அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
சிறப்புக் கட்டுரை: அமித் ஷா குழுவின் ஆர்கெஸ்ட்ரா பொய்! மின்னம்பலம் எஸ்.வி.ராஜதுரை பல இசைக்கருவிகளை இசைத்து ஒரே இசையை இசைப்பதை நாம் ‘ஆர்கெஸ்ட்ரா இசை’ என்கிறோம். ஓர் இசைப்படைப்பை உருவாக்கியவரை இசையமைப்பாளர் என்றும், அந்த இசைப்படைப்புக்கு உகந்த இசைக்கருவிகளைக் கூடுதலாகவோ குறைவாகவோ பயன்படுத்தி அதை நிகழ்த்துபவரை ‘நடத்துநர்’ (Conductor) என்றும் அழைக்கிறோம். இந்த மாதம் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற அபஸ்வரங்கள் நிறைந்த இசையின் மூலகர்த்தா வி.டி.சாவர்க்கர் என்றால், அதில் சில சுரபேதங்களைச் சேர்த்து புதிய ராகம் போல ஒலிக்கச் செய்பவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். பல்வேறு பெயர்களில் இயங்கிவரும் அவர்களது பரிவாரத்தினர்தான் பல்வேறு இசைக்கரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமித்ஷாவின் கூற்று – புரிந்துகொள்ளப்பட்டதும், புரிந்துகொள்ளப்படாததும். யதீந்திரா பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும், உள்துறை அமைச்சருமான, அமித்ஷா, தெரிவித்திருந்த கருத்துக்கள் பலரது கவனத்தை பெற்றிருந்தது. கடந்த மாதம் 27ம் திகதி, இராமேஸ்வரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், ஈழத் தமிழ் மக்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டதாக, அமித்ஷா கூறியிருந்தார். பாரதிய ஜனதா கட்சி, ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டிருப்பதாக, சிலர் இதற்கு விளக்கமளிக்க முற்பட்டனர். சிலரோ, இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறமுற்பட்ட…
-
- 0 replies
- 438 views
-
-
அமிர்தலிங்கத்தின் சாவிற்கு யார் காரணம்? அமிர்தலிங்கத்தின் சாவிற்கு யார் காரணம்? – மு. திருநாவுக்கரசு 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது தமிழீழம் அமைப்பதற்கான ஆணையை தமிழர் விடுதலை கூட்டணி மக்களிடம் கோரிய அதேவேளை அவ்வாறு ஆணை கிடைக்குமிடத்து ‘தமிழீழ நிழல் அரசாங்கம்’ ஒன்றை தாம் அமைக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் அதைப் பற்றி விபரமாக தேர்தல் மேடைகளில் பேசும் போது அயர்லாந்து விடுதலைப் போராளிகள் 1920ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும் ஓர் “அயர்லாந்து நிழல் அரசாங்கத்தை” அமைத்தது போல தாமும் அப்படி ஒரு அரசாங்கத்தை அமைக்கப் போவதாக உறுதியளித்தனர். மேடைகளில் பேசும் போது தமிழில் “நிழல் அரசாங்கம்” என்று பிழையாக கூறியிருந்தாலும் ஆங்கிலத்தில்…
-
- 1 reply
- 734 views
-
-
அமுக்கப்பட்ட சம்பூர் சர்ச்சை சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடந்த நிகழ்வின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரைத் திட்டித் தீர்த்த சம்பவத்தினால் எழுந்த சர்ச்சையை, அரசாங்கம் இப்போது ஓரளவுக்கு அமுக்கி விட்டது. திடீரென இந்த விவகாரம் வீங்கி வெடித்தபோது, அரசாங்கத்துக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஒரு பக்கத்தில், தமது அரசாங்கத்திலுள்ள கூட்டணிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை சமாளிக்க வேண்டும். மற்றொரு பக்கத்தில், கடற்படை உள்ளிட்ட முப்படையினரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. அதேவேளை, முஸ்லிம் மக்களையும் புண்படுத்தாமல், சிங்கள மக்களையும் கோபப்படுத்தாமல், விவகாரத்தைக் கையாள வேண்டிய சிக்கல் அ…
-
- 0 replies
- 378 views
-
-
அமெரிக்காவின் முடிவு தமிழர்களுக்கு பாதகமா? அமெரிக்கா பேரவையில் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி- இலங்கையைப் பொறுத்தவரை ஜெனீவா என்பது இனிமேல் அழுத்தங்களைக் கொடுக்கும் களமாக நீடிக்குமா என்பது சந்தேகம் தான். அமெரிக்கா வெளியேறியுள்ளது இலங்கை மீதான அழுத்தங்களைக் குறைக்கும் என்று பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டிருந்தார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. அது, அமெரிக்கா ஏற்கனவே அரசாங்கத்துக்கு கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் கூறப்பட்ட அனுமானமே தவிர, இருதரப்பு உறவுகளையும் முன்னிறுத்தி பார்க்கப்பட்ட விடயமன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ள…
-
- 1 reply
- 507 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வந்த, 34/1, 40/1 தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்து விட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவை அறிவித்திருந்தார். அதற்குப் பின்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தின் போதும், அரசாங்கத்தின் முடிவை அவர் நியாயப்படுத்தியிருந்தார். ஜெனீவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையில் இருந்து, விலகும் அரசாங்கத்தின் முடிவு குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதுபோலவே பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட இணை…
-
- 2 replies
- 674 views
-
-
வணக்கம் குணா, உங்களின் அனுமதியின்றி இங்கே உங்களின் காணொளியினை இணைத்தமைக்கு. கோபிக்கமாட்டீர்கள் என்கிற நம்பிக்கையோடு இணைக்கிறேன்.
-
- 0 replies
- 590 views
-
-
அமெரிக்க - ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூன் 27 வியாழக்கிழமை, மு.ப. 10:54Comments - 0 போரொன்றைத் தொடக்குதல் கடினமல்ல. ஆனால், அதை முடிவுக்குக் கொண்டுவருதல் எளிதல்ல. போரின் பாதிப்புகள், தலைமுறை தாண்டி நிலைப்பன. ஆனால், போருக்கான பறையை அறைபவர்களின் எண்ணங்களில், இவை இல்லை. வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள், முதலில் அவலத்திலும் இரண்டாவது முறை பேரழிவிலும் முடிகின்றன. அந்தப் பேரழிவைத் தமது கேலிக்கூத்துகளின் மூலம், சிலர் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் குழந்தைகளுக்கு, வாழ்வதற்கு உதவாத உலகைப் பரிசளிப்பதற்கு, இவர்கள் முண்டியடிக்கிறார்கள். ஈரான் மீது போரொன்றைத் தொடுப்பது, தவிர்க்கவியலாதது போ…
-
- 0 replies
- 420 views
-
-
அமெரிக்க - தலிபான் சமாதான உடன்படிக்கை: ஆப்கானில் அமைதி? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மாதானம் ஏன் வருகிறது, யாருக்காக வருகிறது என்பது தெரியமுதலே சமாதான உடன்படிக்கைகள் கையொப்பமிடப்படுகின்றன. அதில் மக்கள் பங்காளிகளாவதும் இல்லை; அவர்கள் நலன்கள் பிரதிபலிக்கப்படுவதும் இல்லை. ஒரு யுத்தக் களத்தில் சமாதான உடன்படிக்கை, அமைதி, ஆரவாரம், பரிசுகள் என எதிர்பார்ப்புகளோடு விடிகிறது ஆப்கானியப் பொழுதுகள். கடந்தவாரம் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது. ஆப்கானுக்கு அமைதி திரும்புமா என்பதே எல்லோரினதும் கேள்வியாகும். ஆப்கானின் வரலாறு, பிராந்திய நலன்களாலும் பேராசைகளாலும் ஆதிக்க…
-
- 0 replies
- 285 views
-
-
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி உட்பட அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இலங்கைத் தீவை நோக்கி விரைந்தன. இறுதியாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இலங்கைத் தீவுக்கான மூன்று நாள் (நவம்பர் 22-24) பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஆறு தசாப்த காலங்களுக்கு மேற்பட்ட இலங்கையின் இராஜதந்திர உறவுகள் வரலாற்றில், குறுகிய காலப் பகுதிக்குள் (சுமார் பத்து மாதங்கள்) அமெரிக்காவின் அதிஉயர் மட்ட அதிகாரிகள் அதிகமான பயணங்களை இலங்கைத் தீவுக்கு மேற்கொண்டமை இதுவே முதற்தடவை. இது, பூகோள அரசியல் – பொருளாதாரத்தில்…
-
- 0 replies
- 455 views
-
-
அமெரிக்க – சீன முறுகலும் இலங்கையின் வெளிவிவகார அணுகுமுறையும் - யதீந்திரா அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்களை இலங்கைக்கான சீனத் தூதரகம் வன்மையாக கண்டிதிருக்கின்றது. அமெரிக்க தூதுவரின் கருத்துக்கள் ராஜதந்திர நடைமுறைகளை மீறியிருக்கின்றது. மூன்றாம் நடானா இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவுகள் தொடர்பில் அமெரிக்கா தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கைக்கும் சீனாவிற்குமான உறவுகள் தொடர்பில் முடிவெடுப்பதற்கான சுதந்திரம் இலங்கை மக்களுக்குரியது. அதில் தலையீடு செய்ய அமெரிக்காவிற்கு அதிகாரமில்லை என்று, சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அமெரிக்…
-
- 0 replies
- 381 views
-
-
அமெரிக்க – மேற்குலக ‘பயங்கரவாதத்திற்கெதிரான போரின்’ தோல்வி: ஆப்கானிஸ்தான் Photo: Jim Huylebroek for The New York Times ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு யார் காரணம் என்ற அரசியல் பழி சுமத்தல்கள் தாரளமாக இணையத்தில் வெளிவரத்தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பைடன் தனது உரையில் அரசியல் பழி சுமத்தல் விளையாட்டை மிக சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார். அதற்கு இணையாக அவரது எதிர்த்தரப்பினரும் அவரை தாரளமாக பழி சுமத்தியுள்ளனர். 2010இல் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இராணுவ ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு 2010 அமெரிக்க மேற்குலக அரசின் அரசியல் – இராணுவ நகர்வு, ஆப்கானிஸ்தான் சார்ந்து மட்டுமல்ல, ஈராக்கிலும் தோல்வியைத் தழுவியுள்ளது என அம்பலப்படுத்திய போது, தோல்வியை ஏற்பதற்குப் பதிலாக ஆவணங…
-
- 0 replies
- 293 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலும், உலக அரசியல் சூழலும்: தமிழர்கள் அறிய வேண்டியவை என்ன? Oct 07, 2024 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை உலகின் எந்தப் பகுதியுமே இன்று தனித்தீவு அல்ல. மிக நெருக்கமாகப் பின்னப்பட்ட பொருளாதார வலைப்பின்னல் அனைத்து சமூகங்களையும் பிணைத்துள்ளது. நீங்கள் கேட்கலாம். இது புதியதல்லவே, உலகில் தூர தேசங்களிடையே வர்த்தகம் என்பது பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளதே என்று. உதாரணமாக, தமிழ்நாட்டில் ரோமப் பேரரசின் நாணயங்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இத்தகைய வர்த்தகப் பரிமாற்றங்கள் உள்நாட்டு பொருளாதாரத்தை, உள்ளூர் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பவையாக இருக்கவில்லை. ஏனெனில் பண்டங்கள் அனைத்தையும் தொலைதூரங…
-
- 0 replies
- 440 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் - மாறும் காட்சிகள் : ராஜாஜி ஸ்ரீதரன் வாக்குறுதிகளை நம்பி வேட்பாளர்களை வெற்றியடைச் செய்து மக்கள் எப்பொழுதும் தோல்வியை தழுவுவதே வழக்கமாகிவிட்ட தேர்தலில் முடிவுகள் எதிர்பார்ப்பது போன்றோ ஊகிப்பது போன்றோ எல்லா வேளைகளிலும் அமைந்து விடுவதில்லை. ஆற்றுலும் தகைமையும் கொண்ட பல போட்டியாளர்களிலிருந்து மிகச்சிறந்த ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை ஏற்படும் போதோ தலைமைப் பதவிக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் என்று மக்களால் கருத்தப்படுபவர்கள் தேர்தல் களத்தில் காணப்படும் போதோ முடிவை எதிர்வு கூற முடியாத நிலை ஏற்படும். இந்த பொதுவான அவதானிப்புக்கு உலகத்தலைமை நாடென்று கருதப்படும் அ…
-
- 0 replies
- 634 views
-
-
[size=4]பெரும்பான்மையான அமெரிக்க மாநிலங்கள் வரலாற்று ரீதியாக ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளன. எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தம் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் மாநிலங்கள் இம்முறையும் தமக்கே வாக்களிக்கும் என்று நம்புவார்கள். [/size] [size=4]எனவே தேர்தல் முடிவு எப்படி அமையும் என்பதை எஞ்சியிருக்கும் ஒரு சில மாநிலங்களே முடிவு செய்கின்றன. இந்த மாநிலங்கள், தேர்தல் 'போர்க்கள மாநிலங்கள்' என்று வர்ணிக்கப்படுகின்றன.[/size] [size=4]அதிபர் தேர்தல்கள், தேர்ந்தெடுப்போர் அவை ஒன்றைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கும், அதன் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வாக்குகள் தரப்படுகிறது. எ…
-
- 6 replies
- 1k views
-
-
உலக கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 6 ம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் உச்சக்கட்ட பிரச்சாரம் என்றெல்லாம் ஊடகங்கள் சொல்லிவருகின்றன. [size=3][size=4]ஆனால் உண்மையில் அமெரிக்கா போன்ற ஒரு தொழில் வளமான, முன்னேறிய நாட்டில், இந்த தேர்தல் என்ற ஜனநாயக நடைமுறை, இந்தியா அல்லது இலங்கை போன்ற, பின் காலனிய ஜனநாயக சமூகங்களைப் போலல்லாமல், சற்று வித்தியாசமாகவே நடக்கிறது.[/size][/size] [size=3][size=4]அமெரிக்க அதிபர் தேர்தல், பலரும் நினைப்பதைப் போல நேரடியான வாக்களிப்பு மட்டும் அல்ல. [/size][/size] [size=3][size=4]போட்டியிடும் வேட்பாளர், நாட்டின் ஒட்டு மொத்த பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை வாங்கினால் மட்டும் போதாது. அவர் , ம…
-
- 5 replies
- 1k views
-
-
அமெரிக்க அரசியல் கட்சிகளின், சின்னமாக... யானை, கழுதை வந்தது எப்படி? அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்பின் ஆட்சிக் காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படும் இடைத்தேர்தல் அந்நாட்டில் நடைபெற்றுள்ளது. 435 மொத்த உறுப்பினர்களைக்கொண்ட செனட்டில் காலியாக இருந்த 35 இடங்களுக்கு இடைத்தேர்தல் 6 ஆம் தேதி நடந்துள்ளது. இரு சபையிலும் மைனாரிட்டியாக இருக்கும் ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலில் சில இடங்களை ஜெயிக்கும் என கருதுகிறது. குடியரசுக்கட்சி ஏன் யானை சின்னத்திலும், ஜனநாயக்கட்சி ஏன் கழுதை சின்னத்திலும் போட்டியிட்டுவருகின்றனர் எனத் தெரியுமா? இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது.1874 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கார்ட்டூன்களின் தந்தை என வர்ணிக்கப்படும் தாமஸ் நஸ்ட் குடியரசு கட்சியின் 3வது முறை வெற்றி…
-
- 0 replies
- 587 views
-
-
அமெரிக்க ஆட்சிமுறை ஆட்டம் காண்கின்றதா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-27#page-8
-
- 0 replies
- 372 views
-
-
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுத்தால், சீனாவிடம் போய் உதவி கேட்போம் என்று கடந்தவாரம் ஒரு மிரட்டலை விடுத்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் போதிய கவனம் எடுத்து, விசாரணைகளை நடத்தாத நிலையில், இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய பின்னணியில், அமெரிக்காவில் மேலதிகப் பயிற்சிக்காக இலங்கை இராணுவத் தலைமையகத்தால், தெரிவு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்து விட்டது. 53வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றினார் என்பதற்காகவே, அவரை பயிற்சித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அமெரிக்க…
-
- 0 replies
- 585 views
-
-
அமெரிக்க - இந்திய போட்டிக்குள் இலங்கை! - ------------- *சஜித் ஜனாதிபதியாக இருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும்... *டில்லியின் திட்டத்திற்குள் அநுர வரவில்லையானால்...? *ஸ்ராலினுக்கு நோகாமல் நடத்தப்படட பேச்சு *ஜெயலலிதாவின் இன அழிப்புத் தீர்மானத்தை திமுக எதிர்க்கவில்லை அல்லவா? -- ---- ------- இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு. ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது. அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த …
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்றதான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை- சொல்வதும் சொல்லப்படாததும் பீரிஸ், மிலிந்தமொறகொட, பசில் ராஜபக்ச ஆகியோரின் திட்டங்கள் அரங்கேற்றம் போர் இல்லாதொழிக்கப்பட்டதொரு சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசு விரும்பும் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற முறையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சர்வதேச மனித உரிமைகள் தினம் அன்று வெளியிட்டுள்ள அறிக்கை தென்படுவதாக, அமெரிக்க- இலங்கைச் செயற்பாடுகளை அவதானிப்போர் கூறுகின்றனர். இலங்கை இராணுவத்தின் கீழ் நிலை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு பேருடைய தடைகள் மட்டுமல்ல…
-
- 0 replies
- 369 views
-
-
சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது என் வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க நாயகர்களின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்தது எனக்கு தெரியவந்தது. நான் வாசித்த கதைகளில் 99.99% வெள்ளையர்கள் தங்கள் மதியூகத்தால் செவ்விந்தியர்களை வெல்வதே முடிவாக இருக்கும். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் இயல்பாகவே அப்படி அமைந்துவிடுகிறதா, இல்லையென்றால் வரலாற்றைத் திரித்து கதைகளாக உருவாக்குகிறார்களா? என்ற கேள்வி எனக்கு எழும். 'ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்' என்ற மனநோய் எனக்கு இருக்கிறதா தெரியவில்லை, அக்கதைகளில் வில்லன்களாக சித…
-
- 1 reply
- 2.2k views
-
-
அனைத்துலக ரீதியில் காணப்படும் முதன்மையான 100 படைத்தளபாட உற்பத்தி நிறுவனங்களில் வருடாந்த ஆயுத விற்பனையில் 247 பில்லியன் டொலர் விற்பனையினை அமெரிக்க நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இது மொத்த ஆயுத விற்பனைத் தொகையில் 61.5 சதவீதமாகும். இவ்வாறு Inter Press Service - IPS இணைய ஊடகத்தில் அதன் ஆசிரியபீடத்தை சேர்ந்த Thalif Deen எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அதன் முழுவிபரமாவது, அனைத்துலக ரீதியிலான படைத்தளபாட உற்பத்தியாளர்களை எடுத்துக்கொண்டால் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவினைச் சேர்ந்த நிறுவனங்களே உலக சந்தையில் அதிக இடத்தினைப் பிடித்திருக்கின்றன. அதேநேரம் சீனா, இந்தியா, யப்பான், சிங்கப்பூர், தென்கொரியா, இஸ்ரேல், துருக்கி ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
நல்லதொரு சந்திப்பு. இப்படியான சந்திப்புக்கள் அடிக்கடி நடைபெற்று எமது மக்களின் துயரங்களை எடுத்துச் சொல்லி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார்? A.Kanagaraj எம்.எஸ்.எம். ஐயூப்இன்று அமெரிக்க ஜனாதிபதி; தேர்தல் நடைபெறுகிறது. அதாவது இன்று அமெரிக்க மக்கள் தமது நாட்டுத் தலைவரை மட்டுமல்லாது உலகிலேயே பலம் வாய்ந்த அரசியல் தலைவரை தெரிவு செய்ய வாக்களிக்கிறார்கள். இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. சட்டத்தில் கூறப்படாவிட்டாலும் பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் விருப்பப்படியே இலங்கையில் இந்தத் திகதி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் திகதியும் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் திக…
-
- 0 replies
- 906 views
-