அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9329 topics in this forum
-
Posted by: on Jul 13, 2011 அண்மையில் அமெரிக்க காங்கிரஸின் ஆய்வுச் சேவை வெளியிட்ட எட்டு பக்க அறிக்கை, இலங்கை குறித்தான அமெரிக்காவின் பார்வை எவ்வாறு அமைய வேண்டுமென்பதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு உதவி வழங்குவதன் ஊடாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலைநாட்ட சீனா முயல்வதாக அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதில் கூறப்பட்ட விடயங்கள் ஒன்றும் புதிதானவையல்ல. ஏற்கனவே பல ஆய்வாளர்களால முன்வைக்கப்பட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவம், எட்டுப் பக்க அறிக்கையாக வெளி வந்துள்ளது. ஒருவகையில் இலங்கை விவகாரம் குறித்து, அண்மையில் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) வெளியிட்ட அறிக்கையும் ,இதுவும், இந்தியாவிற்கே பலமான செய்தியொன்றினை கூற முனை…
-
- 0 replies
- 735 views
-
-
புதன்கிழமை, 06 யூலை 2011, 11:05.14 AM GMT உலக மயமாதலில், யாவும் வணிகமயமாகி மானுட உயர் மதிப்பீடுகள் உடைந்து கொண்டிருக்கும் நிலையில், மனித நேயம் குறித்து உரத்துச் சொல்வது கேலிப் பொருளாகி விட்டது.இந்திய இராணுவத்தை விமர்சித்தார் என்ற காரணத்திற்காக ஒருநாள் சிறைவாசம் அனுபவித்த அருந்ததிராய், ""இந்தியாவில், வெளியில் வாழ்வதை விட, சிறை வாழ்க்கையே மேல்'' என்று கூறியது நினைவிற்கு வருகிறது. அறிவுத் துறையின் காற்றுத்தழுவாத அதிகார வர்க்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்க முடியும். இன்று தமிழினம் சிக்கியுள்ள முரண்பாடுகள் பற்றியதான விழிப்புணர்வு, அடிபணிவு அரசியல்வாதிகளாலும், தோல்விகளைத் தமது சுய இருப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களாலும் சிதைக்கப்பட்டுள்ளன. கொடுமையா…
-
- 0 replies
- 701 views
-
-
[ புதன்கிழமை, 06 யூலை 2011, 00:18 GMT கடந்த மாதம் சென் பீற்றஸ்பேக்கில் இடம்பெற்ற அனைத்துலக பொருளாதார மாநாட்டின்போது சீன அதிபர் கூ ஜின்ரோ மற்றும் ரஷிய அதிபர் டிமிற்றி மிட்வடேவ் [sri Lanka’s friends - Dimitry Medvedev and Hu Jintao]ஆகியோரது அரவணைப்பில் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச இருந்த அதே காலப்பகுதியில் பிரித்தானிய அரச தலைவர் டேவிற் கமறோன் மற்றும் அமெரிக்கா இராசாங்கத் திணைக்களம் என்பன வெளியிட்ட கருத்துக்கள் மகிந்தவிற்குக் கசப்பாக அமைந்தது. போரின் இறுதிநாட்களில் சிறிலங்கா அரசபடையினரால் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினது முயற்சிகளுக்கு எதிரான தங்களது முழுமையான ஆதரவு என்றும் இரு…
-
- 1 reply
- 929 views
-
-
[ வியாழக்கிழமை, 30 யூன் 2011, 09:43 GMT ] [ நித்தியபாரதி ] அண்மையில் ரஷ்யாவின் சென்பீற்றேர்ஸ்பேக்கில் இடம் பெற்ற பொருளாதார உச்சி மாநாட்டில் சீன அதிபர் கூ ஜின்ராவோவை [Hu Jintao] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இவ்விரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் தமது நாடுகளிற்குத் தேவையான உதவிகள் தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர். சீனா-சிறிலங்கா உறவு நிலை தொடர்பாக புதுடில்லியிலுள்ள ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தின் அனைத்துலக அரசியல் மற்றும் ஆயுத ஒழிப்பு விடயம் தொடர்பான மையத்தின் பேராசிரியரும் தலைவருமான சுவரன் சிங் [swaran Singh], World Politics Review - WPR தளத்துடனான மின்னஞ்சல் மூலமான நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். WPR: அண்மைய நாட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
22 ஜூன் 2011 ஜே.சி.வெலிஅமுன பகுதி 2 - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் இறுதிச் சடங்கும் அரச கைப்பற்றுகையும் அனேகமாக, அரசினுடைய நடவடிக்கைகளில் ஆகத் திகைப்பு ஊட்டுவதாக, கொல்லப்பட்டவரின் 'இறுதிச் சடங்கு' இருக்கிறது. ஒரு சனநாயக சமூகமானது அந்த இறுதிச் சடங்குகளில் என்ன நடந்தது என்பதை மறக்கக் கூடாது என்பது கட்டாயமானதாகும். மீண்டும் சொல்கிறேன், கட்டாயமானதாகும். குறிப்பாக, இனி வரப் போகும் காலங்களில், இதுதான் நடக்கப் போகிறதாக இருக்கலாம் என்பதனால்தான் அதனை மறைக்க வேண்டாம் என்கிறேன். இறுதிச் சடங்குகளை அரச ஊடகங்கள் கையாண்ட முறையானது, போர்ச் செய்திகளை அவை கையாண்ட முறையிலிருந்து வேறுபட்டதாக இல்லை. அச் செய்திகள் அரசுக்கு ஆதரவானதும் ஒரு பக்கச் சார்பானதாகவும்…
-
- 0 replies
- 615 views
-
-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி! அழகான தென்னிலங்கை கடற்கரையில் பிகினி உடையுடன் வெளிநாட்டவர்கள் உலாவுகிறார்கள். கொழும்பில் நடந்த உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இரசிகர்கள் நாட்டுப்பற்றுடன் குதூகலமாக ஆர்ப்பரிக்கிறார்கள். இத்தகைய எழிலான காட்சிகளுக்கு அப்பால் கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிந்திக்கிடக்கும் இரத்தமும், இன்னமும் மறையாத மனிதப் பிணங்களின் கவுச்சி நாற்றமும் இதே நாட்டில்தான் இருக்கின்றது என்பது என்ன வகை முரண்? இரு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிந…
-
- 14 replies
- 1.6k views
- 1 follower
-
-
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 12:17 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் 'இனஅழிப்பிற்கு' உள்ளாக்கப் படுகின்றனர் என்பதை உலகத்தமிழர்கள் சுட்டிக்காட்ட முனையும் அதேவேளை தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது 'போர்குற்றம்' என்பதை பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் கூறி வருகின்றன. 'போர்குற்றம்' என்றால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படலாம், ஆகக்கூடினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகையோ அல்லது நட்டதொகையோ வழங்கப்படலாம் இது இன்னும் ஒருவகையில் சிறிலங்கா அரசியல் எல்லைக்குட்பட்ட பகுதியாகவே தமிழர்கள் தொடர்ந்தும் வாழ்வதற்கு ஏற்று கொண்டதாக கருதப்படலாம். ஆனால் 'இனஅழிப்பு' என்று நிரூபிக்கப்பட்டால். த…
-
- 1 reply
- 634 views
-
-
பக்கச்சார்பான போர் அனைவரும் ஒல்லாந்து ஹேக் கொண்டு செல்லப்பட வேண்டியவர்களே.. நடைபெற்ற போர் வெறும் அப்பட்டமான பக்கச் சார்பான போராகும் என்று சனல் 4 தெரிவிக்கிறது. - சீனாவின் விமானம், இஸ்ரேலின் விமானங்கள் பறப்பதை அது காட்டுகிறது. இப்படியொரு சின்னஞ்சிறிய நிலப்பரப்பில் உள்ள மக்களை கொன்றொழிக்க வேண்டிய தேவை சீனர்களுக்கு ஏன் வந்தது என்ற கேள்வியை ஒளிநாடா எழுப்புகிறது. - இஸ்ரேலிய கொலைஞர்களுக்கு இங்குவர என்ன முகாந்திரம் இருக்கிறது என்ற கேள்வியையும் அத ஏற்படுத்துகிறது. - மேலும் இந்தியா என்ற வார்த்தையை அவர்கள் உச்சரிக்காமலே சீனாவை உச்சரிக்கிறார்கள். இது மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். சர்வதேச சமுதாயம் பக்கச் சார்பாக நடந்து சமநிலையற்ற ஒரு போரை …
-
- 2 replies
- 861 views
- 1 follower
-
-
14 ஜூன் 2011 அன்புடன் நீதி அமைச்சர் ஹக்கீம் அவர்களே நீங்கள் நலமா? நிட்சயமாக நலமாகவே இருப்பீர்கள். காரணம் இப்போ அரசாங்கத்தின் பக்கத்தில் சகல சௌபாக்கியங்களுடனும் இருக்கிறீர்கள் அல்லவா? முன்னர் எதிர் கட்சி வரிசையில் நாட்டின் அடக்கு முறைக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பில் மனித உரிமைகளுக்காகவும், ஊடக சுதந்திரத்திற்காகவும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த போது பல அசௌகரியங்களை எதிர் நோக்கினீர்கள். காலம் எப்போதும் மனிதர்களை சௌகரியமாகவும் வைத்திருப்பதில்லை. அசௌகரியமாகவும் வைத்திருப்பதில்லை. அந்த சூத்திரத்தின்படி இப்போ உங்களுக்கு சௌகரியமான காலம். மகிந்த ராஜபக்ஸ அன் கொம்பனியின் சர்வாதிகார எதேட்சாதிகார அல்லது அடாவடித்தனமான ஆட்சியின் கீழ் நீண…
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted by: on Jun 11, 2011 ஐ. நா மனித உரிமைச் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி இன்றுடன் (07.06.2011) எட்டு வேலை நாட்கள் முடிந்துள்ளன, ஆனால் இன்றுவரை ஐ. நா வின் நிபுணர் குழுவினால் சிறீலங்காவின் இறுதி யுத்த நிகழ்வுகள் பற்றி வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவாக சிறீலங்கா மீது ஒரு கண்டனப் பிரேரணை மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியங்கள் மிகக் குறைந்தே காணப்படுகின்றன. இதன் ஏமாற்றம் காலதாமதம் பற்றி நாம் ஆராய்வோமானால், பல மறைந்துள்ள காரணங்கள் வெளியாகின்றன. முதலாவதாக - மனித உரிமைச் சபையில் அங்கத்துவ நாடுகள் மூன்றாக பிரிந்து காணப்படுகின்றன. இவை ஐ.சா அறிக்கைக்கு ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒரு பிரிவும், இவ் அறிக்கைக்கு சர்வதேச விசாரணை நடத்தப்படாது எ…
-
- 1 reply
- 783 views
-
-
தீபச்செல்வன் - 9 JUNE, 2011 ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் ஈழத்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் வெறுமையும் அரசின் ஆக்கிரமிப்பு நிலையும் சேர்த்து ஈழத்து மக்களை நிலமற்ற வாழ்வுக்குள் தள்ளியிருக்கிறது. கொடும் போரால் ஈழத்தை ஆக்கிரமித்துள்ள இலங்கை அரசு ஈழத்து மக்களின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் தன் ஆக்கிரமிப்புக் கனவைத் திணித்துவருகிறது. இத்தனை அழிவுகளின் பிறகும் தம் வாழ் நிலத்திற்காகப் போராட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஈழத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. போர் முடிந்த பின்னர் மிகவும் கவர்ச்சிகரமானதாக முன்வைக்கப்பட்ட மீள்குடியேற்றம் என்னும் வார்த்தையில்தான் இந்த நிலப் பிரச்சினை அடங்கியிருக்கிறது. எல்லாத் துயரங்களின் பிறகும் தலைமுறைகளுக்காகவும் சந்ததிகளுக்காகவும் …
-
- 1 reply
- 818 views
-
-
மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். கொல்லப்பட்டவர்காளில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாவர். கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் வதை, அடிக்கப்பட்டு, அல்ல்து துன்புறுத்தப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்ட, இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், 2ம் லெப். வில்லியம் கேலி என்பவனுக்கு மட்…
-
- 0 replies
- 971 views
-
-
ரட்ணஜீவன் கூலும், தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும் : ரகுமான் ஜான் ஒவ்வொரு கலாச்சாரமும், அது எந்த சூழலில் உருப்பெற்றதோ, எப்படிப்பட்ட சூழலில் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அந்த சமூகச் சூழலில் வைத்துத்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். வேற்று ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தமது சமூகத்தில் காணப்படும் கலாச்சார பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்டு, வேறொரு சமூகத்தின் கலாச்சாரத்தை மதிப்பிடுவது, அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் பல்வேறு சமூகங்களின் கலாச்சாரங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிப்பது அபத்தமானது. இந்த விதமான மதிப்பீடுகள் வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் ‘அதிகாரப் படிநிலைவரிசையை’ (Hierarchial Order) கற்பிப்பதற்கும், அந்த கற்பிதங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தை இன்ன…
-
- 2 replies
- 1.1k views
-
-
வன்னிப் பகுதியில் சர்வதேசத்தின் வழிநடத்தலில் சிங்களத்தின் கோரத் தாண்டவம் உச்சம்பெற்று அப்பாவி உயிர்கள் ஒரே நேரத்தில் காவுகொள்ளப்பட்டு குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்று, வரும் 18 ஆம் நாள் இரண்டு ஆண்டுகளை எட்டுகின்றன. ஆனால், வன்னிப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் உள்ளனர். அப்பாவி மக்களை, குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என்ற பாகுபாடு ஏதுமின்றி வகை தொகையின்றி துடிக்கத் துடிக்கக் கொன்றொழித்த சிங்களக் கொடுங்கோல் அரசின் இராணுவத்தினர், அந்த மக்களுக்குரிய சொத்துக்களை சூறையாடித் தனதாக்கிக் கொண்டுள்ளனர். குழந்தைகள் உட்பட உணவின்றி, தாகத்திற்கு நீர்கூட இன்றி, உறவுகளை இழந்த துன்பம் ஒருபுறம் வாட்ட செய்வதறியாது…
-
- 0 replies
- 669 views
-
-
இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையின் வடிவம் சிதைவடையுமானால் தமிழ்நாடு வெறும் அவதானியாக இருக்கமாட்டாது என்பதற்கான உறுதிமொழியாக ஜெயலலிதாவின் அறிக்கை அமைந்திருப்பதாக ஆசிய கற்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் வி.சூரியநாராயணன் குறிப்பிட்டுள்ளார். "ஜெயலலிதாவும் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையும்' என்ற தலைப்பில் சூரியநாராயணன் எழுதியுள்ள கட்டுரையில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; முன்னொருபோதுமில்லாத வகையில் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து ஊடகங்களுடனான தனது முதலாவது சந்திப்பின்போது முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யுமாறு அழ…
-
- 1 reply
- 814 views
- 1 follower
-
-
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி. இலங்கையின் அரசியல் நிலை தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் அவர் எழுதிய ஆய்வு இது. இன்றைய அரசு ஒரு பயங்கரவாத அமைப்புப் போன்றே செயற்படுகின்றது என்று குற்றஞ்சாட்டுகிறார் அவர். அவரது கட்டுரையின் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது. இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது ஏ9 நெடுஞ்சாலை. அதில் படையினரின் கடைசி சோதனைச் சாவடியைத் தாண்டியதும், தமது கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்குவதற்காக விடுதலைப் புலிகள் ஆவணங்களைச் சோதிக்கும் அலுவலகத்தை அடைந்தோம். இது 2002இல் நடந்தது. அன்று அந்தப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்த எவருமே இரண்டு நாடுகளுக்கு இடையில் த…
-
- 1 reply
- 743 views
- 1 follower
-
-
'ஈழத்து சோகம்தான் காவு வாங்கிவிட்டது!’, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் தலை குப்புறக் கவிழ்த்துவிட்டது!’, 'கூட்டணிக் குளறுபடிதான் ஏமாற்றிவிட்டது!’ - தி.மு.கவின் தோல்விக்கு இப்படி எத்தனையோ காரணங்கள் அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குடும்பப் பூசல்! தேர்தல் களத்தில் ஜாம்பவானாக நின்று சாதித்து இருக்கவேண்டிய கருணாநிதி, கோபாலபுரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்குமாக அலைந்து அலைந்தே அல்லாடிப்போனார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கூட்டணிப் பூசல்களைச் சரிசெய்ய முடியாமல் கருணாநிதி போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், கூட்டணிக் குடைச்சலைக் காட்டிலும், அவர் அப்போது அதிகமாக குமைந்துபோனது குடும்பக் குடைச்சலால்தான். 'கனிமொழி என்னைக்கு கட்சிக்கு வந்த ஆள்?…
-
- 0 replies
- 776 views
-
-
யார் தேசிய வாதிகள் ? : சபா நாவலன் தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன? தேசிய விடுதலைப் போராட்டம் எவ்வாறு உருப்பெறுகிறது? அன்னிய ஆதிக்கத்திலிருந்து ஒரு தேசத்தை விடுவித்தலே தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாகும். அன்னிய ஆதிக்கம் என்பது ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்தும் போது அந்த ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான போராட்டமாகும். ஆதிக்கம் செலுத்தும் நாட்டின் பின்பலமாக அதன் பின்புலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் எப்போதுமே காணப்படும். இந்த ஏகாதிபத்திய நாடுகளின் ஒரே நோக்கம் தமது பொருளாதாரச் சுரண்டலை தம்மாலான அனைத்து வழிகளிலும் நிலைநாட்டுவதாகும். ஆக, அடிப்படையில் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அன்னிய மூலதனத்திற்கு எதிரான போராட்டமாகவும் அமைந்திருக்கும…
-
- 0 replies
- 984 views
-
-
புலிகள் போராடியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்..? புதுமாத்தளனும், முள்ளிவாய்க்காலும் தவிர்க்கப்பட்டிருக்குமா..? சிங்களவரின் படுகொலைகளுக்கு நினைவு தினங்கள் தீர்வு தருமா..? புலிகள் என்றொரு இயக்கம் தோன்றாமலும், போராட்டம் என்ற வடிவம் உருவாகாமலும் இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் நின்மதியாக வாழ்ந்திருக்க முடியுமா..? புதுமாத்தளன் சோகங்களின் இரண்டாவது ஆண்டு நிகழ்வில் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1956, 1958, 1978, 1983 என்று சிங்களவர்கள் நடத்திய கலவரங்கள் புலிகள் போராடாமல் இருந்தபோது வந்தவைதான். இதில் கலவரம் என்ற சொல் முக்கியமானது. நிதானமாக இருக்க முடியாத ஓர் இனம் அடிக்கடி கலவரத்தில் ஈடுபடும்.. எனவேதான் புலிகள்…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=1lGR-vbNXCk&feature=player_embedded#at=480
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழ்நாடு தேர்தல் முடிவு ஈழத்தமிழருக்கு சாதகமாக அமையுமா? தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான போது, பெரும்பாலானவர்களை அது ஆச்சரியப்பட வைத்ததா அல்லது அதிர்ச்சியடைய வைத்ததா என்று கூறமுடியாது. அந்தளவுக்கு கணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கியுள்ளது தேர்தல் முடிவு. தமிழ்நாட்டை ஆட்சி செய்த கருணாநிதி தலைமையிலான திமுகவுக்கு இப்படியொரு தோல்வியை எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. அதிமுகவுக்கு இப்படியொரு வெற்றி கிடைக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. உண்மையில் சொல்லப் போனால் இந்த வெற்றியை ஜெயலலிதா கூட எதிர்பார்த்திருக்கமாட்டார். அதுபோல கருணாநிதி இதுபோன்ற தோல்வியையும் எதிர்பார்த்திருக்கமாட்டார். அந்தளவுக்கு இது எதிர்பாராத முடிவைத் தந்துள்ளது. அதி…
-
- 0 replies
- 785 views
-
-
அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த ஒசாமா? பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை. பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார். 1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார். 1984 -தனது உல்லாச விடுதியை அமைத்து, (பாகிஸ்தான் எல்லை) அங்கிருந்து தன் கண்காணிப்புகளை ஆரம்பித்தார். ஆப்கானில் தனது முகாம்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம் குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்களராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை புகைப்படத்தில் காணும்போது இதயம் சுக்குநூறாக வெடிப்பது போலவே இருக்கிறது. கண்கள் திறந்தபடியும், குத்திட்டபடியும் நிலைத்த பார்வையுடன் எமது விடுதலைப் போராளிகளின் உடல்கள் அந்தப் புகைப்படத் தொகுப்பில் நிறைந்து கிடந்தன. அந்தக் காட்சிகள் எளிதில் மனதைவிட்டு போகப்போவதில்லை. இன்னும் மிக நீண்டகாலத்துக்கு எப்படி.. ஏன்.. யாரால்… இப்படி நிகழ்ந்தேறியது என்ற கேள்வி அந்தப் புகைப்படங்களை பார்ப்பவர்களின் மனதை போட்டு பிசைந்து பிசைந்து மன உறுதியை உடைத்தெறிந்து தூளாக்கிவிடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
வரலாற்றுப் பிழையை திருத்துமா இந்தியா ? 2009-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற ஈழப்படுகொலைகளுக்குப் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்கள் கொடுங்கனவுகளைத் தரும் மாதங்களாக மாறிப் போய்விட்டன. மனிதாபிமானம் கொண்ட, ஈர மனம் கொண்ட எவரது நினைவுகளும் அந்த ரத்தத்தில் தோய்ந்துதான் போயிருக்கும். ஈழத்து மகளிரும், குழந்தைகளும், பதுங்கு குழிகளும்தான் கனவுகளின் உருவங்கள். ஈழத்துப்போரில் இந்தியா நடந்து கொண்ட விதமும், மனிதாபிமானமற்ற முறையில் அமைதி காத்த விதமும் நமக்கு எரிச்சலை மட்டுமல்ல, கடுங்கோபத்தையும் ஏற்படுத்தியது. அசோகரின் தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட தேசியக் கொடியை ஏற்றவோ, கொண்டாடவோ நமது ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையும், அருகதையும் கிடையாது. பிரபாகரனை பழிவாங்குகி…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத்தமிழராகிய நாம் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டுள்ளோம். அதாவது நமது அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான போராட்டம் பலவாய்ப்புக்களினை அறுவடைசெய்யாமலேயே நகர்ந்து வந்திருக்கின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் முதிர்ந்த தமிழ் அரசியலாளருமான திரு.இராசம்பந்தன் அவர்களும் எமது இணையத்தளத்திற்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் இவ்வொத்தகருத்தினையே தெரிவித்திருந்தார். இந்நிலையில், எமது அரசியல் நகர்வுகள் முன்னோக்கியதாக இருக்கின்றதா அல்லது வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விக்கு ஈழத்தமிழ்மக்கள் இன்று வந்தடைந்துள்ள சூழமைவே விடைதருகின்றது. அதாவது குளிர் வலைய தெருக்களில் பனிச் சேற்றில் கால்புதைய, பதாகைகள் தாங்கிய கைகள் கனத்தி…
-
- 2 replies
- 893 views
-