அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
பரீட்சை எழுதிய பிள்ளைகள் செய்த குழப்படி – நிலாந்தன். adminJune 18, 2023 அண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக சில ஒளிப்படங்கள் வெளியாகின. இந்த ஒளிப்படங்களை வைத்து மூன்று விதமான கருத்துக்கள் கூறப்பட்டன. முதலாவது, சில மாணவர்கள் செய்த குழப்படிகளுக்காக எல்லா மாணவர்களையும் குற்றங் கூறக்கூடாது என்று. இரண்டாவது,அந்த வயதுக்கு அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க விடுங்கள் என்பது. மூன்றாவது, ஆசிரியர்களின் கைகளில் இருந்து பிரம்பு பறிக்கப்பட்டதால் மாணவர்கள் தறிகெட்டுப் போய்விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு. பரீட்சை முடிந்த கடைசி நாளைக் கொண்ட…
-
- 2 replies
- 512 views
-
-
பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு -என்.கே. அஷோக்பரன் மூலைக்கு மூலை, ‘உங்கள் பிள்ளைகளைப் பட்டதாரியாக்குங்கள்’ என்று விளம்பரங்கள் நிறைந்து வழியும் காலகட்டத்தில், ‘பட்டப்படிப்பு’ என்பது சமூக அந்தஸ்தின் முக்கிய குறிகாட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில், எப்படியாவது எமது பிள்ளையும் ஒரு பட்டத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற பெற்றோரின் அவாவின் விளைவாக, அதிகளவிலான பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கல்வியின் இலக்கு, அறிவு என்பதற்குப் பதிலாக பட்டம் என்ற நிலையில்தான் கல்வித்துறை இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்கு கேள்வி இருக்கிறதோ அங்கு, அதற்குரிய நிரம்பலை, வணிகம் வழங்குவது என்பது இயல்பானது. இந்தப் பட்டப்படிப்புக்கான அதீ…
-
- 1 reply
- 767 views
-
-
ஆதவன் பக்கம் - பருத்தித்துறை தரையிறக்கமும் ட்ரோலர் அரசியலும் நியூயோர்க்கில் இருந்து கப்பலில் சிங்கப்பூர் வந்து கொண்டுள்ளோம். வருகின்ற வழியில் 4 தினங்கள் முன்பு செங்கடலில் ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளதாகவும் (Man over board), 7 தினங்கள் முன்பு மெடிட்டரேனியன் கடலில் (ஸ்பெயினின் தெற்கு கடல் பகுதியில்) ஒருவர் கடலில் வீழ்ந்துள்ளதாகவும், அவர்களைத் தேடும் படலம் (Rescue operation) தொடர்வதாகவும், குறித்த பகுதிகளின் வழி பயணிக்கவேண்டாம் என்றும் இப்பகுதிகளில் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும் அவசர செய்தி அனுப்பப்பட்டது. எனது முதல் தர அதிகாரியுடன் இதுபற்றி (அதாவது ஏன் அடிக்கடி ஆட்கள் கடலில் வீழ்கிறார்கள்) கதைத்துக் கொண்டிருந்த பொழுது, அவர் தான் அறிந்த இரண்டு சம்பவங்களை கூறின…
-
- 2 replies
- 657 views
-
-
பருவநிலை மாற்றத்தால் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்? 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கரீன் எல்ஹாரர், இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர் கடந்த வாரம் கிளாஸ்கோவில் தொடங்கிய பருவநிலை மாற்ற மாநாட்டில் இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரால் பங்கேற்க முடியவில்லை. ஏனெனில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் வகையில் மாநாடு நடைபெறும் அரங்கங்கள் அமைக்கப்படவில்லை. இது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியானது. மாற்றுத் திறனாளிகள் பலரும் பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கான ஒரு உதாரணமாக இதை எடுத்துக் கொள்ளலாம…
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
பர்மா: சிறுபான்மை ரொகிங்யா மக்கள் மீது பாயும் பவுத்த பயங்கரவாதம் ரூபன் சிவராஜா பர்மாவின் பெரும்பான்மை பவுத்த கடும்போக்கு சக்திகளால் அந்நாட்டின் வட பிராந்தியமான Rakhine மாநிலத்தில் வாழ்ந்துவரும் Rohingya (ரொகிங்யா) இன சிறுபான்மை மக்கள் மீது பாரிய படுகொலைகளும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ரொகிங்யர்கள் தமக்கெனத் தனியான மொழியைக் கொண்டுள்ள இஸ்லாமியப் பின்னணியுடைய மக்கள் குழுமம் ஆவர். கிட்டத்தட்ட 55 மில்லியன் மக்கட்தொகையைக் கொண்டுள்ள பர்மாவில் 800 000 வரையான ரொகிங்யா இன மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் மொத்த மக்கட்தெகையில் 90 வீதமானவர்கள் பவுத்த மதப் பின்னணியுடையவர்கள். 2 வீதமானவர்கள் ரொகின்யர்கள். ஏனையோர் கிறிஸ்தவ மற்றும் இந்துமதப் பின்னணியுடையவர்களாவர்.…
-
- 0 replies
- 450 views
-
-
கிளை பலமானது என்று பார்த்து எந்த பறவையும் அமர்வதில்லை. எந்த நேரத்தில் கிளை முறிந்தாலும் பறக்க திடமான சிறகுகள் தன்னிடம் உள்ளன என்பதே பறவையின் பலம். அதுவே எமது பலமாகவும் இருக்கட்டும். கூட்டமைப்புக்கு வாக்களிப்போம். சிங்கள தேசத்தின் தேசிய அரசியலை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டுவதற்காகவேனும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித்தே ஆகவேண்டும். வேறுவழி எதுவுமே இல்லை. இருப்பதில் இப்போதைக்கு இதுவே சிறந்தது. மகிந்தர் இந்த தேர்தலை நடாத்துவது ஒன்றும் தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஏற்றுக்கொண்டு அல்ல. அவருக்கு இறுகிக்கொண்டே வரும் சர்வதேசத்து அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாக ஓரளவுக்கு தன்னை சுதாகரித்துக் கொள்ளவே என்பது சிறுகுழந்தைக்கும் தெரிந்த பெரிய உண்மையாகும். மேலும் இ…
-
- 1 reply
- 626 views
-
-
பறிக்கப்படுமா ரணிலின் பதவி? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சமர்ப்பித்திருக்கிறது ம ஹிந்த ராஜபக்ஷ ஆதரவு, ஒன்றிணைந்த எதிரணி. இந்தமாத முற்பகுதியில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதை அவர்கள், சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, வெற்றி பெறுமா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்படுவாரா என்ற கேள்விகள், அரசியல் வட்டாரங்களில் மாத்…
-
- 0 replies
- 335 views
-
-
பறிக்கப்படும் மேய்ச்சல் தரை – நிலாந்தன். August 27, 2023 அண்மைக் காலங்களில் இனமுரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் நிலப்பறிப்பு மற்றும் சிங்களபௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளில், முன்னணியில் பௌத்த பிக்குகள் காணப்படுகிறார்கள். அப்படியொரு சம்பவம் கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறத்தில் இடம்பெற்றது. அங்கே மயிலத்தமடு மாதவனையில் காணப்படும் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிக்க முற்படும் சிங்கள விவசாயிகளுக்குத் தலைமை தாங்கிய ஒரு தேரர் அங்கு நிலைமைகளை அவதானிக்கச் சென்ற பல்சமய ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவை நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் முற்றுகையிட்டு வைத்திருக்கிறார். மயிலத்தனை மாதவனை மேய்ச்சல் தரை எனப்படுவது மட்டக்களப்பின் எல்ல…
-
- 2 replies
- 500 views
-
-
பறிபோகும் நம்பிக்கை நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக் கொள்கின்ற மைத்திரிபால சிறிசேன- –ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம், இரண்டு ஆண்டுகாலப் பதவிக்காலத்தில் உச்சக்கட்ட சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. யாருடைய ஆதரவுடன் இந்த அரசாங்கம் ஆட்சியில் ஏற்றப்பட்டதோ, அவர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது. முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டவை எவையெல்லாம் தவறு என்று சொல்லிக் கொண்டார்களோ அதையெல்லாம் தான் இந்த அரசாங்கமும் செய்கின்றது. இதுதான் அரசாங்கத்தின் இப்போதைய பரிதாப நிலைக்குக் காரணம். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற போது, நல்லா…
-
- 0 replies
- 423 views
-
-
பறிபோகும் மட்டக்களப்பு மாவட்டம் – இணைந்து குரல்கொடுக்கத் தமிழ்தேசியவாதிகள் முன்வருவார்களா? – மட்டு.நகரான் October 25, 2021 மட்டு.நகரான் பறிபோகும் மட்டக்களப்பு மாவட்டம் – இணைந்து குரல்கொடுக்கத் தமிழ்தேசியவாதிகள் முன்வருவார்களா?: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று உலகம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது. கொரோனா காரணமாக நாடுகள் பொருளாதார நெருக்கடி, நாடு வழமை நிலைமைக்கு திரும்பாமை, இறப்பு வீதம் அதிகரிப்பு என பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றன. இந்த கொரோனாத் தொற்றுக் காரணமாக இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதுடன், மீளமுடியாத நிலைக்கு இலங்கையின் பொருளாதார நிலைமை சென்றுகொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்களினால் கவலை தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 530 views
-
-
பற்றாக்குறைக்கும் பதகளிப்புக்கும் மத்தியில் முடங்கிக் கிடக்கும் இலங்கை இலங்கையில் இன்னும் சில மாதங்களில் பஞ்சம் வரும் நிலைமை ஏற்படக்கூடுமென பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ___________________________________________________________________________ ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் அனைத்து நடைமுறை நோக்கங்களினாலும் வீழ்ச்சி கண்டுள்ளது ______________________________________________________________________ எம்.ஆர். நாராயண் சுவாமி முன்னர் விநியோகித்திருந்தமைக்கு பணம் செலுத்தாததால் , வழமையான விற்பனையாளர்கள்வழங்குவதற்குவிரும்பாததாலும் கொழு…
-
- 0 replies
- 265 views
-
-
பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இஸ்ரேலின் அடாவடியால் பலஸ்தீனம் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நிச்சயமின்மையே நிச்சயமாகிப்போன ஒரு சமூகத்தின், சொல்லொனாத் துயர்களின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது, காஸாவில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டுமழை பொழிந்து கொண்டிருப்பதாக, பதுங்கு குழிகளில் இருந்து பலஸ்தீனிய நண்பர்கள், மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தசாப்தகாலமாக நீடித்த அமைதி, முடிவுக்கு வந்துவிடுமோ என்று அரசியல் அவதானிகள் அஞ்சுகிறார்கள். சர்வதேச தலைவர்கள், இஸ்ரேலைத் தடவிக் கொடுத்தபடி கவலை வெளியிடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்…
-
- 52 replies
- 5.4k views
-
-
பல தசாப்தங்களாக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் பல தசாப்தங்களாகவே திட்டமிட்டு இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்ட இந்த குடியேற்றங்கள், இத்தனை தசாப்தங்களான பரிணாம வளர்ச்சி பெற்று தமிழரின் இனப்பரம்பலை மாற்றியமைத்துள்ளதாக பேரவையின் இணைத் தலைவர் வி.நவனீதன் வரலாற்று ரீதியாக சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும்’ எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தா…
-
- 3 replies
- 549 views
-
-
பல தடைகளையும் தாண்டி கிழக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் -தென்னகன் 56 Views தமிழர் தேசம் இன்று கண்ணீருடனும் மனக்குமுறலுடனும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. எங்களுக்காக போராடிய எங்கள் உறவுகளின் நினைவைக்கூட நினைவுகூரமுடியாத வகையில் சிங்கள தேசம் இன்று தமிழர்களின் குரல் வளையினை நசித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின் போராட்டம் என்பது வெறும் பயங்கரவாதப் போராட்டம் என்று கூறிக்கொண்டு அரசாங்கம் பல்வேறு வகையான பிரசாரங்களை முன்னெடுத்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் அந்த போராட்டமும் அதன் மூலம் ஏற்பட்ட இழப்புகளும் என்றும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. யுத்தம் மௌனிக்கப்பட்டு 11வருடங்களைக் கடந்துள்ள …
-
- 0 replies
- 355 views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் என்பது பல நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் இறங்கி விளையாடுகின்ற ஒரு களம் என்பது யாவரும் அறிந்த உண்மை. எந்த வேட்பாளர்களை களமிறக்குவது, எப்படியான தேர்தல் வியூகங்களை வகுப்பது என்று, பல நாடுகளின் தூதரகங்களே இறங்கி நின்று காரியமாற்றுகின்ற ஒரு செயற்கை ஜனநாயக நடைமுறைதான் சிறிலங்காவின் இந்த ஜனாதிபதித் தேர்தல். சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின், இந்தியாவின், சீனாவின் ஆதவுபெற்ற வேட்பாளர்கள் என்ற அடையாளத்துடன் பலர் களமிறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ் பொது கட்டமைப்புக்களால் களமிறக்கப்பட்டுள்ள ஒரு தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவு என்பது ஆச்சரியமானமுறையில் பலமடங்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
-
- 1 reply
- 338 views
- 1 follower
-
-
அமெரிக்காவுடன் அரசாங்கம் இறங்கிப் போக்க் காரணம் என்ன? அரசாங்கம் இந்தளவுக்கு இறங்கிப் போவதற்கு, அமெரிக்காவைப் பகைத்துக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று, மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்படப் போகும் விவாதம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் தமக்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிக் கொள்கின்றது.ஆனாலும் அமெரிக்காவின் செல்வாக்கை அரசாங்கம் அறியாதிருக்க முடியாது. இன்னொரு விடயம், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க இந்தவாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்கா பயணமாகவுள்ள ஜனாதிபதி, 23ம் திகதி பொதுச்சபையில் உரையாற்றுவார். இந்தக் கூட்டத்…
-
- 6 replies
- 794 views
-
-
-
-
பலன்தருமா கூட்டமைப்பின் குழுக்கள்? செல்வரட்னம் சிறிதரன் 03 மே 2014 பெரும்பான்மையான தமிழ் மக்களின் அரசியல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பலமுள்ள ஓர் அமைப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே நிலவி வருக்கின்றது. கூட்டமைப்பு இறுக்கமான ஓர் அரசியல் அமைப்பாக இல்லையே என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் யுத்தம் முடிவுக்கு வந்த காலம்தொட்டு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நான்கு அல்லது ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கென்று தனியான சின்னம் கிடையாது. யாப்பு கிடையாது. ஒரு கட்டமைப்பென்பதே கிடையாது. கூட்டமைப்பு என்று கூடி பேசுவார்கள். விவாதிப்பார்கள். கடுமையாக மோதிக்கொள்வார்கள். தீர்மானங்களைக் கூட நிறைவேற்ற…
-
- 1 reply
- 633 views
-
-
பலமடையுமா, பிளவுபடுமா? கே. சஞ்சயன் / 2019 ஜூலை 19 வெள்ளிக்கிழமை, மு.ப. 05:44 Comments - 0 ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் விடயத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான பொதுஜன பெரமுன, தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு வந்து விட்ட நிலையிலும், ஐக்கிய தேசியக் கட்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்த மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்து விட்டார். அதற்குப் பொதுஜன பெரமுனவுக்கு உள்ளேயும், ஒன்றிணைந்த எதிரணிக்குள்ளேயும் மாற்றுக் கருத்துகள், எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், இந்த எதிர்ப்புகளால் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியில் நிறுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது…
-
- 0 replies
- 557 views
-
-
பலமான தலைவர்களும் பலமான நிறுவனங்களும் -என்.கே. அஷோக்பரன் தமிழில் ‘முதல்வன்’ என்று ஒரு திரைப்படம். அதில், கதாநாயகன் ஒரே ஒரு நாள் மட்டும், மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றுவதாகக் கதை. அந்த ஒரு நாளில், குறித்த முதலமைச்சர், மக்களுடன் நேரடியாகத் தொலைபேசியில் உரையாடி, அவர்களின் குறைகளைக் கேட்டு, உடனே நேரடி களவிஜயம் செய்து, அதிரடி, தடாலடியாக நடவடிக்கைகளை எடுத்து, மக்களின் மனங்களை வெற்றி கொள்வதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சிகள், பலரையும் மயிர்க்கூச்செறியச் செய்திருக்கலாம், இப்படி ஒரு தலைவன், எமக்கு இல்லையே என்று அங்கலாய்க்கவும் ஆதங்கப்படவும் செய்திருக்கலாம். இவ்வளவும் ஏன், ஒரு நாட்டின் தலைவன் என்றால், இப்படியல்லவா இருக்க வேண்…
-
- 0 replies
- 319 views
-
-
பலமிழந்த ‘பலவான்’ தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் இரு ஜீவன்களில் ஒன்று தேனீ; மற்றையது, விவசாயி. இவ்வாறு தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும், இவை இரண்டும் தம் உழைப்பை ஒருபோதும் நிறுத்திக்கொள்வதில்லை. விவசாயி, தான் உற்பத்தி செய்கின்ற நெல்லுக்கோ, ஏனைய விவசாய விளைபொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்புகள் இன்றி, வருடாந்தம் பெரும் கஸ்டங்களையும் நட்டங்களையும் எதிர்நோக்கி வருவதுடன், தொடர்ந்தும் கடன் சுமைகளைச் சுமக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. விவசாயிகள் பலர் ஏழைகளாகவே இருக்கின்றார்கள். மழை பெய்யுமானால் தன் குடிசை ஒழுகும் எனத்தெரிந்தும், ‘இறைவா இன்று ஒ…
-
- 0 replies
- 409 views
-
-
பலம் இருந்தால் தான் இன்றைய உலகில் மதிப்பு இருப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு, வெள்ளவத்தையில், நடந்த மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கொழும்பில் வந்து தம்பி மனோ கணேசன் அவர்களின் கட்சிக்; கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அரசியலே வேண்டாம் என்றிருந்த எனக்கு இப்பொழுது தான் அரசியல் சூடு பிடிக்கின்றது. அரசியல் மேடை என்பது ஒரு டெனிஸ் விளையாட்டு அரங்கம் போல. ஒருவர் அடிப்பதை மற்றவர் அடிப்பார். இருவரும் ஒரே பந்தைத்தான் அடிப்பார்கள். விடாமல் அடித்தால்த்தான் வெற்றி. அதேபோல் ஒர…
-
- 0 replies
- 587 views
-
-
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை விடயத்தில் உயர் நீதிமன்றத்தினால் அனுப்பப்பட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட சட்ட வியாக்கியானமானது சட்ட வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேவேளை அது இதுவரை நீதித்துறைக்கும் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டமியற்றும் துறைக்கும் இடையில் நிலவி வந்த பிணக்கை அரசியல் நெருக்கடியாக மாற்றிவிட்டது என்றே தெரிகிறது. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளானது சட்டங்கள் அல்லவென்றும் எனவே அவற்றின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நீதியரசர் ஒருவருக்கு எதிராக நீதி விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் வியாக்க…
-
- 0 replies
- 525 views
-
-
பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன. கடந்த ஒன்பது வருடங்களில், தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டம், ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களது அரசியல் சார்ந்த செல்நெறியில், செயற்றிறனுடைய செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டதாகத் தெரியவில்லை. …
-
- 0 replies
- 501 views
-