நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்) நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இஸ்ரேல் இனத்தவர்களின் மதஸ்தலங்கள் அல்லது அவர்களின் கலாசார நிலையங்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வாங்கி அவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கி அமைக்கப்படும் இந்த கட்டிடங்கள் என்ன? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட சி…
-
- 4 replies
- 285 views
-
-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை பேச தயங்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம்(13.01.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களது மக்களின் வளங்களை அழித்தவர்கள்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் மக்கள். அவருடன் புகைப்படம் எடுக்க துணிந்த நீங்கள், அவரது காதிலாவது ஒரு தடவை இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை சொல்லியிருக்கலாமே. சிலவேளை இது குறித்து ஸ்…
-
-
- 47 replies
- 2.8k views
-
-
ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? January 5, 2025 2:54 pm எதிர்வரும் 12ஆம் திகதி சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் இராஜதந்திர நடவடிக்கைக்கு அப்பாற்பட்டது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவை விஞ்சும் முயற்சியாக சீனா இலங்கைக்கு மேலும் கடன் நிவாரணம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கக்கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் ஊகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் சீனா பல ஆண்டுகளாக இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருந்து வருகிறது, ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக…
-
-
- 4 replies
- 314 views
-
-
திரு த. சபாரட்ணம் அவர்கள் 2003 மார்கழி 1 ஆம் திகதியிலிருந்து 2004 ஆம் ஆண்டு புரட்டாதி 8 வரையான காலப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்று வந்த அரசியல் நிகழ்வுகள், பேச்சுவார்த்தையின் போக்கு மற்றும் எதிர்க்கட்சிகளில் சதிகள் குறித்து வாராந்தம் எழுதிவந்த செய்திகளின் தொகுப்பு இத்தொடரில் இடம்பெறவிருக்கிறது. இத்தொடரின் ஆங்கில மூலத்தை வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்திக்கொள்ளலாம். https://sangam.org/topics/sabaratnam/page/9/
-
-
- 15 replies
- 627 views
- 1 follower
-
-
எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் - தேசியத் தலைவர் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை. பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 28 Dec, 2024 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கையை காலத்தின் தேவை கருதி இன்று மீள் வெளியீடு செய்கின்றோம் .! இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும்.! வரலாற்று ரீதியாக ஈழத்தமிழினம் ஒரு அப்பட்டமானஇன அழிப்பை எதிர்நோக்கி நிற்கின்றது. தமிழரின் தேசிய அடையாளத்தைச் சிதைத்துவிடும் நோக்கில் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த இன அ…
-
-
- 2 replies
- 311 views
-
-
யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல் – மயூரப்பிரியன் : adminDecember 22, 2024 யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் இது வரையிலான தரவுகளின் அடிப்படையில் 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 121 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். ஏனைய ஏழு பேரும் யாழ்ப்பாணத்த…
-
- 0 replies
- 252 views
-
-
பவளவிழா காணும் தமிழரசுக்கட்சியும்! பரிதாபமான தமிழ்த்தேசிய அரசியலும்! – பா.அரியநேத்திரன் December 17, 2024 இந்தவாரம் எதிர்வரும் 2024, டிசம்பர்,18,ல் தந்தை செல்வா உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பவள விழா காண்கிறது. 1944, ஆகஷ்ட் 29ல் ஜீ ஜீ பொன்னம்பலத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக விலகிய முக்கிய தலைவர்களான தந்தை செல்வா, வன்னிய சிங்கம், நாகநாதன் ஆகியோர் 1949 டிசம்பர் 18 ம் திகதி கொழும்பு மருதாணையில் கூடி பேசி “இலங்கத்தமிழ் அரசுக் கட்சியை” ஆரம்பித்தனர் அதன் ஸ்தாபக தலைவராக தந்தை செல்வா நியமிக் கப்பட்டார். அன்று உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 75வது பவளவிழாவில் கால் பதிக்கிறது. அகில இலங்கை தமி…
-
- 0 replies
- 137 views
-
-
10 DEC, 2024 | 12:27 PM இலங்கையர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அகலாத டச்மார்ட்டின் Dutch Martinair DC8 விமான விபத்து நிகழ்ந்து டிசம்பர் நான்காம் திகதியுடன் ஐம்பது வருடங்களாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையில் மோதி விழுந்துநொருங்கியது. அந்த விமானத்திலிருந்த 182 பயணிகள் உட்பட 191 பேரும் உயிரிழந்தனர். மக்காவிற்கு சென்றுகொண்டிருந்த யாத்திரிகர்கள் உட்பட 191 பேர் பயணித்துக்கொண்டிருந்த அந்த விமானம் கடும் காடுகள் மத்தியில் காணப்பட்ட மலையில் மோதி விபத்துக்குள்ளானது.விமானத்தின் சிதைவுகள் காணப்பட்ட பகுதியில் பயணிகளின் உடல்களு…
-
-
- 2 replies
- 235 views
- 1 follower
-
-
கனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா, மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். தனராஜ் தங்கராஜா மீது 8 குற்றச்சாட்டுகளும், கிஷானி பாலச்சந்திரன் மீது 3 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. சோதனை நடவடிக்கை கடந்த 3ஆம் திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது இவர்கள் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/tamil-couple-arrested-in-canada-1733758309
-
- 0 replies
- 489 views
-
-
லத்தீப் பாரூக் தமிழில்: சப்ரி அஹமட் கடந்த 14 மாதங்களுக்கு மேலாக தண்ணீர், உணவு, மருந்து, மின்சாரம் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளால் விநியோகிக்கப்பட்டு வீசப்படும் 85,000 தொன் இற்கும் அதிகமான குண்டுகளாலும் இஸ்ரேலின் அதி நவீன அழிவு தரும் ஆயுதங்களினாலும் இன்றுவரை காசா, பலஸ்தீன் மக்களின் மீதான படுகொலை தாக்குதல்கள் தினம் தினம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இந்த அப்பட்டமான இனப்படுகொலைக்கு அமெரிக்காவின் அடிவருடிகளாக செயற்படும் சில முஸ்லிம் அரபு நாடுகளும் உடந்தையாக உள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் மனி…
-
- 0 replies
- 242 views
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் கடந்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன குறித்து முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளைத் தற்போது நிறைவேற்றுவீர்களா என பிரித்தானிய (UK) வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் அந்நாட்டுப் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் (27) நடைபெற்ற வெளிவிவகாரக்குழுக் கூட்டத்திலேயே இலங்கையைப் பூர்விகமாக கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானிய அரசாங்கம் இதன்போது, "இன்றை தினம் (27) உலகெங்கிலும் வாழும் தமிழர்கள…
-
- 0 replies
- 263 views
-
-
எதிர்வரும் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில்(United Kingdom ) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் இன்று (24.11.2024) போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தமிழீழ தேசிய கொடிநாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. கார்த்திகை 21 1990 ஆம் ஆண்டு கார்த்திகை 21 ஆம் நாள் எமது தேசிய கொடியை தேசியத் தலைவர் அறிமுகப்படுத்தி முதன்முதலாக ஏற்றி வைத்தார். எமது தேசியக்கொடி எமது இனத்தின் தனித்துவத்தின் ஒரு அடையாளமாக விளங்குகின்றது. இதன் தனித்துவத்தையும் புனிதத்துவத்தையும் நிலைநிறுத்தி அடுத்த சந்ததியிடம் கையளிப்பது எமது கடமையென இதன் ஏற்பாட்டாளர்கள் வெ…
-
- 0 replies
- 167 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாடு தோல்வியடைந்ததா?- சர்வேந்திரா November 18, 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 – சில அவதானங்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. 159 ஆசனங்களைப் பெற்று, 2/3 பெரும்பான்மைக்குத் தேவையான 150 ஆசனங்களுக்கும் அதிகமான ஆசனங்களை NPP பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் முன்னர் எனது நண்பர் ஒருவரைச் சந்தித்த NPP முக்கியஸ்தர் ஒருவர் ‘ நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம். அதன் பின் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 160 ஆசனங்கள் கைப்பற்றுவோம்’ என உறுதியாகக் கூறியுள்ளார். இத் தகவலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே நண்பர் என்னிடம் சொன்னார். இப்போது 159 ஆசனங்கள் கிடைத்திருக் கின்றன. 16…
-
- 0 replies
- 230 views
-
-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பு குறித்து புலம் பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் உள்ள ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எல்லாவற்றிலும் தொடர்சியாக ஆய்வுகள் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. சுமந்திரனுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுமா? தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் யாருக்கு? என்பிபிக்கு ஏன் தமிழ் மக்கள் வாக்களித்தனர்? தமிழ் தேசியம் தோற்றுவிட்டது என்றும், இல்லை தோற்கவில்லை என்றும் பலர் விலாவாரியான புள்ளிவிபரங்களுடன் விவாதங்களும் தொடர்கின்றன. ஆனால், வன்னி மண்ணில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பெண் போராளி பற்றி எவரும் கணக்கெடுக்கவேயில்லை. தூக்கி வீசிய கருவேப்பிலையாக, கண்ணி வெடியில் காலை இழந்த பெண் போராளி கருணாநிதி யசோதினி உள்ளார். இ…
-
- 3 replies
- 440 views
-
-
தமிழரசின் எதிர்காலமும் சிறீதரன், சுமந்திரனின் பொறுப்பும் November 17, 2024 வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து இந்தத் தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் தனியொரு கட்சியைச் சேர்ந்த கூடுதல் எண்ணிக்கையானவர்கள் என்றால் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே. தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்னரும் இரு மாகாணங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்கள். ஆனால், இந்த தடவை நடந்திருப்பதைப் போன்று ஒரு தேசிய கட்சி அதுவும் ஓர் இடதுசாரிக்கட்சி தமிழ்பேசும் மக்களை பாரம்பரியமாக பிரதிநிதித்துவம் செய்துவந…
-
- 6 replies
- 621 views
-
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? தேசிய மக்கள் கட்சியினர் நேற்றைய பாராளுமன்றத் தேர்தல்களில் அடைந்திருக்கும் பெரும்பான்மை வெற்றியின் ஊடாக அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றனர். இக்கட்சியினர் முன்னர் தமிழ் மக்கள் தொடர்பாக சில விடயங்களைச் செய்வதாக உறுதியளித்திருந்தார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை அடைந்திருக்கும் இன்றைய நிலையில் இக்கட்சியினர் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வாறான விடயங்களைச் செய்யலாம் என்பதுபற்றிப் பார்க்கலாம். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இக்கட்சியினர் 159 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இவ்வாற…
-
-
- 13 replies
- 543 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை அக்கட்சிப் பெறக் காரணம் என்ன? இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஒட்டுமொத்தமாக 159 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஆச்சர்யமாகப் பார்க்கப்படும் வெற்றி இலங்கையின் ஜனாதிபதியாக கட…
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
ரொபட் அன்டனி 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வாக்களிப்பு 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை செய்யப்பட்ட நிலையில் 8,000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பில் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார பணிகள் யாவும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தன. 9ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெற்றது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் காணப்படுகிறது. எனினும், பாராளுமன்றத்தை குறிப்பிட்ட காலப் பகுதிக்கு பின்னர் கலை…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல் தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்னென்ன? இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மூன்று இடங்கள் மாத்திரமே இருந்ததால், புதிய சட்டங்களை இயற்றுவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில், தான் ஜனாதிபதியாக பதவியேற்ற அடுத்த நாளே, அதாவது செப்டம்பர் 25ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நட…
-
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
(நமது நிருபர்) பத்தாவது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வுதற்கான பொதுத் தேர்தல் நாளை மறுதினம் (14) நடைபெறவுள்ளது. இதில் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் 196 உறுப்பினர்கள் மற்றும் தேசியப் பட்டியல் ஊடாகத் தெரிவு செய்யப்படும் 29 உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும். இவ்வாறு தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறும் என ஜனாதிபதி அவர்களினால் வெளியிடப்பட்ட 2024.09.24 ஆம் திகதி 2403/13 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் ம…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம் ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்) அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன: சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும். அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு. இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே. முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது. இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழ…
-
-
- 8 replies
- 874 views
- 1 follower
-
-
எப்.அய்னா பொத்துவில், அறுகம்பே பகுதி உள்ளிட்ட இஸ்ரேலியர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அவர்களையும் அவர்கள் சார் ஸ்தலங்களையும் இலக்கு வைத்து ஒருங்கமைக்கப்படாத தாக்குதல்கள் நடாத்த திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களை மையப்படுத்திய விசாரணைகள் தொடர்கின்றன. பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு இது தொடர்பில் விஷேட விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அதில் இதுவரை 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையில் பிரதான நபர் ஒருவரை கைது செய்ய பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு மேலதிக ந…
-
-
- 6 replies
- 533 views
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன்) தினமுரசு வாரமலர் பத்திரிகையின் ஸ்தாப ஆசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினரும் அற்புதன் என்று வாசகர்களினால் அறியப்பட்டவருமான நடராஜா அற்புதராஜா படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவர் 1999ஆம் ஆண்டு நொவெம்பெர் மாதம் 02 ஆம் திகதி கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். தினமுரசுப் பத்திரிகையை ஜனரஞ்சகப் பத்திரிகையாக மாற்றிய பெருமை அன்னாரையே சாரும். மிகக் குறுகிய காலத்தில் அவர் தினமுரசுப் பத்திரிகையை சூடு சுவை சுவாரசியம் என பிரபல்யப் படுத்தி ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையாக மாற்றியிருந்தார். தினமுரசுப் பத்திரிகையின் ஜனரஞ்சக எழுத்தாற்றல் வாசகர்களை நின்று நிதானித்து உற்று நோக்க வைத்தது. …
-
- 0 replies
- 148 views
-
-
மனித உயிர் பறிக்கும் வல்லைப் பாலம் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்றாகும். மன்னராட்சி காலத்திலிருந்து பல சிறப்புகளையும் வரலாற்றினையும் தன்னகத்தே கொண்டதுதான் யாழ்ப்பாணம். 30 வருட யுத்தத்தினால் யாழ்.மண் பலமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக கட்டி எழுப்பப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தின் உடுப்பிட்டியில் அமைந்துள்ள வல்லைப்பாலம் ஒரு புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இப்பாலம் யாழ்.மண்ணின் இயற்கை அழகையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் முக்கியமான கட்டுமானங்களில் ஒன்றாக காணப்படுகிறது. வல்லைப் பாலம் வல்லைக் கடல் நீர் வழியைத் தாண்டி அமைக்கப்பட்டிருப்பதால் அதன் கட்டுமானம் மிக மு…
-
- 0 replies
- 203 views
-
-
ஐநாவில் அதிரடி காட்டும் ஶ்ரீலங்கா! தமிழர்களுக்கு தீர்வு இதுவே!! | Sri Lanka | Jaffna தமிழர் தொடர்பாக ஐ.நாவிற் செயற்படுகின்ற ஒரு சகோதரியினுடைய கருத்துகள் பகிரப்பட்டுள்ளது. ஒரு இளம்பெண்ணாக இருக்கிறார். சிறப்பாக விளக்குகின்றார். யாழ்க்கள உறவுகள் பார்க்பதற்காக இணைத்துள்ளேன். நன்றி-யூரூப் நட்பார்ந்து நன்றியுடன் நொச்சி
-
- 1 reply
- 356 views
-