அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
தமிழ்த் தேசியம் ஒருமுகமூடி by noelnadesan இலங்கையில் தமிழர் அரசியலின் அறுபத்தைந்து வருடகால வரலாறு எக்காலத்திலும் இலங்கைத் தமிழ் சமூகத்தை அறிவார்ந்த முடிவுகளைஎடுப்பவர்களாக காண்பிக்கவில்லை. தனது உணர்ச்சிகளின் கொதிப்பில் வெந்துஅழியும் இனமாகத்தான் நிரூபித்திருக்கிறது. இதற்கு நான் பல உதாரணங்களைச் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை. வியட்நாமியயுத்தகாலத்தில் மட்டும்தான் புத்தபிக்கு தன்னை எரித்துக் கொண்டதாக அறிந்தோம். ஆனால் ஜெனிவாவிற்கும் சென்று தீக்குளிக்கும் முட்டாள்தனத்தைக் கொண்ட சமூகமாகத்தான் எமது தமிழ் இனம் உருவாகியிருக்கிறது. ஜெனிவாவின் பிரஜைகள் எரிந்து இறந்த உடலை அப்புறப்படுத்தும் பொழுது அந்தக் கோரத்தை இளம் பிள்ளைகள் பார்த்து விடக்கூடாது என்பது பற்றித்தான் ஜெனிவா நகரத்தினர்…
-
- 2 replies
- 907 views
-
-
வாயைக் கொடுத்து வாங்கிய வம்பு -கே. சஞ்சயன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன், சிங்கள ஊடகம் ஒன்றிடம் வாயைக் கொடுக்கப் போய், வம்பை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். “விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று, சுமந்திரன் வெளிப்படுத்திய கருத்து, அவரது அரசியல் எதிர்காலம் குறித்த பலமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம், அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட சுமந்திரன், இற்றை வரைக்கும், இலங்கைத் தமிழ் அரசியலில், நீக்க முடியாத ஒருவராக மாறி விட்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகச் சம்பந்தன் இருந்தாலும், அதன் பங்காளிக் கட்சிகளுக்…
-
- 0 replies
- 907 views
-
-
வருகிறது மீண்டும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஜெனீவா மாநாடு. இலங்கை அரசாங்கம் தொடர்பாக அமெரிக்கா இந்த முறையும் மனித உரிமை பேரவையில் விசேட பிரேரணையொன்றை முன்வைக்கவிருக்கிறது. அன்மையில் இலங்கைக்கு அமெரிக்காவின் மூன்று மூத்த அதிகாரிகள் விஜயம் செய்தனர். அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர்களான ஜேம்ஸ் முவர், விக்ரம் சிங் மற்றும் ஜேன் சிமர்மன் ஆகியோரே அவர்களாவர். அவர்கள்; கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ஜேம்ஸ் முவர், தமது நாடு இலங்கை விடயத்தில் கடந்த வருடம் போலவே பிரேரணையொன்றை இம்முறையும் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப் போவதாக கூறினார். அமெரிக்க அரசாங்கத்தில் உள்ளவர்களைத் தவிர வேறொருவருக்கும் பிரேரணையில் என்ன வரப் போகிறது என்று இன்னமும்; தெரியாது. ஆனால் இப்போதே பலர்…
-
- 1 reply
- 907 views
-
-
சுயாதிபத்தியம் கொண்ட அரசு என்ற வகையில் இலங்கை சீனாவுடன் பணியாற்றுவதற்கு சுதந்திரம் இருக்கின்றது என்ற போதிலும் பெய்ஜிங்குடனான இலங்கையின் உறவுகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்குமாக இருந்தால், இந்தியா அதன் செல்வாக்கைப் பிரயோகிக்கும் என்பதை தெளிவாகக்கூறிவிடவேண்டும் என்றும் சீனாவின் நெருக்கமான அரவணைப்புக்குள் ராஜபக்ஷக்கள் மீண்டும் செல்வதற்கு அனுமதித்து இந்தியா தவறிழைத்துவிடக்கூடாது என்றும் இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களில் வலியுறுத்தியிருக்கின்றன. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எதிர்கால உறவுமுறைகள் தொடர்பில் இந்துஸ்தான் ரைம்ஸும் டெக்கான் ஹெரால்டும்…
-
- 5 replies
- 906 views
-
-
மாலதி மைத்ரி வல்லினம்.காம் கேள்வி-பதில் பகுதியில் நான் சிலருடைய எழுத்துக்களைப் படிப்பதில்லை என்று தெரிவித்திருந்தேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்கப்பட்ட பொழுது எனது நிலைப்பாட்டை சுருக்கமாகப் பதிவு செய்திருந்தேன். அதன் ஒரு பகுதி இவ்வாறு அமைந்திருந்தது. “அ. மார்க்ஸ், ஷோபாசக்தி, யோ. கர்ணன் இவர்கள் மூன்று பேரும் அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள். இலங்கையில் புலிகளால்தான் ஆயுதக் கலாச்சார வன்முறை உருவானதாக வரலாற்றைத் திரித்துக் கொண்டிருப்பவர்கள். புஷ்பராஜா, புஷ்பராணியின் நூல்களே இவர்களின் பொய்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லுகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் புலிகள் பாசிசம் என்று பேசும் காங்கிரஸ், சி.பி.எம், சுப்பிரமணியசாமி, சோ, என்.ராம் நிலைப்பாடுதான் இவர்களின…
-
- 9 replies
- 906 views
-
-
எது சிறந்தது? இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்த காப்புகளா அல்லது சீனாவின் அரசியல் அமைப்பில் சிறுபான்மையினருக்கு கொடுத்திருக்கும் காப்புகளா சிறந்தவை? முக்கியமான மூன்று விடயங்களினைப் பற்றி இப்பொழுது விபரிக்கப்படுகின்றது. தமிழ் தேசியமக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்களது தாயகம் (HOME LAND) என்பது போல சீனாவிலும் சிறுபான்மை மக்களின் தாயகம் என்னும் கொள்கையை பேணிக் காப்பாற்றுகின்றார்கள். 'The minority people became masters of their homelands and their own destinies" சிறுபான்மை மக்கள் தங்களது தாயக பூமிக்கு அவர்களே எஜமானர்கள். தங்களது தலைவிதியை தீர்மானிப்பதற்கு அவர்களுக்கே உரிமை உண்டு. ஒவ்வ…
-
- 0 replies
- 906 views
-
-
கழன்று போகும் கடிவாளம் கே. சஞ்சயன் / 2019 டிசெம்பர் 27 மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தின் சாதனை என்று கூறத்தக்க விடயம், 19 ஆவது திருத்தச் சட்டம் தான். அந்தத் திருத்தச் சட்டத்தை, இல்லாமல் ஒழிப்பதே, இப்போதைய அரசாங்கத்தின் முதல் வேலைத் திட்டமாக இருக்கிறது. இது ஒன்றும், புதிய அரசாங்கத்தின் இரகசியமான வேலைத் திட்டம் அல்ல; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வெளிப்படையாகவே இதனைக் கூறி வருகிறார்கள். 19 ஆவது திருத்தச் சட்டம் ஆபத்தானது என்றும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனை இல்லாமல் ஒழிப்பது தான், முதல் வேலையாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து விட்டது தான், 19…
-
- 0 replies
- 906 views
-
-
அரசியல் கைதிகளின் போராட்டம் தமிழர் அரசியலில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலா? by Rev. M.Sathivel - on November 30, 2015 படம் | Selvaraja Rajasegar Photo தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தோர் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் விடுதலையை வலியுறுத்தியும் பலப் போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தினர். இப்போராட்டங்கள் அகிம்சை வழியிலான உணவு மறுப்பு பேராட்டமாகவும் கவனயீர்ப்புப் போராட்டமாகவுமே நிகழ்ந்தன. பலப் பேராட்டங்கள் அரசியல்வாதிகள் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளால் கைவிடப்பட்டன. பண்டாரவளை, பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களை முகாம் காவலாளிகளும் காடையர்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவே 28 ப…
-
- 1 reply
- 906 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார்? A.Kanagaraj எம்.எஸ்.எம். ஐயூப்இன்று அமெரிக்க ஜனாதிபதி; தேர்தல் நடைபெறுகிறது. அதாவது இன்று அமெரிக்க மக்கள் தமது நாட்டுத் தலைவரை மட்டுமல்லாது உலகிலேயே பலம் வாய்ந்த அரசியல் தலைவரை தெரிவு செய்ய வாக்களிக்கிறார்கள். இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. சட்டத்தில் கூறப்படாவிட்டாலும் பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் விருப்பப்படியே இலங்கையில் இந்தத் திகதி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் திகதியும் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் திக…
-
- 0 replies
- 906 views
-
-
வேலையில்லா பட்டதாரி வேலையின்மை என்பது தொழில் இன்மை என்பது மட்டும் அல்ல... மன விருப்பம் இன்றி பிடிக்காத தொழிலை சிலுவை போல சுமப்பதும் மனதளவில் வேலையின்மை போன்றதே.. இத்தனை வருடங்கள் லயத்து பிரச்சினை பற்றி பேசியது போதும் இனி சமூக மாற்றத்தை உருவாக்க சிறந்த தொழில் வாய்ப்பை பெற உதவுங்கள் மலையகத்தில் மாற்றம் தானாகவே உருவாகும்.... வேலையில்லா பட்டதாரி இது தனுஷோட படம் கிடையாது. எங்களோட வாழ்க்கை. தேயிலைக்கு இரத்தத்தை பாய்ச்சி தேநீருக்கு நிறத்தை கொடுத்த ஒரு சமூகத்தின் இன்றைய படித்த தலைமுறையின் ஒரு குரல் என் பேனாவின் வழியாக இங்கு ஒலிக்கிறது.. இயற்கையோட இயைந்த வாழ்வு சங்க காலம் என்பார்கள். உண்மையில் மலையக…
-
- 0 replies
- 906 views
-
-
ஜனாதிபதி தேர்தல். 2 - வடக்கிலும் கொழும்பிலும் வாழும் தமிழ் தலைமைகளுக்கு வேண்டுகோள்.- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் . . சோமாலியாவாக சிதைகிறது கிழக்கு. இதுவரை கிழக்குக்குச் செய்த துரோகம் போதும். இனியாவது கிழக்கு தமிழர் தலைவர்களை உங்கள் விருந்துகளில் கருவேப்பிலையல்ல பயன்படுத்துவதை நிறுத்துங்கள். கிழக்கு தலைவர்களை வடமாகாண தலைவர்கள்இனியும் மட்டுமல்ல கொழும்பு தமிழ் தலைவர்களும் கிள்ளுகீரையாக பயன்படுத்துவதை வரலாறு அனுமதிக்காது. வடக்கு கிழக்குத் தமிழர்களின் சரிநிகர் சமத்துவத்தை அங்கீகரியுங்கள். இணைந்த வடகிழக்கு தமிழர்களின் அதிகாரம்தான் ஈழத் தமிழர் தலைமை. அப்படித்தான் 50பதுகளில் தந்தை செல்வநாயகம் ஈழத் தமிழர் தலைமையைக் கட்டமைத்தார்..தமிழர் தலைமையால் கைவிடப்பட்டு சோமாலியா…
-
- 6 replies
- 906 views
-
-
கோட்டாவின் ‘அபிவிருத்தி’ மாயாஜாலம் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 டிசெம்பர் 18 , மு.ப. 03:22 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ “சாதாரண மக்களுக்கு அதிகாரப் பகிர்வு, சமஷ்டி பற்றிய யோசனைகள் எதுவுமில்லை. அவர்கள் அபிவிருத்தி தொடர்பிலேயே சிந்திக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கின்றார். நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலான, கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். கோட்டா பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலந்தொட்டு, தேசிய பாதுகாப்பு, (வெளித்தெரியும்) அபிவிருத்தி என்பவை குறித்தே செயற்பட்டு வந்திருக்கின்றார். அவர், சமூக மேம்பாட்டுக்கான அடிப்படை விடயங்கள் குறித்துச் சிந்தித்ததில்லை. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, நாட…
-
- 1 reply
- 906 views
-
-
Published By: VISHNU 30 JUL, 2023 | 11:07 AM ஹரிகரன் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், தமிழர் விரோத மனநிலை தெற்கில் மாற்றமடையவில்லை. 1983 ஜூலை 24ஆம் திகதி மாலையில், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட இடம் பொரளையில் உள்ள கனத்தை மயானம் தான். திருநெல்வேலி தாக்குதலில் கொல்லப்பட்ட 13 படையினரின் சடலங்களும் அங்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் - கனத்தையில் கூடியிருந்தவர்களால் தான் கறுப்பு ஜூலை கலவரங்கள் ஆரம்பித்து வைக்கப்…
-
- 5 replies
- 905 views
- 1 follower
-
-
வெனிசுவேலா: இன்னோர் அந்நியத் தலையீடு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 01:38 அயற்தலையீடுகள் ஆரோக்கியமானவையல்ல; அவை எந்த நியாயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டாலும், ஒரு நாட்டின் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்கள். ஆனால், உலகெங்கும் அயற்தலையீடுகள் நடந்தவண்ணமுள்ளன. அவை பல்வேறு முகாந்திரங்களின் கீழ் நடந்தேறுகின்றன. அவை வேறுபாடின்றிக் கண்டிக்கப்பட வேண்டியவை. எம்மத்தியில், அயற்தலையீடுகளைக் கூவி அழைப்போர் இருக்கிறார்கள். அதைத் தீர்வுக்கான வழியாகக் காண்போர், அது தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஆபத்தைக் காணத் தவறுகிறார்கள். அவர்கள், அந்த ஆபத்தை இனங்காணும் போது, காலம் கடந்திருக்கும். வெனிசுவேலாவில் இப்போது சதிப்புரட்சி ஒ…
-
- 1 reply
- 905 views
-
-
ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும் - நிலாந்தன் 25 பெப்ரவரி 2013 சேர். ஐவர் ஜென்னிஸ் ஒரு முறை இலங்கை மக்களைப் பற்றி பின்வரும் தொனிப்படக் கூறியிருந்தார். ''இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. எழுத்தறிவு உயர்வானது. சமூகச் சூழல் ரம்மியமானது. ஆனால், எப்பொழுதும் இந்தியா பொறுத்து ஒரு பனிப் பாறை உருகி தங்கள் மீது கவீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள்' அவர் இலங்கையர்கள் என்று குறிப்பாகக் கருதியது சிங்கள மக்களைத்தான். பனிப்பாறை பற்றிய அச்சத்தின் மீது கட்டியெழுப்பட்டதே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும். அதாவது, வெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொள்ள முற்படும் அல்லது தகவமைத்துக்கொள்ள முற்படும் ஒரு…
-
- 9 replies
- 905 views
-
-
எழுக தமிழுக்குத் தயாராதல் – நிலாந்தன்… September 1, 2019 செப்டம்பர் 16ஆம் தேதி எழுக தமிழ் நடக்கவிருக்கிறது. அப்படி ஒரு மக்கள் எழுச்சிக்கான எல்லாத் தேவைகளும் உண்டு. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் எழுக தமிழை நடாத்தியிருப்பதால் இம்முறை ஏன் வன்னியில் நடத்தக் கூடாது? என்ற கேள்வியும் உண்டு. ஆனால் முன்னைய எழுக தமிழ்களோடு ஒப்பிடுகையில் இம்முறை ஓர் எழுக தமிழை ஒழுங்குபடுத்துவதில் பின்வரும் சவால்கள் உண்டு. அது ஓர் அலுவலக நாள். அந்நாளில் அரச அலுவலர்களையும் மாணவர்களையும் முழு அளவுக்குத் திரட்ட முடியுமா? ஏற்கனவே கடையடைப்பு என்றால் அது மாணவர்களுக்கு மட்டும்தான் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அரச அலுவலர்களுக்கும் இல்லை என்று ஒரு வழமை உண்டு. இந்த வழமையைப் பேரவை எப்…
-
- 0 replies
- 904 views
-
-
ஜெனீவா ஏமாற்று வித்தை எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஏப்ரல் 03 புதன்கிழமை, பி.ப. 08:53 Comments - 0 Views - 20 மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், அப்பேரவை விடயத்தில் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக சிங்கள மக்களுக்கும் உண்மையைக் கூறுவதில்லை. தாம், மனித உரிமைகள் பேரவையின் முன் மண்டியிடுவதில்லை என, அவ்வரசாங்கங்களின் தலைவர்கள், சிங்கள மக்களிடம் கூறி வருகிறார்கள். அதேவேளை, அவர்கள், மனித உரிமைகள் விடயத்தில், பொறுப்புக் கூறல் தொடர்பில் பல நடவடிக்கைகளைத் தாம் எடுத்து வருவதாக, மனித உரிமைகள் பேரவையிடம் கூறி வருகிறார்கள். உண்மைநிலை என்னவென்றால், அவர்கள், மனித உரிமைகள் பேரவையின் நெருக்குவாரத்தின் க…
-
- 0 replies
- 904 views
-
-
PREDICTION. எதிர்வு கூறல்: . நாடாளுமன்றம் ஒருரிரு நாட்களில் கூடினால் ரணில் வெற்றி பெறுவார். அதற்க்கு அவைத்தலைவர் துணிச்சலான முடிவுகளை எடுத்து சர்வதேச ஆதரவுடன் நாடாளுமன்றத்தின் ஜெயவர்தனபுர கட்டிடத்திலோ அல்லது வெளியிலோ நாடாளுமன்றத்தைக் கூட்டியாக வேண்டும். இல்லையேல் மகிந்த ராஜபக்சவே பிரதமராக வெற்றி பெறுவார் .
-
- 4 replies
- 904 views
-
-
தோல்வி பயத்தில் ஓடி ஒளியும் ரணில் - ராஜபக்ஷர்கள் புருஜோத்தமன் தங்கமயில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துவிட்டது. தற்போது ஆட்சியிலுள்ள ரணில் -ராஜபக்ஷ அரசாங்கம், எந்தவொரு தேர்தலையும் உடனடியாகச் சந்திப்பதற்கு தயாராக இல்லை. அதனால், தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பது அல்லது ஒத்திப்போடுவதற்கான சதித்திட்டங்களை மேற்கொள்வது என்ற எண்ணத்தோடு இயங்கி வருகின்றது. அதன் ஒரு கட்டம்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை, திறைசேரி விடுவிக்காமல் அலைக்கழிப்பதனூடு நிகழ்ந்திருக்கின்றது. நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவும், தேர்தல்கள் மூலமா…
-
- 1 reply
- 904 views
-
-
நேற்றைய தினம் எம். ஏ. சுமந்திரன் தோன்றிய டான் தொலைக்காட்சியின் Spotlight
-
- 0 replies
- 903 views
-
-
வீ(கூ)ட்டை சிதைக்க "பிரித்தாளும் சூழ்ச்சி' "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டாமா?', "வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைக்கலாமா?' இந்த இரண்டு பழமொழிகளுக்குமான அர்த்தத்தை தற்போதைய அரசியல் சூழலில் கேட்கக்கூடிய மிகச்சிறந்த தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத்தான் இருக்கும். அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் நடைபெற்றுவருகின்றது. இன்றைய தினம் (08112017) இறுதிநாள் விவாதம் நடைபெறுகின்றது. இவ்வாறான ஒரு சூழலில் ஒற்றுமையாக இருந்து அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் சிந்திக்கவேண்டிய சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி மோதல் வடக்கு, கிழக்குத…
-
- 1 reply
- 903 views
-
-
சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் ‘சுரேஷ்’ எதிர்காலத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ், தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) அறிவித்திருக்கின்றது. கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த அறிவித்தலை வௌியிட்டார். 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எ…
-
- 0 replies
- 903 views
-
-
யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்) புருஜோத்தமன் தங்கமயில் / 2020 பெப்ரவரி 19 தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துவரும் அரசியல், இதைத்தான் உணர்த்துகிறது. அவ்வாறான கட்டத்தில் இருந்துதான், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களும் அதன் ஆதரவுத் தரப்பினரும், எதிர்வரும் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறார்கள். அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடத்துணியும் சமூகங்களிடம், விடுதலைக்கான சித்தாந்தமும் அதை அடிப்படையாகக் கொண்ட அரசியலும் அவசியமாகும். விட…
-
- 0 replies
- 903 views
-
-
விளையாட்டு வீரனும் ஒரு கலைஞனும்-பா.உதயன் துன்பமும் துயரமும் நிறைந்த ஒரு மக்களின் வாழ்வை புரிந்துகொள்ளாதவன் ஒரு கலைஞனாக இருக்க முடியுமா என்ற கோள்வி எழுவது நியாயமே. ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தில் வாழும் ஒரு சிறு பான்மை இனத் தாய்மார்கள் தொலைந்துபோன தம் பிள்ளைகளை தேடி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் ஓர் தாயின் அவலத்தை புரிந்து கொள்ளாதவன் மானிடத்தின் மதிப்பை உணராதவனாக ஒரு கலைஞனாக இருக்க முடியுமா.கலைஞன் என்பவன் யார் ஒரு மானிடத்தின் விடுதலையை பேசுபவன் எழுதுபவன் படிப்பவன்.அந்த மக்களின் வாழ்வை பிரதிபலிப்பவன்.அந்த மக்களால் வாழ வைக்கப்படுபவன்.ஒரு அரசியல் சமூக கலாச்சார மாற்றத்தை உருவாக்க கூடியவன். ஒரு சமூக வாழ்வின் அரசியலோடும் பொருளாதாரத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந…
-
- 3 replies
- 903 views
-
-
இந்தியாவுக்கு இது நல்ல செய்தி; அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில் கரோனா பரவுவது கடினம்: அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸ், சூரிய ஒளி, அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழல் ஆகியவற்றில் பரவுவது கடினம். இந்த சூழல் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது அமெரி்க்க அரசின் உள்துறை அமைச்சக்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கரோனா பரவல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. அமெரிக்க உள்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைமை இயக்குநர் பில் பிரையன் நேற்று வெள்ளை மாளிகையில் பேட்டி அளி…
-
- 2 replies
- 903 views
-