Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நட்டாற்றில் நாம்

Featured Replies

நட்டாற்றில் நாம்; பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரிடம் கேப்பாபிலவு மக்கள்

 

எந்த விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படாமல் நாங்கள் நட்டாற்றில் தவிக்கவிடப்பட்டுள்ளோம். மீள்குடியமர்வு என்ற பெயரில் எம்மைக் காட்டுக்குள் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு நேற்று வியாழக்கிழமை தம்மைச் சந்திக்க வந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் அலஸ்ரயர் பேர்ட்டிடம் தமது அவலங்களை எடுத்துக் கூறினார்கள் கோப்பாபிலவு மக்கள்.

இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் நேற்றுத் தமது முதல் பயணமாக முல்லைத்தீவுக்குச் சென்றார். அங்கு அவர் முள்ளியவளையில்  இலங்கை இளைஞர் நல்லிணக்க நம்பிக்கை நிதியத்தைத் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு கேப்பாபிலவு சூரியபுரம் காட்டுப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகளைப் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளை அவர் நேரில் கேட்டறிந்தார். அதன்போது தமது மனக்குமுறல்களை மக்கள் அமைச்சரிடம் வெளிட்டனர்.

எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் நாங்கள் இங்கு கொண்டு வரப்பட்டுத் தவிர்க்க விடப்பட்டுள்ளோம். அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

போக்குவரத்து, கல்வி, சுகாதார வசதிகள் இல்லாமல் பெண்களும், சிறுவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எமது நிலையை எவரும் கவனிப்பதில்லை என அந்த மக்கள் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரிடம் தமது மனக்குறைகளை எடுத்துக் கூறினார்கள்.

மக்களின் கருத்துக்களைக் கவனமாகச் செவிமடுத்த அமைச்சர் அங்குள்ள நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்தார்.

அமைச்சர் கேப்பாபிலவுக்குப் பயணம் செய்த வேளை அந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையான படைப்புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=348751805901751683

  • தொடங்கியவர்

நாம் கெஞ்சியபோதும் கண் முன்பாகவே வீடுகளை இடித்து அழித்தனர் படையினர்;

சரவணபவன் எம்.பியிடம் வலி.வடக்கு மக்கள் முறைப்பாடு

 

தமது வீடுகளை உடைக்க வேண்டாம் என்று படையினரிடம் கெஞ்சியபோதும் தமக்கு மேலிடத்து உத்தரவு கிடைத்துள்ளது எனத் தெரிவித்து வீடுகளை அவர்கள் இடித்து வருவதாக வலி.வடக்கு மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  ஈ.சரவணபவனிடம் முறைப்பாடு செய்தனர்.


தொண்டமானாறு தொடங்கி காங்கேசன்துறை வரை படையினர் அமைத்துள்ள நிரந்தரப் பாதுகாப்பு வேலியோடு அமைந்துள்ள வீடுகளே இவ்வாறு இடித்தழிக்கப்பட்டு வருவதாக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தனிடமும் மேலும் தெரிவித்தனர்.

வலி.வடக்கில் இருந்து 23 வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் 7 ஆயிரத்து 60 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 328 பேர் வாழ்ந்து வருகின்றனர். தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி அந்தப் பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கு படையினர் அனுமதிக்கவில்லை.

ஆனால் படையினர் வசமுள்ள மக்கள் காணிகளில் விவசாய நடவடிக்கை, "யோக்கட்' உற்பத்தி தொழிற்சாலை எனப் பலவற்றைப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லையில் தொண்டமானாறு தொடங்கி கட்டுவன், ஒட்டகப்புலம், காங்கேசன்துறை வரையில் படையினர் நிரந்தரப் பாதுகாப்பு வேலியை அமைத்துள்ளனர்.

இந்த நிரந்தர பாதுகாப்பு வேலியின் உள்ளே மண் அணை காணப்பட்டது. இந்த மண் அணையை "புல்டோசர்' மூலம் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதன்போது இதனுள் அகப்படும் வீடுகளும் இடித்தழிக்கப்படுகின்றன.

கட்டுவன் பகுதியில் நேற்றுப் படையினர் வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் அதன் போது இரண்டு வீட்டு உரிமையாளர்கள் அந்த இடத்துக்குச் சென்று  தமது வீடுகளை இடிக்க வேண்டாம் என்றுபடையினரிடம் கெஞ்சிய போதும் மேலிடத்து உத்தரவு எனத் தெரிவித்து வீட்டு உரிமையாளர்கள் முன்பாகவே அவர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
 
சம்பவ இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் ஆகியோர் நேரடியாகச் சென்றனர்.

இதன் போது மக்கள் நாடாளு மன்ற உறுப்பினரிடம் படையினரின் அடாவடித் தனமான  செயற்பாடுகள் குறித்து அழுது அழுது முறைப்பாடு செய்தனர். மக்களின் முறைப்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் படை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.

அத்துடன் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குச் சென்று பிரதேச செயலர்  க.ஸ்ரீமோகனனுடனும் கலந்துரையாடினார். இது தொடர்பாக அரச அதிபரின் கவனத்தும் கொண்டுவந்தார்.

 

sara.jpg

 

http://onlineuthayan.com/News_More.php?id=826061806101764498

  • தொடங்கியவர்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அடையாள உண்ணா விரதப்போராட்டம்

 

வலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பாடாத பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை நடத்த வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பு தீர்மானித்துள்ளது.

 

இதற்காமைய எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இந்த அடையாள உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறவுள்ளது என அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்த அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் அரசியலக்கு அப்பால் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/58118-2013-02-01-10-51-45.html

  • தொடங்கியவர்

'முள்ளிவாய்காலில் வெடிபொருட்களோடு மீள்குடியேற்றும் போது ஏன் எங்களை மீள்குடியேற்ற முடியாது?'

 

'மண்டையோடுகளுக்கும் வெடிபொருட்களுக்கும் மத்தியில் முள்ளிவாய்க்காளில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதும் வெடிபொருட்கள் அற்ற எங்கள் பிரதேசத்தில் ஏன் எங்களை அரசாங்கம் மீள்குடியேற்ற முடியாது?' என்று வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இதுவரை மீள்குடியேற்றப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பிலும் இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வலி வடக்கு பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் வலிகாமம் வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது.


இதன்போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

 

அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்


'கடந்த 22 வருடங்களுக்கு மேல் தங்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து பல்வெறு இடங்களில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழந்து வருகின்றோம். சமூக பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்கையைக் கொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் எங்கள் வளமான பூமியில் வெடிபொருட்கள், மிதிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தாலும் அரசாங்கதினாலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதும் வெடிபொருட்கள் இருக்கும் இடத்தில் இன்று இராணுவம் விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளும் போது ஏன் நாங்கள் மட்டும் அங்கு மீள்குடியேற முடியாது?

 

தற்போது இராணுத்தால் எமது பிரதேசத்தை அண்டிய பகுதியில் பாதுகாப்பு வேலி அமைப்பதற்காக வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி அப்பகுதியில் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்' என இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

 

வலிகாமம் வடக்கு பிரதேச சபைத்தலைவர் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சி.சிறிதரன், வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/58116-2013-02-01-10-47-07.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.