அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
பிள்ளையான் கைது: ஒன்றும் ஒன்றும் இரண்டா….? April 12, 2025 — அழகு குணசீலன்— தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சில நாட்களாகிறது. இந்த செய்தி அறிந்து வெடிக்கொழுத்தி சித்திரைப் புத்தாண்டை முன்கைட்டியே கொண்டாடியவர்கள் இருக்கிறார்கள். பிள்ளையானுக்காக ஒப்பாரி வைக்காவிட்டாலும் கவலைப்பட்டு நினைத்து பேச கணிசமானவர்கள் நிச்சயம் இன்னும் இருக்கிறார்கள். வழக்கம்போல் இந்தக் கைது விடயத்தில் மட்டக்களப்பு சமூகம் இரண்டாக இரு வேறுபட்ட நோக்குகளுடன் பிரிந்து கிடக்கிறது. பிள்ளையானின் கைதுக்கு பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது ஒரு தரப்பினரின் பார்வை. அப்படி இல்லை இது கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய மக்கள் சக்தியின் தேர்த…
-
- 0 replies
- 420 views
-
-
பிள்ளையார் கல்யாணமா? பொருளாதாரமா ? தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களின் பின்னணியிலும், அதற்குப் பின்னரான ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலும் ஜேவிபியின் கை மேலோங்கி வருவது பரவலாகத் தெரிகிறது.அண்மைக் காலங்களில் ஊர்வலங்கள் போராட்டங்களுக்காக அதிகளவுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது ஜேவிபிதான் என்று கொழும்பில் உள்ள தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கூறுகிறார்.தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்களின் உணர்வுகளை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு கட்சியாக ஜேவிபி தோற்றம் பெற்றுள்ளது.அதைவைத்து ஜேவிபி வருங்காலங்களில் நடக்கக்கூடிய தேர்தல்களில் ஒரு பிரதான கட்சியாக மேலெழப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சிங்களம் மற்றும் தமிழ் அவதானிகளில் ஒரு பகுதியினர் மத்தியில் உ…
-
- 0 replies
- 950 views
-
-
குருவை மிஞ்சிய சீடனாக ரணில் விக்ரமசிங்க இலங்கை ராஜதந்திர வட்டாரத்தில் தனது ஆடுகளத்தை தற்போது ஆரம்பித்து விட்டார். கடந்த மாதம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பியதும் 13ஆம் திருத்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதற்கான ஏற்பாடுகளுக்கு ரணில் உத்தரவிட்டுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. தீர்வு திட்டத்தை வழங்க ரணில் தயார் இல்லை இந்த நிலையில் சிங்கள தரப்பிலிருந்தும், தமிழ் தரப்பில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் ஒரு பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. உண்மையில் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு திட்டத்தை வழங்குவதற்கு தயார் இல்லை. ஆனால் தமிழ் …
-
- 1 reply
- 530 views
- 1 follower
-
-
பிழையாக வழிநடத்தும் மதவாதமும் இனவாதமும் காரை துர்க்கா / 2019 மே 07 செவ்வாய்க்கிழமை, பி.ப. 07:47 Comments - 0 அழகிய இலங்கைத் தீவை, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதம் பந்தாடியது. நாட்டின் அனைத்து இன, மத, மொழி மக்களும், இனி என்ன நடக்கும் என நடுங்கியவாறு இருந்தார்கள்; இருக்கின்றார்கள். ஒட்டுமொத்த நாடுமே அதிர்ந்தது ஆட்டம் கண்டது. இந்நிலையில், ஏப்ரல் 23ஆம் திகதி அமைச்சர்களின் விசேட சந்திப்பு நடைபெற்றது. அதையடுத்து, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், ஊடகவியலாளர்களோடு உரையாடினார். அதன் போது, “இந்த நாட்டில் இன்று, இனவாதத்துக்கு அரச ஆசீர்வாதம் இல்லை என்பது, நிம்மதி தரும் உண்மை ஆகும்” என்பதாகக் கரு…
-
- 0 replies
- 512 views
-
-
பீஜிங்கின் கடன் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை இலங்கையின் தற்போதைய நிலைமையை கண்டுகொண்ட நாடுகளில், பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் மீதான கரிசனையை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்தியா மட்டுமன்றி, தமிழ்நாடும் தனியாக உதவிகளை வாரி வழங்கியுள்ளது. உதவிக்கரம் நீட்டுவது மட்டுமன்றி, இலங்கைக்கு இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது ஏன்? என்பது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அத்துடன் எதிர்காலங்களில் தங்களுடைய நாடுகளுக்கும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பது தொடர்பில் கவனம் செலுத்தி முன்கூட்டியே தயார்படுத்தலில் ஈடுபட்டுள்ளன. அதில் பெரும்பாலானவர்களின் கருத்து பீஜிங்கின் கடன் பொறிக்குள் இலங…
-
- 0 replies
- 251 views
-
-
பீஜீங்கா- புதுடெல்லியா?: சிறிலங்காவின் தடுமாற்றம் புதினப்பணிமனைNov 01, 2018 | 1:53 by in செய்திகள் அரசியல் கொந்தளிப்பின் மத்தியில் சிறிலங்காவில் மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றி விட்டார் என்றவுடன், முதலில் வாழ்த்து தெரிவித்த தலைவராக, சீன தலைவர் ஷி ஜின்பிங் இடம் பிடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பிரதமராக பதவி வகித்து வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவிநீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக முன்னைநாள் அதிபர், மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து சிறிலங்காவின் அரசியலில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருக்கிறது அரசமரம் போல் இருக்க வேண்டும் என்பதற்காக, யாப்புகளாலும் அரசியல் திருத்த சட்டங்கள் என்ற விழுதுகளாலும், …
-
- 0 replies
- 638 views
-
-
புண்ணை பொன்னாடையால் மூடிமறைக்க முற்படக்கூடாது இந்திய பிரதமர் நரேந்திரமோடி அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதர உள்ளார். இலங்கைக்கு வருகை தரும் அவர் சர்வதேச வெசாக் தின விழாவில் கலந்துகொள்ள உள்ளதோடு எதிர்வரும் 12 ஆம் திகதி மலையகத்திற்கும் விஜயம் செய்ய இருக்கின்றார். பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருவதும் தெரிந்த விடயமாகும். இதற்கிடையில் மலையகத்திற்கு விஜயம் செய்யவுள்ள மோடி யிடம் மலையக மக்களின் பிரச்சினைகள் உரியவாறு முன்வைக்கப்பட வேண்டும். நிலை மைகளை திரித்து கூறுவதற்கு முற்படக்கூடாது என்றும் கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன. உலக நாடுகள் வரிசையில் இந்தியா …
-
- 0 replies
- 426 views
-
-
புதிதாக எதுவும் இல்லாத புதிய அரசமைப்பு புதிய அரசமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நாடாளுமன்றம், அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டதன் பின்னர், அதன் கீழ் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை, அக்குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த இடைக்கால அறிக்கையில், அரசாங்கத்தின் தன்மை, விவரிக்கப்பட்டுள்ள விதம், ஒரு வகையில் விசித்திரமானது. மற்றொரு வகையில், அதை ஆக்கியவர்கள் நாட்டின் சமூகங்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த ‘படும் பாட்டை’ எடுத்துக் காட்டுகிறது. அரசின் தன்மை அதில் இவ்வாறுதான் விவரிக்கப்பட்டுள்ளது. ‘இலங்கையானது அரசமைப்பினால் வழங்கப்…
-
- 0 replies
- 806 views
-
-
புதிதாகச் சிந்திக்க தூண்டும் பிரதமரின் இந்திய விஜயம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 பெப்ரவரி 12 2019நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, 18ஆம் திகதி பதவியேற்று 11 நாள்களிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்குச் சென்றார். அப்போது அவர், இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் ‘இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது, அதிகாரப் பரவலாக்கலை உதாசீனம் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டு இருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, பொருளாதார அபிவிருத்தியாகும் என்பதே அப்போது அவரது நிலைப்பாடாக இருந்தது. ‘30 வருடங்களுக்கு மேலாக, அதிகாரப் பரவலாக்கல் பற்றிக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், எதுவு…
-
- 0 replies
- 547 views
-
-
புதிதாகவும் புதிராகவும் புதினமாகவும் புரிந்துணர்வு இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் உதயத்துக்கு, நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் உறுதுணையாக விளங்கியவர்கள் என்பதை, எவரும் மறுக்கவோ அல்லது மறுதலிக்கவோ முடியாது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, 2005ஆம் ஆண்டு ஆரம்பித்தது. 2015இல் ஒரு தசாப்த கால ஆட்சியுடன் அஸ்தமித்தது, அல்லது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. மிகப்பெரிய பெரிய எதிர்பார்ப்புகளின் மத்தியிலேயே, தமிழ் மக்கள் நடப்பு அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள். அதேபோல, சர்வதேச நாடுகளும் நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் என நம்பினார்கள். 1948ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களி…
-
- 0 replies
- 445 views
-
-
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் பதவியேற்றுக்கொண்டார். நடந்து முடிந்த 8ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 6924255 வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 52.25 வீதத்துடன் வெற்றிவாகை சூடியிருக்கிறார். மிகவும் பரபரப்பாகவும் கடுமையான போட்டிக்கு மத்தியிலும் நடைபெற்ற இந்த தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நாட்டு மக்கள் மிக அமோகமாக ஆதரவளித்து வாக்குகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள். இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ர…
-
- 0 replies
- 286 views
-
-
புதிய அனைத்துலக ஒழுங்கில் இந்துமா கடலின் முக்கியத்துவமும்ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பும் 30 Views 1945ஆம் ஆண்டில் 2ஆவது உலகப் பெரும் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, அனைத்து உலக நாடுகளின் மன்றம் நிறுவப்பட்டது முதல் ஐக்கிய அமெரிக்கா அனைத்துலக பொருளாதார நிறுவனங்களையும், இருதரப்பு பிராந்திய பாதுகாப்புக்கான அமைப்பாண்மைகளையும், தாராண்மைவாத அரசியல் விதிமுறைகளையும் கட்டி எழுப்பிப் பேணுதல் மூலம் தனது அனைத்துலகு குறித்த அக்கறைகளை வளர்த்து வந்தது. இந்த கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் கூட்டாக ‘அனைத்துலக ஒழுங்குமுறை’ என அழைக்கப்பட்டது. அண்மைக் காலங்களில் வளரச்சியுற்றுள்ள உலக அதிகார மையங்கள் இந்த ‘அனைத்துலக ஒழுங்கு முறை’க்கு சவா…
-
- 0 replies
- 471 views
-
-
புதிய அரசமைப்பின் தர்மசங்கடமான பயணம் 0 SHARES ShareTweet புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. கூட்டு எதிரணித் தரப்பினர் புதிய அரசமைப்பு யோசனை களுக்கு எதிராக வெளியிடும் குற்றச்சாட்டுக் களை மறுத்துரைக்கும் விதத்தில் அரச தரப்பினரும் பதிலிறுத்து வருகின்றனர். தற்போது நடைமுறையில்உள்ள அரசமைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள், அது அறிமுகப்படுத்தப்பட்ட வேளை பெருமளவில் முன…
-
- 0 replies
- 508 views
-
-
ஏமாற்றமே எஞ்சியது!! பதிவேற்றிய காலம்: Feb 18, 2019 தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் புதிய அரசமைப்பு நிறை வேற்றப்படமாட்டாதென்பது அநேகமாக உறுதியாகிவிட்டது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரசிங்க இதை வெளிப்படுத்திவிட்டார். அரசியல் குழப்பம் மற்றும் சூழ்ச்சி காரணமாகத் தமது தலைமையிலான கூட்டு அரசு உடைக்கப்பட்டுவிட்டதாகவும் இதன் காரணமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை இழக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக புதிய அரசமைப்பை நிறைவேற்று வதில் தாதமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல் சூழ்ச்சி காரணமாகத் தடைப்பட்டு நிற்கும் நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதே இனி…
-
- 0 replies
- 494 views
-
-
புதிய அரசமைப்பால் பௌத்த மதத்துக்கு ஆபத்தா? எதிர்க்கட்சி என்றால் தினமும் அரசுக்கு எதிராக ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருக்க வேண் டும், எதையாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும், அரசு கொண்டு வரும் சகல வேலைத் திட்டங் களையும் எதிர்க்க வேண்டும், அவற்றில் இருக்கும் குறைகளை மாத்திரம் தேடிப் பிடித்து விமர்சிக்க வேண்டும். இதுதான் எதிர்க் கட்சிக்கான எழுதப்படாத விதி.அவ்வாறு இருந்தால்தான் எதிர்க்கட்சி என்று ஒன்று இருப்பதை மக்கள் உணர்வர். ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் அந்த எதிர்ப்பு நடவடிக்கைதான் உதவும். மகிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் இவ்வாறுதான். மகிந்தவுக்கு எதிராகப் பேசிப் பேசி…
-
- 0 replies
- 592 views
-
-
புதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும் Editorial / 2019 ஓகஸ்ட் 08 வியாழக்கிழமை, பி.ப. 07:24 Comments - 0 2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும். ‘நல்லாட்சி அரசாங்கம்’ நல்லாட்சியைத் தராவிட்டாலும், தமிழர்களுக்கு நல்வாழ்வைத் தருவார்கள் என்று, தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். ‘தீபாவளிக்குள் தீர்வு, ‘பொங்கலுக்குள் புதிய அரசமைப்பு’ என்று ‘புலுடா’க்கள் தொடர்ந்தன. இன்று, புதிய அரசமைப்புக்கான வாய்ப்பு, முழுமையாக இல்லாது போய்விட்டது. புதிய அரசமைப்பின் சாத்தியமின்மையை, இலங்கை அரசியலைப் புரிந்தவர்கள், இலகுவாக அறிந்து கொள்வர். நல்ல…
-
- 0 replies
- 442 views
-
-
புதிய அரசமைப்பு: செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு? புதிய அரசமைப்புக்கான சாத்தியங்கள் இன்னமும் உள்ளதாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதைச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முத்துகளை, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் உதிர்த்தார் என்ற வினா, இங்கு பிரதானமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையைத் தொடர்ந்து, சூடுபிடித்த புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள், இரண்டு ஆண்டுகளிலேயே முடங்கிவிட்டன. இதற்கான விருப்பமோ, அவசியமோ அரசாங்கத்திடம் இருக்கவில்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மய்யப்படுத்தியே, புதிய அரசமைப்புப் பற்றிப் பேசப்பட்டபோதும், தே…
-
- 0 replies
- 848 views
-
-
புதிய அரசமைப்புக்கான முயற்சியை அரசாங்கம் கைவிடுமா? புதிய அரசமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளத் தாம் பதவிக்கு வந்த நாள் முதல், அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போகுமா என்று சந்தேகம் கொள்ளக் கூடிய நிலைமை நாட்டில் உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் இலங்கையில் முக்கிய மூன்று பௌத்த பிரிவுகளின் தலைமைப் பிக்குகள், அதாவது மகாநாயக்க தேரர்கள் கூட்டாக எடுத்த முடிவின் காரணமாகவே அந்தச் சந்தேகம் உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் கண்டியில் கூடிய இலங்கை பௌத்தர்களின் மூன்று முக்கிய நிகாயாக்கள் என்றழைக்கப்படும் ‘சியம் நிக்காய’, ‘ராமஞ்ஞ நிக்காய’ மற்றும் ‘அமரபுர நிக்காய’ ஆகிய பிரிவுகளின் தலைவர்கள் நாட்டுக்குப் புதிய அர…
-
- 1 reply
- 398 views
-
-
புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே! புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே! நாட்டில் முன்னைய காலகட்டம் போலன்றி, இன்று அரசியல் ரீதி யில் புதிய நிலைப்பாடொன்று உருவாகியுள்ளது. இன்று நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் இரண்டு, தம்முடையே ஒன்றிணைந்து நாட்டை நிர்வகித்து வருகின்றன. நாட்டின் தமிழ் மக்களைப் பிரதிநிதித்து வப்படுத்தும் கட்சிகளும் இந்த அரசமைப்பு மாற்றத்தை விரும்பு கின்றன. ஜே.வி.ப…
-
- 0 replies
- 482 views
-
-
புதிய அரசமைப்பும் சிறுபான்மையினரின் எதிர்காலமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 30 புதிய அரசமைப்பாக்க முயற்சிகள் இலங்கைக்குப் புதியனவல்ல. 1994ஆம் ஆண்டு தொட்டு, இதற்கான பலமுயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இன்றுவரை முழுமையாகச் சாத்தியமாகவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைச் சாத்தியமாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளன. அரசாங்கம், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதும் வலுவற்ற எதிர்க்கட்சி ஆகிய இரண்டு காரணிகளும் இங்கு பிரதானமானவை. புதிய அரசமைப்பு எவ்வாறு அமையப்போகிறது என்பதைக் கூறுவது கடினம். அதில், சிறுபான்மையினரின் குரல்கள் எடுபடப்போவதில்லை என்பதை மட்டும்…
-
- 1 reply
- 575 views
-
-
புதிய அரசமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டுமா? தமிழ் மக்களுக்கு சலுகை வழங்க முற்படுவோர், கொல்லப்பட வேண்டும் என்ற மனோநிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், பொதுவான ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது. இது, கடந்த ஒரு மாத காலத்தில் அவர்கள் வெளியிட்ட கருத்துகளாலும் அக்கருத்துகளுக்கான அவர்களின் ஆதரவாலும் தெரியவருகிறது. உத்தேச புதிய அரசமைப்பை வரைவதற்காக நாடாளுமன்றம், அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டு, அதன் கீழ் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை விடயத்தில், மஹிந்தவின் அணியினர் வெளியிட்டு வரும் கருத்துகள் மூலமே, அவர்களது இந்த கொலைகார …
-
- 0 replies
- 397 views
-
-
புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு முன்னாலுள்ள சவாலும்.! இலங்கையின் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பில் செயல்வடிவம் எடுக்க ஆரம்பித்து ளள்ளது.உள்நாட்டில் மிகத் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கம் அமைச்சுக்களையும் இராஜாங்க அமைச்சுக்களையும் தெளிவான திட்டமிடலுடன் தெரிவு செய்துள்ளதுடன் அதிக அதிப்தியின்றிய ஆட்சிக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இது உறுதியான அரசாங்கத்தினை ஏற்படுத்துவதுடன் அதன் கடடமைப்பு விருத்திக்கான அணுகுமுறைகளையும் அதிகார அமைப்புக்கான செல்நெறிகளையும் உருவாக்கும உத்திகளை கொண்டதாக விளங்கும். வடக்கு கிழக்கப் பொறுத்து தனித்துவமான கொள்கை வகுப்பொன்றுக்கான முனைப்பு புதிய அரசாங்கத்தால் ஆரம்பி…
-
- 0 replies
- 406 views
-
-
புதிய அரசின் பொறுப்புக்கூறல்? லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாத கூட்டத் தொடர் இலங்கை அரசாங்கத்திற்கு மற்றுமொரு அல்லது புதிய நெருக்கடியாக அமைய வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பாகும். அது சாத்தியமாவதும் இவ்லாமல் போவதும் கொண்டுவரப்படும் புதிய பிரேரணையிலேயே தங்கியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட பிரேரணைத் தீர்மானத்தின் காலம் முடிவடைய இருந்த நிலையில் கடந்த வருடத்தில் அத் தீர்மானம் ஒரு வருடகாலத்திற்கு நீடிக்கப்பட்டது. அது வருகிற செப்ரம்பரில் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், இவ்வருடத்தில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றினை பிரிட்டன் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிரிட்டன…
-
- 0 replies
- 118 views
-
-
புதிய அரசியலமைப்பா.? தமிழீழமா.? - கவிஞர் தீபச்செல்வன். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கப் போகிறோம் என்ற கதை தற்போதைய ஆட்சியிலும் பேசப்படுகின்றது. ஸ்ரீலங்காவை ஆளுகின்ற கட்சிகள் தாம் ஆட்சியை பிடிக்கும் போதேல்லாம் அரசியலமைப்பை தத்தமது தேவைகளுக்கும் பேரினவாத விரிவாக்கத்திற்குமாக ஸ்ரீலங்கா அரசியல் யாப்பை திருத்தி வருகின்றன. கடந்த 2010களில் பேரினவாத சிந்தனையை நிறைவேற்று அதிகாரம் மூலம் பலப்படுத்தி, சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்த முற்பட்ட ராஜபக்ச தரப்பினர் இப்போது மீண்டும் அரசியலமைப்பை மாற்றப் போவதாக கூறுகின்றனர். இங்கே ஒரு சொல்லாட்சியை நாம் கூர்மையாக கவனிக்க வேண்டி இருக்கிறது. அன்பிற்குரிய ஆட்சியாளர்களே, ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றுவதாக சொ…
-
- 0 replies
- 677 views
-
-
புதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள் படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ள பிடி இந்த தாமதத்தில் இருந்தும் பிரேரணைக்கு கொண்டு வரப்பட்ட திருத்தங்களில் இருந்தும் நன்றாக தெரிகின்றது. அண்மையில் ஜனாதிபதி சிறிசேனவுக்கு நெருக்கமான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்தவொரு ஆலோசகர் குறிப்பிட்டது போல சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திற்குள் ஒரு எதிர்கட்சியாக இயங்கி வர…
-
- 0 replies
- 615 views
-