Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ்க் கட்சிகள், ஒன்றாக... திலீபனை, நினைவு கூரப்போவதில்லை? -நிலாந்தன்.- யாழ்.மாநகர சபை எல்லைக்குள் திலீபனின் நினைவுத்தூபி வருகிறது. அதனால் மாநகர சபையை நிர்வகிக்கும் மணிவண்ணன் அணியானது திலீபனின் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்குரிய ஏற்பாட்டுக்களை ஒருபுறம் செய்யத் தொடங்கியது. இன்னொரு புறம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறு ஏற்பாடுகளை செய்ய தொடங்கியது.அக்கட்சியானது வடக்கையும் கிழக்கையும் இணைத்து பொத்துவிலில் இருந்து திலீபனின் நினைவிடம் வரையிலும் ஒரு நினைவூர்தியைக் கொண்டு வருகின்றது. இந்த இரண்டு தரப்பும் இதுதொடர்பில் முரண்படப் போவதை முன்கூட்டியே அனுமானித்த அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலர் இதுவிடயத்தில் தலையீடு செய்ய முற்பட்டார்கள்.இந்த இரண்டு கட்சிகளையும் சாராதவரும் புலிக…

  2. இலங்கையின் பொருளாதார மீட்சி யார் கையில்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாட்டின் பொருளாதாரம் எப்படியாவது மீண்டுவிடும் என்று முழுமையாக நம்புவோர் இருக்கிறார்கள்; பகுதியாக நம்புவோரும் இருக்கிறார்கள். “வாய்ப்பில்லை ராஜா” என்று அடம்பிடிப்போரும் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் உடன்படுகின்றதும் எல்லோருக்கும் தெரிந்ததுமான ஒரு விடயம் யாதெனில், இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சி, நிச்சயமாக இலங்கையர்களின் கைகளில் இல்லை என்பதாகும். அப்படியாயின், இப்போது எழுகின்ற கேள்வி, அது யார் கைகளில் இருக்கின்றது என்பதாகும். இலங்கையின் பொருளாதாரம், தனது தன்னிறைவுச் சுயசார்புத் தன்மையை இழக்கத் தொடங்கியது முதல், அந்நியர் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்ட…

  3. ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை - நிலாந்தன் இம்மாதம் 10ஆம் திகதியிலிருந்து சுமந்திரனின் தலைமையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு “காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை” என்று பெயரிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யார் போராடினாலும் அதை ஆதரிக்க வேண்டும்.எனினும்,இப்போராட்டம் தொடர்பாக இப்போதுள்ள அரசியற்சூழலின் பின்னணியில் சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது. கேள்வி ஒன்று, போராட்டத்தின் தலைப்புப் பற்றியது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டப் ப…

  4. ஜெனிவாவில் பலமுனைப் போர் By VISHNU 18 SEP, 2022 | 07:34 AM கார்வண்ணன் “கடந்த 13 ஆண்டுகளில் தமிழர் தரப்பின் போராட்டங்களும், வலியுறுத்தல்களும் தான் ஜெனிவாவில் முதன்மையான விடயமாக இருந்து வந்தன. இப்போது, அது பலமுனை அழுத்தங்களாக விரிவடைந்திருக்கிறது” இலங்கையைப் பொறுத்தவரையில், ஜெனிவா இம்முறை வழக்கத்துக்கு மாறானதாரு போர்க்களமாக மாறியிருக்கிறது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ என இரண்டு சட்ட நிபுணர்களின் தலைமையில் ஜெனிவா கூட்டத்தொடரை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்கிறது. இம்முறை ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கைக்கு சவாலானதாக இருக்கப் போகிறது என, முன…

  5. புதிய எதிர்பார்ப்பு By VISHNU 16 SEP, 2022 | 01:58 PM ஆர்.ராம் இலங்கை, இந்திய மீனவர்கள் பரஸ்பரம் கடல் எல்லைகளை அத்துமீறுவதால் தொடரும் அவலங்களுக்கு தற்போது வரையில் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. குறிப்பாக, வடமாகாண மீனவர்களும், தமிழக மீனவர்களும் அத்துமீறல் விவகாரத்தின் பிரதான இரு பங்காளிகளாக உள்ளார்கள். இந்நிலையில் கடல் எல்லைகளை அத்துமீறும் மீனவர்கள் அந்தந்த நாடுகளின் கடற்படைகளால் கைது செய்யப்படுவதும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படுவதும் தொடர்கதையாகிறது. எனினும், அவர்கள் இலங்கை, இந்திய அரசுக்களுக்கு இடையிலான புரிந்துணர்வின் காரணமாகவும், இராஜதந்திரத் தரப்பினரின் தலையீடுகள் காரணமாகவும் பரஸ்ப…

  6. ராஜபக்ஷவினரை காப்பாற்றும் முயற்சி By VISHNU 16 SEP, 2022 | 09:45 PM என்.கண்ணன் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம், சமர்ப்பித்திருந்த விரிவான அறிக்கையில், பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான பரிந்துரைகளுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையான பதிலடியைக் கொடுத்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் பணியகத்தின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பதிலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டிருந்தார். பேரவையில் அவர் உரையாற்றிய போது, இரண்டு முக்கியமான விடயங்களை முன்வைத்தார். ஒன்று, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/…

  7. இலங்கையின் நெருக்கடி மற்றும் சிறிய அரசுகளின் சங்கடங்கள் By T. SARANYA 16 SEP, 2022 | 03:30 PM இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் அதன் சிக்கலான வெளிநாட்டு உறவுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆகஸ்ட் 16 அன்று, அம்பாந்தோட்டையின் தெற்கு துறைமுகம் யுவான் வாங் 5 என்ற ஆய்வு கப்பலை வரவேற்றது. பயணத்தை ஒத்திவைக்குமாறு கொழும்பு கேட்டிருந்த போதிலும், பின்னர் இணங்கி, ஆகஸ்ட் 22ம் திகதி வரை கப்பலை துறைமுகத்தில் நிறுத்திவைக்க அனுமதித்தது. இந்த விடயத்தில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கவில்லை என்று இந்தியா மறுத்தது, எனினும் விஜயம் குறித்து தனது கவலையை பதிவு செய்தது. பெய்ஜிங் கப்பல் ஆய்வு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்று வாதிடுகி…

  8. ஜெனீவா அரங்கில் இலங்கையை தக்கவைத்தல் புருஜோத்தமன் தங்கமயில் இந்த ஆண்டின் இறுதி ஜெனீவா அரங்காற்றுகை, தற்போது நிகழ்த்தப்படுகின்றது. வழக்கத்துக்கு மாறாக, தென் இலங்கையில் இருந்தும் பிரதான எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிங்கள பெரும்பான்மை எண்ணங்களை பிரதிபலித்து வருகின்ற தரப்புகள் சிலவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை நாடிச் சென்றிருக்கின்றன. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான தென் இலங்கையின் கிளர்ச்சிப் போராட்டங்களுக்குப் பின்னரான நாள்களில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், கடத்தல்கள் பற்றி முறையிடுவதற்காக, சிங்களத் தரப்புகள் ஜெனீவாவில் நடமாடி வருகின்றன. இலங்கையில் இடம்பெற்று வரும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்,…

  9. ஐ நா மனித உரிமை சபையும் ஈழத் தமிழர்களும்-பா.உதயன் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் அலுவலக அறிக்கையை சமர்ப்பித்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இலங்கையின் நிலைமை பலவீனமாக இருப்பதாகவும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறினார். அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அரச அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் அதே வேளை தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அதே போல் காணாமல் ஆக்கபட்டோருக்கான எந்த நீதியையும் வழங்கவில்லை என தொடர்ந்தும் பயங்கரவாத சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் இம் முறை அரசியல் குற்றச்சாட்டு மட்டும் இன்ற…

  10. திருக்கோணேஸ்வர ஆலய விவகாரத்தில் பின்கதவு ஆக்கிரமிப்பு முயற்சியும், தலைமையற்ற மக்களும் - யதீந்திரா இது இந்தக் கட்டுரையாளரின் வழக்கமான அரசியல் பத்திகளிலிருந்து சற்று மாறுபட்டது ஆனால் இது அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. சில தினங்களுக்கு முன்னர் இந்த விடயங்கள் இந்தக் கட்டுரையாளரின் நேரடி கவனத்திற்கு வந்தது. தட்சன கைலாசம் என்று அழைக்கப்படும் திருகோணேஸ்வர ஆலயமானது, இலங்கையின் பழைமைவாய்ந்த இந்து தமிழ் அடையாளமாகும். திருக்கோணேஸ்வரம் என்பதிலிருந்துதான் திருகோணமலை என்னும் பெயரே உருவாகியது. அதாவது, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மலை என்பதன் பொருள்தான் திருகோணமலை. திருக்கோணேஸ்வரம் இலங்கையின் ஜந்து ஈஸ்வரங்களில் ஒன்றாகும். வடக்கில…

  11. தேசிய, சர்வதேச கண்டனத்துக்குள்ளாகும் அரசாங்கத்தின் அடக்குமுறை By VISHNU 13 SEP, 2022 | 03:12 PM கலாநிதி ஜெகான் பெரேரா கடந்த ஜூலையில் உச்சக்கட்டத்தை அடைந்த மக்கள் போராட்ட இயக்கத்துக்கு எந்த அளவிலாவது தலைமைத்துவத்தை வழங்கியவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் நிலையாக தொடருகின்றன. மிகவும் இறுதியாக கைதானவர் விருது பெற்ற ஒரு நடிகை. ஜனாதிபதி மாளிகை போராட்டக்கார்களின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது அவர் அதற்குள் பிரவேசித்திருத்தார். ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் அவர் ஒரு துடிப்பான பேச்சாளராகவும் இருந்தார். போராட்டங்களில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவது தற்போதைய அரசாங்கத்தின் அருவருக்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும்.…

  12. மோசமானவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பது ஏன்? என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியாக 316,544 விருப்பு வாக்குகள் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகியவர் பிரசன்ன ரணதுங்க. ‘நல்லாட்சி அரசாங்கம்’ அமைந்த 2015 பொதுத் தேர்தலில் கூட, கம்பஹா மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளாக 384,448 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தவர் பிரசன்ன ரணதுங்க. அன்று கம்பஹா மாவட்டத்தில் ஆளும் கட்சியாக அமைந்த ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் முதலிடம் பிடித்த ரஞ்சன் ராமநாயக்க பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் 216,463 தான்! இந்தப் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண முதலமைச்சராக இருந்தபோது, வணிகர் ஒருவரை மிரட்டிப…

  13. ஜெனீவா இன்னொரு முறை ஏமாறுவோமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ மீண்டுமொருமுறை இலங்கை அரசியலில், ஜெனீவா அமர்வுகள் கவனம் பெறுகின்றன. கடந்த ஒரு தசாப்தகாலமாக, ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஒரே களமான இருப்பது, ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையாகும். குறிப்பாக, இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக, அதனூடு தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுவிட முடியும் என்ற திசைவழியில், தமிழர் அரசியல் பயணித்திருக்கிறது. ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ கதையாகிப் போன இந்த முயற்சியின் மீது, இப்போதும் அளவற்ற நம்பிக்கை சூழ்ந்து இருக்கிருக்கிறது. தமிழருடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, அவர…

  14. ராஜபக்‌ஷர்கள் மீண்டெழுவது சாத்தியமா? Veeragathy Thanabalasingham on September 12, 2022 Photo, Eranga Jayawardena/Associated Press, NYTIMES மக்கள் கிளர்ச்சியையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியைத் துறந்த கோட்டபாய ராஜபக்‌ஷ 50 நாட்களுக்கு பிறகு (செப்.2) நாடு திரும்பி கொழும்பில் பொலிஸாரினதும் இராணுவ கமாண்டோக்களினதும் கடுமையான பாதுகாப்புடன் கூடிய அரசாங்க பங்களாவில் வசித்துவருகிறார். அவரது குடும்பத்தவர்களும் அரசியல்வாதிகளும் நெருக்கமான ஆதரவாளர்களும் அவரை சந்தித்துவருகிறார்கள். முதலில் மாலைதீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் தாய்லாந்துக்கும் சென்ற கோட்டபாயவுக்கு அந்த நாடுகள் அசௌகரியத்துடனான விருந்தோம்பலை…

  15. ஜெனிவாவும்... தமிழ்க் கட்சிகளும்! நிலாந்தன். கடந்த ஆண்டு ஜெனிவா கூட்டத்துடன் முன்னிட்டு,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின. அக்கூட்டுக் கடிதத்தில் பொறுப்பு கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று கேட்டிருந்தன.சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறும் கேட்டிருந்தன.சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறையை பொருத்தமான காலவரையறையுடன் உருவாக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தன. இது நடந்து சரியாக 20 மாதங்கள் ஆகிவிட்டன. மேற்படி கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்த பல விடயங்களை அதன்பின் வெளிவந்த ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை பிரதிபலி…

  16. ஜெனிவாவின் புதிய குற்றச்சாட்டு By VISHNU 10 SEP, 2022 | 08:10 AM சத்ரியன் “பொருளாதார பேரழிவுகள் ஏற்படக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதனை முன்னிறுத்தியே சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க இணங்கியிருந்தால், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு அது ஒரு அமிலச் சோதனையாகவே இருக்கும்” ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில், புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், பொதுவாக மனித உரிமை மீறல்கள், மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படாமல், உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம்…

  17. கோட்டாபயவின் வருகையும் ராஜபக்சாக்களின் எதிர்கால அரசியலும் September 10, 2022 —- ஸ்பார்ட்டகஸ் —- இலங்கையின் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் கடந்த ஜூலை 13 நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சரியாக 50 நாட்களுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை (செப்.2) இரவு திரும்பிவந்திருக்கிறார். தவறான ஆட்சியைச் செய்த அவரை மக்கள் ‘வீட்டுக்கு போ’ என்றுதான் கேட்டார்கள்; நாட்டைவிட்டு போகுமாறு கேட்கவில்லை. ஆனால், போருக்கு முடிவுகட்டி மக்களை பாதுகாப்பாக வாழ வழிவகுத்ததாக எப்போதும் பெருமையுடன் உரிமை கோரும் அவர் நாட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லையென்று உணர்ந்து நாட்டில் இருந்து வெளியேறினார். முதலில் மாலைதீவுக்கும் பிறகு சிங…

  18. வழமைக்கு திரும்பிய தென்இலங்கை அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் மக்கள் போராட்டத்துக்குப் பயந்து, நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த வார இறுதியில் நாடு திரும்பி இருக்கிறார். அவரை, விமான நிலையத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் வரவேற்றனர். கோட்டாவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்து, ‘மக்களால் துரத்தியடிக்கப்பட்ட ஜனாதிபதி’ என்ற பெயரைக் களைய வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் ஒருதரப்பினர் நினைக்கிறார்கள். மக்கள் போராட்டங்களால், பாரம்பரிய அரசியல்வாதிகளின் சிந்தனையையும் நிலைப்பாடுகளையும் மாற்ற முடியாது என்று நிறுவ நினைக்கிறார்கள். அதன்மூலமே, சம்பாதிப்பதற்கான தெரிவாக அரசியலைக் கொண்டிருக்கின்ற தங்க…

  19. தமிழ் பகுதிகளில் சீனாவின் ஆர்வம்? - யதீந்திரா இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகம் பேசப்படும் ஒன்று. சர்வதேசளவில் இலங்கையின் நெருக்கடிகள் சீன-சிறிலங்கா உறவின் வழியாகவே நோக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணமாகவும் சீனாவே நோக்கப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க வெளியக உளவுத் துறையான சி.ஜ.ஏயின் தலைவர் கூட, ஒரு கலந்துரையாடலின் போது, சீனாவுடன் தூரநோக்கின்றி பொருளாதார தொடர்புகளை பேணிக் கொள்ளும் நாடுகள் இலங்கையிலிருந்து கற்றுகொள்ள வேண்டுமென்று கூறியிருந்தார். இலங்கை தூரநோக்கின்றி சீனாவின் திட்டங்களை அனுமதித்ததன் விளைவாகவே, இன்று பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். …

    • 7 replies
    • 584 views
  20. மக்கள் ஆணையைக்கொண்ட அரசின் தேவை குறித்து வலியுறுத்தும் நாணய நிதியம் 07 SEP, 2022 | 01:21 PM இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான்கு வருட காலத்துக்கு 290 கோடி அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெறுவதற்கு கடந்தவாரம் கொழும்பில் காணப்பட்ட அலுவலர்கள் மட்ட பூர்வாங்க உடன்பாடு குறித்து அரசாங்கம் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. மக்களுக்கு சிறப்பான வாழ்வைக் கொடுப்பதற்கு அவசியமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் அரசாங்கத்துக்கு இருக்கும் பற்றுறுதிக்கு இந்த உடன்பாடு ஒரு அத்தாட்சி என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த அதேவேளை படுமோசமான வீழ்ச்சியைக் கண்டிருக்கும் பொருளாதாரத்த…

  21. ஐ.எம்.எப் கடன்கள் கசப்பான மருந்து! -நஜீப் பின் கபூர்- இன்று நமது நாட்டில் பிரச்சினைகள் சங்கிலித் தொடர் போல வந்து கொண்டிருக்கின்றன.பொருட்களின் விலைகளில் மிகச் சிறியதோர் சலுகையை மக்களுக்கு கொடுத்து அதனைவிட பல மடங்கு பணத்தை மக்களிடம் பறிக்கின்ற ஒரு வேலைத் திட்டத்தைத்தான் அரசு இன்று முன்னெடுத்து வருகின்றது.இதனை மின் கட்டணங்கள் உயர்வில் நாம் பார்த்தோம்.மக்களுக்கு நெருக்கடியில் எந்த விமோசனங்களும் கிடையாது.பொருளாதாரத் துன்பங்கள் அப்படியே தொடர, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் கடந்த 30ம் திகதி சமர்ப்பித்த இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் அரசு எந்தச் சலுகைகளையும் குடிகளுக்கு வழங்கவில்லை. இந்த வரவு-செலவுத்திட்டங்கள் ப…

  22. கோட்டாவின் மீள்வருகையும் குழம்பிய குட்டையும் மொஹமட் பாதுஷா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாடு திரும்பியுள்ளமை, இலங்கை அரசியலில் இன்னுமொரு திருப்பத்தை ஏற்படுத்த வழிகோலுமா என்ற கேள்வி, எழுந்துள்ளது. இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்கள் கிளர்ச்சி வெடித்ததை அடுத்து கோட்டாபய ராஜபக்‌ஷ, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, மாலைதீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூருக்கும் பின்னர் தாய்லாந்துக்கும் ஓடித் தப்பியிருந்தார். இப்போது 50 நாள்களின் பின்னர், நாடு திரும்பிய அவர் வரவேற்கப்பட்டு, வாகனத் தொடரணியாக அழைத்து வரப்பட்டிருக்கின்றார். இது ராஜபக்‌ஷர்களும் மொட்டு அணியும் மீள்எழுச்சி பெறுவதான தோற்றப்பாட்டையும், குழம்பிய அரசியல் குட்டைக்குள் என்ன நடக்குமோ …

    • 1 reply
    • 427 views
  23. இடைக்கால வரவு செலவுத் திட்டம்: சர்வதேச நாணய நிதியமே வருக! தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டமானது, இந்த அரசாங்கம் நாட்டை எத்திசையில் நகர்த்த முனைகிறது, யாருக்கானதாக அரசாங்கம் இருக்கிறது போன்ற வினாக்களுக்கான பதில்களைத் தந்துள்ளது. அந்தவகையில், இந்த வரவு செலவுத் திட்டம் முக்கியமானது. தனது உரையின் தொடக்கத்தில், நான்கு விடயங்களை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இவை நான்கும் மிகத் தெளிவாக, இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயன்முறையாகவே, இந்த வரவு செலவுத் திட்டம் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தின. ஒருபுறம், வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் …

  24. ரணில் வீசிய கொழுக்கி ? - நிலாந்தன் கனடாவில் உள்ள நண்பர் ஒருவர் கேட்டார்….”தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளையே எங்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை. இந்நிலையில்,புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும் நபர்களையும் ஒன்றிணைத்து தாயகத்தில் முதலீடு செய்வது நடக்கக்கூடிய காரியமா ? “என்று. ரணில் விக்ரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில அமைப்புக்கள் மற்றும் நபர்களின் மீது தடையை நீக்கியது தொடர்பில் நான் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பாகவே அவர் அவ்வாறு கேட்டிருந்தார். நியாமான கேள்வி. தாயகத்தில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள்,மிகச்சிறிய சனத்தொகையின் மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் மூன்று கட்சிகளை ஒன்றாக்க முடியவில்லை. ஆனால் புலம்பெய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.