Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. வடக்கின் வசந்தம் வன்னியை வளப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ஒரு புதுயுகம் படைத்துக் கொண்டிருப்பதாகத் தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அது போர் இடம்பெற்ற காலம். கிளிநொச்சி வளர்ந்து வரும் ஒரு நகரமாக உருப்பெற்றிருந்த நாள்கள். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகங்கள் அத்தனையும் அங்குதான் மையம் கொண்டிருந்தன. அப்போது அங்கே அகன்ற அழகான ஏ9 வீதி இருக்கவில்லை. ஓங்கி உயர்ந்த கட்டடங்கள் இருக்கவில்லை. பிரதான வீதியால் பறக்கும் நவீன வாகனங்களையோ பெரும் கனரக வாகனங்களையோ காணமுடியாது. எனினும் நகரம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். கிபிர் வரப் போகும் முன்னறிவிப்பு விசில் அடித்ததுமே மக்கள் ஆங்காங்கே இருக்கும் பதுங்கு குழிகளுக்குள் இறங்க…

    • 0 replies
    • 909 views
  2. இலங்கை இனப்பிரச்சினை முதலும் கடைசியுமாக ஒரு பிராந்தியப் பிரச்சினைதான். இரண்டாவதாகத் தான் அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை. சுமாராக கால் நூற்றாண்டுக்கு முன்பு இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாகியபோது அது ஒரு பிராந்தியப் பிரச்சினையாகவே காணப்பட்டது. அதன் பின் நிகழ்ந்த திருப்பகரமான மாற்றங்களால் அது அதன் தர்க்க பூர்வ விளைவாக ஓர் அனைத்துலகப் பிரச்சினையாக மாறியது. அதில் முதலாவது திருப்பம், ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை. அதன் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதோடு அதன் உயர் தலைவர்கள் இருவரும் இந்தியாவில் சட்டப்படி தேடப்படும் குற்றவாளிகளாகினர். எனவே, ரஜீவ் வழக்கிலிருந்து தொடங்கி புலிகள் இயக்கத்திற்கும் புதுடில்லிக்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டு உரு…

    • 0 replies
    • 582 views
  3. சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன? ஒன்றுமே இல்லாத இடத்தில், இது பரவாயில்லை என்கிற விதத்தில், அமெரிக்காவின் தீர்மானம் குறித்து, சில அமைப்புக்கள் ஆறுதலடைகின்றன . 'இதில் ஒன்றுமே இல்லை' என்பதை இவர்கள் எப்போதும் புரிந்து கொள்ளப்போவதுமில்லை. இலங்கை மீது தீர்மானம் கொண்டு வந்தாலே போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்பவர்கள், பூகோள அரசியலைப் புரிந்து கொள்ள விரும்பாத நாற்காலிக் கனவான்கள் என்று இலகுவில் சொல்லிவிடலாம். அமெரிக்கா சமர்ப்பித்த நகல் தீர்மானத்தில், நவநீதம் பிள்ளை அம்மையாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் 'சர்வதேச சுயாதீன விசாரணை' என்கிற சொல்லாடலை இணைத்தவுடன், அமெரிக்கா அதனை ஏற்றுக்கொண்டுவிட்டது என சில நுனிப்புல் மேய்வோர் ஆர்ப்பரிக்கத…

  4. சிறிலங்கா அரசாங்கம் கால காலமாக இலங்கை ஜனநாயக நாடு இங்கு வாழும் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் எனக் கூறி வந்தாலும், உண்மையாக நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று தான் அண்மைக் காலங்களாக இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜனநாயக நாடு எனில் அந்நாட்டில் வாழும் மக்கள் அங்கு சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும், சுதந்திரமான முறையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுந்தந்திரம் வழங்கப்படும். ஆனால் சிறிலங்காவில் அப்படி ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழ் மக்களுக்கு அவ்வாறான ஜனநாயக சுதந்திரத்தை வழங்க இந்த அரசு தயாராக இல்லை. காணமால் போனவர்களை கண்டுபிடித்து தருமாரு கோரி கொழும்பில் கனவயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தத் தி…

    • 0 replies
    • 618 views
  5. இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது. இதே இந்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தியாகதீபம் திலீபன் அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது... தனது கட்டுக்குள் அடங்க மறுத்த சிங்கள ஆட்சியாளர்களை அடிபணிய வைக்கும் நுழைவாயிலாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்ட இந்திய காங்கிரஸ் ஆட்சியாளாகளது கோர முகம் ஈழத் தமிழர்களுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது. சமாதானப் படை என்ற பொய் முகத்தோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்தியப் படைகள் மெல்ல, மெல்லத் தங்களது இலக்கினை …

    • 3 replies
    • 615 views
  6. என்ன செய்யப்போகிறது இந்தியா? பா. செயப்பிரகாசம் ஞாயிறு, 10 மார்ச் 2013 14:56 தயிரையும் தின்னுட்டு இழுகிட்டும் போகுமோ? 2009, மே 18-வரை இலங்கை நடத்திய சாட்சியமற்ற படுகொலைகள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை“ என்ற கதையாக ஒவ்வொன்றாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன. “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்“ எனும் தந்திரவலை விரித்து இராசபக்ஷேக்கள் கட்டு மீறி நடத்திய கொலை வியாபாரம், 2009 மே முடிய அமோக விற்பனையானது. இப்போது விற்பனை அவர்களின் கை மீறிப்போய், மனித உரிமைமீறல், போர்க்குற்றம் என்ற புள்ளிகளையும் தாண்டி இனப்படுகொலை…

  7. நண்பர்களுக்கு... பின்வரும் கட்டுரைகள் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நா.சண்முகதாசன் மற்றும் மாவோவின் கலாசாரப்புரட்சி ஜே வி பியிலிருந்து பிரிந்து சோசலிச முன்ணி மற்றும் ஆயூதப் போராட்டங்கள் தொடர்பான குறிப்புகளைக் கொண்டவை.... இது தொடர்பான உங்கள ;விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்..... சற்றுப் பெரிய கட்டுரைகளே.... ஆகவே நேரமிருக்கும் பொழுது வாசித்து கருத்துக் கூறவூம்... நன்றிகள் நட்புடன் மீராபாரதி மேலும் வாசிக்க... என்.சண்முகதாசன் – தத்துவமும் கோட்பாடும் நடைமுறையும்…? – பகுதி 2 இன்றைய சூழலில் சண்முகதாசனின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் என்ன கற்கின்றோம் என்பதே முக்கியமானது…. இவரது கருத்துக்களும் செயற்பாடுகளும் அதாவது தத்துவமும் நடைமுறையும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று ப…

    • 1 reply
    • 528 views
  8. 2001 பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு ரகசியமாக, திடீரென தூக்கிலிடப்பட்டதன் அரசியல் விளைவுகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? மத்திய சிறை எண் 3-இன் கண்காணிப்பாளரால், அதிகார வர்க்கத்தின் இரக்கமற்ற மொழியில், ஒவ்வொரு பெயரிலும் புண்படுத்தும் பிழைகளுடன் எழுதப்பட்ட அந்தக் கடிதம் ”திருமதி. தபசும் க/பெ சிறீ அப்ஜல் குரு” வுக்கு எழுதப்பட்டுள்ளது. “சிறீ முகமது அப்ஜல் குரு த/பெ ஹபிபுல்லாவின் கருணை மனு கனம் பொருந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. எனவே முகமது அப்ஜல் குரு த/பெ ஹபிபுல்லாவின் தூக்கு தண்டனை 09/02/2013-ல் நிறைவேற்றப்படவுள்ளது. இது உங்கள் தகவலுக்கும், தேவையான மேல் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.” இக்கடிதம் தபசுமிற்கு தாமத…

  9. அரசே எங்கள் மகள் காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறு அரசே.... பதில் கூறு.., வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்திச் செல்வதும் அரசாலே.., குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் தா... தடுத்து வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடு, எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தா.., அனுமதி தா..., எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தந்துவிடு... இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு...,எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில் தானா!!! இனியாவது எங்களை நிம்மதியாக வாழவிடு .. இந்தப் புலம்பல்கள் எல்லாம் எதற்காகவென்று நினைக்கின்றீர்களா.... வோறொன்றும் இல்லை. காணாமல் போன உறவுகளின் உள்ளக் குமுறல்களே இவை. …

    • 0 replies
    • 902 views
  10. அமெரிக்க, இந்தியப் பெருங்கவனம் இலங்கை நோக்கி எப்போது திரும்பும்? தத்தர் சர்வதேச அரசியலில் தன் சொந்தக் கால்களில் நிற்கும் அரசென்று எதுவுமில்லை. இன்றைய ஒற்றை மைய உலக அரசியலில் அமெரிக்கா அதிக வல்லமை வாய்ந்த அரசாக இருக்கின்றபோதிலும், அது தனக்காக கூட்டாளிகளைக் கொண்டிருப்பதிலும் மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்களைக் கையாள்வதிலுமே தனது முதன்மையைப் பேணுகின்றது. அமெரிக்காவுக்கு உடனடிச் சவால் மத்திய கிழக்கு எனப்படும் மேற்கு ஆசியப் பகுதியாகும். அதனது இரண்டாவது சவால் சீனாவாகும். மூன்றாவது நிலையிலேயே ரஷ்யா காணப்படுகின்றது. ரஷ்யாவின் ராணுவ பலம் அமெரிக்காவுக்கு சவால் விடக்கூடியதாக இருந்தாலும் அது அரசியல் பொருளாதார நிலையில் சர்வதேச ரீதியில் பலயீனமானதாக உள்ளது. அமெரிக்கா தன்னுடைய எதிர…

  11. சேனல் நான்கின் அறம் - யமுனா ராஜேந்திரன் சேனல் நான்கு அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும், அமெரிக்க, பிரித்தானிய அரசுகளிடம் அதற்காக சேனல் நான்கு நிதிபெறுவதாகவும், அதிலிருந்தே இத்தகைய ஆவணப்படங்கள் எடுப்பதாகவும் 'மார்க்சீயர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்' எனத் தம்மைக் கோரிக் கொள்பவர்கள் கூச்சநாச்சமின்றி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். சானல் நான்கு ஒரு பொதுநிறுவனம். அது அரசிடமிருந்து எந்த விதமான நிதியும் பெறுவது இல்லை. 2007 ஆம் ஆண்டு அது கடுமையான நிதி நெருக்கடியில் வீழ்ந்தபோது, அன்றைய பிரித்தானிய சட்டத்தின்படி, அரசு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் லைசென்ஸ் கட்டணத்தில் இருந்து அதனது மீட்புக்காக ஒரு தொகை வழங்கியது. பிற்பாடாக, பிரித்…

    • 1 reply
    • 795 views
  12. எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் - பௌத்த அச்சம் எம். ரிஷான் ஷெரீப் இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக்கூடிய பிரிவினைவாதச் சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறிவைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. இந்நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்தங்களுக்குள் முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள் என்னும் அச்சம் இனவாதச் சக்தி களைப் பெருமளவில் அச்சுறுத்தி யிருக்கிறது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முஸ்லிம்களை அடக்…

  13. ஜெனீவாவில் என்ன காத்திருக்கிறது? நிலாந்தன் 04 மார்ச் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஜெனிவாவிற்கு போகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் போகிறது. கொழும்பிலிருந்து ஜெனிவாவை படம் பார்ப்பதை விடவும் அரங்கில் நேரடியாக இறங்குவது ஒப்பீட்டளவில் நல்லமுடிவு. ஆகக் குறைந்த பட்சம் நிலைமைகளை ஓரளவிற்காயினும் நொதிக்கச் செய்ய இது உதவும். அப்படிப் பார்த்தால் கடந்த ஆண்டிலிருந்து இவ்விரு கட்சிகளும் ஏதோவொரு பாடத்தைக் கற்றிருக்கின்றன என்ற முடிவுக்கு வரலாமா? கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நீர்த்துப் போகுமென்று தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. ஜெனிவா மாநாடானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின் …

    • 1 reply
    • 738 views
  14. சாவேஸ் என்ற சகாப்தமும் சோசலிசப் புரட்சியும் : சபா நாவலன் நாம் வாழும் நூற்றாண்டில் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரக்கரங்களிலிருந்து ஒரு அங்குலம் கூட நகரமுடியாது என்று அச்சம் உலகதின் ஒவ்வொரு மனிதனிடமும் குடிபுகுந்திருந்த வேளையில் அமரிகாவின் கொல்லைபுறத்தில் நெஞ்சை நிமிர்த்தி தனது நாட்டின் மக்களுக்காக வாழ்ந்த தனிமனிதன் ஹூகோ சாவேஸ். வெற்றிகரமான தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை செயற்படுத்திக்காட்டியவர். ஏகாதிபத்திய நலனுக்கு உலகில் திரும்பிய திசைகளிலெல்லாம் மனிதர்கள் கோழைத்தனமாக மண்டியிட்ட போது, தனி மனிதனாக உலகில் மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தவர். ஹூகோ சாவேஸ் என்ற சகாப்தம் 05.03.2013 அன்று தன்னை இடைநிறுத்திக்கொண்டது. இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரனின் இறுதி மூச்சு அதிகால…

    • 1 reply
    • 818 views
  15. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் உள்ளேயும் வெளியேயும் சூடான வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்று வருகிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அதிகாரபூர்வ கூட்டத்தொடருக்குப் புறம்பாக, பக்க நிகழ்வுகளும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா வளாகத்திலேயே நடைபெறுவதுண்டு. கடந்தமுறை இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தைத் தோற்கடிக்க பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தது. அதற்காகப் பல பக்க நிகழ்வுகளை இலங்கை அரசாங்கம் ஒழுங்கு செய்திருந்தது. தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா உலக வல்லரசாக இருந்த போதிலும், உலக வரைபடத்தில் எள்ளளவு சிறிய நாடான இலங்கை, அப்போது அமெரிக்காவுடன் கடுமையான இராஜதந்திர மோதலில் ஈடுபட்டது. தனக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டுவதற்காக சீனா, ரஷ்யாவின் துணையுடன் இலங்கை எல்லா முயற்…

  16. தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. ‘பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். இந்த பல்துறை சார்ந்த அனேக படைப்புக்கள் இன்னும் நூலா…

    • 0 replies
    • 680 views
  17. அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணையும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும் வியாழக்கிழமை, 07 மார்ச் 2013 17:23 ‘எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது, முழு உலகமுமே கவலை கொள்ளலாம், கண்டனங்கள் தெரிவிக்கலாம், கண்ணீர் வடிக்கலாம். ஆயினும், எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது சுதந்திரத்தை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு, விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது என்பதை, நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழீழத்தின் தேசியத் தலைவர் தீர்க்கதரிசனமாகக் கூறிய வார்த்தைகளை இன்று நாம் கண்கூடாக நிதர்சனமாகக் காண்கின்றோம். சனல்-4 மீண்டும் ஒரு தடவை தமிழர்களின் அழிவுகளை ஜெனீவாவில் ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கின்றது. No fire Zone ஆவணப்படத்தைப் பார்த்த பல நாட…

    • 3 replies
    • 740 views
  18. ஈழத் தமிழர்கள் மீதான அடுத்த பெரும் தாக்குதல்! எந்த ஒரு பிரச்சினையையும் அதன் தொடக்கத்தில் தீர்க்காமல், அது புண்ணாகி, புரையோடி, பாதிக்கப்பட்ட உறுப்பையே எடுத்தால்தான் உயிரையே காப்பாற்ற முடியும் என்கிற அளவுக்குக் கொண்டு போய்விட்டு, அதன் பின் களிம்பு பூசுவதில் வல்லவர்கள் இந்திய அரசியலாளர்கள். அதன் பிறகு, அந்தக் களிம்பு தடவியதையே பெரிய சாதனையாகப் பேசி வாக்குக் கேட்டு வருவார்கள். உறுப்பையே எடுக்க வேண்டிய நேரத்தில் மருந்து பூசுவது உதவியில்லை, உயிர்க்கொலை என்பதைப் புரிந்து கொள்ளாத நம் மக்களும் இளித்துக் கொண்டே வாக்கை அள்ளித் தருவார்கள். எல்லாத் தேர்தல்களிலும் காலங்காலமாக நடக்கும் இந்த அரசியல் விரச நாடகத்தை இந்த முறை பன்னாட்டு அளவில் பிரம்மாண்டமாக அரங்கேற்ற இந்திய அரசு எடுத்து…

    • 0 replies
    • 839 views
  19. பாகிஸ்தான் பிரிந்து போனதற்கு யார் காரணம்? முகநூலில் இந்துத்துவ சிந்தனை கொண்ட நண்பர்கள் எங்கள் மீது பல அவதூறுகளை சொன்னார் பாகிஸ்தான் பிரிவினைக்கு இங்குள்ள முஸ்லிம்கள் காரணம் என்கிற வாதத்தை முன் வைத்தார் அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக சரியான செய்தியை அனைவருக்கும் அறிய வைத்து வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதற்காக இந்த பதிவு. இந்து – முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்.. கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டாலும் இந்த 10-ஆம் நூற்றாண்டு காலக் கட்டத்தில் இந்து – முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் ஒரு பகுதியிலும் கூட காண இயலாது. ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் த…

    • 0 replies
    • 3.7k views
  20. எம் உதடுகள் புன்னகை மறந்த மரணச்சுவட்டின் பொசுங்கல் மணம் சூழ் நாட்களின் நான்காம் வருடம் வேகவேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எப்போது நினைத்தாலும் அழுதுதீர்த்துவிட முடியாத இந்நூற்றாண்டின் பெருஞ் சோகத்தை நெஞ்சில் தாங்கியுள்ள தமிழ்ச் சாதிக்கான, நீதி தாமதிக்கப்படுவதை உலகதேசங்கள் தமக்கான சுயநலத்தின் தேவைகளுக்காக மட்டுமே கையாளும் சோகமே, கடந்து போன வருடங்கள் யாவற்றிலும் நிகழ்ந்து முடிந்தது. போர் முறைகளைத் தாண்டியும், நன்கு திட்டமிடப்பட்ட இனவழிப்பின் சோகத்தை, ஆதியோடு அந்தமாய் சொல்லக் கேட்ட பின்னர், இடையிடையே தத்தமது பிராந்திய நலன்களை இடைச்செருகி, உலக சாசனங்களை மேற்கோள் காட்டுவதுடன் தமது வேலைமுடிந்துவிட்டதாக எழும்பிப் போன சர்வதேச நண்பர்களே, இற்றை வரைக்குமான எமது சம்பாத்தியம்…

    • 0 replies
    • 579 views
  21. இனப்படுகொலை செய்த இலங்கை அரசை காப்பாற்ற முனையும் அமெரிக்கா? பொன்.சந்திரன், , கோவை. ஞாயிறு, 03 மார்ச் 2013 22:17 ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கின்ற (பிப்ரவரி - மார்ச் 2013) ஐ.நா அவையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையில் நடைப்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விவாதம் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் சானல் 4 தொலைக் காட்சியின் மனித உரிமை பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குனருமான கெல்லன் மெக்ரி அவர்களின் ஆவணப்படம் ("NO FIRE ZONE - THE KILLING FIELDS OF SRILANKA") பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்கு முன் KILLING FIELDS என்ற பெயரில் வெளி வந்த ஆவணப்படம் இன அழிப்புப் போரின் சில காட்சிகளை ப…

  22. இலங்கை தமிழர் பிரச்சினை தமிழகத்தில் "உணர்ச்சி பிழம்பாக" மாறியிருக்கிறது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகள் வெளியாக, தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாமே போராட்டக் களத்தில் வந்து நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, "இது மனிதாபிமானமற்ற செயல்" என்று பாதயாத்திரையில் வைகோவை சந்தித்த மறுநாளே பரபரப்பு பேட்டி கொடுத்தார். இந்த பேட்டி அ.தி.மு.க.வின் பக்கமாகபோக நினைக்கும் கட்சிகள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. "கருணாநிதி நாடகமாடுகிறார். இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் உண்மையாகவே போராடுகிறார்" என்று வைகோவே ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்தார். "காங்கிரஸ் எதிர்ப்பு" என்ற களத்தை உருவாக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆளும் அ.தி.மு…

    • 0 replies
    • 1.1k views
  23. Started by akootha,

    பிரிட்டிஷ் வரலாற்றிலேயே நடந்த மிக மோசமான சம்பவம் இதுதான். இதைப்பற்றி அப்போதே வின்ஸ்டன் சர்ச்சில் மிகச்சரியாக ‘அசுரத்தனமான செயல்’ என்று கண்டித்திருந்தார். இங்கே நடந்ததை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. அமைதிப் போராட்டங்களுக்கான உரிமையை பிரிட்டன் எப்போதும் காக்கக்கூடிய நிலைக்கு நாமெல்லாம் உறுதி ஏற்க வேண்டும். - ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான், பிப். 20, 2013 அன்று எழுதியது... “அமிர்தசரஸ் நகரம் அன்று இருந்த நிலையை உணர்ந்த பலர் நான் செய்தது சரியென்று சொல்கிறார்கள். நிறைய பேர் நான் மாபெரும் தவறு இழைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள். நான் இப்போது சாக விரும்புகிறேன். மேலுலகம் சென்று என்னை படைத…

  24. பல்வேறு தளங்களிலும் பல்வேறு முனைப்புக்களும் எதிர்பார்ப்புக்களும் நிலவி வரும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. அதில் இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், இலங்கையில் நீதித்துறை, ஊடகத்துறை என்பவற்றின் மீதான அச்சுறுத்தல் தொடர்பாகவும், பிரதான கவனம் செலுத்தப்படும் எனக் கருதப்படுகிறது. அதன் காரணமாக, அக்கூட்டத்தொடரிலும் அடுத்த காலப்பகுதியிலும் இலங்கை பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை தோன்றக் கூடும். ஏற்கனவே கடந்த கூட்டத்தொடரில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்று…

    • 0 replies
    • 587 views
  25. முற்றுகை நிலம் 1 மக்கள் ஓடத் தொடங்கியிருந்தார்கள். அவர்களை விடவும் போரின் கால்களுக்கு வலு அதிகம். அது உசைன் போல்ட்டை விடவும் வேகத்தோடு பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்தது. அதன் நாக்குகளில் இரை கவ்வும் ஆர்வம், வீணீராய் நிலமெங்கும் வழிந்துகொண்டிருந்தது. எங்கும் கந்தகத்தின் நெடி. மூச்செடுக்கும் ஒவ்வொரு கணத்திலும் கந்தகக் காற்று சுவாசப் பையை முத்தமிட்டு வெளியேறிக் கொண்டிருந்தது. வெடிச்சத்தம் கேட்டவுடன், என்ன செய்கிறோம்? ஏது செய்கிறோம்? என்ற யோசிப்புகளுக்கு கால்களும் கைகளும் இடங்கொடுப்பதில்லை. கால்கள் ஓடுவதற்கு பழக்கப்பட்டுப் போனவை. எது தேவை? என்றறிந்து கைகள் தம்பாட்டுக்கு உரப் பைக்குள் பொருள்களை அடைந்துகொள்ளும். இலக்கேதுமின்றி ஓட்டம் தொடரும். பாதுகாப்பான இடம் என்று …

    • 0 replies
    • 785 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.