிறது. உயிர்களைத் தேவையின்றிக் கொல்லக் கூடாது என்பது, எம்மில் அநேகர் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயம் தான். அச்சிறுத்தை கொல்லப்படும் காட்சிகளைப் பார்க்கும் போது, மனது வலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும், சிறுத்தை கொல்லப்பட்ட பின்னர், அதனுடன் “செல்பி” எடுத்துக் கொண்டு, அதை ஒரு க…

  6. சிறுபான்மைக் கட்சிகளுக்குள் வங்குரோத்து அரசியல் வேண்டாம்’ ப. பிறின்சியா டிக்சி நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, அவர்களைத் தாக்கிப் பேசினால் அல்லது இவர்களை இழுவுபடுத்திப் பேசினால் இந்தப் பகுதி மக்கள் எமக்கு ஆதரவு தருவார்கள் என்ற வங்குரோத்துநிலை அரசியலை, சிறுபான்மைக் கட்சிகள் விட்டுவிட வேண்டுமென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ‘மரம்’ சின்னத்தில், இலக்கம் 01இல் மட்டக்களப்பு மாவட்டத்தில், முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் அலிஸாஹிர் மௌலானா வேண்டுகோள் விடுத்தார். எதிர்கால சமூகம், ஒட்டுமொத்தமாக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான நல்ல கருத்துகளை, மக்கள் மத்தியில் முன்வைத்து, தேர்தல் பிரசாரத்தைச் செய்கின்ற போது, மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர…

  7. சிறுபான்மையின முதலமைச்சர் மீதான பாய்ச்சல் மொஹமட் பாதுஷா வார்த்தை தவறிவிட்டதால், கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வந்த வினை, அவரே எதிர்பாராத விடயமாகும். இது ஒரு பெரிய விவகாரமாக ஆக்கப்பட்டுள்ளமை சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு நல்லதொரு பாடமென்று கூறலாம். முதலமைச்சர் நஸீர், பகிரங்கமாக கடற்படை அதிகாரியொருவரை ஏசியமை, நாகரிகத்தின்படி தவறு என்று இப்பகுதியில் வெளியான கடந்தவார கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இதில் சம்பந்தப்பட்டுள்ள எல்லாத் தரப்பினரும் விசாரிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென அதில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், ஒவ்வொரு தரப்பினரும், இவ்விடயத்தைத் தங்களுடைய வேறு வேறு காரணங்களுக்காகத் தமது கையில் எடுத்திருக்க…

  8. [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்து, கிட்டத்தட்ட 12 நாட்களாக நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. கிழக்கில் எப்பாடுபட்டாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் என்பதும், அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்பதும், தேர்தல் முடிந்தவுடனேயே தெளிவாகி விட்டது. ஆனாலும் கிழக்கில் முதலாவது முஸ்லிம் முதல்வர் பதவியேற்பதற்கு கிட்டத்தட்ட 12 நாட்களாகின. கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதல்வராக வேண்டும் என்ற முஸ்லிம்களின் கனவு, முஸ்லிம் கட்சிகளின் மூலமாகவன்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலமே நிறைவேறியுள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் பலவீனங்களை நன்றாகவே வெளிச…

  9. [size=6]சிறுபான்மையினரிடம் கையேந்தும் அரசு [/size] [size=4]கிழக்கு மாகாண சபையை இலகுவாகக் கைப்பற்றுவது என்ற அரசின் கனவு இம்முறை அங்கு பலிக்கவில்லை. அறுதிப் பெரும்பான்மையுடன் கிழக்கில் ஆட்சியை நிறுவுவோம் எனக் கங்கணம் கட்டிய ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசுக்கு இந்தத் தேர்தல் ஒரு நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறது.[/size] [size=4]தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை என்ற கனவு கை நழுவிப் போனதால் ஆட்சியமைக்க சிறுபான்மைக் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களைத் தவிர்த்துக் கொண்டு எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ளப் பெரும்பான்மைச் சமூகத்தினால் முடியாது என்ற பாடத்தைக் கிழக்குத் தேர்தல் அரசுக்குக் கற்பித்திருக்கிறது.…

  10. ஆபிரிக்காவில் பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்த முதலாவது நாடு தென் ஆபிரிக்கா: அங்கு வாழ்ந்த வெள்ளையர்களிடம் கொடுத்ததால், 'போராட்டம் இன்றி' கொடுக்கப் பட்டது. கடைசியாக 'போராடி' பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்தவர்கள், ரொடிசியா என அழைக்கப் பட்ட சிம்பாவே. இரு நாடுகளிலும் பெரும்பான்மையினர் கருப்பர்கள். வெள்ளை சிறுபான்மையினர் ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள். தாம் சிறுபான்மையினர் என்ற எண்ணம் இல்லாது, மேற்குலகம் ஆதரவு தரும் என இறுமாந்து எந்த வித சமரசமும் இன்றி, பெரும்பான்மை இனத்தவருடன் மோதி, தோற்று, பின்னர், பலவீனமான நிலையில் பேச்சு வார்த்தைக்குப் போய், வெள்ளையர் நலன்களை உறுதிப் படுத்தி பின்னர் சுதந்திரம் வழங்கி, இன்று பிரித்தானியா என்றாலே பாம்பாகச் சீ…

    • 8 replies
    • 812 views
  11. சிறுபான்மையினருக்கு கைச்சேதம் பேரம் பேசும் அரசியல் என்பது சோரம் போகும் அரசியலாகி, இணக்க அரசியலும் கூட பெருந்தேசியக் கட்சிகளோடு எல்லாவற்றிலும் இணங்கிச் செல்லும் அரசியலாகிப் போய்க் கொண்டிருக்கின்ற நிலைமை காணப்படுகிறது. மாகாண சபைகளுக்கு ஒரேநாளில் தேர்தல் நடாத்துதல் என்ற கோதாவில், அச்சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அற்ப அதிகாரங்களிலும் கைவைக்கின்ற, அரசமைப்பின் இருபதாவது திருத்தம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அரசியல் பரப்பை நிறைத்திருக்கின்றன. இலங்கையின் அரசமைப்பை முற்றுமுழுதாக மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளில், மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்ற நல்லாட்சி அரசாங்கம், மாகாண சபைகளின் தேர்தல், அதிகாரங்கள், தத்துவங்கள், கலைப்பு போ…

  12. சிறுபான்மையினரை அடக்கியாளுதல் -என்.கே. அஷோக்பரன் ஆங்கிலத்தில் sadism என்ற சொல்லுண்டு. இந்த வார்த்தை sadisme என்ற பிரென்ஞ் சொல்லில் இருந்து வந்தது. Sadisme என்ற பிரென்ஞ் சொல்லானது, மாக்கி டு சாட் (Marquis de Sade) என்ற பிரென்ஞ் எழுத்தாளரின் பெயரிலிருந்து வந்தது. மாக்கி டு சாட்டின் சிற்றின்பக் கதைகள், வன்முறைக்கு பெயர்போனவை. மற்றவர்களைத் துன்புறுத்துவதன் ஊடாக, இன்பமடையும் தன்மைகள் அவற்றில் விஞ்சி நிற்கும். இதனால், பாலுறவில் மற்றவரைத் துன்பப்படுத்துவதன் ஊடாக, இன்பமடைவதற்கு sadism (சேடிஸம்) என்ற சொல் வழங்கலாயிற்று. காலப்போக்கில் இந்தச் சொல், பாலுறவு என்பதைக் கடந்து, மற்றவர்களைத் துன்பப்படுத்தி …

  13. சிறுபான்மையினரை அ்ங்கீகரிக்கும் மனோநிலை பெரும்பான்மையினருக்கு வேண்டும் எமது நாட்டில் இன­வாத நட­வ­டிக்­கைகள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இவ்­வி­ன­வாத நட­வ­டிக்­கை­களின் விளை­வாக மலை­யக மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் தனது வகி­பா­கத்­தினை சரி­யாக நிறை­வேற்­ற­வில்லை. இன­வா­தத்தை தடுக்கும் செயற்­பா­டு­களை மேற்­கொள்­வதில் அர­சாங்கம் பின்­ன­டிப்பு செய்து வரு­கின்­றது என்றும் விமர்­ச­னங்கள் மேலெ­ழுந்து வரு­கின்­றன. இன­வா­தமும் விளை­வு­களும் இன­வாதம் என்­பது எமது நாட்­டுக்கு புதி­ய­தல்ல. நாடு சுதந்­தி­ர­ம­டை­வ…

  14. சிறுபான்மையினரை துண்டாடும் சதி! -சத்ரியன் நாடாளுமன்றத்தில் பெற்றுக் கொண்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, தலைகால் புரியாமல் ஆடத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம். மாகாணசபைகளை இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி நிரல் அதில் முதலாவது. தற்போதுள்ள மாகாண சபைகளுக்குப் பதிலாக புதியதொரு நிர்வாக அமைப்பை உருவாக்க முனைவது இரண்டாவது. இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அடையாளம், தனித்துவத்தை முற்றாக இல்லாதொழிப்பதில், சிங்கள பௌத்த பேரினவாதம் மிக சூட்சுமமாகத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. காலத்துக்குக் காலம் ஒவ்வொரு தரப்புகள் அதற்கென தலையெடுக்கின்றன. தலைமை தாங்குகின்றன. தமிழரின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதில், சிங்கள பௌத்த பேரினவாதிகள் ஒன்றுபட்டு செ…

  15. சிறுபான்மையினர் சுதந்திரமாக வாழ்வதற்கு ‘அரசாங்கத்துக்கு எதிரான ஆட்சி வேண்டும்’ -எஸ்.எம்.எம்.முர்ஷித் சிறுபான்மை மக்களும், சம உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டுமாக இருந்தால், இந்த அரசாங்கத்துக்கு எதிரான, ஓர் ஆட்சி வரவேண்டும். அதற்குப் பொருத்தமான தலைவர், இன்றைய நிலையில் சஜித் பிரேமதாஸதான் என, ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அப்துல் லத்தீப் தெரிவித்தார். இவர், ‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்சொன்னவாறு கூறினார். அவர் வழங்கிய செவ்வியின் விவரம் பின்வருமாறு: க…

    • 0 replies
    • 435 views
  16. சிறுபான்மையினர் தீண்டத்தகாதவர்களா? -இலட்சுமணன் சுபீட்சத்தையும் அதற்கு ஆணிவேரான இனஒற்றுமையையும் இலங்கைத் தீவில் கடைப்பிடிக்க, யாரும் தயாராக இல்லை. பேரினவாதிகளின் ஆதிக்கத்தின் அடிமைகளாக, சிறுபான்மையினர் இத்தீவில் வாழவேண்டும் என்ற இனவாத சிந்தனை, மேலும் வீரியத்துடன் பரவத் தொடங்கியுள்ளது. அதன் எதிரொலியே, 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரின் கருத்தும் அதையொட்டிய பௌத்தத் துறவிகளின் கருத்துகளும் ஆகும். இன்றைய அரசியல் சூழலில், இந்தக் கருத்துகள், மற்றுமொரு பூகம்பமாக வெடித்துள்ளன. உண்மையில், இலங்கையின் அரசமைப்பையும் அதை ஒட்டிய திருத்தச் சட்டங்களை…

  17. சிறுமியை தீயில் தள்ளிய கொடுங்கரங்கள் புருஜோத்தமன் தங்கமயில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த நுவரெலியா, டயகமவைச் சேர்ந்த சிறுமி ஹிஸாலினி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் தற்கொலை முயற்சி என்று கூறப்பட்டாலும், முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் பணிபுரியும் சிறுமியின் கைக்கு, மண்ணெண்ணெயோ அல்லது ஏதோவோர் எரிபொருளோ எப்படிக் கிடைத்தது என்று ஆரம்பித்து, பல சந்தேகங்கள் தொடர்ச்சியாக எழுந்தன. அந்தச் சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, மரண விசாரணை அறிக்கையும் வெளியாகி இருக்கின்றது. சிறுமி, பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொண்டிரு…

  18. சிறுமைப்படும் பதவிகளும், விருதுகளும்! (ஈழநாதம் நாளேட்டில் 01.10.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம) ஐ.நா. அமைப்புக்களின் பதவி நியமனங்கள், ஐ.நா அமைப்புக்கள் வழங்கும் விருதுகள் என்பவை குறித்து இன்று பெரும் சந்தேகங்கள் எழத்தொடங்கியுள்ளன. இச்சந்தேகங்கள் ஐ.நா அமைப்புக்கள் மீதான நம்பிக்கைத்தன்மையைச் சிதைப்பதாகவும் அவற்றின் மீதான மதிப்பைக் குறிப்பவையாகவும் உள்ளன. இதில் குறிப்பாகச் சிறிலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு தென்னாசியப் பிராந்தியத்திற்கான யுனிசெப் பணிப்பாளராக வழங்கப்பட்டுள்ள பதவியும் வி.ஆனந்தசங்கரிக்கு யுனஸ்கோவினால் வழங்கப்பட்ட விருதும் இத்தகைய சந்தேகங்களுக்கு அடிப்படையாகியுள்ளன. சிறிலங்காவின் சனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க இருந்த…

    • 5 replies
    • 1.7k views
  19. சிறைக்கம்பிகளின் பின்னால் துருப்பிடிக்கும் நல்லாட்சி ப.தெய்வீகன் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்னொரு தடவை ஆரம்பிக்கப்பட்டு, 'சம்பிரதாயபூர்வ உறுதிமொழிகளுடன்'முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. கைதிகளை வழக்கமாக சென்று உருக்கமாக பார்க்கும் அரசியல்வாதிகளும் இம்முறை அதிகம் அக்கறைப்படவில்லை. சிறைச்சாலை ஆணையாளர்தான், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து உத்தரவாதத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார். அவரது உறுதிமொழியை அடுத்து நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்ட உண்ணாவிரதிகள் இடைக்கால திருப்தியுடன் மீண்டும் தடுப்புக்காவலுக்கு திரும்பியுள்ளனர். கடந்த தடவை கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பாக திமிறிய பல ஊடகங்களும்கூட இம்முறை இடம்பெற்ற கைதிக…

  20. சில சிந்தனைகள்: ‘சுதந்திரம்’ கிடைத்து 75 ஆண்டுகள்! என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலையடைந்து, பிரித்தானிய முடியின் கீழ் டொமினியனாக ஆன, 1948 பெப்ரவரி நான்காம் திகதியை இலங்கை, சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகிறது. அந்தச் ‘சுதந்திரம்’ கிடைத்து, கடந்த சனிக்கிழமையோடு 75 ஆண்டுகளாகியது. 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதா, வேண்டாமா என்ற வாதப்பிரதிவாதங்கள் இந்தமுறை மிகப் பலமாக ஒலித்தன. சுதந்திர தினத்துக்கு முதல் நாளிரவு, கொழும்பின் மருதானையில் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் இடதுசாரிகளால் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தை பொலிஸார் தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் கலைத்த…

  21. சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம் மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:27 Comments - 0 மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான மக்கள், தமக்குச் சொந்தமான காணியொன்றைக் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர். தம்முடைய ஆட்புல எல்லையை விஸ்தரிப்பதற்காக, நாடுகள் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் போக்கு, இன்னும் அவதானிக்கப்பட்டு வருகின்ற சமகாலத்தில், தாம் வாழ்வதற்கான ஒரு துண்டுக் காணிக்காக, மக்கள் போராடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இலங்…

  22. சிலியை உலுக்கும் போராட்டங்கள்: மக்கள் வீதிக்கு இறங்கும் போது... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 நவம்பர் 07 மக்கள் விழிப்படைந்து போராடத் தொடங்கினால், அதற்கு நிகரான சக்தி எதுவுமில்லை. இதை உலக வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. மக்கள் போராட்டங்களின் சக்தி அத்தகையது; அதை, மக்கள் இப்போது மீண்டும் சாத்தியமாக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம், உச்சத்தை எட்டியுள்ள இக்காலப்பகுதியிலும், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்; அரசுகளை ஆட்டங்காண வைக்கிறார்கள். இத்தகைய போராட்டங்கள், உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு, மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கின்றன. கடந்த சில வாரங்களில், உலகின் பல ப…

  23. சிலுவை சுமக்கக் கடமைப்பட்டவர்கள் யார்? தமிழ் அரசியல் கைதிகளை, அரசாங்கம் விடுவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குக் காரணமாக இருந்த தூண்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மதியரசன் கிருஷாந்தி என்பவர், பகிரங்கமாக எழுதிய ஒரு கடிதமாகும். தன்னுடைய சகோதரர் ஒருவர், அரசியல் கைதியாக அநுராதபுரம் சிறைச்சாலையில், வழக்கு விசாரணையை எதிர்கொள்வதில் சந்தித்து வரும் நெருக்கடிகளை வெளிப்படுத்தி, அந்தக் கடிதத்தை, மதியரசன் கிருஷாந்தி எழுதியிருந்தார். மிகவும் உணர்வு பூர்வமாக எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், தமிழ் அரசியல் கைதி ஒருவர…

  24. நீதி தேவதை சிலுவையில் அறையப்படலாம். அவள் அந்த நேரத்தில் பரம பிதாவே இவர்கள் தாம் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னித்தருளும் எனக் கூறமாட்டாள். அவள் உயிர்த் தெழும் போது பெரு நெருப்பாகக் கொழுந்து விட்டெரிந்து தீமைகளை அழிப்பாள் என்பது மட்டும் நிச்சயம். 1966 1967 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து தீப்பொறி என்ற ஒரு பத்திரிகை வெளிவந்தது. இந்தப் பத்திரிகை சமூகத்தையும் சமூகத்தில் இடம்பெறும் அநியாயங்களையும் துணிச்சலுடன் அழகு தமிழில் அடுக்கு மொழியில் காரசாரமாக விமர்சித்த காரணத்தால் இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இது அதிகமாக விற்பனையாகும் வார இதழாக இருந்தது மட்டுமன்றி இது எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்குமள…

    • 0 replies
    • 635 views
  25. ஆனால் போரின் போது ஒருவன் இறந்து விட்டால் அவன் எதிரிப் படையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனின் சடலத்துக்கு உரிய மரியாதை வழங்கப்படுவது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஓர் இராணுவ மரபு. 1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டை ஏற்கனவே கைப்பற்றிய அரச படையினர் சத்ஜெய நடவடிக்கை மூலம் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சியை நோக்கி முன்னேற முயன்ற நாள்கள் அவை. அப்போதுதான் வட இலங்கையின் கிழக்கு முனையில் ஒரு பூகம்பம் வெடிக்கிறது. விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் ஒன்று பொங்கியெழுந்து முல்லைத்தீவு இராணுவத்தளம் மீது பாய்கிறது. யாழ்.குடாநாட்டைக் கைபற்றிய வெற்றியின் மமதை சிதறடிக்கப்பட்டு முல்லைத்தளம் முற்றாகவே நிர்மூலம் செய்யப்படுகிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.