Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1.  அமுக்கப்பட்ட சம்பூர் சர்ச்சை சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடந்த நிகழ்வின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரைத் திட்டித் தீர்த்த சம்பவத்தினால் எழுந்த சர்ச்சையை, அரசாங்கம் இப்போது ஓரளவுக்கு அமுக்கி விட்டது. திடீரென இந்த விவகாரம் வீங்கி வெடித்தபோது, அரசாங்கத்துக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஒரு பக்கத்தில், தமது அரசாங்கத்திலுள்ள கூட்டணிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை சமாளிக்க வேண்டும். மற்றொரு பக்கத்தில், கடற்படை உள்ளிட்ட முப்படையினரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. அதேவேளை, முஸ்லிம் மக்களையும் புண்படுத்தாமல், சிங்கள மக்களையும் கோபப்படுத்தாமல், விவகாரத்தைக் கையாள வேண்டிய சிக்கல் அ…

  2. தொடர்கதையாகும் அமெரிக்காவின் விலகல்கள் வட­கொ­ரிய அதிபர் கிம்மை சந்­தித்து நேர­டி­யாக உச்­சி­ம­ா­நாடு நடத்தி உல­கையே அதி­ர­வைத்த அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஒரு மெகா வர்த்­தக பிர­முகர் - அர­சி­ய­லிலும் இரா­ஜ­தந்­தி­ரத்­திலும் மெகா வர்த்­தக செழிப்­புக்குக் கார­ண­மான தந்­தி­ரோ­பா­யங்­களை கடைப்­பி­டித்து வெற்றி பெறலாம்", என்­பதை உல­குக்கு நிரூ­பித்­துக்­காட்டி வரு­கிறார் என்ற புக­ழுக்கு உரித்­தா­ளி­யாவார். இப் பய­ணத்தில் மேலும் ஒரு குண்­டை வெடிக்க விட்­டி­ருக்­கிறார். 2018 ஆம் ஆண்டு ஆனி மாதம் 19 ஆம் திக­தி­யன்று அமெ­ரிக்க தூதுவர் ஐ.நா.சபை மனித உரிமைப் பேர­வையில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையைக் கண்­டித்து உரை­யாற்­றிய­துடன் ஐக்­கிய அமெ­ரிக்க நாடுகள் ஐ.…

  3. "தமிழர்கள் மீது நடந்த 1983 கருப்பு ஜூலை வன்முறை இந்த ஜூலையில் சிங்களர்கள் மீதும் நடக்கிறதா?" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சிங்கள இனவாதக் குழுவினர், மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி 39 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் தேதி என்பதுடன், அதே தேதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை ராணுவம் நேற்று (22) தாக்குதல் நடத்தியதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள்…

  4. ஐ நா மனித உரிமை சபையும் ஈழத் தமிழர்களும்-பா.உதயன் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் அலுவலக அறிக்கையை சமர்ப்பித்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இலங்கையின் நிலைமை பலவீனமாக இருப்பதாகவும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறினார். அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அரச அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் அதே வேளை தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அதே போல் காணாமல் ஆக்கபட்டோருக்கான எந்த நீதியையும் வழங்கவில்லை என தொடர்ந்தும் பயங்கரவாத சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் இம் முறை அரசியல் குற்றச்சாட்டு மட்டும் இன்ற…

  5. ‘நீயுமா புரூட்டஸ்?’ புதிய அரசமைப்பு தொடர்பாக சிங்கள அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் இருந்தும், பௌத்த மத பீடங்களில் இருந்தும், முரண்பட்ட கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தாலும், சாதாரண சிங்கள மக்களின் மனோநிலை என்ன என்பது இதுவரை சரியாகத் தெரியவரவில்லை. சாதாரண சிங்கள மக்கள், ஓர் அரசமைப்பு மாற்றத்தின் தேவையை உணர்ந்து கொண்டிருக்கிறார்களா, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணப்பட்டு, நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்…

  6. சிவில் சமூக அமைப்புகளை மக்கள் நம்பலாமா? February 13, 2021 — இரா.வி.ராஜ் — ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள்/அரசியல் தொடர் போராட்டம் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” #P2P சிறுபான்மையினர் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான பரிணாமம் எனலாம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பில் ஒரு விதமான செய்தியை மக்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு புகட்டினர். ஆனாலும் அச்சுறுத்தல், கொரோனா அச்சத்துக்கும் மத்தியிலும் இப்போராட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டதன் மூலம் சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் கூறியிருக்கும் செய்தி நாம் எச்சந்தர்ப்பத்திலும் போராட தயாரானவர்கள், எமது ஒற்றுமையே எமது பலம் என்பதாகவே இருக்கமுடியும். இப்போராட்…

  7. மைத்திரியிடம் எதை எதிர்பார்க்கலாம்? மூன்றாண்டுகளுக்கு முன்னர், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாமும் பத்தோடு பதினொன்றாகிய அரசியல்வாதி மட்டுமே என்பதை, நாளாந்தம் நிரூபித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாம் பதவிக்கு வரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கிய அவர், இப்போது அவற்றை நிறைவேற்ற முடியாமலும் நிறைவேற்ற மனமின்றியும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த வாரமும் அவர், தாம் 2015 ஆம் ஆண்டு தெரிவித்த முக்கியமானதொரு கருத்தை மறுத்து, கருத்து வெளியிட்டு இருந்தார். தாம், ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வ…

  8. வீணடிக்கப்படும் எதிர்பார்ப்புக்கள் யுத்­தத்தின் பின்­ன­ரான இலங்­கையில் நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கும் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வாழ்வில் விமோ­ச­னத்தை ஏற்­ப­டுத்தப் போவ­தா­கவும் புதிய அர­சாங்கம் போக்கு காட்­டி­யி­ருந்­தது. ஆனால், காலம் செல்லச் செல்ல, புதிய அர­சாங்­கமும் ஒரே குட்­டையில் ஊறிய மட்டை என்­பதை பாதிக்­கப்­பட்ட மக்கள் கண்­டு­கொண்­டார்கள் யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால், யுத்­தத்தில் வெற்­றி­பெற்ற முன்­னைய அர­சாங்கம் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளிலும் பார்க்க, யுத்த வெற்­றியைக் கொண்­டா­டு…

  9. கடற்றொழில் அமைச்சருக்கு வடக்கில் காத்திருக்கும் நெருக்கடிகள் கலாநிதி சூசை ஆனந்தன் இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களின் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் புதிதாக பதவியேற்றிருக்கின்றார். வட பகுதியில் மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற பல நெருக்கடிகளுக்கு சுமுகமான தீர்வினை வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அமைச்சர் யாழில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆயினும் இது அவருக்கு இலகுவாவானதாக இருக்கப் போவதில்லை. இந்திய மீனவர் விவகாரம் இந்தியாவுடன் தொடர்பானது, தென்பகுதி மீனவர் விவகாரம் சிறிலங்கா அரசுடன் தொடர்பானது. அமைச்சரோ தமிழர். கடந்த கால அமைச்சரும் தமிழராகவே இருந்துள்ளார். இருவரும் கடற்றொழிலுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருந்ததில்லை. இரு…

  10. மியன்மாரில் சீனாவின் பொருளாதார நலன்களும் ரோஹிங்யா நெருக்கடியும் சீனா ஏனைய நாடு­களின் உள்­நாட்டு நெருக்­க­டி­களில் நேர­டி­யாக தலை­யீடு செய்­யாமல் இருந்து வந்த இது கால வரை­யான போக்கை இப்­போது கைவிட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றதோ என்ற கேள்­வியை மியன்மார் ரோஹிங்யா நெருக்­க­டிக்கு அது முன்­வைத்­தி­ருக்கும் தீர்வுத் திட்டம் தவிர்க்க முடி­யாமல் எழுப்­பு­கி­றது. ரோஹிங்யா நெருக்­க­டியைத் தணிப்­ப­தற்கு சீனா மூன்று கட்டத் திட்டம் ஒன்றை முன்­வைத்­தது. மியன்­மாரின் ராக்கைன் மாநி­லத்தில் யுத்த நிறுத்­த­மொன்றை கொண்டு வரு­வது முத­லா­வது கட்டம். இது அங்கு இடம் பெறு­கின்ற வன்­மு­றை­களை முடி­வுக்கு கொண்டு வரு­வதை நோக்­க­மாகக் கொண்­டது. அக­திகள் பிரச்­சினை தொடர்பில் …

  11. பிராந்திய அரசியலின் முடிவும் தேசிய அரசியலின் தொடக்கமும் November 17, 2024 — கருணாகரன் — மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர, நாடு முழுவதும் தேசிய மக்கள் சக்தியே (NPP) வெற்றியடைந்துள்ளது. மட்டக்களப்பிலும் இரண்டாவது இடத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) யே நிற்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு தேசியக் கட்சி, நாடு முழுவதிலும் வெற்றியீட்டியது இந்தத் தடவைதான். இதற்கு முன்னான தேர்தல்களில் ஐ.தே.கவோ, பொதுஜன பெரமுனவோ சு.கவோ பெரும்பான்மையை அல்லது அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றாலும், அதில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்கள் விலகியே இருந்தன. அல்லது வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களை அவற்றினால் வெற்றி கொள்ள முடியவில்லை. …

  12. கோவிட் -19 உடன் கடந்து செல்லும் 2020 ஏற்படுத்தப் போகும் புதிய உலக ஒழுங்கு – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 83 Views கோவிட்-19 என்ற உலகளாவிய தொற்றுநோயின் தாக்கதினால் மிகப்பெரும் பொருளாதார, உயிர் மற்றும் சமூக பாதிப்புக்களை உலகம் சந்தித்த ஆண்டாக 2020 கடந்து செல்கின்றது. இரண்டாம் உலகப்பேருக்கு பின்னர் குறுகிய காலத்தில் அதிக பொருளாதார மற்றும் உயிரிழப்புக்களை உலகம் சந்தித்தது இந்த வருடம் தான். இந்த தாக்கத்தின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதே தற்போதுள்ள கேள்வி. எதிர்வரும் வருடங்களில் பூகோள அரசியலில் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதுடன் இது உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்றால், அந்த மாற்றத்திற்கு முத…

  13. தமிழ் மக்கள்பொதுச்சபை - நிலாந்தன் “கொள்கை அடித்தளம் இல்லாமல் கட்சிகளை ஒருங்கிணைப்பது தற்காலிகமானது செயற்கையானது என்று சுயாதீனக் குழு நம்புகிறது. தலைவர்களையும் வாக்காளர்களையும் நீண்டகால நோக்கில் பண்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவசியத்தையும் சமூகப் பொறுப்பையும் சுயாதீனக் குழு ஏற்றுக்கொள்கிறது. தமிழ் அரசியலில் சிவில் சமூகங்கள் தலையிடுவது என்பது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும். இனிவரும் காலங்களில் தமிழ் அரசியலின் மீதும் கட்சிகளின் மீதும் அதிகரித்த தார்மீகத் தலையீட்டைச் செய்வதற்கு தேவையான வளர்ச்சியைத் தமிழ் சிவில் சமூகங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும்”. …

  14. பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்ட போது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதைக் கூட மங்கள தனது கவனத்திற் கொள்ளவில்லை. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கு லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் மண்டபம் ஒன்றை தந்துதவுமாறு சில வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன அந்தக் கருத்தரங்கின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இக்கர…

  15. சர்வதேச மனித உரிமை பிரகடனம் இலங்கையில் தாக்கம் செலுத்தியிருக்கிறதா? Posted on December 13, 2022 by தென்னவள் 22 0 ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு அக்கறையுள்ள எவருக்கும், எழுபத்து நான்கு வருடங்கள் குறுகிய காலம் அல்ல! வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கையின் ஆட்சியாளர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மேலாக தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் முட்டாளாக்குவதற்கான வழிகளை மட்டுமே தேடுகிறார்கள் என்பதே யதார்த்தம்-உண்மை. உலகெங்கிலும் உள்ள கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கான போராட்டங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாகும். சர்வதேச மனித உரிம…

    • 0 replies
    • 379 views
  16. சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல் September 21, 2025 11:26 am 2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு– அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா? மறுத்து நிராகரித்த கஜேந்திரகுமார்… அ.நிக்ஸன்- வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கும் ஆணையை பெற்றுள்ளதாக ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பெருமையுடன் வலியுறுத்திக் கூறியுள்ளது. ஆனால் இக் கருத்தை மறுத்துரைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழத் த…

  17. 2 வயதுக் குழந்தை தான் பயங்கரவாதியா ? இலங்கையில், சுமார் 3 தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மே 18, 19ஆம் திகதிகளை, இலங்கை அனுஷ்டித்திருக்கிறது. வடக்கிலும் தெற்கிலும், மாறுபட்ட உணர்வுகளை, அந்தத் திகதிகள் ஏற்படுத்தியிருக்கின்றன. இவை, எதிர்காலத்தில் எடுக்கப்படக்கூடிய நல்லிணக்க முயற்சிகளுக்கும் இன ஒற்றுமை குறித்த நடவடிக்கைகளுக்கும், எந்தப் பெரியளவு சவால்கள் காத்திருக்கின்றன என்பதைக் காட்டிச் சென்றிருக்கின்றன. போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்ற போதிலும், இம்முறை தான், பாரியளவிலான நினைவேந்தல் நடவடிக்கைகள், வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டன. மஹிந்த…

  18. வரவு செலவு வாக்கெடுப்பும் – வழுக்கிய ‘தமிழ்’ கட்சிகளும் – செய்தி ஆக்கம்- பிரபா 120 Views தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கு குரல்கொடுப்பதாக கூறிக்கொண்டு சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வண்ணமே அமைந்துள்ளது. சிறீலங்கா அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது கட்ட வாசிப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. கடந்த 10 ஆம் நாள் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவில்லை. எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்ப…

  19. இலங்கை- கண்ணால் காண்பதும் பொய் – இரா. முருகவேள் அக்டோபர் 2024 - Uyirmmai Media · அரசியல் இலங்கை சிவந்தது. மார்க்சீயவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர். இலங்கை ஒரு மார்க்சீய சார்பு கொண்ட ஜனாதிபதியைத் தேர்தெடுத்துள்ளது. புதிய ஜனாதிபதி சே குவேராவால் உத்வேகமூட்டப்பட்டவர் என்றெல்லாம் இந்திய, பன்னாட்டு ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வெளியிட்டன. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட இடதுசாரி அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி கண்டது சிறப்பானது என்று இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் ) தோழர்கள் கொண்டாடினர். இவையெல்லாம் முழுவதும் பொய் என்று சொல்லிவிட முடியாது. ஜேவிபி ஒரு சோஷலிச இலங்கையை உருவாக்கத்தான் தோற்றுவிக்கப்பட்டது. இலங்கை இடதுசாரிகள் போதுமான அளவுக்கு…

  20. அஜித் டோவால் விஜயமும் இலங்கை அரசியலும்! - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை அரசியல் உறுதிப்பாடு என்பது இந்தியாவுடனான உறவிலே அதிகம் தங்கியிருப்பதான தோற்றப்பாடு உண்டு. அதனை நிராகரிக்க முடியாது விட்டாலும் இலங்கை இந்தியாவை கையாளுவதனைப் பொறுத்ததாகவே அத்தகைய எண்ணம் வளர்ந்துள்ளது. அதிலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைமை இலங்கை ஆட்சிக்கு விரோதமாக அமைய ஆரம்பித்ததன் பின்பாடு இந்தியாவைக் கையாளும் திறன் இலங்கை ஆட்சியாளருக்கு அவசியமானதாக அமைந்தது. ஆனால் இந்தியத் தரப்பு இலங்கையைத் திருப்திப்படுத்த முடியாத சூழலிலேயே இலங்கைத் தமிழரை அரவணைத்துக் கொண்டது. ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கமும் முடிவும் அதனையே வெளிப்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந…

  21. 2017 தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் என்ன?

  22. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கோரி நிற்கும் கடப்பாடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக நாளை காலை (மே 18) மீண்டும் கூடப் போகின்றோம். மௌன வணக்கம் செலுத்தி, அஞ்சலிச் சுடரை ஏற்றி, நினைவு உரைகளை நிகழ்த்திவிட்டுக் கலைந்து செல்வதுடன் இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முடித்துக் கொள்ளப்போகிறோம்(?). அப்படியானால், முள்ளிவாய்க்காலில் நாம் மேற்கொள்ள வேண்டிய கூட்டுச் சத்தியத்துக்கான கடப்பாடு எங்கு போனது? முள்ளிவாய்க்கால் என்பது நினைவேந்தலுக்கான களம் மட்டும்தானா? அதனை மீறிய கூட்டுப் பொறுப்பையும் நீதி கோரலுக்கான தார்மீகத்தையும் அது கொண்டிருக்கவில்லையா? இப்படி ஏராளமான கேள்விகளினால் தொக்கி நிற்கிறது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல…

  23. காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து இரத்து: வரலாற்றில் புதிய அத்தியாயம் எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 04:26 Comments - 0 இந்தியாவின் புதிய வரலாறு, சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு தொடங்குகிறது. ஒரு மாநிலத்தை, இந்தியாவுடன் இணைப்பதற்காக அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகை, இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அரசமைப்பின் பிரிவு 370இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துக்கு, பாரதிய ஜனதாக் கட்சி, ஜனசங்க காலத்திலிருந்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, “காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த, டொக்டர் ஷ்யாம் பிராசாத் முகர்ஜி, இராஜினாமாச…

  24. ‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’ முருகானந்தம் தவம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி.) ஆதரவு கேட்டு அக்கட்சியின் அலுவலகப் படி ஏறியமை தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பி.டி.பி.) தமிழினத் துரோகிகள், ஓட்டுக்குழு, ஆயுதக்குழு, இராணுவ துணைக்குழு, தமிழ் இள…

    • 4 replies
    • 378 views
  25. எல்லை தாண்டலுக்கு முற்றுப்புள்ளி லக்ஸ்மன் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையின் பிரதிபலன் மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது. எல்லை தாண்டுவதும் அதற்காக கைது செய்வதும், பறிமுதல் செய்வதும் தண்டனை வழங்குவதும், படகுகளை அரசுடமையாக்குவதும், கைதாகும் மீனவர்களைப் பரிமாறிக்கொள்வதும் என்று தொடர்ந்து கொண்டிருக்கும் இரு நாடுகளின் கடல் எல்லைப் பிரச்சினையால் யாருக்கு இலாபம் அதிகம் என்று சிந்திப்பதனைவிடவும் இதிலுள்ள அரசியலை ஆழ்ந்து ஆராயவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மோதலால் உருவாகும் முறுகல் தீர்வைத் தேடுவதாகவே இருந்தாலும் திரௌபதியுடைய சேலையாகவே தொடர்கிறது. கடந்த வாரம் முழுவதும் தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் வடக்கில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.