நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
முதல் மாவீரன் சங்கர் கடல்தாண்டி இங்கே வந்தபோதும் அவனது உயிர் சிறுகச் சிறுகப் பிரிந்துகொண்டிருந்த போதும் அம்மா, அப்பா என்ற வார்த்தைகளை அவனது உதடுகள் உச்சரிக்கவில்லை. மாறாக தம்பி, தம்பி என்றல்லவோ உச்சரித்தது. http://www.pathivu.com/news/35589/57//d,article_full.aspx
-
- 0 replies
- 348 views
-
-
75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன ? லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ]ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை.மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்களவர்கள் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள வங்காளிக…
-
- 2 replies
- 322 views
-
-
மதி சுதா எனும் ஈழத்து சினிமா படைப்பாளி தன் முகனூலில் அவருடைய நண்பரின் பதிவை பகிர்ந்து இருந்தார். அவரின் எழுத்து மூலமான பூரண சம்மதத்துடன் இதை யாழில் பகிர்கின்றேன். நிழலி ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------எம் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது. நல்லூர் திருவிழாவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட நண்பரான லவகீசன் இதைப் பகிர்ந்திருக்கிறார். பதிவின் செறிவைக் கருதி அவர் பெயர் tag பண்ணவில்லை கீழே கருத்தில் அவர் பெயர் tag வரும்... நல்லூர் முருகன் திருவிழாவும் - அதைச் சுற்றிய பொருளாதார சுரண்டலும்…
-
- 0 replies
- 343 views
-
-
சர்ச்சைக்குள்ளான முதுகெலும்பு நாட்டில் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக இந்த முதுகெலும்பு விவகாரம் மாறியுள்ளது. அது என்ன முதுகெலும்பு விவகாரம் என எண்ணத் தோன்றலாம். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையே இந்த முதுகெலும்பு விவகாரத்தை எடுத்துக் காட்டி, பெரும் பூகம்பமாக வெடிக்க வைத்திருக்கிறார். இதனால் தெற்கு அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதோடு அரசியல்வாதிகளுக்கும் பேரிடியாக இந்த விவகாரம் மாறியுள்ளது. அப்பாவி மக்கள் சிறிதும் எதிர்பார்த்திராத மிகக் கொடிய துயரச்சம்பவம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் பதிவாகியது. இந்த சம்பவத்தில் 263 உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருந்தன. இன்னும் பலர் ஆறாவடுக்களுடனும் ஊனத்…
-
- 1 reply
- 952 views
-
-
சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது இந்தியாவின் ஆங்கில மீடியாக்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஏதோ இலங்கையை, தமிழகத்தினர் அத்தனை பேரும் சேர்ந்து அழித்து விட்டது போலவும், தமிழகத்தின் நியாயமான போராட்டத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வந்து விட்டதைப் போலவும் இவர்கள் காட்டமாக தமிழக தலைவர்களையும், தமிழக கட்சிகளையும் விமர்சித்து எழுதி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி கொடுத்த அழுத்தம், நெருக்கடி மற்றும் மிரட்டல்தான் காரணம் என்றும் இவர்கள் புரியாமல் எழுதி வருகின்றனர். …
-
- 2 replies
- 697 views
-
-
0 - பஸ்னா இக்பால் - யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு 30-10 - 2019 ஆம் திகதி இன்றுடன் 29ஆண்டுகளாகின்றன. 29ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கோரச்சம்பவத்தை நினைத்துப் பா…
-
- 12 replies
- 1.2k views
-
-
[size=3]ஆமா....! அழுதுறுவேன்... பொறுமைக்கும் எல்லை உண்டு - மு.க....?1[/size] [size=3] அ தி.மு.க.,அரசு தி.மு.க.வினரை தொடர்ந்து பழிவாங்கிக் கொண்டே இருக்கிறது, பொறுமைக்கும் எல்லை உண்டு என்று தி.மு.க.தலைவர் மு.க.,அவர்கள் காட்டமாக கூறியுள்ளார். " குட்டக் குட்ட குனிவது முட்டாள்தனம் ", குனியக் குனியக் குட்டுவது அதைவிட முட்டாள்தனம் என்று கிராமங்களில் சொல்வார்களே, அதைப் போல இன்றைய ஆட்சியினர் குட்டிக் குட்டிக் குனிய வைத்திட நினைக்கிறார்கள். பொறுமைக்கும் எல்லை உண்டு என்றார். அ.தி.மு.க., அரசும் என்ன நினைக்கிறார்கள் என்றால் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறாண்டா இவன், ஆனால் வசனத்தை மட்டும் நிப்பாட்ட மாட்டேங்குறான், இது ஒன்று தான் இவனிடம் உள்ள கெட்ட பழக்க வழக்கம். என்று குனிய வைத்து …
-
- 0 replies
- 803 views
-
-
தமிழரசு கட்சியை சேர்ந்த குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக வெளியான குற்றசாட்டுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது. வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக எமது கட்சியின் உறுப்பினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வவுனியாவில் இன்று கூடிய தமிழரசுகட்சியின் வவுனியா கிளை ஆராய்ந்திருந்தது. இந்நிலையில் அவர் மீது கட்சியின் தலைமை விசாரணை ஒன்றை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் வவுனியா மாவட்ட கிளை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. …
-
- 1 reply
- 332 views
-
-
இலண்டன் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒளிபதிவு.. Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3600/london-protest-07.04.2008-2-am
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? வணக்கம் தமிழ்நெஞ்சங்களே! "தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? " என்ற தலைப்பில் மறைக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கும், இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிற்குமிடையில் மறைமுகமாக செய்யப்பட்ட ஒப்பந்தங்களும், ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளினால் மேல் குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களும், அந்த நாடுகளினால் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட விடயமும் என்ன என்பதையும், உண்மையில் தாயகத்தில் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? என்பதையும் ஒவ்வொரு தமிழ்மகனும் அறிந்திருக்கவேண்டிய அவசியம் இருப்பதினால், க…
-
- 5 replies
- 928 views
-
-
மதுரை மண்ணை சேர்ந்த திவ்ய பாரதி அவர்கள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆவணப்படத்தில், மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் அவலத்தை, அவர்கள் வாழ்க்கைமுறையை இம்மி அளவும் பிசகாமல், அப்படியே முழுதும் படம் பிடித்து கட்டியுள்ளார். இந்த சமூகத்தின் வர்க்க அதிகாரத்தையும், வருண ஆதிக்கத்தையும் இதை விட தெளிவாக சொல்ல முடியாது என்ற அளவில் நம் சமகாலத்தில் நிலவும் ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்திருக்கிறார் காலைக்கடனை தவறாமல் கழிப்பது அவசியம்னு சொல்றோம். நாம கழிக்குற கடனெல்லாம் எங்கே போகுது? அதையெல்லாம் யார் அள்ளுகிறார்கள்? இதை எல்லாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? மலம் அள்ளும் நேரத்தில் மூக்கைப் பொத்தாமல் முகத்தைச் சுளிக்காமல் இரண்டு நிமிடங்கள் வேடிக்கை பார்க்க முடி…
-
- 0 replies
- 357 views
-
-
சனி, பிப்ரவரி 13, 2010 21:36 | சர்வதேச முரண்பாடுகளுக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசியல் -வேல்ஸிலிருந்து அருஷ் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுடன் தென்னிலங்கையில் தணிந்திருந்த தேர்தல் வன்முறைகள் ஒரு அரசியல் போராக தற்போது மாற்றம் பெற்றுள்ளன. தேர்தல் நிறைவுபெற்ற ஜனவரி 26 ஆம் திகதி இரவு சினமன்லேக் ஆடம்பர விடு தியில் தங்கியிருந்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தலைமை யிலான ஒரு பற்றலியன் சிறப்பு படையணி யினர் சுற்றிவளைத்ததைத் தொடர்ந்து ஆரம் பமாகிய அரசியல் முறுகல் நிலைகள் தற் போது உச்சத்தை எட்டியுள்ளன. கடந்த திங்கட்கிழமை ஜெனரல் சரத் பொன் சேகா அவரின் அலுவலகத்தில் வைத்து இராணுவக் காவல்துறையினரால் கைது செய் ய…
-
- 0 replies
- 638 views
-
-
கோ ஹோம் கோத்தா ( Go Home Gotta ) March 25, 2022 கஜமுகன் கோத்தபாய அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் “சார் பெயில்” (Sir Fail) என்ற கோசம் சமூக வலைத்தளங்களில் எவ்வாறு பிரபலமானதோ அதேபோல் மீண்டும் “கோ ஹோம் கோத்தா” என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியது. அது தவிர, மக்கள் போராட்டங்களில் “Go Gotta Go” என்ற வாசகமே அதிகளவாக உச்சரிக்கப்படும் போராட்ட கோஷமாக தற்பொழுது மாறியுள்ளது. கோட்டாபயவின் தோல்வியை வெளிப்படையாக, அதுவும் அவரின் ஆதரவராளர்களே விமர்சிக்கும் நிலைமை தற்பொழுது வந்துவிட்டது. நானாக இப்பதவிக்கு வரவில்லை நீங்கள்தான் என்னை கொண்டுவந்தீர்கள் என்று சொல்லித் தப்பிக்கும் நிலைக்…
-
- 4 replies
- 543 views
-
-
திராவிட இயக்கமும் ஆரிய மாயைகளும் மனுராஜ் சண்முகசுந்தரம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் ஆற்றிய உரையில், "ஆரியர் - திராவிடர் வேறுபாடு என்பது புவியியல் அடிப்படையிலானதே, இன அடிப்படையிலானது அல்ல!" என்றார். இது தற்போதைய அரசியல் போக்கு குறித்து சில முக்கியமான பார்வைகளை நமக்குத் தருகிறது. பாஜக ஆட்சி செய்யாத மற்ற மாநிலங்களின் ஆளுநர்களுக்கு நேரெதிராக ஆர்.என்.ரவி, சித்தாந்தக் காட்டுக்குள் காலடி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கும் திராவிட அரசியல் சித்தாந்தத்துக்கும் இடையிலான தொடர்புகள் பிரிக்க முடியாதவை. ஆகவே, ஆர்.என்.ரவியின் கூற்றுகளை நாம் கவனத்துடன் அணுக வேண்டும். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களாகிய ஆளுநர்கள் இப்ப…
-
- 1 reply
- 317 views
-
-
பிரபாகரன் சர்ச்சை: இலங்கை 13வது திருத்தம் அமலாக்க முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிமொழி வழங்கிய சில காலத்திற்குள், பிரபாகரன் உயிருடன் உள்ளார் என வெளியிடப்பட்ட கருத்தானது, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாக்கத்தை செலுத்துமா என்ற கேள்வியும் தற்போது பலரது மத்த…
-
- 0 replies
- 623 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 845 views
-
-
சீனாவின் தரமற்ற இயற்கை உர ஏற்றுமதி ஏற்படுத்தியுள்ள தாக்கம் இலங்கைக்கு தரமற்ற மற்றும் அசுத்தமான இயற்கை உரத்தை ஏற்றுமதி செய்வதற்கு முற்பட்டதன்; மூலம் பெறப்பட்ட 6.3 மில்லியன் டொலர்களை திருப்பிக் கொடுப்பதில் சீனா தயக்கம் காட்டி வருகிறது. அண்மையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் சீனாவின் சர்வதேச வர்த்தக நெறிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியை மீட்பதற்கு முயற்சிக்கையில், உலகளாவிய வர்த்தகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை நிலைமை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையானது தனது விவசாயத்துறைக்கு கரிம உரங்கள் மிகவும் அவசியமா…
-
- 0 replies
- 317 views
-
-
உலக தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை – 45ஆம் ஆண்டு நினைவு தினம் – சுரேஸ் – அனந்தி – தவராசா… January 10, 2019 தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும் – சுரேஸ் தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அ…
-
- 0 replies
- 260 views
-
-
உண்மையை ஒழிவின்றி உரைத்த ரிஷாட் பதியுதீன் காரை துர்க்கா / 2019 பெப்ரவரி 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:56 Comments - 0 நேற்று முன்தினம் (03) இரவு ஏழு மணியளவில், வவுனியா செல்லும் பொருட்டு யாழிலிருந்து வரும் புகைவண்டியை எதிர்பார்த்து, கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் காத்திருந்தோம். எமக்கு அருகில் இரு முதியவர்கள் உரையாடிக் கொண்டு இருந்தார்கள். “முன்னால் அமைந்திருக்கும், கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஏன் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது” என ஒருவர் வினாவினார். “நாளைக்கு (நேற்றைய தினம்) சுதந்திர தினமாம்” என மற்றையவர் விடை பகிர்ந்தார். “தமிழ் மக்களுக்கு, அது கிடைத்து விட்டதே?” எனத் தொடர்ந்து மற்றையவர் கேட்டார். தனது இரு கைகளையும் விரித்தார்,…
-
- 0 replies
- 686 views
-
-
முஸ்லிம் ஆளுநர்கள், அமைச்சர்களின் பதவிவிலகல்கள் ; பிக்குமாரும் சட்டமும் - கலாநிதி அமீர் அலி இரு முஸ்லிம் ஆளுநர்களும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் கூண்டோடு பதவிவிலகியமை இலங்கை ஜனநாயகத்தினதும் முஸ்லிம் அரசியலினதும் வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையிலான ஒரு அரசியல் நடவடிக்கையாகும்.சில செய்திகள் கூறுவதைப்போன்று, அவர்கள் இன்னமும் தங்களது சிறப்புரிமைகளையும் தனிச்சலுகைகளையும் கைவிடவில்லையானால், பதவிவிலகல் நேர்மையான ஒரு நடவடிக்கை என்பதை நிரூபிப்பதற்காக அவற்றை உடனடியாக துறந்துவிடவேண்டும்.இரு முஸ்லிம் மாகாண ஆளுநர்களும் ஒரு அமைச்சரும் பதவிநீக்கப்பவேண்டுமென்ற கோரிக்கையை முனவைத்து ஒரு பிக்கு தொடங்கிய சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டமும் இன்னொரு பிக்கு…
-
- 0 replies
- 647 views
-
-
ஆதி தமிழரின் சோழர் கால புலி பதித்த தற்போதைய தமிழீழ தேசிய கொடியை நாம் பின்பற்றுவோம். இதையே தமிழ் நாட்டு தமிழரும் தங்கள் தேசிய சின்னமாய் பயன்டுத்தலாம். விடுதலை புலிகளின் உத்தியோக கொடியில் எழுத்துகள் உள்ளன.தேசியக்கொடியில் அப்பிடி இல்லை. ஆகவே இதையே உலகத்தில் உள்ள அனைவரும் தமது பேதம் கடந்து ஏற்றுகொள்ள வேண்டும். உதாரணம் இந்திய தேசிய கொடிக்கும் இந்திய காங்கிரஸ் கொடிக்கும் அதில் உள்ள சக்கரம் மட்டுமே வித்தியாசம்.அதற்காக பாரதிய ஜனதா கடிசியோ இல்ல காகிரசை பிடிக்காத கட்சிகளோ இந்திய மூவர்ண கொடிய தமது கொடி இல்லை என்று கூறவில்லை. அதே போல் நானும் எமது பிளவுகளை கைவிட்டு ஒரே கொடியின் பின் அனைத்து தமிழரும் இணைவதே எம்மை உலகில் நிலை நிறுத்தும். எமது அணைத்து நிகழ்வுகளிலும் மரியாதை செய்வோம் என்ற…
-
- 2 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் ஏறா வூரைச் சேர்ந்த பஷீர் சேகுதாவூத், ஈரோஸ் ஆயுதப் போராட்ட இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளி என்பதோடு, அந்த இயக்கம் சார்பில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பயணத்தை ஆரம்பித்தவருமாவார். அதனால், தமிழ் ஆயுத இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட தனது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் பெரிதும் அறிந்திருந்தார். படத்தின் காப்புரிமை Facebook Image caption பஷீர் சேகுதாவூத் எழுதிய பேஸ்புக் பதிவு சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை முஹம்மட் நஸார் என்பவர், 1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர் என்ற…
-
- 0 replies
- 464 views
-
-
நேற்று 09.11.08 ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில். சின்னத்திரைக் கலைஞர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடாத்தியிருந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளன், இயக்குனர் செல்வமணியுட்பட மற்றும் பலரின் உரைகளின் பகுதியடங்கிய பிரத்தியேக வீடியோத் தொகுப்பு http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 0 replies
- 774 views
-
-
2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...
-
- 14 replies
- 1.8k views
-
-
-ரொபட் அன்டனி நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை அச்சொட்டாக இருக்கவில்லை. 135 ஆசனங்கள் அளவில் பெற முடியும் என்றே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி மக்கள் மிகப்பெரிய ஆதரவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இந்தத் தேர்தலில் வழ்ஙகியிருக்கின்றனர். அதுவும் விகிதாசார தேர்தல் முறையில் பெறக்கூடிய மிக உச்சபட்ச வெற்றியை சிறிலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் பெற்று மகத்தான சாதனை படைத்திருக்கின்றது. முதலில் எவ்வாறு ஆசனங்களை கட்சிகள் பெற்றுள்ளன என்பதனை பார்க்கவேண்டிய தேவை உள்ளது. அதன்படி புதிய பாராளுமன்றத்துக்கு பி…
-
- 0 replies
- 374 views
-