அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9210 topics in this forum
-
[size=4][size=5]கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: உண்மையான வெற்றி வெற்றி?[/size] (கே.சஞ்சயன்) கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே, முடிவுகளை தந்துள்ளது. கிழக்கின் இனப்பரம்பல் காரணமாக யாருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்தும் என்ற கணிப்பு தப்பாகிப் போகவில்லை. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6217 வாக்குகள் அதிகமாகப் பெற்றதன் மூலம், கிழக்கு மாகாணசபையில் 3 மேலதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதன்காரணமாக, 11 ஆசனங்களுடன் இரண்டாம் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், இந்தத் தேர்தலில் 11 ஆசனங்களை எதிர…
-
- 32 replies
- 3.1k views
-
-
மாவீரர் நாள்;புயல்;கொலை - நிலாந்தன் டித்வா புயல் மாவீரர் நாளுக்குப் பின்னரான உரையாடலின் மீதான கவனத்தைத் திசை திருப்பிவிட்டது. அரசாங்கம் இம்முறை மாவீரர் நாளை பெரிய அளவில் உத்தியோகபூர்வமாகத் தடுக்கவில்லை. அதனால் மாவீரர் நாள் தாயகத்தில் பரவலாகவும் செறிவாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லாத் துயிலும் இல்லங்களுக்கும் இப்பொழுது ஏற்பாட்டுக் குழுக்கள் உண்டு. மேலும் இம்முறை உள்ளூராட்சி சபைகளும் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டின. புதிய உள்ளூராட்சி சபைகள் இயங்கத் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றன. இம்முறை மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் உள்ளூராட்சி சபைகள் கணிசமான அளவுக்குப் பங்களிப்பை நல்கின. மாவீரர் நாளையொட்டி நகரங்களை அலங்கரிப்பது,தெருக்களை அலங்கரிப்பது, முதலாக பல்…
-
- 0 replies
- 114 views
-
-
1983 ஜுலை 23: நெஞ்சில் காயாத இரத்தம்! கறுப்பு ஜுலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து முப்பத்திரண்டு வருடங்களாகின்றன. கறுப்பு ஜுலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சில் பெரும் காயமாக ஆறாமல் ஆடிக்கலவரம் இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களிடத்தில் இந்தக் கறுப்பு ஜுலைதான் வரலாற்றை திருப்பிப் போடத் தொடங்கியது. இனவெறி வன்முறைகளும் படுகொலைகளும் உரிமை மறுப்புக்களுமே தமிழ் மக்களிடத்தில் ஆறாக காயங்களை நெஞ்சில் உருவாக்கியது. தமிழ் இனத்திற்கு விடுதலையும் நாடும் உரிமையும் தேவை என்கிற அவசியத்தை ஏற்படுத்தியது. இலங்கைத்தீவும் ஈழமும் வெடித்து இரண்டு நிலங்கள் என…
-
- 0 replies
- 498 views
-
-
தமிழரசுக் கட்சியின் சீரழிவும் தோல்வியும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஓகஸ்ட் 27 தேர்தல் அரசியல் என்பது ‘பரமபத’ (ஏணியும் பாம்பும்) விளையாட்டுப் போன்றது. வெற்றிகளை நினைத்த மாத்திரத்தில் அடைந்துவிட முடியாது. எதிர்க்கட்சிகளும் எதிர்த்தரப்புகளும் தோல்விகளைப் பரிசளிப்பதற்காகப் ‘பாம்பு’களாகக் காத்துக் கொண்டிருக்கும். இப்படியான அச்சுறுத்தலுள்ள தேர்தல் அரசியல் களத்தில் இம்முறை, சொந்தக் கட்சிக்குள்ளேயே ‘பரமபதம்’ ஆடி, தமிழரசுக் கட்சி தோற்றுப் போயிருக்கின்றது. கட்சியின் தலைவர், செயலாளர் தொடங்கி, கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரும், இந்தப் பொதுத் தேர்தலில் படுமோசமாகத் தோற்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூ…
-
- 0 replies
- 481 views
-
-
அறம் மறந்து சுமந்திரனின் ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்.! கால விசித்திரத்தில், எத்தனை மாற்றங்களும் உரையாடல்களும் நிகழத் தலைபட்டுள்ளனவோ, “ஓடமும் ஓர் நாள் வண்டியில் ஏறும்”, என்பார்கள். ஊடகத்துறையில் இந்தப் பழமொழி அடிக்கடி நிஜமாகிக்கொண்டே இருக்கின்றது. ஊடக ஜாம்பவானாக, தன் எழுத்து – பேச்சு ஆற்றலினால் அனைவரின் கவனிப்பைப் பெற்றிருந்த மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன், இன்றைய காலத்தில் தன்னை மறந்து – ஊடக அறத்தை மறத்து சுமந்திரனின் ஊதுகுழலாக – அநியாயத்தின் எழுத்து வடிவாக மாறியிருப்பது காலத் துயரமே. அவருக்கே இந்தப் பகிரங்க மடல்…! வித்தியாதரன் அவர்களே…! ஒரு காலத்தில் வடக்கு, கிழக்கில் தன்னலமற்ற – நீதியின் பாதையில் பயணித்த – அறத்தலைமை, நிலை…
-
- 0 replies
- 1.6k views
-
-
அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்துக்கள் மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதுடன், தமிழ்த் தேசியவாத தரப்பினர் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் அரசியல் பரப்பில் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய ஒருவராக இருந்துவரும் சுமந்திரன் வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது தெரிவித்திருந்த கருத்துக்களே மீளவும் சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது. சுமந்திரன் பேசிய விடயம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடப்பட்டுவருகிறது. 30 வருடம் போராடி என்னத்தை கண்டிங்க என்று சுமந்திரன் கேட்கிறார். அமிர்தலிங்கத்தைப் பற்றி நீலன் திருச்செல்வத்தை பற்றி கூறினீர்கள் – அவர்கள் இப்போது …
-
- 0 replies
- 418 views
-
-
கதவைத் திறக்கும் புதுடெல்லி என்.கண்ணன் “தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கானஇந்தியாவின்கதவுதிறப்பதற்குசீனாவும்தமிழகமும்அடிப்படையாகஅமைகின்றன” “13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் இந்தியா அழுத்தம் கொடுக்குமோ என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கும், சிங்கள, பௌத்ததேசியவாதசக்திகளுக்கும்மேலோங்கி வருவதால், அதற்கு மாற்றான நகர்வாக சீனாவின் பக்கம் சாயமுனைகின்றனர்” செப்ரெம்பர் 26ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ஷதலைமையிலான குழுவினருடன் நடத்தியதை போன்றதொரு, மெய்நிகர் கலந்துரையாடலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்தியத் தரப்பில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுகுறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த…
-
- 9 replies
- 1.6k views
-
-
இலங்கையின் மத மற்றும் இன ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய சம்பவங்கள் குறித்து கடும் கரிசனை கொண்டுள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அங்கவீனமுற்ற படையினரை சிலர் தங்கள் அரசியல் நோக்கங்களிற்காக பயன்படுத்த முனைந்துள்ளமை, ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே அவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள், பௌத்த மதகுருமார் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக அதிகளவிற்கு வெறுப்பைத் தூண்டும் கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளமை மற்றும் சமூக ஊடகங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்கள் பரந்துபட்ட அளவில் காணப்படுவது போன்றவையே குறிப்பிட்ட சம்பவங்களாகும் என அற…
-
- 1 reply
- 409 views
-
-
தமிழக அரசியல் நமக்கு தேவையற்றது என ஒதுங்கமுடியாது. ஈழத்தமிழரின் விதியை தீர்மானிப்பதாக அதுவே இருக்கிறது. இருந்திருக்கிறது. அங்குள்ள தலைவர்கள் ஈழத்தமிழ்த்தலைவர்கள் தம்மைவிட வளர்ந்து விடக்கூடாது தமிழர்களுக்கு அவர்கள் தலைமை தாங்கக்கூடாது என்பதன் பயன் தான் புலிகள் அழிப்புக்கும் மற்றும் முள்ளிவாய்க்காலுக்கும் அவர்கள் எல்லோரது மறைமுக ஆதரவு என்பதை உலகத்தமிழினம் (தமிழகம் உட்பட) உணர்ந்தே இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவும் அதற்கு முன்னரும் இறப்புக்கு பின்னருமான நடைமுறைகள் மிகமிக ஆபத்தானவை. ஒரு மாநிலத்தின் முதல்வரை அந்த நாட்டின் பிரதமரோ நாட்டின் அமைச்சர்களோ அதிமுக்கிய மத்திய அதிகாரிகளோ கூட பார்வையிடச்சென்று பார்வையிடாது திரும்பி போயிருக்கிறார்கள் என்றால் அங்கே…
-
- 3 replies
- 501 views
-
-
-
- 0 replies
- 244 views
-
-
வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டுமா? உலகம் முழுவதிலும், அண்மைக்காலமாகவே இந்த “வெறுப்புப் பேச்சு” பற்றிய கலந்துரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை, சாதாரண மக்களின் கலந்துரையாடல்களில் மாத்திரமன்றி, அரசியல்வாதிகளும் அடிக்கடி உச்சரிக்க வேண்டிய ஒன்றாக, இதுபற்றிய கலந்துரையாடல்கள் காணப்படுகின்றன. முஸ்லிம்களின் வழிபாட்டிடங்களையும் வர்த்தக நிலையங்களையும் வீடுகளையும் இலக்குவைத்து, அவர்களுக்கு அச்சுறுத்தலையும் பொருளாதார நட்டத்தையும் ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் அண்மைக்கால முயற்சிகள், வெறுப்புப் பேச்சுப் பற்றிய கவனத்தையும் கலந்துரையாடலையும் அதிகரித்திருக்கின்றன. இவை பற்றிய கவனம், உலகம் …
-
- 0 replies
- 390 views
-
-
"என்னைப்பெத்த ராசாவே கொஞ்சம் சேதி கேளு ராசாவே! உண்ணாமல் இருப்பதாக சொன்னாக உருகிப் போனேன் உயிரோடு புதைஞ்ச சனம் யாரை நம்பிப் புதைஞ்சதையா உண்ணாமச் செத்த சனம் உலகநாட்டைப் பார்த்ததையா வெளிநாட்டுத்தமிழரால விடிவெள்ளி பூக்குமெண்டு வழிநெடுகப் பார்த்த சனம் இப்ப வவுனியாவில் கிடக்குதையா கனிமொழியும் வருவாளோ கனிபழமும் தருவாளோ முள்ளுக்கம்பி பின்னால முளிபிதுங்கி நிற்பவரே மகிந்த ராசபக்சா மகிமைதனைப் பாரீரே" http://unarvukall.blogspot.com/
-
- 13 replies
- 2.1k views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம்: சர்வதேசத்தை திசை திருப்பும் உபாயமா? | அகிலன் February 16, 2022 பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் இலங்கையில் கடந்த 43 வருட காலமாக நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மீண்டும் அரசியலில் பேசுபொருளாகி இருக்கின்றது. பாராளுமன்றத்தில் வியாழக் கிழமை இதற்காகக் கொண்டுவரப்பட்ட திருத்தமும் எதிர்த் தரப்பினரால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. சர்வதேசத்தை சமாளிப்பதற்காக சில திருத்தங்களைச் செய்வதாகக் காட்டிக் கொண்டாலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற ஆயுதத்தை கைகளில் வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடர்வது தான் அரசாங்கத்தின் உபாயம் என்பதும் அரசு முன்வைத்திருக்கும் திருத்தங்கள் மூலமாக வெளிப்படையாகியிர…
-
- 0 replies
- 468 views
-
-
இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு எவ்வளவு கூடுதல் வருவாய் வரும்? மக்களுக்கு என்ன ஆகும்? ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் அலுவலகம், கொழும்பு இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை, இந்த மாதத் தொடக்கம் முதல் அமலுக்கு வரும் வகையில் 12 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. இதன்படி, பெறும…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
தமிழர்கள் உள்வாங்கப்படாவிடில் , மாற்றத்திற்கான இலங்கையின் தேடல் தோல்வியடையும்! -ஜே.எஸ். திசைநாயகம் ”’சிங்களவர்கள்சிலர் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தாலும், நாட்டின் அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மாற்றவில்லை”. ‘ஒவ்வொரு முன்மொழிவும் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குவதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தினாலும், இது அரசின் தன்மையை மாற்றாது .அரசு ஒற்றையாட்சியாகவே இருக்கும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தமிழர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். பாராளுமன்றம் இன்னும் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் .நிலையில் தமிழர்களுக்கு அதி…
-
- 0 replies
- 446 views
-
-
பொறுப்பு நிறைவேற்றப்படுமா? ஜனநாயகம் நிலைநிறுத்தப்படும், ஊழல் ஒழிக்கப்படும் என்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும். அந்த வகையில் ஜனாதிபதி ஆட்சி முறையில் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்கள் இல்லாதொழிக்கப்பட்டு, பாரா ளுமன்றம் சார்ந்து பிரதமருக்கு வழங்கப்படும். தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்படும். இதற்காக நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பது நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும். இதன் அடிப்படையிலேயே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து, ஆணை வழங்கினார்கள். இது பொதுவானது. போர்க்குற்றங்கள் தொடர்பான நிவா…
-
- 0 replies
- 337 views
-
-
புதிய பொறிமுறையை வலியுறுத்தவுள்ள ஹுசேன் ரொபட் அன்டனி ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இம்முறை இலங்கை நிலைமை பாரிய சூடுபிடிக்கும் நிலையில்காணப்படுகின்ற சூழலில் பல்வேறு தரப்பினரும் இலங்கை விவகாரம் குறித்து அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடர் நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும். இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளன. முதல் கட்டமாக மார்ச் மாதம் 15ஆம் திகதி இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் ஜெனிவா கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளத…
-
- 0 replies
- 372 views
-
-
இருமுகத்தோற்றம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தினமாகிய மே 18 ஆம் நாள் நாட்டை அரசியல் உணர்வு ரீதியாக இரு துருவங்களாக்கியிருக்கின்றது. இன ஐக்கியத்திற்கும் அமைதி–சமாதானத்திற்கும் வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட யுத்த முடிவு தினமானது அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது. அந்த தினம் நேர் முரணான இரு முகத்தோற்றங்களைக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் அது யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால் வடக்கிலும்–கிழக்கிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்கள் மனங்களிலும் அந்த தினம் ஆழ்ந்த துயரத்தைத் தரும் ஒரு சோக தினமாக–- துக்க தினமாக…
-
- 0 replies
- 427 views
-
-
விக்கினேஸ்வரனின் எதிர்காலம் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் காட்டியுள்ளார். மீண்டும் முதலமைச்சர் வேட்பாளாராக தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்துவதற்கான சாத்தியம் குறைவு என்று கூறியுள்ளார். அவ்வாறு அழைக்காத பட்சத்தில் ஒரு மாற்று அணியை உருவாக்கி மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேட்பாளராக தான் தயார் என்றும் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கும் படி தமிழ் மக்கள் பேரவையின் பங்காளிக் கட்சிகள் விக்னேஸ்வரனை பல காலமாக வருந்தி அழைத்திருந்தனர். இப்பங்காளிக் கட்சிகளில் தமிழ் தேசிய கூட்டமை…
-
- 0 replies
- 495 views
-
-
மூடி மறைக்க முயலும் செயற்பாடு தமிழ் மக்களையும் உலகத்தையும் ஏமாற்றும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை எதிர்த்தும் அமர்வைப் புறக்கணித்தும் கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலர் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் மாவட்டம் தோறும் காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்து உரையாடிவரும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஏற்ப யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலை உறவினர்கள் முற்றாக புறக்கணித்தது மாத்திரமன்றி எதிர்ப…
-
- 0 replies
- 509 views
-
-
மாற்றுத் தலைமை குறித்து தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ் மக்களே வடக்குக் கிழக்கு அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. வடக்குக் கிழக்கு அபிவிருத்திக்கான அரசதலைவர் செயலணி தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குமிடையே இடம்பெற்ற கடிதப் பரிமாற்றம் இதற்குப் பிள்ளையார் சுழியை இட்டு வைத்துள்ளது. விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து விலகி மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளார் என்று நம்பிக்கை யான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னோடியாகவே தமிழ…
-
- 0 replies
- 704 views
-
-
விக்கியையும் சுமந்திரனையும் தாண்டிப் பேசுதல் புருஜோத்தமன் தங்கமயில் / தமிழ்த் தேசிய அரசியலின் இன்றைய கட்டம், ‘விக்னேஸ்வரன் எதிர் சுமந்திரன்’ என்கிற அளவில் சுருங்கி நிற்கிறது. அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள், உரைகள், அறிக்கைகள் சார்ந்துதான் அரசியல் இயக்கமும், ஊடக இயக்கமும் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால நம்பிக்கைகளாக, ஆக்கபூர்வமான சக்திகளாகத் தம்மைக் கருதும் தரப்புகளும் கூட, இருவரில் ஒருவரின் துணைக்குழுவாக மாத்திரமே தற்போது இயங்கி வருகின்றன. சுய அடையாளத்தோடு எழுந்து வருவது சார்ந்தோ, நம்பிக்கைகளை ஏற்படுத்துவது சார்ந்தோ, எந்தவொரு தரப்பும் கடந்த பத்து வருடங்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை…
-
- 0 replies
- 877 views
-
-
உக்ரேன் போரின் போக்கை மாற்றுமா வக்னர் சதி? Published By: VISHNU 02 JUL, 2023 | 08:54 PM சுவிசிலிருந்து சண் தவராஜா ரஷ்யாவில் பெரும் பிரளயம் ஒன்று நடைபெற்று முடிந்திருக்கின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிராக தனியார் இராணுவக் குழுவான வக்னர் மேற்கொண்ட சதி 24 மணி நேர இடைவெளியில் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும், அயல் நாடொன்றில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் இவ்வாறான ஒரு விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகியமை உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் ஒரு பதட்டமான சூழலைத் தேற்றுவித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. பெரும் மோதல் ஒன்று தவிர்…
-
- 0 replies
- 294 views
-
-
சதாம் உசேன்- அமெரிக்காவின் அவசரம் அமெரிக்க ஆங்கிலோ ஏகாதிபத்தியத்தின் கடுமையான நிர்பந்தத்திற்கு அடிபணிந்து, இராக் பொம்மை அரசாங்கம், சதாம் உசேனை அவசர அவசரமாக 30.12.2006 அன்று இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்குத் தூக்கிலிட்டுக் கொன்று விட்டது. 23ஆண்டுகாலம் இராக்கில் மிருகத்தனமான கொடுங்கோலாட்சி நடத்தியவர் சதாம் என பி.பி.சி., சி.என்.என்.,போன்ற ஏகாதிபத்திய ஊடகங்கள் மணிக்கணக்கில் செய்துவரும் வர்ணனைகள் இந்தக் கொடிய சர்வதேசக் குற்றத்தை நியாயப்படுத்த முனைகின்றன. ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ இழைத்ததாக சதாம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவற்றிலொன்றுதான், 1982 இல் டுஜைய்ல் என்னும் இராக்கிய கிராமத்தில் 148 ஷியா முஸ்லிம்களைக் கொலை செய்ய அவரும் குற்றம் சாட்டப்பட்ட பி…
-
- 1 reply
- 1.1k views
-
-
இத்தனை குழப்பங்களுக்கும் யார் பொறுப்பு? கே. சஞ்சயன் / 2018 நவம்பர் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:26 Comments - 0 ஒக்டோபர் 26ஆம் திகதி மாலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கேற்றிய எதிர்பாராததொரு நாடகத்தின் அதிர்ச்சியில் இருந்து, இன்னமும் பலர் வெளிவரவில்லை; வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள். “அவர் இப்படி ஏமாற்றுவார் என்று, நாங்கள் நினைக்கவில்லை. கழுத்தறுத்து விட்டுப் போய்விட்டார்” என்று புலம்புகின்ற நிலை, அரசியல் கட்சிகளிடத்தில் மாத்திரமன்றி, அவருக்கு வாக்களித்த மக்களில் பெரும்பாலானோருக்கும் இருக்கிறது. அதுபோல, சர்வதேச சமூகத்தின் கணிசமான பகுதிக்கும், அந்தக் கவலையும் அதிர்ச்சியும் இருக்கின்றன. மைத்திரிபால சிறிசேன இந்த முடிவைத் திடீரென அறிவிக்க…
-
- 0 replies
- 678 views
-