அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-09#page-11
-
- 0 replies
- 287 views
-
-
‘கறுப்பு ஜூலை’: மறக்கக்கூடாத வரலாறு என்.கே. அஷோக்பரன் போலந்து நாட்டின், க்ரக்கவ் நகருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு 2018ஆம் ஆண்டு கிடைந்திருந்தது. போலந்தின் க்ரக்கவ் நகரிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கிறது நாஸிகளின் ‘ஒஷ்விட்ஸ்’ சித்திரவதை முகாம். பல்லாயிரம் யூதர்களை, நாஸிகள் அடைத்துவைத்த பல சித்திரவதை முகாம்களில் ஒஷ்விட்ஸூம் ஒன்று. சித்திரவதை முகாம், யூதர்கள் விஷவாயு செலுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விஷவாயு அறைகளைக் கொண்டதும், சுவரோடு நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்படும் கொலைச் சுவரைக் கொண்டதுமான கொலைக்களம் அது. இன்று, அந்த முகாம் ஒஷ்விட்ஸ் ஞாபகார்த்த முகாமாக, வரலாற்றின் கொடுமையான பக்கங்களை, அடுத்து வரும் சந்ததிகள் அறிந்துகொள்வதற்காக,…
-
- 4 replies
- 2.4k views
- 1 follower
-
-
தமிழ் தேசியப் போராட்டமும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பும் - நிர்மானுசன் பாலசுந்தரம் 01 நவம்பர் 2013 அறிமுகம் கருத்தியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் புலம்பெயர் தமிழர்களும், அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியில் தமிழக அரசியலும் சிக்குண்டாலும், தமிழர் தேச அரசியலில் அவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது. அத்தகைய சூழலில், ஈழத்தமிழர் நலனை முன்னிறுத்திய புலம்பெயர் மற்றும் தமிழக அரசியல் செயற்பாடுகளை பலவீனப்படுத்துமாற் போல் சில கருத்துக்களை வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தேர்தலை அண்மித்த காலப்பகுதியில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள், முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு 2009 ல் நடாத்திய இனஅழிப்புப் போருக்குப் (Genocidal war) பின்னர், தமிழ…
-
- 0 replies
- 534 views
-
-
இலங்கைக்கு ஜனாதிபதி முறை பொருத்தமானதா? நாடாளுமன்ற முறை பொருத்தமானதா? January 20, 2016 Photo, Selvaraja Rajasegar ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கும் நபர்களை சந்தோசப்படுத்துவதற்காகவன்றி சுதந்திரத்தை மதிக்கும் பிரஜைகளை சந்தோசப்படுத்துவதற்காகவே ஓர் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அரசின் அடித்தளம், அரசியல் இலக்குகள், நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் என்பவற்றை ஜனநாயகமயமாக்கும் ஓர் அரசியல் யாப்பு சீர்த்திருத்தமொன்றுக்கூடாக மட்டுமே அதனை மேற்கொள்ள முடியும். இலங்கையில் தற்பொழுது இடம்பெற்று வரும் அரசியல் யாப்பு தொடர்பான உரையாடலில் தவிர்க்க முடியாத விதத்தில் எழுப்பப்பட்டு வரும் ஒரு கேள்வி ஜனாதிபதியை மையமாகக் கொண்டிருக்கும் தற்போ…
-
- 0 replies
- 259 views
-
-
இந்தியாவானது தென்னாசியாவின் மையமாக விளங்குகிறது. இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பிற்கு எழும் அச்சுறுத்தலானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தலாக எழும் என்கின்ற நியாயத்தை இந்தியா கவனத்திற் கொள்ள வேண்டும். இவ்வாறு இந்தியாவின் முன்நாள் வெளியுறவுச் செயலரான நிருபமா ராவ் தனது உரையொன்றில் தெரிவித்துள்ளார். 'த இந்து' ஆங்கில நாளேட்டில் வெளிவந்த அந்த உரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. பொருளாதார விவகாரங்களைப் பொறுத்தளவில் பூகோள மூலோபாய விவகாரங்களில் ஏற்பட்டுள்ள துரித மாற்றங்கள் இந்தியாவிற்கும் பசுபிக் சமுத்திர நாடுகளுக்கும் முக்கியமானதாக உள்ளன. இந்த மாற்றங்கள் இந்தியாவின் தென்னாசியாவிலுள்ள அயல்நாடுகளும் வளைகுடாப் பிராந்திய நாடுகளும் தமக்கான கொள்…
-
- 3 replies
- 812 views
-
-
20 ஆவது திருத்தமும் கிழக்கு மாகாண சபையும் வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் 10 பேர் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் 7 பேர் ஐக்கிய தேசியக் கட்சி 3 உறுப்பினர்கள், ஐ.ம.சு.கூ (01), சிறிலங்கா சுதந்திரக் கட்சி (02), எதிர்க்கட்சி உறுப்பினர் (01) ஆக 24 பேர் ஆதரவாகவும் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் எண்மர் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களித்தனர். 37 பேர் கொண்ட சபையில் தவிசாளர், தவிர ஏனைய நால்வர் சபைக்கு வருகை தரவில்லை. சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்தமானது ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் மாகாண சபைக்குரிய அதிகாரங்களை பறிக்காத வகையில், 20 ஆவது சட்டத் திரு…
-
- 0 replies
- 465 views
-
-
சர்வதேச அவதானிப்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியும் நியூயோர்க்கிலிருந்து ரொபட் அன்டனி தற்போது ஜனாதிபதி சர்வதேசத்திடம் நிதானமான மெதுவான பயணத்துக்கு ஒத்துழைப்பு கோரியுள்ளார். ஆனால் 2019 ஆம் ஆண்டாகும்போது முன்னேற்றத்தை வெ ளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இலங்கைக்கு தீர்க்கமானதாகவே அமையப்போகின்றது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் நோக்கில் அமெரிக்கா வந்துள்ள நிலையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய…
-
- 0 replies
- 278 views
-
-
திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ? நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை ஆறு மாடிகளுக்கு மேல் கட்டிடங்களைக் கட்டுவதற்கு கட்டடநிர்மாணத் துறையினர் அனுமதிப்பதில்லை.எனினும் விசேஷ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய எல்லா கட்டடங்களை விடவும் உயரமான ஒரு கட்டடமாக கலாச்சார மையம் கட்டியெழுப்பப்பட்டது.யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தமிழர்களின் தாயகத்தில் உள்ள மிக உயரமான கட்டடம் அது. அதன்…
-
- 1 reply
- 717 views
-
-
அரசியலமைப்பு உருவாக்கம் சொற்களை வைத்து விளையாட வேண்டாம் http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-7
-
- 0 replies
- 365 views
-
-
இந்திய ஆன்மாவும் ஏழுபேர் விடுதலையும் பா.செயப்பிரகாசம் மூன்று தமிழருக்கு வாய்ப்பான ஒரு தீர்ப்பை 18.02.2004 அன்று உச்சநீதிமன்றம் நல்கியிருக்கிறது. மூன்று தமிழர் மட்டுமல்ல, உலகத்தமிழினம் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டிய தீர்ப்பு. உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது. அப்போதும் மூவரும் குற்றவாளிகள் அல்ல என்று சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் தலையீடு செய்ய நினைத்தது அந்த விசயத்தில் அல்ல. கருணை மனுவைப் பரிசீலிப்பதில் அநாவசியமான காலதாமதம் செய்யப்பட்டதைக் காரணமாக்கி தண்டனையைக் குறைத்தது. ('நீண்ட காலதாமதம் ஏற்பட்டால் மரண தண்டனையைக் குறைக்கலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் கருத்து பிரச்சினையானது தான். அந்தக் கருத்து சரியானதா என்பதை நாம் ஆராய…
-
- 1 reply
- 742 views
-
-
தேர்தல்கள் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைப் பிற்போடுமா? - க. அகரன் அரசாங்கத்தின் நிலைபேறு தன்மை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் அண்மைய காலங்களில் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளமை வெளிப்படை. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் என்ற சொற்பதத்துடன் மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற கனவுடன் ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்த, ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் அதில் வெற்றி பெற்றதன் பின்னராக, அந்த ஆட்சிக்குள் பல்வேறு குழப்பகரமான நிலைமைகள் தோன்றி மறைவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாதுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் களத்தில், பெரும் கட்சிகளாக வலுப்பெற்று, ஒன்றோடொ…
-
- 0 replies
- 322 views
-
-
இந்து சமுத்திரத்தில் ஒரு கண்ணீர் துளி! ___________________ ஞானேஷ்வர் தயாள் ___________________ இலங்கை பல வருடங்களாக ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு பெருந்தோல்வி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அனைவரையும் உள்ளீர்த்துக்கொள்ளாத அதன் சித்தாந்தமே இதற்குக் காரணம் . சரியான நேரத்தில் இந்தியா பாடம் கற்பது நல்லது. இலங்கையின் துயரங்கள் தமிழர்களை அந்நியப்படுத்தவும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கவும் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது. 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் சிங்கள அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. அப்பட்டமான போர்க்குற்றங்களால் தமிழ் மக்கள…
-
- 0 replies
- 260 views
-
-
-
- 2 replies
- 825 views
-
-
பலஸ்தீனப் போராட்டம் ஒரு சுருக்கமான வரலாறு – அ.மார்க்ஸ் {இது மிகச் சுருக்கமாக அமைய வேண்டும் என்கிற நோக்கில் இது எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தச் சுருக்கத்தை எனது முந்தைய கட்டுரைகளுடன் சேர்த்துப் படித்தால் இன்னும் வரலாறு விளக்கமாகும். ‘ஏரியல் ஷரோன்: மாவீரனா போர்க்குற்றவாளியா?’ (2013), ‘காஸாவில் ஒரு கண்னீர் நாடகம்’ (2005), ‘காஸா : போரினும் கொடியது மௌனம்’ (2014) முதலிய என் கட்டுரைகள் இணையத்தில் உள்ளன. சுருக்கத்தின் விளைவாக முக்கிய செய்திகள் ஏதும் விடுபட்டு விட்டதாகக் கருதினால் நண்பர்கள் சுட்டிக் காட்டலாம்.} இன்றைய வரைபடங்களில் மத்தியதரைக் கடலுக்கும் ஜோர்டான் ஆற்றுக்கும் இடையில் காணப்படும் காஸா, இஸ்ரேல், மேற்குக்கரை (வெஸ்ட் பாங்க்) என்கிற மூன்று பக…
-
- 4 replies
- 7.5k views
-
-
ஸ்கொட்லாந்தின் அனுபவத்திலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.. நிலாந்தன்:- 21 செப்டம்பர் 2014 ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் பின்னணியில் இக்கட்டூரை எழுதப்படுகிறது. ஸ்கொட்டிஷ; மக்களின் முடிவு எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தமது தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்குரிய ஓர் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இங்கு முக்கியம். தென்சூடானியர்களுக்கும் கிழக்குத் தீமோரியர்களுக்கும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில மக்கள் கூட்டத்தினருக்கும் அவ்வாறு தமது தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஈழத்தமிழர்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வழங்க…
-
- 1 reply
- 460 views
-
-
சிறிலங்கா: அபிவிருத்தி என்னும் போர்வையில் முல்லைத்தீவின் காடுகள் அழிப்பு Dec 12, 2014 | 12:31 by நித்தியபாரதி முல்லைத்தீவின் 1000 ஏக்கர் பரப்பைக் கொண்ட Pansal Kanda என்கின்ற காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு 25 ஏக்கர் நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு Ceylontoday ஆங்கில ஊடகத்தில் Rathindra Kuruwita எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ல் சிறிலங்காவில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் முன்னால் போர் வலயத்தில் உள்ள காடுகள் துப்பரவு செய்யப்பட்டு செல்வாக்கு மிக்க வர்த்தகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த காலத…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன் உலகில் எங்கெல்லாம் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் புதிய உற்சாகம் ஆரம்பித்துவிடும். மாற்றத்திற்கான கனவுகளுடன் சாரிசாரியாகத் தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்ப்படும் ஐந்து வருடங்களுக்கு மீண்டும் ஏமாற்றப்படுவர்கள். இத் தேர்தல் ஜனநாயகத்திற்குள் தங்களை நுளைத்துக்கொள்ள விரும்புகின்ற ஒவ்வொருவரின் பின்னாலும் பிழைப்புவாத நோக்கங்களைத் தவிர வேறு எதுவும் காணப்பட்டதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை மக்களின் எதிர்பார்ப்புக்கள் இன்னும் ஆழமானவை. 2005 ஆம் ஆண்டு மிகச் சிறிய தொகையான வாக்குப் வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்ற போது இலங்கையின் ‘மன்னனாக’ மகிந்த உருவெடுப்பார் என …
-
- 0 replies
- 2.6k views
-
-
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வாழாவிருத்தல் மொஹமட் பாதுஷா ஒற்றுமை பற்றி, முஸ்லிம்கள் நூற்றாண்டுகளாகப் பேசி வருகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்திலும் அது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நிஜத்தில், ‘ஒற்றுமை ஒற்றுமை’ என்று பேசிப்பேசியே, பல அடிப்படைகளில் பிரிக்கப்பட்ட இனக் குழுமங்களுள் ஒன்றாகவே, இலங்கை முஸ்லிம்கள் இன்றிருக்கின்றனர் என்பதை, திரும்பவும் சொல்ல வேண்டியுள்ளது. அரசியல் ரீதியாகவும், மார்க்க ரீதியாகவும், இப்போது புவியியல் அடிப்படையிலும் பல பிரிவுகளாக, முஸ்லிம்கள் பிரித்தாளப்படுவதைக் காணமுடிகின்றது. முக்கியமான தருணங்களில், ஒற்றுமையின் பலத்தை, முஸ்லிம்களால் வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது. மார்க்க அடிப…
-
- 0 replies
- 606 views
-
-
கண்டி வீழ்ச்சியின் சூத்திரதாரி ஜோன் டொயிலியின் டயரியில் மார்ச் 2. 1815 ஆம் திகதி இப்படித்தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அதே தினம் வாரியபொல சுமங்கள தேரர் அங்கிருந்த கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட ஆங்கிலேயர்களின் கொடியை இறக்கி காலால் மிதித்து சிங்கக் கொடியை ஏற்றியதாக பல்லாயிரக்கணக்கான சிங்களக் கட்டுரைகளும், நூல்களும் பதிவு செய்து வந்திருக்கின்றன. பாடசாலை பாடப்புத்தங்களில் இன்றுவரை அப்படியொரு கதை எழுதப்பட்டு வருகின்றன. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் அதுவொரு கட்டுக்கதை என்றும் பிரபல மானுடவியலாளரான பேராசிரியர் கணநாத் ஒபேசேகர உள்ளிட்ட பலர் தமது ஆய்வு…
-
- 0 replies
- 1.1k views
-
-
கூட்டமைப்பும் பேரம் பேசலும் சாணக்கியமும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஜூலை 15 திங்கட்கிழமை, பி.ப. 04:10 Comments - 0 மீண்டும் ஒருமுறை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காப்பாற்றி இருக்கிறது. இது தொடர்பில், பரவலாகப் பிரதானமான இருவேறுபட்ட கருத்துகள், தமிழ் மக்களிடையே நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. முதலாவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னிலை தவறி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கும் கருத்து, தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட தமிழ் மக்களிடமிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தொடர்ந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மிகக் கவனமாக சிந்திக்க வேண்டிய முஸ்லிம்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:51 ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் முன்னரே, ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்றும் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்குமென்றும் அரசியல் அரங்கில், கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. தங்களது எதிர்பார்ப்புகள் எல்லாம், நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில், முஸ்லிம்கள் முழுமூச்சாக நின்று, ஆட்சிபீடமேற்றிய தற்போதைய அரசாங்கமானது, அந்த எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தும்…
-
- 0 replies
- 999 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள் Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 12:52 Comments - 0 2020ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது. ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாயநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிக்க, ஞாயிற்றுக்கிழமையன்று (18), காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஏராளமானோர் பங்குபற்றினர். இது, மாற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் இவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்துகளும் எ…
-
- 0 replies
- 628 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா? அ. நிக்ஸன் படம் | PRESS EXAMINER இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றுதான் அழைக்க வேண்டும் என வேறு சிலர் காரணமும் கூறுகின்றனர். உள்ளக முரண்பாடுகள், முதலமைச்சா விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் செயற்பாடுகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், தமிழர்களின் சமகால அரசியல் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மதில் மேல் பூனை sudumanal மத்தியகிழக்கை மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா ‘மதில்மேல் பூனையாக’ இன்னும் எவளவு காலம் இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிக்ஸ் இன் தோற்றுவாயாக இருந்த முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு தென் ஆபிரிக்காவும் இணைந்து பிரிக் (BRIC) என்பது பிரிக்ஸ் (BRICS) என்றாகியது. இப்போ ஈரானும் அதில் ஒரு புதிய அங்கத்துவ நாடு. ஒற்றைத் துருவ அரசியலை புரட்டிப்போடும் வலுவான பொருளாதார அமைப்பாக பலம்பெறுகிறது பிரிக்ஸ். பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்ட ஈரானின் மீதான இந்த யுத்தம் பிரிக்ஸ் இன் பொருளாதாரத்தை பாதிக்க வல்லது. அதனால் பிரிக்ஸ் நாடுகள் இந்த யுத்தத்தை விரும்பாதது மட்டுமல்ல, அமைதியான…
-
-
- 1 reply
- 322 views
-
-
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன். செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா விளக்கு போராட்டமானது ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சித்துப்பாத்தி மயானத்துக்குத்தான் வருகைதர இருந்தார். அவரை அணையா விளக்கை நோக்கி வர வைத்தது கட்சி சாராத மக்கள் திரட்சிதான். சிவில் சமூகங்கள் தான். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அணையா விளக்கை வணங்கியதும், அங்கே மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்ததும் அடிப்படை வெற்றிகள்தான். அதேசமயம் கட்சி கடந்த அந்தப் போராட்டத்தில் எல்லாக் கட்சிகளையும் ஒரு மையத்தில் குவித்ததும் வெற்றிதான்.அதைவிட முக்கியமாக,அந்தப் போராட்டத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற …
-
-
- 4 replies
- 442 views
- 1 follower
-