அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
பின்னோக்கித் திரும்பும் வரலாறு நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிங்கள பௌத்த மேலாண்மைத்தனம் பகிரங்கமாக மேலெழத் தொடங்கியுள்ளது. சில இடங்களில் மிக வெளிப்படையாகவே பிக்குகள் முஸ்லிம்களின் மீதும் தமிழர்களின் மீதும் தங்களுடைய சண்டித்தனத்தைக் காட்ட முற்பட்டுள்ளனர். சிங்கள பௌத்த அமைப்புகளும் சிங்கள இனவாதிகளும் அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியினரும் ஏனைய இனங்களை நோக்கி எச்சரிக்கைகளை விடுத்து வருவது அதிகரித்துள்ளது. பலரும் குறிப்பிட்டு வருவதைப்போல, யுத்த வெற்றியானது சிங்கள பௌத்த மனோநிலையை இவ்வாறு ஆக்கியுள்ளது என்றே படுகிறது. இதனால், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பதற்றமடையத் தொட…
-
- 0 replies
- 508 views
-
-
தமிழ்க் கட்சிகளின் நகர்வும் கோட்டபாயவின் நிலைப்பாடும் – அகிலன் December 28, 2021 தமிழ்க் கட்சிகளின் நகர்வு: உடன்பாடு எட்டப்படுமா என்ற கேள்வி இறுதிவரையில் தொடர்ந்த நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையிலான சந்திப்பில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற 11 கட்சிகளின் தலைவர்களுடைய சந்திப்பில் எட்டப்பட்ட உடன்படிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என வர்ணிக்கப் பட்டிருக்கின்றது. எதிர்பார்க்கப்பட்டதைப் போல கடுமையான வாக்குவாதம் தொடர்ந்தது. இருந்த போதிலும், இறுதியில் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்களையும் உள்ளடக்கியதாக புதிய ஆவணம் ஒன்றைத் தயாரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. இதில…
-
- 0 replies
- 423 views
-
-
வடக்கில் தீவிரமடையும் பொலிஸ் கெடுபிடிகள் வடக்கு மாகாணத்தின் அரசி யல் சூழலைப் போலவே, பாதுகாப் புச் சூழலும், பரபரப்புமிக்கதா கவே மாறியிருக்கிறது. துன்னாலை இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கடந்த மாதம் மரணமான பின்னர், நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூடு, கொக்குவில் வாள்வெட்டு மற்றும் சில வாள்வெட்டுச் சம்பவங்கள் என்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் குடாநாட்டின் பாதுகாப்புச் சூழலைக் கேள்விக்குறியாக்கியிருந்தன. கொக்குவிலில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் அதிகமான விசேட அதிரடிப்படையினரைக் களமிறக்கிய பொலிஸ் மா அதிபர், தொடர் சுற்றிவளைப்புகள், சோத…
-
- 0 replies
- 495 views
-
-
சரி, விஜயதாச போய்விட்டார்; ஊழல் போய்விடுமா? கடந்த வாரம், வடக்கிலும் தெற்கிலும் இரண்டு முக்கிய பதவி நீக்கங்கள் இடம்பெற்றன. தெற்கில், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த 23ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். வடக்கில், வட மாகாண போக்குவரத்து அமைச்சராகவிருந்த ப. டெனிஸ்வரன் அம்மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இருவருக்கும், அவர்களின் கட்சிகளால் தமது பதவியை இராஜினாமாச் செய்ய அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் பதவி விலகாததனாலேயே, பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் ஒரே குற்றச்சாட்டையே அவர்களது க…
-
- 0 replies
- 440 views
-
-
வங்காள விரிகுடாவிலிருந்து கடலலைகள் அடித்துக் கொண்டிருக்கின்ற முள்ளிவாய்க்கால் என்கின்ற வடக்கு மாகாணத்தின் அழகிய கடற்கரையில் இரத்தம் தோய்ந்த துன்பியல் சம்பவங்கள் நிறைந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்தது. இவ்வாறு Al Jazeera ஊடகத் தளத்தில் Amarnath Amarasingam* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. "எறிகணைகள் மழை போல பொழிந்துகொண்டிருந்தன" என அஜந்தன் என்னிடம் தெரிவித்தார். இது தொடர்பாகத் தற்போது கூறும்போது அஜந்தன் சிரித்தார். ஆனால் இந்த உண்மையைச் சொல்வதற்கு இவர் உயிருடன் இருக்கிறார் என நான் நினைத்தேன். அஜந்தன் 2006ல் புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டார். அதாவது தமிழ்ப் புலிகள் குடும்பத்திற்கு ஒருவரை த…
-
- 0 replies
- 522 views
-
-
தமிழர் தாயகத்தில் சிங்கள ஏகாதிபத்தியமும் மறுக்கப்படும் தமிழர் இறையாண்மையும் மருத்துவர் சி. யமுனாநந்தா ஈழத்தமிழர்களின் பாரம்பரிய ஆட்சியானது இலங்கையின் வடக்கே அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்தினை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் செல்வாக்கு கிழக்கே பொத்துவில் வரையும் மேற்கே புத்தளம் வரையும் இருந்தது. கி. பி. 1619இல் போர்த்துக்கேயர் தமிழ் மன்னன் சங்கிலியனை வீழ்த்தி தமிழரின் இறையாண்மையைப் பறித்தனர். இதனால் தமிழரின் இறையாண்மை போர்த்துக்கேயரிடம் வீழ்ச்சி அடைந்தது. கண்டியில் 2ம் இராஜசிங்கனின் தலைமையில் தமிழர்களின் அரசு 1815 வரை ஆட்சி செலுத்தியது. பின் ஆங்கிலேயரால் வெல்லப்பட்டு தமிழர்களின் இறையாண்மை தொலைக்கப்பட்டது. 1948இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் சுதந்திரம் கொட…
-
- 0 replies
- 684 views
-
-
"ததேகூ பிளவும் உள்ளூராட்சி சபை தேர்தலும்" | நிக்ஸன் மற்றும் சிறீநேசன்
-
- 6 replies
- 810 views
-
-
முடிந்துபோய்விட்ட மகிந்தவின் அரசியல் யுகம் கடந்து போனவற்றைத் திரும்பிப்பார்க்காது நாட்டின் எதிர்காலம் சிறக்க முன்னோக்கி நகர்வோம் என்கிறார் கலாநிதி விக்கிர மபாகு கருணாரத்ன. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தமை பொதுமக்களுக்கு நாடாளுமன்றத்தினூடாக கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயக நடைமுறை தொடரவேண்டும…
-
- 0 replies
- 694 views
-
-
அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா? அதிரதன் / அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், “அத்தனை குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகக் குடியேற்றப்படும்போதே, எங்களது போராட்டம் முடிவுக்கு வரும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தொடங்கப்பட்ட இவர்களின் நில மீட்புப் போராட்டம், நேற்றுடன் (03) 21 நாளை எட்டியபோதும், “இதுவரையில் யார் வந்தும், தீர்க்கமான முடிவையோ, தீர்வையோ வழங்கவில்லை” என்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, பிர…
-
- 0 replies
- 743 views
-
-
சிங்கள பௌத்தர்களின் வாக்குகள் யாருக்கு ? உச்ச நீதிமன்ற தீர்ப்பானது நாட்டில் உருவாகிய அரசியல் நெருக்கடிகளை ஓரளவுக்கே தணிக்க உதவியது என்று தான் கூற வேண்டியுள்ளது. ஏனென்றால் ஜனாதிபதியும் அவரது புதிய நம்பிக்கையான மஹிந்தராஜபக்ஷ மற்றும் அவரது அணியினரும் கூறி வரும் கருத்துக்கள் நாட்டு மக்களை அந்த வகையிலேயே சிந்திக்க தூண்டியுள்ளன. உண்மையைக்கூறப்போனால் நாட்டில் இன்னும் அரசியல் நெருக்கடிகள் முற்றாக தீரவில்லை.என்ன தான் நீதித்துறை ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் வண்ணம் செயற்பட்டாலும் கூட அதிகார வர்க்கத்திலிருந்தே பழக்கப்பட்டு விட்ட அரசியல் பிரமுகர்கள் அதை மீறி செயற்படும் தந்திரோபாயத்திலிருந்து எப்போதும் விலகிச்செல்ல மாட்டர். நான்கரை வருடங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தை கலைத்தது…
-
- 0 replies
- 446 views
-
-
ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன் பாடசாலைகளை, பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் முதலீடு செய்வதில்லை. தாயகத்தில் முதலீடு செய்பவர்களிலும் மிகச்சிலர்தான் கல்வித்துறையில் முதலீடு செய்கிறார்கள். ஆளில்லா ஊரில் ஆலயங்களைக் கட்டுவதை விடவும் கல்விச்சாலைகளை கட்டுவது மகத்தானது. அப்படி ஒரு முதலீடுதான் கந்தர்மடம் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நோர்தேன் யுனி என்று அழைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம். போட்டிக் கல்வி வியாபாரமாக மாறிய ஒரு கல்விச்சூழலில், ஒரு முதலாளி கல்வியில் முதலீட்டைச் செய்யும்பொழுது அங்கேயும் வியாபார இலக்குகள் இ…
-
-
- 4 replies
- 699 views
-
-
மோடியும் கச்சதீவும் April 9, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியா கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அது தொடர்பாக சர்ச்சை கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் பத்து வருடங்களாக பதவியில் இருந்துவரும் அவர் இதுகாலவரை எதுவும் பேசாமல் இருந்துவிட்டு தற்போது பிரச்சினையை கிளப்புவது கச்சதீவை மீண்டும் இந்தியா வசமாக்குவதற்காக அல்ல, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தனது பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெறுலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே என்பதை புரிந்துகொள்வதற்கு அரசியல் ஞானம் தேவையில்லை. வடஇந்தியாவில் அமோகமான மக்கள் செல்வாக்குடைய தலைவராக இருந்துவரும் மோடி மூன்றாவது தடவையாகவும் பி…
-
- 0 replies
- 584 views
-
-
சுமார் 1000 நாட்களுக்கு முன்பு ஜூலை 2016 ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை 52% மக்கள் ஆமோதித்தார்கள். கூடுதலான பென்ஷன் காரர் வெளியேறுவதை ஆதரித்தார்கள், அவர்களில் ஒரு தொகையினர் இவுலகை விட்டு வெளியேறி இருப்பார்கள். ஆனால் அவர்கள் விதைத்த பிரெக்ஸிட் என்ற விதை விருச்சமாக வளர்ந்து பூக்காமலும் காய்க்காமலும் நிக்கிறது. அரசியல் அமைப்புகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக திகழ்ந்த வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் இன்று திக்கு முக்காடுகிறது. 90% ஆமா என்று போட்டிருந்தால் பிரச்சனை சுலபமாக தீர்க்கப் பட்டிருக்கும். ஆம் என்று போட்டவர்கள் பெரும்பாலான பழமைவாதிகளும், பென்ஷனக்காரர்களும். இல்லை என்று போட்டவர்கள் பெரும்பாலான இளைஞர்களும் வெளிநாட்டு காரர்களும். வோட்டு போட்ட பலருக்கு தெரிய…
-
- 7 replies
- 1.6k views
-
-
மனித இனத்திடம் தம்மைச் சுற்றி நடப்பவை பற்றியும் அவற்றினால் ஏற்படக் கூடிய தாக்கம் பற்றியும் அறியும் ஆவல் இயற்கையாக இருந்தது. இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்ய நுகரப்படுவது தான் "செய்திகள்" என்று நாம் இன்று விளங்கி வைத்துள்ள பதம். ஆரம்ப காலங்களில் செய்திகளின் பரிமாற்றம் என்பது தனிநபர்களிடையேயானதாகவும் செவி வழியாக பயணம் செய்பவர்களால் பரப்பப்பட்டதாகவும் இருந்தது. எனவே பரிமாறப்படும் செய்திகளின் உள்ளடக்கம் என்பது கேட்பவர் ஆர்வப்படுபவற்றிலும் சொல்பவரின் அவதானத்திலும் தங்கியிருந்தது. உள்ளடக்கத்தின் பெறுமதியும் உண்மைத்தன்மையும் அவதானத்தை பகிர்பவரிலும் பரிமாற்றம் நடக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையிலும் தங்கியிருந்தது. மனித நாகரீக வளர்ச்சியில் அதிகாரம், ஆட்சி, சட்டம், ஒழுங்கு என்பவை படிப்…
-
- 5 replies
- 3.1k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியன சாதகமான பதில்களை வழங்கியதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும்போக்கைக் கடைப்பிடித்துள்ளது. இவ்வாறு www.wsws.org இணையத்தளத்தில் விஜே டயஸ் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் பலம் வாய்ந்த பிரதான தமிழ்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிபர் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஆரம்பத்திலேயே மறுத்து விட்டது. பிரிவினை கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிரா…
-
- 0 replies
- 542 views
-
-
Published By: VISHNU 16 AUG, 2024 | 03:46 AM சுஹாசினி ஹைதர் இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு அதன் அயல்நாடுகளில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக அதிர்ச்சியை கொடுத்துவருகின்றன. 2021 ஆம் ஆண்டில் மியன்மாரில் சதிப்புரட்சியும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆட்சியும். 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் பதவி கவிழ்க்கப்பட்டார். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டார். அதற்கு பிறகு மாலைதீவு தேர்தலில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்த ஜனாதிபதி சோலீ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட அதேவேளை, நேபாளத்திலும்…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகாரப் பரவலாக்கத்தில் அதன் நிலைப்பாடும் Veeragathy Thanabalasingham on December 9, 2024 Photo, SOUTH ASIAN VOICES தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாளடைவில் வரக்கூடிய சவால்கள் பிரதானமாக இனவாத அரசியல் சக்திகளிடமிருந்தே வரக்கூடும் என்று அதன் தலைவர்கள் நினைக்கிறார்கள் போலும். புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நவம்பர் 21 சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சூளுரைத்தார். தேசிய ஐக்கி…
-
- 0 replies
- 270 views
-
-
அரசியலமைப்பு மாற்றங்கள்: சில ஊகங்களும், சில கேள்விகளும். நிலாந்தன்:- தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார் 'சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்ஸவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும் கூட சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்று வரும்போது ராஜபக்ஷவே மதிப்புடன் பார்க்கப்படுகிறார். அவர் பொதுச்சொத்தைத் தனிச்சொத்தாக்கியது, அதிகாரத்தை தனது குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர் கைகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டது போன்ற குற்றச்சாட்டுக்களை சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க அளவினர் ஏற்றுக் கொள்க…
-
- 0 replies
- 621 views
-
-
தான தர்ம அரசியல்? - நிலாந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் ஒரு நடன அரங்கேற்றம் இடம்பெற்றது. இதன்போது மண்டபத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடமெல்லாம் படைவீரர்கள் காணப்பட்டார்கள். ஏன் என்று விசாரித்தபோது தெரியவந்தது அந்த வைபவத்தில் படை உயரதிகாரிகளும் பங்குபற்றுகிறார்கள் என்பது. அந்த நடன அரங்கேற்றம் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் கீழ் இயங்கும் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் உடையது. மகாதேவா ஆச்சிரமத்தில் படைத்தரப்பினர் பல்வேறு வழிகளிலும் உதவி வருகிறார்கள் என்றும் எனவே அந்த நடன அரங்கேற்றத்தில் அவர்களும் அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. சிறுவர் இல்லங்களுக்கு மட்டுமல்ல சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு தேவைகளை கொண்டவ…
-
- 0 replies
- 421 views
-
-
பி.கே. பாலச்சந்திரன் கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா) 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இலங்கையின் பழமை வாய்ந்த பிரதான கட்சிகள் இரண்டும் உண்மையில் மறைந்து போகக்கூடிய சாத்தியம் இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி 1946 ஆம் ஆண்டில் டொன் ஸ்டீபன் சேனாநாயக்காவினாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1951 ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்காவினாலும் தாபிக்கப்பட்டவை. இவற்றில் சுதந்திர கட்சி ஏற்கனவே பயனற்றதாகப் போய்விட்டது. 2019 நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற அமோக வெற்றியை அடுத்து சுதந்திரக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையிலான புதிய பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு சென…
-
- 0 replies
- 403 views
-
-
[size=5]கூடங்குளம், அடுத்த தமிழின அழிப்பின் ஆரம்பமா? [/size] [size=1][size=4]இன்று பலவகை போராட்டங்களை அகிம்சை வழியில் தமிழக மக்களின் ஒரு பகுதியினர் முன்னெடுத்து வருகின்றனர். இன்று யாழில் ஒட்டியதாக கூறப்படும் ஒரு சுவரொட்டியில் முள்ளிவாய்க்காலின் பின்னராக இந்திய நடுவண் அரசு திட்டமிட்டு அரங்கேற்றிய தமிழின அழிப்புன் அடுத்த கட்டமோ என அஞ்சப்படுவதாக கூறுகின்றது. [/size][/size] [size=5] சில பயனுள்ள திரிகள் : [/size] [size=5]அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?[/size] [size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=108177[/size] [size=5]ஒரு கைக்கூலியின் கதை.. கூடங்குளம் உதயகுமாரின் கதை[/size] [size=…
-
- 32 replies
- 4.2k views
-
-
ஐந்து நூற்றாண்டுகளுக்குள் மூன்று தடவைகள் பிடுங்கி எறியப்பட்ட சமூகம் – நிலாந்தன். கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட,இலங்கைத் தீவில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட சந்திப்பின்போது நடந்த ஒரு விடயத்தைப்பற்றி ஒரு தமிழ்க் கட்சிப் பிரமுகர் என்னிடம் சொன்னார்.அந்தச் சந்திப்பில் அரசுசார்பு பிரதிநிதியாக கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் ஒரு கட்டத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரித்து உண்மை காணப்பட வேண்டும் என்ற பொருள்படப் பேசியுள்ளார்.அப்பொழுது அங்கு அவரோடு வந்திருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளராகிய ஒரு தமிழர் சொன்னாராம்,பழைய காயங்களை திரும்பத்திரும்ப கிண்டிக் கொண்டிருக்கக்கூடாது. …
-
- 0 replies
- 213 views
-
-
ராஜ்பக்ஷக்கள் தமது இரண்டாவது யுத்தத்திலும் வெற்றி பெறத் தொடங்கி விட்டார்களா? ராஜபக்ஷக்கள் தமது இரண்டாவது யுத்தத்திலும் வெற்றி பெறத் தொடங்கி விட்டார்களா? கொரோனா வைரஸ் குறித்த அச்சம் குறையத் தொடங்கி விட்டது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைத்தீவில் இறப்பு விகிதம் குறைவானதே. நோய் பெருமளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவே தோன்றுகிறது. பொதுவாகச் சொன்னால் நாட்டில் மக்கள் மத்தியில் வைரஸைப் பற்றிய பயம் தெளிந்து விட்டது. ராஜபக்ஷகளைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய வெற்றி. தமிழ்த் தரப்பினால் போர்க் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு தளபதியின் தலைமையில் பெருமளவிற்கு படைத்தரப்பு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நின்றது. அது காரணம…
-
- 0 replies
- 709 views
-
-
சுமந்திரனைத் தோற்கடிக்கும் அழைப்பும் அபத்தமும் கே. சஞ்சயன் / 2020 ஜூலை 14 , பி.ப. 01:04 விடுதலைப் புலிகளின் முன்னாள், மூத்த போராளியான பசீர் காக்கா, அண்மையில் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பு, பலரதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. முதல் மாவீரர் தொடக்கம், கடைசி மாவீரரின் மரணம் வரை அவர், விடுதலைப் புலிகளுடன் பயணித்தவர். போர் முடிவுக்கு வந்த பின்னர், அவ்வப்போது மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயங்களில் அகமுரண்பாடுகள் ஏற்பட்டபோது, ஊடக அமையத்தில், தமது கருத்துகளை முன்வைத்து, அந்த நி…
-
- 0 replies
- 582 views
-
-
கிளிநொச்சி இலங்கை வசம்.... கருணாநிதி காங்கிரசார் வசம்..... பொன்னிலா கடந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி ராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள், பாசிச இலங்கை ராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும் இந்த வெற்றியை சுகிக்கும் நிலையில் ராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடது சாரிகளும் இல்லை. இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புகளையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார்கள். அதே சமயம் தமிழ் போராளிகள்…
-
- 4 replies
- 1.5k views
-