நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர், ஆதிக்கப் போராக உருமாறி, ஆசியக் கண்டத்தை அச்சுறுத்திவருகிறது. கொரோனா பிரச்னையில், சீனாவை கடுமையாகச் சாடிவரும் அமெரிக்கா, தற்போது அந்நாட்டை ராணுவரீதியாக ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்த சீனா, தென் சீனக் கடல்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு வல்லரசுகளின் ஆதிக்கப் போரால் தென் சீனக் கடல் கொந்தளித்துள்ளது. சமீபகாலமாக, அமெரிக்காவின் போர்க்கப்ப…
-
- 1 reply
- 456 views
-
-
செளமியமூர்த்தி தொண்டமான் , ஆறுமுகன் தொண்டமான் மரபை பேணி பாதுகாக்க மகன் ஜீவன், மருமகன் செந்திலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் எதிர்பாராத மரணம் இ.தொ.கா.வின் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. சிங்கள பெரும்பாண்மைவாத கட்சிகளின் ஆதிக்கத்தினுள் உள்ள இலங்கை அரசியல் முறைமையின் ஊடாக வெற்றிகரமாக பயணம் செய்வதற்கு ஆறுமுகனைப் போன்று துணிச்சலும் அரசியல் செயல் நோக்கும் ஆற்றலும் கொண்ட ஒரு தலைவரை இ.தொ.கா. கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பல்வேறு போட்டிக் குழுக்களாக பிளவுப்பட்டு போகாமல் இ.தொ.கா வை ஒற்றுமையாக வ…
-
- 0 replies
- 544 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி கோழைத்தனமாக இறந்து கிடக்கிறார் என்றே தோன்றியது என்று பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வயதானாலும் தனது உயிர் இருக்கும் வரை மீண்டும் ஒருமுறை விடுதலைப்புலிகள் அமைப்பு தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிங்கள சமூக வலைத்தள ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்த…
-
- 1 reply
- 558 views
-
-
தமிழ்த் தேசிய அரசியல்- தாயக மக்களின் சுயமரியாதை- ஊடகத்துறையை மலினப்படுத்தும் youtube தளத்தில் இயங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாத நிலையில் ஊடக அமைப்புகள் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையின் தொழிற்தகுதி (Professional Qualification) மேம்படுத்தும் நோக்கில் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம் ஆகிய ஊடக அமைப்புகள் பெரும் முயற்சியை எடுத்திருந்தன. குறிப்பாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் பதிவு இலக்கம் இன்றி எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் மருத்துவத்துறைப் பட்டம் பெற்றவர்கள் மருத்துவராகப் பணிபுரிய முடியாது. அதேபோன்று சட…
-
- 0 replies
- 842 views
-
-
குடியரசு நாடுகளில் உள்ள பிரதமரோ அதிபரோ மக்களின் மனநிலையை உதாசீனப் படுத்த முடியாது. கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து இந்திய அரசு நாட்டின் புது வரைபடத்தை வெளியிட்டது. அந்த வரைபடத்தில் காலாபானி என்னும் பகுதி இருப்பதைக் கண்டு நேபாள மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதற்காக நேபாள மக்கள் தங்கள் நாட்டு அரசின் மேல் தங்களுக்கு இருந்த கோபத்தை வெளிப்படுத்தினர். அதனால் நேபாள அரசு இந்திய அரசு வெளியிட்ட இந்த வரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதிலிருந்து இந்திய அரசுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஓர் அழுத்தம் நேபாள அரசுக்கு வந்தது. இந்தியாவிலிருந்து சீனா வரையிலான சாலை ஒன்றை லிபுலேக்கில் அமைக்கத் தொடங்கியது இந்தியா. …
-
- 6 replies
- 633 views
- 1 follower
-
-
தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ் ஹோர்தா தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது …
-
- 6 replies
- 848 views
-
-
மிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை - கல்வி அமைச்சர் டலஸ் உயர்தர பரீட்சை விடயத்தில் மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாத ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுப்போம். மாணவர்களுக்கு அநீதி ஏற்படாது. மாணவர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும் வகையிலான தீர்மானத்தை எடுக்கவே மாட்டோம். அதனை நான் உத்தரவாத படுத்துகின்றேன். வடக்கின் கல்வி நெருக்கடியை சரியாக தீர்க்க முடியாவிடின் ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளுக்கான வசதியின்மை என்பனவற்றை தீர்க்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்துங்கள் என்று அழைப்பு விடுப்பதாக அமைந்துவிடும் வடக்கு கிழக்கு பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை வசதிகள் இன்மை என பல குறைபாடுகள் நிலவுகின்றன. எந்தப் பிரச்சினையுமின்றி ஜூலை மாதம் மூன்றாம் வாரத்…
-
- 0 replies
- 703 views
-
-
ட்ரம்ப் வழியில் கோத்தா... இலங்கைப் படையினருக்கு எதிராக அநீதியான முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அழுத்தம் கொடுப்பதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்று சூளுரைத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கையை விலக்கிக் கொள்ளவும் தாம் தயங்கப் போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை பத்தரமுல்லவில் நடந்த போர் வீரர்கள் நாள் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருக்கிறார். இந்தமுறை போர் வெற்றி நாள் நிகழ்வுகளை அரசாங்கம் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்தது. போர் முடிவுக்கு வந்ததில் இருந்தே, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ப…
-
- 0 replies
- 409 views
-
-
சமகால இலங்கையின் சமூக – பொருளாதார - அரசியல் – தளத்தில் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளைஎதிர்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. அரசியல் ரீதியாக இச்சவால்களை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் நாளாந்தம் அருகிவருகின்றன. எண்ணிக்கை அடிப்படையில் எமது அரசியல் பலம் என்பது சுமார் பத்து சதவீதமானது மட்டுமே. கடந்தகாலத்தில் இப்பலத்தினைக்கொண்டு நாம்நிறைய வேசாதித்திருக்கின்றோம். அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவ்வப்போது கைகூடியிருந்தது. ஆனால் அந்தநிலை தொடர்ந்தும் நிகழப்போவதில்லை.சமூகத்தளத்தில் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. ஒருசிறுபான்மை சமூகம் என்றவகையில் நமது பொறுப்புக்களைநாம் உணர்ந்து செயற்படவேண்டிய தேவையிருக்கிறது…
-
- 0 replies
- 479 views
-
-
தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தக்கு வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேரையில் தெரிவித்துள்ளார். கிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்? என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, ஸ்காட்டுகள் பிரித்தானியாவிடம் இருந…
-
- 0 replies
- 555 views
-
-
நீங்கள் பயிற்சி பெற்றதை ஏற்றுக் கொள்ளுங்கள் – முஸ்லிம் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் May 21, 2020 மூன்று முஸ்லிம் பிள்ளைகளிடமிருந்து கட்டாயப்படுத்தி ஆதாரங்களை பெற்றதாக காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது . அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் அல் சுஹ்ரியா அரபுக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்களது முஸ்லிம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தங்களை காவல்துறை அதிகாரிகள் என அழைத்துக்கொண்டு ஒரு குழு பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை தனியாகப் பிரித்து தவறான தகவல்களைக் கொண்ட ஆவணங்களில் கையெழுத்திடுமாறு அச்சுறுத்தியுள்ளனர். எங்களிடம் ஒரு …
-
- 0 replies
- 370 views
-
-
தமிழ் மக்களின் புரையோடிப்போன தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் யாவும் கிடப்பில் போடப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள், எந்த வகையிலும் சாத்தியமற்ற போக்குகளையே எடுத்துக் காட்டுகின்றன. இதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், நீதியையும் இழப்பீடுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்வதற்கும், நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு கிடைக்கவேண்டும், சர்வதேச …
-
- 0 replies
- 481 views
-
-
மீண்டும் மீண்டும் யாருக்குக் கல்வி மறுக்கப்படுகிறது? கடந்த வாரம், நடந்த சம்பவமொன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்: ஆசிரியரைத்தேடி மாணவர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆசிரியரிடம் அவர் வழங்கிய பயிற்சித் தாள்களைத் தரமுடியுமா எனக் கேட்டுள்ளார். ஆசிரியர், அவற்றைத் தான், 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி விட்டதாகவும் இலக்கத்தைத் தந்தால், தான் அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறார். மாணவர், பதில் அளிக்காமல் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறார். குழம்பிப்போன ஆசிரியர், மறுநாள் மாணவரின் வீட்டைத் தேடிப்போனார். அம்மாணவர், மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிகிறார். அவர்களிடம் கணினியோ, திறன்பேசியோ கிடையாது. குறித்த மாணவரிடம் பேச முயல்கிறார்ளூ மாணவர் வெளியே வந்து, ஆசிரியர…
-
- 0 replies
- 451 views
-
-
கொடிய போரினால் வன்னிப் பெருநிலப் பரப்பில் உயிர்நீத்த உறவுகளே! இன்று மே 18. நீங்கள் உறக்கம் கலைந்து உங்கள் உறவுகளின் வருகைக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மண்ணில் காத்திருப்பீர்கள். அத்தனை உறவுகளும் உங்களைச் சந்திக்க முடியாத கால சூழல் இப்போது இருக்கிற தாயினும் உங்கள் நினைவோடு ஏற்றப்படும் நினைவுச் சுடர் தரும் ஒளியில் நாங்கள் அனைவரும் சங்கமிப்போம். பதினொரு ஆண்டுகள் நிறைவாகி விட்டன வாயினும் உங்கள் உயிர் பறிப்புக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அந்தோ! இன்றுபோல் இருக்கிறது எங்களைக் காப்பாற்றங்கள் என்று நீங்கள் இரு கரம் உயர்த்தி உலகத்திடம் கேட்டது. மனித உரிமைகள் பற்றியும் சமத்துவ வாழ்வு பற்றியும் மாநாடு வைக்கும் உலகம் ஈழத் தமிழினத்தின் விடயத்தில் மட்டும் மெ…
-
- 1 reply
- 651 views
-
-
அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் பேசிக் கொள்வதுண்டு. அதேநேரம் அரசியலின் இயங்குநிலை காரணமாகப் பலரும் அரசியலை வெறுக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு அரசியல் குறித்து மக்களிடையே எழுந்த அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்காக கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலிப் பத்திரிகையில் ஒரு விளக்கக் கட்டுரையை வரைந்தார். அதில் அரசியல் பிழையன்று. அரசியலில் ஈடுபடுவோர் சிலர் அறமின்றி நடந்து கொள்வ தால் அஃது அரசியலுக்கு இழுக்கைத் தந்து விடுகிறது. மற்றும்படி அரசியல் செம்மைப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் வாழ்வு செழுமை பெறும். எனவே மக்கள் அரசியலை ஒதுக்காமல் அரசியலுக்குப் பொருந்தாதவர்களை ஒதுக்க வேண்டும் எனக் கருத்துரைத்தார். கலைஞர் கருணாநிதி வரைந்த விளக்கம் மீது ஈழத் தமிழ் மக்க…
-
- 0 replies
- 435 views
-
-
பி.மாணிக்கவாசகம் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறிய பதினோராம் ஆண்டின் நினைவு தினமாகிய இன்றைய தினம் வழமையைவிட இம்முறை விசேட கவனத்தைப் பெறுகின்றது. முள்ளிவாய்க்காலில் மனித குலத்திற்கு எதிரான வகையில் கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ஆயுதப்படைகளுக்குத் தலைமை தாங்கிய அதிகாரம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தருணத்தில் இந்த நிகழ்வு நினைவுகூரப்படுகின்றது. இதுவே இந்தத் தினத்தின் விசேட அம்சமாகும். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த காலத்தில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் அவலத்துயரம் அரங்கேற்றப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2014 வரையில் 5 ஆண்டுகள் முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவுகூர்வதற்கு அந்த அரசு அனுமதிக்கவில்லை. முள்ளிவாய்க்காலின் ஊழிக்கா…
-
- 0 replies
- 840 views
-
-
தமிழர் தாயகத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட போர் பூமிப்பந்தின் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரும் பேரவலத்தினை ஏற்படுத்தியிருந்தது. 2009ஆம் ஆண்டு மே 18இல் ஆயுதங்கள் மௌனிக்கச் செய்யப்பட்டுவிட்டதாக கூறினாலும், முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய மனிப் பேரவலங்கள் ரணமாகியுள்ளன. அவலக்குரல்களும், அழுகை விழிகளும், அன்புக்குரியோரின் பிரிவுகளும், அகதி அவலங்களும் ஆண்டுகள் பதினொன்றாகியும் அனைவர் உளத்திலும் அகலாது உறைந்திருக்கின்றன. அஞ்சலிகள் ஆண்டுதோறும் நடைபெற்றாலும் ஆத்மாக்களின் சாந்திக்கான நியாயமான நீதி எட்டாக்கனியாகவே இருக்கின்றது. அதற்கான பயணங்களும் செல்வழியின்றி முடக்கப்பட்டிருக்கின்ற நிலையில், மற்றுமொரு நீதிக்கான எதிர்பார்ப்புடன் நகர்கி…
-
- 0 replies
- 483 views
-
-
குழிக்குள் விழுந்த நூலறுந்த பட்டங்கள் -ப.பிறின்சியா டிக்சி பட்டங்களை வானில் ஏற்றிப் பார்த்து இரசிப்பதை, யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால், பறக்கவிடும் பட்டங்களெல்லாம் உயர உயரப் பறப்பதில்லை. அவற்றில் சில, நூல் சிக்கி இடையில் அறுந்துவிடுகின்றன: அன்றேல் மரக்கிளைகளில் சிக்குண்டு, சின்னாபின்னமாகி விடுகின்றன. அவ்வாறின்றேல், காற்றறுத்துக் கொண்டு போய்விடுவதும் மின்கம்பிகளில் சிக்கிக் கருகிவிடுவதும் கூட நிகழ்வதுண்டு. இந்தப் பட்டங்களை வானில் ஏற்றி, காற்றில் மிதக்க வைப்பதென்பது, பெரும் சிரமமான காரியமாகும். இது ஊரடங்கு காலம்; பக்கத்து வீட்டில் என்ன நடந்தாலும் நமக்கென்ன என்றிருக்கும் காலமிது. அதில், வீடுகளுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் சிறார்கள், எப்போது வெளியில்…
-
- 0 replies
- 867 views
-
-
ராஜபக்ஷ சகோதரர்களில் ஒருவர் பிரதமராகவும், ஒருவர் ஜனாதிபதியாகவும் உள்ள இலங்கையின் மிக முக்கிய பதவிகள் தற்போது ராணுவத்தினர் வசமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது நாட்டை ராணுவமயமாக்கும் முயற்சி என்று அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தாலும், பொதுமக்களின் நலனை அடிப்படையாக வைத்தே முடிவுகள் எட்டப்பட்டு வருவதாக இந்த நியமனங்கள் குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் பதவிக்கு வந்தபின் அவருக்கு கீழுள்ள பல பதவிகளுக்கு ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இலங்கையின் பல பதவிகளில் ராணுவத்தினர் பதவி வகிக்கின்ற நிலையில், சுகாதார அமைச்சின் முக்கிய பதவியான ச…
-
- 0 replies
- 544 views
-
-
பெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த நாட்டில் உள்ள எல்லா இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் கூட்டாகப் பலவித அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக, சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் தமது முக்கியப் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தியாகம் செய்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். கொவிட்-19 வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் உயிர்த்த ஞாயிறு தினம் வந்தது. கடந்த வருடத் தாக்குதல்களை நினைவுகூர வேண்டிய ஒரு நிலையும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், பேராயர் ஒரேயொரு முறைதான் கோரிக்கை விடுத்தார். மறுபேச்சின்றி, எல்லாக் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்…
-
- 0 replies
- 581 views
-
-
நான் இப்ப, தமிழ் அரசியல் குறித்து அக்கறைப்படுவதில்லை. நண்பர் ஒருவர் இந்த லிங்கினை அனுப்பி இருந்தார். போரடித்ததால் பார்த்தேன்.... முடியல... நீங்களும் பாருங்கோவன்.
-
- 0 replies
- 830 views
-
-
அம்பேத்கரும் இடதுசாரி இளம்பருவக் கோளாறுக்காரர்களும் இந்தக் கவிதை(?) எழுத்துக்களை வாசிப்பவர்கள் மனம் புண்பட்டால் என்னை மன்னித்து அருள்வீராக. “குறிமடக்கி அமரும் புத்தனின் வழிகளில் படர்கிறது யோனியின் ரேகை”, "ஆகச் சிறந்த புணர்ச்சியை நிறைவேற்ற வேண்டுமாயின் -----தான் புணர வேண்டும் அவளுக்குத்தான் ஆயிரம் கைகள்" - 'காமத்துப்பால்' என்ற புத்தகத்தில் 'தூய மார்க்சிய கவிஞரும், அறிஞருமான' வசுமித்ர என்பவர் எழுதியது. இவர் தான் "புத்தரின் ஆண்……. அம்பேத்கர் அறிவைத் தேடுகிறார்” என இழிவுபடுத்தி (அடே கிறுக்கன்களா இது விமர்சனம் அல்ல, விஷம்) வன்மத்தைக் கொட்டினார். அதற்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் சாமுவேல்ராஜ் இந்த நபரின் மீது வன்கொடுமை தண்டனைச் சட்டத்தின் கீழ் புகார் கொ…
-
- 0 replies
- 429 views
-
-
மனிதனின் உணவுப்பழக்கமா, விலங்குகளிடமிருந்து பறிக்கப்பட்ட உறைவிடமா... எதனால் வந்தது கொரோனா? தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 கொள்ளைநோய் சீனாவில் தோன்றி உலகத்தையே தன்னுடைய பிடியில் வைத்துள்ளது. இந்த நோயின் தோன்றலையும், பரவலையும் அறிந்துகொள்வதின் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற நோய்கள் வருவதைத் தடுக்கலாம் என்பது குறித்து விளக்குகிறார் விஞ்ஞானி கார்த்திக் பாலசுப்பிரமணியன். கொரோனா நோய் வந்ததிலிருந்து உலகின் சாதாரண குடிமகன் முதல் வல்லரசுகளின் அதிபர்கள்வரை அனைவரும் திட்டித்தீர்ப்பது சீனாவைத்தான். குறிப்பாக, சீனர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை. இதற்கு வலுசேர்க்கும் விதமாக வாட்ஸ்அப்பில் உலா வரும் பல்வேறு காணொலிகளும் சீனர்கள் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்டவற்றை உட்கொள்வதாகக் கா…
-
- 0 replies
- 367 views
-
-
எப்போது, எப்படி முடிவுக்கு வரும் இந்தப் பெருந்தொற்று?- வரலாற்று ரீதியில் ஓர் அலசல் பெருந்தொற்றுகள் வழக்கமாக இரு வகைகளில் முடிவுக்கு வரும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஒன்று, மருத்துவ ரீதியிலான முடிவு. தொற்று விகிதமும் இறப்பு விகிதமும் குறையும்போது மருத்துவ ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும். இரண்டாவது, சமூக ரீதியிலான முடிவு. தொற்றுநோய் தொடர்பான பயம் முடிவுக்கு வரும்போது சமூக ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும். “கரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்பவர்கள், சமூக ரீதியிலான முடிவு எப்போது என்பதைத்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்” என்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவ வரலாற்றாசிரியரான டாக்டர் ஜ…
-
- 0 replies
- 378 views
-
-
பாக்கு நீரிணையின் இருபக்கமும் உள்ள தமிழர்கள் நிலைமை போர்த்துக்கேயர், கோழிக்கோடு வந்து இறங்கியபோது 1498ல் சாமோரியர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். போர்த்துக்கேயர் வரவேற்க்கப்படவில்லை. திரும்பிப் போன போர்த்துக்கேயர், பலத்துடன் வந்து கொச்சி பகுதியினை பிடித்துக் கொண்டனர். எதிரியின் பிரதேசம் ஆயினும், ஒரே இனம் என்பதால், மேலே கோழிக்கோடு பகுதியினை ஆண்டு வந்த சமூரியர்கள், போர்த்துகேயர்களை எதிர்ப்பதில் அப்பகுதி அரசனுக்கு உதவினர். விளைவாக அங்கிருந்து வெளியேறிய போர்த்துக்கேயர், 1505ம் ஆண்டளவில் இலங்கை பக்கம் போய், 1520ம் ஆண்டளவில் முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கு பக்கத்தில் இருந்த தீவுக் கூட்டங்களை பிடித்துக் கொண்டனர். முக்கியமாக நெடுந்தீவு. அதேவேளை …
-
- 9 replies
- 1.1k views
-