Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காலியில் தமிழ் குடும்பங்கள் மீது தாக்குதல்! 7 வீடுகள் எரிந்து நாசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலியில் தமிழ் குடும்பங்கள் மீது தாக்குதல்! 7 வீடுகள் எரிந்து நாசம் - முழு விபரம் இணைப்பு

காலி - எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது பெரும்பான்மை சிங்கள யுவதிகள் சிலர் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அத தெரண தமிழிணையம் பெற்றுக் கொண்ட நம்பகரமான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்படி நடந்தவை வருமாறு,

எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் உள்ள இராணுவ வீரர் ஒருவர் (சாதாரண இராணுவ சிப்பாய்) விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ் குடும்பங்களை சந்தித்து தன்னை ´சேர்´ அல்லது ´மாத்தயா´ என்றுதான் அழைக்க வேண்டும் என அச்சுறுத்தி வந்துள்ளார்.

எனினும் இலங்கை நாட்டு பிரஜைகள் என்பதால் அந்த இராணுவ சிப்பாய்க்கு அடிபணிய திலிதுற தோட்ட தமிழ் குடும்பங்கள் மறுத்து வந்துள்ளனர். இதனால் இந்த மக்கள் மீது இராணுவ சிப்பாய்க்கு கடும் கோபம் இருந்து வந்துள்ளது.

கடந்த 11ம் திகதி புதுவருட விடுமுறையில் வந்துள்ள இராணுவ சிப்பாய் (றுவான் குமார என்பது பெயர் என தெரியவருகிறது) திலிதுற தோட்டத்திற்குச் சென்று இளைஞர் ஒருவரிடம் தன்னை ´சேர்´ என அழைக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

எனினும் குறித்த இளைஞன் அதற்கு மறுப்புத் தெரிவித்ததால், எதிர்வரும் புதுவருடத்தில் உங்களை பார்த்துக் கொள்கிறேன் என குறித்த இராணுவ சிப்பாய் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அவர் சொன்னபடியே நேற்று (14ம் திகதி) காலை 10 மணியளவில் திலிதுற தோட்டத்துக்கு வந்த இராணுவ சிப்பாய் தன்னை ´சேர்´ என அழைக்க மறுத்த இளைஞனை அவருடைய வீட்டுக்குள் போட்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்த தமிழ் இளைஞன் ஒருவர் அவ்விடத்திற்கு வந்து ஏன் அடிக்கிறீர்கள் என நியாயம் கேட்டுள்ளார்.

இதன்போது குறித்த இடத்திற்கு திடீரென வந்த 25 - 30 சிங்கள இளைஞர்கள் இவ்விருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்த 7 வீடுகளை தீயிட்டு எரித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் போன்றவற்றிற்கும் தீ வைத்து எரித்துள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்து தங்க நகை, பணம் மற்றும் வாகன உரிமம், தொலைக்காட்சி என்பவற்றை களவாடிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 90 லட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து எல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸாரும் அங்கு வந்துள்ளனர். பொலிஸார் வந்து நின்றதை கண்டும் சிங்கள இளைஞர்கள் தமிழர்களின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக கண்ணால் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து நிலைமையை சமாதானம் செய்யவே அதிக முயற்சி செய்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு தமிழ் இளைஞர்களை பொலிஸார் கைது செய்ததோடு மேலும் சில தமிழ் இளைஞர்களை பெயர் குறிப்பிட்டு தேடி வந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த இராணுவ சிப்பாய் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமிந்தகுமார் மற்றும் சந்திரகுமார் என்ற இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் சுமார் 520 தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த 3400 தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கல்வித் துறையில் பெரிய முன்னேற்றம் இல்லையே தவிர இந்த மக்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து நல்ல செல்வம் உடையவர்களாக கௌரவ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டில் யுத்தம் முடிவடைந்து இணங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிறுபான்மை மக்கள் மீதான இவ்வாறான தாக்குதல்கள் பிளவை வலுபெறச் செய்யுமே தவிர ஒற்றுமையை ஏற்படுத்த ஒருநாளும் வழி ஏற்படுத்தாது என சமூக ஆர்வளர்கள் குறிப்பிடுகின்றனர்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=24539

http://www.adaderana...s.php?nid=24539

சிங்கள யுவதிகள் என்று செய்தியைத் தொடங்கிவிட்டு இளைஞர்கள் என்று முடிக்கிறார்கள். உண்மையாகவே யுவதிகளா அல்லது இளைஞர்களா தீயிட்டது ??? குழப்புகிறார்களே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamil village in Galle attacked over dispute

News | April 16, 2012 12:08 pm

arson-attack.jpg(Srilankamirror) – Several Tamil families living at a village in Elpitiya, Galle have been assaulted and their houses robbed and set on fire following a dispute involving an Army soldier.

According to ‘Ada Derana’ Tamil website, the soldier in question had become angry after a youth of the Dilithura village had refused to address him as ‘sir.’

The soldier, while on vacation, had gone to the village around 10.00 am on April 14 and assaulted the youth at his home and another Tamil youth who had tried to mediate.

Later, around 30 youths had gathered at the location, beaten up the two Tamil youths and set fire to seven houses, push cycles, motorcycles and three wheelers.

They had also got away with money and jewellery.

The villagers, who suffered estimated damages of Rs. nine million, have complained to Embilipitiya police.

A police team arrived at the scene and arrested two Tamil youths and are searching for several other suspects.

Dilithura is a village with a population of around 3,4000 belonging to 520 Tamil families.

http://english.srilankamirror.com/2012/04/tamil-village-in-galle-attacked-over-dispute/

Remembemr this!! Read further below!

----------------------------------------------

Sri Lankan forces attack village after rejecting Tamil Tiger ceasefire

Sri Lankan forces have attacked a rebel-held village in the north with heavy machine gun fire just hours after rejecting the Tamil Tigers' call for a truce as a ploy to avoid destruction.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/5228222/Sri-Lankan-forces-attack-village-after-rejecting-Tamil-Tiger-ceasefire.html

'பாதுகாப்பு வழங்குங்கள்' :திவித்துர தோட்ட மக்கள்

தென்னிலங்கையில் காலி மாவட்டம், திவித்துர என்ற தோட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ் தொழிலாளர் குடும்பங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் கத்திகள், தடிகள்,பெற்றோல் குண்டுகள் சகிதம் வாகனத்தில் வந்தவர்கள் ஐந்து வீடுகளை தீவைத்து எரித்துவிட்டு, இன்னும் பல வீடுகளை தாக்கிச் தேப்படுத்திச் சென்றுவிட்டதாகவும் பிதேசத்தைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பவத்தையடுத்து தமது பாதுகாப்புத் தொடர்பில் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு

இதேவேளை இந்த சம்பவத்துடன் பிரதேச அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பிரதேசவாதிகள் குற்றஞ்சாட்டினார்கள்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்களிடமும் பிரதேச காவல்துறை அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இந்தப் பிரச்சனை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோரும் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்கள்.

ஆனால் இந்த சம்பவத்தில் குறித்த பிரதேசசபை உறுப்பினர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுப் பற்றி காவல்துறைக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்று இலங்கை காவல்துறை பேச்சாளர் எஸ்பி அஜித் ரோகண பிபிசியிடம் தெரிவித்தார்.

தனிப்பட்ட ரீதியில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று அஜித் ரோஹண கூறினார்.

சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.bbc.co.uk...eattacked.shtml

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.