அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
ஈழத் தமிழர்கள் மீதான அடுத்த பெரும் தாக்குதல்! எந்த ஒரு பிரச்சினையையும் அதன் தொடக்கத்தில் தீர்க்காமல், அது புண்ணாகி, புரையோடி, பாதிக்கப்பட்ட உறுப்பையே எடுத்தால்தான் உயிரையே காப்பாற்ற முடியும் என்கிற அளவுக்குக் கொண்டு போய்விட்டு, அதன் பின் களிம்பு பூசுவதில் வல்லவர்கள் இந்திய அரசியலாளர்கள். அதன் பிறகு, அந்தக் களிம்பு தடவியதையே பெரிய சாதனையாகப் பேசி வாக்குக் கேட்டு வருவார்கள். உறுப்பையே எடுக்க வேண்டிய நேரத்தில் மருந்து பூசுவது உதவியில்லை, உயிர்க்கொலை என்பதைப் புரிந்து கொள்ளாத நம் மக்களும் இளித்துக் கொண்டே வாக்கை அள்ளித் தருவார்கள். எல்லாத் தேர்தல்களிலும் காலங்காலமாக நடக்கும் இந்த அரசியல் விரச நாடகத்தை இந்த முறை பன்னாட்டு அளவில் பிரம்மாண்டமாக அரங்கேற்ற இந்திய அரசு எடுத்து…
-
- 0 replies
- 839 views
-
-
ஈழப் போராட்டத்தைப் பற்றி இந்திய மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது பற்றி எனக்கு எந்தத் தெளிபும் கிடையாது. ஆனாலும் இப்படியும் நினைக்கின்றார்கள் என்பதை அன்பர் பாஸ்டன் பாலாஜி தமிழோவியத்தில் எழுதிய "இந்தியாவும் வான்புலிகளும்" என்ற கட்டுரை வாசிக்கநேர்ந்த போது அறிந்து கொள்ள முடிந்தது. சிரிப்பது நோயில்லாது வாழ்வதற்கு அருமருந்தென்ற உண்மை அவருக்குத் தெரிந்திருக்கின்றது. சிரித்துச் சிரித்து களைத்தே விட்டேன் ஐயா. ஆய்வு செய்திருக்கின்றார். பக்கா ஆய்வு. அனைவரும் படித்துப் பரவசம் அடைய வேண்டும். சில உதாரணங்கள். விடுதலைப் புலிகள் விமானம் வைத்திருக்கிறார்களாம். நான்கு நபர் பயணம் செய்யக் கூடியது. கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் கேரளா சென்னை போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஈழத் தமிழ் மாணவர்களின்- வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயத்திணிப்பும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகத்தின் கவனயீனமும் குருபரன் மீதான தடையுத்தரவு இலங்கை இராணுவத்துக்கு வழங்கப்பட்ட மரியாதை இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி வருகின்றது. இதன் உச்சத்தை 2015ஆம் ஆண்டு மைத்தரி- ரணில் அரசாங்கத்தில் காணமுடிந்தது. இலங்கைத் தேசியத்தை மையமாகக் கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவ…
-
- 0 replies
- 506 views
-
-
ஈழத் தமிழ் லொபியின் தோல்வி? - யதீந்திரா யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கழிந்துவிட்டது. இந்தக் காலகட்ட தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால், பாரபட்சமில்லாமல் அனைத்து தமிழ்த்தேசிய தரப்பினரும் சர்வதேச சமூகம் தொடர்பிலேயே தமது கரிசனையை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். ‘சர்வதேச சமூகம் எங்களை கைவிடாது’ – என்பதுதான் அனைவரதும் சுலோகமாக இருந்தது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் – கூட்டமைப்பின் கொள்கையை விமர்சித்து வேறு வழியில் சென்றவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. அதே போன்று ஜரோப்பிய மைய தமிழ் புலம்பெயர் அமைப்புக்களான நாடுகடந்த அரசாங்கத்திற்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC) மற்றும் USTAG போன்ற தாராளவாத புலம்பெயர் அமைப்புக்களுக்கும் இடையி…
-
- 0 replies
- 456 views
-
-
ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித் தேசிய இனம்? சபா நாவலன் தேசம் தேசியம் அவற்றின் உட்கூறுகளெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சமூக விஞ்ஞான விவாதக் கருப்பொருளாக அமைந்திருந்தது. 50 ஆயிரம் தமிழ் பேசும் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை, இந்திய அரசுகள் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலைக்குப் பின்னதாக, முகாம்களில் நடத்தப்படுகின்ற இனச்சுத்திகரிபிற்கு எதிராக குறைந்த பட்ச இணைவிற்குக்கூட வரமுடியாத தமிழ் பேசும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து இப்பிரச்சனை குறித்த விவாதம் முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகினும் சமூக அக்கறை உள்ள சக்திகளின் மத்தியிலேனும் இது தொடர்பான கருத்துக்களை முன்வைக்க வேண்டிய தேவை உணரப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சனை தொடர்பான கருத்தா…
-
- 0 replies
- 848 views
-
-
ஈழத்தமிழரின் அமைதிக்கான பாதுகாப்பு அவர்கள் மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும் 12 Views “போர் மனித மனதிலேயே கட்டமைக்கப்படுவதால், அமைதிக்கான பாதுகாப்பும் மனித மனதிலேயே கட்டியெழுப்பப்படல் வேண்டும்” என்பது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் பிரகடனம். இந்த அமைதிக்கான பண்பாட்டை உருவாக்கத் தூண்டும் பிரகடனத்தில் அமைதி என்பது வெறுமனே போர் அற்ற நிலை மட்டுமல்ல நேரான அணுகுமுறையில் இயங்கியல் தன்மையான செயல் முறைகள் மூலமான, உரையாடல்கள் வழி, சிக்கலை ஓருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் ஊடாக விளங்கி, அதனைத் தீர்ப்பதற்கான கூட்டுறவுகளை வளர்க்கும் மனோநிலையை உருவாக்குதல் எனத் …
-
- 0 replies
- 281 views
-
-
1833 – 1921 வரையான காலகட்டம்: தமிழ்த் தலைவர்களும் இலங்கை தேசிய காங்கிரசும் April 18, 2025 | Ezhuna 1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இ…
-
- 5 replies
- 293 views
-
-
ஈழத்தமிழரின் இன்றைய சவால்: நாம் மனந்திறந்து பேசுவது எப்போது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இன்று, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்ன? என்ற கேள்விக்கான ஒருமித்த பதிலை, ஈழத்தமிழ்ச் சமூகத்தால் சொல்லிவிட முடியாது. அதேபோலவே, ஈழத்தமிழர் என்ற வரையறைக்குள், யாரெல்லாம் அடங்குகின்றார்கள் என்பதற்கும் ஒருமித்த பதில் இல்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள், இலங்கையில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களாகக் கருத விரும்புகிறார்கள். ஆனால், ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களை ஈழத்தமிழர்களாக அடையாளம் காட்ட விரும்புகிறார்களா என்ற கேள்வி இயல்பானது. அகஒடுக்குமுறைகள் நிரம்பிக் கிடக்கின்ற சமூகமொன்றில், புறஒடுக்குமுறையின் காரணமாக, அகஒடுக்குமுறைகளை மிகக் கொடூரமான முறையில்,…
-
- 0 replies
- 443 views
-
-
ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன? - கற்பனையும் யதார்த்தமும் தத்தர் பெருவல்லரசுகளும், வல்லரசுகளும் 21ஆம் நூற்றாண்டின் மத்தியின் பின்னான தமது எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுத்துள்ளன. சிங்கள அரசு ஈழத்தமிழினத்தை முற்றிலும் அடையாளம் அற்றவர்களாகவும், நாதியற்றவர்களாகவும் ஆக்குவதற்கான நீண்டகால திட்டங்களுடன் செயற்பட்டு வருகிறது. தற்போது ஈழத்தமிழர்கள் தன்நிலையை விருப்பு வெறுப்பின்றி காய்தல் உவர்த்தல் இன்றி சரிவர மதிப்பிட்டு எதிரிகளின் பிடிகளிலும் அழிப்புக்களிலும் இருந்து எப்படி தப்பிப்பிழைத்து முன்னேறுவது என்பதற்கான ஒரு நீண்டகால பார்வை கொண்ட திட்டத்தை வகுத்தாக வேண்டும். ஈழத்தமிழர்கள் புவிப்பரப்பில் அறியப்பட்ட அளவுக்கு அவர்களின் பிரச்சனைகளும் உரிமைகளும் இலட்சியங்களும் அறியப…
-
- 0 replies
- 684 views
-
-
ஈழத்தமிழரின் தமிழக மயக்கம்: தெளியாத போதை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஈழத்தமிழர்களின் தமிழக மயக்கம் புதிதல்ல. கடந்த அரை நூற்றாண்டில் அது வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது. தமிழகத்தின் மீதும் குறிப்பாக, தமிழக அரசியல் மீதும் வைக்கப்பட்ட நம்பிக்கைகள், தொடர்ச்சியாகப் பொய்ப்பிக்கப்பட்ட போதும், ‘சூடுகண்டாலும் அஞ்சாது, அடுப்பங்கரை நாடும் பூனை’ மனநிலையில், தொடர்ந்து நம்பிக்கை வைப்பதை இன்றும் காணுகிறோம். எம்.ஜி. இராமச்சந்திரனில் தொடங்கி, சீமான் வரை, ஈழப்போராட்டத்தை சரிவர விளங்காத, அணுக இயலாத, தங்கள் சுயஅரசியலுக்குப் பயன்படுத்தியோரை நம்பி, சீரழிந்தவர்கள் ஈழத்தமிழர்கள். இன்றும் அந்தநிலை வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இந்தத் ‘தமிழக மயக்கம்’ வெறுமனே அரசியலுடன் மட்டுப்ப…
-
- 32 replies
- 2.9k views
-
-
தமிழர் பிரதேசங்களில் சிங்களக் கடைகள் பல புதிதாகஉருவாக்கப்பட்டுள்ளன. நாளொன்றிற்கு 5000 வரையான சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தைப் பார்வையிடச் செல்வதை நாம் எமது கண்களால் காணமுடியும். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Weekend Leader இணையத்தளத்தில் அதன் சிறப்பு செய்தியாளர் தொடராக எழுதிவரும் 'சிறிலங்காவின் உள்ளே' என்னும் பத்தியில் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழ்மக்கள் சுபீட்சமாக வாழ்வதைத் தடுக்கும் நோக்கில், தமிழ் மக்களால் கடந்த பல ஆண்டுகளாகக் கட்டி வளர்க்கப்பட்ட உள்ளுர் பொருளாதாரத்தை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு சிதைத்துவருகின்றது. தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள பொருளாதார வளமானது திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், இப்பிரதேசங்களில் தற்போது சிங்கள வர்த்தகர்…
-
- 0 replies
- 531 views
-
-
ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்கள் தத்தர் ஈழத்தமிழரின் வாழ்வில் பல விடயங்களை அடிப்படையிலிருந்தும் ஆரம்பத்திலிருந்தும் தொடங்க வேண்டியுள்ளன. ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை நிறுவன கட்டமைப்புக்களை அவசர அவசரமாக உடனடியாக தொடங்க வேண்டியுள்ளது. உதிரியாகவும் எதிரும் புதிருமாகவும் நாம் செயற்படுவதன் மூலம் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டு அக்கிளையை வெட்டுவதுபோல் எமக்கு நாமே தீங்கை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியான கருத்தாக்கமும் அதனை செயற்படுத்துவதற்கான நிறுவன அமைப்புக்களும் இருக்குமேயானால் இத்தகைய தவறுகள் தோன்ற இடம் இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக எம்மிடம் சரியான கருத்து மண்டலம் இருக்கவேண்டும். அவ்வாறான கருத்து மண்டலத்தை உருவாக்குவது என்பது …
-
- 1 reply
- 456 views
-
-
ஈழத்தமிழருக்காக உலகிடம் கையேந்துவோரிடம் சில கேள்விகள் ஈழத் தமிழருக்கான விடிவு, சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை, நீண்ட காலமாக கட்டி எழுப்பப்பட்ட ஒன்று. இன்றும் இந்தியா ஈழத்தமிழர்களைக் கைவிடாது என்று சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். சர்வதேசம் இலங்கையை சீனாவிடம் இருந்து மீட்டெடுக்க, தமிழ் மக்களின் பக்கமே நிற்கிறது என்று நம்பச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவ்விரண்டு பற்றியும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர்கள் மத்தியில் மலிந்து போய் கிடக்கிறார்கள். இவர்களிடம் இரண்டு அடிப்படையான கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். முதலாவது, இவர்கள் சொல்லும் சர்வதேசம் என்பதும் இந்தியா என்பதும் …
-
- 7 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழரைக் கைவிட்ட இந்தியா தற்போது மாலைதீவைக் கைப்பற்றுகிறது.
-
-
- 2 replies
- 574 views
-
-
இந்த அன்ரி தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழும் எம்மவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் நடக்கும் சித்திரவதைகள் பற்றி நல்லா எடுத்தியம்பிறா!
-
- 4 replies
- 524 views
- 1 follower
-
-
'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம். சமகாலத்திற்குப் பொருத்தமான பலஸ்தீன போராட்ட அமைப்புகளான பற்றா [FATAH] மற்றும் ஹமாஸ் [Hamas] இயக்கங்களுக்கிடையில் கடந்த ஏப்ரல் 27ம் திகதி கைச்சாத்தான உடன்படிக்கை, அதனுடைய தாக்கம் போன்றவை ஈழத்தமிழர்களுக்கு சொல்லும் பாடம் என்னவென்பதை இம்முறை பத்தியிலே அலசுவோம். தேசிய விடுதலைக்காக போராடும் இனங்களின் ஆயுதங்களும், களங்களும், அந்த இனங்களின் விடுதலைக்காக போராடும் போராட்ட அமைப்புக்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. காலப்போக்கில் இதில் ஒரு மாற்றம் வரலாம், ஆனால், ஆரம்பக் கட்டம் அடக்குமுறையாளர்களாலேயே இது நிர்ப்பந்திக்கப்படுகிறது. இந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பதாக போராட்டங்கள் உருவாகும் போது பிளவுகள…
-
- 0 replies
- 602 views
-
-
ஈழத்தமிழர் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மாற்றம் |தாயகக்களம் | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்| இலக்கு
-
- 0 replies
- 489 views
-
-
தமிழருக்காக தனியே முதலீடு மாத்திரம் போதாது. கூடவே அரசியலும் பேரம் பேசணும் என்று சொல்லுவேன். பேராசிரியர் கணேசலிங்கமும் அதையே வலியுறுத்துகிறார்.
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
ஈழத்தமிழர் இறைமை மீட்புப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றின் முக்கிய கட்டங்கள்: வரலாற்றைத் திரிபுபடுத்தும் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளுக்காக மீள் நினைவூட்டுகின்றோம்- அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் August 9, 2024 ஈழத்தமிழர்களின் பிரித்தானிய காலனித்துவத் திடம் 1796 முதல் 1948 வரை 152 ஆண்டுகள் நேரடியாகவும் 1972 வரை 176 ஆண்டுகள் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) அரசியலமைப்புப் பாதுகாப்பு மூலம் பிரித்தானிய முடிக்குரிய அரசுடனான பகிர்வுடனும் இருந்து வந்த ஈழத் தமிழர்களின் இறைமையைச் சிறிமாவோ பண்டாரநயாக்காவைப் பிரதமராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடதுசாரிக்கட்சிகள் கூட்டணி சோல்பரி அரசியலமைப்பையும் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலின் கோடீஸ்வரன் வழக்குத் தீர்ப்பையும் வன்…
-
- 0 replies
- 305 views
-
-
ஈழத்தமிழர் உரிமை மீட்பு பிராந்திய பொருளாதார மீட்டெடுப்புக்கு அவசியம் 56 Views கொரோனாவுக்குப் பின்னரான பிராந்திய பொருளாதார மீட்டெடுப்பு என்பது, இன்று இந்திய அரசின் முக்கிய சிந்தனைகளில் ஒன்றாக அமைந்துள்ளதை இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்கள் மிகத் தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார். தெற்காசியப் பிராந்தியத்தின் முக்கிய சந்தையாக உள்ள இந்தியச் சந்தை சுதந்திரமாகவும், உறுதியாகவும் தொழிற்பட பொருட்களும், ஆட்களும் தடையின்றி இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பிலும், அதனைச் சூழவுள்ள இந்துமா கடல் பரப்பிலும் போக்குவரவு செய்தல் என்பது அதிமுக்கிய தேவையாகவும் இந்தியாவுக்கு உள்ளது. …
-
- 0 replies
- 362 views
-
-
-
- 0 replies
- 279 views
-
-
ஈழத்தமிழர் தன்னாட்சி உரிமையை ஏற்று உலகின் பாதுகாப்பையும், அமைதியையும் பேணுக! 78 Views சிறீலங்கா, இலங்கைத் தீவில், இலங்கை மக்களால் இயற்றப்பட்ட சட்டங்களால் கட்டுப்படுத்தப்படாத நிலப்பரப்பாக, ஆனால் சீனாவின் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படும் நிலப்பரப்பாக ஒரு நிலப்பரப்பை இந்துமா கடலின் மேல் கொழும்புத் துறைமுக நகரச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இவ்வாரத்தில் உருவாக்கியுள்ளது. அரசியல் மொழியில் கூறுவதானால், இலங்கைத் தீவில் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற அதன் வரலாற்று இறைமையாளர்களைக் கடந்து, சீன இறைமையாளர்களை இன்றைய சிறீலங்கா அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. பில்லியன் கணக்கில் பணத்தை ராஜபக்ச குடும்ப ஆட்சியினர் பெறுவதற்காக இலங்கைத் தீவி…
-
- 0 replies
- 381 views
-
-
ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது – சூ.யோ. பற்றிமாகரன் . 1980களில் அமெரிக்க மேலாதிக்கம் திருகோணமலைத் துறைமுகத்தில் வேகம் பெறுவதை அன்றைய சிறீலங்கா சனாதிபதி ஜே. ஆர் ஐயவர்த்தன ஊக்கப்படுத்திய சூழ்நிலையில், இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கையை செய்வதன் மூலம் அதனை மட்டுப்படுத்த வேண்டிய தேவை முதன்மையானதாக இருந்தது. 1983இல் யூலை ஈழத்தமிழின அழிப்பைச் சிறீலங்கா அரசாங்க ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாதிகள் நிகழ்த்திய பொழுது அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள், ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான இச்செயற்பாட்டுக்கு இந்திய அளவிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாத…
-
- 2 replies
- 859 views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினை அனைத்துலக நீதியே பிரச்சினைக்கான தீர்வாகும் 38 Views ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 46ஆவது அமர்வு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் ஈழத்தமிழர் அனைத்துலகப் பிரச்சினைக்கு அனைத்துலக நீதி வழங்கு முறைமை எந்த அளவுக்குச் செயற்படுத்தப்படப் போகிறது என்பது உலகெங்கும் உள்ள மனித உரிமைகள் மற்றும் அமைதிக்கான மக்களதும், அமைப்புக்களதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது சிறீலங்காவில் அரசாங்கம் அனைத்துலக சட்டங்களுக்கு, – மனித உரிமைகள் மரபுசாசனம் உட்பட – தனது ஆட்சிப்பரப்பு எல்லைக்குள் தான் கட்டுப்படப் போவதில்லை என்கிற உறுதியான முடிவில் இறுக்கமாக உள்ளது. அப்படியான…
-
- 0 replies
- 475 views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினை: திறவுகோள் சென்னையில் "சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960 களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்களின் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது. அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம் தான் தமிழீழ மக்களின் பலமும் கூட. இதனை உலகளாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்து கொள்ளவேண்டிய அவசியம். தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்து விட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும் மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டிர…
-
- 0 replies
- 1.2k views
-