Jump to content

புலம்பெயர் உறவுகளும் உதவ வேண்டும்


Recommended Posts

பதியப்பட்டது

[size=5]புலம்பெயர் உறவுகளும் உதவ வேண்டும்[/size]

[size=4]October 12, 2012[/size]

[size=4]வடக்கு கிழக்கிலுள்ள காப்பகங்களுக்கு உதவ வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்[/size]

[size=4]எமது புலம்பெயர் உறவுகளும் தாய்நாட்டில் வாழும் உறவுகளும் தங்களது ஆட்ம்பரச் செலவினங்களைக் குறைத்து வடக்கு கிழக்கில் பல்வேறு காப்பகங்களில் தமது எதிர்காலக் கனவுகளைச் சுமந்து வாழும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முன்வரவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.[/size]

[size=4]வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள இந்து அன்பகத்தில் ஏற்பட்டுள்ள நீர்ப்பிரச்சினை தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினரின் கனவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து அவரது வேண்டுகோளில் பிரான்சிலிருந்து இயங்கும் ரி.ஆர்.ரி. தமிழொலி வானொலி நேயர் பொன்னம்பலம் கணேசலிங்கம் சதீஸ் தம்பதியர் தமது புதல்வி அமரர் செல்வி ரஜிந்தாவின் ஞாபகார்த்தமாக அவரது நினைவு நாளில் ஆழ் குழாய்க் கிணறு அமைத்து நீர்த்தாங்கி பொருத்தி கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.[/size]

[size=4]http://www.alaikal.com/news/?p=114950[/size]

Posted

SAM_6583.jpg

[size=5]வவுனியா இந்து அன்பகத்தின் நீர்ப்பிரச்சினையைத் தீர்த்துவைத்த ரஜிந்தாவின் பெற்றோர்[/size]

SAM_6624.jpg

http://www.thinakkathir.com/?p=42347

  • கருத்துக்கள உறவுகள்
Posted

SIVASAKTHI-seithy-20121012-150.jpg

எமது புலம்பெயர் உறவுகளும் தாய்நாட்டில் வாழும் உறவுகளும் தங்களது ஆடம்பரச் செலவினங்களைக் குறைத்து வடக்கு கிழக்கில் பல்வேறு காப்பகங்களில் தமது எதிர்காலக் கனவுகளைச் சுமந்து வாழும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முன்வரவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள இந்து அன்பகத்தில் ஏற்பட்டுள்ள நீர்ப்பிரச்சினை தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினரின் கனவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து அவரது வேண்டுகோளில் பிரான்சிலிருந்து இயங்கும் ரி.ஆர்.ரி. தமிழொலி வானொலி நேயர் பொன்னம்பலம் கணேசலிங்கம் சதீஸ் தம்பதியர் தமது புதல்வி அமரர் செல்வி ரஜிந்தாவின் ஞாபகார்த்தமாக அவரது நினைவு நாளில் ஆழ் குழாய்க் கிணறு அமைத்து நீர்த்தாங்கி பொருத்தி கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

http://www.seithy.co...&language=tamil

Posted

அவனவன் இந்தக் குளிருக்க குண்டிதெறிக்க ஓடிக்கொண்டிருப்பது உங்களுக்கெங்க தெரியப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆடம்பர செலவு செய்து கொண்டே உதவி செய்யலாம்...மேலும் நம்பகமான ஒரு கட்டமைப்பு வடக்கு கிழக்கில் வேண்டும் அதற்கான முயற்சிகளை நீங்கள் செய்ய வேணும் வட கிழக்கின் பா.உக்கள் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்....

Posted

காசு நமக்கு சும்மா வருகிறதென்பதில்லை. ஆனால் தமிழர் எல்லோரும் பட்ட கஸ்டங்களினால்த்தான் சிலர் அகதிகளாக வந்து வித்தியாசமான வாழ்வை அமைக்கத்தக்கதாக இருந்தது. சட்டப்படி இல்லாவிட்டாலும் தர்மப்படி எமது வருமானத்தில் ஒரு பகுதி அவர்கள் பட்ட கஸ்டத்திற்கும் ஆகும்.

Posted

புலிகளின் பினாமிகளிடம் தேங்கி நிற்கும் மக்கள் பணத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகளின் பினாமிகளிடம் தேங்கி நிற்கும் மக்கள் பணத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே?

புலிகள் அழிந்து விட்டார்கள் பினாமியும் போய்விட்டது ...

Posted

புலிகள் அழிந்து விட்டார்கள் பினாமியும் சுருட்டிய மக்கள் பணத்துடன் ஓடிப் போய்விட்டது ... :D :D

Posted

புலிகளின் பினாமிகளிடம் தேங்கி நிற்கும் மக்கள் பணத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே?

ஒருதடவை ஒரு கிழவி முற்றத்தில் நெல்லை காயவைத்துவிட்டு இயலாமையால் குடிசைக்குள் தூங்க போய்விட்டா. சிறு நேரத்தில் சோனாவாரியாக அடித்த மழை நெல்லை அள்ளிக்கொண்டு போய்விட்டது.

அந்த நாட்டு மகாராஜன் தனது அரன்மணை முன்றலில் ஆராய்சி மணி கட்டியிருந்தான். கிழவி தள்ளாடித்தள்ளடி போய் அந்த மணியின் கயிற்றை இழுத்து அடித்தா.

வழக்கை விசாரித்த மகாராஜன், உண்ணாமல் உறங்காமல் தவம் இருந்து தனது நாட்டில் இரவில் மட்டும் வரவேண்டும் என்று வருணனிடம் வரம் வேண்டினான்.

எப்படி இருந்த நீங்கள் இப்படி ஆயிட்டீர்களே மவராசா! நெஞ்சுக்கு சுமையாய் இருக்கே!

நீங்களும் கொடுங்க. கொடுக்க தக்கவனாய் பார்த்து அவர்களிடம் வாங்கியும் கொடுங்க.

சோமசுந்தர புலவரின் வாழையும் புலவரும் கதையில் வரும் தனவான் இரந்து போகும் புலவர்களைப் பார்த்து "நாளை வா, நாளை வா " என்று கூறுவானாம்.

நீங்கள் கொடுக்க மாட்டாதவனாய் பார்த்து கையை சுட்டவில்லைத்தானே. நீங்கள் சுட்டுபவர்கள் இன்றைய பசிக்கு தேடி அழும் ஏழைகளை கண்டு இரங்கி இன்று ஏதாவது தானம் செய்வார்கள் தானே?

சிவசக்தி ஆனந்தன் புலம் பெயர் மக்களைப் பார்த்து உதவும் படி கேட்பதில் தப்பேதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகளின் பினாமிகளிடம் தேங்கி நிற்கும் மக்கள் பணத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே?

அந்த பினாமிகளை யாரென்று சொல்லுங்கள்?

Posted

[size=4]பொதுவாக நாம் அனைவரும் பல விடயங்களில் பணத்தை விரயம் செய்வது உண்டு. எமது மக்களுக்கு நான் உதவத்தான் வேண்டும் என நானே பல தடைகளையும் தாண்டி உறுதி கொள்ள வேண்டும், அது முடியும்.

நமது உதவிகளின் பலன்கள் பெறுபேறுகள் ஒரு ஆலமரமாக வளர்ந்து பெருமையும் ஒருவித மனத்திருப்தியும் தரும். [/size]

Posted

அர்ஜுனுக்கு புலிக் காய்ச்சல். ஒரு பேப்பர் காரருக்கு காஸ்ட்ரோ காய்ச்சல், பொயடுக்கு(ஜெயபாலன்) புலித்தலைமைக் காய்ச்சல், இப்ப எல்லாள மகாராசவிட்கு புலிப் பினாமிக் காய்ச்சல். இப்படி பலவிதமான காய்ச்சல்கள் யாழில் பரவுவதால் கள உறுப்பினர்கள் நல்ல வைத்தியர்களான நெடுக்ஸ்,மல்லையூரான், தமிழரசு,தமிழ் சிறி , விசுகு,அகோதா,புத்தன் போன்ற தனலம்மற்ற வைத்தியர்களை ஆலோசனைக்கு நாடவும் நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.