அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்: விக்னேஸ்வரன் வீசிய வலை Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, பி.ப. 12:08 Comments - 0 -இலட்சுமணன் இலங்கை விவகாரத்தை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரொன்றில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சமர்ப்பித்திருக்கின்றன. ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில், கிழக்கில் அரசியல் தலைமைகள், முக்கிய தீர்மானங்களை எடுக்கும் காலகட்டங்கள் இருந்து வந்துள்ளன. அந்த நிலைமையில், இடைப்பட்ட காலத்தில், மாற்றம் ஏற்பட…
-
- 0 replies
- 996 views
-
-
பூர்வீக தேசத்தை அடைவதே திபெத்தியர்களின் கனவு; ஒரு கள ஆய்வு ( லியோ நிரோஷ தர்ஷன் ) திபெத் பூமியின் கூரை என்று அழைக்கப்படும் நாடு. பௌத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கங்கள் மற்றும் இஸ்லாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடாகும். இந்தியாவின் தலைப் பாகமாக இருக்கும் இயமமலைத் தொடரில் திபெத் தேசம் காணப்பட்டதால், அதனை தனதாக்கிக் கொள்வதற்காக சீனா திபெத் மீது மேலாதிக்கத்தை கடுமையாக செலுத்த தொடங்கியது. இதனால் ஏற்பட்ட மோதல்களினால் பல்லாயிரம் கணக்கான திபெத்தியர்கள் உயிரிழந்ததுடன் பல்வேறு தேசங்களுக்கு அகதிகளாகவும் சென்றனர். அவ்வாறு சென்ற திபெத்தியர்கள் இன்றும் தமது பூர்வீகத்தை இழந்து பல்வேறு தேசங்களில் அக…
-
- 0 replies
- 916 views
-
-
புதிய ஜெனிவா பிரேரணை ஊடாக மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா? ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்படவிருக்கிறது. ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதன் பிரகாரம் பிரேரணைக்கு அனுசரணை வழங்கும் பட்சத்தில் இலங்கை தொடர்பான 40/1 என்ற இந்தப் புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும். ஒருவேளை ஏதாவது ஒரு உறுப்புநாடு எதிர்ப்பு தெரிவித்தால் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டிய தேவை மனித உரிமை பேரவைக்கு ஏற்படும். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்க…
-
- 0 replies
- 885 views
-
-
கோட்டாவின் எழுச்சி புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 20 புதன்கிழமை, பி.ப. 07:21 Comments - 0 பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏதாவது மாயாஜாலங்கள் நிகழ்ந்தால் ஒழிய, இதில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அவரை எதிர்த்து, ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ரணில் விக்கிரமசிங்கவா, கரு ஜயசூரியவா, சஜித் பிரேமதாஸவா போட்டியிடப்போகிறார்கள், என்பதுதான் இப்போதைய கேள்வி. ஒக்டோபர் 26, சதிப்புரட்சியின் தோல்வி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை செல்லாக்காசாக்கி விட்டது. சர்வாதிகாரத்துக்கும் பெரும் ஊழலுக்கும் எதிராக, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னிறுத்தப்பட்ட மைத்திரி, இன்றைக்கு…
-
- 4 replies
- 1.8k views
-
-
அரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 20 புதன்கிழமை, பி.ப. 06:40 Comments - 0 அரசாங்க தூதுக் குழுவின், குழுக்களின் ஜெனீவாப் பயணம், விசித்திரமானதொரு நாடகமாகவிருந்த போதிலும், இறுதி நேரத்தில் அது தவிர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் ஒரு தூதுக்குழுவும் ஜனாதிபதியின் சார்பில் மற்றொரு குழுவுமாக இரண்டு குழுக்கள், முன்னர் ஜெனீவா செல்லவிருந்தன. இப்போது ஒரு குழு தான், ஜெனீவா சென்றுள்ளது. 2015ஆம் ஆண்டு, அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கி, நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற, அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் தேவை என்கிறது. …
-
- 0 replies
- 826 views
-
-
தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும் எம். காசிநாதன் / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:48 Comments - 0 கோடை வெப்பம், கொழுந்து விட்டுத் தாக்கத் தொடங்கி இருக்கின்ற நிலையில், பரபரப்பான பேச்சுவார்த்தைகள், விறுவிறுப்பான பேட்டிகள் என்று, கடந்த சில வாரங்களாகச் சூடாகிக் கொண்டிருந்தது தமிழகத் தேர்தல் களம். இப்போது, தொகுதிப் பங்கீடுகள் முடிந்து, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது அந்தக் களம். திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மட்டுமே, கூட்டணி அமைக்கும் பலமுள்ள கட்சிகள் என்பது, மீண்டுமொருமுறை ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையிலும் பறை சாற்றப்பட்டுள்ளது. இருபெரும் தலைவர்களும் இல்லாத சூழ்ந…
-
- 0 replies
- 835 views
-
-
சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம் மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:27 Comments - 0 மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான மக்கள், தமக்குச் சொந்தமான காணியொன்றைக் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர். தம்முடைய ஆட்புல எல்லையை விஸ்தரிப்பதற்காக, நாடுகள் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் போக்கு, இன்னும் அவதானிக்கப்பட்டு வருகின்ற சமகாலத்தில், தாம் வாழ்வதற்கான ஒரு துண்டுக் காணிக்காக, மக்கள் போராடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இலங்…
-
- 0 replies
- 787 views
-
-
கண்டி வீழ்ச்சியின் சூத்திரதாரி ஜோன் டொயிலியின் டயரியில் மார்ச் 2. 1815 ஆம் திகதி இப்படித்தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அதே தினம் வாரியபொல சுமங்கள தேரர் அங்கிருந்த கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட ஆங்கிலேயர்களின் கொடியை இறக்கி காலால் மிதித்து சிங்கக் கொடியை ஏற்றியதாக பல்லாயிரக்கணக்கான சிங்களக் கட்டுரைகளும், நூல்களும் பதிவு செய்து வந்திருக்கின்றன. பாடசாலை பாடப்புத்தங்களில் இன்றுவரை அப்படியொரு கதை எழுதப்பட்டு வருகின்றன. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் அதுவொரு கட்டுக்கதை என்றும் பிரபல மானுடவியலாளரான பேராசிரியர் கணநாத் ஒபேசேகர உள்ளிட்ட பலர் தமது ஆய்வு…
-
- 0 replies
- 1k views
-
-
முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள் கே. சஞ்சயன் / 2019 மார்ச் 18 திங்கட்கிழமை, பி.ப. 09:40 Comments - 0 இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாகக் கூறியிருக்கிறது. அவ்வாறு இணங்கினால், அடுத்தவாரம் வாக்கெடுப்பு நடத்தப்படாது. இணங்காவிடின், வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும். ஐ…
-
- 0 replies
- 896 views
-
-
மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்கள் - தமிழர் நிராகரித்தால் வெற்றி யாருக்குமேயில்லை 25 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிப் பதவியை ஏற்பதற்கான வாய்ப்பு? இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நியமிப்பதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன. தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கக்கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க இராஜாங்க திணைக்க…
-
- 0 replies
- 794 views
-
-
இலங்கையின் இறைமை அதிகாரம் பிரிக்கப்படாமல், அதனை சர்வதேச ஆதரவுடன் பாதுகாப்பதே சிங்களக் கட்சிகளின் நோக்கம் ஈழத் தமிழர்களுக்கு ஜெனீவா எதனையும் கொடுக்காது- போர்க்குற்ற விசாரணை புலிகளை நோக்கியே ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள், சிப்பாய்களை இலங்கையிலேயே கைது செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளதாக பூகோள இலங்கையர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சியாமேந்திரா விக்கிரமாராட்சி, இலங்கைக்கு ஆபத்து வரக்கூடிய அந்தப் பிரேரணையை…
-
- 0 replies
- 664 views
-
-
ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா? - நிலாந்தன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு அவர்கள் வழமை போல் ஓர் அப்புக்காத்து விளக்கம் தருகிறார்கள். அதாவது அது கால அவகாசம் அல்ல. இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிப்பதற்கான ஒரு கால நீட்சியே என்று. அப்படியென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்ட கால அவகாசமானது ஐ.நா அரசாங்கத்தை கண்காணிப்பதற்கான அல்லது பின்தொடர்வதற்கான ஒரு கால அட்டவணையைக் கொண்டிருக்கவில்லையா? அல்லது கடந்த நான்கு ஆண்டுகால ஏமாற்றங்களின் விளைவாக இம் முறைதான் அவ்வாறு கண்காணிப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறதா? ஆனால் கடந்த முறை கால அவகாசம் வழங்கப்பட்ட போது அரசாங்கத்தைக…
-
- 0 replies
- 883 views
-
-
யதீந்திரா திருகோணமலையில், அமெரிக்கா படைத்தளத்தளமொன்றை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதான செய்திகளை ஆங்காங்கே காணக் கூடியதாக இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், சீனாவின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில், சீனாவின் முன்னணி படைத்தளமாக மாறுவதற்கான வாய்ப்;புக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சீனாவின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலேயே ஹம்பாந்தோட்டை சீனாவின் கைகளுக்கு சென்றிருக்கிறது. இது சீனாவின் கடன்பொறி ராஜதந்திரத்தின் (debt diplomacy ) வெற்றி என்றும் பென்ஸ் குறிப்பிட்டிருந்தார். இதே வேளை கடந்த ஆண்டு செம்டம்பரில், அமெரிக்க செனட்டர்கள் 14பேர் இணைந்து, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மார்ட்டிக்கு (James Mattis) ஒரு கடிதத்தை அனுப்பியிருந்…
-
- 0 replies
- 930 views
-
-
சிரியா: முடிந்த போரும் முடியாத கதையும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 14 வியாழக்கிழமை, மு.ப. 06:38 போர்கள், ஏன் தொடங்கின என்று தெரியாமல், அவை நடக்கின்றன. அவை, ஏன் நடக்கின்றன என்று தெரியாமல், அவை தொடர்கின்றன. இறுதியில், தொடக்கிய காரணமோ, தொடர்ந்த காரணமோ இன்றி, அவை முடிகின்றன. ஒரு போர் முடிந்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்புகள், ஆண்டாண்டுக்கும் தொடரும்; போரின் தீவிரம் அத்தகையது. போர் உருவாக்கிய கதைகள், பதிலின்றிப் பதில்களை வேண்டி, பல குரல்களாய் ஒலித்துக் கொண்டே இருக்கும். முடியாத கதைகளின் களம், போரும் அதன் பின்னரான நிலமுமாகும். கடந்த எட்டு ஆண்டுகளாக, சிரியாவில் நடைபெற்று வந்த போர், முடிவுக்கு வந்திருக்கிறது. ஐந்து இலட்சத்துக்கும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
மன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மார்ச் 13 புதன்கிழமை, பி.ப. 01:00 மன்னார், சதொச கட்டட வளாகத்தில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கி.பி 1477 - 1642 காலப்பகுதிக்குரியவை என்று, கார்பன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை முன்வைத்து, வாதப்பிரதி வாதங்கள் கடந்த சில நாள்களாக, அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றன. அதுவும், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு முரண்பாடுகள் ஏற்படுத்திவிட்ட, மத அடிப்படைவாத விவாதங்களில் நின்றும், மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தைக் கையாளச் சில தரப்புகள் முயல்கின்றன. மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து, …
-
- 0 replies
- 1.1k views
-
-
கால அவகாசம் கோருதல் எப்போது முடிவடையும்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 13 புதன்கிழமை, பி.ப. 12:44 Comments - 0 ஐ. நா மனித உரிமைகள் பேரவை விடயத்தில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் விசித்திரமானவையாகவே இருக்கின்றன. ஜனாதிபதியும் பிரதமரும் அந்த விடயத்தில் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளைப் பார்க்கும் போது, நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றனவா என்று, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் நினைக்கலாம். ஏனெனில், அவ்விருவரும் வெவ்வேறாக, அப்பேரவை தொடர்பான விடயங்களைக் கையாளப் போகிறார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம், இம்முறையும் பேரவையில் இலங்கை தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட இருக்கும் பிரேரணை ஒன்றுக்கு, இணை அனுசரணை வழங்கப் போகிறது. இற…
-
- 0 replies
- 656 views
-
-
சம்பந்தன், சுமந்திரன்; சாதிப்பார்களா, சரிவார்களா? காரை துர்க்கா / 2019 மார்ச் 12 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:24 Comments - 0 ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துக்கு (2009) பின்னராகக் கடந்துவந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களின் தலைமை, தமிழ் மக்களைச் சிறப்பான செல்நெறியில் வழிநடத்தத் தவறிவிட்டது. இவ்வாறாக, தமிழ் மக்கள் தங்களுக்குள்ளும் பொது வெளியிலும் உள்ளம் குமுறுகின்றார்கள், மனம் வெதும்புகின்றார்கள். அவ்வாறெனின், தமிழ் மக்களின் தலைமை என்றால் யார்? 2009 மே 19க்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, ஈழத்தமிழ் மக்களின் தலைமையைத் தத்தெடுத்தது. ஆனால் அவர்கள், தமிழ் மக்களது அபிலாஷைகளை அடையக்கூடிய வகையிலும் தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 888 views
-
-
காலஅவகாசம் வழங்குவதால்- நீதி கிடைத்து விடுமா? பதிவேற்றிய காலம்: Mar 13, 2019 இலங்கைக்குக் கால அவகாசம் வழங்குவது தொடர்பாகக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகத் தென்படவில்லை. காலஅவகாசம் வழங்கினால்தான் பன்னாட்டுச் சமூகத்தின் இலங்கை மீதான கண்காணிப்பு நீடித்திருக்கு மெனக் கூறப்படுவதை யும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போர் ஓய்ந்து பத்து ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்குப் பொறுப்புக் கூறுவதி லிருந்து இலங்கை நழுவி வருவதையே காண முடிகின்றது. ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் கால அவகாசம் வழங்…
-
- 0 replies
- 941 views
-
-
ஐ.நாவைச் சீண்டி விடுமா- அரச தலைவரின் சவால்!! பதிவேற்றிய காலம்: Mar 13, 2019 ஐ.நாவுக்கே சவால் விடும் வகையில் அரச தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இனிமேல் தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்பட்டால் அதை ஏற்பதற்குத் தாம் தயாரில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்களைக் கேட்கும்போது இலங்கை ஐ.நாவின் ஓர் உறுப்பு நாடா என்ற சந்தேகம்தான் மனதில் எழுகின்றது. அரச தலைவர் தெரிவித்த இன்னுமொரு கருத்தும் சிந்தனையைத் தூண்டுகின்றது. ஏற்கனவே இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கலாவதியாகிவிட்ட நிலையில் அவை தொடர்பாக இனியும் பேசிக்கொண்டிருப்பது வீண்…
-
- 0 replies
- 721 views
-
-
அயோத்தியில் இராமர் கோவில் விவகாரம்: சமரசத் தீர்வும் சந்திக்கப் போகும் தேர்தலும் எம். காசிநாதன் / 2019 மார்ச் 12 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:14 Comments - 0 1850களில் தொடங்கப்பட்ட அயோத்தியில், இராமர் கோவில் கட்டும் பிரச்சினை, சுதந்திர இந்தியாவில், பல பிரதமர்களைக் கண்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. பிரதமராக இருந்த நேரு, ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர் என்று தொடர்கதையாகி, பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது, ஒரு ‘வலுக்கட்டாயமான’ முடிவுக்கு வந்தது. அதாவது, அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது “க்ளைமாக்ஸ்” காட்சியை எட்டியது. பாரதிய ஜனதாக் கட்சியின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருக்கும் எல்.கே. அத்வானி, நாடு முழுவ…
-
- 0 replies
- 430 views
-
-
தேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி: March 10, 2019 மன்னார்ச் சம்பவத்தை – தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது – நிலாந்தன்… 2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார். தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்க…
-
- 0 replies
- 587 views
-
-
சந்தர்ப்பவாத அரசியல் -பி.மாணிக்கவாசகம் March 9, 2019 நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்கும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரிக்கும் போக்கில் செல்லத்தலைப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. ஆட்சி மாற்றத்தின் போது பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி அதனை ஏற்றுக்கொண்ட போதிலும், காலம் கடத்தி அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சியிலேயே கடந்த நான்கு வருடங்களும் கழிந்து போயிருக்கின்றன. …
-
- 0 replies
- 610 views
-
-
கைது செய்யப்படுவாரா கரன்னகொட? கே. சஞ்சயன் / 2019 மார்ச் 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:12 Comments - 0 படையினரை முன்னிறுத்திய அரசியல் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2008-09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கு, இப்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும் ஒரு சந்தேக நபராகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள், நடந்து கொண்டிருக்கின்றன. அட்மிரல் வசந்த கரன்னகொட, கடற்படைத் தளபதியாக இருந்தபோது, இந்த வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதுவும், அட்மிரல் கரன்னகொட தான், தனக்கு நெருக்கமான அதிகாரியாக இரு…
-
- 0 replies
- 957 views
-
-
ஜனாதிபதி தேர்தலும் பிரதான வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பை தடுப்பதில் ஜனாதிபதியின் வல்லமையும் - கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மனதிற்கொண்டு இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் எற்பாடுகளையும் தந்திரோபாய நகர்வுகளையும் செய்துகொண்டிருக்கின்றன. அத்தகைய நகர்வுகளில் ஒன்றுதான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நன்கு பிரபல்யப்படுத்தப்பட்ட கடந்த மாத வடக்கு விஜயம்.தமிழர்களின் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் கணிப்பீடுகளாக இருக்கின்றன. இருக்கவேண்டும். 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியில் முஸ்லிம் வாக்குகள் முக்கியமான பாத்திரத்தை வகித்தன என்பதை மிக நன்றாக உணர்ந்துகொண்டவராக ஸ்ரீலங்கா பொதுஜனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்…
-
- 0 replies
- 393 views
-
-
இலங்கையில் பதில் கிடைக்காத ஹர்த்தாலுக்கு சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும் Editorial / 2019 மார்ச் 07 வியாழக்கிழமை, பி.ப. 06:04 Comments - 0 -அதிரதன் அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பது பழமொழியோ, சான்றோர் வாக்கோ, எப்படி இருந்த போதிலும், இப்போது செயற்பாட்டுப் பயனில் இருக்கிறதா என்றால், ‘இல்லை’ என்றே பதில் சொல்லியாக வேண்டும். அப்படியானால், இலங்கையில் இனப்பிரச்சினை எனும் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருக்க வேண்டும்; காணாமல் போனோர் பிரச்சினை முடிவுக்கு வந்து, மகிழ்ச்சி பொங்கியிருக்க வேண்டுமே? ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 40ஆவது கூட்டத்தொடர், கடந்த மாத இறுதியில் ஆரம்பமானது. இதன் ஆரம்பமே, இலங்கையிலிருந்து எழுந்த ஜனநாயக…
-
- 0 replies
- 531 views
-