அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
வேற்றுமையால் தீமையே விளையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எழுதிய ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் வெளியீட்டு விழா இம்மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பின்வருமாறு கூறியிருக்கிறார். நான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தபோது அவர் மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசுமாறு கூறினார். அதன்படி நாம் மஹிந்தவைக் கண்டதும் மஹிந்த என்னைப்பார்த்து எனது தோல்விக்கு நீரே காரணம் என்றார். உடனே நான் அதற்கு…
-
- 0 replies
- 374 views
-
-
வேலைகோரிப் போராடும் பட்டதாரிகளின் கலைந்த கனவுகள் தொலைத்ததை மீட்குமா அரசாங்கம்? - கருணாகரன் இந்திரகுமாருக்கு வயது 28. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார். குடும்பத்தில் அவர்தான் முதலாவது பட்டதாரி. அவர், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியபோது, குடும்பமே மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியது. இருக்காதா பின்னே, குடும்பத்தில் முதலாவது ஆளாகப் பட்டதாரியாகப் போகிறார், படித்துத் தொழில் செய்யப்போகிறார் என்றால், எவ்வளவு பெரிய மகிழ்ச்சியும் ஆறுதலும் ஏற்படும் அந்தக் குடும்பத்துக்கு!. இந்திரகுமாரை நினைத்து, மிகப் பெரிய மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டது. சந்தோஷத்த…
-
- 0 replies
- 324 views
-
-
வேலையற்ற பட்டதாரிகளும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். வேலை தேடும் பட்டதாரிகள்,ஜனாதிபதியின் வருகையையொட்டி, யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.போலீசார் அவர்களை கச்சேரியை நோக்கி வர விடவில்லை.அவர்களை கண்டி வீதியில்,கச்சேரிக்கு அருகே அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய சூழலில் வைத்து மறித்து விட்டார்கள். அதேசமயம் ஜனாதிபதி அவர்களுடைய கண்ணில் படாமல் பழைய பூங்கா வீதி வழியாக வெளியேறிச் சென்று விட்டார்.பட்டதாரிகள் தங்களுடைய முறைப்பாட்டை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியவில்லை. தமிழ்ப்பகுதிகளில் மட்டும் 3000த்துக்கும் குறையாத பட்டதாரிகள் நிரந்தர வேலையின்றி இருக்கிறார்கள். நாடு முழுவதும் சுமார் 30,000 பட்டதாரிகள் அவ்வாறு உண்டு என்று ஒரு பட்…
-
- 0 replies
- 302 views
-
-
வேலையில்லா பட்டதாரி வேலையின்மை என்பது தொழில் இன்மை என்பது மட்டும் அல்ல... மன விருப்பம் இன்றி பிடிக்காத தொழிலை சிலுவை போல சுமப்பதும் மனதளவில் வேலையின்மை போன்றதே.. இத்தனை வருடங்கள் லயத்து பிரச்சினை பற்றி பேசியது போதும் இனி சமூக மாற்றத்தை உருவாக்க சிறந்த தொழில் வாய்ப்பை பெற உதவுங்கள் மலையகத்தில் மாற்றம் தானாகவே உருவாகும்.... வேலையில்லா பட்டதாரி இது தனுஷோட படம் கிடையாது. எங்களோட வாழ்க்கை. தேயிலைக்கு இரத்தத்தை பாய்ச்சி தேநீருக்கு நிறத்தை கொடுத்த ஒரு சமூகத்தின் இன்றைய படித்த தலைமுறையின் ஒரு குரல் என் பேனாவின் வழியாக இங்கு ஒலிக்கிறது.. இயற்கையோட இயைந்த வாழ்வு சங்க காலம் என்பார்கள். உண்மையில் மலையக…
-
- 0 replies
- 904 views
-
-
வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை - கருணாகரன் வேலைகோரும் பட்டதாரிகள் வீட்டிலும் வீதியிலுமாக நிறைந்து போயிருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களால் என்ன செய்ய முடியும்? வேலை கேட்டுப்போராடுவார்கள். இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் அக்கறைப்படவில்லை என்றால், அதைக் கோவிப்பார்கள், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள். கூடவே தங்களுக்கு முன்னே உள்ள அரசியல்வாதிகளையும் அதிகார அமைப்புகளையும் எதிர்ப்பார்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டதாரிகளின் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்க…
-
- 0 replies
- 329 views
-
-
வேலையில்லாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி - அதிரதன் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளிகள் எப்போது வைக்கப்படும்? இதனை யார்தான் வைப்பார்கள் என்பது இப்போதைக்கு கேள்விதான். இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம், முதுகெலும்பென்றெல்லாம் சொல்லப்பட்டு வருகின்ற நேரத்தில் இப்போதும் தொடர்ந்த வண்ணமிருக்கின்ற இளம் பட்டதாரிகளின் முயற்சிகளுக்குப் பதில் என்ன? இதுதான் இந்தப் பத்தியின் கரு. வடக்கு, கிழக்கில் பட்டதாரிகளின் போராட்டங்கள், காணி மீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் என்று பல வடிவங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு 2015 இல் தொடங்கி வைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் வழி விட்டுக் கொடுத்திருக்க…
-
- 0 replies
- 313 views
-
-
வேலைவாய்ப்பின்றி இருக்கும் முன்னாள் போராளிகள் – அமந்த பெரேரா சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகிய போதிலும், பெரும்பாலான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போதும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கின்றனர். இவர்கள் வாழும் பிரதேசங்களில் பல பில்லியன் டொலர்களில் முதலீடு மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவர்கள் தமக்கான தொழிலைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னாள் தமிழ்ப் புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி மற்றும் தொழிற் பயிற்சிகள் தொடர்பான கட்டாய ‘புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தில்’ சிவலிங்கம் ருவேந்திரதாசும் மூன்று ஆண்டுகள் பயிற்சிகள் பெற்…
-
- 0 replies
- 487 views
-
-
வை திஸ் போர்க்குற்றம்.. சுவாமி – ரணில் குழப்பம் சிறீலங்காவுக்கு வந்த இந்திய சுப்பிரமணிய சுவாமி கூறிய கருத்து சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவானது என்று பல தமிழ் ஊடகங்கள் எழுதியுள்ளன. ஆனால் சுவாமி, சோ போன்றவர்களை கருத்துக் கூறவிட்டால் நான் சொல்லமாட்டேன், நான் சொல்லமாட்டேன் என்று எல்லா உண்மைகளையும் அவிழ்த்து விட்டுவிடுவார்கள். போர்க் குற்றம் தொடர்பாக சுவாமி தெரிவித்த கருத்தை சரியாக ஊடுருவி நோக்கினால் மகிந்த ராஜபக்ஷவும், சகோதரர்களும் தலை தலையாக அடிக்க வேண்டும். போர்க் குற்றம் நடைபெற்றமைக்கு ஆதாரம் இல்லை என்று சுவாமி சொல்லியிருக்கிறார். ஆதாரம் இல்லாத காரணத்தால் மட்டுமே மகிந்த குற்றத்தில் இருந்து தப்பிவிடுகிறார்கள் என்ற கருத்து மிக ஆபத்தானது. - சுவாமி போர்…
-
- 1 reply
- 941 views
-
-
http://www.yarl.com/forum3/topic/185803-வைகோவிற்கு-கிடைத்துள்ள-சந்தர்ப்பம்/#comment-1223338 தகுதி, திறமை இருந்ததும் வைக்கோ ஒரு அதிஷ்டாமில்லா அரசியல் வாதி. திமுகவின் உண்மையான தொண்டராக, கலைஞர் மேல் விசுவாசம் மிக்க ஒருவராக இருந்த இவர், எதிர்காலத்தில் தனது வாரிசுகளுக்கு தடையாக இருக்கும் அளவு வளர்ந்து வருகிறார் என்றவுடன், வீண் பழி சுமத்தி வெளியே திருத்தி அடிக்கப் பட்டார். கட்டுமரத்தின் வாரிசுகள் சண்டையே அவரையும், அவரது கட்சியையும் அழிக்கப் போகின்றது என்பது வேறு கதை. தனியே கட்சி தொடங்கினாலும், அதை கரை சேர்க்க தேவையான பணம் அவரிடம் இருந்ததில்லை. பணத்தினை எறிந்து அவரையே கட்டுமரம் விழுத்திய போது, வேறு வழி இன்றி, சிறையில் அடைத்த அம்மாவுடன் கூட்டு சேர்ந்தார். …
-
- 4 replies
- 786 views
-
-
வைரஸா? தேர்தலா? ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங்களிலும் கைபேசிச் செயலிகளிலும் ஒரு செய்தி பரவலாக பகிரப்பட்டது. அதில் யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் காரணமாக பட்டினி கிடக்கும் எவரும் குறிப்பிட்ட ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்மூலம் யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து குறிப்பிட்ட நபருக்கு உதவிகள் கிடைக்கும் என்றுமிருந்தது. இச்செய்தியின் உண்மைத் தன்மையை ஊடகவியலாளர்களிடம் விசாரித்தேன். யாழ் மாவட்ட செயலர் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் அப்படி ஒரு இலக்கத்தை கொடுத்ததாகச் சொன்னார்கள். இப்போது உள்ள நிலைமைகளை பொறுத்தவரை அது ஒரு நல்ல செயல். உதவி தேவைப்படுவோர் நேரடியாக மாவட்ட செயலககத்தோடு தொடர்பு கொள்ளலாம். ஆன…
-
- 1 reply
- 666 views
-
-
வைரஸ் தொற்றுக்குள்ளும் ஓயாத வாட்கள் ? நிலாந்தன்! July 11, 2021 அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு இசையமைத்த பாடல்களின் தரத்துக்கு அது இல்லை. ஏன் இப்பொழுது உன்னதமான பாடல்களை எங்களால் உருவாக்க முடியவில்லை” என்று கேட்டேன். 1980களில் 90களில் நாடகங்களுக்கும் அரசியல் தேவைகளுக்கும் பாடல்களை உருவாக்கிய பலரும் இசையமைப்பாளர்களை உறங்க விடுவதில்லை. அவர்கள் உருவாக்கித்தரும் மெட்டுக்களை எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்வதுமில்லை. இது போதாது இது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு தொடர்ச்சியாக நச்சரித்து ஒரு பாடல் அதன் உன்னதமான உ…
-
- 0 replies
- 743 views
-
-
வைரஸ் மட்டுந்தான் தோல்விகளுக்கு காரணமா? நிலாந்தன். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த அரசுத் தலைவரும் அரசும் இப்பொழுது ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆட்சிக்குள்ளேயே பங்காளிக் கட்சிகள் அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அவ்வாறு அரசை விமர்சித்த சுசில் பிரேம் ஜயந்த அண்மையில் ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரைப் பதவி நீக்கியமை ஒரு குறியீட்டு நடவடிக்கை என்று தென்னிலங்கையில் வர்ணிக்கப்படுகிறது. அவர் மஹிந்தவுக்கு நெருக்கமானவர். அவரைப்போலவே அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிக்கும் பங்காளிக் கட்சித் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றவர்களும் மகிந்தவிற்க…
-
- 1 reply
- 466 views
-
-
ஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும் கே. சஞ்சயன் / 2019 ஓகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 11:30 Comments - 0 மிக முக்கியமான தருணமொன்றில், இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்குப் பின்னாலுள்ள அரசியலும் அரசியலில் எதிர்பார்க்கப்படும் தாக்கங்களும், மிக முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இந்த நியமனம் இடம்பெற்றிருக்கிறது. அதுவும், பிரதான வேட்பாளராகப் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவரே, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு, சர்வதேச அளவில் கடு…
-
- 0 replies
- 609 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் பதவியேற்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து திருப்தியான கருத்து வெளிவந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன், பக்கச்சார்பின்றி நடந்துகொள்வார் என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாகச் செயற்படுவார் என்றும் கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டிருந்தார் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல. அவர் இத்தகைய கருத்து வெளியிட்டதற்கு, கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நவநீதம்பிள்ளை மீதிருந்த வெறுப்புத்தான் காரணம். இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியான 2008ஆம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பதவியை பொறுப்பேற்ற நவநீதம்…
-
- 1 reply
- 491 views
-
-
ஸ்கொட்லாந்தின் அனுபவத்திலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.. நிலாந்தன்:- 21 செப்டம்பர் 2014 ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் பின்னணியில் இக்கட்டூரை எழுதப்படுகிறது. ஸ்கொட்டிஷ; மக்களின் முடிவு எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தமது தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்குரிய ஓர் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இங்கு முக்கியம். தென்சூடானியர்களுக்கும் கிழக்குத் தீமோரியர்களுக்கும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில மக்கள் கூட்டத்தினருக்கும் அவ்வாறு தமது தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஈழத்தமிழர்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வழங்க…
-
- 1 reply
- 456 views
-
-
ஸ்கொட்லாந்து பிரிவினையின் பின்புலம் – சில குறிப்புக்கள் : சபா நாவலன் அத்லாந்திக் சமுத்திரத்தின் உள்ளே தலையை நுளைத்து பிரித்தானியாவை உதைத்துக்கொண்டிருக்கும் அழகிய குடாநாடு தான் ஸ்கொட்லாந்து. ஏறக்குறைய 790 தீவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அழகான தேசம். பிரித்தானியாவின் இன்னொரு அங்கமான இங்கிலாந்திலிருந்து பயணித்தால் அழகிய நீண்ட மலைகளும் அருவிகளையும் அண்மித்த லேக் டிஸ்ரிக்கைத் தாண்டும் போதே ஸ்கொட்லாந்து எல்லைய அடைந்துவிட்டதாக உணரலாம். எடின்பரோ ஸ்கொட்லாந்தின் தலை நகரம். விசாலமான வீதிகளும், விண்ணைத் தொடத கட்டடங்களும் ஆர்ப்பாட்டமில்லாத தலை நகரம் ஒன்றை அறிமுகப்படுத்தும். கிளாஸ்கோ ஸ்கொட்லாந்தின் தொழில் நகரம். உலகில் அதிகம் பணப்பரிவர்த்தனை நடைபெறும் நகரங்களில் கிளாஸ்கோவைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா ? கடந்தவாரம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் ஐக்கிய இராட்சியத்தில் ஸ்கொற்லாந்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காக எடின்பரோ நகரிற்கு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஸ்கொற் தேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரம்பற்றிய விபரமறியாத சில தமிழ் இணையதளங்கள் உலகில் அதியுயர் சமஸ்டி நிலவுகிற ஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் பற்றி அறிந்துகொள்வதற்காவே இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. செய்திகளை வெட்டி ஒட்டும் இவ்விணைய தளங்களைப்போலன்றி, அறுபத்தேழு வருடகாலமாக சமஸ்டிக்கோரி…
-
- 0 replies
- 547 views
-
-
இலங்கைத் தீவு பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து 1948 இல் விடுபட்டது முதல்.. ஸ்தூபி அரசியல் என்பதே தமிழர்களின் உரிமையாகி இருந்தது.சந்திகள் தோறும்.. சிங்கள அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி.. பாரதிக்கு.. வள்ளுவனுக்கு.. ஒளவையாருக்கு.. சிலை அமைப்பதே அன்றைய பொழுதுகளில் தமிழர்களின் தலையாய அரசியல் உரிமையாக காண்பிக்கப்பட்டு வந்தது. அவை பெரிய அரசியல் வெற்றியாகவும் கொண்டாடப்பட்டு வந்தன. 1972 இல் தோன்றிய போராளி அமைப்புக்கள்.. குறிப்பாக விடுதலைப்புலிகள்..1986 முதல்.. ஆயுத வழியில் சிங்கள இனவாத இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கியது முதல் இந்த ஸ்தூபி அரசியல் என்பதை சிங்களமும்.. சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒத்தூதும் சிறுபான்மை ஆயுத அரசியல் குழுக்களும் கைவிட்டிருந்தன. இப்போ முள்ளிவாய்க்கால் …
-
- 4 replies
- 824 views
-
-
ஸ்நோவ்டென் வேட்டை - 6 மொஸ்கோவின் ஸெரமெட்டியோவோ விமான நிலையத்தில் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருந்த ரஷ்யக் காவற்துறையினரின் அபாயச்சங்கொலி ஒருவாறாக நின்றுள்ளது. கிட்டத்தட்ட ஆறு கிழமைகளின் பின்னர் கடந்த வியாழக்கிழமை (01.08.2013) அமெரிக்காவின் கோரிக்கைளையும் கெஞ்சல்களையும் நிராகரித்து ஸ்நோவ்டென்னிற்கு ரஷ்யா தற்காலிகத் தஞ்சத்தினை ஒரு வருடத்திற்கு வழங்கி உள்ளது. விமான நிலையக் கட்டடத்தை விட்டு வெளியேறிய ஸ்நோவ்டென்னை விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத இடத்திற்கு ரஷ்ய அரசு கொண்டு சென்றுள்ளது. விமான நிலையச் சரித்திரம் முடிவடைந்தாலும் வெளியே சென்ற ஸ்நோவ்டென் சரித்திரம் இன்னமும் அதிகமாகத் தொடர்கின்றது. அமெரிக்கக் கொங்கிரஸ் சபை உறுப்பினர்கள் ஸ்நோவ்டென்னிற்குத் தஞ்சம் வழங்கியதால் வரு…
-
- 2 replies
- 744 views
-
-
ஸ்பெயினின் கற்றலோனியா - இலங்கையில் ஈழம்: ஒற்றுமையும், வேற்றுமையும் [ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 09:04 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் தொடர்ந்தும் அதிகாரத்துவம் அதிகரித்துச் செல்லுமாயின் இங்கு வாழும் சிறுபான்மை இனங்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் சமூகத்தினர் மத்தியில் பிரிவினைவாதமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இது விரைவில் இந்தியாவிலும் குழப்ப நிலையை உண்டாக்கும். இவ்வாறு பேராசிரியர் குமார்டேவிட் Colombo Telegraph [December 1, 2012] ஊடகத்தில் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஸ்பெயினின் கற்றலோனியாவில் [Catalonia] நவம்பர் 25 அன்று மாகாணங்களுக்…
-
- 0 replies
- 536 views
-
-
ஸ்ரீ லங்கன்’ எனும் அடையாளம் -என்.கே. அஷோக்பரன் இங்கிலாந்தின் மாலபோன் கிரிக்கட் கழகத்தின் (எம்.சி.சி) வருடாந்த சொற்பொழிவை, 2011இல் ஆற்றிய இலங்கையின் புகழ்பூத்த கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார, அவருடைய உரையின் இறுதியில், “நான் தமிழன், நான் சிங்களவன், நான் முஸ்லிம், நான் பறங்கியன், நான் பௌத்தன், நான் இந்து, கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் வழிப்பற்றுபவன்; இன்றும், என்றும் நான் பெருமைமிகு இலங்கையன்” என்று தெரிவித்திருந்தமை, இந்தத் தீவில் வாழ்பவர்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் இந்தத் தீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களைப் புளங்காங்கிதம் அடையச் செய்திருந்தது. சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலம் முதல், இனப்பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கும் இலங்கையில், மீளிணக்கப்பாட்டின் ஊ…
-
- 1 reply
- 1k views
-
-
ஸ்ரீ லங்காவில் ஒரு CHI - LANKA நிக்ஸன் அமிர்தநாயகம் / Nixon Amirthanayagam (மூத்த ஊடகவியலாளர் / விரிவுரையாளர்) மகாசேனன் விக்னேஸ்வரன் / Makasenan Vigneswaran ( அரசறிவியல் பட்டதாரி / பத்தியாளர் )
-
- 0 replies
- 521 views
-
-
ஸ்ரீ லங்காவும் சிங்கப்பூர் கனவும் என்.கே. அஷோக்பரன் இலங்கை அரசியலில், “ஸ்ரீ லங்காவை சிங்கப்பூர் போல மாற்றுவோம்” என்ற வார்த்தைகளைக் கேட்காத வருடங்கள், இல்லவே இல்லை என்று கூறலாம். பொருளாதார அபிவிருத்தி முதல், பேச்சுரிமையை அடக்குவது வரை, இலங்கை அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஆதர்ஷமாக, சிங்கப்பூர் இருந்து கொண்டிருக்கிறது. உண்மையில், சிங்கப்பூர் ஓர் ஆச்சரியான தேசம்தான். எந்த இயற்கை வளங்களும் பெரிதாகக் கிடைக்காத, ஒரு குட்டி நகரம் அது. 1965இல் மலேசியா பாராளுமன்றத்தில் ஓர் எதிர்ப்பு வாக்குக்கூட இல்லாமல், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் நீக்கப்பட்டபோது, அந்தக் குட்டி நகரம், தனித்ததொரு சுதந்திர நகர அரசாகியது. மலாயர்கள், சீனர்கள், தமிழர்கள் எனப் பல்வேறு இ…
-
- 3 replies
- 887 views
-
-
-
- 7 replies
- 1.2k views
-
-
கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ கடந்த காலத்திலும் அண்மைக்காலத்திலும் தவறுகளைச் செயதிருந்தாலும், நாட்டின் ஜனநாயக சமநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு முக்கியமான கூறு ஆகும். அது ஒரு மத்திய பாதைக் கட்சியாக இருந்துவந்திருக்கிறது. அதன் பொதுவான திசையமைவு நாட்டின் அரசியலில், பொருளாதாரத்தில், வெளியுறவு விவகாரங்களில் மற்றும் கலாசார / தேசிய பிரச்சினைகளில் தேவையானதாகும். இந்த விவகாரங்கள் தொடர்பில் அந்த கட்சி பல தடவைகள் தவறிழைத்திருந்தாலும், அதன் தேவை அவசியமானதேயாகும். சுதந்திர கட்சியை விமர்சிப்பவர்கள் '1956 தனிச்சிங்கள சட்டத்தை' நினைவுபடுத்தக்கூடும், ஆனால் மத்திய பாதையில் நேர்கோடு இருக்கமுடியாது. இலங்கை இப்போது ஒரு முட்டுச்சந்தில் வந்து நிற்கிறது.மத்திய பாதைக்கு புத்…
-
- 0 replies
- 447 views
-