நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாத கையறு நிலையில் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை, அவர்களது உழைப்பை கம்பனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசாங்கமும், அந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளிமார் சம்மேளனமும் சொகுசாகவே இருக்கின்றன. ஆனால் இவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக தம்மையே உருக்கி உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை தொடர்ந்தும் கேள்விக்குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் காலாவதியானது. அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. ஒப்பந்தகாலம் நிறைவடைவதற்…
-
- 0 replies
- 496 views
-
-
மலையக மக்கள் என்ன செய்யப்போகின்றனர்? by Jothilingam Sivasubramaniam படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஜனாதிபதித் தேர்தல் களம் மலையகத்திலும் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஏதிர்பார்க்காதவகையில் மைத்திரிபால சிறிசேனா பொது வேட்பாளராக களமிறங்கியதால் மலையக அரசியல் வாதிகள் பலர் ஆடிப்போயுள்ளனர். குறிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செய்வதறியாது தினறுகின்றது. ஆறுமுகம் தொண்டமான் பொது எதிரணிக்கு மாறுவது பற்றியும் யோசித்திருந்தார். ஆனாலும், அமைச்சர்களுடைய கோவைகள் தன் கையில் உள்ளன என ஜனாதிபதி அறிவித்ததும் ஆறுமுகம் அடங்கிவிட்டார். மலையக மக்கள் மஹிந்தவின் இனவாதம் காரணமாக அவரை ஆதரிக்க பெரியளவிற்கு விரும்பவில்லை. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் நிற்பதால் தா…
-
- 0 replies
- 496 views
-
-
ஈழத்தமிழருக்கு நேர்ந்த மனிதப் பேரவலங்களுக்கு ஐ.நா.வினாலோ அல்லது சர்வதேச சமூகத்தினாலோ நீதியைப் பெற்றுத்தர முடியுமா என்கிற கேள்வி இன்று நேற்றல்ல கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கேட்கப்பட்டு வருகிறது. ஐ.நா.வின் பணியாளர்கள் மற்றும் பிற நாடுகளின் ஊழியர்கள் சிறிலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள். குறித்த நாடுகளினாலோ அல்லது ஐ.நா.வினாலோ எந்தவொரு நடவடிக்கைகளையும் சிறிலங்காவிற்கு எதிராக எடுக்கப்படாமல் போய்விட்டது. ஐந்தாம் கட்ட ஈழப் போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற சர்வதேசப் போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்கள் பல உலகநாடுகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. பல உலகநாடுகள் தமது இராஜதந்திர காய்நகர்த்தல்களை சிறிலங்காவிற்கு எதிராக கடந்த இரண்…
-
- 0 replies
- 496 views
-
-
ஏ.எஸ்.எம் ஜாவித் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் பலவந்தமாக ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், 34 வருடங்கள் கடந்தும் முழுமையான மீள் குடியேற்றம் செய்யப்படாது கண்டுகொள்ளப்படாத சமூகமாக உள்ளனர். வடக்கில் தமிழ் மக்களுடன் முஸ்லிம்கள் ஒன்றோடொன்றாக பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்த வடமாகாண முஸ்லிம்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கரி நாளாக 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிப் பகுதிகளைக் குறிப்பிடலாம். விடுதலைப் புலிகளால் வடக்கை விட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்ற சடுதியான அறிவித்தல் ஒவ்வொரு வடமாகாண முஸ்லிம்களையும் தட்டுத்தடுமாறி நிலை குல…
-
-
- 7 replies
- 496 views
-
-
சமஷ்டியை விட்டுக்கொடுக்கவே முடியாது இரா.சம்பந்தன் பிரத்தியேக செவ்வி நேர்காணல் ஆர்.ராம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான அடிப்படை கோரிக்கைகளாக உள்ள கோட்பாடுகள் எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் எந்தச் சந்தர்ப்பதிலும் இடமில்லை. தமிழ் மக்களின் இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு மீளப்பெறமுடியாத வகையில் சமஷ்டி முறைமை யிலான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். சமஷ்டி என்பது புரட்சிகரமானதோ பயங்கரமானதோ அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- மிகவும் மூத்த…
-
- 1 reply
- 496 views
-
-
யதார்த்தம். என்னவோ.... இது தான். 2002ஆம் ஆண்டு... கொழும்பில் அமைக்கப்பட்ட. இந்தியாவின் அப்பலோ மருத்துவ மனையில் பணியாற்றிய வைத்தியர்கள். தாதியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுமே தமிழ்நாடு. கேரளா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். எல்லோரும் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டும் பெண்கள் தலையில் பூவும் பொட்டும் வைத்துக் கொண்டுமே பணியாற்றியிருந்தனர். இதனை அவதானித்திருந்த மகிந்த ராஜபக்ச தரப்பு 2005ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததும் பிரபல சிங்கள தொழில் அதிபர் ஒருவர் மூலம் வெவ்வேறு நபர்களைப் பயன்படுத்தி 80 சதவீத பங்குகளை கொள்வனவு செய்தது. ஆனால் இது முறைகேடான செயல் என்று அப்போது கொழும்பில் இருந்த இந்தியத் தூதுவர் முரண்பட்டிருந்தார். …
-
- 2 replies
- 496 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் கடந்த சட்டமன்றத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க., 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ஆளும்கட்சிக் கூட்டணியில் இருந்தபோதும் அக்கட்சி பெற்ற வாக்குகள் மிகப் பெரிய அளவில் சரிந்திருக்கின்றன. அக்கட்சியின் எதிர்காலம் என்ன? …
-
- 0 replies
- 495 views
-
-
அமைச்சர்களான ராஜித, ரிஷாத் ஆகியோரே குருணாகல் வைத்தியருக்கு நியமனம் வழங்கியுள்ளனர் சுகாதார அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்னவின் நியமனங்களுக்கு எதிராக நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அவர் நியமித்துள்ள குழுவிடமிருந்து உண்மையையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. அக்குழுவின் விசாரணைகளை மக்களும் நம்பப்போவதில்லை. ஆகவே, ஜனாதிபதி உடனடியாக அமைச்சர் ராஜிதவை அப்பதவியிலிருந்து நீக்கி சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின்…
-
- 0 replies
- 495 views
-
-
ஐ.நா.வின் கள்ள மௌனம்! சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்திய ஏகாதிபத்தியம் என்று குற்றஞ்சாட்டினான் தமிழகத்தின் நெருப்புப் பொறி முத்துக்குமார். இந்திய அரசும் காங்கிரஸும் சாதித்தது கள்ள மௌனம் என்றால், தி.மு.க. சாதித்தது என்ன மௌனம்? கலைஞருக்கே வெளிச்சம்.தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, கலைஞரின் பேனாவுக்குக் கிடைத்த வெற்றி என்று புளகாங்கிதமடைகிறார், வெற்றி வீரர் (!) ப.சிதம்பரம். ஈழத்தமிழர்களின் துயரத்துக்கு முடிவுகட்டுவதில்மட்டும் கலைஞரின் பேனா தோல்வியடைந்தது எப்படி? மன்மோகனுக்கு மனு எழுதி மனு எழு…
-
- 0 replies
- 494 views
-
-
சம்பந்தனின் அரசியலும் திமிரும் ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும் அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், வடக்கில் தொடர்ச்சியாக சில நாட்கள் தங்கியிருந்து மக்கள் சந்திப்புக்களையும் அரசியல் கலந்துரையாடல்களையும் கடந்த வாரமே அவர் நிகழ்த்தினார். இதன்போது, சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசுவதற்காக, விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் இருவர், இரா.சம்பந்தனைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு 5 நிமிட…
-
- 0 replies
- 494 views
-
-
அதிகாரத்தின் குரூர கரங்களுடன் உணரவேண்டிய அரிதாரத்தின் அரூப கரங்கள்! April 13, 2021 — தெய்வீகன் — தமிழர்களுக்கு இனிப் பிரச்சினையே இருக்காது என்று, விடுதலைப்புலிகளுக்கு எதிரான வெற்றியை அறைகூவிய சிங்கள அரசுக்கு, தமிழர்களது ஆயுதப்போராட்டம் அழித்தொழிக்கப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் முடிவடைந்துவிட்ட பின்னரும்கூட, தமிழ் தேசிய அரசியலின் வழியாக மாதமொரு தலையிடி இருந்துகொண்டுதானிருக்கிறது. அதற்கு எதிராக கோத்தபாய அரசு திமிறிக்கொண்ட மிகப்பிந்திய உதாரணம், யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் கைதும் அதற்கு சர்வ உலகமும் வெளிக்காண்பித்த எதிர்ப்பும் ஆகும். தனக்கு எதிராக அழுத்தங்கள் வருமென்று எதிர்பார்க்காமல், முன்னர் மொக்குத்தனமாக நடந்துகொண்டு அடிவாங்கிய சிங்கள…
-
- 0 replies
- 494 views
-
-
24-01-2013 அன்று மாலை 15:30 தொடக்கம் 16:30 வரை Niscemi மாளிகையில் இ.ஈ.மக்களவையும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புளும் இணைந்து பலேர்மோ மாநில முதல்வரின் உத்தியோகபூர்வமான வாசஸ்த்தலதலமான Niscemi மாளிகையில் ஓர் அரசியல் சந்திப்பைமேற்கொண்டனர். இச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் இ.ஈ.மக்களவையின் தலைவர் செபஸ்தியாம் பிள்ளை, உப தலைவர் ஐசஸ்வின், ஆலோசகர்கள் லீனப்பு, றஞ்சித் அரசியல் ஊடக பொறுப்பாளர் தட்சாயினி தவராஐசிங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு ஐமால், பொருளாளர் சச்சிதானந்தம், சிசிலி மாநில தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் ஸ்ரேபனோ எட்வேட் , உறுப்பினர் சச்சியானந்தம் , தமிழர் புணர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் திரு.க…
-
- 0 replies
- 494 views
-
-
கனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா, மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். தனராஜ் தங்கராஜா மீது 8 குற்றச்சாட்டுகளும், கிஷானி பாலச்சந்திரன் மீது 3 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. சோதனை நடவடிக்கை கடந்த 3ஆம் திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது இவர்கள் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/tamil-couple-arrested-in-canada-1733758309
-
- 0 replies
- 494 views
-
-
அரசியல் களம் தொடர்ந்து சூடிபிடித்த வண்ணமே காணப்படுகின்றது. அரசியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை எதிர்வுகூறுவது கடினமானதாகவே காணப்படுகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதியிலிருந்தே நாட்டின் அரசியல் களமானது பரபரப்பாகவே காணப்படுகின்றது. அதாவது அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு, வட மத்திய சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய வளர்ச்சி மற்றும் மஹிந்த அணியினரின் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடவடிக்கைக…
-
- 0 replies
- 494 views
-
-
நீதி கிடைக்கும்வரை ஓயாது தேடியவர்களின் வீரவரலாறு ஒன்று - ச.ச.முத்து Aug 1, 2013 முயற்சிகள் ஏதும் இன்றி முடங்கி மௌனமாக நீட்டிக்கிடக்கும் எந்த இனத்துக்கும் வலியவந்து நீதிதேவதை வரங்கள் ஏதும்தரப் போவதில்லை. உலகில் நடத்திமுடிக்கப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்துக்கும், இனச்சுத்திகரிப்புகள் அனைத்துக்கும் உரிய நீதி கிடைத்திருக்கா என்றால் இல்லை. இனப்படுகொலைகளின் வடுக்களை தாங்கியமக்கள் ஓய்வு இன்றி எழுந்து நீதிக்கான தேடலை ஆரம்பித்தால் நிச்சயம். அது கிடைத்தே தீரும். அது இன்றோ நாளையோ,நாளைமறுநாளோ திடீரென நிகழ்ந்து விடக்கூடிய ஒன்று அல்ல.அதற்கான நீண்ட பயணங்கள் ஓய்வு இன்றி நிகழ்த்தப்படும்போது அது பல கதவுகளை திறந்துவைக்கும். நீதியின் கதவு உட்பட.எல்லாவகையான கொடும்கொலைகளையும் செய்துமுடித்த…
-
- 0 replies
- 494 views
-
-
-
- 0 replies
- 494 views
-
-
கொரோனாவும் அன்றாடங்காய்ச்சிகளின் நிலையும் இந்திய அரசு அமைப்புசாராத் தொழில்கள் என்று 60 வகையான தொழில்களை வரையறை செய்துள்ளது. அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியத்தையும் அமைத்துள்ளது. ஆனால் அந்த அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. தற்போது தொழில்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில், இவரின் அமைச்சகத்தின் கீழ்தான் இந்த அமைப்புசாராத் தொழிலாளர் நலத்துறை வருகிறது. இதில் என்னென்ன துறைகள் வரும் என்று பார்க்கலாம். 1. விவசாயத் தொழிலாளர் நல வாரியம் 2. மீனவர் நல வாரியம் 3. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் 4. சீர்மரபினர் நல வாரியம் 5. பழங்குடியினர் நல வாரியம் 6. ஆட்…
-
- 0 replies
- 494 views
-
-
கூர்வாளின் நிழலில்-தமிழினியின் நூல் குறித்த சர்ச்சை.
-
- 0 replies
- 493 views
-
-
பன்றித் தொழுவத்திலிருந்து கேட்கும் கூச்சல் 08/08/2020 இனியொரு... எண்பதுகளில் ஆரம்பித்து ஈழப் போராட்டத்திற்காக ஐம்பதயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை வட கிழக்கு மண் மக்களுக்காகத் தானம் செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் அந்தப் போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக தலைமையில் இலங்கை அரசால் அழிக்கப்பட்டு பதினொரு வருடங்களின் பின்னரும் இலங்கை மீண்டும் மீண்டும் அழிக்கப்படுகிறது. ஈழப் போராட்டத்தின் எந்த எச்ச சொச்சங்களுமின்றி, போராடி மண்ணோடு மரணித்துப் போனவர்களதும், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தெருக்களில் அனாதரவாக்கப்பட்ட போராளிகளதும் தியாக வரலாறு பாராளுமன்ற தேர்தல் சகதிக்குள் மறைந்துபோனது. வாக்குப் பொறுக்கும் அரசியலின் ஒரு முனை வடக்குக…
-
- 0 replies
- 493 views
-
-
13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்'மே பதினேழு இயக்க ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்தும் 13ஆவது சட்டத் திருத்தத்தையும்இ வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழீழத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்' என சென்னையில் இன்று(17.08.2013) மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார். இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தம் – மாகாணசபைத் தேர்தல் எனும் போலிகளைப் புறக்கணிக்கக் கோரியும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாதென வலியுறுத்தியும் இலங்கையில் தொட…
-
- 3 replies
- 492 views
-
-
கசிந்துள்ள ஐ.நா வின் அறிக்கை- புதிய நம்பிக்கையும் தமிழ் ஊடகங்களின் திரிபுபடுத்தப்பட செய்திகளும் 01/25/2021 இனியொரு... Michele Bachelet, ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் வெளியிடப்படவுள்ள இலங்கை அரசிற்கு எதிரான அறிக்கை என்பது இப்போது சண்டே ரைம்ஸ் இதழுக்கு கசிவடைந்துள்ளதாக வெளியிட்ட தகவல் இலங்கை அரசு வரலாறு காணாத போர்க்குற்றமிழைத்து 11 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சில குறிக்கத்தக்க மாற்றங்களை காணமுடிகிறது. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது அமர்விற்கு முன்னதாகவே வெளியாகியுள்ள இந்த அறிக்கை ஊடகம் ஒன்றிற்குக் கசிந்துள்ளதான தகவல் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது ராஜபக்ச இனக்கொலை சர்வாதிகார அரசிற்கு எதிரான அனைத்து சனநாயக முற்ப…
-
- 0 replies
- 491 views
-
-
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த வீடியோ பேட்டி: வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழ் ஈழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் கொண்ட அவரது செயல் திறனின் விளைவாக இன்று உலகத் தமிழர்கள் எந்த நா`ட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள். கிழக்கே சீனா முதல் மேற்கே ரோமாபுரி வரை அன்றைய நாளில் நமது தமிழர்கள் புகழ் கொடியை பறக்க விட்டார்கள். அந்த வீரம் மிக்க வழியிலே வந்த நம் மக்கள், நமது தமிழர்கள் அடிமை சேற்றில் புழுக்களாக நெளிந்து …
-
- 0 replies
- 491 views
-
-
‘வழமை வாழ்வை’ பழக்கப்படாத முறையில் மீண்டும் ஆரம்பிக்கும் ஐரோப்பியர்கள் ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் அவற்றின் ஊரடங்கு நடவடிக்கைகளை படிப்படியாக தளர்த்தி வருகின்ற நிலையில் ‘புதிய வழமைக்கு’ ஐரோப்பியர்கள் தங்களை இசைவாக்கிக் கொள்கிறார்கள். இரவோடு இரவாக கட்டுப்பாடுகளை நீக்கலாம். ஆனால், வாணிப நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை மீண்டும் வென்றெடுக்க கால அவகாசம் தேவை. புரூசெல்ஸ், (சின்ஹுவா): ஐரோப்பியர்கள் தங்களது ‘வழமை’ வாழ்வை மீண்டும் ஆரம்பிக்கின்றார்கள். ஆனால், கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்காக சுமார் இரு மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குக்குப் பின்னர் தங்களுக்கு பழக்கப்படாத முறையொன்றிலேயே அதை அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. முகக் கவசங்களை அணிந்திருக்கிறார்கள். ச…
-
- 1 reply
- 491 views
-
-
அது 1983ஆம் ஆண்டுக்கு முன்னைய சில வருடங்கள்! அது தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு வீடுகளுக்கும் அரச பயங்கரவாதம் தன் கோரக்கரங்களை விரித்து வேட்டையாடிய காலம்! திடீரென அதிகாலையில் கிராமங்கள் சுற்றிவளைக்கப்படும். சில இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள்! இவர்களில் சிலர் காணாமல் போவதுண்டு. சிலர் சித்திரவதை செய்யப்பட்டு சிறை செய்யப்படுவர். வீதிகளில் இராணுவ ரோந்து அணி செல்லும்; திடீரென துப்பாக்கிகள் முழங்கும், கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் நடமாடியோர் செத்து விழுவர். சில சமயங்களில் வீதியருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் சுடப்படுவர். எந்த வீடுகளும் தீக்கிரையாக்கப்படும். வீட்டில் இருந்தாலும் வீதியில் போனாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை! மரணங்கள் மலிந்த நிலமாக த…
-
- 0 replies
- 491 views
-
-
எம்மிடையே இப்படியும் மனிதர்கள்..-இதயச்சந்திரன் (சமூகப் பார்வை) ஒரு பேப்பரின் 200 வது இதழுக்கு, அரசியல் கட்டுரை எழுதுவதைத் தவிர்ப்போம் என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டேன். எப்போது பார்த்தாலும், இந்தியா -சீனா ,விடுதலைப்புலிகள், இந்துசமுத்திரப் பிராந்தியம், மகிந்தா- பசில் என்று எழுதிக்கொண்டிருக்கிறார், பொருளாதாரம் பற்றியும் எழுதுகின்றார், சமூக வாழ்வின் பக்கங்கள் குறித்து எழுதுவதில்லை என்கிற ஆதங்கம் பலரிடம் உண்டு. அரசியல் கலவாத காற்றுவெளி இல்லை. அது சில இடங்களில் மேற்பரப்பில் துருத்திக்கொண்டு நிற்கும். அநேகமான துறைகளில் அடியில் ஒளிந்திருந்து எல்லாவற்றையும் இயக்கும். இப்போது அன்றாட வாழ்வுச் சூழலில் நாம் எதிர்கொள்ளும் பொதுமையான ஒருசில விடயங்களைப் பார்ப்போம். சராசரி வாழ்க்…
-
- 1 reply
- 491 views
-