Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ரணில் வீசிய கொழுக்கி ? - நிலாந்தன் கனடாவில் உள்ள நண்பர் ஒருவர் கேட்டார்….”தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளையே எங்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை. இந்நிலையில்,புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும் நபர்களையும் ஒன்றிணைத்து தாயகத்தில் முதலீடு செய்வது நடக்கக்கூடிய காரியமா ? “என்று. ரணில் விக்ரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில அமைப்புக்கள் மற்றும் நபர்களின் மீது தடையை நீக்கியது தொடர்பில் நான் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பாகவே அவர் அவ்வாறு கேட்டிருந்தார். நியாமான கேள்வி. தாயகத்தில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள்,மிகச்சிறிய சனத்தொகையின் மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் மூன்று கட்சிகளை ஒன்றாக்க முடியவில்லை. ஆனால் புலம்பெய…

  2. ரணில்-விக்னேஸ்வரன் பிரிவும் பின்னணியும் | அரசியல் களம் |தாயக ஊடகவியலாளர் இரா மயூதரன்

  3. ரணில்: கடைசி ஆளா? நாடாளுமன்றத்தில் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே ஒரு உறுப்பினர், அதுவும் தேர்தலில் தோற்றதால்,தேசியப் பட்டியல்மூலம் உள்ளே வந்தவர்,நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இது ஆசியாவின் அதிசயம் மட்டுமல்ல உலகத்தின் அதிசயமும்தான். தாமரை மொட்டுக்குத் தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான போட்டியில் யானை ஜெயித்திருக்கிறது. எனவே அது எல்லா விதத்திலும் தாமரை மொட்டுக்குக் கிடைத்த வெற்றிதான். ரகசிய வாக்கெடுப்பு என்பது திருடர்களுக்கு வசதியானது.”அரகலய”போராட்டக்காரர்கள் கூறுவதுபோல, திருடர்களே வெற்றியைத் தீர்மானித்திருக்கிறார்கள். ரணிலை முன்னிறுத்தியதன்மூலம் ராஜபக்சக்…

  4. ரணில்:- பலமடைகிறாரா? பலவீனமடைகிறாரா? -நிலாந்தன்.- நாட்டுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு தேசிய அரசாங்கம்தான். பொருளாதார நெருக்கடி போன்ற நிலைமைகளின்போது உலகின் உயர்ந்த ஜனநாயகங்கள் அவ்வாறான தேசிய அரசாங்கங்களைத்தான் உருவாக்கின.ஆனால் இலங்கைத்தீவின் ஜனநாயகம் அத்துணை செழிப்பானது அல்ல. இலங்கைத்தீவில் தேசிய அரசாங்கம் அல்லது அதைவிட குறைவாக சர்வ கட்சி அரசாங்கம் போன்ற உரையாடல்கள் எப்பொழுது தொடங்குகின்றன என்றால், அரசாங்கம் தன் தோல்வியை ஏனைய கட்சிகளின் தலையில் சுமத்திவிட எத்தனிக்கும் பொழுதுதான்.அதாவது தோல்விக்கு எதிர்க்கட்சிகளை பங்காளிகளாக்கும் ஒரு தந்திரமாகத்தான் சர்வ கட்சி அரசாங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக தேசிய அரசாங்கம் என்பது தமிழ் நோக்கு நிலையில் சிங்கள பௌத்த த…

  5.  ரத்தன தேரரும் பொலிஸ் அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக மீண்டும் சிலர் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ஜாதிக ஹெல உருமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தன தேரர் வெளியிட்ட ஒரு கருத்தை அடுத்தே இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “நான் எதிர்காலத்தில், எனது கட்சியான ஹெல உருமயவிலிருந்தும் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட கட்சியான, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் விலகி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமான உறுப்பினராகக் கடமையாற்றப் போகிறேன்” என்று அண்மையில் சில இடங்களில் கருத்து வெளியிட்டதனால் ரத்தன தேரர், சில வாரங்களாகச் சர…

  6. ரம்புக்கனையில் நடந்த கொடூரமான தாக்குதல் தற்செயலானது அல்ல மாறாக நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரகர்களுக்கு இராஜபக்ஷ அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையாகும் -wsws wsws கொழும்பில் இருந்து வடகிழக்கே 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரம்புக்கனையில் சமீபத்திய எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இலங்கை பொலிஸ் ஒருவரை சுட்டுக் கொன்றதுடன் சுமார் 27 பேர் காயமடைந்தனர். ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் முறையே இலங்கை-இந்திய எண்ணெய் நிறுவனம், அரசுக்கு சொந்தமான பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை பெட்ரோல் மற்றும் டீசல் வி…

    • 1 reply
    • 296 views
  7. ரவிராஜூக்கான நீதியையும் கொன்று புதைத்தல் – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டுமென்ற உணர்வுடன் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக கொழும்பில் நடுப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் காலப்பகுதியில் கட்டாக்கலி நாய்களுக்கு வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கூட தமிழ் மக்களுக்காக பணியாற்றிய, குரல் கொடுத்த பொதுமக்கள் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கப்படவில்லை என்பது எவ்வளவு அநீதியானதாகும்? அவ்வாறு இல்லையென்றால் அரசாங்கத்தின் எதேச்சாதிகார போக்கினை அச்சமின்றி விமர்சனம் செய்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க நடு வீதியில் வைத்து வாழ்வதற்கான உரிமை இதேவ…

  8. -ரவூப் ஹக்கீம்- மைனஸ் 13- –தமிழ்- முஸ்லிம் மக்களைப் பிரித்துக் கையாண்டதன் மூலம், கடந்த மூப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்கள ஆட்சியாளர்கள் நன்மைகளைப் பெற்றிருந்தனர். முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிக் கொண்டே முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்திய துணிவை மறந்துவிட முடியாது. வடக்குக் கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் உடன்பாடு இல்லை. எனினும் அது பற்றிப் பேசலாம் என்பதற்கான காரணங்களைப் பேராசிரியர் அமீர் அலி முன்வைக்கிறார்— -அ.நிக்ஸன்- தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுசேர வேண்டிய காலமிது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார். 13 ஆவது திருத்தச் சட்…

  9. ரஷிய- சீனா உறவும் ஈழத்தமிழர் விவகாரமும் இலங்கையைச் சிறிய நாடென்றும் அமெரிக்காவை மாத்திரம் நம்பிக் கொண்டிருப்பதும் இந்திய இராஜதந்திரத்துக்குத் தோல்வியே. -அ.நிக்ஸன்- இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தை மையப்படுத்தி அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயற்பட்டாலும், சீனாவுடனான மோதலுக்கு அமெரிக்கா இந்தியாவைக் கருவியாக மாத்திரமே பயன்படுத்துகின்றது என்பது கண்கூடு. இந்திய இராஜதந்திரம் இதனை உள்ளூரப் புரிந்து கொண்டாலும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாது. இந்தியாவை ஒரு பெரிய ஜனநாயக நாடாக ரஷியா புரிந்து கொண்டாலும் சீனாவோடுதான் உறவை வளர்க்க முற்படுகின்றது. சர்வதேச…

  10. ரஷ்ய - சீன - ஈரானிய கூட்டணி ஏற்கனவே பூகோள அரசியல் சதுரங்கம் என்கிற கட்டுரையில் கண்டதுபோல ரஷ்யா - சீனா - ஈரான் ஆகிய நாடுகள் வெளிப்படையாக அணி சேர்ந்துவிட்டன போலத் தெரிகிறது. சிரியாவில் தமது சார்பு ஆட்சியை (பஷார் அல் ஆசாத் ஆட்சி) தக்க வைப்பதற்காக‌ ரஷ்யா தனது விமானத் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டது. ஆசாத்துக்கு எதிரி ஐசிஸ்.. ஐசிசுக்கு எதிரி அமெரிக்கா.. அமெரிக்காவுக்கு இந்த இருவருமே எதிரி.. இவ்வாறு குழப்பமான ஒரு நிலையை ஏற்கனவே எடுத்துவிட்ட ஐக்கிய அமெரிக்கா தற்போது தடுமாறுவதுபோல் உள்ளது. நேரம் பார்த்திருந்த ரஷ்யா ஐசிசை நாங்கள் வழிக்கு கொண்டு வருகிறோம் பேர்வழி என்று விமானத் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டது. ஈரானிய தரைப்படைகளும், சீனத்து விமானத்தாங்கிக் கப்பலும் அங்கே சென்றுள்ளதா…

    • 7 replies
    • 752 views
  11. ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை உலக அரசியல் நடப்புகள் பலவற்றுக்கு, தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லை. அதையும் மீறிச் சொல்லப்படும் விளக்கங்கள், தர்க்கரீதியானவை அல்ல. அத்தகைய விளக்கங்கள் சொல்லப்படுவதைவிட, சொல்லாமல் விடுவது அதிகம். தற்போதைய உலக அரசியலில், அரசியல் நடத்தை என்பது, வலிமையால் தன்னை நிலைநிறுத்த முனைவது. வலிமையால் நிறுவமுடியாத போது, அவதூறும் பொய்யும் புனைகதையும் உண்மைகள் போல் சொல்லப்படுகின்றன. இதனாலேயே ‘பொய்ச் செய்தி’களின் காலத்தில், நாம் வாழத் தலைப்பட்டிருக்கிறோம். ரஷ்ய இராஜதந்திரிகளை, பல்வேறு மேற்குலக நாடுகள் வெளியேற்றியுள்ள நிலையில்,…

  12. ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் பலிக்கடாக்கள் மொஹமட் பாதுஷா உலக வரலாற்றில் முக்கால்வாசிப் பக்கங்கள் போர்களாலேயே நிரம்பியுள்ளன. நில ஆக்கிரமிப்புக்கான போர், நில மீட்புக்கான போர், அதிகாரத்தை அதிகரிப்பதற்கான போர், இன, மத ரீதியான போர் என இது நீட்சி கொள்கின்றது. ஏன் மண்ணுக்கான போர் மட்டுமன்றி பெண்ணுக்கான போர்களும் நடந்தேறியுள்ளன. போர் முடிவுக்கு வந்த பிறகு வெற்றிக் கதைகளும் தோல்விக் கதைகளும் மிஞ்சுகின்றன. ஒரு தரப்பு வெற்றியைக் கொண்டாடுகின்றது; மற்றைய தரப்பு தோல்வியில் துவண்டுபோகின்றது. வரலாறு இதனைப் பதிவு செய்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகின்றது. ஆனால், போரில் ஈடுபடும் எந்தத் தரப்பினாலும் கண்டுகொள்ளப்படாத, உலகம் பேசாத ஒரு கதை இருக்கின்றது. அதுதான் சம…

  13. ரஷ்ய படைகளுக்கான ஆட்சேர்ப்பு : மாறும் ஆயுதமோதல் வியூகங்கள் By DIGITAL DESK 5 24 SEP, 2022 | 09:23 PM சதீஷ் கிருஷ்ணபிள்ளை கடந்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட அறிவித்தல் முக்கியமானது. இந்த அறிவித்தல் உள்நாட்டுக்கும், மேலைத்தேய நாடுகளுக்குமான இரு செய்திகளை உள்ளடக்கி இருந்தது. உள்நாட்டுக்கான செய்தி படைகளைத் திரட்டுதல் பற்றியது. மேற்குலகிற்கான செய்தி அணுவாயுத பயன்பாடு பற்றியது. உக்ரேனில் சண்டையிடுவதற்காக ரிசர்வ் படையில் 30,000 பேர் சேர்த்துக் கொள்வார்கள். இந்தப் படையினர் உக்ரேனுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது முதல் செய்தி. …

  14. ரஷ்ய மொழி ஆதிக்கத்தின் ஒரு கதை மரியா மன்சோஸ் இரு மொழி (ரஷ்யன் + உக்ரைன்) பேசும் கீவ் நகரில் 1990களில் வளர்ந்த நான் உக்ரைனிய மொழியை, பழமையானதாகக் கருதி மனதுக்கு நெருக்கமாகக் கொள்ளாமல், நுட்பங்களை உணராமல், முழு ஆர்வம் இல்லாமல் படித்தேன். மிகவும் முக்கியமான நாள்கள், நிகழ்ச்சிகளிலும் பள்ளிக்கூடங்கள், வங்கிகள் போன்ற இடங்களிலும்தான் இனப் பெருமையோடு உக்ரைனியைப் பயன்படுத்துவோம். ஆயினும், அன்றாடப் பயன்பாட்டிலும் நெருக்கமான நண்பர்கள் உறவினர்களுடனான உரையாடலிலும் ரஷ்ய மொழியே ஆதிக்கம் செலுத்தும். பள்ளி, கல்லூரி நாள்களில் இடைவேளையின்போதும், பத்திரிகைகளுக்கு எழுதும்போதும், பெற்றோருடன் சண்டை போடும்போதுகூட ரஷ்ய மொழியைத்தான் நாடுவோம். என்னுடைய பாட்டி இவ்விரண்டும் கலந்த க…

  15. ரஷ்யப் புரட்சி: 1917-2017- நூற்றாண்டுகாலச் செழுமை நூறு என்பதொரு மைல்கல்; அது வயதாக இருக்கட்டும், ஆண்டுகளாக இருக்கட்டும், விளையாட்டில் போட்டிகளாகவோ ஓட்டங்களாகவோ இருக்கட்டும். நூறு ஆண்டுகள் மிகப்பெரிய காலப்பகுதி. எந்தவொரு சிந்தனையும் குறித்தவொரு நிகழ்வுடன் தொடங்கி நின்று நிலைக்கிறது. அவ்வாறு செல்வாக்குப் பெறுகின்ற சிந்தனைகள் நீண்டகாலத்துக்கு நிலைப்பது குறைவு. வரலாறு தனது கொடுங்கரங்களால் சிந்தனைகளின் செயலை நடைமுறையில் தோற்கடித்து சிந்தனைகளைக் காலத்துக்கு ஒவ்வாததாக மாற்றிவிடுகிறது. இதையும் தாண்டி ஒரு சிந்தனை காலமாற்றத்துக்கு நின்று நிலைக்குமாயின் அது மகத்துவமானது. அது அச்சிந்தனையின் சிறப்பை, மாறுகிற காலத்துடன் மாறுகின்ற செயன்…

    • 1 reply
    • 612 views
  16. ரஷ்யா - யுக்ரேன் போர்: விளாடிமிர் புதினின் சிந்தனையும் திட்டமும் என்ன? ஸ்டீவ் ரோசன்பெர்க் ரஷ்ய ஆசிரியர், மாஸ்கோ 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இந்த போரை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பே பல மாதங்களாக நாம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி இது. விளாடிமிர் புதின் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? என்ன திட்டம் வைத்திருக்கிறார்? எனக்கு ரஷ்யாவின் எதிர்காலம் பற்றியோ, அல்லது எனக்கு புதினுடன் நேரடி தொடர்போ இல்லை என்பதை முன்க…

  17. ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? February 28, 2022 — வி. சிவலிங்கம் — ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போருக்கான ஆரம்ப அறிகுறிகள் காணப்படுகின்றன. ரஷ்யாவின் கொல்லைப்புறத்தை நோக்கி நேட்டோ படைகள் நகர்வதாக ரஷ்யாவும், ஐரோப்பாவின் கொல்லைப்புறத்தை நோக்கி ரஷ்யா நகர்வதாகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் ஆரம்பமாகியுள்ளன. போர் ஆரம்பித்துள்ள இவ் வேளையில் நாம் சில கேள்விகளோடு இக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். – இப் போரின் தாற்பரியங்கள் என்ன? – நேட்டோ நாடுகளின் சதி வலைக்குள் உக்ரெய்ன் வீழ்ந்துள்ளதா? – உக்ரெயின் வலதுசாரி தேசியவாதிகளினதும், நாக்ஸிஸ தரப்பினரதும் இலக்கு என்ன? – இப்…

    • 18 replies
    • 1.3k views
  18. ரஷ்யாவின் புதிய காய் நகர்த்தல் -ஜனகன் முத்துக்குமார் ரஷ்யாவைத் தவிர்த்து, மத்திய கிழக்கு விவகாரத்தில் மாற்று நிலைமைகளை ஏற்படுத்துதல் என்பது முடியாத ஒன்றாகும். மேற்கத்தேய நாடுகள், தொடர்ச்சியாக ரஷ்யாவை ஆக்கபூர்வமானதொரு செயற்பாட்டாளராகக் கருதாவிட்டாலும், ரஷ்யாவின் பங்கு, குறித்த விவகாரத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். குறிப்பாக சவூதி அரேபியா, தனது பிராந்திய வல்லரசாண்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், துருக்கி, குர்திஸ் இன மக்களுக்கு ஈராக்கில் ஐக்கிய அமெரிக்கா உதவியதைத் தொடர்ந்தும், ரஷ்யாவுடன் இராஜதந்திர உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டதிலிருந்து, ரஷ்யாவைப் புதியதொரு பங்காளராகப் பார்க்கும் மனப்பாங்கு, மத்திய கிழக்கில் உருவானது எ…

  19. ரஷ்யாவின் போர்ப்பயிற்சி அயல்நாடுகள் அச்சம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-10#page-8

  20. சோவியத் ஒன்றியத்திலிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள், இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்ததன் 25-வது ஆண்டு இது. இஸ்ரேலிய சமூகத்தில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். சோவியத் ஒன்றியத்தின் இரும்புத் திரை விலகிய பின்னர், இஸ்ரேலை நோக்கி யூதர்கள் திரண்டு வரத் தொடங்கினர். இஸ்ரேலில் இன்று இருக்கும் யூதர்களில் 5-ல் ஒருவர், சோவியத் ஒன்றியத்திலிருந்து வந்தவர்தான். ரஷ்யாவிலிருந்து குடிபுகுந்த அலியாக்களின் (வெவ்வேறு நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்குள் குடிபுகுந்த யூதர்களைக் குறிக்கும் சொல்) வாழ்க்கைச் சரித்திரம், வெற்றிக் கதைகளுக்கு உதாரணம். “ஒருசில ஆண்டுகளிலேயே இஸ்ரேலின் மக்கள்தொகையில் 20% அதிகரித்துவிட்டது” என்று நினைவுகூர்கிறார் சோவியத் ஒன்றியத்தை எதிர்த்த…

  21. ரஸ்ய படையெடுப்பு, உலக கட்டமைப்புக்களின் பலவீனம், தமிழ் அரசியல் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டியது? - யதீந்திரா இந்தக் கட்டுரையை எழுத்திக் கொண்டிருக்கும் போது, ஜரோப்பிய உலகம் பரபரப்படைந்திருக்கின்றது. ரஸ்ய ஜனாதிபதி, விளாடிமிர் புட்டின், உக்ரெயினின் கிழக்கு பகுதியின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். உக்ரெயின் இராணுவத்தை ஆயுதங்களை கைவிடுமாறு ரஸ்யா அறிவித்திருக்கின்றது. தனது நாடு – எதற்காகவும் எவருக்காகவும் அச்சம் கொள்ளவில்லையென்று, உக்ரெயின் ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார். 2014இல், ரஸ்ய சார்பான உக்ரெயின் ஜனாதிபதி பதவிலிருந்து அகற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ரஸ்யா தாக்குதலை தொடுத்தது. உக்ரெயினின் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற யுத…

  22. ரஸ்யா மீதான தாக்குதல் போரை மாற்றுமா? | அரசியல் களம் |போரியல் ஆய்வாளர் அருஸ்

    • 0 replies
    • 269 views
  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார் ரா.சம்பந்தன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியப் பங்கு வகித்த இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவருமான ரா.சம்பந்தன் காலமானார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்காக நீண்ட காலம் பணியாற்றியவர் அவர். அவருக்கு வயது 91. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.