அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
கடந்த வார ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக இரண்டு விவகாரங்கள் காணப்பட்டன. ஒன்று முன்னணி ஊடக நிறுவகம் ஒன்றுக்கு எதிராக மங்கள சமரவீர வழக்குத் தொடுத்துள்ளமை. இரண்டாவது ஊடக சுதந்திரம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெருமைப்படுத்துகின்ற அல்லது அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுகின்ற எவரையும் சிறிலங்கா அரசாங்கமானது தடைசெய்யும் என்கின்ற அறிவிப்பு. சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் என்பது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. தனிப்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் மங்கள சமரவீர, முன்னணி ஊடக நிறுவகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தமை தொடர்பில் சிலர் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ள அதேவேளையில், இந்த ஊடகமானது தொழில்சார் ஒருமைப்பாட்டை ம…
-
- 0 replies
- 471 views
-
-
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா? மொஹமட் பாதுஷா இலங்கையில் உண்மையிலேயே எத்தனை தேசிய இனங்கள் வாழ்கின்றன? முஸ்லிம்களும்; மலையக மக்களும் தனித்தனியான தேசிய இனங்கள் இல்லையா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைத் தொடர்ந்தே இந்த கேள்விக்கான விடையைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சபையில் உரையாற்றிய சிறிதரன் எம்.பி. ‘சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று தமிழ் பேசும் மக்கள் தமிழ்த் தேசிய இனம் மற்றையது சிங்கள தேசிய தினம் ஆகியவையாகும்’ என்று கூறி, தொடர்ச்சியாக உரையாற்றினார். பெருந்தேசிய அரசியலில் தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமார திச…
-
-
- 5 replies
- 471 views
-
-
விருப்பு வாக்கை அளிப்பது பொது வேட்பாளர் நிலைப்பாட்டையே தகர்க்கும் | பத்திரிகையாளர் அ. நிக்ஸன்
-
- 0 replies
- 471 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்? நிலாந்தன்:- 02 நவம்பர் 2014 2005 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்த போது இக்கட்டூரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டூரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனாமுறை பற்றியது அக்கட்டூரை. யார் ஜனாதிபதியாக வருவதை புலிகள் இயக்கம் விரும்பும் என்பதை அந்த இயக்கத்தின் வழக்கமான சிந்தனா முறைக்கூடாக அக்கட்டூரை கணித்திருந்தது. அதன்படி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதை விடவும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருதையே அந்த இயக்கம் விரும்பும் என்றும் அந்த கட்டூரை கூறியிருந்தது. மேற்கின் விசுவாசியாகிய ரணில் முன்னெடுக்கும் சமாதானத்தை புலிகள் இயக்கம் ஒரு தர்மர் பொறியாகவே பார்த்தது. எனவே மேற்கிற்கு…
-
- 0 replies
- 471 views
-
-
பொருளாதார நெருக்கடி! இலங்கையை அடுத்து மாலைத்தீவா? பொருளாதார நெருக்கடி! இலங்கையை அடுத்து மாலைத்தீவா? இன்று எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதற்குத் தீா்வை தேட வேண்டிய அரசாங்கம், நாளுக்கு நாள் தனது பொறுப்பிலிருந்து நழுவி வருகிறது. அத்தியாவசிய தேவைகளை மக்கள் முற்றாக இழந்திருக்கின்றாா்கள். மக்களின் உாிமைப் போராட்டம் இப்போது வீதிகளுக்கு வந்திருக்கிறது. மக்களின் பிரச்சினைகளுக்கு துரித தீா்வை வழங்கும் எந்த உருப்படியான வேலைத் திட்டங்களையோ, முயற்சிகளையோ மேற்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. இலங்கையின் இன்றைய இந்த வீழ்ச்சிக்கு கடந்த ஏழு தசாப்தங்களாக நாட்டை மாறி மாறி ஆண்ட ஊழல், மோசடி நிறைந்த ஆட்சியாளா்கள…
-
- 0 replies
- 471 views
-
-
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா எடுத்திருந்தால், தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா தனது ஒத்துழைப்பை ஒருபோதும் வழங்காதிருந்திருக்கலாம். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்டு வெளியாகும் The Hindu ஆங்கில நாளிதழில் நிருபமா சுப்பரமணியன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா தனது கருத்தில் எடுத்துள்ள அதேவேளையில், 2009ல் ஜெனீவாவில் இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது சிறிலங்கா தான் பெற்றுக் கொண்ட வெற்றி மமதையில் செயற்பட்டதை மீளவும் திரும்பிப்…
-
- 0 replies
- 471 views
-
-
கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிபவர்கள் ‘அண்ணாமலை’ என்ற சினிமாப் படத்தில் ‘வந்தேன்டா பால்காரன்’ என்ற பாடலில், ‘மீன் செத்தா கருவாடு; நீ செத்தா வெறுங்கூடு’ எனத் தொடரும் பாடல் அடியில், ‘பசு இருந்தாலும் பால் ஆகும்; செத்தாலும் தோல் ஆகும்’ என்றவாறாக வைரமுத்துவின் வரிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோலவே, தற்போதைய கள நிலைவரங்களின் பிரகாரம், ‘புலி இருந்தாலும் பலம்; அது செத்தாலும் பலம்’ என்பது போல ஆகிவிட்டது. புலிகளின் மௌனத்தின் பின், புலிகளைத் தமிழ் மக்கள் மீள நினைக்க மறந்தாலும், புலிகளின் பகைவர்கள் அவ்வப்போது அவர்களைத் தமிழ் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆயுதப் போர் 2009இல் முடிவுக்கு வந்த பிற்பாடு, நடைபெற…
-
- 0 replies
- 471 views
-
-
ஆச்சரியத்தை ஏற்படுத்திய வடக்கு முதலமைச்சருக்கு மஹிந்த வழங்கிய நற்சான்று இவ்வார அரசியல் களமானது சகல பக்கங்களிலும் ஆச்சரியத்தை தருவது மாத்திரமல்ல சூடு பிடித்திருக்கும் பல்வேறு சம்பவங்களையும் நகர்வுகளையும் கொண்டதாகக் காணப்படுகிறது என்பது எமக்குத் திகைப்பையூட்டியுள்ளது. கடந்த கால அரசியலில் காணப்படாத மாற்று நிலைப்போக்குக்கள், வித்தியாசம் வித்தியாசமான அரசியல் நகர்வுகள், சம்பவங்கள், பேராட்டங்கள் திகிலைத்தருவதுடன் பல திருப்பங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது இவ்வாரத்தில் கவனம் பெறும் விடயங்களாக மாறியுள்ளன. இலங்கை அரசியலில் இப்படியொரு அதிசயமும் இடம்பெற முடியுமா? என்று எண்ணவும் சிந்திக்கவும் வைக்கிறது. அரசியல் சுற்றுலா என்ற…
-
- 0 replies
- 471 views
-
-
கொரோனாவுக்கு எதிராகக் கை கோர்ப்போம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மார்ச் 25 கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, நாடு முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. நாடு பூராவும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம், இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை, சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் தளர்த்தப்படுகின்றது. அதுவும், உணவுப்பொருள்கள் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் மட்டுமேயாகும். இவ்வாறான நிலை, இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என்று தெரிகிறது. ஒரு சில நாடுகளைத் தவிர, உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உயிரிழப்புகள், தற்போது இத்தாலியைப் படுபயங்கரமாக உலுக்கிக் க…
-
- 0 replies
- 471 views
-
-
அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்ன? இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய நிலையைக் கண்காணிப்பதிலும், இலங்கை தொடர்பான தனது நிலைப்பாடு நடுநிலையானது என்பதை வெளிப்படுத்துவதிலும் அமெரிக்கா இப்போது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் தொழிலாளர் விவகாரம் தொடர்பான உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்குச் சென்று நிலைமைகளை மதிப்பீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதுபோலவே வரும் ஜூன் மாதம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியும் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை இலங…
-
- 1 reply
- 471 views
-
-
நினைவு கூர்தல் – 2020 நிலாந்தன் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக இதே தலைப்பில் நினைவுகூர்தல் தொடர்பாக எழுதிவருகிறேன். ஆனால் தாயகத்தில் நினைவு கூர்தல் தொடர்பில் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெரிய திருப்திகரமான மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை. நினைவுகூர்தலை அதன் கோட்பாட்டு அர்த்தத்தில் அதன் ஆழமான பொருளில் விளங்கி முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு வளர்ச்சியை அடைந்திருப்பதாக தெரியவில்லை. முதலாவதாக நினைவுகூர்தல் என்றால் என்ன ? அது தனிய கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்வது மட்டும் அல்ல. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்திலிருந்து பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியே ந…
-
- 0 replies
- 471 views
-
-
வருஷா வருஷம் வரும் கார்த்திகை 27 ஆம் திகதியை இலங்கைத் தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்துபோக மாட்டினம் பாருங்கோ... அந்த நாள் மக்கள் உணர்வுகளோடு கலந்திட்ட ஓர் நாள். எவ்வளவுதான் அடக்குமுறை வந்தாலும் தடைகள் வந்தாலும் அந்த நாளை தமிழ் மக்கள் மனங்களிலிருந்து எடுத்துவிடமுடியாது பாருங்கோ.... அடிக்க அடிக்கத் தான் கத்தியும் கூராவது போல் அந்த நாளில் அதை இல்லாதொழிக்க அரங்கேற்றப்படும் அடாவடிகளும் சண்டித்தனங்களும் மீண்டும் மீண்டும் அதனை நினைவுபடுத்தவே செய்யும். வன்முறைகளால் தமிழனின் மன உணர்வை மாற்றிவிடலாம் எண்டு சிங்களத் தரப்பினர் இன்னுமும் தான் நம்பிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்குப் பாருங்கோ... தந்தை செல்வா காலத்திலிருந்து ஆயுதப் போராட்டம் வெடித்துக் கிழம்பி அது தணிந்து போ…
-
- 0 replies
- 471 views
-
-
ஜெனிவாவில் மீண்டும் ஏமாற்றம்? – அகிலன் 17 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் நகல் வெளிவந்திருக்கின்றது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் கடும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இந்த நகல் பிரேரணை அமைந்திருக்கின்றது. கடந்த வருடங்களில் ஏமாற்றப்பட்டதைப்போல இந்த வருடமும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாக இந்தப் பிரேரணை அமைந்திருக்கின்றது. ஜெனிவா கூட்டத் தொடர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் இம்முறை ஏற்படுத்தி…
-
- 0 replies
- 471 views
-
-
ஆவா குழுவின் தேவை யாருக்கானது? ஆவா குழுவோடு தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸாரினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில், தமிழ் அரசியல் கட்சியொன்றின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவரும் அடக்கம். கடந்த மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு முழுவதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த போது, கடந்த 23 ஆம் திகதி சுன்னாகம் பகுதியில் சிவில் உடையிலிருந்த பொலிஸார் இருவர் க…
-
- 1 reply
- 471 views
-
-
முன்னணி : கட்சியா - அமைப்பா? - கபில் அண்மைக்காலத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், வெளிச்சத்துக்கு வந்த போது, அது ஒரு அரசியல் கட்சியா அல்லது அமைப்பா (இயக்கம்) என்ற சந்தேகமே மேலெழுந்தது. ஏனென்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதுவரையில் தம்மை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்து கொள்ளவில்லை. அவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த மணிவண்ணன் வலியுறுத்த ஆரம்பித்ததும் கூட, அவருக்கு எதிரான நடவடிக்கை, எடுக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்…
-
- 0 replies
- 471 views
-
-
ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக விறுவிறுப்பாக இந்த ஜனாதிபதி தெரிவு அரங்கேறியிருக்கிறது. இந்த ஜனாதிபதி தெரிவின் போதான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் என்பவற்றை, மீள்பார்வை செய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். இன்றுள்ள பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கட்சிகள் உள்ளடங்கலாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்றம் …
-
- 0 replies
- 471 views
-
-
உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா? பொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே, 1983ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ (ஆடிக்கலவரம்) ஆகும். இதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் 1958, 1977ஆம் ஆண்டுகள் என, இனக்கலவரங்களுக்கு இயல்பாக்கப்பட்டார்கள். ஆனாலும், நாட்டின் தெற்கு, மலையகப் பகுதிகளில் நீண்ட பல காலமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரித்தெடுத்து, மீதியின்றி துரத்தப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர். நன்கு திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட…
-
- 0 replies
- 471 views
-
-
புதிய அரசியல் யாப்பும் அரசியல் கட்சிகளும் இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றுப் போக்கில் 7 தசாப்தகாலம் கடந்துவிட்டபோதும் இப்பாராளுமன்றை நம்பி உருவாக்கப்பட்ட தேசியக்கட்சிகள் மற்றும் பிரதேசக்கட்சிகள், சிறுபான்மைக்கட்சிகள், இனவாதக்கட்சிகள் என எத்தனையோ கட்சிகள் உற்பத்தியாகியிருக்கின்றன. இவற்றில் தேசியக் கட்சிகளாக தம்மை நிர்ணயம் செய்து கொண்டு உருவாகிய கட்சிகள் காலப்போக்கில் ஒரு இனம் குறித்த ஒரு சமூகமென்ற வட்டத்துக்குள் சுருங்கிக்கொண்டு தமது முன்னையகால தேசிய இலக்குகள், போக்குகளிலிருந்து விலத்திக் கொண்டிருப்பதையே நமது அனுபவமாகக் காணமுடியும். இலங்கை பார…
-
- 2 replies
- 471 views
-
-
தமிழ் அரசுக் கட்சியும் ஆள்பிடி அரசியலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், பலம் வாய்ந்த கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பாணியில், பிற கட்சிகளை நசுக்க முனைகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறது. அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்தே, இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எபவினால், அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் தான் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன். மாகாணசபை உறுப்பினராக இருந்த அவரை, கடந்த ஆண்டு நாட…
-
- 0 replies
- 471 views
-
-
இறைமைக்கு ஆபத்து பூகோள அரசியலில் அண்மைக்காலத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ந்த வண்ணமுமிருக்கின்றன. எதிர்காலத்தில் நிகழவும் இருக்கின்றன. இவ்வாறிருக்கையில் இந்துமா சமுத்திரம் முதல் வல்லரசுகளின் கடற்பரப்புக்களில் அடுத்தடுத்து யுத்தப்பயிற்சிகளும் ஒத்திகைகளும் இடம்பெற்றவண்ணமிருக்கின்றன. இத்தகையதொரு சூழமைவில் உலக அமைதியை நிலைபெறச்செய்வதனையே பிரதான இலக்காக கொண்டு செயற்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ். ஐரோப்பிய கண்டத்தினுள் தீவிரமடைந்து வரும் முறுகல்கள் குறித்து தனது கரிசனையை குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்கையில், …
-
- 0 replies
- 471 views
-
-
வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்! களுத்துறையில் ஒரு சுற்றுலாப் பயணி - அவர் ஒரு வெள்ளைக்காரர் - ஒரு தேநீர்க் கடையில் வடை சாப்பிடுகிறார். அவரை கடைக்குள் உபசரித்து வடையோடு இரண்டு விதமான சம்பல்களையும் கொடுத்த அந்த கடையைச் சேர்ந்த ஒருவர், அவரிடம் ஒரு வடைக்கும் ஒரு பால் தேனீருக்கும் மொத்தம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார். சுற்றுலாப் பயணிக்கு அந்தத் தொகை அதிகம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அவர் அந்த வழியால் வரும் ஆட்களை மறித்து வடையின் விலை என்னவென்று கேட்கிறார். அந்த வழியால் வந்த இரண்டு சிங்களப் பெண்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் கதைக்கிறார்கள், அவர்களில் ஒருவர் அந்த வடையின் விலை 120 ரூபாய் என்று கூறுகிறார். வெள்ளைக்காரர் உண்மையை கண்டுபிடித்து விட்டார் என…
-
-
- 3 replies
- 471 views
-
-
அணில் கட்டிய பாலமும் ரணில் கட்டாத பாலமும் ? - நிலாந்தன்! adminJuly 30, 2023 ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பலாலியிலிருந்து மீனம்பாக்கத்திற்கும், காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கும், மன்னாரியிலிருந்து தமிழ்நாட்டுக்கும் என மூன்று திட்டங்கள் யோசிக்கப்பட்டன. இந்தக் கடல் வழிப்பிணைப்பு, வான்வழிப் பிணைப்பு, என்பவற்றோடு, தரை வழியாக ஒரு பாலத்தை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. இவைதவிர ரணிலின் விஜயத்தின் பின்னணியில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்த கருத்துக்களின்படி கடல் வழி, வான்வழி, தரைவழிப் பிணைப்புகளோடு வர்த்தகப் பிணைப்பு, எரிசக்த…
-
- 0 replies
- 471 views
-
-
தொடர் போராட்டங்களினால் மூச்சுத் திணறும் கூட்டமைப்பு வடக்கு - கிழக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர் போராட்டங்களினால் மூர்க்கம் பெற்றிருக்கின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலுரைக்க வலியுறுத்தும் போராட்டங்கள், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் அரச வேலை கோரும் பட்டதாரிகளின் போராட்டங்கள் என்று போராட்டங்களுக்கான காரணங்கள் தமிழர் தாயகப் பகுதியெங்கும் நிறைந்திருக்கின்றன. கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை 59 ஆவது நாளாகத் தொடர்கின்றது. உறுதியான பதிலோ தீர்வோ கிடைக்காத பட்சத்தில் போராட்டத்தினை…
-
- 1 reply
- 470 views
-
-
நஜீப் பின் கபூர் பரினாம வளர்ச்சிப்படிகளின் ஒர் கட்டம் மனிதன். இப்படிக் கடவுள் கொள்கைக்கு சவால்விட்டு ஒரு போட்டை போட்டார்கள் உயிரியல் விஞ்ஞானிகள். ஆனால் உலகிலுள்ள அனைத்து மதங்களும்-மனிதர்களும் பொதுவாக இந்தப் பரினாம கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை. அவற்றை ஏற்றுக் கொள்ளவுமில்லை. எனவே தான் உலகில் எல்லா நாடுகளிலும் தேவாலயங்கள் மசூதிகள் கோயில்கள் விகாரைகள் இன்னும் வலுவாக இருந்து வருகின்றன. உயிரியல் வாதிகளின் இந்த சேட்டைகளை சீண்டல்களைக் கண்ட இறைவன் எப்போதுமே அதற்காக கோபப்படவில்லை. என்னதான் விஞ்ஞானத்தின் உச்சப்படிகளில் நாங்கள்தான் நின்று கொண்டிருக்கின்றோம் என்று கடவுளை மறந்து சொல்லிக் கொண்டாலும் வல்லரசுகள் தங்களை விட்டால் ஆள்கிடையாது தங்களால் எதை வேண்டுமானாலும் சாதித்துக் காட்ட…
-
- 0 replies
- 470 views
-
-
தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரே கட்சியாவது சாத்தியமா? துரைசாமி நடராஜா மலையக அரசியல் மற்றும் தொழிற்சங்கங்கள் தொடர்பில் நீண்டகாலமாகவே விமர்சனங் கள் இருந்து வருகின்றமை தெரிந்த விடயமாகும். மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளுக்கு இடையிலான முரண்பாட்டுத் தன்மையானது மக்களின் உரிமைகள் பறிபோவதற்கு உந்துசக்தியாக அமைந்துள்ளதாகவும் விசனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஐக்கியத்தின் அவசியமும் உணர்த்தப்பட்டிருக்கின்றது. இதனிடையே தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும், அமைச்சருமான பி.திகாம்பரம் கூட்டணி ஒரே கட்சியாகவும், தொழிற்சங்கங்கள் ஒரே சங்கமாகவும் செயற்பட வேண்டிய அடுத்தக…
-
- 0 replies
- 470 views
-