அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
நவம்பர்-7, 1917 ரசிய சோசலிசப் புரட்சி: நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துகள்! “ஒருவர் தமது சொந்த உழைப்பின் பயனாய்ப் பெறுவதைத் தமது தனிச் சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஒழிக்க வரும்புவதாய் எங்களை ஏசுகிறார்கள்…..” “பாடுபட்டுப் பெற்ற, சொந்த முயற்சியால் சேர்த்த, சுயமாய்ச் சம்பாதித்த சொத்தாம் இது!…” “தனிச்சொத்தை ஒழித்த்தும் எல்லாச்செயற்பாடுகளும் நின்று போய்விடும், அனைத்து மக்களும் சோம்பேறித்தனத்தால் பீடிக்கப்படுவர் என்பதாய் ஆட்சேபம் கூறப்படுகிறது. இது மெய்யானால் முதலாளித்துவ சமுதாயம் நெடுநாட்களுக்கு முன்பே முழுச் சோம்பேறித்தனத்தில் மூழ்கி மடிந்திருக்கவேண்டும். ஏனெனில் முதலாளித்துவ சுமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர…
-
- 0 replies
- 992 views
-
-
கஞ்சா காவிகள் கொரோனா வைரஸ் காவுவார்களா? கே. சஞ்சயன் / 2020 ஜூன் 20 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அலை, வடக்கிலிருந்தே ஆரம்பிக்கக் கூடும் என்ற எச்சரிக்கை, சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதற்கு, முக்கிய காரணியாக இருப்பது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள 'தொப்புள் கொடி உறவு'தான். காலம் காலமாக, இந்தியாவுடன் 'தொப்புள் கொடி உறவு' உள்ளவர்களாகத் தமிழர்கள் பெருமையுடன் கூறிக் கொள்வதுண்டு. பல சமயம் இந்த உறவு, பெருமையாகவும் பலமாகவும் கூட இருந்ததுண்டு. ஆனால், இப்போது இந்த உறவே ஆபத்தானதாகவும் மாறிவிடக் கூடிய சூழலும் உள்ளது. இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக்கு நீரிணை வழியாக, குறுகிய …
-
- 0 replies
- 587 views
-
-
தமிழ்த் தேசிய தரப்பு புதிய பாதை நோக்கி நகருமா? -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியலின் கடந்த 65 ஆண்டுகளில் சந்தித்த தேர்தல்களில் இருந்து, இம்முறை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் கடந்து வந்த பாதைகளை நோக்கும்போது, அவற்றின் எதிர்வினைகள் பற்றி நன்றாகப் புரியும். இலங்கைத் தமிழ்க் காங்கிரிஸில் ஆரம்பித்த சமஅந்தஸ்துப் பிரச்சினை, 50க்கு 50. அன்றைய ஆட்சியாளர்கள், 50க்கு 48 தான் தருவதாகச் சொல்ல, 50க்கு 50 தந்தால்தான் தீர்ப்பை ஏற்பேன்; இல்லையேல் அதைப் பெறும் முறையில் பெறுவோம் எனச் சவால் விட்டு, கிடைத்ததையும் இழந்தனர். அதன்பின், இலங்கைத் தமிழரசுக்கட்சி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு, சமஷ்டி முறையிலான தீர்வை எமக்கு தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்…
-
- 6 replies
- 901 views
-
-
ஒளித்து விளையாடுதல் முகம்மது தம்பி மரைக்கார் அரசியல் அரங்கில் காலத்துக்குக் காலம் உதைத்து விளையாட ஏதோவொரு பந்து கிடைத்து விடுகிறது. பந்தினுடைய பருமன் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. விளையாடத் தெரியாதவர்கள் கூட, பந்துகளை வைத்து 'ஆடி'க் கொண்டிருப்பதுதான் அரசியல் அரங்கில் ஆச்சரியமாகும். 'வடக்கு - கிழக்கு விவகாரம்' என்பது, அரசியல் அரங்கில் அடிக்கடி விழுகின்ற பந்தாகும். இப்போதும், 'அந்த'ப் பந்து அரசியல் அரங்கில் வந்து விழுந்திருக்கிறது. உதைத்து விளையாடும் கால்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாட்டினை புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலம் தீர…
-
- 0 replies
- 648 views
-
-
பாகிஸ்தான் பிரிந்து போனதற்கு யார் காரணம்? முகநூலில் இந்துத்துவ சிந்தனை கொண்ட நண்பர்கள் எங்கள் மீது பல அவதூறுகளை சொன்னார் பாகிஸ்தான் பிரிவினைக்கு இங்குள்ள முஸ்லிம்கள் காரணம் என்கிற வாதத்தை முன் வைத்தார் அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக சரியான செய்தியை அனைவருக்கும் அறிய வைத்து வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதற்காக இந்த பதிவு. இந்து – முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்.. கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியிலும் கூட காண இயலாது. ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் த…
-
- 0 replies
- 3.7k views
-
-
சேனல் நான்கின் அறம் - யமுனா ராஜேந்திரன் சேனல் நான்கு அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும், அமெரிக்க, பிரித்தானிய அரசுகளிடம் அதற்காக சேனல் நான்கு நிதிபெறுவதாகவும், அதிலிருந்தே இத்தகைய ஆவணப்படங்கள் எடுப்பதாகவும் 'மார்க்சீயர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்' எனத் தம்மைக் கோரிக் கொள்பவர்கள் கூச்சநாச்சமின்றி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். சானல் நான்கு ஒரு பொதுநிறுவனம். அது அரசிடமிருந்து எந்த விதமான நிதியும் பெறுவது இல்லை. 2007 ஆம் ஆண்டு அது கடுமையான நிதி நெருக்கடியில் வீழ்ந்தபோது, அன்றைய பிரித்தானிய சட்டத்தின்படி, அரசு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் லைசென்ஸ் கட்டணத்தில் இருந்து அதனது மீட்புக்காக ஒரு தொகை வழங்கியது. பிற்பாடாக, பிரித்…
-
- 1 reply
- 797 views
-
-
புதிய அரசியலமைப்பும் சர்வஜன வாக்கெடுப்பும் வட, கிழக்குக்கு வெளியேயுள்ள மாகாணங்கள் அல்லது மாவட்டங்களில் மலையகம் மற்றும் ஒருசில மாவட்டங்களில் சாதகமான சூழ்நிலையொன்று உருவாக்கப்பட்டாலும் பெரும்பாலான மாவட்டங்களில் இனவாத தீ கொழுந்து விட்டெரியும் சூழ்நிலையொன்றை உருவாக்க இனவாதிகளும் மதவாதிகளும் மஹிந்த தரப்பினரும் தேசிய மிதவாதிகள் என்று கூறிக் கொண்டிருக்கின்ற பேரின புத்திஜீவிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையான யதார்த்தம். புதிய அரசியல் அமைப்பிற்கு பாராளுமன்றத் தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப் பெற்று நிறைவேற்றப்பட்டாலும் பெரும்பான்மை …
-
- 0 replies
- 359 views
-
-
உறங்காத விழிகள் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா... இல்லை விடுதலைப் போராளிகளா? விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி "விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்" என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக …
-
- 6 replies
- 3.3k views
-
-
அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள் – வேல்ஸ் இல் இருந்து அருஸ் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் படைத்துறை மென்பொருள் இஸ்ரேலும் பெஹாசஸ் ஸ்பைவெயரும் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ (NSO) நிறுவனம் தயாரித்த பெஹாசஸ் ஸ்பைவெயர் (Pegasus spyware) எனப்படும் மென்பொருள், உலக நாடுகளில் உள்ள மக்களின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன். தற்போது அமெரிக்காவையும் பதற்றமடைய வைத்துள்ளது. என்.எஸ்.ஓ நிறுவனத்தைத் தடைசெய்ய வேண்டும் என அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த வாரம் கோரிக்கை விடுத்துள்ளனர். 17 இற்கு மேற்பட்ட ஊடக நிறுவனங்களும் மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் அதனைத் தான் கூறியுள்ளன. …
-
- 0 replies
- 466 views
-
-
ஆப்காணிஸ்தான் விவகாரம்: சீனாவைத் திசை திருப்பும் அமெரிக்க உத்தி –அமெரிக்கச் செல்வாக்குக் கட்டுப்பட்டு இந்திய இராஜதந்திரம் தனது சுயமரியாதையை இழந்துள்ளதா என்ற கேள்வி இங்கே விஞ்சியுள்ளது. படை விலகலுக்குப் பின்னர் சூடு பிடிக்கவுள்ள இந்தோ- பசுபிக் விகாரத்திலும் தனது சுயமரியாதையை புதுடில்லி தக்க வைக்குமா என்பதும் சந்தேகமே– -அ.நிக்ஸன்- அமெரிக்காவை மையப்படுத்திய நோட்டோ படையினர் ஆப்காணிஸ்தானில் இருந்து வெளியேறியமை தோல்வியா இல்லையா என்ற விமர்சனங்களே ஐரோப்பிய மற்றும் மேற்கத்தைய ஊடகங்களில் அதிகமாக முன்வைக்கப்படுகின்றன. சென்ற யூன் மாதம் ஜி-7 மற்றும் நேட்டோ மாநாடுகள் நடைபெற்றபோது, அங்கு ஏற்பட்ட முரண்பாடுகள், அதிருப்தி…
-
- 0 replies
- 596 views
-
-
முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறாரா சிவாஜிலிங்கம்? சுகாஷ், காண்டீபனுக்கும் வாய்ப்பு | பேசும் களம் நன்றி - யூரூப்
-
- 2 replies
- 466 views
-
-
ஜனாதிபதி பதவி விலகலுக்கு சாத்தியமுண்டா? லக்ஸ்மன் ஜனாதிபதி உரையாற்றுகிறார் என்றவுடனேயே எல்லோரும் பதவிவிலகும் அறிவித்தலைத்தான் சொல்லுவார் என்று எண்ணுமளவுக்குத்தான் நிலைமை இருந்தது. வாழ்க்கைச் சுமை அதிகரித்துவிட்டது. யார் எதனைச் செய்யமுடியும் என்றே இருக்கிறது. ஒரு சமூகமோ நாடோ, வெறுமனே வசதி படைத்தவர்களை மாத்திரமோ, சாதாரண மக்களை மாத்திரமோ கொண்டதல்ல. அதில் நடுத்தர மக்களும்தான் உள்ளடங்குகிறார்கள். இதில் யாருக்குத் திண்டாட்டம், யாருக்கெல்லாம் பெரும் திண்டாட்டம் என்று யாரும் கணக்குக் போட முனைவதில்லை. நாட்டுக்குள் கேள்விக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன உரிமை, மனித உரிமை மீறல் விடயங்கள், சர்வதேசத்திலிருந்து வரும் மனித உரிமைப் பிரச்சினைகள் ஒருபுறம், அழுத்தங…
-
- 0 replies
- 1.1k views
-
-
சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் பிரச்சினையை தீர்ப்பாரா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) அண்மைக்காலங்களில் மியன்மார் ரோஹிங்யா முஸ் லிம் இன சிறுபான்மை மக்கள், ராக்கன் மாநிலம், இனப்படுகொலை, அகதிகள் பங்களாதேச எல்லையை கடந்து தஞ்சமடைதல் போன்ற செய்திகள் அச்சு ஊடகங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பிரதான இடங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றன. முன்னர் இராணுவ தர்பார் ஆட்சி இடம் பெற்ற காலங்களில் அதாவது கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஜனநாயக மீட்புக் கோரி ஆங்சாங் சூகி என்கின்ற தலைவியின் போராட்டத்தால் ஜனநாய…
-
- 0 replies
- 740 views
-
-
கடுமையாக அழுத்தங்களை பிரயோகிக்கப்போகும் ஜெனிவா இலங்கையானது நம்ப கரமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயா திக்கத்தை நோக்கிப் பயணிக்கும் செய்ட் அல் ஹுசேன் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை நிலைநாட்டாவிடின் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறலாம். ஐ.நா. மனித உரிமை பேரவையில் உள்ள இந்த விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு செல்லலாம். இவ்வாறு பல நிலைமைகள் ஏற்படலாம் பென் எமர்ஷன் இலங்கைக்குள் நம்பகரமான மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டாவிடின் சர…
-
- 0 replies
- 579 views
-
-
இலங்கைக்கும், இந்தியாவிற்கும்.... மின்சாரக் கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் ஒரு முக்கிய அம்சமாக நாளொன்றுக்கான முழுமையான மின்சாரத்தேவையை வழங்க முடியாத பலவீனமான நிலைமைகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்சார உற்பத்திப் பற்றாக்குறையானது, உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளையும் வெகுவாகப் பாதித்துள்ளது. இது ஏற்கனவே நலிவடைந்த பொருளாதாரத்தை மேலும் மோசமான நிலைக்கு தள்ளிவிடுவதாகவே இருக்கப்போகின்றது. இலங்கையில் தற்போதைய மின் தட்டுப்பாடுக்கு பல வருடங்களாக் குறுகிய நோக்கத்துடன் ஏதேச்சதிகாரமாகவும், குறுகிய சிந்தனை…
-
- 0 replies
- 210 views
-
-
நாடு திரும்பும் கோட்டாவின் அடுத்த நிகழ்ச்சி நிரல்கள் என்ன – உபுல் ஜோசப் பெர்னாண்டோவின் அரசியல் அலசல் கோட்டா மீண்டும் இலங்கைக்கு வருவார் என்ற வதந்திகள் பரவி வரும் நிலையில், மூத்த அரசியல் ஆய்வாளர் உபுல் ஜோசப் பெர்னாண்டோ சிங்கள இதழுக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழாக்கம் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக பதவி நீக்கப் பிரேரணை முன்மொழியப்பட்டபோது, அவருக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய பிக்கு ஒருவர் ஆலோசனை வழங்கினார். பிரேமதாசவின் ஜாதகத்தை கவனமாகப் படித்த பிறகு, பிக்கு அவருக்கு ஆலோசனை வழங்கினார். நீங்கள் இப்போது ஒரு பயங்கரமான சாபத்தை அனுபவித்து வருகிறீர்கள். அரசனின் தீய காலம் வந்தபோது, அவன் தீமையிலிருந்து தப்பிக்க …
-
- 0 replies
- 237 views
-
-
http://sankathi.com/content/view/4211/26/ http://kirukkall.blogspot.com/2005/12/blog...5536723883.html எது மனிதாபிமானம்... - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 06 யுரபரளவ 2006 14:26 சிறிலங்கா அரசு மனிதாபிமானத்திற்கான யுத்தம் என தொடங்கி மூக்குடைபட்டு நிற்கின்றது. மனிதாபிமானம் பற்றிபேசுவதற்கு சிறிலங்கா அரசிற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்றுதான் கூற வேண்டும் மாவிலாறு தண்ணீர் தடுக்கப்பட்டதால் பெரும்பான்மைச் சிங்களவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை மையமாகக் கொண்டே சிறிலங்கா அரசால் யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக வான்படைத் தாக்குதலையும் இராணுவ நடவடிக்கைகளையும் முடக்கி விட்ட நிலையில் தமிழ் மக்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கு…
-
- 0 replies
- 965 views
-
-
விக்னேஸ்வரனின் கணக்கு? நிலாந்தன்… உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது.உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் பேரவையில் பங்காளிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கு தலைமை தாங்க கூடிய தகுதியும் பொறுப்பும் பேரவைக்கே இருந்தது. ஆனால் பேரவை அதை செய்யவில்லை.அதனால் அவ்விரு கட்சிகளும் தனித்தனியாக இருவேறு கூட்டுக்களைஅமைத்தன. இதனால் தமிழ் வாக்குகள் சிதறின.தனது பங்காளி கட்சிகளுக்கு உரிய நேரத்தில் உரிய வழிகாட்டலை செய்யத் தவறிய காரணத்தால் பேரவையான…
-
- 0 replies
- 407 views
-
-
கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்-கொய்தாவின் தற்போதைய தலைவராக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளால் கூறப்படும் அய்மான் அல் ஜவாகிரி இணையதளத்தில் அவிழ்த்து விட்ட வீடியோ காட்சி இந்திய தீபகற்பத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பர்மா ஆகிய இந்திய தீபகற்ப நாடுகளில் அல்-கொய்தா இயக்கத்தை வளப்படுத்துவதற்காக இந்தியாவை மையமாக கொண்டு காயிதத்-அல்-ஜிஹாத் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் இந்த அமைப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஆசிம் உமர் தலைமை வகிப்பார் என்றும் அந்த வீடியோ காட்சியில் அய்மான் அல் ஜவாகிரி பேசுவதாக தயார் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவால் கிளப்பி விடப்பட்ட இந்த அல்-கொய்தா சினிமாவிற்கு திரைக்கதை எழுதியது யார், இயக்கியது யார் என்பது…
-
- 1 reply
- 604 views
-
-
பாதாளத்தை நோக்கிய 75 ஆண்டுகள் எம்.எஸ்.எம் ஐயூப் கடந்த நான்காம் திகதி நடைபெற்ற இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், முன்னைய வருடங்களின் சுதந்திர தின நிகழ்வுகளைப் போல் ஜொலிக்கவில்லை. வீடுகளிலும் வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் முன்னர் போல் தேசிய கொடி பறப்பதை காணக்கூடியதாக இருக்கவில்லை. இதற்கு முன்னர் பல வருடங்களிலும், எதிர்க்கட்சிகள் அரச அனுசரணையுடன் நடைபெறும் சுதந்திர தின விழாக்களை பகிஷ்கரித்துள்ளன. கடந்த வருடம், ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமன்றி, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. இம்முறை சுதந்திர தினத்துக்கு எதிராக, நாட்டின் தென்பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஏனைய விடயங்களைப் போலவே, ச…
-
- 0 replies
- 448 views
-
-
சிங்கப்பூர் மாநாடும் எதிர்பார்ப்புகளும் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையில், அண்மையில் நடந்து முடிந்துள்ள சிங்கப்பூர் சந்திப்பு, பலதரப்பினரின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்பேச்சுவார்த்தை, ஐ.அமெரிக்க - வட கொரிய உறவுகளை மீளப்புதுப்பிக்கும் எதிர்பார்ப்புடனேயே மேற்கொள்ளப்பட்ட போதிலும், சந்திப்பில் முழுமையாக உடன்பாடு எட்டப்பட்டது எனச் சொல்லுமளவுக்கு, எதுவுமே இருந்திருக்கவில்லை. உண்மையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியத் தலைவர் கிம், வடகொரியாவுக்கான - UNGJIN கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தார். அது, வடகொரியாவின் அண…
-
- 0 replies
- 265 views
-
-
மகிந்த ராஜபக்ச வேலணை மக்களின் உறவினன், கருணா சிங்கள மக்களின் உறவினன், டக்ளஸ் சமூக வேறுபாடுகளின் தலைவன். இவர்கள் தான் கிழக்கின் உதயத்தையும், வடக்கில் வசந்தத்தையும் கொடுக்கிறார்கள். அவ்வளவிற்கு ஈழத்தமிழர் இழிவானவர்களோ அல்லது மடையர்ககளோ அல்ல. கருணாவிற்கு மது, மங்கை - டக்ளசிற்கு சாதிவெறி, பணவெறி, சமயவெறி, ஈழத்தமிழ் மக்களுக்கு விடுதலைத் தாகம். மகிந்த, கருணா, டக்ளஸ் இவர்களின் வெறிகள் ஒரு போதும் விடுதலை தாகத்தை தணிக்க முடியாது. ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தோல்வி கண்டிருக்கலாம். ஆனால் மக்களின் உணர்வுகள் ஆயுதப் போராட்ட காலத்திலிருந்ததைவிட தற்பொழுது பன் மடங்கு அதிகரித்துள்ளது மட்டுமல்லது, இவ் மும்மூர்த்திகளின் ஆட்டம் நிரந்தரமற்றது என்பதையும், ஈழத…
-
- 2 replies
- 1.2k views
-
-
அரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு - பி.கே.பாலச்சந்திரன் - இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உத்தேச நீதிச் செயன்முறையில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதை தடுக்கும் ஏற்பாடு எதுவும் நாட்டின் அரசியலமைப்பில் இல்லை என்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் செய்த வாதம் அரசாங்கத்தை தடுமாற்றத்திற்குள்ளாக்கக் கூடியதாகும். அத்துடன் அவரை எதிர்க்கின்ற தமிழ் அரசியல்வாதிகளையும் அது ஓரங்கட்டும் வாய்ப்பு இருக்கின்றது. இலங்கை நீதிமன்றங்களுக்கு…
-
- 1 reply
- 785 views
-
-
தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு! நிலாந்தன். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு யாராலோ இயக்கப்படுகிறது என்று ஒரு சந்தேகத்தை சில கட்சிகளும் சில ஊடகங்களும் பெரிதாக்கி வருகின்றன.மேற்படி சிவில் சமூகங்களின் கூட்டிணைவு வவுனியாவில் கூடிய பொழுது அந்தக் கூட்டத்துக்கு யாரோ நிதி உதவி வழங்கியிருப்பதாகக் கூறப்படுவது சரியா ? சிவில் சமூகங்களின் கூட்டிணைவைச் சேர்ந்தவர்கள் தரும் தகவல்களின்படி வவுனியா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் அங்கே ஓர் உண்டியல் வைக்கப்பட்டிருக்கிறது.அந்த உண்டியலில் கூட்டத்தில் பங்குபற்றிய அனைவரையும் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்யும…
-
- 0 replies
- 237 views
-
-
சிறீலங்காவில் தமிழர்களை கொலை செய்த சிங்களப் படைகள் இதுவரை தண்டனை பெற்றதாக சரித்திரம் இல்லை. கடந்த 30 வருடகால போரில் மூன்று இலட்சத்தில் இருந்து ஐந்து இலட்சம் வரையான தமிழ் மக்கள் அந்த நாட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை. குறைந்த பட்சம் யூலைக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொலை செய்த சிங்களக் காடையர்களில் ஒருவர் கூட தண்டிக்க வழி செய்யாத ஏமாற்று அறிக்கைதான் அன்றைய சன்சோனிக் கமிஷன் அறிக்கை. அதுபோல இன்னொரு சன்சோனி கமிஷன் அறிக்கையாக வெளியாகியிருக்கிறது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை. இதுபற்றி தமிழ் மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சிங்கள அரசு சர்வதேசத்தை ஏமாற்ற எழுதிய அறிக்கைக்கும் தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்…
-
- 0 replies
- 693 views
-