அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9329 topics in this forum
-
13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை – அலி சப்ரி! பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணத்துக்கு வந்த ரணில் விக்ரமசிங்க நல்லூர் துர்கா மணிமண்டபத்தில் ஆற்றிய உரையில் 13வது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறிய சில நாட்களின் பின் கொழும்புக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பதனை இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வலியுறுத்தி கூறினார்.கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக அதுதான் காணப்படுகிறது. இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்டது 13ஆவது திருத்தம். இந்திய இலங்கை உடன்படிக்கையில் கையெழுத்திட்டது இந்தியாவ…
-
- 0 replies
- 415 views
-
-
பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன். கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்ப…
-
- 0 replies
- 755 views
-
-
"ததேகூ பிளவும் உள்ளூராட்சி சபை தேர்தலும்" | நிக்ஸன் மற்றும் சிறீநேசன்
-
- 6 replies
- 818 views
-
-
பதின்மூன்றை ஈழத்தமிழர்களுக்காகக் காண்பித்துக் கொண்டு டில்லி கொழும்பைக் கையாளுகின்றதா, கொழும்பு டில்லியை ஏமாற்றுகின்றதா? இலங்கையின் விருப்பங்களுக்கு உடன்பட்ட ஜெய்சங்கரின் கொழும்புப் பயணம் பதிப்பு: 2023 ஜன. 21 10:39 புலம்: யாழ்ப்பாணம், ஈழம் புதுப்பிப்பு: ஜன. 21 21:54 தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே தொடர்ச்சியாகக் காணப்படும் முரண்பாடுகள், பிரிந்து நின்று அமெரிக்க இந்திய அரசுகளின் தந்திரோபாயங்களுக்கு உட்படுதல், மற்றும் கொழும்பில் சிங்கள ஆட்சியாளர்களுடனான தனிப்பட்ட உறவுகள் போன்ற நேர்மையற்ற அரசியல் செயற்…
-
- 1 reply
- 600 views
-
-
தேசிய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் Photo, AP/ Eranga Jayawardena via Yahoo News இதுகாலவரை தங்களது அதிகாரம், மதிப்பு மற்றும் சட்ட விலக்கு ஆகியவை காரணமாக தீண்டப்படமுடியாதவர்களாகக் கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் மூவரை நேரடியாக பாதித்த கடந்த வாரத்தைய எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகள், தீர்க்கப்படாமல் இருக்கும் போர்க்கால மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாளுவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை அமைக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும். முதலாவது, முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டபாய ராஜபக்ஷவும் பதவியில் இருந்த காலப்பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக அவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்…
-
- 0 replies
- 770 views
-
-
கூட்டமைப்பு ‘டமால்’ என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan உருவாகிய நாளிலிருந்தே முரண்பாடுகளுக்கும் பிரிவுகளுக்கும் குறையில்லாததாகத்தான் ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இருந்து வந்திருக்கிறது. பொதுவாக நிலவும் நம்பிக்கைகள் பல உண்மையாக இருப்பதில்லை. சிலவேளைகளில் அவை வசதியான பிரசாரத்தின் விளைவாக, உண்மைக்குப் புறம்பாக சமூகத்தில் விதைக்கப்படுபவையாகக் கூட இருக்கலாம். அதில் ஒன்றுதான் கூட்டமைப்பை, விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள் என்பதாகும். கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை. அப்படிச் சொல்வது அதன் உருவாக்கத்துக்காகப் பாடுபட்டவர்களுக்கு செய்கிற அநீதி. கூட்டமைப்பு என்பது அதன் உருவாக்கத்துக்குப் பின்னர், தமக்கான அரசியல் சந்தர்ப்பம் கருதி விடுதலைப…
-
- 0 replies
- 832 views
-
-
தனித்துப் போட்டி: பங்காளிகளை நோக்கி தமிழரசு வீசிய சாட்டை புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாள்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்ததன் மூலம், கூட்டமைப்புக்கான முடிவுரை எழுதப்பட்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பு தன்னையொரு தேர்தல் கூட்டாக மெல்ல மெல்லச் சுருக்கிக் கொண்ட போதே, அதன் அழிவுகாலம் ஆரம்பித்துவிட்டதை தமிழ் மக்கள் உணர்ந்து விட்டார்கள். ஏனெனில், தேர்தல் வெற்றிகளை மாத்திரம் முன்னிறுத்தி செயற்படும் கூட்டுகள், நீண்ட காலம் நீடிப்பதற்கான வாய்ப்புகள் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. விடுதலைப் …
-
- 0 replies
- 637 views
-
-
மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை? - நிலாந்தன் தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது. தேசிய அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்கட்டும் அரசியற் செய்முறைதான். இந்த அடிப்படையில் சிந்தித்தால் கடந்த சில நாட்களாக நடந்து வருபவை நிச்சயமாக தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்ல. தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று முடிவெடுத்ததன் உள்நோக்கம் பங்காளிக் கட்சிகளை வெளியே தள்ளுவதுதான். வீட்டுச் சின்னத்தைக் கைவிட்டால் பங்காளிக் கட்சிகள் வெல்ல முடியாது என்று தமிழரசு கட்சி நம்புகின்றது. கடந்த பொதுத் தேர்தல் அந்த நம்பிக்கையைத் தோற்கடித்து விட்டது. எனினும் தமிழரசு கட்சி அப்படி நம்புகிறது. எனவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடா விதித்திருக்கும் தடை -நிலாந்தன். தாயகத்தில் கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டிக் குலைந்து போய் நிற்கும் ஒரு காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் கனடாவில் வாழும் தமிழர்கள் ஒரு திருப்பகரமான வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இலங்கைத் தீவின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக கனடா தடை விதித்திருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா நாட்டின் தளபதிக்கு எதிராக தடை விதித்திருக்கிறது. அமெரிக்காவின் தடையோடு ஒப்பிடுகையில் கனடாவின் தடை பலமானது. அமெரிக்கா பயணத்தடை மட்டும்தான் விதித்திருக்கிறது. ஆனால் கனடா பயணத் தடையோடு சேர்த்து தடை விதிக்கப்பட்டவர்கள் கனடாவில் சொத்துக்களை வைத்திருப்பதை, முதலீடுகள் செய்வதை அல்லது கனடாவில் உள்ள முதலீட்டாளர்கள் மேற்படி முன்னாள் ஜனாதி…
-
- 0 replies
- 813 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
உக்ரேனிய போரின் உள்முகம் : அமெரிக்கா நடாத்தும் நிழல் யுத்தம் ! ஜனாதிபதி ஜோ பைடன் மகனின் ஊழல் மூடி மறைப்பு ! – ஐங்கரன் விக்கினேஸ்வரா —————————————————— (அமெரிக்கா தனது வரலாற்று எதிரியான ரஷ்யாவை எதிர்க்கவே உக்ரேனுக்கு ஆயுத உதவிகள் என்று இலகுவாக எல்லேராலும் கூறி விட முடியும். ஆனாலும் அதற்கு மேலாக மற்றொரு முக்கிய காரணியும் உண்டு. அதுவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மகனின் உக்ரேனிய நிறுவனங்களூடான வணிக உடன்பாடும், ஊழல் மூடி மறைப்பும் ஆகும்.இந்த உக்ரேனிய வணிக உடன்பாடும் ஊழலும் பற்றியே இந்த ஆக்கம் அலசுகின்றது.) …
-
- 1 reply
- 869 views
-
-
-
- 0 replies
- 484 views
-
-
23 நாள்களில் வரவிருக்கும் ஜனாதிபதியின் தீர்வு எம்.எஸ்.எம் ஐயூப் எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், அதாவது இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக கடந்த மாதமும் அதற்கு முந்திய மாதமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்த போதிலும், அது நிறைவேறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கடந்த நவம்பர் மாதம் வரவு - செலவுத் திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த வாக்குறுதியை முதன்முதலில் வழங்கினார். வரவு - செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்ததன் பின்னர், தாம் பாராளுமன்றத்தில உள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழைத்து, இது தொடர்பாகக் கலந்துரையாட…
-
- 0 replies
- 422 views
-
-
தமிழ் தேசியவாதம் மீண்டுமொரு யுத்தத்திற்கு தயாரா? - யதீந்திரா அரசியல் என்பது இயங்குநிலையாகும். அந்த இயங்குநிலை வெற்றியையும் தரலாம். தோல்வியையும் தரலாம். தோல்விகள் ஏற்படுகின்ற போது, அது அனுபவமாகின்றது. இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் எதுவுமே வெற்றியில் முடியவில்லை. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியின் காலம் தோல்வி. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலம் தோல்வி, ஜந்து இயக்கங்களின் காலம் தோல்வி. விடுதலைப் புலிகளின் காலம் தோல்வி. இது சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலம். இதுவரையில் சம்பந்தனால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் த…
-
- 0 replies
- 812 views
-
-
இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொழும்பு கிளர்ச்சியின் விளைவால் ஆட்சி மாற்றத்துக்கு பதிலாக ஆள் மாற்றம் நிகழ்ந்து ரணில் ஜனாதிபதியானார், இந்திய தரப்பு உடனடியாக வாழ்த்துச் செய்தி அனுப்பாது தாமதமாகவே வாழ்த்து அனுப்பி இருந்தது இந்நிலையில் அழகப்பெரும ஜனாதிபதி நாற்காலியில் அமர்வதையே இந்திய உளவுத்துறை விரும்பியதாக ரணில் இந்திய தூதரகத்திடம் குற்றம் சாட்டி முறைப்பாடு செய்திருந்தார் . அதனை இந்திய தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் முற்றாக மறுத்தும் இருந்தது. கரடு முரடான உறவு இலங்கையில் யார் பதவிக்கு வந்தாலும் அவர்களது முதலாவது வெளிநாட்டு பயணம் புதுடெல்லியாகவே இருக்கும். ஆனால் ரணில் பதவிக்கு வந்தபின் அவ்வாறு நிகழவில்லை. இந்தப் பின்னணியில் ரணிலுக்கும் இந்தியாவ…
-
- 0 replies
- 656 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தமிழர் தரப்பும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை முதல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தானாக முன்வந்து, 2022 நவம்பரில் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, “இலங்கை தனது 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கும் 2023 பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்பதாக, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்” என்று கூறியதுடன், தமிழர் தரப்பை அதற்கான பேச்சுவார்த்தைக்கும் அழைத்திருந்தார். இதைத் …
-
- 0 replies
- 919 views
-
-
மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். மாவையை “தலைமைத்துவ ஆளுமையற்றவர்” என்று தொடர்ச்சியாகக் கூறி வந்த விக்னேஸ்வரன், திடீரென்று மாவையின் தலைமையில் கூட்டணி அமைப்போம் என்ற அறிவித்தலை விடுக்கிறார் என்றால், அதன் பின்னணியை ஆராய வேண்டி ஏற்படுகிறது. வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், விக்னேஸ்வரன் நேரடி அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு 10 ஆண்டுகளாகப் போகிறது. விக்னேஸ்வரன், …
-
- 1 reply
- 501 views
-
-
பிச்சை எடுக்கப் பேச்சுவார்த்தை ? - நிலாந்தன் 2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.ஆனால் நாடு இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் பிச்சை எடுக்காமல் தப்பிப்பிழைக்க முடியாது என்பதே மெய்நிலை ஆகும். பன்னாட்டு நாணய நிதியம் தரும் சிறிய உதவி கடனைத் தீர்க்கப் போதாது. அது 2.8பில்லியன்கள் மட்டும்தான்.ஆனால் நாட்டின் மொத்த கடன் தொகை 50பில்லியன்களைவிட அதிகம். எனவே கடன்வாங்கி கடனை அடைக்க முடியாது. பன்னாட்டு நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கங்கள் கடன் வாங்குவது இதுதான் முதல் தடவையுமல்ல. இதற்கு முன் பதினாறு தடவைகள் கடன்…
-
- 0 replies
- 820 views
-
-
அடுத்த சுதந்திரதின விழாவிற்குள் என்ன கிடைக்கும் ? நிலாந்தன். கலண்டருக்குத் தட்டுப்பாடான மற்றொரு ஆண்டு பிறந்திருக்கிறது. பிறக்கும்போதே அது பேச்சுவார்த்தையோடுதான் பிறந்திருக்கிறது.ஆனால் முடியும்போது அது சமாதானத்தில் முடியுமா என்பது சந்தேகம்தான். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவிற்குள் சமாதானத்தை நோக்கித் திருப்பகரமான ஒரு முடிவை எடுக்கப் போவதாக அரசுத்தலைவர் அறிவித்திருக்கிறார்.தமிழ்த் தரப்பைத் திருப்திப்படுத்தாமல் அவ்வாறு திருப்பகரமான முடிவு எதையும் எடுக்க முடியாது. பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சியின் காதலியாகி விடும்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் போது தமிழரசுக்கட்சி போராளி ஆகிவிடும் என்று எனது நண்பர் ஒருவர் கூறு…
-
- 0 replies
- 603 views
-
-
Courtesy: கட்டுரை தி.திபாகரன் M.A இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தன்று இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்கப் போவதாக செய்திகள் பலவாறு வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எத்தகைய தீர்வு திட்டம் ஒன்றை பற்றி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க முடியும் என்பது பற்றி சிந்திப்பது மிக அவசியமானது. மக்கள் ஆதரவற்று, தேர்தலில் படுதோல்வி அடைந்து அதிர்ஷ்டமற்ற ஒரு தலைவராக காணப்பட்ட ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட கொழும்பு கிளர்ச்சியின் பின்னணியில் தன்னுடைய இராஜதந்திர வியூகத்தினால் இன்று இலங்கையின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அத்தகையவர் ஒட்டுமொத்த சிங்கள தேசியவாதிகளும் தமிழர்களுக்கான அரச…
-
- 4 replies
- 507 views
-
-
-
- 0 replies
- 709 views
-
-
-
- 2 replies
- 456 views
-
-
இலங்கையில் ஒன்பது தசாப்தகால வரலாற்றைக் கொண்ட சமஷ்டி முறை குறித்த கருத்தாடல் Veeragathy Thanabalasingham on January 4, 2023 Photo, CHANNEL4 இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழிமுறைகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூட்டிய நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் தமிழ்க்கட்சிகள் பிரதானமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை மூன்று கட்டங்களில் அணுகுவதற்கு யோசனைகளை முன்வைத்தது. முதலாவது, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனவர்கள் விவகாரம், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரசினால் கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்களை விடுவித்தல், தொல்பொருளிய…
-
- 0 replies
- 485 views
-
-
நேட்டோ யூகோஸ்லாவியாவுக்கு எதிராக யுத்தம் செய்வது ஏன்? உலக அதிகாரம், எண்ணெய், தங்கம் Statement of the Editorial Board of the World Socialist Web Site அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ படைகள் 1999 மார்ச் 24ம் திகதியில் இருந்து யூகோஸ்லாவியாவை பேரழிவுகளைக் கொண்ட குண்டுவீச்சுக்களுக்கு இலக்காகிக் கொண்டுள்ளது. நேட்டோவின் 15.000 யுத்த விமானங்கள் யூகோஸ்லாவிய நகரங்களிலும், கிராமங்களிலும் குண்டுகளைப் பொழிந்து தள்ளியுள்ளன. பக்டரிகள், ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள், பாலங்கள், எண்ணெய்க் குதங்கள், அரசாங்கக் கட்டிடங்கள் ஆதியன தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. பிரயாணிகள் போக்குவரத்து, புகையிரதங்கள், பஸ் வண்டிகளின் பிரயாணிகள், தொலைக்காட்சி நிலையங்கள், ஒலிபரப்பு நிலையத் தொழிலாளர்கள…
-
- 15 replies
- 1.3k views
-
-
https://www.tamilguardian.com/content/tna-refused-meet-us-3-times-claims-chinese-envoy தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களைச் சந்திக்க 3 முறை மறுத்துவிட்டது' என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான சீனாவின் துணைத் தூதுவர் ஹூ வெய், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) மூன்று தடவைகள் தமிழ்த் தலைவர் ஆர் சம்பந்தனைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அது நிராகரிக்கப்பட்டது என்றும் சாடினார். “சீனா தமிழ் மக்களுடன் உறவைப் பேணவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று தடவைகள் அழைப்பிதழ் அனுப்பியிருந்தோம். அதை ஒப்புக்கொள்ளும் மரியாதை கூட அவர்களிடம் இல்லை" என்று ஹூ வெய் கூறினார். ஐக்கிய…
-
- 14 replies
- 1.2k views
-