அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
இது விளையாட்டு அல்ல; விபரீதமானது காரை துர்க்கா / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:49 அன்றைய காலங்களில், அரசியல் என்பது முற்றிலும் பொதுச் சேவையாகக் காணப்பட்டது. மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரித்துடையோர், முழுமையா(ன)க மக்கள் பணியாக, அரசியலை ஆரோக்கியமாக முன்னெடுத்து வந்தார்கள். கல்வி அறிவு, சமூகம் பற்றிய பார்வை, எதிர்காலம் பற்றிய தூரநோக்கு, எனது மக்கள் என்ற பற்று எனப் பல்வேறு விடயங்களைத் தன்னகத்தே கொண்டவர்களாகவும் பல பரிமானங்களை உடையவர்களாகவும், மக்கள் தொண்டுகளை அரசியல்வாதிகள் ஆற்றி வந்தார்கள். தமது மக்களுக்கு விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும், வாழ்ந்தும் காட்டினார்கள். ஆனால் இன்று, அரசியல் என்பது, தொழில் அல்லது வணிகமென மாறிவிட்டது. அல்லது மாற்றி வி…
-
- 0 replies
- 656 views
-
-
தமிழ்நெற் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான கோபிநாத் ஜெயச்சந்திரனுடனான செவ்வி.
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
நாடாளுமன்றில் பலகுரல்களில் பேசுதல்: சாத்தியங்களும் சவால்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 16 தமிழ் நாடாளுமன்ற அரசியல் பெரும்பாலும் ஏதோவோர் அந்தத்திலேயே இயங்கி வந்திருக்கிறது. ‘ஏக பிரதிநிதித்துவம்’, ‘கூட்டான மக்கள்தெரிவு’, ‘வலுவான பேரம்பேசல் சக்தி’ என்று காலகாலத்துக்குப் பெயர்களும் கோரிக்கைகளும் மாறினாலும் கடந்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனாலும் மாற்றுக் குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தன. அவை இணக்க அரசியலை ஒருபுறமும் எதிர்ப்பு அரசியலை மறுபுறமும் கொண்டதாக இருந்து வந்திருக்கிறது. இம்முறை நாடாளு மன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவ்வாறல்ல. தமிழ் மக்கள் எக்குரலுக்கும் வஞ்…
-
- 0 replies
- 828 views
-
-
ராஜபக்ஷர்களின் அரசியலை எதிர்கொள்ளுதல் ஓர் அரசியல்வாதிக்கும் (politician) ஓர் அரசியலாளுமைக்கும் (statesman) உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒர் அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்திக்கும்போது, அரசியலாளுமை அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கிறார்” என்கிறார் ஜேம்ஸ் க்ளார்க். சமகால இலங்கையின் தன்னிகரில்லா ‘அரசியல்வாதிகள்’, ராஜபக்ஷர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேவேளை, ஒருவகையில் பார்த்தால் அவர்கள், மிகச்சிறந்த அரசியலாளுமையும் கூட! ஏனென்றால், அவர்கள் அடுத்த தலைமுறையைப் பற்றியும் மிகத் தௌிவாகச் சிந்திக்கிறார்கள். ஆனாலென்ன, அது ராஜபக்ஷர்களினுடைய அடுத்த தலைமுறையாகவே இருக்கிறது; அவ்வளவுதான் வித்தியாசம். இதற்காகவே அவர்கள், தமக்கானதொரு கட்ச…
-
- 0 replies
- 604 views
-
-
வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா சம்பந்தன்? 'கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, 2016 ஆம் ஆண்டு முடிவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கியிருந்தார். இரா.சம்பந்தன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு முடிவதற்கு இன்னமும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல்க் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை இரா.சம்பந்தன், பின்னரும் அவ்வப்போது நினைவுபடுத்தியிருந்தார். அந்த வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியாது என்பது முன்னரே ஊகிக்கக்கூடிய விடயம்தான். ஏனென்றால், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் ஒரு பிரச்சி…
-
- 0 replies
- 500 views
-
-
எட்டிப்பார்த்தது புதிய கட்சி ரொபட் அன்டனி நாட்டின் அரசியல் களமானது தொடர்ச்சியாக சூடுபிடித்துக் கொண்டே போகிறது. என்றும் இல்லாதவாறு அரசியல் காய்நகர்த்தல்கள் அதிகரித்துச் செல்கின்றன. விசேடமாக மஹிந்த அணியினரின் புதிய கட்சி விவகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மிகவும் பரபரப்பாக முடுக்கிவிட்டுள்ளமை உள்ளிட்ட நகர்வுகளை காணமுடிகிறது. மஹிந்த அணியினர் கடந்த 20 மாதங்களாகவே புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான சமிக்ஞைகளை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது மஹிந்த அணியின் முக்கியஸ்தரான முன்னாள் வெ ளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புதுக்கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அதாவது எமது ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி என்று …
-
- 0 replies
- 330 views
-
-
வெறுப்பை நியமமாக்குதல் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில், வேட்பாளர் அல்லது கட்சி சார்பாகப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான குழுக்கள், "அதிகார மாற்றத்துக்கான பிரிவு" என்ற பிரிவொன்றையும் கொண்டிருக்கும். அப்பிரசாரக் குழு, அதிகாரத்துக்கு வந்தால், ஆட்சியமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பின்புலத்தில் மேற்கொள்வதே, அப்பிரிவின் தேவை. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்பின் அவ்வாறான பிரிவுக்கு, நியூ ஜேர்சியின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி தலைமை வகித்தார். ஆனால், வாக்கெடுப்புத் தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அந்தப் பிரிவின் நடவடிக்கைகளைக் மட்டுப்படுத்தி, தேர்த…
-
- 0 replies
- 340 views
-
-
புதிய அரசியலமைப்பைப் பற்றி பல சந்தேகங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மலர்ந்த புத்தாண்டில் நாடு புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளும் என, அரசாங்கம் நடந்து முடிந்த 2016 ஆம் ஆண்டில் பல முறை கூறியிருக்கிறது. அத்தோடு அந்தப் புதிய அரசியலமைப்பு, இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணும் எனக் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதேவேளை, மேலும் நான்கு நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்கு இரண்டு ஆண்டு பூர்த்தியாகிறது. ஆனால், கடந்த வருடம் இடம்பெற்ற சில சம்பவங்களே, அந்த உத்தேச அரசியலமைப்பைப் பற்றிப் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன. அரசியலமைப்…
-
- 0 replies
- 341 views
-
-
பயங்கரவாதம்: சுருக்கக் குறிப்புகள் சச்சிதானந்தன் சுகிர்தராஜா பயங்கரவாதம் ஒரு பண்புப் பெயர் அல்ல. நம் வாழ்வில் நாளாந்தம் அனுபவிக்கும் கொசுக் கடி, மின்சார வெட்டுபோல் உயிர்த்தோற்றமுள்ள ஒரு மெய்மை என்றுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு நகரின் தெருவிலோ அல்லது சந்தையிலோ அரசியல், மத, கருத்தியல் காரணங்களுக்காகக் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கும். ஐந்து வார இடைவெளியில் இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள். ஒன்று அமெரிக்காவின் பொஸ்டன் நகரம். மற்றது ஐக்கிய ராச்சியத்தின் லண்டன். ஐக்கிய ராச்சியத் தெருக்களுக்குப் பயங்கரவாதம் 9/11க்குப் பிறகு வந்ததல்ல. இஸ்லாமிய குண்டுதாரிகளுக்கு முன்பு 70களிலும் 80களிலும் ஐரிஷ் விடுதலை இயக்கமான ஐ ஆர் ஏ …
-
- 0 replies
- 605 views
-
-
இம்முறையும் ஏமாற்றிவிடவேண்டாம் ரொபட் அன்டனி புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலை மையை காரணம் காட்டி தமிழ் பேசும் மக் களுக்கான தீர்வுத் திட்டத்தை குழப்பியடித்து விடக்கூடாது. மக்களுக்கான நீதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கையில் நீண்ட கால விவகாரமான அரசியல் தீர்வு செயற் பாட்டில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். சுய அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு புதிய அரசியலமைப்பு விடயத்திலும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் எந்தவொரு தரப்பும் செயற்பட்டு விடக்கூடாது நாட்டின் அரசியல் நகர்வுகள் மற்றும் அரசியல் கட்ச…
-
- 0 replies
- 257 views
-
-
தமிழரசுக் கட்சியை... காப்பாற்ற முடியுமா ? நிலாந்தன். கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடந்த இரண்டு ஊடகச்சந்திப்புகள் நமக்கு எதை உணர்த்துகின்றனவென்றால் கூட்டமைப்புக்குள் மட்டுமில்ல தமிழரசுக் கட்சிக்குள்ளும் குழப்பம் என்பதைத்தான். இரண்டு கடிதங்களை அனுப்பப்போய் கூட்டமைப்பு குழம்பிப் போயிருக்கிறது என்பது சரியா? இல்லை.கூட்டமைப்பு ஏற்கனவே குழம்பித்தான் இருக்கிறது. ஆனால் இந்த கடிதங்களால் அந்தக் குழப்பம் வெளிப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.கூட்டமைப்பு ஏன் குழம்பி காணப்படுகிறது? ஏனென்றால் அது ஒரு வலிமையான கூட்டாக இல்லை. அது இதுவரையிலும் பதிவு செய்யப்படாத ஒரு கூட்டு.அதற்கென்று பலமான ஒரு யாப்பு இல்லை. அதற்கென்று ஒரு பொது வங்கிக் கணக்கு இல்லை .அதற்கு காரணம் …
-
- 0 replies
- 578 views
-
-
-
- 0 replies
- 924 views
-
-
பாரம்பரியங்களும் சட்டங்களும் எதிர்காலமும் இந்திய வரலாற்றில் மாத்திரமல்ல, அண்மைக்கால உலக வரலாற்றிலும், மிக முக்கியமான தீர்ப்பொன்றை, இந்திய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் வழங்கியிருக்கிறது. ‘முத்தலாக்’ என்று அழைக்கப்படுகின்ற விவாகரத்து முறை, இந்திய அரசமைப்புக்கு முரணானது எனவும், அந்நடைமுறையைத் தடை செய்வதாகவும், அந்நீதிமன்றம் அறிவித்தது. இது, மிகவும் முக்கியமான தீர்ப்பாக அமைந்தது. அதைவிட, எதிர்காலத்தில் பல முக்கியமான தீர்ப்புகளுக்கான முன்னோடியாகவும் கூட, இது அமையக்கூடும். இதனால்தான், இது பற்றியும் இதைப் போன்ற வேறு சில விடயங்கள் பற்றியும் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ‘முத்தலாக்’ என்ப…
-
- 0 replies
- 325 views
-
-
சம்பந்தனின் கோரிக்கையும் எதிரணியின் நிலைப்பாடும் தமிழ் மக்களின் இறைமையின் அடிப்படையில் உள்ள சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய அரசியல் தீர்வு காண்பதே எமது குறிக்கோளாகும். அதனை அடையும் இலக்குடன் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கின்றோம். அதனை அடைந்துகொள்வதற்கு மக்கள் ஓரணியில் திரண்டு உறுதியாக இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய சூழலில் மக்களுடைய தீர்மானம் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் வெளிவரவேண்டியது அத்தியாவசியமானதாகும். அதனடிப்படையில் மக்கள் மிகவும் நிதானமாக சி…
-
- 0 replies
- 431 views
-
-
குழப்பத்தில் மக்கள்…..? ருத்திரன்- கடந்த 30 வருடகாலமாக தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதவழிப்போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளியவாய்கால் பேரவலத்துடன் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த மக்களின் அபிலாசைகளையும், உரிமைக் கோரிக்கைகளையும், அவர்களுக்கான தேவைகளையும் தொடர்ந்தும் முன் கொண்டு சென்று அதனை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் தோள்களில் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் யுத்தம் முடிவடைந்து கடந்த எட்டரை ஆண்டுகளில் அதன் நகர்வுகள், செயற்பாடுகள் என்பன எவ்வாறு அமைந்திருக்கின்றது என்ற கேள்வி உள்ளது…? அவர்களின் தற்போதைய நகர்வு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வழிவகுக்குமா என்ற கேள்வி…
-
- 0 replies
- 708 views
-
-
தென்னிலங்கையின் குழப்ப நிலையும் கூட்டு அரசாங்கத்தின் எதிர்காலமும் யதீந்திரா நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் அரசியல் அதிகாரத்தில் இருந்த அனைத்துத் தரப்பினருக்குமான நெருக்கடியாக மாறியிருக்கிறது. இப்படியொரு நெருக்கடி இலங்கையின் அரசியல் அவதானிகள் எவராலும் கணிக்கப்படாத ஒன்று. இலங்கையின் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வந்த அமெரிக்க இந்திய தரப்பினரிடம் கூட இவ்வாறானதொரு கணிப்பு இருந்திருக்குமென்பது சந்தேகமே. புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியான ஊடகச் செய்திகளிலும் மகிந்த இரண்டாம் நிலையில் வரக் கூடுமென்றே கணிப்பிடப்படிருந்தது. ஆனால் இறுதியில் அனைவரது கணிப்புக்களும் பொய்பிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மகிந்த தனது கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்…
-
- 0 replies
- 282 views
-
-
ஐதேக வாக்குகளைச் சுரண்டிய மைத்திரி அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான அதிகாரப் போராட்டமானது இருவரையும் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளதுடன் இவ்விருவரினதும் நீண்டகால அரசியல் மூலோபாயங்களின் வரையறைகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற அதிகாரப் போட்டியானது சிங்கள பௌத்த இனவாதம் நாட்டில் தலைவிரித்தாடுவதற்கும் நாட்டில் வன்முறைகள் ஏற்படுவதற்குமான போலித்தனமான வெற்றியைக் கொடுத்துள்ளது. எனினும், பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய அரசாங்கத்தில் நிலவும் ஒற்றுமையின்மை வெளிப்படுத்தப்பட்டமை மக்கள் இலகுவாக மறந்துவிட முடியாது. இத்தேர…
-
- 0 replies
- 456 views
-
-
ஊழல் என்பது இலங்கை அரசியலில் புற்றுநோயாக மாறியுள்ளது - கலாநிதி ஜயதேவ உயன்கொட By NANTHINI 15 DEC, 2022 | 10:51 AM (ஆர்.ராம்) இலங்கையின் அரசியலில் ஊழல் புற்றுநோயாக உருவெடுத்துள்ளதோடு, அது ஜனநாயக கட்டமைப்புக்களையும் வெகுவாக தாக்கியுள்ளது என்று கலாநிதி ஜயதேவ உயன்கொட தெரிவித்தார். இலங்கையில் ஊழலுக்கு எதிராக போராடி வரும் ட்ரான்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் இரு தசாப்த நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஊழலுக்கு எதிரான தேசிய மாநாடு நேற்று புதன்கிழமை (டிச. 14) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ம…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
காலனித்துவ ஆட்சிக்கு பின்னனா இலங்கையின் அரசியல் வரலாறு என்பது மிகவும் வினோதமானது. இலங்கையின் சிங்கள அரசியலை தேரவாத பௌத்தத்தைக் கோட்பாட்டின் அடித்தளத்திலிருந்தும், புவிசார் அரசியல் கண்ணோட்டத்தினுாடகவும் நோக்குவது அவசியமானது. மகாவம்சம் என்ற ஐதீக கதையிலிருந்து கட்டமைக்கப்பட்ட 'தம்மதீப' கோட்பாட்டினை மையப்படுத்தியே சிங்கள தலைவர்கள் தமக்கிடையிலான அரசியல், பொருளியல், வர்க்க, பதவி போட்டிகளையும் பிரச்சனைகளையும் அணுகுகின்றனர். பொதுவாக ஆதிக்கப் போட்டிகள் ஏற்படுகின்ற போது அதனைத் தமிழருக்கு எதிரான அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதமாக மடைமாற்றி அரசியற் படுகொலைகளை நிறைவேற்றி தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வர். பௌத்தத்தின் வரலாறு இத்தகைய போக்கு இலங்கையி…
-
- 0 replies
- 1.1k views
-
-
அகிம்சை வழியிலான போராட்டம்- இந்த நாட்டுக்குப் பொருந்துமா? பதிவேற்றிய காலம்: Oct 20, 2018 அகிம்சை வழியிலான போராட்டங்களில் தமிழர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருந்தால் அவர்கள் தமது உரிமைகளைப் பெற்றிருக்க முடியுமெனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டிருக்கிறார். தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அகிம்சை தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டமை கவனத்துக்குரியது. மனித தர்மத்தில் அகிம்சைக்கு எப்போதுமே உயர்ந்த இடமுள்ளது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அகிம்சை வழியில் அதை அணுகும்போது பாதிப்புக்களுக்கு இடமிருக்காது. அகிம்சை வழியிலான போராட்டம் எனும்போது முத…
-
- 0 replies
- 486 views
-
-
தேசிய அரசாங்கம் மக்களை ஏமாற்றும் பொறிமுறை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 பெப்ரவரி 06 புதன்கிழமை, மு.ப. 01:35 Comments - 0 தேசிய அரசாங்கம் என்ற போர்வையில், அரசாங்கம் உண்மையிலேயே மேலும் பலருக்கு, அமைச்சர் பதவிகளை வழங்கவே போகிறது என்பது, பொதுவாக, நாட்டில் சகலரும் அறிந்த விடயமாகும். அது, எல்லோரும் அறிந்த விடயம் என்பதை, அரசாங்கமும் அறிந்த நிலையில், எல்லோருக்கும் அது தெரியும் என்பதை, தமக்குத் தெரியாது என்பதைப் போல் பாசாங்கு செய்து கொண்டு, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசாங்கம் முயல்கிறது. எல்லோரும் மோசமானது என அறிந்திருக்கும் ஒரு விடயத்தை, அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதைத் தாமும் அறிந்திருக்கச் செய்வதானது, வெட்கமின்மை தவிர வேறொன்றுமல்ல. தேச…
-
- 0 replies
- 863 views
-
-
தமிழர் மத்தியில் உணரப்பட்டுவரும் பலமான சிவில் அமைப்பின் தேவை -க. அகரன் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைப்பாடுகளை நாடி பிடித்து உணர முடியாத வகையில் இருப்பதான தோற்றப்பாட்டில், பல தமிழ் அரசியல் தலைமைகள் இருப்பதை உணர முடிகின்றது. தாம் எதிர்பார்த்த அரசியல் தலைமைத்துவத்தின் தோல்வி, அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கப்போகும் கட்சி என்பவற்றை ஆராய்கின்ற மன நிலையையும் கடந்து, தமது இருப்பு தொடர்பான தேடலுக்கே, தமிழ் அரசியல் தலைமைகள் தற்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. எப்போதுமில்லாத அளவுக்கான மாறுபட்ட அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாக உணரத் தொடங்கியுள்ள தமிழ் அரசியல் தலைமைகள், புதிய கூட்டுகளை உருவாக்கவும் அவற்றினூடாக வரப்போகும் தேர்தல்களைச் ச…
-
- 0 replies
- 380 views
-
-
உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும் Veeragathy Thanabalasingham on April 29, 2025 Photo, @anuradisanayake உள்ளூராட்சி தேர்தல்களுக்கு இன்னமும் எட்டு தினங்கள் இருக்கின்றன. ஏழு மாதகால இடைவெளியில் மூன்றாவது தேர்தலை எதிர்கொள்வதனால் போலும் மக்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தைக் காணமுடியவில்லை. கடந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களை விடவும் குறைவான தொகையினரே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார்கள். உள்ளூராட்சி தேர்தல்களில் மேலும் குறைவான எண்ணிக்கையில் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளக்கூடிய சாத்தியமே இருக்கிறது. மக்களின் மனநிலைக்கு அப்பால் நாடடின் தற்போதைய மிகவும் கடுமையான வெப்பநிலையும் கூட இதற்கு பெருமளவில் பங்களிப்புச் செய்யக்கூடும். ஆளும் தேசி…
-
- 0 replies
- 284 views
-
-
வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் அவர்கள் கைது செய்யப்பட்ட விடயம் தமிழ் மருத்துவர் களை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது. இலங்கையில் மருத்துவப் பட்டத்தை நிறைவு செய்கின்ற தமிழ் வைத்தியர்கள் இந்த மண்ணில் இருந்து சேவையாற்றுவதற்கு விருப்பமில்லாது நாட்டைவிட்டு வெளியேறி இருக்கின்ற சூழமைவில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான தமிழ் மருத்துவர்களே தாம் பிறந்த மண்ணிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடு பணிபுரிந்து வருகின்ற இவ்வேளையில், தமிழ் மருத்துவர்களை நோக்கிய படைத் தரப்பின் சந்தேக பார்வை, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த நாட்டின் ஒட்டுமொத்த சமூகமும் புரிந்து கொள்வது அவசியம். வட மாகாணம் முழுவதிலும் மருத்துவர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கின்ற போது, மருத்துவர்கள்…
-
- 0 replies
- 844 views
-
-
இலங்கையை பல்லின சமூக ஜனநாயகமாக மறுசீரமைப்புச் செய்வது சாத்தியமானதா ? இலங்கை வெளியுறவு அமைச்சின் ஆலோசகராக இருக்கும் ஹரிம் பீரிஸ் அண்மையில் ‘ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் ‘ஐக்கிய தேசியக்கட்சியினதும் மகாநாடுகளும் தேசிய அரசாங்கக் கோட்பாடும்’ (The SLFP and UNP Conventions and ideology of National government) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையொன்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்தது. அதில் அவர் தற்போது முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் ஜனாதிபதியின் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் (President’s office of National unity and Reconciliation) உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் கலா…
-
- 0 replies
- 452 views
-