Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிடவில்லை....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் எம் வீரத்தின் முடிவா?

எனது முதல் பதிவாகவும் காலத்தின் தேவை கருதியும் தமிழரின் வீரத்தை சோழர் இராட்சியத்தின் எழுச்சி வீழ்ச்சி போன்றவிடயங்களை

மிகவும் மேலோட்டமாக அலசி எங்கள் வீரம் முள்ளிவாய்க்காலுடன் நின்றுவிடப்போவதில்லை எனும் பதிவுடன் எனது யாழ் கலைப்பயணத்தை ஆரம்பிக்கிறேன்...

சோழர் என்பவர் பழந்தமிழ நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் ஓர் குலத்தவராவர், மூவேந்தரில் மற்றைய குலத்தவர்கள் சேரரும்

பாண்டியரும். கி.மு 300௦௦ களில் தொடங்கி கி.பி 1279 வரை தான் சோழராச்சிய காலமாமாகக் கருதப்படுகிறது. கி.மு வலிமையாய் இருந்த சோழசாம்ராட்சியம் கி.பி 2 ம் நூற்றாண்டில் சிற்றரசு நிலைக்குத் தாழ்ந்து மறுபடியும் 9 ம் நூற்றாண்டுக்கு பின் மறுபடியும் வலிமை பெறத்தொடங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. 10 -12 ம் நூற்றாண்டுகள் சோழர்களின் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் தான் சோழர்கள் கடற்படைமூலம் கடல்தாண்டிச் சென்று சில நாடுகளையும் வென்றதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி வென்றவர்கள் சோழர்களே ஆவர்.

இந்தச் சரித்திரத்திலிருந்து கவனிக்கப்படவேண்டிய விசயம் என்னவென்றால் வலிமையாயிருந்து வீழ்ச்சியடைந்து மீண்டும் வலிமை பெற்ற சாம்ராட்சமாக 13 ம் நூற்றாண்டுவரையிருந்தது அவர்கள் இராட்சியம். இந்த மாற்றங்களெல்லாம் நிழந்தது பல நூற்றாண்டு இடைவெளிகளில் இப்படியான காலச்சக்கரத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழர்படையின் ஆரம்பம் என்று சொல்லப்படும் 1970 நடுப்பகுதி தொடக்கம் தமிழன் வீரம் முடிவுக்கு வந்துவிட்டது என்று எதிரி கொக்கரிக்கும் முள்ளிவாய்க்கால் வரையான காலப்பகுதியானது மிகமிக சிறியதான காலப்பகுதி மட்டுமே.

இந்த முப்பதாண்டு காலப்பகுதியில் பூச்சியத்தில் கிடந்த தமிழினத்தின் வீரம் பூமியின் மறு எல்லைவரை தெரியத் தொடங்கியது . சிறிது சிறிதாகக் கட்டியமைக்கப்பட்ட எமது படைக்கட்டமைப்பு எதிரியை மறைந்திருந்து தாக்கும் போர் முறையிலிருந்து

மரபுவழிப் போர்முறைக்கு மாறி எதிரியை துவம்சம் செய்யத்தொடங்கியது. வலிமையான கடற்படைக் கட்டமைப்பும் அமைக்கப்பட்டு

பல்லாயிரம் மாவீரர்களின் தியாகத்தின் முலம் எதிரியை எங்கள் தாய்மண்ணிலிருந்து துரத்தி முன்றில் இரண்டு பகுதிவரையான

தாய்நிலத்தை மீட்டு ஒரு நிழல் அரசையே அமைத்து ஆளத்தொடங்கியது எங்கள் தமிழர் படை. எல்லாவற்றுக்கும் மேலாக

தமிழனின் வரலாற்றில் முதல்முறையாக வான்படையையும் உருவாக்கி, அதுவரை வானாதிக்கம் செலுத்திவந்த எதிரியின்

வான்பரப்புக்கு உள்ளேயே சென்று எதிரியின் கோட்டையை சிதைத்து வந்தது தமிழனின் வான்படை. உயர் தொழில் நுட்பத்தைக் கொண்ட

போர் விமானங்களை இலங்கையரசு வைத்திருந்தும் அடிப்படையில் எந்தவொரு உயர் தொழில் நுட்பமுமில்லாத

ஆனால் மனோபலத்திலும் அதீத திறமையையும் கொண்ட தமிழீழ வான்படையை கண்டு அஞ்சி நின்றது இலங்கையரசு.

இந்த நிலையில் தான் வல்லரசுகளின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை தனக்கு சாதகமாக எடுத்து அத்துடன் இந்திய அரசின்

சூழ்ச்சியுடன் தமிழனின் உரிமைப்போரை தனது போய்ப் பரப்புரையால் பயங்கரவாதமாக உலகுக்கு காட்டி முள்ளிவாய்க்காலில்

கொண்டுவந்து படு கோரமான இன அழிப்புடன் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது என்று உலகுக்கு சொல்லியது, இன்றுவரை

சொல்லிக்கொண்டிருக்கிறது இலங்கையரசு. விடுதலைப் புலிகள் எனும் பெயரையே தமிழ்மக்கள் மனங்களிலிருந்து அகற்றும்

நோக்குடன் மாவீரர் இல்லங்கள் குஉட துடைத்தழிக்கப்பட்ட நிலையில் மூலைமுடுக்கெல்லாம் புத்தர் சிலைகள்

முளைத்துக்கொண்டிருக்க, எங்கெங்கெல்லாம் புலிக்கொடி பறந்ததோ அங்கெல்லாம் சிங்கக்கொடி பட்டொளிவீசிப் பறந்துகொண்டிருக்கிறது.

வெல்லப்படமுடியாத தமிழர் படை என்று கருதப்பட்ட விடுதலைப் புலிகளையே யுத்தம் ஆரம்பித்து இரண்டரை வருடங்களுக்குள்ளேயே

வென்றுவிட்டோம், தமிழரை தோற்கடித்துவிட்டோம், இனி அவர்களால் எங்களை ஒன்றுமே செய்யமுடியாது என்று சொல்லிச் சொல்லி தனது இனவாத நஞ்சை தனது சிங்கள மக்கள் மத்தியிலே பரப்பிய வண்ணமிருக்கிறது. அதே நேரம் முள்ளிவாய்க்கால் எனும் பெருங்கொடுமையை தமிழருக்கு இழைத்ததன் மூலம் தமிழர் மனங்களில் அதை என்றும் அதை மாறா

வடுவாகச் செய்துள்ளது. அந்தப் பெருந்துயரம் இந்தக் கணம்வரை தமிழீழ மண்ணை நேசிக்கும் ஒவ்வொரு தமிழன் மனங்களிலும்

நீறு புத்த நெருப்பாக எரிந்து தாயக சுதந்திரப் பணிகளில் ஈடுபடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களின் செயற்பாடுகளுக்கும் எரிபொருள் சக்தியாய்

செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய அழிவைச் சந்தித்த ஓர் இனம், இனி எழுந்திருக்க முடியாது என சிங்களம் கொக்கரிந்துக்கொண்டிருக்கும் இந்தச் சமயம் தான் நாங்கள் விழவிழ எழுவோமே தவிர வீழ்ந்துகிடக்க மாட்டோம் எனச்சொல்லும் பல மாற்றங்கள் புலம்பெயர் தேசங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாங்கள் களத்தில் பலமாக இருந்தபோது அரசியல் ரீதியில் இலங்கையரசுக்கு கொடுக்கமுடியாத நெருக்கடிகளை, களத்தில் பலமிழந்து எமது ஆயுதங்கள் மெள்னிக்கப்பட்டிருக்கும் இவ்வேளை புலத்தில் செய்டுகொண்டிருக்கிறோம், இதற்கு சமீபத்திய உதாரணம், கொடுங்கோலோன் மகிந்த ராஜபக்க்ஷவின் படுதோல்வியில் முடிந்த இரு லண்டன் பயணங்கள். தனது சர்வாதிகார ஆட்சியில் தமிழர் நிலங்கலெல்லாம் சுதந்திரமாகச் செல்லமுடிந்த மகிந்த ராஜபக்க்ஷவால் முழுக்க முழுக்க ஜனனாயக நாடான பிரித்தானியாவில் ஒரு சாதாரணக்குடிமகனுக்கு இருந்த சுதந்திரம் கூட ஒரு நாட்டின் அரச தலைவருக்கு கிடைக்க விடாதது தமிழனின் அறவளிப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியல்லவா? தாய் நாட்டில் புலிக்கொடியை இறக்கிவிட்டோம் என்று கத்திய சிங்களம், போகும் தமிழர் தாயகமெல்லாம் சிங்கக்கொடியை ஏற்றியது, ஆனால் லண்டன் வந்தபோது ஆயிரம் புலிக்கொடிகள் பட்டொளி வீசிப்பறக்க பறக்க தனது நாட்டின் தேசியக்கொடியான ஒரு சிங்கக்கொடியைத் தானும் தனது அரச வாகனத்தில் காட்டமுடியாத அளவுக்குச் செய்ய எங்களால் எப்படி முடிந்தது. பிரித்தானியாவில் நிகழ்ந்த பொதுநலவாய மாநாட்டு அமர்வுகளில் வந்திருந்த எல்லா நாட்டுத் தலைவர்களும் தங்கள் தங்கள் நாட்டு தேசியக்கொடிகளுடன் வாகனங்களில் வந்திறங்க, பயங்கரவாதத்தை முதன்முதலாக உலகிலே முறியடித்ததென தன் பெருமையை பீத்திக்கொள்ளும் ஓர் அரச தலைவர் திருடன் போல ஒளிந்த வண்ணம் இந்த மாநாட்டு அமர்வுகளில் கலந்துகொள்ள வந்தது எதைச்சொல்லி நின்றது. பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டிருந்த ஓர் குழுவினரை நீங்கள் கொன்றதாக உலகுக்குச் சொல்லி நின்றாலும் அது உண்மையல்ல் நீர் கொன்றது தமிழ் இனத்தை, இந்த இனத்தை அழித்தற்கு நீர் என்றைக்காவது பதில் சொல்லியே ஆகவேண்டும் அதுவரை, அந்த அழிக்கப்பட்ட இனத்துக்கு ஓர் நீதி கிடைக்கும் வரை அந்த இனம் போராடியே தீரும் என்ற கருத்தையல்லவா இந்தப் போராட்டம் சொல்லி நின்றது. இலங்கைத்தூதரகமென்று சொல்லி தனது நரி வேலைகளால் தமிழரை தரப்பைப் பிரித்தாழும் சூழ்ச்சியை செய்துகொண்டிருக்கும் அவர்களால் கூட தமிழர்தரப்பின் இந்த எழுச்சியை ஒன்றுமே செய்யமுடியவில்லலை.

எங்களுக்கு நீதி கிடைக்க பல சகாப்தங்கள் காத்துக் கிடக்கமுடியாது முள்ளிவாய்க்காலில் மாண்ட எம் உறவுகளுக்கும், உலக போர் விதிகளெல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டு மிகவும் கோரமான முறையில் கொல்லப்பட்ட எம் மாவீரர்களுக்குமான நீதி விரைவில் கிடைக்கும் வண்ணம் எம் அறவளிப் போராட்டத்தினை உச்சப்படுத்த வேண்டும். முக்கியமாக தமிழ் ஊடங்கங்கள் எல்லாம் தங்களுக்குள் ஒன்றிணைந்து மாறிபட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி குழப்பம் விளைவிக்காமல் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த அத்தனை உறவுகளையும் மனதில் நிறுத்தி, பிரபாகரன் படை எப்பவுமே தோற்காது, சரித்திரத்திலும் சரி சமகாலத்திலும் சரி நாங்கள் என்றுமே தோற்கமாட்டோம், தற்காலிகத் தோல்விகளைக் கண்டு துவண்டு கிடக்கமாட்டோம் இறுதி வெற்றிவரை போராடி வெற்றிபெறுவோம் என சபதமெடுத்துக்கொள்வோம்.

நம் தானைத் தலைவன் சொன்ன பொன்மொழிகளைப் பின்பற்று எம் மானத் தமிழ்படை இவ் உலகை வெல்ல எனக்கூறி எனது இக் கட்டுரையை முடிக்கிறேன்.

மீட்போம் எமது தாயகம், காட்டுவோம் உலகுக்கு தமிழர் வீரம்.

நன்றி

அரிஞ்சயன்

Edited by இணையவன்
எழுத்தின் அளவு பெரிதாக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]மிக நல்ல பகிர்வு அரிஞ்சயன் [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]சரியாக சொன்னீர்கள்.[/size]

துன்னையூரன் எனது கட்டுரைக்கு உங்கள் கருத்துப் பகிர்வை வரவேற்கிறேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]மிக நல்ல பகிர்வு அரிஞ்சயன் [/size]

லியோ எங்கள் வரலாறுகள் எங்கள் தலைமுறையினருக்கு சொல்லப்பட வேண்டும், தமிழன் எந்த நிலையிலும் தோற்கக்கூடாது.

கருத்துப்பகிர்வுக்கு நன்றி...

அரிஞ்சயன் முதல் கோணினால் முற்றிலும் கோணும் என்பர் .............உங்கள் முதல் பதிவே உங்களை யார்

என்று காட்டிவிட்டது. காலத்தின் தேவைக்கேற்ப அற்புதமான உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி...தொடருங்கள்

யாழில் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை .....வாழ்த்துக்கள் [ நிச்சயம் உங்களிற்கு என் பச்சைப்புள்ளி .....

ஆனால் இன்று போட முடியவில்லை முடிந்துவிட்டது ....நாளை போடுவேன்]

அரிஞ்சயன் அண்ணா மிக நல்ல ஆரம்பம். தொடருங்கள் உங்கள் தாயகத்திற்கான பங்களிப்பை.

முக்கியமாக தமிழ் ஊடங்கங்கள் எல்லாம் தங்களுக்குள் ஒன்றிணைந்து மாறிபட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி குழப்பம் விளைவிக்காமல் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த அத்தனை உறவுகளையும் மனதில் நிறுத்தி, பிரபாகரன் படை எப்பவுமே தோற்காது, சரித்திரத்திலும் சரி சமகாலத்திலும் சரி நாங்கள் என்றுமே தோற்கமாட்டோம், தற்காலிகத் தோல்விகளைக் கண்டு துவண்டு கிடக்கமாட்டோம் இறுதி வெற்றிவரை போராடி வெற்றிபெறுவோம் என சபதமெடுத்துக்கொள்வோம்.

தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல. தமிழ் தலைமைகளும் நாடுகடந்த அரசாங்கம், தலைமை செயலகம், உலக தமிழர் பேரவை என்று பலவாறு பிரிந்து நிற்காமல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதற்கு தலைவர்களிடையே ஓர் சமரசம் ஏற்பட வேண்டும். காலத்தின் தேவை கருதி அவர்கள் ஒன்று சேரும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கல் தோன்றி மண்தோன்றா என்பதில் தொடங்கியிருக்கலாம் .

அவனவன் ஐ போட்டில அலுவல் பார்க்கின்றான் இப்பவும் நாம் மண் தோன்ற முதல் வந்த குடி என்பதில் நிற்கின்றோம் .

முன்பும் ஒருவர் கிரேக்க சரித்திரம் எல்லாம் எழுதி ராஜ்யங்கள் வீழ்வதும் எழுவதும் சகஜம் என்றார் .எழாமல் மண்ணோடு மண்ணாய் போன சரித்திரங்கள் தான் பல .

நடக்க வேண்டிய அலுவலை முதலில் பார்ப்போம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரிஞ்சயன் முதல் கோணினால் முற்றிலும் கோணும் என்பர் .............உங்கள் முதல் பதிவே உங்களை யார்

என்று காட்டிவிட்டது. காலத்தின் தேவைக்கேற்ப அற்புதமான உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி...தொடருங்கள்

யாழில் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை .....வாழ்த்துக்கள் [ நிச்சயம் உங்களிற்கு என் பச்சைப்புள்ளி .....

ஆனால் இன்று போட முடியவில்லை முடிந்துவிட்டது ....நாளை போடுவேன்]

உங்கள் விமர்சனத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

என் ஆக்கங்கள் சமகால நிகழ்வுகளை நோக்கி இருக்கும்.. தொடர்ந்து உங்கள் விமர்சனங்களை வையுங்கள்...

நன்றி தமிழ்சூரியன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரிஞ்சயன் அண்ணா மிக நல்ல ஆரம்பம். தொடருங்கள் உங்கள் தாயகத்திற்கான பங்களிப்பை.

தாயகத்திற்கான பங்களிப்பை எல்லோரும் தங்களால் இயன்ற வழிகளில் வளங்கவேண்டும் அப்பொழுதான் எமது விடுதலை சாத்தியம்..

கருத்துக்கு நன்றி துளசி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல் தோன்றி மண்தோன்றா என்பதில் தொடங்கியிருக்கலாம் .

அவனவன் ஐ போட்டில அலுவல் பார்க்கின்றான் இப்பவும் நாம் மண் தோன்ற முதல் வந்த குடி என்பதில் நிற்கின்றோம் .

முன்பும் ஒருவர் கிரேக்க சரித்திரம் எல்லாம் எழுதி ராஜ்யங்கள் வீழ்வதும் எழுவதும் சகஜம் என்றார் .எழாமல் மண்ணோடு மண்ணாய் போன சரித்திரங்கள் தான் பல .

நடக்க வேண்டிய அலுவலை முதலில் பார்ப்போம் .

தமிழர் சரித்திரத்தை எங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதும் ஏன் நாங்களே மீட்டிப்பார்ப்பதிலும் என்ன பிழை கண்டீர்கள். எங்கள் சரித்திரம், வீரம், தியாகம் அனைத்தையும் திரும்பத்திரும்பச் சொல்லித்தான் எங்கள் தலைமுறையை வளர்க்கவேண்டும் அப்பொழுதுதான் எங்கள் விடுதலை சாத்தியமாகும்.

கட்டிடம் நிற்பதற்கு அத்திவாரம் எப்படி அவசியமோ அதேபோல எங்கள் இனம் விடுதலைபெற, எங்கள் சந்ததியினருக்கு எங்கள் சரித்திரத்தின் ஊடாக எங்கள் இனம் எப்படி இருந்தது இப்பொழுது எப்படி இருக்கிறது எனும் உண்மை தெரியப்படுத்தப்படவேண்டும். அப்பொழுதான விடுதலைபெற வேண்டும் என்ற மன உணர்வு எழும் அப்போதுதான் எங்கள் காரியங்கள் வீரியம் பெறும். அதைவிடுத்து எவனோ ஐப்போட்டைக் கண்டுபிடிக்க நீங்கள் அதையிட்டுப் பெருமை கொள்வதில் உங்களுக்கு என்ன பெருமையிருக்கிறது

கடல்கடந்து நாட்டை வென்ற சோழர் பெருமை முதல் உலக நாடுகளின் வான்பரப்பையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய மிக், கிபீர் பொன்ற விமானங்களுக்கே தண்ணிகாட்டி அவற்றை அழித்துவந்த தற்காலச் சோழன் எங்கள் கரிகாலன் பெருமையை அவன் கண்ட வான்படை பெருமையைச் சொல்லி உங்கள் பிள்ளைகளை வளருங்கள. அப்பொழுது உங்கள் பிள்ளைகளுக்கு தானாகவே உணர்வு வரும் நானும் தமிழனாய் இருந்து ஏதாவது சாதிக்கவேண்டுமென்று.

positive thought இல்லாவிட்டால் positive action உங்களில் ஏற்படாது, வீழ்ந்த சரித்திரத்தைப் பார்க்காதீர்கள் எழுந்த சரித்திரத்தைப் பாருங்கள் எழவேண்டுமென்ற உணர்வு வரும்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் அர்ஜுன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் எம் வீரத்தின் முடிவா?

நிச்சயமாக இது முடிந்த முடிவே, இதுதான் என் கருத்து.

சோழர்காலத்தில் வேண்டுமாயின் சாத்தியமாய் இருந்திருக்கலாம் ஆனால் இன்று

வியாபாரிகள் நிறைந்த உலகில் இனி இது சாத்தியமில்லை.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேணும்,"வியாபாரிகளால் வீழ்ந்த எம் தலைவா உனக்கு வீரவணக்கங்கள்" என்று சாத்திரி அண்ணை ஒரு கட்டுரை எழுதி இருந்தார் அதில் அப்ப எனக்கு உடன்பாடுகள் இல்லாத போதும் இப்போது அது தான் நிஜம் போல் உலக ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தலைவர் வீழ்ந்தாரா,வாழ்கிறாரா என்பதல்ல, அதை நான் விவாதமாக்கவும் விரும்பவில்லை, ஆனால் வியாபாரிகளால் வீழ்ந்த போராட்டமாய் ஆகிவிட்டது.

இது ஏதோ எமது இனக்குழுமத்தில் மட்டுமல்ல பொதுவான உலகஓட்டமாய் மாறிவிட்டது தான் உண்மை. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் என்பது உலகில் எமக்கொரு ஆணித்தரமான அத்திவாரத்தை உருவாக்கி தந்துவிட்டது....அதில் வீடு கட்டுவதற்கு நீயா நானா போட்டிகள்....அதை விட நரிக்குறவர்களின்(நாகரீக அகதிகள்)ஊளைகள் படு மோசம்.

நன்றி அரிஞ்சயன்

முள்ளிவாய்க்கால் வீரத்தின் முடிவு மட்டுமல்ல ஈழத்தமிழினத்தின் முடிவின் ஆரம்பமும் தான். இன்னும் 10 வருசத்தில கிழக்கில எம்மினம் மூண்டாம் சிறுபான்மை ஆகிவிடும். 20 வருசத்துக்குள்ள வன்னி சிங்களக் குடியேற்றங்களால் உள்வாங்கப்பட்டுவிடும். யாழ்ப்பாணம் மட்டும் கொஞ்சக் காலம் தாக்குப்பிடிக்கும். ஆனா அங்கையும் இராணுவ முகாம்களையொட்டி இராணுவ குடும்பங்கள் குடியேறியேற்றமும், முஸ்லீம்களின் அதிகரிப்பும், தமிழினத்தின் தொடர் புலம் பெயர்வும் ... 50 வருசத்துக்கு மிஞ்சி தாக்குப் பிடிக்கேலாது. புலத்தில சொல்லவே தேவையில்லை . 100-150 வருசத்தில் ஈழத்தமிழினம் என்பது முற்றுமுழுதாக அழிந்துபோயிருக்கும்.

அரிஞ்சயன் அண்ணா, நீங்கள் தொடருங்கள். தமிழீழம் எமக்கு கிடைக்குதோ இல்லையோ இருக்கின்ற காலம் முழுதும் தமிழீழம் கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளை நாம் எடுப்போம். வெற்றியோ தோல்வியோ தளராது பயணிப்போம்.

அரசியல் போராட்டம் எமக்கு வெற்றி தரவில்லை என்றால் இப்பொழுது பெற்றோரை இழந்த, உறவினரை இழந்த, பலவிதங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வளர்ந்த பின் மீண்டும் ஆயுதம் தாங்க முற்படுவர். ஆனால் பெரிய இயக்கமாக மீண்டும் பலம் பெறுமோ அல்லது இடையில் அழிக்கப்படுமோ தெரியவில்லை.

ஆனால் இன்னொரு ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படாமல் அரசியல் வழியில் தீர்வு காண எம்மாலான முயற்சிகளை எடுப்போம்.

  • 2 weeks later...

ஜீவா

உலகத்தால் பல வழிகளிலும் ஏமாற்றப்பட்டு அதனால் தற்போது பெரும்பாலான தமிழர்களிடம் காணப்படும் மனதளவில் ஏற்பட்ட இயலாமை என்றதொரு வருத்தத்தின் வெளிப்பாடே உங்கள் கருத்தாக என்னால் பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதமெனும் ஒற்றைகுடையின் கீழ் கொண்டுவரப்பட்டது எங்கள் உரிமைப்போர். அதிலிருந்து வெளிவரப் போராடு, அதற்கு ஆயுதம் தேவையில்லை, தலைவல் உங்களுக்கு ஏற்கனவே வழிகாட்டிவிட்டான் நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று.

இலங்கையரசு எப்படி எங்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து உலகை தன்வசமாக்கி எங்களை ஒடுக்கியது. பொய்யைச் சொன்னவன் வெற்றியத் தன்வசமாக்கிவிட்டான், நாங்களோ உண்மைகளை வைத்துக்கொண்டு, ஆதாரங்களை வைத்துக்கொண்டு திண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

தலைவன் இருந்து வழிகாட்டினான், மீண்டும் அவனேவந்து வழிகாட்டவேணும் என்று அடம்பிடிக்காதே, அவன் தலையில் பொறுப்புக்களை சுமக்கக் காத்திராதே, அப்படியிருந்தால் எந்தக் காலத்திலும் நமக்கு விடுதலை சாத்தியமாகாது. விடுதலையை சாத்தியமாக்குவது எங்கள் கையில் தான் தற்போது உண்டு நண்பரே...

தெளிந்த பார்வை ,யதார்த்தமான கருத்து நண்பரே ..........தொடருங்கள் எம் விடிவை நோக்கிய உங்கள் நேர்மறையான [positive ] எழுத்துக்களை ......மீண்டும் வருவேன்...... முடிந்து விட்ட விருப்பு புள்ளிகள் மீண்டும் கிடைக்கும் வரை.......நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் வீரத்தின் முடிவு மட்டுமல்ல ஈழத்தமிழினத்தின் முடிவின் ஆரம்பமும் தான். இன்னும் 10 வருசத்தில கிழக்கில எம்மினம் மூண்டாம் சிறுபான்மை ஆகிவிடும். 20 வருசத்துக்குள்ள வன்னி சிங்களக் குடியேற்றங்களால் உள்வாங்கப்பட்டுவிடும். யாழ்ப்பாணம் மட்டும் கொஞ்சக் காலம் தாக்குப்பிடிக்கும். ஆனா அங்கையும் இராணுவ முகாம்களையொட்டி இராணுவ குடும்பங்கள் குடியேறியேற்றமும், முஸ்லீம்களின் அதிகரிப்பும், தமிழினத்தின் தொடர் புலம் பெயர்வும் ... 50 வருசத்துக்கு மிஞ்சி தாக்குப் பிடிக்கேலாது. புலத்தில சொல்லவே தேவையில்லை . 100-150 வருசத்தில் ஈழத்தமிழினம் என்பது முற்றுமுழுதாக அழிந்துபோயிருக்கும்.

நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தால் நீங்கள் சொன்ன அத்தனையும் நடக்க மிகவும் சாத்தியம் உண்டு. காரணம் எங்கள் தூக்க நேரத்தில் அவன் விழித்துச் செயல் படுகிறான். ஆனால் தமிழராய் நாங்கள் என்ன செய்டுகொண்டிருக்கிறோம் என்று சிந்தித்தால் உங்கள் பதிலென்ன? . எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றினால் எதிர்மறையான எண்ணங்கள் தான் எங்கள் செயலிலும் தெரியும்.

எங்கள் செயற்பாடுகள் எல்லா விதத்திலும் வெற்றியாக அமையுமிடத்து நீங்கள் சொன்ன அதே காலப்பகுதியில் மெளனிக்கப்பட்ட ஆயுதங்களின் மெளனம் கலைக்கப்பட்டிருக்கும், இலங்கை இராணுவம் மறுபடியும் தங்கள் முகாங்களில் ஒளிந்துகொண்டிடருக்கும், புதிதாய் முளைத்த புத்தர் சிலைகள் காணாமல் போய் தெருவெங்கும் பிள்ளையார் சிலகள் தோற்றம் பெறும், சிங்கள மக்கள் மத்தியில் மறுபடியும் புலிப்படை பயம் பற்றிக்கொண்டிருக்கும்,ராஜபக்க்ஷ சகோதரர்களே காணாமல் போயிருப்பார்கள், தமிழ் மக்கள் முகங்களில் பயம் அகன்று சிரிப்பு தோன்றும். சரியா ? இதெல்லாம் நடக்கும். கேட்கவே எவ்வளவு மகிழ்ச்சி....

உங்களின் எண்ணம் எதிர்மறையானது, என் எண்ணாம் நடக்கும்/ நடக்கவேணுமெனும் நேர்மறையானது. நாங்கள் சும்மா இருந்தாலே உங்களின் எல்லா எண்ணங்களும் ஒன்று விடாமல் இலகுவாக நிறைவேறும். என் எண்ணதில் எதாவது ஒன்று நிறைவேறத்தானும் நிறைய உழைப்புத் தேவை அவ்வளவுதான். முடிவு உங்கள் கையில்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரிஞ்சயன் அண்ணா, நீங்கள் தொடருங்கள். தமிழீழம் எமக்கு கிடைக்குதோ இல்லையோ இருக்கின்ற காலம் முழுதும் தமிழீழம் கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளை நாம் எடுப்போம். வெற்றியோ தோல்வியோ தளராது பயணிப்போம்.

அரசியல் போராட்டம் எமக்கு வெற்றி தரவில்லை என்றால் இப்பொழுது பெற்றோரை இழந்த, உறவினரை இழந்த, பலவிதங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வளர்ந்த பின் மீண்டும் ஆயுதம் தாங்க முற்படுவர். ஆனால் பெரிய இயக்கமாக மீண்டும் பலம் பெறுமோ அல்லது இடையில் அழிக்கப்படுமோ தெரியவில்லை.

ஆனால் இன்னொரு ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படாமல் அரசியல் வழியில் தீர்வு காண எம்மாலான முயற்சிகளை எடுப்போம்.

ஒரு போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அடுத்த வழியில் போராட்டத்தை முன்னெடுப்போம் என்ற சிந்தனையோட்டமே எமக்குத் தேவை, அதற்குரிய வழிகளில் பல வழிகளிலும் பங்களிப்புச் செய்யும் உங்களைப் போன்றோரின் முயற்சிகளுக்கு நிச்சயம் ஒரு நால் பலன் கிடைக்கும்.

நன்றி துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெளிந்த பார்வை ,யதார்த்தமான கருத்து நண்பரே ..........தொடருங்கள் எம் விடிவை நோக்கிய உங்கள் நேர்மறையான [positive ] எழுத்துக்களை ......மீண்டும் வருவேன்...... முடிந்து விட்ட விருப்பு புள்ளிகள் மீண்டும் கிடைக்கும் வரை.......நன்றி

தமிழ்சூரியன்

இலங்கையில் தமிழினமொன்று உண்டு, அது தமது உரிமைக்காகப் போராடுகிறது என்பதை உலகுக்குக் காட்டியவன் நம் தலைவன், அவனே னாங்கள் எங்களது திறமைகளைப் பல துறைகளிலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று சொன்னான்.

தமிழர் தங்களது திறமைகளைப் பல வழிகளிலும் வளர்த்து வருகிறார்கள் என்பதற்கு உங்களது இசையமைப்பில் அமைந்த ஓர் பாடலும் உதாரணம். நிச்சயம் அந்தப் பகுதியில் வந்து பாராட்டுத்தெரிவிக்கிறேன், நாங்கள் எல்லோரும் எங்கள் விடுதலைப் பயணத்திற்கான அனைத்து முயற்சிகளையும் எங்களால் ஆன பலவழிகளிலும் செய்துகொண்டேயிருப்போம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் என்பது உலகில் எமக்கொரு ஆணித்தரமான அத்திவாரத்தை உருவாக்கி தந்துவிட்டது....அதில் வீடு கட்டுவதற்கு நீயா நானா போட்டிகள்....அதை விட நரிக்குறவர்களின்(நாகரீக அகதிகள்)ஊளைகள் படு மோசம்.

நன்றி அரிஞ்சயன்

தமிழர் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே இதே பிரச்சனைகள், ஆளுமையுள்ள தலைமை போராட்டத்தை முன்னெடுத்து உலகுக்கு அதை அறியச் செய்தது, அளுமை அற்றவர்கள அழிந்தது போனார்கள், எதிரியுடனும் இணைந்து கொண்டார்கள். அதனாலேயே எங்களுக்கு இருவழிப்போராட நிலையாய் இருந்தது, இன்றும் இப்படித்தான் நிலமை, பார்ப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.