அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
வித்தியா முதல் றெஜினா வரை.... சமுதாய சம்பிரதாயங்களை மூட்டை கட்டிவிட்டு, நாகரிக அலங்கோலங்களின் அவஸ்தைக்குள் பலர் தங்களைத் தாங்களாகவே தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது பிறரால் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவற்றின் விளைவுகள் சமகாலத்தில் பல சமூகப் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. சமூக விரோதச் செயற்பாடுகளையும் அவை தூண்டியிருக்கின்றன. ஆன்மீக ரீதியில் உள்ளத்தை அடக்கி ஆளவேண்டிய ஆறறிவு கொண்ட மனிதன் உள்ளத்தால் அடக்கி ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு சில வினாடித்துளிகளில் எழுகின்ற உணர்ச்சிக் கோளாறுகளுக்கு அடிமையாகி, அதன் வழியே பலரின் வாழ்க்கையில் விளையாடி, அவர்களும் அழிந்து ம…
-
- 0 replies
- 622 views
-
-
வித்தியாவின் மரணத்தின் பின்னரான சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரல் நிர்மானுசன் பாலசுந்தரம் பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை வெறும் துயர் பகிர்வோடு நிறைவுற்றன. கிரிசாந்தி, கோணேஸ்வரி மற்றும் ரஜனி போன்றவர்கள், குறிப்பாக கிரிசாந்தி மீதான சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் கூட்டு பாலியல் பலாத்காரம் சர்வதேச அளவில் பேசப்பட்டும் கூட, மக்கள் போராட்டத்திற்கான ஓர் உடனடியானதும் நேரடியானதுமான தோற்றுவாயாக மாற்றம் பெற்றிருக்கவில்லை. ஆயினும், புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்தியா என்னும் …
-
- 0 replies
- 608 views
-
-
வித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் – நிலாந்தன் வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின்னரான ஒரு காலச்சூழலில் குறிப்பாக ஐ.நாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறுகால நீதிச் சூழலில் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் பாராட்டும் விதத்தில் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தமிழ் ஊடகங்களிலும், இணையப்பரப்பிலும் இத்தீர்ப்பு சிலாகித்து எழுதப்படுகிறது. வித்தியாவின் தாய்க்கு வழங்கிய வாக்குறுதியை அரசுத்தலைவர் ஒப்பீட்டள…
-
- 1 reply
- 390 views
-
-
விபத்தல்ல சீனாவின் சதியாக இருக்கலாம்" சுப்ரமணியசாமி
-
- 1 reply
- 510 views
-
-
விபரீதங்களோடு விளையாடும் விந்தை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது அல்ல; ஆனால், ‘முன்னே ஓடவிட்டுப் பின்னே துரத்தும்’ வித்தையை, இந்தப் பெருந்தொற்றை வைத்து, அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபத்தான விளையாட்டைப் பெரும்பாலான நாடுகள் விளையாடுகின்றன. அந்த நாடுகள், தமது சொந்த மக்களின் உயிரைப் பணயம் வைத்து, இந்த வித்தையை ஆடுகின்றன. இங்கே எழுகின்ற கேள்வி யாதெனில், இவ்வாறானதோர் ஆபத்துப் பற்றி, அறிவியலாளர்கள் தொடர்ச்சியாகச் சொல்லி…
-
- 0 replies
- 828 views
-
-
விபரீதமாகும் விவகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலுள்ள அவநம்பிக்கைகள் அபிப்பிராய பேதங்கள் என்ற எதிர் மனப் போக்குகள் ஆயுத பண்பு கொண்ட குழுக்களுக்கு இடையே அடிக்கடி முனைப்பு பெற்றுக் கொண்டாலும் மாற்று தகைமைகளுக்கான சிந்தனைகளையோ எண்ணங்களையோ தோற்றுவிக்காத போக்கே இருந்து வந்துள்ளது. இந்த போக்குக்கு ஒரு மாற்று நிலை உருவாக வேண்டிய தேவை. இரண்டு இடை நிலைப் புள்ளிகளிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பது ஒரு நிதர்சனமான உண்மை. அந்த புள்ளிகள் பற்றி அதிகம் ஆராய வேண்டிய அவசியமில்லை. ஒன்று வடமாகாண சபைத் தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட ஆளுமை. இன்னொன்று தமிழ் தேசியம் தடுமாறிப் போகிறது என்…
-
- 0 replies
- 819 views
-
-
விமல் வீரவன்சவும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன். விமல் வீரவன்ச அறிவித்திருக்கிறார்,தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று.ஏனென்றால்,நாடாளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெறக்கூடிய பெரும்பான்மையை பாதிக்கும் விதத்தில் அதற்கு எதிராக போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்க அவர் விரும்பவில்லையாம். அவர் ஜேவிபியில் இருந்தவர். அதன் தீவிர இனவாத முகம். தனது தோழர்களின் வெற்றிக்காக வழிவிடும் அவருடைய மேற்படி அறிவிப்புக் குறித்து அரசியல் வட்டாரங்களில் வேறு ஒரு விளக்கம் உண்டு.அவனுடைய மனைவி ஒரு வழக்கில் மாட்டுப்பட்டு இருக்கிறார்.அந்த விவகாரத்தை மீண்டும் ஜேவிபியின் அரசாங்கம் கிளறி எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அதனால்தான் ஜேவிபியை சந்தோஷப்படுத்த விமல் அவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பத…
-
- 0 replies
- 367 views
-
-
விமான நிலையமா மீள்குடியேற்றமா முன்னுரிமைக்குரியது? நிருபா குணசேகரலிங்கம்:- 14 பெப்ரவரி 2016 பலாலி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக வடக்கில் உள்ள பிரதான ஆழ்கடல் மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டி பகுதியை சுவிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் கடும் எதிர்ப்பினைச் சந்தித்து நிற்கின்றது. இராணுவ நடவடிக்கைகள் மூலம் கடந்த 26 வருடங்களுக்கு முன்னதாக தமது வாழ்விடங்களை விட்டு வலிகாமம் வடக்கு மக்கள் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறாக வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை தமது நிலங்களில் அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். இப் போராட்டங்களில் எல்லாம் ஏனைய பிரதேசங்களைப் போல மீள்…
-
- 0 replies
- 537 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் தன்னைத் தொடர்புகொண்டு தன் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றும்படி கேட்டதாகப் புதுக்கதை விட்டுள்ளார் கேபி. இவர் கூறுபவற்றை மறுக்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைமையின் இப்போதைய நிலை இல்லாமையினால் தான் நினைத்ததை எல்லாம் கூறலாம் என்கிற காரணத்தினால் நம்ப முடியாத கருத்துக்களைக் கூறி தமிழீழ விடுதலையின் மகிமையைக் குறைக்கும் செயலில்ஈ டுபட்டிருக்கிறார் கே.பி. நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலத்தில் தான் புலம்பெயர் இடத்திலிருந்து கடினமாகப் பணியாற்றி எப்படியாவது விடுதலைப் புலித் தலைமையைக் காப்பாற்றி விடலாம் என்று முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார் கே.பி. கருணா, கே.பி.இ பிள்ளையான் போன்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறு…
-
- 4 replies
- 947 views
-
-
வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள் வியட்நாம்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க வல்லரசை 1975ஆம் ஆண்டு வீழ்த்தி 30 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் வியட்நாமிய மக்கள், குறிப்பாக, விவசாயிகள் போராடிப் பெற்ற இந்த வெற்றி உலக வரலாற்றில் ஒரு சகாப்தம். அமெரிக்க அதிபர்கள் கென்னடி முதல் நிக்சன் வரை 10 ஆண்டுகளாக 50 சதவீத தரைப்படை, விமானப்படைகள், 15 விமானம் தாங்கிக் கப்பல்கள் என 10 லட்சம் துருப்புக்களைக் குவித்துக் கொண்டும், ஒரு கோடி டன் வெடிகுண்டுகள்; என வெறிகொண்டு தாக்கியும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
வியாட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்கர்கள் மனம் மாறியதற்கு 2 சம்பவங்கள் தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. குறித்த மனிதன் ஒருவனின் படுகொலை. மற்றயது ஒரு சிறுமி ஒருத்தியின் உடல் எரிபட்ட நிலையில் அவள் ஓடியது. http://www.youtube.com/watch?v=EvTO3SCaJcg
-
- 15 replies
- 6.9k views
-
-
அரசாங்கம் நியமித்திருந்த காணாமற் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க சர்வதேச மட்டத்தினை மனித உரிமைகள் மற்றும் யுத்தகுற்றங்கள் பற்றிய சட்ட நிபுணர்கள் மூவரை வரவழைக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பது சற்றும் எதிர்பாராத ஒன்றாகும். இத்தீர்மானம் அமைச்சரவையில் உள்ள சிரேஷ்ட அங்கத்தினர்கள் சிலருக்குமே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே மனித உரிமைகள் மீறல்களும் யுத்தக் குற்றங்களும் இடம்பெற்றமை குறித்த குற்றச்சாட்டை பெருமளவுக்கு உறுதியான முறையில் அரசாங்கம் மறுத்து வந்திருக்கின்றது. அரசாங்கத்தால் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளிலுமே அவ்வாறான குற்றங்கள் எதும் இடம்பெறவில்லை, என்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடே தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்…
-
- 0 replies
- 679 views
-
-
ஒருவரை ஒரு அறையில் கட்டிவைத்து தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை விடாமல் தொடர்ந்து இரண்டு நாள் பார்க்கவைத்தால், அவர் OSD என்று அழைக்கப்படும் Obsessive-compulsive disorder என்கிற மனநோய்க்கு ஆளாகி விடுவார் போல தெரிகிறது. உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக்கொண்டிருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை விளம்பரங்கள் விடாமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. இது தொடர்பாக கார்ப்பரேட் சித்தனின் அனுபவங்களை அறிந்து கொள்ள அவரை அணுகினேன். காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு …
-
- 1 reply
- 755 views
-
-
இரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசித்துவிட்டு இதைப்படிப்பது சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். இணைந்த இணைப்பில் சென்று வாசிக்கவும்: இரணைமடு நீர்வழங்கல் திட்டம் இனி விடையத்திற்கு வருவோம். சுண்ணாக பிரதேச நிலத்தடி நீர் ஏறத்தாள முழுவது எண்ணை கலக்கபட்டுவிட்டது என்பது உலகறிந்த விடையம். இந்த எண்ணைக் கலப்பானது சுண்ணாகத்தை மட்டுமின்றி அண்டிய ஏனைய நிலங்களுக்கும் பரவும் என்பது புரிந்து கொள்ள முடியாத விடையமல்ல. சுண்ணாக மின்நிலையத்தினூடாக நிலத்தடி நீர் மாசுபடுத்தபட்டதற்கு பின்னணியில் பெரும் வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத மக்கள்…
-
- 1 reply
- 3.8k views
-
-
வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள் நிலாந்தன் மகிந்த ராஜபக்ச இவ்வளவு அமைதியாகக் கவிழ்க்கப்படுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அவரும் கூடத்தான். அவர் இவ்வளவு அமைதியாக ஆட்சிப்பொறுப்பை மைத்திரியிடம் கையளிப்பார் என்றும் அநேகமானவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலில் அவர் தோற்றால் ஆட்சிப்பொறுப்பை கையளிக்க மறுத்து படைத்தரப்பின் உதவியைப் பெறக் கூடும் என்றவாறான ஊகங்கள் ஏற்கெனவே மேற்கத்தேய தூதரகங்கள் மத்தியில் காணப்பட்டன. சக்திமிக்க நாடொன்றின் தூதுவர் இது தொடர்பாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரோடு உரையாடியிருக்கிறார். ஆனாலும் கத்தியின்றி இரத்தமின்றி ஆட்சிமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அது மட்டுமல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான பிடியை அவர் அமைதி…
-
- 0 replies
- 433 views
-
-
விரகத்தியின் வெளிப்பாடு ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறி, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களை இன ரீதியாகவும் மத ரீதியாகவும் ஒடுக்குகின்ற நடவடிக்கைகளை அமைதியாக, ஆரவாரமின்றி மேற்கொண்டிருக்கின்றது. தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களும், அரச கடமைக்காக வடக்கிலும் கிழக்கிலும் நிலைகொண்டுள்ள பாதுகாப்புப் படையினருடைய ஆன்மீக தேவை என்ற போர்வையில் புத்தர் சிலைகளை அமைப்பது மட்டுமல்லாமல், அரச நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் சொந்தமான காணிகளுடன், இந்து ஆலயங்களுக்குச் சொந்தமான காணிகளிலும், அவற்றுக்கு அருகாமையில் உள்ள காண…
-
- 0 replies
- 652 views
-
-
விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே! June 29, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழி, தமிழ்ச் சமூகத்தை மட்டுமல்ல, மனித விழுமியங்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கே முடிவற்ற நிலையில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை எலும்புக் கூடுகள் மீட்கப்படும் என்று தெரியவில்லை. உண்மையில் அவை எலும்புக் கூடுகள் அல்ல. உயிருடன் கொல்லப்பட்ட மனிதர்களேயாகும்! இதுவரை மீட்கப்பட்டவற்றில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளும் உள்ளன. இது மேலும் அதிர்ச்சியையும் சமூகக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவை அரசியல் ரீத…
-
- 0 replies
- 180 views
-
-
விரல்களை வெட்டிக்கொண்ட மனிதர்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! மதம் தொடர்பிலான சடங்களுக்காக மனிதர்கள் தங்களது விரல்களை வெட்டிக்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பில் சற்று விரிவாக பார்க்கலாம்…… வரலாறுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்கள் மதம் தொடர்பான சடங்கு ஒன்றிற்காக தங்களது விரல்களை வெட்டிக் கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள குகை ஓவியங்களில் புராதன கால சாயங்களில் தோய்த்து சுவர்களில் பதிக்கபட்டுள்ள கை அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில…
-
- 0 replies
- 542 views
-
-
விரிசல்களுக்கு வழிவகுத்த உள்ளூராட்சித் தேர்தல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் பல பாடங்களை கற்பித்திருக்கின்றன. தேசிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளதோடு ஆட்சியாளர்கள் மீளவும் தமது சேவைகளை திரும்பிப் பார்ப்பதற்கும் தேர்தல் முடிவுகள் வழிவகுத்திருக்கின்றன. மேலும் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் வழங்குகின்ற வாக்குறுதிகளை உரியவாறு நிறைவேற்ற வேண்டும். மக்களை ஏமாற்ற முனைபவர்களை மக்களே தூக்கியெறிவர் என்கிற சிந்தனையையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்ற…
-
- 0 replies
- 264 views
-
-
விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம் ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர், இப்போது மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி, இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும் மியான்மரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக இந்தியப் பெரு முதலாளிகளின் சங்கமான "ஃபிக்கி' பூரிக்கிறது. இவை ஒருபுறமிருக்க, கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்சுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு, வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை அடுத்துள்ள தைவானுக்கு மிகப்பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மே…
-
- 0 replies
- 747 views
-
-
பல பிரமிப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும் சுமந்து நிற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தில், ஒடுக்கு முறைக்கெதிராகக் களமாடி வீரமரணமெய்திய கப்டன் பண்டிதரின் 27வது வருட நினைவு வணக்கம் ஜனவரி 9ம் நாள். விடுதலைக்கான பாதையை வெட்டி, அதில் பலர் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள்தான் வரலாற்றை வரைபவர்கள். மாற்றங்களை உருவாக்கும் உந்து சக்திகளும் இவர்களே. இந்த மாமனிதர்களை நினைவு கூருவது, அவர்களின் இழப்பில் வெளிக் கொணரப்பட்ட போராட்ட உணர்வுச் செய்தியை மக்களுக்களிடையே கொண்டு செல்வது, வரலாற்றை எழுதுபவர்களின் பணியாகிறது. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோமென 2009 மே 18 இல் வெற்றி முழக்கமிட்ட சிங்கள பேரினவாத தேசம், புலிகளின் அனுதாபிகளால் ஆபத்தென கூக்குரலிடத் தொடங்கிவிட்டது. இதில் ஒரு உண்மையும…
-
- 0 replies
- 572 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-14#page-3
-
- 0 replies
- 430 views
-
-
விருந்தகங்களில் வேட்பாளர்கள் தேங்காய் கியூவில் வாக்காளர்கள்? – நிலாந்தன். மருத்துவர் அர்ஜுனா மான் கட்சியின் பெண் வேட்பாளரோடு நாகரீகமின்றி நடந்து கொண்டது ஒரு விருந்தகத்தில் ஆகும். அது தொடர்பாக ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட பெண் வேட்பாளராகிய மிதிலைச்செல்வி அந்த விருந்தகத்துக்கு தானும் உணவருந்தச் செல்வதுண்டு என்று கூறுகிறார். தனக்குத் தெரிந்தவர்களையும் அங்கு விருந்துண்ண அழைத்துச் செல்வதுண்டு என்றும் கூறுகிறார். சம்பவம் நடந்த போது அந்த விருந்தகத்தில் நிறையப் பேர் தெரிந்த ஆட்கள் இருந்ததாகவும், அவர்களில் அனேகர் ஏதாவது ஒரு கட்சியோடு தொடர்புடைய ஆட்கள்தான் என்றும் கூறுகிறார். அதாவது அவர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்த தகவல்களின்படி அர்ச்சுனாவும் உட…
-
- 0 replies
- 237 views
-
-
விருப்பு வாக்கை அளிப்பது பொது வேட்பாளர் நிலைப்பாட்டையே தகர்க்கும் | பத்திரிகையாளர் அ. நிக்ஸன்
-
- 0 replies
- 463 views
-
-
விரைவான தீர்வுதான் தமிழர்களின் தேவை இனப் பிரச்சினைக்கு நடப்பு ஆண்டுக்குள் தீர்வு கிடைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கூறியுள்ளமை தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கொழும்பு அரசு மற்றும் இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுச் சமூகத்திடம் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கூறியுள்ளமை குறிப்பிடத் தக்கது. கூட்டரசிடம் தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை முற்றாகவே இழக்கப்பட்ட நிலையில், தமிழ் மக்களது ஏகப் பிரதிநிதிகளாகக் கருதப…
-
- 0 replies
- 392 views
-